Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/5/2024 at 09:53, Kavi arunasalam said:

large.IMG_6529.jpeg.00accbd615171e2c3402

உந்த பலகாரம் கடத்தி கார் டிக்கிக்கிள்லை அமுக்கிறதெல்லாம் நமக்கு வெரி சிம்பிள் கண்டியளோ......
உத விட இன்னொரு அதிசயம் என்னவெண்டால் பின்னேர சாப்பாட்டுக்கு கொத்துரொட்டியும் ஆட்டுறைச்சியும் வகை தொகையாய் கொண்டு வந்து   வைச்சிருந்தினம். விடுவனே?????? 😎

எனக்கு கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை......🤣

  • Replies 256
  • Views 18.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில்  சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு  நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்ல

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/5/2024 at 21:52, குமாரசாமி said:

மறு வார்த்தை பேசாமல் இந்த பாடலை மனதுக்குள் நினைத்தபடி....

மாடி படிகளை நோக்கி பெண்கள் சாறியை தூக்கிக்கொண்டு நடப்பது போல் நானும்  பட்டு வேட்டியை தூக்கிக்கொண்டு நகர்ந்தேன்.😊

 பட்டு வேட்டி சரசரக்க அன்னநடை போட்டுக்கொண்டு காலை உணவு பகுதிக்கு போனால் எங்கடை சனம் ஒரு 30,40 பேருக்கு கிட்ட கோப்பை முழுக்க நிரப்பி வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்திச்சினம்...அதிலை பிரான்ஸ்,சுவீஸ்,நோர்வே,டென்மார்க்,மொரீசியஸ் எண்டு எங்கட சன கூட்டம்.....😎

எனக்கு தெரிஞ்சவையள் அங்கையிருந்து கையை காட்ட நானும் அவளையளோட இருந்து ஊர்க்கதையள் கதைச்சுக்கொண்டே ஒரு பாண்துண்டை கடிக்க வெளிக்கிட.......மனிசியிட்ட இருந்து ஒரு வாட்ஸ் அப் மசேஜ் வந்த சத்தம் கேட்டுது...அதை பார்த்தால்  கட்டிக்கொண்டு வாறதை மறக்க வேண்டாம் எண்டு ஞாபகப்படுத்தியிருந்தார்.🤪

இதுக்குப்பிறகும் நான் வெறுங்கையோடை றூமுக்கு போனனெண்டால்.....வெளியிலை சொல்லேலாத அளவுக்கு சம்பவங்கள் பெரியாய் இருக்கும் எண்டதாலை....எதை கட்டிக்கொண்டு போகலாம் எண்டு மாஸ்ர் பிளான் போட வெளிக்கிட்டன்...🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/5/2024 at 07:01, Kavi arunasalam said:

குமாரசாமியரைச் சந்திக்க இன்னமும் எத்தனை காலம் தேவையோ தெரியவில்லை. கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விட்டுவிட்டேன்.  

சந்திப்பு பற்றிய விபரங்கள்  மகிழ்ச்சியாக இருக்கிறது.

எமது அன்றைய காலம் போய்....இன்றைய சமுதாயம் பல்கி பல வழிகளில் பரந்து விட்டனர். விரிவடைந்த எமது சமுதாயங்களில்  ஒருவரையொருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் விரைவில் வரலாம்.யார் கண்டார்?
வெகு  விரைவில் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நேரத்தில் பாஞ்ச் ஐயா நீங்கள் சிறித்தம்பியர் நான் என குறுகிய சந்திப்பு இல்லாமல்.....பல மணி சந்திப்பாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.

