Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாயக பெண்களை ஏமாற்றி திருமணம்

Featured Replies

**********

Edited by harikalan

இதுக்கு ஓரே வழி ஒவ்வொரு ஏமாற்றுச் சம்பவங்கள் பற்றியும் முழுவிபரங்களும் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட வேண்டும். அது தான் மற்றவர்கள் ஏமாறாமல் இருப்பதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஏவ்வளவுதான் அறிவுரையை விழிப்புணர்வு நோக்கோடு எழுதினாலும் உறைப்பது கடினம். உண்மை நிகழ்வுகள் அவர்களின் சொந்த அனுபவங்களை பகிரும் பொழுது தான் மக்கள் கவனத்தைப் பெறும்.

அதே நேரம் இப்படி ஏமாற்றுச் சம்பவங்களை ஊடகங்களில் போடுவதை தவறாக பயன்படுத்தி அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யவும் சந்தர்ப்பம் இருக்கு. இதற்கு ஊடகங்களை நடத்துபவர்களின் ஊடகதர்மம் தான் காவலாக இருக்கும்.

இந்த மோசடிகள் மத்திரமல்ல பல்வேறு பட்ட குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது அனுபவத்தை வெளிக் கொண்டுவர வேண்டும் அதனால் மற்றவர்களும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கோடு அணுகுவதில்லை. அவர்கள் முடிந்தளவு அதில் இருந்து மீண்டு இயல்பான தனிப்பட்ட வாழ்க்கைக்கு போவதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். அது பற்றி மற்றவர்களிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொது வாழ்விற்குள் இறங்க விரும்புவதில்லை. இதற்கு எமது சமூகமும் ஒரு காரணம்.

கரிகாலன் அங்கிள் நல்ல விடயத்தை கொண்டு வந்துள்ளீர்கள்!!

இப்படி பல சம்பவங்கள் சிட்னியில் நடந்துள்ளது :( .........இங்கே இருந்து மாப்பிள்ளை போய் திருமணம் செய்துவிட்டு சொத்து எல்லாத்தையும் விற்று போட்டு இங்கே வந்து மணமகளை கூப்பிடுறேன் என்று வருவார் பிறகு அவ்வளவும் தான் :wub: .........அதன் பிறகு மணமகளின் பெற்றோர்கள் சிட்னிக்கு வந்து அழுது கொண்டு மணமகனை தேடுவார்கள்............கடைசியா என்ன மணமகன் மாட்டுபடமாட்டான் ஆனா இவை ஈமெயிலில் மணமகனை பற்றி விபரங்கள் மற்றும் பத்திரிகைகளிள் எல்லாம் பிரசுரிப்பார்கள் ஆனால் இதனை சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது உறவினர்களிற்கே இப்படி பொய்யான செய்தியை வர பண்ணிய சந்தர்பங்களும் சிட்னியில் உள்ளது :) இப்படியான விடயங்களை குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் இல்லாது சிட்னியில் உள்ள சில நிறுவனங்கள் (பெயர் குறிபிடவில்லை நிறுவனம் என்ற சொற்பதம் பாவித்ததன் காரணம் எழுதினது வெட்டுபடமா இருக்க :wub: ) தமகுள் இருக்கும் பகையை இப்படியா மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் தீர்த்து கொண்டது வேதனையை தரும் விசயங்களாக இருகிறது!! :(

இந்த விசயத்தை எடுத்து கொண்டா சிலரை தெரியாதொ வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் தனது பிள்ளையும் வெளிநாட்டிற்கு போயிடுவா தாங்களும் போகலாம் நல்லா இருக்கலாம் என்ற சிந்தனையில் வடிவாக இவர்களை பற்றி விசாரிக்காம திருமணம் செய்ய முற்படுவதே பிழை என்று கூறலாம் இதனால் தான் இவர்கள் இலகுவில் ஏமாற்றபடுகிறார்கள். :) ....இதை தவிர்த்தாலே இந்த பிரச்சினையில் 50% நிவர்த்தி செய்யலாம்!! :)

ஆகவே இவ்வாறு பாதிக்கபட்ட உறவுகள் ஊடகங்கள் மூலம் தான் தங்கள் பரப்புரையை செய்வது சிறந்தது ஆனால் குறிபிட்ட நாட்டில் தான் அவர்கள் இன்னும் இருப்பார்கள் என்பது சந்தேகம் அல்லது தங்களுடைய நாட்டையும் பிழையாக தான் சொல்லி இருப்பார்கள் !!ஆகவே முதலே பாதுகாப்பாக இருப்பது தான் இதற்கு சிறந்தது என்பது என் கருத்து! :) !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வெள்ளம் வரமுன்னம் அணை கட்ட வேண்டும்"

