Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sputnikasmwp7.jpg

காலைச் சூரியனை

கையெடுத்துக் கும்பிட்டு..

மாலைச் சந்திரனை

வீழ்ந்து வணங்கி..

சுழன்றடிக்கும் சூறாவளிக்கு

பயந்து நடுங்கி...

மின்னலும் இடியும்

மரணத்தின் தூதென்று

ஓடி ஒளித்து..

தீயதும் சுடுவது

முன்வினைப் பயனென்றும்

பூமியது அதிர்ந்து பிளப்பது

பாவிகள் அழிவென்றும்

இயற்கைக்குள்

உள்ளதை விளங்காமல்

உளறிய கணங்களில்..

எதிர்வினை சொல்லி

பகுத்தறிவென்று

வாய் வீரம் பேசி

வீண் பொழுது கழித்திடாமல்

ஆயிரம் கதை கட்டி

அலைந்து கொண்டிராமல்..

மூளையைக் கசக்கி

விண்கலம் கட்டி

விண்ணுக்கு அனுப்பி

வீர சாதனை படைத்த

திருநாள் இன்று..!

"புட்னிக்" எனும் மனிதப்பட்சி

ரஷ்சிய மண்ணிருந்து

விண்ணேகி

அரை நூற்றாண்டும்

கடந்தாயிற்று.

மனித வரலாற்றின்

புது யுகம் இது..

புறப்படுங்கள்..

சுன்னாகம் சந்தியில்

இருந்து...

செவ்வாய் நோக்கி

செவ்வாய் தோசத்தை

சிதைத்து விட்டு வருவோம். :rolleyes:

செய்தி:

" உலகின் முதலாவதும் மனிதன் உருவாக்கியதுமான புட்னிக் (Sputnik) என்று பெயரிடப்பட்டதுமான விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அது ரஷ்சியத் தயாரிப்பில் ரஷ்சியாவில் இருந்து 04-10-1957 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது."

Edited by nedukkalapoovan

ஓ இதா சங்கதி தாத்தா நான் கூகிள் பேஜிற்கு போன போது இப்படி ஒரு படம் இருந்தது எனக்கு என்னவென்று விளங்கவில்லை :rolleyes: நீங்க சொன்ன பிறகு தான் என்னவென்று தெரிந்தது தகவலிற்கு நன்றி தாத்தா :( !!இது தான் சொல்லுறது வயசு போன ஆட்கள் கட்டாயம் தேவை என்று.................!! :)

பகுத்தறிவென்று

வாய் வீரம் பேசி

வீண் பொழுது கழித்திடாமல்

ஆயிரம் கதை கட்டி

அலைந்து கொண்டிராமல்..

மூளையைக் கசக்கி

விண்கலம் கட்டி

விண்ணுக்கு அனுப்பி

வீர சாதனை படைத்த

திருநாள் இன்று..!

என்றாலும் தாத்தா இந்த கவிதை வரிகளிள பல விசயங்களை சொல்ல வாறார் போல இருக்கு :) !!அது சரி தாத்தா பகுதறிவு என்றா என்ன?? :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சொல்லுறது வயசு போன ஆட்கள் கட்டாயம் தேவை என்று.................!!

சும்மாவா சொன்னான்ங்க Old is Gold என்று.

இன்று நான் பிபிசி பார்த்த போது கண்டறிந்தேன்.. புட்னிக் பற்றி. ஆனால் புட்னிக் பற்றி எனக்கு எப்பவோ தெரியும்... நான் அது ஏவப்படும் போது 45 வயது வாலிபனாக இருந்தேன்.

புட்னிக் தான் இன்றைய செய்மதிகளின் முன்னோடி. செய்மதித் தொழில்நுட்பம் இன்று விரிவடைந்திருக்கக் காரணமே புட்னிக்கின் வெற்றியும்.. சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் இராணுவ போட்டியுமே..! ஏன் இணையம் கூட குளிர் யுத்த கால இராணுவப் போட்டி தந்த பரிசுதான். :D

