Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு

திருகோணமலை - சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு அவர் நேற்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

“பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது.

காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல. 

இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. 

சாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஒரேமொழியை பேசும் நாம் இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் கைவைப்பது ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற் றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இது குறித்து இன்று பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்

இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை. 

கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு  வடிவம் இது” என்றார். R
 
https://www.tamilmirror.lk/திருகோணமலை/A-L-பெறுபேறுகள்-இடைநிறுத்தியமை-இனப்-பாகுபாட்டின்-வெளிப்பாடு/75-338227

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

S109-Wireless-Headset-Einzel-Ohr-Haken-B

59c9275dc98268a93d8b8a07064f918e2cc0c687

இதனை  👆 காதில் மாட்டிக் கொண்டு பதில்களை வெளியில் இருந்து பெற்று,  சோதனை எழுதி இருக்கின்றார்கள் போலுள்ளது.
இவர்கள்.... குறுக்கு வழியில் சோதனை எழுதி சித்தி பெறுவது மற்றைய மாணவர்களை பாதிக்காது என்று இந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சொல்கிறார். அதற்காக முழு  முஸ்லீம்களும்  ஒன்று பட வேண்டுமாம். செய்யிறது முள்ள  மாரித்தனம். அதை கண்டிக்க வக்கில்லை. அதற்குள்  இன முரண்பாட்டை  தோற்றுவிக்கும் செயலில் இறங்கி, வெள்ளை அடிக்க முற்படுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சுத்தமான ஆட்களுக்கு எப்படி நீங்கள்  தடை போடமுடியும்...அதுவும் தமிழன்...இப்ப வெளிக்கிடும் குரலற்றோர் அமைப்பு.. அவை இல்லாத துஎசத்தை கொட்ட அணிலும் வோட்டுக்காக ..நீதியை அங்கால் சாய்த்துவிடும்...பாவப் பிறவிகள்.. தமிழினம்..

  • கருத்துக்கள உறவுகள்

இடை நிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலீலுர் ரஹ்மான் 

Published By: DIGITAL DESK 7

03 JUN, 2024 | 05:22 PM
image
 
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட விடயம் இலங்கையில் இன்னும் மனிதாபிமானம் உயிர்வாழ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. அந்த மாணவிகளின் வாழ்வோடு விளையாட முனையும் யாரையும் நாம் அனுமதிக்க முடியாது. மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேற்றை உடனடியாக வெளியிட பரீட்சை ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட விடயம் இலங்கையில் இன்னும் மனிதாபிமானம் உயிர்வாழ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. பரீட்சை மண்டபத்தில் இஸ்லாமிய மாணவிகள் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து கவலைப்பட மட்டுமே முடிந்தது.  காதுகளை மூடி பரீட்சை எழுதியமை தொடர்பில் பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் இருந்தால் மண்டபத்திலேயே அதனை முடித்திருக்க முடியும். 

முஸ்லிம் மாணவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் கடுமையாக கல்வியில் கவனம் செலுத்தி வருவதை தடுக்கும் விதமாக நடைபெற்ற சம்பவமாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. முஸ்லிங்களின் கல்வியை நசுக்க எடுத்த இனப் பாகுபாட்டின் உச்சமாகவும் இந்த சம்பவத்தை நோக்கலாம். இந்த இனவாத செயலை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் எடுத்து தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். 

பரீட்சை மண்டபத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளர் ஆளுமையற்ற கல்வி பரப்புக்கு பொருத்தமற்ற ஆசிரிய தொழிலை கேவலப்படுத்தும் மனநிலை கொண்ட ஒருவராகவே நாம் பார்க்கிறோம். ஒரேமொழியை பேசும் சகோதர இன மாணவிகளின் உரிமைகளில் கை வைப்பது சகோதரத்துவத்துக்கு ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற்றோரினதும் இன்றைய மோசமான மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் பரீட்சை ஆணையாளர்  உடனடியாக மாணவர்களின் பெறுபேற்றை வெளியிட முன்வரவேண்டும். இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல உரிமை சார்ந்த பிரச்சினையும் கூட. கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது.

இடை நிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலீலுர் ரஹ்மான்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மாணவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் கடுமையாக கல்வியில் கவனம் செலுத்தி வருவதை தடுக்கும் விதமாக நடைபெற்ற சம்பவமாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. முஸ்லிங்களின் கல்வியை நசுக்க எடுத்த இனப் பாகுபாட்டின் உச்சமாகவும் இந்த சம்பவத்தை நோக்கலாம். இந்த இனவாத செயலை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் எடுத்து தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். 

யுத்தத்தின்பின்...சிங்களவரின் ஆதரவு பெற்று...முட்டாக்கும் முகமூடியும்..போட்டு அதனுள்  இலத்திரனியல் பொருட்களை ப்துக்கி பரீட் சைஎழுதி சித்திஅடைந்தவர்கள் தான் இவர்கள்... இதைக்கண்டு சிங்களம்  வெகுண்டுஎழ.. அடக்கி வாசித்துவிட்டு..இப்ப கிழக்கில் இந்த விளையாட்டு..அங்கு  பரீட்சை மேற்பார்வையாளர் தமிழர்கள்தானே....முசுலீமுக்கு அரத்துவதற்கு தமிழன் வாய்த்துவிட்டால்காணுமே...இப்ப இங்கு இதுதான் நடக்குது..

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2024 at 04:20, கிருபன் said:

A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு

திருகோணமலை - சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு அவர் நேற்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

“பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது.

காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல. 

இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. 

சாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஒரேமொழியை பேசும் நாம் இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் கைவைப்பது ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற் றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இது குறித்து இன்று பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்

இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை. 

கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு  வடிவம் இது” என்றார். R
 
https://www.tamilmirror.lk/திருகோணமலை/A-L-பெறுபேறுகள்-இடைநிறுத்தியமை-இனப்-பாகுபாட்டின்-வெளிப்பாடு/75-338227

ஒன்றும் புரியவில்லையே. இவ்வளவு காலமும் எப்படி பரீட்சை எழுதினார்கள். இலங்கையின் மற்றைய பகுதிகளில் இப்படியோர் பிரச்சனை எழ இல்லையா? முன்பு இப்படியான முறைப்பாடு வர இல்லையா?

போட்டி பரீட்சை என வரும்போது விதிமுறைகள், கட்டுப்பாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். 

On 1/6/2024 at 05:44, தமிழ் சிறி said:

S109-Wireless-Headset-Einzel-Ohr-Haken-B

59c9275dc98268a93d8b8a07064f918e2cc0c687

இதனை  👆 காதில் மாட்டிக் கொண்டு பதில்களை வெளியில் இருந்து பெற்று,  சோதனை எழுதி இருக்கின்றார்கள் போலுள்ளது.
இவர்கள்.... குறுக்கு வழியில் சோதனை எழுதி சித்தி பெறுவது மற்றைய மாணவர்களை பாதிக்காது என்று இந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சொல்கிறார். அதற்காக முழு  முஸ்லீம்களும்  ஒன்று பட வேண்டுமாம். செய்யிறது முள்ள  மாரித்தனம். அதை கண்டிக்க வக்கில்லை. அதற்குள்  இன முரண்பாட்டை  தோற்றுவிக்கும் செயலில் இறங்கி, வெள்ளை அடிக்க முற்படுகின்றார்.

இப்போது காதுக்கு அடக்கமான மிக சிறிய புளூதூத் தொடர்பாடல் கருவிகள் உள்ளன. 

குறிப்பிட்ட கல்லூரி மாணவிகள் காதுகளை மூடியதன் மூலம் சந்தேகத்தை தோற்றுவித்தார்களோ?

இது இனவாத செயலா இல்லையா என தெரியாது, ஆனால் மாணவிகள் இவ்வாறு காதுகளை மூடிக் கொண்டு வரும் போதே பரீட்சை மண்டபத்தியே நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும். அப்படி எடுக்காமல், பெறுபேறுகள் வரும் போது அதை வெளியிடாமல் இடை நிறுத்தம் செய்வது சரியான செயலாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பரீட்சை மண்டபத்திலேயே முஸ்லிம் ஆசிரியைகளைக் கொண்டு, காதுகளை மூடிக் கொண்டு வந்த மாணவிகளை சோதனை செய்து விட்டு அனுமதித்து இருந்தால் இந்த பிரச்சினை எழுந்திருக்காது. 

காதுகளை மூடிக் கொண்டு வந்த மாணவிகள் எல்லாரும் பரீட்சையில் களவு செய்யத்தான் அப்படி வந்தனர் எனச் சொல்வது இனவாத பேச்சாகவே கொள்ள வேண்டி இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

புளூதூத் மற்றும் தொலைபேசி இணைப்பு ஊடாக குறுக்கு வழிகளில் பரீட்சைகளை எழுதினார்கள் என்றால், தொலைபேசிப் பாவனை நிரலை எடுத்து குற்றத்தை நிரூபிக்க கூடியதாக இருக்கும். வேறு வழிகளிலும் என்றாலும், எங்காவது ஏதாவது log entries இருப்பதிற்கு சாத்தியம் உள்ளது. 

அந்த நாட்களில் சில சிங்களமாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பரீட்சைகளில் மேற்பார்வையில் இருக்கும் ஆசிரியர்களே எங்களுக்கு கேள்விகளுக்கு பதில்களை சொல்லித் தருவதாகவே தாங்கள் நினைத்திருந்ததாக சொல்லியிருக்கின்றனர். ஏனென்றால் அன்று நாங்கள் மிக அதிகமான பரீட்சைப் பெறுபேறுகளை எடுத்துக் கொண்டிருந்தோம். உதாரணமாக, 1985ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு 4A மட்டுமே வந்திருந்தது. யாழ் மாவட்ட மாணவன் ஒருவனே அதைப் பெற்றிருந்தார். அந்த சிங்கள் மாணவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டு, சிரிப்பதை தவிர வேறு எந்த உணர்வும் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

ஒன்றும் புரியவில்லையே. இவ்வளவு காலமும் எப்படி பரீட்சை எழுதினார்கள். இலங்கையின் மற்றைய பகுதிகளில் இப்படியோர் பிரச்சனை எழ இல்லையா? முன்பு இப்படியான முறைப்பாடு வர இல்லையா?

போட்டி பரீட்சை என வரும்போது விதிமுறைகள், கட்டுப்பாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். 

இப்போது காதுக்கு அடக்கமான மிக சிறிய புளூதூத் தொடர்பாடல் கருவிகள் உள்ளன. 

குறிப்பிட்ட கல்லூரி மாணவிகள் காதுகளை மூடியதன் மூலம் சந்தேகத்தை தோற்றுவித்தார்களோ?

 அது சரி பாஸ்  முஸ்லீம் மாணவர் என்ன பாவம் செய்தார்கள் ?😀 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

 அது சரி பாஸ்  முஸ்லீம் மாணவர் என்ன பாவம் செய்தார்கள் ?😀 

எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள். 

கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது.

நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.