Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

அமெரிக்க நீதித்துறை அரசியல்மயமாகி விட்டது ஆச்சரியமில்லை. அமெரிக்க சனநாகயமே தூக்கில தொங்கிக்கிட்டு கிடக்குது. இதில.. நீதித்துறை சொல்லி வேலையில்லை.

ரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் வெளி வருவார். தேர்தலிலும் வெல்ல வாய்ப்பிருக்குது. வென்றால் பைடனும் குடும்பமும் இதே நீதித்துறையால்.. 340 குற்றங்களுக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அமெரிக்க நீதித்துறை அரசியல்மயமாகிவிட்டது. டொலருக்கு அடிமையாகிவிட்டது. 

Thousands of U.S. judges who broke laws or oaths remained on the bench

https://www.reuters.com/investigates/special-report/usa-judges-misconduct/

எனது அவதானிப்பும் இவ்வாறே உள்ளது.

அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல்.

வலது இடது சாரி ஊடகங்களிடையே பனிப்போர் நடைபெறுகின்றது. 

இவற்றுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

எனது அவதானிப்பும் இவ்வாறே உள்ளது.

அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல்.

வலது இடது சாரி ஊடகங்களிடையே பனிப்போர் நடைபெறுகின்றது. 

இவற்றுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள். 

உங்கள் அவதானிப்பின் அடிப்படையை ஒருக்கா எனக்கும் சொல்லுங்களேன்?

நெடுக்கர் தந்த இணைப்பு (அவர் வாசித்திருக்க மாட்டார், தலைப்பைத் தாண்டி😎) தெற்கில் ஒரு பரவலான பிரச்சினை. அந்த இணைப்பில் இருக்கும் தகவல் படி, கறுப்பின மக்கள், லோயர் வைக்கவும், பிணை கட்டவும் இயலாத ஏழைகள், இந்த நீதிபதிகளால் பாதிக்கப் படுகிறார்கள் என்று காட்டுகிறது.

தம்பு போன்றோர்- ஒரு பில்லியனர், ஒரு லோயர் படையணியோடு வலம் வருபவர்- இந்த வகை நீதிபதிகளால் பாதிக்கப் படுவதில்லை. உண்மையாகப் பார்த்தால், அவர் போன வருடம் நியமித்த ஒரு நீதிபதி தன் நன்றிக் கடனாக அவருக்கெதிரான சமஷ்டிக் கேஸ் ஒன்றை தள்ளி வைத்து உதவியிருக்கிறார். 

எனவே, இந்த றொய்ரர்ஸ் இணைப்பின் படி, நீதிபதிகளால் தம்பு பாதிக்கப் படவில்லை. இது சாமான்ய மக்களை உள்ளடக்கிய ஜூரர் தீர்ப்பு என்பதையும் கவனிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Justin said:

எனது அவதானிப்பின் அடிப்படை எவருக்கும் பக்கசார்பு இல்லாத தன்மை. சுதந்திரமான கண்ணோட்டம். 

உலகின் மிகப்பெரியதொரு ஜனநாயக நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பலரும் அவதானிக்கின்றார்கள். 

அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல் விளையாடுகின்றது. அரசியல் அமெரிக்க நீதித்துறையின் போக்கில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றது. 

காட் பிலஸ் அமெரிக்கா. 

  • கருத்துக்கள உறவுகள்

முதன்முதலாக ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளாராகப் போட்டியிட்ட தேர்தலில் திருமதி கிலாரி கிளின்டனே வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவருக்கே அதிகளவிலான மக்கள் வாக்களித்திருந்த நிலையிலும் அமெரிக்க அரசியலமைப்பின் படி ட்ரம் அவர்களே வென்று பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.ஒரு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் கருதப்படுபவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க முயொத அரசியலமைப்பு இருக்கும் நிலையில் ட்ரம்ப் இந்தத் தேர்தலில் தனது பணத்தை வாரியிறைத்து வெற்றி பெறவே முயற்சிப்பார். இந்தத்தேர்தலை வெர் தண்டனையிலிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாகவே அவர் பாவிப்பார்.மறுதரப்பில் பைடன் வெற்றி பெற்றாலும் அவரது அடுத்த பதவிக்காலத்தை முழுமையாக வகிப்பார் என்று சொல்ல முடியாது. அமரிக்காவின் ஜனாதிபதியாக வருபவர் உடல் உள ஆரோக்கியத்துடன் உற்சாகமானவராக திடமானமடிவுகளை எடுக்க்கூடியவராக இருப்பதையே அமெரிக்க குடிமக்கள் விரும்புவார்கள். உண்மையில்  பைடன் இந்த முறை வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். மாறாக ட்ரம்ப் வெற்றி பெறுவாராக இருந்தால் ஊழித்தாண்டவம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

அட சும்மா போங்க. அமெரிக்காவில் இப்போது ஊழித்தாண்டவம் ஆட இல்லையா. 