இரண்டாம் உலகப் போரில் வெள்ளையர்கள் எங்களைப் போல யுத்ததுக்கு பயந்து அகதியாக இந்தியாவுக்கு இலங்கைக்கு ஓடி வரல்ல. மாறாக.. தங்கள் தேசங்களை தாங்களே காக்க போராடினர்.. தங்கள் வீரர்களைக் காக்க மருந்துகளைக் கண்டு பிடித்தனர்.. தங்கள் வீரர்கள் வெல்ல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். நாங்க யுத்தம் என்றதும்.. "அசைலம்" அடிச்சதைத் தவிர செய்தது என்ன...???! இதையேன் சொல்லுறன் என்றால் சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் கூட அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைத்தான் தேடி ஓடினர். ஆனா நாங்க நாட்டை விட்டு ஓடிற கோழைகளாகத்தான் இருக்கிறம். ஆனால் கதையளவில் ஆளையாளை மட்டம் தட்டுறதில.. முன்னோடிகள்.. எங்களை விட்டா யாருமே இல்ல. :):rolleyes:

Edited by nedukkalapoovan

ஓ இதுதானா விசயம். கவி வடிவிலேயே சொல்லிட்டீங்க. நானும் கூகிள் பக்கம் போனேன். அங்கே தான் பார்த்தேன் sputnik anniversary என்று இருந்திச்சு. நான் முதலில் என்னடா அண்டனா எல்லாம் போட்டிருக்கு னு நினைச்சேன்

நெடுக் அண்ணாக்கு தானே விண்னியல் விநோதங்கள் எல்லாம் தெரியும். சரி கவிதையில் சொன்ன தகவலுக்கு நன்றிகள் அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ இதுதானா விசயம். கவி வடிவிலேயே சொல்லிட்டீங்க. நானும் கூகிள் பக்கம் போனேன். அங்கே தான் பார்த்தேன் sputnik anniversary என்று இருந்திச்சு. நான் முதலில் என்னடா அண்டனா எல்லாம் போட்டிருக்கு னு நினைச்சேன்

நெடுக் அண்ணாக்கு தானே விண்னியல் விநோதங்கள் எல்லாம் தெரியும். சரி கவிதையில் சொன்ன தகவலுக்கு நன்றிகள் அண்ணா

அப்ப எல்லாரையும் கூகிள் தான் தட்டி எழுப்பி இருக்கி என்றீங்க. கூகிளுக்கு நன்றிகள் பல. மனித வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வைக் கூட மனிதன் அறியப் பிரியப்படாத போதும் கூகிள் இயக்கும் மனிதர்கள் பிரியப்பட்டதால் இன்று.. வெண்ணிலா குழந்தை கூட.. புட்னிக் பற்றி பேசுறா..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது. எண்டு அழகாய் ஒரு கவிதை . வாழ்த்துகள் .

"புட்னிக்" க்கு அகவை ஐம்பது எண்டு உங்க கவிதையை பார்த்துத்தான் தெரிஞ்சது.

இன்று நான் பிபிசி பார்த்த போது கண்டறிந்தேன்.. புட்னிக் பற்றி. ஆனால் புட்னிக் பற்றி எனக்கு எப்பவோ தெரியும்... நான் அது ஏவப்படும் போது 55 வயது வாலிபனாக இருந்தேன்.

ஆகா நெடுக்கு அண்மையில் உங்களை பார்த்திருக்கிறேனே. இப்போதும் உங்கள பார்த்தால் ஒரு 35 வயசு சொல்லலாம் .

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது. எண்டு அழகாய் ஒரு கவிதை . வாழ்த்துகள் .

"புட்னிக்" க்கு அகவை ஐம்பது எண்டு உங்க கவிதையை பார்த்துத்தான் தெரிஞ்சது.

ஆகா நெடுக்கு அண்மையில் உங்களை பார்த்திருக்கிறேனே. இப்போதும் உங்கள பார்த்தால் ஒரு 35 வயசு சொல்லலாம் .