இதனுள் பழைய/புதிய உறவுகளும் இணைந்து கொண்டால்  நிறை குட சந்திப்பாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

இஞ்சைதான் நிக்கிறன்.....கட்டிக்கொண்டு வந்த வடையை அளவு கணக்கில்லாமல் சாப்பிட்டதால வயிறு  இன்னும் நோர்மலுக்கு வரரேல்லை......:weary_face:

1610529890-5465.jpg

animiertes-essen-smilies-bild-0065.gif வடை... வயித்துக்கு  பிரச்சினையான சாமான் என்ற படியால், animiertes-schwarz-smilies-bild-0047.gif
animiertes-essen-smilies-bild-0147.gif ஒன்பது  உளுந்து வடைக்கு மேலை நான் சாப்பிடவில்லை. animiertes-essen-smilies-bild-0112.gif   
அதாலை... என்ரை வயிறு தப்பீட்டுது. 
animiertes-schwarz-smilies-bild-0084.gif  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

1610529890-5465.jpg

animiertes-essen-smilies-bild-0065.gif வடை... வயித்துக்கு  பிரச்சினையான சாமான் என்ற படியால், animiertes-schwarz-smilies-bild-0047.gif
animiertes-essen-smilies-bild-0147.gif ஒன்பது  உளுந்து வடைக்கு மேலை நான் சாப்பிடவில்லை. animiertes-essen-smilies-bild-0112.gif   
அதாலை... என்ரை வயிறு தப்பீட்டுது. 
animiertes-schwarz-smilies-bild-0084.gif  

சிறி என்ன வயிறா?

வண்ணாங்குளமா?

15 hours ago, குமாரசாமி said:

.மனிசியிட்ட இருந்து ஒரு வாட்ஸ் அப் மசேஜ் வந்த சத்தம் கேட்டுது...அதை பார்த்தால்  கட்டிக்கொண்டு வாறதை மறக்க வேண்டாம் எண்டு ஞாபகப்படுத்தியிருந்தார்.🤪

ஓஓஓ

இந்த பொதி சுத்துற வேலை குடும்ப வழக்கம் போல.

நானும் ஏதோ உங்களை தவறா........

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

1610529890-5465.jpg

animiertes-essen-smilies-bild-0065.gif வடை... வயித்துக்கு  பிரச்சினையான சாமான் என்ற படியால், animiertes-schwarz-smilies-bild-0047.gif
animiertes-essen-smilies-bild-0147.gif ஒன்பது  உளுந்து வடைக்கு மேலை நான் சாப்பிடவில்லை. animiertes-essen-smilies-bild-0112.gif   
அதாலை... என்ரை வயிறு தப்பீட்டுது. 
animiertes-schwarz-smilies-bild-0084.gif  

இரைப்பையா உரப்பையா எங்கட மாமா ஒருவர் நக்கலடிக்கிறவர்!

அண்ணை நான் நினைக்கிறன் விலைவாசி கூடினபடியால் வடையை சிறிதாக்கிப் போட்டினமோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி என்ன வயிறா?

வண்ணாங்குளமா?

4 minutes ago, ஏராளன் said:

இரைப்பையா உரப்பையா எங்கட மாமா ஒருவர் நக்கலடிக்கிறவர்!

அண்ணை நான் நினைக்கிறன் விலைவாசி கூடினபடியால் வடையை சிறிதாக்கிப் போட்டினமோ?!

வடை... சின்னன் இல்லை. உள்ளங்கையளவு பெரிய வடைதான். 😂
"காய்ஞ்ச்ச  மாடு" தியரிப்படி 9 வடை எப்பிடி வயித்துக்குள்ளை போனதென்றே தெரியவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

வடை... சின்னன் இல்லை. உள்ளங்கையளவு பெரிய வடைதான். 😂
"காய்ஞ்ச்ச  மாடு" தியரிப்படி 9 வடை எப்பிடி வயித்துக்குள்ளை போனதென்றே தெரியவில்லை. 🤣

அப்ப அண்ணை வடை சாப்பிட்டுக் கனகாலமோ?! நான் நம்பமாட்டன் நீங்கள் எங்களை உசுப்பேற்ற சொல்றது போல இருக்கு!
இனி அடிச்சுக் கேட்டாலும் சொல்லிடாதீங்க!!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

வடை... சின்னன் இல்லை. உள்ளங்கையளவு பெரிய வடைதான். 😂
"காய்ஞ்ச்ச  மாடு" தியரிப்படி 9 வடை எப்பிடி வயித்துக்குள்ளை போனதென்றே தெரியவில்லை. 🤣

திருமண வீட்டார் உண்மையிலேயே பாவம்.