டிரம்ப் வந்தால் அமெரிக்காவை மட்டும் முன்னிலைப்படுத்தி பல திட்டங்களை செயற்படுத்துவார். எனவே உலக நாடுகள் டிரம்ப் வரக்கூடாது என்பதையே பெரும்பாலும் விரும்புவார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, புலவர் said:

மாறாக ட்ரம்ப் வெற்றி பெறுவாராக இருந்தால் ஊழித்தாண்டவம்தான்.

யாருக்கு ஊழித்தாண்டவம் ?

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

இந்தத் தேர்தலில் தனது பணத்தை வாரியிறைத்து வெற்றி பெறவே முயற்சிப்பார்.

ரம்புக்கு எதிராக தீர்ப்பெழுதி 24 மணி நேரத்துக்குள் 53 மில்லியன் டாலர்களை மக்கள் வழங்கியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

யாருக்கு ஊழித்தாண்டவம் ?

யாருக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2024 at 12:46, புலவர் said:

முதன்முதலாக ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளாராகப் போட்டியிட்ட தேர்தலில் திருமதி கிலாரி கிளின்டனே வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவருக்கே அதிகளவிலான மக்கள் வாக்களித்திருந்த நிலையிலும் அமெரிக்க அரசியலமைப்பின் படி ட்ரம் அவர்களே வென்று பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.ஒரு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் கருதப்படுபவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க முயொத அரசியலமைப்பு இருக்கும் நிலையில் ட்ரம்ப் இந்தத் தேர்தலில் தனது பணத்தை வாரியிறைத்து வெற்றி பெறவே முயற்சிப்பார். இந்தத்தேர்தலை வெர் தண்டனையிலிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாகவே அவர் பாவிப்பார்.மறுதரப்பில் பைடன் வெற்றி பெற்றாலும் அவரது அடுத்த பதவிக்காலத்தை முழுமையாக வகிப்பார் என்று சொல்ல முடியாது. அமரிக்காவின் ஜனாதிபதியாக வருபவர் உடல் உள ஆரோக்கியத்துடன் உற்சாகமானவராக திடமானமடிவுகளை எடுக்க்கூடியவராக இருப்பதையே அமெரிக்க குடிமக்கள் விரும்புவார்கள். உண்மையில்  பைடன் இந்த முறை வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். மாறாக ட்ரம்ப் வெற்றி பெறுவாராக இருந்தால் ஊழித்தாண்டவம்தான்.

பகுதியளவில் சரியான அவதானிப்பு.

ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியானாலும் கூட மாநில வழக்குகளின் தீர்ப்பில் இருந்து மன்னிப்புப் பெற (தனக்குத் தானே pardon வழங்கிக் கொள்ள) முடியாது. இதனால் தான் இந்த நியூ யோர்க் தீர்ப்பும், ஜோர்ஜியாவின் மாநில வழக்கும் முக்கியமாகப் பார்க்கப் படுகின்றன. ஆனால், தீர்ப்புகளால் அவருக்காகத் "தீக்குளிக்கக் காத்திருக்கும் அடிப்பொடிகள்" அவருக்கு வாக்களிக்காமல் விடப் போவதில்லை. நடு நிலையாக இருக்கும் (படித்தோர், பெண்கள், இளையோர், நம்மைப் போன்ற லிபரல் குடியேறிகள்) ஆட்களின் வாக்குகளைத் தான் ட்ரம்ப் இழப்பார். பென்சில்வேனியா, கொலராடோ போன்ற ஊசலாடும் (swing) மாநிலங்களில் இது நிகழ்ந்தால், தோல்வி வரலாம்.

