Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பொதிகளை நகர்த்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் அறைந்து மிரட்டியுள்ளார்.

மேலும் பல பாதுகாப்பு அதிகாரிகளையும் அவர் அச்சுறுத்தியதால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணமொன்றுக்காக அரசியல்வாதியின் மனைவி உட்பட பலர் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.

அரசியல்வாதியின் அடாவடித்தனம்

அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி | Tension Situation In Katunayake Airport

பாதுகாவலர்கள் துப்பாக்கி ஏந்தியிருந்ததால் அவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல்வாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது, விமான நிலைய பாதுகாவலர்களை திட்டிய அரசியல்வாதி, தனது பயணத்தைத் தடுத்ததாக கூறப்படும் இரண்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளையும் தனது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்ததாக மூத்த அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தன்னுடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பொதி எடுத்து செல்பவர்களுக்கு குறைந்த பணத்தை வழங்கியதற்காக அரசியல்வாதியிடம் உரிய கட்டணத்தை அவர் கேட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவலர் மீது தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த அந்த அரசியல்வாதி, தனது காலணியால் காலை மிதித்து, காதில் குத்திவிட்டு, பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி | Tension Situation In Katunayake Airport

தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் ஊழியர் அரசியல்வாதிக்கு பயந்து, தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் காரணமாக, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. 

அரசியல்வாதியின் இந்த செயல் விமான நிலையம் முழுவதும் பரவியுள்ளது. எனினும் இந்த சம்பவம் தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளது.

https://tamilwin.com/article/tension-situation-in-katunayake-airport-1715831527

  • கருத்துக்கள உறவுகள்

தொடை நடுங்கி தமிழ்வின் ஏன் அரசியல்வாதி முகத்தை மறைக்கிறது? பெயர் வெளியிடவில்லை?

பயமா? அல்லது வெட்டி ஒட்டிய ஊடகத்தில் இந்த விபரங்கள் கிடைக்கவில்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

தொடை நடுங்கி தமிழ்வின் ஏன் அரசியல்வாதி முகத்தை மறைக்கிறது? பெயர் வெளியிடவில்லை?

பயமா? அல்லது வெட்டி ஒட்டிய ஊடகத்தில் இந்த விபரங்கள் கிடைக்கவில்லையா?

Colombo, May 16 (Daily Mirror) - State Minister of Small and Medium Enterprises Development, Prasanna Ranaweera, has been accused of assaulting a porter at the Bandaranaike International Airport (BIA). 

The altercation occurred as the minister accompanied his wife, who was scheduled to travel overseas today.

Sources told Daily Mirror that that the minister, along with his armed security personnel, attempted to enter the airport through the main entrance.

However, airport security officers intervened, informing the minister that his security detail could not bring firearms into the airport. This prompted an alleged verbal outburst from Ranaweera, who reportedly threatened several security officers.

The situation escalated when a porter assisting with the luggage of the minister's wife was allegedly assaulted. Witnesses claim the conflict arose after the porter objected to receiving only Rs. 750 instead of the standard Rs. 1,000 fee clearly posted at the airport. 

In response, Ranaweera is said to have slapped the porter in the face before leaving the premises.

https://www.dailymirror.lk/breaking-news/Prasanna-Ranaweera-assaults-porter-at-BIA/108-282744

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி.

இலங்கையில் இருந்து இயங்கும் பத்திரிகைக்கு உள்ள தைரியம் புலத்தில் இருந்து இயங்கும் தமிழ்வின்னுக்கு இல்லை.

உள்ளபடி எழுதினால் ஶ்ரீதரனுக்கு சிக்கல் வரும் என்ற பயமாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அண்ணை அப்ப அது ஐபிசி பாஸின்ர இல்லையா?!

தமிழன் அல்லவா

அடங்கி தானே போகணும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அண்ணை அப்ப அது ஐபிசி பாஸின்ர இல்லையா?!

அவர் இவர் நரியார் எல்லாரும் ஒரே கோட்டில் என்று கேள்விப்பட்டேன்.

2 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழன் அல்லவா

அடங்கி தானே போகணும்.

நாட்டில் நீங்கள் சொல்வது சரி.

புலம்பெயர் நாட்டில்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நாட்டில் நீங்கள் சொல்வது சரி.

புலம்பெயர் நாட்டில்?

நாங்கள் நீங்கள் எல்லோரும் சொந்த பெயரிலா வாறம்?

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html

இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.

AVvXsEj629N2Bvtwo9e36ab9sv4m2GPU_28mAL-K
 
 கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .

அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .

அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .

அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .

இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html

விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம்

bia.jpeg
 
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

ProfitSence Logo

இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .

அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .

அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .

அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .

இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க .

இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, MEERA said:

நாங்கள் நீங்கள் எல்லோரும் சொந்த பெயரிலா வாறம்?

அட்ரா.....அட்ரா.....அட்ரா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நாங்கள் நீங்கள் எல்லோரும் சொந்த பெயரிலா வாறம்?