 @குமாரசாமி க்கு நண்பர்களுக்கு குடும்பத்தினருக்கு மொத்தமா எத்தனை வடை போயிருக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அப்ப அண்ணை வடை சாப்பிட்டுக் கனகாலமோ?! நான் நம்பமாட்டன் நீங்கள் எங்களை உசுப்பேற்ற சொல்றது போல இருக்கு!
இனி அடிச்சுக் கேட்டாலும் சொல்லிடாதீங்க!!

இந்த சடங்கில் சாப்பிட முதல்,  இரண்டு கிழமைக்கு முன்னமும் வடை சாப்பிட்டனான். 
அப்படியிருந்தும்... நாக்கு விடுகுதில்லை, வயிறு  கேக்குதில்லை.  😂

1 minute ago, ஈழப்பிரியன் said:

திருமண வீட்டார் உண்மையிலேயே பாவம்.

 @குமாரசாமி க்கு நண்பர்களுக்கு குடும்பத்தினருக்கு மொத்தமா எத்தனை வடை போயிருக்கும்?

சாப்பாட்டு விசயத்திலை கணக்கு பார்க்கக் கூடாது. என்றாலும்.... 
குத்து மதிப்பாக 75 வடை போயிருக்கும் போலை கிடக்கு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

சாப்பாட்டு விசயத்திலை கணக்கு பார்க்கக் கூடாது. என்றாலும்.... 
குத்து மதிப்பாக 75 வடை போயிருக்கும் போலை கிடக்கு.  🤣

அப்ப சபையில வடைத்தட்டுப்பாடு வந்திருக்குமோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அப்ப சபையில வடைத்தட்டுப்பாடு வந்திருக்குமோ?!

சீச்சீ.... இப்பிடி வாற  ஆட்களுக்கு என்றே, எக்ஸ்ராவாக வடை சுட்டு வைக்கிறவை.  😎  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

இந்த சடங்கில் சாப்பிட முதல்,  இரண்டு கிழமைக்கு முன்னமும் வடை சாப்பிட்டனான். 
அப்படியிருந்தும்... நாக்கு விடுகுதில்லை, வயிறு  கேக்குதில்லை. 

உங்கட சடங்கென்றபடியால் அமத்தி வாசித்திருக்கிறீங்க.

நல்லகாலம் குமாரசாமி வரலை என்று சந்தோசப்படுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

வடை சாப்பிட என்றே வயிற்றை காயவைத்து

போட்டுத்தாக்குகிறார்கள் போல 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓ

இந்த பொதி சுத்துற வேலை குடும்ப வழக்கம் போல.

நானும் ஏதோ உங்களை தவறா........

ஏதோ தாங்கள் போற கொண்டாட்டங்களிலை  மிஞ்சுறதையாவது கட்டிக்கொண்டு போகாத சொக்கத்தங்கங்கள் மாதிரி பில்டப்......😎

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

1610529890-5465.jpg

animiertes-essen-smilies-bild-0065.gif வடை... வயித்துக்கு  பிரச்சினையான சாமான் என்ற படியால், animiertes-schwarz-smilies-bild-0047.gif
animiertes-essen-smilies-bild-0147.gif ஒன்பது  உளுந்து வடைக்கு மேலை நான் சாப்பிடவில்லை. animiertes-essen-smilies-bild-0112.gif   
அதாலை... என்ரை வயிறு தப்பீட்டுது. 
animiertes-schwarz-smilies-bild-0084.gif  

உழுந்து வடை மட்டுமே ஒன்பது என்றால்.....மற்றைய பலகாரங்களின்.  அளவீடு என்ன?? .. கடலை வடை,.லட்டு,.முறுக்கு    பயற்றம் பணியாரம்,. சீனியரியம். .........விஸ்கி பிரண்டி, ..போத்தல்கள்.  கிடைக்கவில்லையா,???