எனவே தான், சேர்த்த காசு வெற்றியைத் தீர்மானிக்கும் பாரிய காரணியல்ல. எந்தக் குழுவின் வாக்குகளை தீர்ப்புகள் பாதிக்கும் என்பது தான் காரணியாக இருக்கும்.

அடுத்த 4 வருடங்களில் பைடனுக்கு ஏதாவது ஆனால், அடுத்த நிலையில் இருக்கும் கமலா ஜனாதிபதியாக வந்து விடுவார் என்ற அச்சம் இருக்கிறதல்லவா? அந்த அச்சம் உண்மையில் பெண் வெறுப்பும், நிறவாதமும் கலந்த துவேஷத்தின் வெளிப்பாடு. இந்த துவேஷம் எங்கள் ஆசிய வம்சாவளி அமெரிக்கர்களிடையேயும் இருப்பது தான் ஆச்சரியமான விடயம். இது தவறு தான் என்றாலும், நீலக்கட்சி இதைக் கணக்கிலெடுத்திருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2024 at 14:34, Justin said:

உங்கள் அவதானிப்பின் அடிப்படையை ஒருக்கா எனக்கும் சொல்லுங்களேன்?

நெடுக்கர் தந்த இணைப்பு (அவர் வாசித்திருக்க மாட்டார், தலைப்பைத் தாண்டி😎) தெற்கில் ஒரு பரவலான பிரச்சினை. அந்த இணைப்பில் இருக்கும் தகவல் படி, கறுப்பின மக்கள், லோயர் வைக்கவும், பிணை கட்டவும் இயலாத ஏழைகள், இந்த நீதிபதிகளால் பாதிக்கப் படுகிறார்கள் என்று காட்டுகிறது.

தம்பு போன்றோர்- ஒரு பில்லியனர், ஒரு லோயர் படையணியோடு வலம் வருபவர்- இந்த வகை நீதிபதிகளால் பாதிக்கப் படுவதில்லை. உண்மையாகப் பார்த்தால், அவர் போன வருடம் நியமித்த ஒரு நீதிபதி தன் நன்றிக் கடனாக அவருக்கெதிரான சமஷ்டிக் கேஸ் ஒன்றை தள்ளி வைத்து உதவியிருக்கிறார். 

எனவே, இந்த றொய்ரர்ஸ் இணைப்பின் படி, நீதிபதிகளால் தம்பு பாதிக்கப் படவில்லை. இது சாமான்ய மக்களை உள்ளடக்கிய ஜூரர் தீர்ப்பு என்பதையும் கவனிக்க வேண்டும். 

Michael Cohen accused of lying over phone call at Trump hush-money trial

Donald Trump’s lawyer on Thursday attacked the core charge against the former president as he sought to undercut Michael Cohen, the former attorney whose $130,000 hush-money payment to the adult film star Stormy Daniels is at the heart of the criminal trial in New York.

As Cohen returned to the stand for the third day, Blanche suggested Cohen’s latest objective was to see Trump go to jail, seeding the possibility that he might have also lied about the extent of Trump’s involvement in the hush-money scheme with Daniels.

https://www.theguardian.com/us-news/article/2024/may/16/michael-cohen-cross-examination-trump-trial

இந்த வழக்கில் ரம்பை சிக்க வைக்க பல பொய்கள்.. உருட்டுக்களை நடப்பு பைடன் அரசு சார்ப்பு ஆட்கள் செய்திருக்காங்க.

அமெரிக்காவின் நீதித்துறை வெளியார் செல்வாக்குகளுக்கு உள்ளாகி இருப்பது வெளிப்படை. இது அமெரிக்காவின் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

நீங்கள் "ட்ரம்பை நிரபராதியாக்கும் தகவல்கள்" என்று குறிப்பாகத் தேடினால் இது உட்பட்ட பல செரிப் பழங்கள் கிடைக்கும், நீங்களும் சுவைத்து  இங்கே இருக்கும் "ட்ரம்ப் காதலர்களோடும்"😎 பகிரலாம், நல்ல விடயம் தான்.