உப்படித்தான் என் நண்பிக்கும் நடந்தது. பாவம் அவள். இன்றுவரை தனிமையில் ஒரு அயோக்கியனை நம்பியதால்

உப்படித்தான் என் நண்பிக்கும் நடந்தது. பாவம் அவள். இன்றுவரை தனிமையில் ஒரு அயோக்கியனை நம்பியதால்

நிலா அக்காவின் நண்பிக்கா பாவம் அவா இப்ப என்ன செய்யிறா நிலா அக்கா அவா!! :)

நிலா அக்காவின் நண்பிக்கா பாவம் அவா இப்ப என்ன செய்யிறா நிலா அக்கா அவா!! :wub:

அவள் இருக்கிறாள்.

கனடாவில் இருந்து வந்தார் அவளின் மாப்பிளை என்று. அப்போதுதான் ஏ எல் முடிச்சிடுட் இருந்தவள். அப்போ எங்களுக்கு எல்லாம் புதினம் போல அட யாரோ கனடாவில் இருந்து நம்ம நண்பியை கல்யாணம் முடிக்க வாறானாம் னு. :)

ஆனால் அவனோ ஒரு ஏமாற்றுக்காரன் என இப்போதுதான் தெரிய வந்திச்சு.

அவனோ ஒரு ஏஜென்சிக்காரனாம். இங்கு வந்து பொண்ணுகளை பதிவுத்திருமணம் செய்து அவர்களை தனது மனைவி என ஸ்பொன்சர் செய்வதுதான் அவனது ஏஜென்சி வேலை.

15 தடவைகள் வந்து 15 பொண்ணுகளை தான் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் என் நண்பியைத்தான் சட்டபப்டி தான் கல்யாணம் செய்யப்போறேன் என சொல்லிட்டு (அதை அவளுக்கு மட்டும் தான் சொன்னான்) கனடா போனவன் தான். அவளை இதுவரை ஸ்பொன்சர் செய்யவும் இல்லை. அவளோடு எந்த தொடர்பும் இல்லை. :wub:

அவள் இருக்கிறாள்.

கனடாவில் இருந்து வந்தார் அவளின் மாப்பிளை என்று. அப்போதுதான் ஏ எல் முடிச்சிடுட் இருந்தவள். அப்போ எங்களுக்கு எல்லாம் புதினம் போல அட யாரோ கனடாவில் இருந்து நம்ம நண்பியை கல்யாணம் முடிக்க வாறானாம் னு. :wub:

இப்படி தான் கனடா மற்றும் வெளிநாடு என்றவுடன் ஏமாறுகிறது அக்கா............பாவம் உங்களின் தோழி அது சரி உங்கள் தோழிக்கும் பதிவு திருமணம் நடந்ததா நிலா அக்கா!! :)

இப்படி தான் கனடா மற்றும் வெளிநாடு என்றவுடன் ஏமாறுகிறது அக்கா............பாவம் உங்களின் தோழி அது சரி உங்கள் தோழிக்கும் பதிவு திருமணம் நடந்ததா நிலா அக்கா!! :)

பதிவுத்திருமணாம் தாலித்திருமணம் எல்லாம் நடந்திச்சு பகலில். ஆனால் அவளின் வாழ்க்கைதான் இருட்டாகிட்டுது

பதிவுத்திருமணாம் தாலித்திருமணம் எல்லாம் நடந்திச்சு பகலில். ஆனால் அவளின் வாழ்க்கைதான் இருட்டாகிட்டுது

பாவம் உங்கள் நண்பி மறுதிருமணம் செய்து கொள்ளவில்லையா நிலா அக்கா உங்களின் நண்பி!! :)

பாவம் உங்கள் நண்பி மறுதிருமணம் செய்து கொள்ளவில்லையா நிலா அக்கா உங்களின் நண்பி!! :)

:wub: இன்னும் இல்லை. இனிவரும் காலத்தில் எப்படியோ தெரியாது. ஆனாலும் அவள் செய்யமாட்டாள் என நினைக்கிறேன் :wub:

:) இன்னும் இல்லை. இனிவரும் காலத்தில் எப்படியோ தெரியாது. ஆனாலும் அவள் செய்யமாட்டாள் என நினைக்கிறேன் :wub:

இன்னும் இல்லையா இனியும் செய்ய மாட்டாவா :wub: ஒரு காலதிற்கு பின் ஏன் செய்யவில்லை என்று மணவருத்தபட்டாளும்படுவா!! :)

  • கருத்துக்கள உறவுகள்

புகலிடத்துக்கு வந்த ஆண்கள் மட்டுமில்ல.. பெண்களும் ஆண்களுக்கு கம்பி நீட்டிட்டு தலைமறைவாகி வாழுறதும் நடக்குது...!

