Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் நடந்தது முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் வாக்கு வங்கியை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பெருமளவு அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 8.9 வீத வாக்குகளை பெற்று தமிழகத்தின் தேசிய கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சி தன்னை நிலை நிறுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சி

தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழனை தமிழன் ஆழ வேண்டும் என கொள்கைகளை முன்வைத்து தனது தீவிர பிரச்சாரத்தை சீமான் மேற்கொண்டு வருகின்றார்.

திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள சீமான் | Indian Parliament Election Naam Thamizhar Katchi

சீமானின் ஆக்ரோஷமான பிரச்சாரங்கள், எழுச்சிமிகு உரைகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். மறுபுறம் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இவ்வாறான நிலையில் திராவிட கொள்கைகளுக்குள் சிக்கியுள்ள தமிழக மக்கள் தற்போது அதிலிருந்து விடுதலை பெற எத்தணிக்கும் போக்கினை இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.

திராடவிட கட்சிகளுக்கு சவால்

எந்தவொரு கூட்டணியுடன் இணையாமல் தனிக்கட்சியாக போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, பெருந்தொகை வாக்குகளை பெற்றுள்ளமையானது, தமிழகத்தின் திராவிட கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள சீமான் | Indian Parliament Election Naam Thamizhar Katchi

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி 8.9 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

சீமான் கட்சியின் முன்னேற்றம் குறித்து அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருவதுடன், பலரும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் அபார வளர்ச்சி குறித்து பாராட்டாமல் இருக்க முடியாதென பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்தின் தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்.

வாக்கு வங்கி

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து 40 தொகுதிகளிலும் களம் கண்டது. 2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.9 சதவீதம் வாக்குகளை பெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில் 6.89 சதவீத வாக்குகளை பெற்றது.

திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள சீமான் | Indian Parliament Election Naam Thamizhar Katchi

இந்த முறை தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர் கட்சி மேலும் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது.

சில தொகுதிகளை தேசிய கட்சியான அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னேறியது. 2026ஆம் ஆண்டில் தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தேசிய கட்சிகளுக்கு பெரும் சவால் மிக்க கட்சியாக திகழும் என்பது மறுக்க முடியாத நிதர்சனமாகும்.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியானது விரைவில் ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதமாக மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/indian-parliament-election-naam-thamizhar-katchi-1717676313

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது 2021 இல் 6.5% எடுத்த கட்சி, 

2024 இல் 8.1% எடுத்ததை கண்டு எல்லாரும் அதிர்ச்சியாகிவிட்டார்களாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அதாவது 2021 இல் 6.5% எடுத்த கட்சி, 

2024 இல் 8.1% எடுத்ததை கண்டு எல்லாரும் அதிர்ச்சியாகிவிட்டார்களாம்🤣

சரி என்ன செய்வது தண்ணி கொஞ்சம் குடிங்க.2019 இலும்பார்க்க திமுக இந்த முறை குறைந்த சதவுPதத்தைப் பெற்றிருக்கிறது. அதிமுகவும் 2019 வை விட கூடிய சதவிதத்தைப் பெற்றிருக்கிறது. பல கட்சிக் கூட்ணியோடு சேர்ந்த பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்i இழக்கிறது. அந்த மாம்பழத்துக்கு இந்த முறை விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட கட்சி தயராகிவிட்டதாகவும் திமுகவாகன உதவி செய்ய விருப்பதாகாவும் தகவல் அடிபடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அதாவது 2021 இல் 6.5% எடுத்த கட்சி, 

2024 இல் 8.1% எடுத்ததை கண்டு எல்லாரும் அதிர்ச்சியாகிவிட்டார்களாம்🤣

6.5% இருந்து 8.1 % எடுத்தது  சீமானின் அதிரடி பாய்ச்சல் ,சாதனை ,மற்ற கட்சிகளுக்குபெரும் அச்சுறுத்தல் 🤣
தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லாமல் ஹிந்திகாரர்களா

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் வாங்கிய 8 சத வீதத்திற்கும் மேலான வாக்குகள் நாம் தமிழர் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய வாக்குகள்.