ஆனால், சில நூறு பக்கங்கள்  இருக்கும் கேஸ் transcript, நீதி மன்ற தளத்தில் இருக்கிறது, அதில் போய் மைக் கோஹனின் சாட்சியத்தை உறுதி செய்த ஏனைய சாட்சிகளையும் ஒருக்காப் பார்த்தால் இப்படி செரிப் பழம் பிடிங்கி மெனக்கெடத் தேவையில்லை. ஜூரர்கள், deliberate செய்யும் போது திரும்பி வந்து ஒரு குறிப்பிட்ட சாட்சியத்தை மீள தாங்கள் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள், அதையும் ஒரு தடவை யாரென்று தேடிப் பாருங்கள். அதைக் கேட்ட போதே தீர்ப்பு எப்படியிருக்கப் போகிறதென்று உள்ளூரில் இருப்போருக்கு விளங்கி விட்டது.

பி.கு: கேஸ் மாநில கேஸ், சமஷ்டி கேஸ் அல்ல. பைடன் நிர்வாகம், ஆட்கள் எப்படி செல்வாகுச் செலுத்துவர்? இது நாசாக் கதை மாதிரிப் போகும் போல இருக்கே😂?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் பிராண்ட் குத்துக்கரணம் அடிக்கின்றது. டொனால்ட் டிரம்ப் ஒரு யோக்கியர் என்று எவரும் நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை. இங்கு நீதி பரிபாலனம் எப்படி கையாளப்படுக்கின்றது என்பதை கண்ணுற்றே பலர் விமர்சனம் வைக்கின்றார்கள். டொமோகிராட்டிக் தரப்பு உள்ளடி வேலைகள் நல்லாய் செய்கின்றார்கள். 

ஒரு காலத்தில் சீ என் என் செய்தி சேவை சொல்வதை வேத வாக்காக கேட்டு நம்பியதும் உண்டு. இப்போது எப்படி மாவரைக்கின்றார்கள் என கொஞ்சம் புரிகின்றது.

அமெரிக்க சாம்ராச்சியத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அதன் பல பாகங்கள் எமது காலத்திலேயே நடந்தேறுகின்றன போல. அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அதை கட்டியம் கூறுகின்றன. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பைடன் சார்ந்த கட்சி நல்ல கட்சி தான்.அதனால் பைடனுக்கு வெள்ளை அடிக்க மாட்டேன்
மாற்று அரசியல் ஜோர்ஜ் புஸ் கொம்பனி பல போர்கள் செய்தாலும் உலக பொருளாதாரத்தை இன்று இருக்கும் அளவிற்கு சீரழிக்கவில்லை. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் கை வைக்கவுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

பைடன் சார்ந்த கட்சி நல்ல கட்சி தான்.அதனால் பைடனுக்கு வெள்ளை அடிக்க மாட்டேன்
மாற்று அரசியல் ஜோர்ஜ் புஸ் கொம்பனி பல போர்கள் செய்தாலும் உலக பொருளாதாரத்தை இன்று இருக்கும் அளவிற்கு சீரழிக்கவில்லை. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் கை வைக்கவுமில்லை.

கிளின்டன் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் அழித்து நாசமாக்கியவர்கள்.

அதோட தொடங்கிய கடன் இப்போ எங்கேயோ போய் நிற்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கிளின்டன் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் அழித்து நாசமாக்கியவர்கள்.

அதோட தொடங்கிய கடன் இப்போ எங்கேயோ போய் நிற்கிறது.

நீலக்கட்சி சேர்த்து வைத்ததை  சிவப்பு கட்சி அழிக்கும் என்றொரு பழைய கதை உண்டு. ஆனால் அது இப்போது தலை கீழாக நடக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

நீலக்கட்சி சேர்த்து வைத்ததை  சிவப்பு கட்சி அழிக்கும் என்றொரு பழைய கதை உண்டு. ஆனால் அது இப்போது தலை கீழாக நடக்கின்றது.

இப்ப அழிக்கிறதுக்கு என்ன இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயம் said:

அமெரிக்கன் பிராண்ட் குத்துக்கரணம் அடிக்கின்றது. டொனால்ட் டிரம்ப் ஒரு யோக்கியர் என்று எவரும் நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை. இங்கு நீதி பரிபாலனம் எப்படி கையாளப்படுக்கின்றது என்பதை கண்ணுற்றே பலர் விமர்சனம் வைக்கின்றார்கள். டொமோகிராட்டிக் தரப்பு உள்ளடி வேலைகள் நல்லாய் செய்கின்றார்கள். 

