Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்த படுகொலை முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் சந்தேக நபர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அதைச் செய்ய முடிவெடுத்தார், ”என்று உள்துறை அமைச்சர் Matúš Šutaj Eštok, Banská Bystrica மருத்துவமனைக்கு வெளியே ஒரு செய்தி மாநாட்டில் கூறினார், அங்கு பிரதமர் சிகிச்சை பெற்றார்.

https://www.cnn.com/europe/live-news/robert-fico-slovakia-prime-minister-shooting-05-15-24/index.html

61b96ffc-59f0-46f7-bc63-b54d7c3a8069.JPG

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கொலை முயற்சியில் புட்டின் பெயரும் வரக்கூடும்

யார் கண்டார்?😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, குமாரசாமி said:

இந்த கொலை முயற்சியில் புட்டின் பெயரும் வரக்கூடும்

யார் கண்டார்?😂

லுகசெங்கோவையும் றெசெப் தாயிப் எர்டோகனையும் தவிர சுற்றிவர உள்ள அனைவரையும் இல்லாமலாக்குதல் அல்லது தனது பக்கம் இழுத்தலையே புதின் விரும்புகிறார்போல் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, nochchi said:

லுகசெங்கோவையும் றெசெப் தாயிப் எர்டோகனையும் தவிர சுற்றிவர உள்ள அனைவரையும் இல்லாமலாக்குதல் அல்லது தனது பக்கம் இழுத்தலையே புதின் விரும்புகிறார்போல் உள்ளது. 

அன்றும் இன்றும் அமெரிக்கா எதனை செய்கின்றதோ அதே பாணியில் ரஷ்யாவும் செய்யலாம் அல்லவா....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

இந்த கொலை முயற்சியில் புட்டின் பெயரும் வரக்கூடும்

யார் கண்டார்?😂

அந்த areaவில் ரஸ்ய embassy அல்லது ரஸ்யக் கொடி ஏதும் இருக்கு வடிவாகத் தேடிப்பாருங்கோ. இருந்தால் அந்தப்படத்தில் அதச்சுற்றி சிகப்பால் கீறி யாழில் ஒட்டிவிட்டால் போச்சு,.🤣

(கொசுறு; இவர் Slavic இனத்தின் மீது அதிக பற்றுக்கொண்டவர். உக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகளை மட்டுமே செய்ய முடிவெடுத்திருந்தார்)

 ஒரு அரசியல் படுகொலை  முயற்சி தோற்றுவிட்டது. தற்போது துருக்கியிலும் நாட்டு  நிலைமை பதற்றமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, குமாரசாமி said:

அன்றும் இன்றும் அமெரிக்கா எதனை செய்கின்றதோ அதே பாணியில் ரஷ்யாவும் செய்யலாம் அல்லவா....

இரண்டுமே உலகுக்கு உதவாத விடயங்களே. ஆதிக்கப்போட்டியில் அகப்பட்டுச் சீரழிவது அன்றாடம்காய்விகளும் அப்பாவிகளுமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்லோவாக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது யார்? - என்ன நடந்தது?

ஸ்லோவாகிய பிரதமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

15 மே 2024
புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்

ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது?

உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்லோவாக்கியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்ட இடம்

அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், "துப்பாக்கி சூட்டுக்கு பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்" என்றும் தெரிவித்துள்ளனர்.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்லோவாக்கியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ராபர்ட் ஃபிகோ
ஸ்லோவாக்கியா
படக்குறிப்பு,பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகரில் உள்ள மருத்துவமனைக்கு பிரதமர் ராபர்ட் ஃபிகோ கொண்டுவரப்பட்ட காட்சி

உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரதமர்?

பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்" என்றார்.

பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
ஸ்லோவாக்கியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

யார் இந்த ராபர்ட் ஃபிகோ?

கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ.

இடதுசாரி ஸ்மெர்-எஸ்எஸ்டி கட்சிக்கு தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

"தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார். .

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன.

ஒருவர் கைது

ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் ஒரு நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

அவர் யார்?, அவர்தான் பிரதமரை துப்பாக்கியால் சுட்டாரா? பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட என்ன காரணம்? என்பன போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஸ்லோவாக்கியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,பிரதமர் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.  
ஸ்லோவாக்கியா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

உலகத் தலைவர்கள் கண்டனம்

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் மீதான தாக்குதலை உலக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

ஸ்லோவாக்கியா அதிபர் சுசானா கேப்புட்டவா, இந்த தாக்குதலை மிருகத்தனமானது மற்றும் இரக்கமற்றது என விமர்சித்துள்ளார்.

“நான் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான சூழ்நிலையில், தாக்குதலில் இருந்து மீண்டு வர ராபர்ட் ஃபிகோவுக்கு கூடுதல் வலிமை கிடைக்க வேண்டுகிறேன்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஃபிகோ மீதான இந்த மோசமான தாக்குதலை தான் கண்டிப்பதாக கூறியுள்ளார்.

ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியைக் கேட்டு தான் "ஆழ்ந்த அதிர்ச்சியில்" இருப்பதாககூறியுள்ளார்.

செக். குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, இந்த சம்பவம் "அதிர்ச்சியூட்டுவதாகவும்”, ஃபிகோ விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கூறுகையில், "எனது நண்பரான பிரதமர் ராபர்ட் ஃபிகோவுக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்" என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அனைவரும் ஃபிகோ மற்றும் அவரது குடும்பத்தாரையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

 
ஸ்லோவாக்கியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளார் யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

யுக்ரேன் அதிபர் கண்டனம்

யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை பயங்கரமானது என்று கூறியுள்ளார்.

எந்த ஒரு நாட்டிலும், எந்த வடிவத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c9rzrlekkn1o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“”நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.“”

அப்போ ....

தங்கள் கவனம் உக்ரேன் - ரஸ்ய யுத்தத்தின் மீது இல்லையா? 😁

  • Sad 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.