Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
 
இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் இதைப்பற்றி என்ன கூறினார் என பார்ப்போமா ? குறள் 403:
 
"கல்லா தவரும் நனி நல்லர் கற்றார் முன் சொல்லா திருக்கப் பெறின்."
 
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். கற்றவர்கள் முன் கல்லாதவர்கள் கற்கும் முனைப்புடன் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் முன் தனக்கு தெரிந்த அரை குறையானவற்றை பயனில்லாமல் பேசக் கூடாது என்பதே இதன் பொருளாகும் என நாம் கருதலாம். இதனால் தான் பாரதியார்
 
"கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ"
 
என்று பாடினாரோ? பொதுவாக "புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்; ,முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்." ஆகவே புத்திசாலிகள் மௌனமாக இருக்கக் கூடாது என்பது வெளிப்படையே! அது போலவே
 
"பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது."
ஆகவே முட்டாள்கள் மௌனமாய் இருப்பது நல்லது!!
 
இப்ப நான் படித்த ஒரு கதையை கீழே தருகிறேன்.
 
மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான்.
 
ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார். அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும்,
 
"இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்"
 
என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து,
 
"மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு"
என சீறி விழுந்தாள். ஆனால் அவளைத் தடுத்த மன்னர்,
 
"அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்"
 
என்றார். அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
193818411_10219326596778444_1878209978670987794_n.jpg?stp=dst-jpg_p280x280&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=t7JFC76QRggQ7kNvgFNmClP&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBRWz9BTiC8DT6xfW_BgVqGCSkaOAqzxtf3y2_tw1XLLg&oe=66801EFA 192405082_10219326597018450_7546765226662791630_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Jw10Z7nroH0Q7kNvgGX3jes&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAhK17GY1ddgW1nXK-g1Pc7PH6-mdoAenGGEMuX69gKIA&oe=66801994
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் எல்லோருக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, kandiah Thillaivinayagalingam said:

கருத்துள்ள கதை, நன்றி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, kandiah Thillaivinayagalingam said:

 நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, kandiah Thillaivinayagalingam said:
முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
 
புத்திசாலிகளை தொடர்ந்து மௌனமாக்கி அதையே  தமது புத்திசாலித்தனம் என்று நினைத்ததன் விளைவுகளையே தமிழினம் இன்று  அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

 நான் வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் வேலை செய்த நிறுவனத்தில் எனது கல்வித்தரமே மிக மோசமான கல்வித்தரம் (ஆரம்பத்தில் ஒரு சமையல்காரனாக வேலைக்குள் நுழைந்தேன்) இடைநிலை கல்வியினை கூட முடித்திருக்கவில்லை, நிறுவனதில் நடைபெறும் கூட்டங்களில் வாயே திற்க்காமல் ஒரு மூலையில் ஒழிந்திருப்பது (ஆங்கிலமும் ஒழுங்க்காகத்தெரியாது) ஆனாலும் எனது முதலாளி (பல சங்கிலித்தொடர் வர்த்தகங்களின் சொந்தக்காரர்) வாயை திறந்து பேசு என கத்துவார், அப்படி உன்னால் பேச முடியாவிட்டால் கூட்டத்திற்கு வராதே என கத்துவார். 

எடிசனின் ஆரம்பக்கல்வி காலத்தில் ஒரு நாள் அவரது ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதத்தினை கொண்டு வந்து அவரது தாயாரிடம் கொடுத்தாராம், அதனை பார்த்த அவரது தாயார் தனது கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு அந்த கடிதத்தினை உரத்து படித்தார் "உங்கள் மகன் ஒரு மேதை அவனுக்கு கல்வி கற்பிப்பதற்கு இந்த சிறிய பாடசாலையில் வசதியில்லை" என.

அதன் பின்னர் எடிசனிற்கு அவரது தாயாரே வீட்டில் கல்வி கற்பித்தார், பின்னாளில் அவரது தாயார் இறந்த பின்னர் அந்த கடிதத்தினை தாயாரின் பெட்டியில் கண்டெடுத்து எடிசன் வாசித்தார் அதில் "உங்கள் மகன் சித்த சுவாதினமற்றவர் அவருக்கு எம்மால் கற்பிக்க முடியாது அதனால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்" என.

எனது அபிப்பிராயத்தில் முட்டாள்கள் என எவரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

எனது அபிப்பிராயத்தில் முட்டாள்கள் என எவரும் இல்லை.