ஒரு காலத்தில் சீ என் என் செய்தி சேவை சொல்வதை வேத வாக்காக கேட்டு நம்பியதும் உண்டு. இப்போது எப்படி மாவரைக்கின்றார்கள் என கொஞ்சம் புரிகின்றது.

அமெரிக்க சாம்ராச்சியத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அதன் பல பாகங்கள் எமது காலத்திலேயே நடந்தேறுகின்றன போல. அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அதை கட்டியம் கூறுகின்றன. 

இதற்குத் தான் அடிப்படை என்னவென்று கேட்டேன். "எனது நடுநிலைமையான பார்வை" என்று உங்கள் பார்வையையே "தரவாக" எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் தொடர்ந்து உங்களை கேட்கவில்லை😎.

அமெரிக்கன் பிராண்ட் குத்துக் கரணம் அடிக்க முயன்றது உண்மை. தேர்தலை ஏற்றுக் கொள்ளாமல் ஜனவரி 6 இல் கலகத்தை த் தூண்டிய போது தான் குத்துக் கரணம் உச்சம் தொட்டது. அது முதல் ட்ரம்ப் அணி மீது ஆதாரங்களுடன் குற்றச் சாட்டுகளும், தற்போது ஒரு தீர்ப்பும் வந்திருக்கிறது. இந்த வழக்குகளின் பின்னால் இருக்கும் சட்டவாளர்களின் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென நினைக்கிறேன். முடிந்தால், ஒரு சாம்பிளுக்கு இந்த வழக்கிலேயே ட்ரம்பிற்கு எதிராக அவர்கள் நீதிமன்றில் காட்டிய நுணுக்கமான சான்றுகளை (exhibits) ஒரு தடவை போய் பாருங்கள். இதற்கு உள்ளடி வேலை அவசியமில்லை, ட்ரம்பே தூக்கிக் கொடுத்திருக்கிறார் சாட்சியங்களை. அந்தளவுக்கு சட்டமும் தெரியாத, தன் லோயர் மாரையும் செயல்பட அனுமதிக்காத ஒரு முட்டாப் பீசு அவர்😂!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

கண்ணாடி வீட்டுக்குள் கல்லெறிய தொடங்கி உள்ளார்கள் என பொருள் கொள்ளலாமா?

டொனால்ட் டிரம்ப் இற்கு மணி கட்டிவிட முயற்சி செய்தது ஒரு ஆரம்பமே. இது இனி எவ்வாறான பல சம்பவங்களுக்கு முன்னோடியாக அமையும் என்பது எதிர்காலத்தில் தெரியும். 

அமெரிக்காவில் நீதித்துறை அடிப்படையில் இரு கட்சிகள் சார்ந்து இயங்குகின்றது எனும் தோற்றப்பாடு அண்மையில் தெளிவாக முழு உலகுக்கும் புலப்படும்படி சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 

பைடன் ஐயா (அவசர அவசரமாக?) அண்மையில் ஏராளம் நீதிபதிகளை நியமித்தார். தனது பதவி முற்றுப்பெற முன் இன்னும் எத்தனை பேருக்கு நியமனம் கொடுப்பாரோ தெரியாது. நியமனம் பெறுபவர்கள் விசுவாசத்தை காட்டமாட்டார்கள் என கூறமுடியாது. 

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு முன்னாள் அமெரிக்க நீதிபதிகளின் உரையாடல் பார்த்தேன். இங்கு இவர்களின் இலக்கு நீதி நிலை நாட்டப்படவேண்டும் என்பதை விட டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு முட்டுக்கட்டை போடவேண்டும். தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாதவாறு செய்யவேண்டும் எனும் சூக்குமங்களின் அடிப்படையில் இயங்குவது தெளிவாகின்றது. 