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலம்பெயர்ந்து வந்து நான்கு வருடங்கள் என் மனைவி பிள்ளகளப் பார்க்க முடியாது தவித்த தாக்கத்தையும் சோகத்தையும், திரும்பவும் யாழ்களம் செல்ல இயலாதிருந்த இரண்டு வருடங்களில் அனுபவித்தேன், இடைஇடையே சிறீ மற்றும் வன்னியரின் இவர்களின் தொடர்புகள் சற்று ஆறுதல் தந்ததை மறுக்க முடியாது. இந்நேரத்தில் தமிழ் சிறீ அவர்கள், கள உறவு குமாரசாமி அவர்களை நாளை சந்திப்போமா என்று கேட்டது கனவுபோல் இருந்தது. எங்கு எப்படி எவ்வாறு என்பதெல்லாம் விபரமாகக் கூறினார், சிறீயருக்கும் கால்கள் இன்னமும் பூரண குணமாகாதபடியால் அவர் மகன் அல்லது மகள் கூட்டிச்செல்வார்கள் என்ற எண்ணத்தில் சரி வருகிறேன் என்றேன். மறுநாள் காலை 10.30மணிக்கு ஒரு வியாபார நிலையத்தில் சந்தித்துச் செல்வதாகவும்,  என்மகள் என்னை அந்த நிலையத்திற்குக் கூட்டிச் செல்வதாகவும் முடிவாயிற்று. சூரியன் பார்த்து நேரம் கணிக்கும் பண்பாட்டிலிருந்து பாஞ் இன்னமும் விடுபடவில்லையோ என்ற ஐயத்தினால் போலும் “பாஞ் எங்குள்ளீர்கள்” என்ற சிறீயரின் கேள்வி என் போனில் ஒலித்தது. 

போன்  ஒலிக்கவும் நாங்கள் அவருக்குக் கைகாட்டிக் கடக்கவும் சரியாக இருந்தது. மகிழூந்தில் சிறீயர்மட்டுமே இருந்தார். “உங்களுக்கு கால்கள் இயலுமா? தூரம் ஓட்ட முடியுமா? என்று கேட்டதுதான் தாமதம், அந்தக் கேள்விக்காகவே காத்திருந்ததுபோல் திறப்பை என்னிடம் தந்துவிட்டார். நான் பலமுறை ஓடி அனுபவப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை, சில மணித்துளிகளில் மகிழூந்து வைபவம் நடைபெறும் மண்டபத்தை அடைந்தது. 

நாங்கள் அழையா விருந்தாளிகள். ஓசிச் சோற்றுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிடுவார்களோ என்று விழி பிதுங்கிநிற்க “அண்ணைவாங்கோ” என்ற வரவேற்பு அதிசயிக்கவைத்தது. பல காலமாக சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காத என் நண்பன். “வாங்கோசிறி” தமிழ்சிறியோடு வேலைபார்த்த அவரது நண்பன். மனம் அமைதிபெற வந்தவிடையத்தை ஆரம்பித்தோம், “கனோவரில் இருந்துவந்த குமாரசாமி என்பவரைத் தெரியுமா?” எங்களைப் பார்த்து புன்முறவல் பூத்தவர்கள் எல்லோரிடமும் இந்தக் கேள்வி பாய்ந்தது. 