:unsure: நெடுக் அண்ணாவுக்கு 35? அட பாவமே அவ்வளவுக்கு கிழவனாகிட்டாரா? நான் 2 வருடத்திற்கு முன் பார்த்தப்போ 27 ஆக தானே இருந்தார் :(

அப்ப எல்லாரையும் கூகிள் தான் தட்டி எழுப்பி இருக்கி என்றீங்க. கூகிளுக்கு நன்றிகள் பல. மனித வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வைக் கூட மனிதன் அறியப் பிரியப்படாத போதும் கூகிள் இயக்கும் மனிதர்கள் பிரியப்பட்டதால் இன்று.. வெண்ணிலா குழந்தை கூட.. புட்னிக் பற்றி பேசுறா..! :D

பின்னை தமிழில் சொன்னால் வெண்ணிலா குழந்தை புட்னிக் பற்றி பேசும் தானே. அட எஸ் சைலன்ஸ் ஆகிட்டுது. நான் வாசிச்சப்போ எஸ் உச்சரிப்பும் வந்திச்சு போல

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது. எண்டு அழகாய் ஒரு கவிதை . வாழ்த்துகள் ."புட்னிக்" க்கு அகவை ஐம்பது எண்டு உங்க கவிதையை பார்த்துத்தான் தெரிஞ்சது.ஆகா நெடுக்கு அண்மையில் உங்களை பார்த்திருக்கிறேனே. இப்போதும் உங்கள பார்த்தால் ஒரு 35 வயசு சொல்லலாம் .

நீங்க எங்க என்னைப் பார்த்தீங்க. பொய் பேசக் கூடாது. நீங்கள் யாரோ நெடுக்கான 35 வயசு வாலிபரைப் பார்த்திட்டு நெடுக்ஸ் என்று நினைச்சிட்டீங்க போல. நான் 95 வயசு ஆள்...! :D

:unsure: நெடுக் அண்ணாவுக்கு 35? அட பாவமே அவ்வளவுக்கு கிழவனாகிட்டாரா? நான் 2 வருடத்திற்கு முன் பார்த்தப்போ 27 ஆக தானே இருந்தார் :Dபின்னை தமிழில் சொன்னால் வெண்ணிலா குழந்தை புட்னிக் பற்றி பேசும் தானே. அட எஸ் சைலன்ஸ் ஆகிட்டுது. நான் வாசிச்சப்போ எஸ் உச்சரிப்பும் வந்திச்சு போல

நான் நெடுக்ஸ் தாத்தா. நீங்க எந்த அண்ணாவைப் பார்த்தீங்க. அவர் அப்படி இருக்கலாம். நான் 95+ "ஓல்ட் மான்".

ஸ்புட்னிக் என்று தமிழில எழுதிறதில்ல.. புட்னிக் என்றுதான் எழுதிறது. அதுதான் ஆங்கிலப்பதத்தை கவிதைக்கு கீழ் செய்தியில் போட்டேன். :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது எனது மனைவியின் தகப்பனார் வீட்டில் இருந்த நாய்க்கு லைகா என்று பெயரிட்டார்.அது என்ன லைகா என்றால் சந்திரனுக்கு ரசியர்அனுப்பிய நாயின் பெயரென்பார்.

லைகா புட்னிக்கில் போனதா?அல்லது அடுத்ததிலா?

கவிதை அருமை

அன்றைய தாத்தாக்களின் சிந்தனைதான் இன்றைய இளைஞர்கண்டு பிடிப்புக்களுக்கு அத்திவாரம்.... இன்று விண்வெளிசென்று பார்க்கும் கோள்களை நமது மூதாதையர் அன்றே அறிந்திருந்தனர் சூநியன் உதிக்கும் நேரம் அஸ்த்மிக்கும் நேரம் கிரகணம் .... எல்லாம் கணித்திருக்கின்றார்கள்... என்ன அன்றைய மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக ஒவ்வொரு கதைகளாக எடுத்துவிட இப்போது அந்தக் கதைகளின் கருத்தை நோக்காது சிலர் அந்தக்கால விஞ்ஞானத் தாத்தாக்களை எல்லாம் விசரர் என்று நோக்குகின்றார்கள் :unsure:

இப்போதெல்லாம் அகழ்வாராட்சியில் கண்டுபிடிப்பவற்றை பார்த்து மூக்குக்குள் விரலை வைக்கின்றார்கள் :( அட அந்தக்காலத்தில் கூட இன்றைய நகர அமைப்பாக இருந்திருக்கின்றதே என (ஆதாரம் ... சிந்துவெளி நாகரீகத்தில் மொகஞ்சதாரா ஹரப்பா போன்றன )

இன்றைய விஞ்ஞானத்தின் ஆரம்ப அத்திவாரம் அன்று ... அதன் வளர்ச்சி இன்று.... இன்னும் பல்லாயிரம் வருடம் போன பின்பு அன்றைய மனிதன் இன்றைய மனிதனை மூடன் என்று சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது எனது மனைவியின் தகப்பனார் வீட்டில் இருந்த நாய்க்கு லைகா என்று பெயரிட்டார்.அது என்ன லைகா என்றால் சந்திரனுக்கு ரசியர்அனுப்பிய நாயின் பெயரென்பார்.லைகா புட்னிக்கில் போனதா?அல்லது அடுத்ததிலா?