நானும் அப்படித்தான் நினைப்பதுண்டு. 

“அறப்படித்தவன் அங்காடி போனால் வாங்கவும் மாட்டான் விற்கவும் மாட்டான்”  இப்படி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

இப்படி பல பழமொழிகளை அவரவர் தங்களது மனநிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பயன்படுத்துவர்கள். அவ்வளவுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்கள் என்பவர்கள் யாவர்?

கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் சரியான ஆதார பதிலை அளித்தாலும் நம்மை கீழ்த்தரமாக வர்ணித்து பதில் அளிக்கும் மூடர்களே முட்டாள்கள் ஆவார்கள்.

தன்னைத்தானே பகுத்தறிவுவாதிகளாக பாவித்து கொள்பவர்கள்.

கடவுள் அல்லது சோதிட நம்பிக்கையில் திணிக்கப்படும் வஞ்சகங்களை அப்படியே எடுத்து பின்பற்றுபவர்கள் 

இப்படி பலவிதமாக கூறலாம்?

வெப்பம் என்று ஒன்று இருந்தால், அந்த வெப்பம் குறைய குறைய குளிர் ஒன்று வெளிப்படுகிறது 

அப்படியே அறிவாளிக்கு எதிர் சொல்லாக அறிவிலி [அறிவு குறைந்தவன்; பேதை; கபோதி] என்ற பதம் தோன்றுகிறது

உதாரணமாக,

அறிவாளியாக விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற எனக்கு பௌதீகம் படிப்பித்த ஆசிரியை, சூரிய கிரகணம் என்றால் என்ன என்ற படம் கீறி விளக்கம் கொடுத்த ஆசிரியை, சூரிய கிரகணம் அன்று விரதம் இருந்து சாமி கும்பிடுவதை கண்டுள்ளேன்! 

இப்படியானவர்களை எப்படி கூப்பிடலாம் ? அங்கு தொழிலுக்காக பெயருக்காக , புகழுக்காக ஒரு பட்டம் மட்டுமே !! மற்றும் படி அவர்களின் மனதில் பதிந்து இருப்பது அதற்கு எதிர்மாரே!!

"நிறுவனதில் நடைபெறும் கூட்டங்களில் வாயே திறக்காமல் ஒரு மூலையில் ஒழிந்திருப்பது / பல சங்கிலித்தொடர் வர்த்தகங்களின் சொந்தக்காரர்,  வாயை திறந்து பேசு என கத்துவார், அப்படி உன்னால் பேச முடியாவிட்டால் கூட்டத்திற்கு வராதே என கத்துவார்"

அது முதலாளி, உங்களை அதில் பங்குபற்ற வைக்க எடுத்த ஒரு முயற்சி, ஆனால் அதை அவர், கூடத்தின் பின், தனிய கூப்பிட்டு, காரணம் சொல்லி ஊக்கப் படுத்தி இருக்கலாம்? எல்லோருக்கும் முன்னால், சத்தம் போடுவது அல்ல, அது அவரின் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது அல்லது எனோ எதோ என்ற அகங்காரத்தை வெளிப்படுத்துகிறது??     

"உங்கள் மகன் சித்த சுவாதினமற்றவர் அவருக்கு எம்மால் கற்பிக்க முடியாது அதனால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்" 

இதுவும் உண்மையில் ஆசிரியரின் பலவீனத்தையே காட்டுகிறது.  இலங்கை பாடசாலைகளில், ஆசிரியர்கள் பொதுவாக, பாடத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பவர்களை, முன் வரிசையில் இருத்தி, மற்றவர்களை பின் வரிசையில் இருத்தி, தம் கவனத்தை, முன் வரிசையுடன் நிற்பாட்டுவதை கண்டவன்  நான். 

ஆனால் இங்கு மாணவனை முட்டாள் என்று சொல்லவில்லை, படிப்பித்தல் கடினம், அதாவது ஊக்கம் எடுப்பதில்லை  என்று மட்டும் சொல்லுகிறார்கள். ஆனால் அந்த ஊக்கத்தை கொடுக்கத்தெரியாத ஆசிரியை, உங்கள் முதலாளி போல்?? 

இது, இந்த அலசல், என் மனதில்  தோன்றியது,  அவ்வளவுதான்!