இந்த பதில் உங்களுக்கும், கூடவே நிண்டு குஷியாகியோருக்கும்.

1. கோஷான் ஒரு ஊடகம் அல்ல. ஊடகரும் அல்ல. ஊடகம் என்றால் குறைந்த பட்சம் நெஞ்சில் மஞ்சா இருக்க வேண்டும். கோஷான் அப்படி அல்ல, அவர் பயந்தாங்கொள்ளி.

இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். உங்கள் ஒப்பீடு கொஞ்சம் “மொக்கு தனமாக” உள்ளதாக எனக்குப்படுகிறது.

ஒரு தனி நபருக்கும், ஊடகத்துக்கும் உள்ள வேறுபட்ட கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?

 தமிழ் வின்னுடன் யாழை ஒப்பிட்டால் அது நியாயம்.

பிஸ்கோத்து பயந்தாங்கொள்ளி கருத்தாளர் என்னைப்போய்……

2. நான் பெயரை மறைக்க  மூன்று காரணங்கள்.

 அ. இலங்கையில் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ (தமிழர் தரப்பால் அல்ல) என்ற பயமும், 

ஆ.பெயரை சொன்னால், இன்னார் என இனம் கண்டு புலம்பெயர் தேசத்தில் சொறிச்சேட்டை விடும் ஆட்களின் அலுப்பு இருக்கும் என்பதும் இரெண்டாம் காரணம்.

மகனின் கராட்டி கிளாசுக்கு வருகிறோம் என யாழில் சொன்னவர்கள் யார் என உங்களுக்கு நினைவு நிச்சயம் இருக்கும்.🤣. அதே போல் இன்னொருவர் நான் என நினைத்து இன்று வரை யாரோ ஒரு லூஸ் கேசோடு இரவிரவாக கதைக்கிறார்🤣.

பெயரை சொல்லாமல் கதைக்கும் போதே இந்த நிலை, சொல்லி கதைத்தால் நிலமை?

இ. மூன்றாவது காரணம் முகமன். யாழில் எழுதுவோரை நேரிலும் கண்டு பழகினால் பின்னர் யாழில் சுதந்திரமாக எழுத முடியாது.

இங்கே பலர் கருத்து வேறு பாடு கனமாக வரும் போதும் “அண்ணை, தம்பி, தாத்தா” என குருசேத்திரத்து அர்ஜுனன் போல் கலங்கி நிற்பார்கள். இன்னும் சிலர் அவர்களுக்காக வக்காலத்து வாங்க போய், தம் வாழ்நாள் கொள்கையையே எதிர்த்து எழுதி மொக்கேனப்பட்டு நிற்பார்கள்.

இப்போ பாருங்கள் உங்கள் ஒப்பீட்டை “மொக்குதனமானது” என சொல்லும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. இதுவே கானா ரெஸ்டூரண்டில் உங்களுடன் கூட இருந்து சாப்பிட்டால் ? அப்படி சுதந்திரமாக எழுத முடியாது அல்லவா?

ஆனால் இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் தமிழ் வின்னுக்கு இல்லை. அப்படி இருந்தால் - அது ஊடகமாக இருக்க முடியாது.

விளங்கி இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.

1 hour ago, குமாரசாமி said:

அட்ரா.....அட்ரா.....அட்ரா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இப்படி ஓரு மொக்குத்தனமான பதில் உங்களிடம் இருந்து வந்திருப்பது சற்று  எதிர்பார்தது தான்.

மொக்குத் தனமான நாட்டில் ஓர் மொக்கன் சர்வதேச விமானநிலையத்தினுள் ஆயுதங்களுடன் நுளைய முற்றப்படதை தமிழ்வின் பெயர் குறிப்படாமல் பிரச்சனைகளை தவிர்த்தது நல்லதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

மொக்குத் தனமான நாட்டில் ஓர் மொக்கன் சர்வதேச விமானநிலையத்தினுள் ஆயுதங்களுடன் நுளைய முற்றப்படதை தமிழ்வின் பெயர் குறிப்படாமல் பிரச்சனைகளை தவிர்த்தது நல்லதே.

யாருக்கு நல்லது?

Just now, goshan_che said:

யாருக்கு நல்லது?

நான் நினைக்கிறேன் - சிறிதரனுக்கு நல்லது என அவரின் ஊது குழலான தமிழ்வின், ரணிலின் அமைசரின் அடாவடியை மறைத்து எழுதியுள்ளது என.

ஆகவே சிறிதரனுக்கு இப்படி எழுதியது நல்லதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

தன்னுடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக பொதி எடுத்து செல்பவர்களுக்கு குறைந்த பணத்தை வழங்கியதற்காக அரசியல்வாதியிடம் உரிய கட்டணத்தை அவர் கேட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமானநிலையத்தில் பொதி எடுப்பவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?

உரிய கட்டணம் தான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

தமிழ் வின்னை அடித்தால் ஏன் சம்பந்தமே இல்லாமல் இருவருக்கு மட்டும் வலிக்கிறது?