தி மு க.. 

காங்கிரஸ்..

விடுதலைச் சிறுத்தைகள்...

பா ம க..

பா ஜ க..

அதிமுக..

தே மு திக

கமலஹாசன் கட்சி.. 

சரத்குமார் கட்சி..

இவற்றின் வாக்கு சதவீதம் என்பது இவர்களுக்கான வாக்குகளால் மட்டும் வந்தவை அல்ல. கூட்டணிக்கு விழுந்த வாக்குகள்.

அப்படி நோக்கின்.. பா ஜ க.. காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளை விட நாம் தமிழரின் வாக்கு சதவீதம் அதிகம் எனலாம்.

அதேபோல் தி மு க வின் வாக்கு சதவீதம் என்பது கூட தி மு கவிற்கு தனித்து வீழ்ந்த வாக்குகள் என்பது அர்த்தமில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு சிறுகச் சிறுக வீழ்ந்த வாக்கு சதவீதங்களின் மொத்தமும் அதில் அடங்கும்.

ஆக நாம் தமிழர் தனித்துப் பெற்ற 8 சதவீதம் என்பது... உண்மையில்.. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிப் படியே. 

அதற்காக உழைத்த அண்ணன் சீமான்.. மற்றும் நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கே இந்தப் பெருமைகள் போய் சேர வேண்டும். எந்த இலவசங்கள்.. சலுகைகள் இன்றி.. அவர்களை நம்பி வாக்களித்த தமிழக வாக்காளர்கள் நன்றிக்குரியவர்கள் மட்டுமன்றி எதிர்காலத்தில் தாம் சார்ந்த எல்லோரையும் நாம் தமிழருக்கு வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில்.. தமிழகத்தில் ஒரு உருப்படியான தமிழராட்சி மலரவும்.. தமிழகம்.. முழு வளர்ச்சி அடையவும் இது தேவையாகும். நாம் தமிழர் பாசறையில் குவித்திருக்கும் அனுபவ முத்துக்களை தமிழக மக்கள் தம் முன்னேற்றத்திற்கு அணிகலனாக்கிக் கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

சரி என்ன செய்வது தண்ணி கொஞ்சம் குடிங்க.2019 இலும்பார்க்க திமுக இந்த முறை குறைந்த சதவுPதத்தைப் பெற்றிருக்கிறது. அதிமுகவும் 2019 வை விட கூடிய சதவிதத்தைப் பெற்றிருக்கிறது. பல கட்சிக் கூட்ணியோடு சேர்ந்த பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்i இழக்கிறது. அந்த மாம்பழத்துக்கு இந்த முறை விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட கட்சி தயராகிவிட்டதாகவும் திமுகவாகன உதவி செய்ய விருப்பதாகாவும் தகவல் அடிபடுகிறது.

🤣 நீங்கள் எல்லாம்  10%,15% என மனக்கோட்டை கட்டிய போது, ஒரு மாதம் முதலே 8% என அடித்து சொன்ன நான் ஏன் தண்ணி குடிக்க வேண்டும்🤣

திமுக வாக்கு வங்கி குறைந்தாலும் கூடினாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் அதிமுக வாக்கு வங்கி கூடியமை மகிழ்ச்சியே.

என்னை பொறுத்தவரை இந்த தேர்தலின் நிஜ ஹீரோ எடப்பாடிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ன்னை பொறுத்தவரை இந்த தேர்தலின் நிஜ ஹீரோ எடப்பாடிதான்.

