Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

சுமந்திரனை ஒரு மென்மையான அகிம்சாவாதியாக, ஜனநாயக அரசியல்வாதியாக நீங்கள் கருதலாம். அவரது நிலைப்பாடு குறித்து உங்களுக்கு ஆளமான நம்பிக்கையும், உற்சாகமும் இருக்கலாம். அவரது அரசியலினூடாக தமிழர்கள் தமது அபிலாஷைகளை அடைந்துவிடமுடியும் என்று நீங்களை உண்மையிலேயே நம்பலாம். அது உங்களது நிலைப்பாடு. எவரும் கேள்விகேட்க முடியாது. 

அவ்வாறே, சுமந்திரனை விமர்சிப்போரும், அவரது அரசியலுடன் முரண்படுவோரும் அதற்கான காரணங்களை வைத்திருப்பார்கள்.

தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதியான சுமந்திரன், அதே தமிழ் மக்களிடையே போவதற்கு விசேட அதிரடிப்படை எதற்காகக் காவலுக்கு வரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தாமே தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பிய ஒருவரைத் தாக்குவதற்கான தேவை ஏன் தமிழர்களுக்கு வரவேண்டும்? சுமந்திரனுடன் கூடவே தெரிவுசெய்யப்பட்ட ஏனைய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் தமது மக்களைப் பார்க்கச் செல்லும்போது விசேட அதிரடிப்படையினருடன் தான் செல்கிறார்களா? இல்லையென்றால், அது ஏன்? 

சுமந்திரனுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்ட வன்முறையினைக் கையாளும் தமிழர்களுக்கு நீங்கள் ஆதரவளிக்கத் தேவையில்லை. அதனை அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.  

பந்தி பந்தியாக எழுதியிருக்கிறீர்கள், ஆனால் ஏற்கனவே மேலே 3 பதிவுகளில் உங்களுக்கும் பிரபாவுக்கும் சுருக்கமாக எழுதிய பதில்களை வாசிக்காமலே கடந்து வந்து விட்டீர்களா அல்லது உங்களுக்குப் பிடித்த பதில் கிடைக்கும் வரை அலட்டிக் கொண்டிருக்கப் போகிறீர்களா?

அவை தான் என் பதில்கள், அவற்றை விட வேறெதுவும் எழுதும் அளவுக்கு எனக்கு தீவிர தேசியத்தில் அக்கறையும் இல்லை, நேரமும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

வெளிநாட்டுச் சக்திகளுக்கும், அமைப்புகளுக்கும் ஒரே முகமாக எம்மைப் பிரதிநிதுத்துவம் செய்யாமல் பிரிந்து நிற்பது தான் தமிழ் அரசியல் தலைவர்களின் பிரதான தவறு

இந்த தவறுக்கு என்ன காரணம் ..ஒற்றுமையின்மை, சுயநலம் 

இந்தக் கட்சிகளின் கொள்கைகள் தமிழ் மக்களின் நலனைச் சார்ந்ததாக இருந்திருந்தால் 2009ற்குப் பின்னராவது ஒற்றுமையாக வந்திருக்கவேண்டும். அப்படி இன்று வரை நடக்கவில்லை. ஏன்? சுயநலம்தான். 

இவர்களின் செயல்கள் உங்களுக்கு தவறாகத் தெரிவது எனக்கு தவறாகவும், அந்த தவறுக்கு காரணம் சுயநலமாகவும் தெரிகிறது. அதுதான் வித்தியாசம். 

மக்கள் இவர்களை வாக்குகளால் திருத்தவேண்டும் என்றால் அதனையும் செய்துதான் வருகிறார்கள் இல்லையென்றால் ஒரு கட்சிக்கே பாரம்பரியமாக வாக்களித்து வந்த மக்கள் அந்தக் கட்சியின் செயற்பாடுகளால் நம்பிக்கை இழந்து போனதை கடந்த தேர்தலிலும் காட்டியிருந்தார்கள். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை. ஆகையால் இனியும் அதனைத்தான் செய்வார்கள். 

மேலும், இந்த silent majorityற்குள் உங்களைப் போன்றவர்கள், என்னைப் போன்றவர்கள், தேசியத்தின் மீது அக்கறை இருந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாமல் மெளனமாக இருப்பவர்கள் என பலரும் அடங்குவார்கள் என்றுதான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, P.S.பிரபா said:

இது சுற்றி சுற்றி ஒரே கொல்லையில் நிற்கும் circular உரையாடல். ஆனால் தீர்வை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்: தேர்தல், வாக்குகள், பதவி நீக்கம்.