கீழே நான் முன்பு எழுதிய, இவைகளுடன் ஓரளவு தொடர்புடைய,  இரு சிறு கதைகள் 

சிறு கதை - 69 / "தன்னம்பிக்கை"
https://www.facebook.com/groups/978753388866632/posts/8885302041545021/?

சிறு கதை - 59] / "வெள்ளந்தி மனிதர்கள்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/8432025283539368/?

நன்றி 

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்"

அறப்படித்தவன் என்றால்  செவ்வையாக முழுமையாக படித்தவன் என்று பொருள். அதாவது அளவுக்கு மிஞ்சி படித்தவன். அதனால் அவன் அளவுக்கு மிஞ்சி யோசிக்கத் தொடங்குகிறான். அது தான் ஆபத்து
  
ஒரு முறை, மாணவர்களில் ஒருவன் ஆசிரியரை பார்த்து “ஐயா அதிகம் படித்த அறிவாளிகளால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை விளக்குவது போல அல்லவா இந்தப் பழமொழி உள்ளது.” என்று கேட்டான்.

அதற்கு ஆசிரியர் “அப்படியல்ல என்று கூறியதுடன் ஒரு கதையை கூறினார் 

முன்னொரு காலத்தில் சாஸ்திரமும், மருத்துவமும் கற்றுதந்த ஒரு குருகுலத்தில் மாணவர்கள் நிறைய பேர் கற்றுவந்தனர்.

ஒரு நாள் மாணவர்களில் சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரையும், மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரையும் உணவுப் பொருட்களை வாங்க குரு அனுப்பினார்.

சாஸ்திரம் படித்தவனோ காய்கறி வாங்கச் சென்ற இடத்தில் சாஸ்திரப்படி இது சரியல்ல. இந்தக் கடையில் வாங்கக் கூடாது. இந்த விற்பனையாளரிடம் வாங்கக் கூடாது என்று அனைவரையும் கழித்தானாம்.

மருத்துவம் படித்தவனோ கத்தரிக்காய் ஆகாது. வாழைக்காய் வாயு, கிழங்குகளை உண்ணலாகாது, என ஒவ்வொரு காயையும் கழித்தானாம்.

இவ்விதமாக ஒருவர் கடைகளையும், கடைக்காரரையும் பழிக்க மற்றொருவர் காய்கறிகளை பழிக்க இருவரும் வெறும் கையுடன் குருகுலத்திற்குத் திரும்பி வந்தனராம்.

இப்படி கதையை முடித்தாரும் . அவர் மேலும் ஒரு விளக்கமாக 

ஒரு ஊரில் திருவிழா ஒன்று நடக்க இருந்தது.

அத்திருவிழாவிற்கு சங்கீத கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என ஊர்மக்கள் விரும்பினர். எனவே கச்சேரி ஏற்பாடு செய்ய நன்கு படித்த இருவரை ஊர் மக்கள் அணுகினர்.

“நீங்கள் சென்று சங்கீதக் கச்சேரிக்கு நல்ல வித்துவான்களை ஏற்பாடு செய்து வாருங்கள்” என்று கூறி அவ்விருவரையும் அனுப்பி வைத்தனர்.

முதலில் அவ்விருவரும் ஒரு வீணை வித்துவானை கச்சேரிக்கு ஒப்புதல் செய்யச் சென்றனர். அங்கு அவர் வீணையை படுக்க வைத்து ஒரு வெள்ளைத் துணியால் அதனை மூடிவைத்து இருந்தார்.

இதைக் கண்ட முதலாமவன் “இந்த வீணைக் கலைஞரைக் கச்சேரிக்கு ஒப்புதல் செய்ய வேண்டாம்” என்றான.

அதற்கு இரண்டாமவன் “ஏன்?” என்று கேட்டான்.

“நீயே பார். அவர் வீணையை மூடி வைத்துள்ளதைப் பார்க்கும் போது ஏதோ பிணத்தை மூடி வைத்துள்ளது போல் உள்ளது!. நாம் முதன் முதலாக கச்சேரி ஏற்பாடு செய்கிறோம். இவர் கச்சேரி மேடையில் இக்கருவியை இங்கு இருப்பது போல மூடி வைத்தாரானால் அதைக் கண்ட நம் ஊர்மக்கள் என்ன நினைப்பார்கள்!. ஊர் பெரிய மனிதர்கள் சகுனம் சரியாக இல்லை என்று கூற மாட்டார்களா?” என்றான்.