அதிமுக வாக்கு வங்கியை பெரிய அளவில் இழக்கவில்லை சரியான கூட்டணி அமையாததால் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. சரியான கூட்டணி அமைத்திருந்தால் இன்று டெல்லியில் எடப்பாடி கிங்மேக்கராக இருந்திருப்பார். இருந்தாலும் 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு கட்சிகள் மண்டியடிக்கும் குறிப்பாக பாமக.திமுக வாக்குவங்கியை இழந்தாலும் அதன் கூட்ணிப்பலம் வெற்றியக் கொடுத்திருக்கிறது. ஆனால்கிங்மேக்கராக இல்லாமல் கண்ரீனைக்காலி செய்யும் ஜோக்கராகி விட்டது. கடந்த 3 நாடாளுமன்றத் தேர்களிலும் தமிழ்நாடு எம்பிக்கள் ஜோக்கர்கள்தான். நாயுடு ஆட்டிப் படைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

நீங்கள், திமுக  சரியான கூட்டணி அமைக்கவில்லை, அதிமுக சரியான கூட்டணி அமைக்கவில்லை என நீட்டி முழக்கதேவையில்லை புலவர்…..

திமுக, அதிமுக - பாஜக வுடன் கூட்டணி அமைத்தால் இப்போ டெல்லியில் கிங் மேக்கர் ஆகி இருக்கலாம் என பச்சையாகவே எழுதலாம்🤣.

திமுக கண்டீனை நிரப்பலாம், அதிமுக ஒரு சீட்டிலும் வெல்லாமல் இருக்கலாம், ஆனால் டெல்லியில் யார் என்ன உருட்டினாலும் தமிழ் நாட்டின் அரசியலை 2014க்க்கு பின்னும் முன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை இந்த கட்சிகளே.

எல்லாராலும் எப்போதும் கிங் மேக்கராக முடியாது (செளமியமூர்ர்த்தி தொண்டைமானை தவிர).

இப்போது கூட தேர்தலுக்கு பிந்திய கூட்டை பாஜகவோடு வைத்தால், 16, 12 எம்பிகள் உள்ள நாயுடுவை, நிதீசை விட ஸ்டாலினை மடியில் வைத்து கொஞ்ச பாஜக தயாராகவே இருக்கிறது.

ஆனால் அப்படி செய்தால் அதை முதல் ஆளாக நானும் நீங்களும் சந்தர்ப்பவாத கூட்டணி என  எதிர்ப்போம்🤣.

நல்ல தேர்ந்த அரசியல்வாதி போல் நாமும் நாக்கை பிரட்டி, பிரட்டி கதைக்க கூடாது.

பிகு

தேவைப்பட்டால் நாதக+பாஜக “சரியான கூட்டணியை” வரவேற்றல்க நீங்களும் தயாராகி, ஏனையோரையும் தயாராக்குவதாக எனக்கு தோணுவது பிரமைதானே🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/6/2024 at 15:06, ஈழப்பிரியன் said:

இந்தியாவில் நடந்தது முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் ஏனைய கட்சி உறிப்பினர்களே சீமானின் வெற்றியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஆனால்....
ஆனால்....
ஆனால்... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