எனது நண்பனின் நண்பன் ஒருவனை புகலிடத்தில் இருக்கும் பெண் ஒருவர் காதலிப்பதாகச் சொல்லி காதலிச்சார். அப்புறம்.. அவாவின் நண்பிகளின் பார்வைக்கு அவன் சரியில்லையாம் என்ற உடன.. அவனை கழற்றிவிட்டிட்டு.. தொடர்புகளையும் துண்டித்துவிட்டு.. தலைமறைவாகி வாழ்கிறாராம் அந்தப் பெண். இப்ப எவன் கூட சுத்துறாவோ.. இல்ல கலியாணம் கட்டி செற்றிலாகிட்டாவோ தெரியல்ல. அவன் நம்பிக் கெட்டு.. பாவம் லூசுப் பையனா அலையுறான்.

வெளிநாட்டு மோகத்தில இருக்கும் வரை.. புகலிடத்தில அரசாங்கக் காசில குடும்பம் நடத்த ருசி கண்ட கூட்டம் இருக்கும் வரைக்கும்... இவை தொடரத்தான் செய்யும்..!

புறக்கணிப்பு சிறீலங்கா போல.. புறக்கணிப்பு புலம்பெயர் மாப்பிள்ளை பெம்பிள்ளை என்று வந்தால் தான் ஓரளவு இப்படியான அபாயங்களும்.. அதனைத் தொடர்ந்த மன அழுத்தங்களும்.. பிரச்சனைகளும் தீரும். ஆனால் அது சாத்தியப்படாது. எனவே ஏமாறக் கூடியதுகளை ஏமாற்றி.. காலம் கழிக்க வேண்டியதுதான் ஏமாற்றக் கூடியவர்கள். திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. :):wub:

Edited by nedukkalapoovan

புலம்பெயர் மாப்பிள்ளை பெம்பிள்ளை என்று வந்தால் தான் ஓரளவு இப்படியான அபாயங்களும்.. அதனைத் தொடர்ந்த மன அழுத்தங்களும்.. பிரச்சனைகளும் தீரும்.

புலத்தில் தானே இப்போ நம்மவர்கள் அதிகமாக வாழுகின்றனர். அப்போ புலத்தில் தானே பொண்ணோ ஆணோ கிடைக்கும்.

எனது நண்பனின் நண்பன் ஒருவனை புகலிடத்தில் இருக்கும் பெண் ஒருவர் காதலிப்பதாகச் சொல்லி காதலிச்சார். அப்புறம்.. அவாவின் நண்பிகளின் பார்வைக்கு அவன் சரியில்லையாம் என்ற உடன.. அவனை கழற்றிவிட்டிட்டு.. தொடர்புகளையும் துண்டித்துவிட்டு.. தலைமறைவாகி வாழ்கிறாராம் அந்தப் பெண்

அட பாவமே. நண்பிகளின் பார்வைக்கு சரியில்லை என்ற உடனே கழட்டிப்போடுறதா? பாவம் உங்கள் நண்பன்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் தானே இப்போ நம்மவர்கள் அதிகமாக வாழுகின்றனர். அப்போ புலத்தில் தானே பொண்ணோ ஆணோ கிடைக்கும்.

அட பாவமே. நண்பிகளின் பார்வைக்கு சரியில்லை என்ற உடனே கழட்டிப்போடுறதா? பாவம் உங்கள் நண்பன்

புகலிடத்தில் வாழ்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்றில்லை. ஆனால் புகலிடத்திலிருந்து ஒரு ஆணையோ பெண்ணையோ தேர்வு செய்யும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும் தாயக உறவுகள். காரணம்.. இங்க நடக்கிற கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதை எல்லாம் அவர்களுக்குச் சொன்னால் அவர்கள் நாங்கள் ஏதோ.. அவர்களிடம் வெளிநாடு பற்றிய வெறுப்பை ஊட்டப் பேசுவதாக பொறாமையில் பேசுவதாக எண்ணித் தட்டிக்கழித்து விடுவார்கள்.

ஊரில் சாதுவா இருந்ததுகள் எல்லாம் புகலிடத்தில... ஐயோ கேட்கவே வேணாம்.