தீர்ப்பு கூறும்போது அவர்களின் உள்ளார்ந்தம் இந்த சூக்குமங்களின் அடிப்படையிலேயே கையாளப்படும் என்பது எனது ஊகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

தற்போது நடக்கும் விடயங்களை செய்தித் துணுக்குகளாகப் பார்த்து, யானை பார்த்த குருடன் போல இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அவசர அவசரமாக பைடன் நியமித்த நீதிபதிகள் எத்தனை பேர்? ட்ரம்ப் தன் காலத்தில் நியமித்த நீதிபதிகள் எத்தனை பேர்? இவர்கள் எந்த வகை நீதிபதிகள் (federal? appellate) ? ட்ரம்பிற்கெதிராக சமஷ்டிக் கோர்ட்டுகளில் இருக்கும் வழக்குகள் எத்தனை (அது தான் சமஷ்டி நீதிபதிகளின் கீழ் நடக்கும்), மாநிலக் கோர்ட்டுகளில் இருக்கும் வழக்குகள் (பைடன் நியமிக்காத நீதிபதிகளின் கீழ் வருவன) எத்தனை? இப்படி ஏதாவது தேடினீர்களா? அல்லது, ட்ரம்ப் நியமித்த நீதிபதிகளே ட்ரம்ப் கேஸ்களில் சாட்சியங்களையும் சட்டங்களையும் மட்டும் அடிப்படையாக வைத்து நடப்பதைச் செய்திகளில் பார்க்கவில்லையா?

ஒரு தீர்ப்பு வருகிறது. உடனே ஒரு அமெரிக்க அதிபர் வழமையாக நியமிக்கும் நீதிபதிகள் அவசரமாக நியமிக்கப் பட்டு எதிராளிக்கெதிராக நகர்த்தப் படுகின்றனர் என்ற புரிதலை ஏற்படுத்த தீர்ப்பை விரும்பாதோர் - ட்ரம்ப் விசிறிகள்- கதையைப் பரப்புவர் தான். இதையெல்லாம் கேட்ட நீங்கள், தீர்ப்பை வழங்கியது 12 சாதாரண நியூ யோர்க் மக்கள் என்பதை cognitive dissonance போல மறந்து விட்டீர்களென நினைக்கிறேன்.

ஜனவரி 6 இல் அமெரிக்க அரசியலைப்பிற்கெதிராக கலகத்தைத் தூண்டிய போதே ட்ரம்ப் எந்த அரச பதவியையும் வகிக்கும் தகுதியை இழந்து விட்டார் என்பது தான் பல நிபுணர்களின் கருத்து. அதையே அந்த இரு முன்னாள் நீதிபதிகளும் சொல்லியிருப்பர், அதிசயமில்லை. இதனால் தான் இரண்டாம் முறை ட்ரம்ப் impeach செய்யப் பட்டார், அவரது அரசியல் சகாக்கள் காப்பாற்றினர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2024 at 21:44, Justin said:

பி.கு: கேஸ் மாநில கேஸ், சமஷ்டி கேஸ் அல்ல. பைடன் நிர்வாகம், ஆட்கள் எப்படி செல்வாகுச் செலுத்துவர்? இது நாசாக் கதை மாதிரிப் போகும் போல இருக்கே😂?

ஆமாம் ஆமாம்.. அது தான் பைடன் இந்தத் தீர்ப்புத் தொடர்பில் கருத்துச் சொன்னாராக்கும். இது எதுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றால்.. எதுக்கு கருத்துச் சொல்லி மிணக்கட்டுக்கிட்டு..???!

கிளிங்டன் - மோனிக்கா வழக்கில்.. முன்னாள் பின்னாள் சனாதிபதிகள் கருத்துச் சொன்னவையாக்கும்..??!

ஆமாம் ஆமாம்.. நாசா சொல்லுறதெல்லாம்.. மிகவும் நம்பத்தகுந்தவை.. மற்றவை எல்லாம் பொய்..! இதுவே தங்கள் தத்துவார்த்தம். நீங்கள் அதற்குள் கட்டுண்டு கிடப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. அது தான் பைடன் இந்தத் தீர்ப்புத் தொடர்பில் கருத்துச் சொன்னாராக்கும். இது எதுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றால்.. எதுக்கு கருத்துச் சொல்லி மிணக்கட்டுக்கிட்டு..???!

கிளிங்டன் - மோனிக்கா வழக்கில்.. முன்னாள் பின்னாள் சனாதிபதிகள் கருத்துச் சொன்னவையாக்கும்..??!

ஆமாம் ஆமாம்.. நாசா சொல்லுறதெல்லாம்.. மிகவும் நம்பத்தகுந்தவை.. மற்றவை எல்லாம் பொய்..! இதுவே தங்கள் தத்துவார்த்தம். நீங்கள் அதற்குள் கட்டுண்டு கிடப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. 😜

மணி 👍   எழுதிய கருத்துக்கள் அவ்வளவும் பொருள் நெடுக்கர் 👈

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. அது தான் பைடன் இந்தத் தீர்ப்புத் தொடர்பில் கருத்துச் சொன்னாராக்கும். இது எதுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றால்.. எதுக்கு கருத்துச் சொல்லி மிணக்கட்டுக்கிட்டு..???!