ரஷ்சியா நாய் அனுப்பியதை அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த புட்னிக் அதைக் காவிச் செல்லவில்லை. புட்னிக் 2 தான் அதைக் காவிச் சென்றிருந்தது.ஆனால் அந்த பெண் நாய் ஓர் துரதிஸ்டசாலி. அவர் விண்வெளிக்கு ஏவப்பட்டு சில மணி நேரங்களிலேயே இறந்து விட்டார்.அந்த நாய்க்கு இட்ட பெயர்.. Laika

Laika.jpg

இவர் தான் அந்த நாயார். இவர் விண்ணுக்கு ஏவப்பட்டது 3 November 1957 இல்.

http://en.wikipedia.org/wiki/Laika

கவிதை அருமைஅன்றைய தாத்தாக்களின் சிந்தனைதான் இன்றைய இளைஞர்கண்டு பிடிப்புக்களுக்கு அத்திவாரம்.... இன்று விண்வெளிசென்று பார்க்கும் கோள்களை நமது மூதாதையர் அன்றே அறிந்திருந்தனர் சூநியன் உதிக்கும் நேரம் அஸ்த்மிக்கும் நேரம் கிரகணம் .... எல்லாம் கணித்திருக்கின்றார்கள்... என்ன அன்றைய மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக ஒவ்வொரு கதைகளாக எடுத்துவிட இப்போது அந்தக் கதைகளின் கருத்தை நோக்காது சிலர் அந்தக்கால விஞ்ஞானத் தாத்தாக்களை எல்லாம் விசரர் என்று நோக்குகின்றார்கள் :unsure: இப்போதெல்லாம் அகழ்வாராட்சியில் கண்டுபிடிப்பவற்றை பார்த்து மூக்குக்குள் விரலை வைக்கின்றார்கள் :( அட அந்தக்காலத்தில் கூட இன்றைய நகர அமைப்பாக இருந்திருக்கின்றதே என (ஆதாரம் ... சிந்துவெளி நாகரீகத்தில் மொகஞ்சதாரா ஹரப்பா போன்றன )இன்றைய விஞ்ஞானத்தின் ஆரம்ப அத்திவாரம் அன்று ... அதன் வளர்ச்சி இன்று.... இன்னும் பல்லாயிரம் வருடம் போன பின்பு அன்றைய மனிதன் இன்றைய மனிதனை மூடன் என்று சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.... :D

நியூட்டன் தாத்தாவும் கண்டுபிடிச்சவர் எங்கட தாத்தாவும் கன்று பிடிச்சவர். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. :lol::D

நன்றி கெளரி.

Edited by nedukkalapoovan

புட்னிக் பற்றி விக்கிபீடியாவிலிருந்து :

ஸ்புட்னிக் 1தான் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது மனிதனால் செய்யப்பட்ட செயற்கைக் கோள் ஆகும். இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இச் செயற்கைக் கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இது இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்தது. இது பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்கள்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. ஸ்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. ஸ்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.

ஸ்புட்னிக் 1 சோவியத் யூனியனுடைய ஸ்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றிற் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்ற இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக் கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது.

ஐக்கிய அமெரிக்காவும் ஆரம்பகட்டமாக, அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த குழுக்களினூடாக, வான்காட் திட்டம் என்ற பெயரில், செயற்கைக் கோள் ஆராச்சியில் ஈடுபட்டிருந்தது. அவர்களுடைய முதல் ஏவுதலை, ஸ்புட்னிக்குக்கு முன்னரே செய்ய எண்ணியிருந்தும், அது நடைபெறாமல் பலமுறை தள்ளிப்போடப்பட்டது.