உதாரணத்துக்கு ஒரு பெண் ஊரில திருமணமாகி 25 வருடங்கள் குடும்பம் நடத்தி அப்புறம் இங்கு வந்தவர். பிள்ளைகளோடு வந்தவர். இங்கு வந்ததும்.. கணவனை விவாகரத்து செய்திட்டு.. தனிக் குடித்தனம் போயிட்டார். இத்தனைக்கும் காரணம்.. கணவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்பதுதான். அவருக்கோ வயது 55 க்கு மேல. பெண்ணுக்கும் வயது அந்தளவுதான்..!

இப்படி பல பொட்டுக்கேடுகள்.. இங்க நடக்குது. சொன்னா விளங்காது. வந்து பார்த்து அனுபவிச்சு.. சீரழியக்கதான் விளங்கும்.

மேற்கு நாடுகளுக்கு விசா என்றா கடவுளா நினைக்கிற நிலைல எம்மவர்கள் இருக்கும் வரை.. இந்த நிலை மாறாது. உண்மையான தாயகப்பற்றோட 1% பேர்தான் இருப்பினம்..! :):wub:

சில கசப்பான அனுபவங்களுக்கு பின்....... :)

ஊர் (புல) பொட்டைகளை எனக்கு கண்கொண்டுகாட்டுவதில்லை!

அவயளை தலையில் தூக்கிவைத்து கொண்டாடவும் வேண்டும்! :wub:

அதே நேரம் புலத்துக்கே உரிய சுதந்திரமும் கொடுக்கவேண்டும்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் பொண்ணுகளை ஏமாத்துறதும், பொண்ணுங்க ஆம்பிளைகளை ஏமாத்துறதும் நடந்துகிட்டுதான் இருக்கு. சோ எல்லாரும் ஏமாறாமா உசார் உசார் ஆக இருக்கனும்

ஏமாற்றுவதற்கு ஆண், பெண் வேறுபாடென்ன? ஏமாற்ற வேண்டுமென முடிவெடுத்து ஏமாற்றுபவர்களும் உள்ளனர். சந்தர்ப்பவசத்தால் ஏமாற்றுபவரும் உள்ளனர். இது புலத்தில் மட்டுமல்ல, தாயகத்திலும் நடைபெறுவதுண்டு. ஆனால் ஒன்று புலத்திலிருந்து தாயகத்திலிருப்பவர்களை ஏமாற்றுபவர்கள் ஆண்களாகத்தானிருக்கின்றார்க

  • தொடங்கியவர்

***********

Edited by harikalan

அருகிலே இருக்கிற நேர்மையான மனிதர்களை நம்பாது வெளிநாட்டில் ஏதோ சொர்க்கம் இருக்கிறதென்று நினைப்பதுதான் ஏமாற காரணம். எனக்கு தெரிந்த ஒருவர் இப்படித்தான் பெண் பார்த்து முடிவுசெய்து சிறிதுநாளில் கள்ளக்காட்டில் மாட்டி கம்பி எண்ணுகிறார். ஏதோ அதிஸ்டம் பெண் தப்பிவிட்டா என்றுதான் சொல்லவேண்டும்.வெளிப்பகட்டை நம்பி ஏமாறாதீர்கள். நல்லவன் உண்மையானவன் மிகவும் எழிமையாக தான் இருப்பான்.

நல்ல விடயந்தான் கரிகாலன். இது தனிப்பட்ட பெயர்களைக் குறித்துக் கருத்தெதையும் தெரிவிக்க முடியாத விடயமும் கூட. எனக்குத் தெரிந்தவரை பலபேர் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டு ஏமாற்றிவிட்டோம் என்ற தவிப்பின்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

இது காலம் காலமாக நடைபெறும் ஒரு விடயம்தான். இதற்கு பல காரணங்கள்:

1. நெடுக்ஸ் சொன்னது போல, இங்குள்ள நிலமையை அங்குள்ளவர்களுக்கு சொன்னால், அவர்கள் முன்னேறி விடுவார்கள் என்ற கெட்ட எண்ணத்தில் சொல்வதாக கருதுவார்கள் (நான் நேரில் பெற்ற அனுபவம்).

2. பிரச்சனை தெரிந்தாலும் திருந்தி விடுவார்கள் என நினைப்பது.

3. சம்மந்தப்பட் ஆணையோ பெண்ணையோ பற்றி அறியாது குடும்பத்தை வைத்து முடிவெடுத்தல். (தாயத்தில் இது ஓரளவுக்கு பொருந்தலாம், புலம் பெயர் நாடுகளில் சரிவராது)

4. தீர விசாரிக்காமை. இதற்கு இரண்டு காரணங்கள். (அ) புலம் பெயர் நாட்டில் விசாரிக்ககூடிய வசதி இன்மை. (ஆ) விசாரித்தால் வேறு யாராவது மடக்கிபோடுவினமோ எண்ட பயத்தில விசாரிக்காமை.