இதனைக் கேட்ட இரண்டாமவன் முதலாமவனின் பேச்சினை ஒப்புக் கொண்டான். பின் இருவரும் “இன்னொரு நாள் வந்து கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறோம்!” என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

அவ்வூரில் இன்னொரு தெருவில், கடம் வாசிக்கும் ஒருவர் இருந்தார். அவரை கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்ய இருவரும் நினைத்தனர்.

அப்போது இரண்டாமவன் “கடம் வாசிப்பவரை நாம் கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டாம்” என்று தடுத்தான்.

“ஏன் வேண்டாம் என்கிறாய்?” என முதலாமவன் கேட்டான். அதற்கு இரண்டாமானவன் “நண்பரே நாமோ முதன் முதலாக கச்சேரி ஏற்பாடு செய்ய வந்துள்ளோம். கடம் என்பது மண்ணால் செய்யப்பட்டது. நமது போதாத வேளை இவர் கச்சேரி செய்யும்போது கடம் உடைந்து போனால் ஊரார் அபசகுணம் என்று கூறுவதோடு இதை ஏற்பாடு செய்த நம்மைத் திட்டமாட்டார்களா?” என்றான்.

அடுத்தவனும் “ஆமாம்” என ஒப்புக் கொண்டான். இப்படியாக இருவரும் பல கலைஞர்களையும் பார்த்து சாக்குப் போக்கு சொல்லி வெறும் கையுடன் ஊர் திரும்பினராம்.

இதுபோலவே அதிகம் விபரம் தெரிந்த ஒருவர் கடைக்குச் சென்றால் அவரால் எந்த ஒரு பொருளையும் திருப்தியாக வாங்க இயாது என்ற விளக்கத்துடன் கதையை முடித்தார் 

ஏனென்றால் அவருடைய பார்வைக்கு எல்லாப் பொருளும் குற்றமுடையதாக தோன்றும் என்பதே இப்பழமொழியின் கருத்தாகும்.” என்று கூறினார். 

இது எப்பவோ நான் கேட்டது 

நன்றி

எல்லோருக்கும் என் நன்றிகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி   எல்லோருக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2024 at 23:18, P.S.பிரபா said:

நானும் அப்படித்தான் நினைப்பதுண்டு. 

“அறப்படித்தவன் அங்காடி போனால் வாங்கவும் மாட்டான் விற்கவும் மாட்டான்”  இப்படி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

இப்படி பல பழமொழிகளை அவரவர் தங்களது மனநிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பயன்படுத்துவர்கள். அவ்வளவுதான்

On 1/6/2024 at 00:01, kandiah Thillaivinayagalingam said:

முட்டாள்கள் என்பவர்கள் யாவர்?

கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் சரியான ஆதார பதிலை அளித்தாலும் நம்மை கீழ்த்தரமாக வர்ணித்து பதில் அளிக்கும் மூடர்களே முட்டாள்கள் ஆவார்கள்.

தன்னைத்தானே பகுத்தறிவுவாதிகளாக பாவித்து கொள்பவர்கள்.

கடவுள் அல்லது சோதிட நம்பிக்கையில் திணிக்கப்படும் வஞ்சகங்களை அப்படியே எடுத்து பின்பற்றுபவர்கள் 

இப்படி பலவிதமாக கூறலாம்?

வெப்பம் என்று ஒன்று இருந்தால், அந்த வெப்பம் குறைய குறைய குளிர் ஒன்று வெளிப்படுகிறது 

அப்படியே அறிவாளிக்கு எதிர் சொல்லாக அறிவிலி [அறிவு குறைந்தவன்; பேதை; கபோதி] என்ற பதம் தோன்றுகிறது

உதாரணமாக,

அறிவாளியாக விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற எனக்கு பௌதீகம் படிப்பித்த ஆசிரியை, சூரிய கிரகணம் என்றால் என்ன என்ற படம் கீறி விளக்கம் கொடுத்த ஆசிரியை, சூரிய கிரகணம் அன்று விரதம் இருந்து சாமி கும்பிடுவதை கண்டுள்ளேன்! 

இப்படியானவர்களை எப்படி கூப்பிடலாம் ? அங்கு தொழிலுக்காக பெயருக்காக , புகழுக்காக ஒரு பட்டம் மட்டுமே !! மற்றும் படி அவர்களின் மனதில் பதிந்து இருப்பது அதற்கு எதிர்மாரே!!