பின்னர், அமெரிக்கத் தரைப்படையின் ஜுபிடர் திட்டத்தின் கீழ் ஒரு அவசர முயற்சியொன்று தொடங்கப்பட்டு 1958 ஜனவரியில் எக்ஸ்புளோரர் 1 என்ற செயற்கைக் கோளை ஏவுவதில் வெற்றிகண்டனர்.

இது, Cold War இன் ஒரு பகுதியாக, இரு வல்லரசுகளுக்கிடையே நடைபெற்ற விண்வெளிப் போட்டியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளும், விண்வெளி ஆய்வில் ஒன்றையொன்று முந்தும் முயற்சியின் உச்சக் கட்டமாக, அமெரிக்கா, அப்பல்லோ 11 இல் மனிதர்களை அனுப்பிச் சந்திரனில் இறக்கியது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4 1958ல் திரும்பவும் பூமியில் விழுந்தது.

http://ta.wikipedia.org/wiki/ஸ்புட்னிக்_1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மாவா சொன்னான்ங்க Old is Gold என்று.

இன்று நான் பிபிசி பார்த்த போது கண்டறிந்தேன்.. புட்னிக் பற்றி. ஆனால் புட்னிக் பற்றி எனக்கு எப்பவோ தெரியும்... நான் அது ஏவப்படும் போது 45 வயது வாலிபனாக இருந்தேன். :lol:

புட்னிக் தான் இன்றைய செய்மதிகளின் முன்னோடி. செய்மதித் தொழில்நுட்பம் இன்று விரிவடைந்திருக்கக் காரணமே புட்னிக்கின் வெற்றியும்.. சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் இராணுவ போட்டியுமே..! ஏன் இணையம் கூட குளிர் யுத்த கால இராணுவப் போட்டி தந்த பரிசுதான். :o

இரண்டாம் உலகப் போரில் வெள்ளையர்கள் எங்களைப் போல யுத்ததுக்கு பயந்து அகதியாக இந்தியாவுக்கு இலங்கைக்கு ஓடி வரல்ல. மாறாக.. தங்கள் தேசங்களை தாங்களே காக்க போராடினர்.. தங்கள் வீரர்களைக் காக்க மருந்துகளைக் கண்டு பிடித்தனர்.. தங்கள் வீரர்கள் வெல்ல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். நாங்க யுத்தம் என்றதும்.. "அசைலம்" அடிச்சதைத் தவிர செய்தது என்ன...???! இதையேன் சொல்லுறன் என்றால் சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் கூட அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைத்தான் தேடி ஓடினர். ஆனா நாங்க நாட்டை விட்டு ஓடிற கோழைகளாகத்தான் இருக்கிறம். ஆனால் கதையளவில் ஆளையாளை மட்டம் தட்டுறதில.. முன்னோடிகள்.. எங்களை விட்டா யாருமே இல்ல. :(:lol:

ஐயோ நெடுக்ஸ் சாமி!என்னதான் பனிப்போராக இருந்தாலும் அங்கே கொடூரமான இனப்பலிகள் நடக்கவில்லை,தாய்தந்தையர் கொல்லப்படவில்லை, சொந்தநிலபுலம் பறிக்கப்படவில்லை, கன்னியர் கற்பிணிகள் பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட வில்லை. அமெரிக்கர்களோ,ரஷ்சியர்களோ சொந்தநாட்டில் அகதிகளாக ஓடித்திரியவில்லை. அவர்கள் சொந்த நிலத்தில், நிறுதிட்டமான அரசியலில் இருந்து கொண்டு ஒருசில அதிகாரலாபங்களுக்காக எதைஎதையோ செய்தார்கள்.அது சரி நீங்கள் இப்போது ஒரு நூற்றாண்டு தாண்டப்போகின்றீர்களல்லவா?கதைத்து என்ன பிரயோசனம்???? :o