இதை சரியான வழியில் ஊக்குவிப்பதை விட்டு விட்டு ஏன் சும்மா பேசிக் கொண்டும், கிட்டத் தட்ட அரசியல் வாதிகளைப் "போட்டுத் தள்ள வேண்டும்" என்ற தொனியிலும் பேச வேண்டும்?. 

இந்த தீவிர தேசிய ranting தான், பலரைத் தள்ளி வைத்திருக்கிறது. இவற்றில் நின்று விலகி நிற்போருக்கு நேரமும் மிச்சம், அமைதியும் கிடைக்கும். தீவிர தமிழ் தேசியர்கள் எல்லாவற்றையும் செய்து முடித்து வெற்றி பெறட்டும், யாரும் போய் பங்கு கேட்கப் போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

பூனைகள் இல்லா உலகில் எலிகளுக்கு கொண்டாட்டம்…..

தமிழர்களின் விடிவில் உங்களின் வகிபாகம் யாது ???

வெறுமனே யாழில் பொங்கி விட்டு செல்வதால் ஒன்றும் ஆவதற்கில்லை…

நடந்திருக்கலாம் 

பார்த்திருக்கலாம் 

கேட்டிருக்கலாம் 

தடுத்திருக்கலாம் 

அப்புறம் 

நடந்திருந்தால் 

பார்த்திருந்தால் 

கேட்டிருந்தால்

தடுத்திருந்தால்.....

????????????

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நடந்திருக்கலாம் 

பார்த்திருக்கலாம் 

கேட்டிருக்கலாம் 

தடுத்திருக்கலாம் 

அப்புறம் 

நடந்திருந்தால் 

பார்த்திருந்தால் 

கேட்டிருந்தால்

தடுத்திருந்தால்.....

????????????

அண்ணா நீங்கள் பேச்வார்த்தையில் பங்கேற்றவர்களுடன் நேரடியாகவே பயணித்தவர். உங்களுக்கு பல விடயங்களை அவர்கள் கூறியிருப்பார்கள்.

எவ்வாறான சூழ்நிலை பேச்சுவார்த்தை மேசையில் இருந்தது என்பது கூட தெரியாமல் இங்கு சிலர். 

இவர்கள் அப்போதும் சரி இப்போதும் சரி தம் நலனில். ஆனால் வியாக்கியானத்திற்கு குறைவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2024 at 00:41, island said:

இதில் எனக்கு முரண்பாடு உண்டு. தமிழ் மக்களினதும் அவர்களின் பிள்ளைகளினது  தியாகத்தாலும்,  தமிழ் மக்களினது பங்களிப்பால் கிடைத்த ஆயுத பலத்தாலும்,   புலி வீரர்களது  போர் திறமையாலும்,    புலிகள் இயக்கம் அடைந்த பேரம் பேசும் உயர் வலுவை உபயோகித்து அன்றைய நிலையில் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து  இன்று கனவில் கூட நினைக்க முடியாத ஒரு அரசியல் தீர்வை உருவாக்கி சர்வதேச நீடுகளின் ஒத்துளைப்புடன் அதை அமுல் செய்ய புலிகளின் அரசியல் பிரிவை பலமுடையதாக்க செய்யும் வல்லமையை அன்று கொண்டிருந்தது. மேற்கு நாடுகளும் அதையே விரும்பி பேச்சுவார்தைக்கு திரும்புமாறு புலிகளை கேட்டுக்கொண்டேயிருந்தனர்.  புலிகள் அதை புறக்கணித்து  மீண்டும் யுத்ததிற்கு செல்ல முடிவெடுத்ததன் பலனே  முள்ளிவாய்கால் பேரழிவு.  ஆகவே,  அன்று ரணிலை ஜனாதிபதியாக்கி அவருடன் பேசியிருப்பதன் மூலம் புலிகள் பலவீனமாக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மாறாக,  அரசியல் ரீதியில் பலப்பட்டிருப்பார்கள். இன்று மூக்கால் அழும் நிலையும் வந்திருக்காது என்பது எனது கருத்து. 