"நிறுவனதில் நடைபெறும் கூட்டங்களில் வாயே திறக்காமல் ஒரு மூலையில் ஒழிந்திருப்பது / பல சங்கிலித்தொடர் வர்த்தகங்களின் சொந்தக்காரர்,  வாயை திறந்து பேசு என கத்துவார், அப்படி உன்னால் பேச முடியாவிட்டால் கூட்டத்திற்கு வராதே என கத்துவார்"

அது முதலாளி, உங்களை அதில் பங்குபற்ற வைக்க எடுத்த ஒரு முயற்சி, ஆனால் அதை அவர், கூடத்தின் பின், தனிய கூப்பிட்டு, காரணம் சொல்லி ஊக்கப் படுத்தி இருக்கலாம்? எல்லோருக்கும் முன்னால், சத்தம் போடுவது அல்ல, அது அவரின் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது அல்லது எனோ எதோ என்ற அகங்காரத்தை வெளிப்படுத்துகிறது??     

"உங்கள் மகன் சித்த சுவாதினமற்றவர் அவருக்கு எம்மால் கற்பிக்க முடியாது அதனால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்" 

இதுவும் உண்மையில் ஆசிரியரின் பலவீனத்தையே காட்டுகிறது.  இலங்கை பாடசாலைகளில், ஆசிரியர்கள் பொதுவாக, பாடத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பவர்களை, முன் வரிசையில் இருத்தி, மற்றவர்களை பின் வரிசையில் இருத்தி, தம் கவனத்தை, முன் வரிசையுடன் நிற்பாட்டுவதை கண்டவன்  நான். 

ஆனால் இங்கு மாணவனை முட்டாள் என்று சொல்லவில்லை, படிப்பித்தல் கடினம், அதாவது ஊக்கம் எடுப்பதில்லை  என்று மட்டும் சொல்லுகிறார்கள். ஆனால் அந்த ஊக்கத்தை கொடுக்கத்தெரியாத ஆசிரியை, உங்கள் முதலாளி போல்?? 

இது, இந்த அலசல், என் மனதில்  தோன்றியது,  அவ்வளவுதான்!

கீழே நான் முன்பு எழுதிய, இவைகளுடன் ஓரளவு தொடர்புடைய,  இரு சிறு கதைகள் 

சிறு கதை - 69 / "தன்னம்பிக்கை"
https://www.facebook.com/groups/978753388866632/posts/8885302041545021/?

சிறு கதை - 59] / "வெள்ளந்தி மனிதர்கள்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/8432025283539368/?

நன்றி 

சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் காருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன், இதில் புத்திசாலிகள் யார் என்பதனையே வரையறுக்கமுடியாது இதில் எவ்வாறு முட்டாள்களை அடையாளாம் காணமுடியும்?

முட்டாள்கள் கருத்து கூறாது மெளனமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்.

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

[அறிவாளியாக விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற எனக்கு பௌதீகம் படிப்பித்த ஆசிரியை, சூரிய கிரகணம் என்றால் என்ன என்ற படம் கீறி விளக்கம் கொடுத்த ஆசிரியை, சூரிய கிரகணம் அன்று விரதம் இருந்து சாமி கும்பிடுவதை கண்டுள்ளேன்!

இப்படியானவர்களை எப்படி கூப்பிடலாம் ? அங்கு தொழிலுக்காக பெயருக்காக , புகழுக்காக ஒரு பட்டம் மட்டுமே !! மற்றும் படி அவர்களின் மனதில் பதிந்து இருப்பது அதற்கு எதிர்மாரே!! ]

மிகச்சரியாக சொன்னீர்கள். எம்மவர்களிடமும் இந்தியர்களிடமும்   இப்படியானவர்களை  காணமுடியும்.

]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்" 

அது முற்றிலும் சரி 

யாக்கோபு 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், 

எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், 

அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை. 

அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ??

இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது 

மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு 

இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது 

"சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன் 

அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம் 

ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே

புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை. 

ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர்.

ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான் 

புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள்.

முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள். 

புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள்.

முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு .

.... இப்படி என் மனம் சொல்கிறது 

நன்றி உங்கள் கருத்துக்கு 

"ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்."

இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது. 

உதாரணமாக, 

இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911 

இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்

என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு. 

ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது. 

இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்? 

இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம். 

நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றி 

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"
 
  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ?

முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் .