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நெடுக்ஸ் சாமி!என்னதான் பனிப்போராக இருந்தாலும் அங்கே கொடூரமான இனப்பலிகள் நடக்கவில்லை,தாய்தந்தையர் கொல்லப்படவில்லை, சொந்தநிலபுலம் பறிக்கப்படவில்லை, கன்னியர் கற்பிணிகள் பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட வில்லை. அமெரிக்கர்களோ,ரஷ்சியர்களோ சொந்தநாட்டில் அகதிகளாக ஓடித்திரியவில்லை. அவர்கள் சொந்த நிலத்தில், நிறுதிட்டமான அரசியலில் இருந்து கொண்டு ஒருசில அதிகாரலாபங்களுக்காக எதைஎதையோ செய்தார்கள்.அது சரி நீங்கள் இப்போது ஒரு நூற்றாண்டு தாண்டப்போகின்றீர்களல்லவா?கதைத்து என்ன பிரயோசனம்???? :lol:

முதலாம் இரண்டாம் உலகப் போர்களில... எங்களை விட மோசமா பாதிக்கப்பட்டவை. ஆனால் எங்கையும் ஓடல்ல. யூதர்களைத் தவிர..! :lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாம் இரண்டாம் உலகப் போர்களில... எங்களை விட மோசமா பாதிக்கப்பட்டவை. ஆனால் எங்கையும் ஓடல்ல. யூதர்களைத் தவிர..! :lol::o

அன்று பல இடங்களுக்கு ஓடி ஒளித்த யூதர்கள்தான் இன்று ஆலமரம் போல் விருட்சமாகி பல நாடுகளிலிருந்தும் தங்கள் சொந்த நாட்டை தங்கள் உறவுகளை பல வழிகளிலும் பாதுகாத்துக்கொள்கிறார்கள் :lol: இரண்டாம் உலகப்போரின் போது வட,தென் அமெரிக்க நாடுகளுக்கு புலம் பெயந்த ஐரோப்பியர்களை நீங்கள் அறியவில்லையா?ஏன் இன்றைய பிரான்ஸ் ஜனாதிபதி கூட யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்தவர்தான். :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று பல இடங்களுக்கு ஓடி ஒளித்த யூதர்கள்தான் இன்று ஆலமரம் போல் விருட்சமாகி பல நாடுகளிலிருந்தும் தங்கள் சொந்த நாட்டை தங்கள் உறவுகளை பல வழிகளிலும் பாதுகாத்துக்கொள்கிறார்கள் :lol: இரண்டாம் உலகப்போரின் போது வட,தென் அமெரிக்க நாடுகளுக்கு புலம் பெயந்த ஐரோப்பியர்களை நீங்கள் அறியவில்லையா?ஏன் இன்றைய பிரான்ஸ் ஜனாதிபதி கூட யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்தவர்தான். :o

யூதர்களுக்கு இனப் பற்று உறுதியா இருந்திச்சு.. இருக்குது.. அதால நிலைத்திருக்கிறார்கள். நம்மாக்கள்...???! சும்மா சொல்லாதேங்க கு.சா. ஈழம் கிடைச்சா ஊருக்குப் போவிங்களா.. இல்ல...???!

முதலா இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்கள் தொகையும் உரிமைப் போராட்ட்டத்தில் 80 ஆயிரம் மக்களும் போராளிகளும் மடிய.. நாம் இலட்சக்கணக்கில்.. ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியாக் கண்டம் நோக்கி பொருளாதார அகதியாக ( அதுதான் அதிகம்) வந்ததும்.. ஒன்றா..???! வந்ததும் வந்தம்.. இனப்பற்றை எத்தனை பேர் காக்கிறம். எத்தனை பேர் தாயகத்தைப் பற்றிச் சிந்திக்கினம்.. தாயக நிலமையில பங்களிப்புச் செய்யினம்...??! ஆனால் ஐரோப்பியர்களும் யூதர்களும் தகாத காலங்களில் தான் பெரும் கண்டுபிடிப்புக்களைச் செய்திருக்கினம்.. நாங்க என்னத்தை.. கண்டுபிடிச்சு.. தாயக்த்தை ஆக்கிரமிப்பில இருந்து காக்கிறம்..???! :(:o:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே கண்டுபிடித்தவையை வைத்து மனிதன் கைகால் தெரியாமல் நடக்கிறான் .அதைவிட கொடுமை என்னவெண்டால் இவ்வளவு வல்லரசுகளுடன் கூட்டு வைத்திருக்கும் மகிந்த சகோதரர்களுக்கு வன்னிக்கை கால் வைக்கேலாமல் இருக்கு???? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.