கிளிங்டன் - மோனிக்கா வழக்கில்.. முன்னாள் பின்னாள் சனாதிபதிகள் கருத்துச் சொன்னவையாக்கும்..??!

ஆமாம் ஆமாம்.. நாசா சொல்லுறதெல்லாம்.. மிகவும் நம்பத்தகுந்தவை.. மற்றவை எல்லாம் பொய்..! இதுவே தங்கள் தத்துவார்த்தம். நீங்கள் அதற்குள் கட்டுண்டு கிடப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. 😜

கிளின்ரன் - மோனிகா விடயத்தில் "வழக்கு" நடந்ததோ நெடுக்கர்? எங்க? சந்திரனிலா😎??

(நீங்கள் எனக்கு பதிலாக எதை எழுதினாலும் பச்சை போட ஒரு "முதுகு சொறியும்" குழு இருக்கும்! பப்பா மரம் தான் என்றாலும் பார்த்து ஏறுங்கோ😊!)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

கிளின்ரன் - மோனிகா விடயத்தில் "வழக்கு" நடந்ததோ நெடுக்கர்? எங்க? சந்திரனிலா😎??

(நீங்கள் எனக்கு பதிலாக எதை எழுதினாலும் பச்சை போட ஒரு "முதுகு சொறியும்" குழு இருக்கும்! பப்பா மரம் தான் என்றாலும் பார்த்து ஏறுங்கோ😊!)

In April 1999, about two months after being acquitted by the Senate, Clinton was cited by federal District Judge Susan Webber Wright for civil contempt of court for his "willful failure" to obey her orders to testify truthfully in the Paula Jones sexual harassment lawsuit. For this, Clinton was assessed a $90,000 fine and the matter was referred to the Arkansas Supreme Court to see if disciplinary action would be appropriate.

https://en.wikipedia.org/wiki/Impeachment_trial_of_Bill_Clinton#Public_opinion

He was subsequently acquitted on all impeachment charges of perjury and obstruction of justice in a 21-day U.S. Senate trial. Clinton was held in civil contempt of court by Judge Susan Webber Wright for giving misleading testimony in the Paula Jones case regarding Lewinsky, and was also fined $90,000 by Wright.

https://en.wikipedia.org/wiki/Clinton–Lewinsky_scandal#:~:text=He was subsequently acquitted on,21-day U.S. Senate trial.&text=Clinton was held in civil,also fined %2490%2C000 by Wright.

பௌலா ஜோன்ஸ் என்ற பெண் தொடுத்த சிவில் கேஸை (மொனிகா கேஸ் அல்ல), ட்ரம்பின் கிரிமினல் கேசோடு ஒப்பிடும் அளவுக்கு "தெளிவாக" இருக்கிறீர்கள் நெடுக்கர்!

அமெரிக்காவில் convicted felon ஆக வருவது மிகக் கஷ்டம் -இது ட்ரம்பின் வரலாற்றுச் சாதனை, ஆனால் சிவில் கேஸ் (இது அரச தரப்பு தொடுக்கும் வழக்கு அல்ல) போறவன் வாறவன் எல்லாம் போடலாம், வெல்லலாம். அதைத் தான் "செரிப் பழமாக" பிடுங்கி வந்து இங்கே போட்டிருக்கிறீர்கள்.

அது சரி, ட்ரம்பும் ஒரு சிவில் கேசில் இதை விட 3 மடங்கு பணம் ஒரு பெண்ணுக்குக் கட்டினார் (அந்தப் பெண்ணைக் கிண்டல் பண்ணியவர் கூட உங்க குறுக்கால மறுக்கால ஓடித் திரியிறார்😎!).

கிளின்ரனுக்கும் வழக்கு, ட்ரம்புக்கும் வழக்கு, தற்போது ஹன்ரர் பைடனுக்கும் வழக்கு என்றால் உங்கள் அமெரிக்காவின் ஊழல் நீதி வாதம் அடிபட்டுப் போகிறதே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.