கொஞ்சநாள் வராவிட்டால்  தொடங்கிடுவான்கள் மதமாற்றம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ?

முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் ."
...........................................................................................................

இந்த குற்ற சாட்டு யாருக்கு ?

எந்த விதிமுறைகள் மீறப்பட்டது ?

விளக்கமாக சொன்னால் எல்லோருக்கும் நல்லதே 

மற்றது 

"கொஞ்சநாள் வராவிட்டால்  தொடங்கிடுவான்கள் மதமாற்றம்"
...............................................................................

அது என்ன புதுக்கதை ??

யார் தொடங்குவார்கள் ? யார் மாறுவார்கள் ???

"எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒன்றே இறைவன்" எத்தனை பேர் இதை பின்பற்றுகிறார்கள், இலங்கை விடயம் உங்களுக்கு தெரியாதா ?

நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் தமிழர்கள், முதலில் கிருஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு, பின் அவர்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்ட வரலாறு கதையல்ல, உண்மை நிகழ்வு!  

அதேபோல ஒரு சமயத்தை வளர்ப்பதற்காக மற்ற சமயத்தை தாக்குதல் அல்லது பணங்கள், வசதிகள் கொடுத்து மாற்றுதல் இன்றும் நடைபெறுகிறது. 

நல்லகாலம் 

இனி நீங்கள் வந்துவிட்டதால் , 

அங்கே போய் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழப்பதை காப்பீர்கள் என்று நம்புகிறேன்!!!     

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2024 at 06:03, kandiah Thillaivinayagalingam said:

"சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்" 

அது முற்றிலும் சரி 

யாக்கோபு 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், 

எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், 

அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை. 

அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ??

இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது 

மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு 

இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது 

"சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன் 

அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம் 

ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே

புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை. 

ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர்.

ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான் 

புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள்.

முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள். 

புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள்.

முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு .

.... இப்படி என் மனம் சொல்கிறது 

நன்றி உங்கள் கருத்துக்கு 

"ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்."

இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது. 

உதாரணமாக, 

இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911 

இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்

என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு. 

ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது. 

இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்? 

இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம். 

நன்றி 

உங்கள் கருத்திற்கு நன்றி புத்திசாலி, முட்டாள் எனும் கருதுகொள்களை Cognitive bias ஆக பார்க்கிறார்கள்.

https://www.beapplied.com/post/attribution-bias-what-is-attribution-bias

நியூட்டனது பூனை வெளியே போவதற்கும் உள்ளே வருவதற்கும் கதவினை பிராண்டுவதை பார்த்து அவருக்கு தொந்தரவில்லாமல் அதுவாக போய் வர கதவில் இரு துவாரங்களை போட தச்சனை அணுகினார் (பெரிய துவாரம் தாய் பூனைக்கு, சிறிய துவாரம் குட்டிப்பூனைக்கு) தச்சன் பெரிய துவாரத்தினை கதவில் போட்டு விட்டு சிறிய பூனை பெரிய துவாரத்தினூடாக செல்லும் என கூறினார், நியூட்டனால் அதனை புரிந்து கொள்ளமுடியவில்லை இருவரது வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும்போது தாய் பூனையும் குட்டி பூனையும் அந்த பெரிய துவாரத்தினூடாக சென்றது.

ஒவ்வொருவரது புரிதலும்(Perception) அவர்களது பிண்ணனியில் மாறுகின்றது.

இந்த காணொளியில் அந்த பெண் ஒஸ்ரியா என கூறுவார், அதனை அவுஸ்ரேலியா என புரிந்து கொண்டு, அவுஸ்ரேலியர்களின் பேச்சு வழ்க்கில் அவர்களது பாரம்பரியமான இன்னொரு இறாலை பார்பக்கியூவில் போடு என்பார் அந்த நடிகர், இந்த நகைச்சுவை புரிவதற்கு அவுஸ்ரேலியர்களினது பாரம்பரியம் அறிந்தவர்களால் முடியும் மற்றவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளமாட்டார்கள்.