ஒரு வித்தியாசமான கோணத்தில் விடயங்களை அணுகுகிறீர்கள், இதுவும் ஒரு நல்ல கருத்துதான், ஆனால் நடைமுறையில் இலங்கை அரசு மிக தெளிவாக புலிகளை அழிப்பதில்தான் கடந்தகாலத்தில் அக்கறை காட்டி வந்துள்ளது.

புலிகள் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொது இந்திய இராணுவம் வெளியேறிய பின் நல்லூர் கோயிலுக்கு சென்ற புலிகளின் தலைவரது துணைவியாரை பின் தொடர்ந்து புலிகளின் தலைவரின் இடத்தினை அறிந்து அவரை கொல்லும் முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தது.

இரணில் விகிரமசிங்க அவ்வாறு செய்ய மாட்டாரா என தெரியாது, பிரேமதாச புலிகளுக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போராடுவதற்காக அனுப்பிய பார ஊர்திகளில் ஒரு பார ஊர்தி முழுவதுமாக புலிகளின் தலைவரின் பிள்ளைகளுக்கான விளையாட்டு பொருள்களை பிரேமதாசா வழ்ங்கியிருந்தார் என கேள்விப்பட்டிருந்தேன்.

ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடிக்கொண்டே மறுபுறம் கொல்ல ஆள் அனுப்புவதில் அவர்கள் கில்லாடிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அண்ணா நீங்கள் பேச்வார்த்தையில் பங்கேற்றவர்களுடன் நேரடியாகவே பயணித்தவர். உங்களுக்கு பல விடயங்களை அவர்கள் கூறியிருப்பார்கள்.

எவ்வாறான சூழ்நிலை பேச்சுவார்த்தை மேசையில் இருந்தது என்பது கூட தெரியாமல் இங்கு சிலர். 

இவர்கள் அப்போதும் சரி இப்போதும் சரி தம் நலனில். ஆனால் வியாக்கியானத்திற்கு குறைவில்லை.

நான் அன்றும் இன்றும் என்றும் சொல்வது தான் 

நான் புலிகளின் அத்தனை விடயங்களையும் தெரிந்து கொண்டே ஆதரித்தவன்.  

புலிகளே பேச்சு வார்த்தை மேடைகளை உருவாக்கினார்கள் அவர்களே சிங்கள தரப்பை மேசைக்கு கொண்டு வந்தார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் விட்டு கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி தமிழ் மக்கள் சுபீட்சமாக வாழ இலங்கைக்குள் ஒரு தீர்வை பெற்று விட துடித்தார்கள். 

சட்டியில் ஒன்றும் இல்லை என்று தெரிந்த போதிலும் அகப்பையை  துலாவியபடியே தான் இருந்தார்கள்.

பேச்சு வார்த்தைக்குழு ஒரு போதும் தமிழ் ஈழம் பற்றி பேசியதே இல்லை. 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

ஒரு வித்தியாசமான கோணத்தில் விடயங்களை அணுகுகிறீர்கள், இதுவும் ஒரு நல்ல கருத்துதான், ஆனால் நடைமுறையில் இலங்கை அரசு மிக தெளிவாக புலிகளை அழிப்பதில்தான் கடந்தகாலத்தில் அக்கறை காட்டி வந்துள்ளது.

புலிகள் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொது இந்திய இராணுவம் வெளியேறிய பின் நல்லூர் கோயிலுக்கு சென்ற புலிகளின் தலைவரது துணைவியாரை பின் தொடர்ந்து புலிகளின் தலைவரின் இடத்தினை அறிந்து அவரை கொல்லும் முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தது.

இரணில் விகிரமசிங்க அவ்வாறு செய்ய மாட்டாரா என தெரியாது, பிரேமதாச புலிகளுக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போராடுவதற்காக அனுப்பிய பார ஊர்திகளில் ஒரு பார ஊர்தி முழுவதுமாக புலிகளின் தலைவரின் பிள்ளைகளுக்கான விளையாட்டு பொருள்களை பிரேமதாசா வழ்ங்கியிருந்தார் என கேள்விப்பட்டிருந்தேன்.

ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடிக்கொண்டே மறுபுறம் கொல்ல ஆள் அனுப்புவதில் அவர்கள் கில்லாடிகள்.