5. பிள்ளை எக்கேடு கெட்டாலும் பறவாய்இல்லை குடும்பத்துக்கு பணம் அனுப்பினால் இல்லையெண்டால் இன்னொரு குடும்ப அங்கத்தவரை வெளிநாட்டுக்கு கூப்பிட்டால் காணும் என நினைத்து முடிவெடுத்தல்.

6. பிரச்சனைகள் தெரிந்தாலும், வெளிநாடெண்டால் அப்பிடி இப்பிடி இருக்கும் தானே என தமக்கு தாமே சமாதான் கூறி அசமந்த போக்கா இருத்தல்.

இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்.

  • தொடங்கியவர்

*********

Edited by harikalan

  • கருத்துக்கள உறவுகள்

பெயர், விலாசம் , பிறந்த திகதி , வழங்கிய திகதி , காலாவதி திகதி

பெயர்,பிறந்த திகதி பாஸ்போட்டுடன் ஒத்துப் போகவேண்டும்

இதில் எப்படி உண்மையை அறிவீர்கள். புலம்பெயர்ந்து வந்த ஆண்களும் சரி பெண்களும் சரி ( அசைலம் மற்றும் ஸ்பென்சரில் வருபவர்கள்) தங்கள் பாஸ்போட் விபரங்களை மாற்றி உள்ளனர். தாயகத்தில் இருந்து கனடாவில் உள்ள தனது தகப்பனாருடன் இணைய 21 வயது மகனுக்கு இலங்கையில் ஒரு பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தை தயாரித்து 16 வயதென்றாக்கி அழைத்த சம்பவங்களும் உண்டு. அவரின் பாஸ்போட்டை வைத்து எப்படி உண்மையை அறிவீர்கள்.

அசைலம் அடிப்பவர்கள் பலரும் பாஸ்போட் இல்லாமல் தான் அடிக்கின்றனர். வாய் மொழி மூலம் சொல்லும் தரவுகள் தான் பதியப்பட்டு பின்னர் அசைலம் வழங்கப்படும் போது அவர் சொன்ன தரவுகளின் அடிப்படையில் தான் பாஸ்போட் கூட தரப்படுகிறது. பலர் கள்ளப் பாஸ்போட்டில்.. வந்து இருக்கின்றனர். இப்படி பல பிறழ்வுகள் உள்ளது. இலங்கையில் இருந்து பாஸ்போட் எடுக்கும் போதே பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைப் போலியாகப் பெற்று பாஸ்போட்டை எடுத்துவிட்டால்.. வயதென்ன.. எல்லா விபரமும் தலை கீழாகிடும். அப்படிப் பலர் செய்துள்ளனர். குறிப்பாக குடும்பத்தோடு இணைதல் என்ற பிரிவின் கீழ் விசா பெற்றவர்கள்.

எனக்குத் தெரிய 1989 இல் ஒரு குடும்பமே கனடாவுக்கு இப்படி போனது. ஒரு பெண் பிள்ளை மட்டும் உருவத்தால் வயது கூடியவராக தென்பட்டு.. பிடிபட்டுப் போனார். பின்னர் அவரும் திருமணம் செய்து போயிட்டார். பிரித்தானியாவில் பலருக்கு இரண்டு பிறப்புத் திகதி இருக்கு. ஒன்று உண்மையானது. மற்றது.. அசைலத்துக்கானது. இதில் எதை உண்மை என்று அறிவீர்கள்...???!

நானே கண்டுள்ளேன் ஒரு பெண் இரண்டு பிறப்புப் தேதியோடு வந்து அசைலத்துக்குப் பதிந்ததை. :unsure::)

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இரண்டு பிறப்பு சாட்சி பத்திரம் வைத்திருக்கும் வேற நாட்டவர் பலர் இருக்கிறார்கள். ஏமாற்ற நினைப்பவருக்கு இந்த சட்ட திட்டங்கள் எல்லாம் தூசு

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்ற நினைப்பவருக்கு இந்த சட்ட திட்டங்கள் எல்லாம் தூசு

உண்மை. மற்றது இப்படியான தகவல்கள் பெறுவது நடைமுறைக்கு சாத்தியப்படாது. தெரிந்த நம்பிக்கையானவர்கள் மூலம் தீர விசாரிப்பதே சிறந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.