தேவைப்பட்டால் நாதக+பாஜக “சரியான கூட்டணியை” வரவேற்றல்க

இப்படி ஒரு கூட்டணி அமைப்பதிலும் பார்க்க கட்சியைக் கலைத்து விட்டுப் போகலாம்.ஆனால் தமிழ்மக்களை கொன்று குவித்த காங்கரசைக் காட்டிலும் பாஜக தமிழ் மக்களுக்கு குறைவான தீங்கையே ஒப்பீட்டளவில் செய்திருக்கிறது. பாஜக பெரிய பலத்தோடு ஈளவும் கூடாது காங்கிரஸ் ஆட்சிக்கு வரவும் கூடாது. நான் விரும்பியது நடந்திருக்கு. எங்களை அழித்த காங்கரசுக்கு மீட்சியே இருக்கக் கூடாது. அடுத்து 2 பெரிய தேசியக் கட்சிகளையும் அதரித்து அவர்களை ஆளவிடுவதிலும்பார்க்க மாநிலக்கட்சிகள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைப்பதையே நான் விரும்புகிறேன். அப்படி ஒரு சந்தர்பத்தில் அதற்கு ஆதரவு வழங்குவதே பெருத்தமானது. மூட்டாட்சி தத்துவத்துககும் பொருள் இருக்கும். முன்பு ஒரு காலத்தில் இந்திரா காங்கிரசை வீழ்த்தி நாரயணண் தமைையிலலும் பின்னர் விபிசிங் தலைமையிலும் அப்படிப்பட்ட ஆட்சிகள் அமைந்தன.ஆனால் மாநிலக் கட்சிகள் இப்படிப்பட்ட ஆட்சிகள் நீடிக்க வேண்டும் என்று நினைப்பதை விட தங்கள் டசொந்த நலனைச் சிந்திப்பதால் அப்படிப்பட்ட ஆட்சிகள் நிலைத்திருக்கவில்லை. இந்தக் காலத்தில் கம்மினியூஸ்ட்டுகள் பலமாக இருந்தார்கள். இப்பொழுது பேருக்குத்தான் கம்மினியூஸ்ட்டுகள். மற்றும்படி முதலாளித்துவ கட்சிகளின் அடிவருடிகளாக 5க்கும் பத்துக்கும் விலை போய்விட்டார்கள். மேற்கு வங்கம் மம்தாவிடம் விழுந்து விட்டது. கேரளாவில் ஓரளவு பலமாக இருந்தாலும் அங்கு சுரேஜ்கோபியின் வெற்றி(பாஜக) கேரளாவும் தமழநாட்டு சீரழிவு அரசியலுக்குள் புகுந்து விட்டதா ?திரைப்பிரபலங்களை வைத்து தேர்தலில் போட்டியிடும் தேசியக்கட்சிகளின் வலையில் சிக்கி விட்டதாக என்று எண்ணத் தோன்றுகிறது. கேரள மக்களை முட்டாள்கள் என்ற நினைப்பில்தானே அவர்களது குடும்பத் தொகுதியான ரேபலேலியில் தோற்றாலும் மதவாத எதிர்ப்பு என்ற ஒற்றை கோஷத்தைப் போட்டு வயநாட்டு மக்கள் தன்னைக் காப்பாற்றுவர்கள். என் று அந்தத் தொகுதியில் ராகுல் போட்டிpட்டார். இந்தத்தடவை 2 தெகுதியிலும் வென்றதால் கடந்த முறை காப்பாற்றிய கேரளமகள்களைக் கைவிட்டு ரேபேலெலித் தொகுp எம்பியாகிறார். இடைத்தேர்தலில் பிரியங்காந்தியை நிறுத்தி தெரகுதிக்கு துண்டு போட்டும் வைத்திருக்கிறாராம்.

அருமையான கருத்து. எனது நிலைப்பாடும் இதுவே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் இருக்கும் ஏனைய கட்சி உறிப்பினர்களே சீமானின் வெற்றியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஆனால்....
ஆனால்....
ஆனால்... 🤣

வாக்காளர்களுக்கு காசு கொடுக்கவில்லை. 

50/50 விகிதம் பெண்களுக்கு நியமனம். 

இறுதி நேரத்தில் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டது.

எவருடனும் கூட்டணியில்லை. 

 பாரம்பரிய கட்சி எனும் அந்தஸ்து இல்லை. 

ஊடக ஆதரவு இல்லை 

பண பலம் இல்லை.

அரசியல் பின்புலம் இல்லை.

இவை எல்லவற்றையும் தாண்டி மாநிலக் கட்சியாக உறுதிப்படுத்தும் அளவிற்கு 6% ல் இருந்து  8% ஆக  வாக்குகளைப் பெற்றிருப்பது  வளர்ச்சி இல்லாமல் வேறு  என்ன? 

தமிழக அரசியல்  ஆய்வாளர்களால், அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படு,  பாரட்டப்படும் ஒரு விடயத்தை யாழ்கள குருவிச் சாத்திரக்காரர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், மட்டம் தட்டுவதும், கேலிசெய்வதும் ஏன்? 

இந்த உண்மையைக்கூட ஏற்றுக்கொள்ள மனம் ஏற்றுக்கொள்ள மறுபதற்குக் காரணம் என்ன? 

வெறுப்பும் வஞ்சகக் குணமும்  மனிதர்களின் கண்களை மறைக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.