முகமெல்லாம் மலர்ந்த புன்முறுவலோடு பட்டுவேட்டி சரசரக்க ஒரு குமரன் வரவே அவரிடமும் எங்கள் கேள்வி தொடர்ந்தது. அவரோ வாருங்கோ இருங்கோ” என்று எங்களை வரவேற்றவர், பக்கத்தில் ஒருவருக்கு சைகைகாட்ட காப்பியோடு பலகாரத்தட்டுகள் பறந்து வந்தன. குமாரசாமி அவர்களின் தமிழ்மொழி ஆற்றலை அவரது எழுத்தில் அறிந்து வியந்தேனே தவிர அவரோடு அதிகம் கதைத்துப் பேசியதில்லை, ஆனால் அதிகம் கதைத்து குரல் அறிந்த தமிழ்சிறி அந்தக் குமரனைக் கட்டியணைத்து சாமியண்ணை என்றார்.  மொட்டைத் தலையோடு வயதான  ஒரு பெரியவராக என் மனதில் பதித்துவைத்த குமாரசாமியரை குமரன்சாமியாக கண்ட அதிர்ச்சியில் நான் உறைந்து நின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, குமாரசாமி said:

எதை கட்டிக்கொண்டு போகலாம் எண்டு மாஸ்ர் பிளான் போட வெளிக்கிட்டன்...🤣

பிளான் போட வெளிக்கிட......சிறித்தம்பியர் நானும் பாஞ் அவர்களும் குறிப்பிட்ட விலாசத்திற்கு 11.30 மணியளவில் வருகின்றோம். ரெலிபோனை கால்சட்டை பொக்கற்றுக்குள் வைத்திருக்கவும் என செய்தி அனுப்பியிருந்தார்....😄

Quote

நானும், பாஞ்சும் 11:30 மணியளவில் மேலுள்ள விலாசத்திற்கு வருகின்றோம்.    கைத் தொலைபேசியை காற்சட்டை பொக்கற்றுக்குள் வைத்திருக்கவும்.

பிளான் போட வெளிக்கிட......சிறித்தம்பியர் நானும் பாஞ் அவர்களும் குறிப்பிட்ட விலாசத்திற்கு 11.30 மணியளவில் வருகின்றோம். ரெலிபோனை கால்சட்டை பொக்கற்றுக்குள் வைத்திருக்கவும் என செய்தி அனுப்பியிருந்தார்....

உடனேயே வாட்ஸ் அப்பில் கவியரும் சிலநேரம் வரலாம் என எழுதியிருந்தார்....நானும் இரட்டிப்பு மகிழ்ச்சி எண்டு எழுதி அனுப்ப....அடுத்த கணமே அவர் வரமாட்டார். கவி சுற்றுலா போகின்றாராம்....வரமாட்டார் என அடுத்த மசேஜ் வந்தது.வந்த மகிழ்சியில் ஒரு கவலை என்றாலும்......
கட்டளைக்கமைய இரண்டு பணிஸ்களை கட்டிக்கொண்டு றூமுக்கு விரைந்தேன்.

அந்த 11.30  நேரத்தோட நிக்கணும் எண்ட ரெஞ்சன் கூடக்கூட  நானும் குடும்பமும் அள்ளிக்கட்டிக்கொண்டு  விழா மண்டபத்தை நோக்கி  நெருப்பாய் பறந்தோம்

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

1610529890-5465.jpg

animiertes-essen-smilies-bild-0065.gif வடை... வயித்துக்கு  பிரச்சினையான சாமான் என்ற படியால், animiertes-schwarz-smilies-bild-0047.gif
animiertes-essen-smilies-bild-0147.gif ஒன்பது  உளுந்து வடைக்கு மேலை நான் சாப்பிடவில்லை. animiertes-essen-smilies-bild-0112.gif   
அதாலை... என்ரை வயிறு தப்பீட்டுது. 
animiertes-schwarz-smilies-bild-0084.gif  

உணவின் அளவு விடயத்தில் நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான். வயசு போகப்போக பசி எனக்கும் கூடுகின்றது. உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கின்றது. வடை மட்டுமா அருகில் பாகு/உருண்டை/முறுக்கு என எது கிடந்தாலும் அம்பிடுவது எல்லாம் தட்டுடன்/பையுடன் காலியாகிவிடும். சாப்பிடுவதில் அப்படியொரு வெறித்தனம் இப்போது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2024 at 19:45, ஈழப்பிரியன் said:

திருமண வீட்டார் உண்மையிலேயே பாவம்.