சுமந்திரன் எதிர்ப்பாளர் என்ற பெயரில் யாழில் இயங்கும் சிறிதரனின் சிலீப்பர் செல் என்பதாலா?

6 minutes ago, MEERA said:

இப்படி ஓரு மொக்குத்தனமான பதில் உங்களிடம் இருந்து வந்திருப்பது சற்று  எதிர்பார்தது தான்.

ஆனால் நான் சொன்னவை எதையையும் நீங்கள் மறுக்கவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@goshan_che

எதற்காக என்கருத்தை மேற்கோளாக எடுத்தீர்கள். நான் உங்களுக்கு எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

@goshan_che

எதற்காக என்கருத்தை மேற்கோளாக எடுத்தீர்கள். நான் உங்களுக்கு எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லையே?

ஓ….அப்படியா….

விளக்கியமைக்கு நன்றி😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, goshan_che said:

இங்கே பலர் கருத்து வேறு பாடு கனமாக வரும் போதும் “அண்ணை, தம்பி, தாத்தா” என குருசேத்திரத்து அர்ஜுனன் போல் கலங்கி நிற்பார்கள். இன்னும் சிலர் அவர்களுக்காக வக்காலத்து வாங்க போய், தம் வாழ்நாள் கொள்கையையே எதிர்த்து எழுதி மொக்கேனப்பட்டு நிற்பார்கள்.

கருத்து பஞ்சம் கூடினால் மற்றவர் உறவு முறைகளை இழுத்து வெற்றியடைய வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கருத்து பஞ்சம் கூடினால் மற்றவர் உறவு முறைகளை இழுத்து வெற்றியடைய வாழ்த்துகள்.

எதற்காக என்கருத்தை மேற்கோளாக எடுத்தீர்கள். நான் உங்களுக்கு எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லையே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

எதற்காக என்கருத்தை மேற்கோளாக எடுத்தீர்கள். நான் உங்களுக்கு எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லையே?

ஓ….அப்படியா….

விளக்கியமைக்கு நன்றி😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

ஓ….அப்படியா….

விளக்கியமைக்கு நன்றி😎

குழப்பம் விளக்கம் தரலால்,

குழப்பம் உயிரிலும் ஓம்பப்படும்.

இனிய இரவாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

விமானநிலையத்தில் பொதி எடுப்பவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?

உரிய கட்டணம் தான் என்ன?

கூகிள் இப்படிச் சொல்கின்றது:

Rs 1000.00 per passenger (for maximum 04 baggages only) and Rs 250.00 for additional baggage for both Arrival and Departure round the clock.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

குழப்பம் விளக்கம் தரலால்,

குழப்பம் உயிரிலும் ஓம்பப்படும்.

இனிய இரவாகட்டும்.

அருமையான கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

கூகிள் இப்படிச் சொல்கின்றது:

Rs 1000.00 per passenger (for maximum 04 baggages only) and Rs 250.00 for additional baggage for both Arrival and Departure round the clock.

நான் அவர்களை வேண்டாம் என்று சொன்னேன். சரியாகக் கோபப்பட்டார்கள். நீங்களே தள்ளினால், தூக்கினால், நாங்கள் பிழைப்பிற்கு என்ன செய்வதென்று அவர்களில் ஒருவர் கோபத்துடன் சொன்னார். ஒரு நிலையான கட்டணம் தான் என்றால் கொடுப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், இவர்கள் என்ன கேட்பார்களோ என்ற சந்தேகத்திலேயே வேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்று சொல்லி விடுகின்றோம்.

சென்னை புகையிரத நிலையத்திலும் இதே கருத்தை அங்கு உள்ள பொதி தூக்கும் ஒருவர் முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார் - நீங்களே தூக்கினால், நாங்கள் என்ன செய்வது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

கூகிள் இப்படிச் சொல்கின்றது:

Rs 1000.00 per passenger (for maximum 04 baggages only) and Rs 250.00 for additional baggage for both Arrival and Departure round the clock.

இந்த விலைப்படி மட்டும் கொடுத்து வெளியே யாரும் போனால்….அவர்களுக்கு 22 கேரெட் சங்கிலியை நான் பரிசாக கொடுப்பேன்🤣.

6 minutes ago, ரசோதரன் said:

நான் அவர்களை வேண்டாம் என்று சொன்னேன். சரியாகக் கோபப்பட்டார்கள். நீங்களே தள்ளினால், தூக்கினால், நாங்கள் பிழைப்பிற்கு என்ன செய்வதென்று அவர்களில் ஒருவர் கோபத்துடன் சொன்னார். ஒரு நிலையான கட்டணம் தான் என்றால் கொடுப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், இவர்கள் என்ன கேட்பார்களோ என்ற சந்தேகத்திலேயே வேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்று சொல்லி விடுகின்றோம்.

நானும் இதே  பயத்தில் ஒரு போதும் இவர்கள் சேவையை அணுகியதில்லை🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.