ஈழத்தமிழரின் அரசியல் தொடர்பான உரையாடலை ஏதோ காரணத்துக்காக வேறு விடயங்களுக்கு திசை திருப்ப முயற்சிக்கின்றீர்கள்.  இதற்கு விரிவாக பதில் சொல்ல போனாலும் சிக்கல் தான். என்றாலும் உறவாடி கொலை செய்தல் என்ற உங்கள் கடைசி பந்தியில்  நீங்கள் கூறியது  உண்மை தான்.  அமிர்தலிங்கமும் உறவாடி,  அவரைக்  கொண்டே வாசலில் தம்மைச் சோதனையிடவேண்டாம் என்று சொல்ல வைத்து அவரின் மனைவி கையால் தேனீர் குடித்தவர்களாலே  கொலை செய்யப்பட்டார். பிரேமதாசவும் அவர் வீட்டுக்கு முன் வசித்து உறவாடியவாடியவராலே  கொலை செய்யப்பட்டார். ரஜீவ் கொலையும் அதே போலவே.  இந்த பட்டியல் நீளும்.  ஆனால், எமது உரையாடல் அது பற்றி அல்ல என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்கு சுயநல வகுப்பெடுப்பவர்(கள்) , முன்னர்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ரணிலை மீட்பராக நினைத்து கொண்டிருப்பவர்களை விதண்டாவாதத்திற்கு நான் பிடிச்ச காலுக்கு 3 கால் என்று நிற்பவர்களாகவே என்ப்குப் படுகிறது. ரணில் ஒரு பதவியாசை பிடித்த சுயநலவாதி. அவர் ஒரு உண்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால் மக்களால்நிராகரிக்கப்பட்டவர் இப்படிக் குறுக்கு வழியில் ஜனாதிபதியாகி உள்ளுராட்சிசபைத>மாகாணசபைத்தேர்தல்களை நடத்ததாது பின்போட்டு ஜனாதிபதித் தேர்தலையும் பின் போட சிந்திக்கிற ஒருவராக இருக்க மாட்டார். சிங்கள மக்களுக்கே ஜனநாயகத்தை வழங்காத ஒருவர் தமிழ்மக்களுக்கு எப்படி நியாயமான தீர்வை வழங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவற்றை கதைத்து இப்ப ஒன்றும் ஆகிவிடாது. முதலில் சுக்கு நூறாக தமிழ் கட்சிகளை உடைத்து கடைசியில் சொந்த கட்சியினை நார் நாராக உடைத்த சுமாவை தமிழர் அரசியலில் இருந்து மக்கள் துரத்த வேண்டும் . இது காலத்தின் தேவை. மற்றும்படி மக்கள் தெளிவாக உள்ளார்கள் . தலைவனை சுயம்புவாக ஏற்று கொண்டவர்கள் அவர்கள். யாரும் அவர்களின் இதய துடிப்பை மாற்றமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2024 at 19:34, island said:

ஈழத்தமிழரின் அரசியல் தொடர்பான உரையாடலை ஏதோ காரணத்துக்காக வேறு விடயங்களுக்கு திசை திருப்ப முயற்சிக்கின்றீர்கள்.  இதற்கு விரிவாக பதில் சொல்ல போனாலும் சிக்கல் தான். என்றாலும் உறவாடி கொலை செய்தல் என்ற உங்கள் கடைசி பந்தியில்  நீங்கள் கூறியது  உண்மை தான்.  அமிர்தலிங்கமும் உறவாடி,  அவரைக்  கொண்டே வாசலில் தம்மைச் சோதனையிடவேண்டாம் என்று சொல்ல வைத்து அவரின் மனைவி கையால் தேனீர் குடித்தவர்களாலே  கொலை செய்யப்பட்டார். பிரேமதாசவும் அவர் வீட்டுக்கு முன் வசித்து உறவாடியவாடியவராலே  கொலை செய்யப்பட்டார். ரஜீவ் கொலையும் அதே போலவே.  இந்த பட்டியல் நீளும்.  ஆனால், எமது உரையாடல் அது பற்றி அல்ல என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். 

உங்கள் கற்பனை நண்றாக இருக்கிறது ஆனால் யதார்த்தத்தில் அப்படி நடக்காது எனும் அர்த்தத்தில் கருத்துவைத்ததாக கருதுகிறீர்கள் என நினைக்கிறேன், உங்களை விட என்னிடம் அதிகமான கற்பனை உண்டு, கொஞ்சகாலத்தின் பின்னர்  எமது கை கால்களில் விழுந்து எமது உரிமைகளை தருவார்கள் அதுவரை காத்திருக்கலாம் என😁.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.