மற்றவர்களது கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எந்த வகையான கேள்விகளும் ஒரு புதிய பரிணாமத்துடன் ஒரு புரிதலை உருவாக்கும் அதனால் நன்மைதான் உண்டாகும்,

எனக்கு தெரிந்த விடயங்களில் கள உறவுகள் அது தொடர்பான எந்தவித பரிட்சயமுமில்லாமல் விவாதிக்கும் போது அது எனக்கு அதிக புரிதலை ஏற்படுத்துகிறதனை எனது அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன், அதனை எப்போதும் விருப்புடன் எதிர்பார்ப்பதுண்டு(சிலர் தனிப்பட்ட  ரீதியில் தாக்குதல் செய்வார்கள் அது அவர்களது திருப்திக்கு அதனை மட்டும் கண்டு கொள்வதில்லை).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெளிவான கதைகள்........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த குற்ற சாட்டு யாருக்கு ?

எந்த விதிமுறைகள் மீறப்பட்டது ?

விளக்கமாக சொன்னால் எல்லோருக்கும் நல்லதே 

மற்றது 

"கொஞ்சநாள் வராவிட்டால்  தொடங்கிடுவான்கள் மதமாற்றம்"
...............................................................................

அது என்ன புதுக்கதை ??

யார் தொடங்குவார்கள் ? யார் மாறுவார்கள் ???

பெருமாள் இன்னும் விடை தரவில்லை, தேடிக்கொண்டு இருக்கிறேன் 

திருப்பவும் எங்கோ போய்விட்டார் போலும்???
 
  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2024 at 19:43, kandiah Thillaivinayagalingam said:

நல்லகாலம் 

இனி நீங்கள் வந்துவிட்டதால் , 

அங்கே போய் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழப்பதை காப்பீர்கள் என்று நம்புகிறேன்!!!

பாதுகாப்பான நாடுகளில் சொகுசாக இருந்து தீவிர தமிழ் தேசியம்  பேசி இனவாதத்தை மேலும்  வளர்தது விடுவதும் உசுப்பேற்றி உசுப்பேற்றி  வெறுப்பு கருத்துக்களை விதைத்து உண்மையான தமிழ் தேசியத்துக்கு உலை வைப்பது தான்  தான் எமது வேலை. நாம் அங்கே போய் எமது குடும்பத்தை அதற்கு பலி கொடுக்க மாட்டோம் சார். 😂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தீவிர தமிழ் தேசியம்  பேசி இனவாதத்தை மேலும்  வளர்தது விடுவதும் உசுப்பேற்றி உசுப்பேற்றி  வெறுப்பு கருத்துக்களை விதைத்து உண்மையான தமிழ் தேசியத்துக்கு உலை வைப்பது தான்  தான் எமது வேலை.???

நன்றி 

உங்க வேலையை , நோக்கத்தை, அழகாக சுருக்கமாக வெளிப்படையாக தெரியப்படுத்தியத்துக்கு. 

நான், எனக்கு  

உண்மையில் யார் யார் என்ன வேலை, நோக்கம் கொண்டு உள்ளார்கள் என்பதில் அக்கறை என்றும் இல்லை 

நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். சரி பிழை , அதை வாசிப்பவர்கள் சரியாக சுட்டிக்காட்டும் இடத்து ஏற்றுக்கொள்கிறேன் , அல்லாவிட்டால்  அவர்களின் பதிலுக்கு மட்டும் விளக்கமாக வரலாற்றில் இருந்தும் மற்றும் தொல்பொருள் / இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கூறுகிறேன் 

அவ்வளவுதான் , நான் என்றும் ஒரு அறிவில் சிறியவனே, ஆனால் அறிந்து கொள்ளும் / கற்றுக் கொள்ளும்  ஆவல் உள்ளவன்   

இரண்டாவது 

நான் எழுதிய கேள்விகள் / பதில்கள் 

"பெருமாள்" என்ற ஒருவர் என் கட்டுரைக்கு எழுதிய ------

..... அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ?

                                                                               ....................................................................................

முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் .

                                                                   ..............................................

கொஞ்சநாள் வராவிட்டால்  தொடங்கிடுவான்கள் மதமாற்றம்

                                                                .............................................................

என்பதற்கானதே , மற்றும் படி வேறு எவருக்கும் அல்ல. 

என்றாலும் யாராகினும் அதற்கு 

நான் எழுதிய 'கேள்விகளுக்கு / பதிலுக்கு' மட்டும், தேவையற்ற, பொருத்தமற்ற அலட்டலை தவிர்த்து,

பதில் தந்தால் கட்டாயம் வாசிப்பேன் 

மீண்டும் நன்றி, அன்பு  island  க்கு 

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.