 @குமாரசாமி க்கு நண்பர்களுக்கு குடும்பத்தினருக்கு மொத்தமா எத்தனை வடை போயிருக்கும்?

நான்தான் முத்திப் பழுத்து மூன்றாவது கால்தேடும் நிலமைக்கு வந்துவிட்டேனோ என்று கவலைப்பட்டால்….. களத்தில் சில உறவுகள் நாங்கள் பிஞ்சிலேயே பழுத்துவிட்டோம் என்று என்னை விஞ்சி நிக்கினம். தம்பி குமரன்சாமியைச் சந்திக்க அவரது உறவுக்காரப் பிள்ளையின் பூப்புனித நீராட்டுவிழா நடைபெறும் மண்டபம் சென்றோம் என்று அழகிய தமிழில் அச்சுப்போல் எழுதியும் வாசித்த இளசுகள் சிலர் திருமண நினைவிலேயே உள்ளனர். உமி தூக்கும் பலம் உள்ளவரை காமரசம் கண்களை மறைக்கும் என்பது உண்மைதான்.😍😋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Paanch said:

தம்பி குமரன்சாமியைச் சந்திக்க அவரது உறவுக்காரப் பிள்ளையின் பூப்புனித நீராட்டுவிழா நடைபெறும் மண்டபம் சென்றோம்

 பாஞ்ச் ஐயா! இப்ப  பூப்புனித நீராட்டு விழா என சொல்லுறதில்லையாம். 

saree ceremony  எண்டுதான் சொல்லுவினமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

தம்பி குமரன்சாமியைச் சந்திக்க அவரது உறவுக்காரப் பிள்ளையின் பூப்புனித நீராட்டுவிழா நடைபெறும் மண்டபம் சென்றோம் என்று அழகிய தமிழில் அச்சுப்போல் எழுதியும் வாசித்த இளசுகள் சிலர் திருமண நினைவிலேயே உள்ளனர்.

நாங்க பலகாரத் தட்டுடன் நின்றுவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 பாஞ்ச் ஐயா! இப்ப  பூப்புனித நீராட்டு விழா என சொல்லுறதில்லையாம். 

saree ceremony  எண்டுதான் சொல்லுவினமாம்.

அது கிடக்கட்டும்.       கவி.   வரைந்த உங்கள் படம் எப்படி??   உங்களை பார்க்காமல் வரைந்துள்ளார்.  அருமை திறமைசாலி.    தான்    வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

பாஞ்ச் ஐயா! இப்ப  பூப்புனித நீராட்டு விழா என சொல்லுறதில்லையாம். 

saree ceremony  எண்டுதான் சொல்லுவினமாம்.

அதுசரி சாமியார்.. நீங்கள் குளிருக்குப் போத்துப் படுக்க பெட்சீட் பாவிக்கறது இல்லையாம், பரிமளாக்காவின் சாறியைத்தான் பாவிக்கிறதா கேள்விப்பட்டன், உண்மையா??? அதுதான் சாறிஞாபகம் வந்ததோ????😁😂 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2024 at 23:45, குமாரசாமி said:

கவி சுற்றுலா போகின்றாராம்....வரமாட்டார் என அடுத்த மசேஜ் வந்தது.வந்த மகிழ்சியில் ஒரு கவலை

இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் குமாரசாமி

large.IMG_6537.jpeg.088f08bb54de75263132

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.