Jump to content

துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு - T. கோபிசங்கர்


Recommended Posts

துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு

 

இப்பிடித்தான் London போய் ஆறு மாசத்தில, “டேய், கார் வாங்கீட்டாய் தானே,சனி ஞாயிறு வேலை இல்லாட்டி வீட்ட வா” எண்டு சஞ்சீவ் சொல்ல , சரி எண்டு சொல்லீட்டு காஞ்சு போன வாய்க்கு வீட்டுச் சாப்பாட்டு கிடைக்கிற அவாவில வெள்ளிக்கிழமை வெளிக்கிட்டு எப்பிடி வாறது எண்டு வழி கேட்டால், உப்பிடியே Gantshill roundabout ஆல நேர வந்து A 406 எடுத்து அடுத்த roundabout இல மூண்டாவது exit எடுத்து அப்பிடியே north circular ஆல வந்து பிறகு அடுத்த roundabout ஐஞ்சாவது exit ஆல வெளீல வந்து எண்டு சொல்ல, ஊரில இருக்கிற சந்தி மாதிரி இருக்கும் எண்டு நெச்சு இருக்கிற roundabout பேரை எல்லாம் பாடமாக்கீட்டு் , வடிவா விளங்காட்டியும் ஆரையும் கேட்டாவதூ போகலாம் எண்டு நெச்சபடிக் காரை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். முதலாவது roundabout இலயே exit எடுக்கத் தெரியாமல் சுத்துசுத்தெண்டு சுத்தீட்டு வழி கேக்க வழி ஒண்டுமில்லாமல் தட்டுத் தடுமாறித் திரும்ப , சந்தேகத்தில மறிச்ச பொலிஸ்காரனுக்கு விளக்கம் குடுத்திட்டு அவன்டையும் வழி கேட்டாப் பாவம் அவனுக்கும் சொல்லத் தெரியேல்லை, Map ஐப் பாத்துக்கொண்டு போகச் சொன்னான். திருப்பி வீட்டை வந்து காரை விட்டிட்டு tube எடுத்து harrowக்குப் போனன். 

 

அப்ப தான் ஊரின்டை அருமை விளங்கிச்சுது ஒரு நாளும் போகாத ஊருக்கு கூட “அண்ணை அராலிக்கு எப்பிடிப் போறதெண்டு” town ல கேட்டால் சந்திக்குச் சந்தி ஒருத்தன் எங்களுக்கெண்டே நிப்பான் வழி சொல்ல. “சத்திரத்துச் சந்தியால நேர போய் அப்பிடியே மனோகராச் சந்தியால திரும்பிப் போனா வாற ஐஞ்சு சந்தியால வலது பக்கம் திரும்பி ஓட்டுமடச்சந்தியால இடது பக்கம் திரும்பி நேர போங்கோ” எண்டு easyயாய் சொல்லுவாங்கள். இல்லாட்டியும் இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தி வழியவும் சாரத்தோட பேப்பர் வாசிச்சுக்கொண்டு ஆராவது இருப்பினம், வழி கேட்டுக் கேட்டுப் போக. அதோட ஊருக்க போய் ஆரின்டையும் பேரைச் சொல்லிக் கேட்டால் வீட்டடீல கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வீட்டுக்காரரை கூப்பிட்டும் விடுவினம். ஊருக்க போய் வீட்டைக் கண்டு பிடிச்சு வாசலில நிண்டு பேரைக் கூப்பிடவும் முறை இருக்கு. 

 

பொதுவா ஆச்சி, அப்பு, ஐயா எண்டு கூப்பிடிறது, இல்லாட்டிச் சொந்தம் எண்டா முறையைச் சொல்லிக் கூப்பிடலாம். மனிசிமார் புருசன்டை பேரைச் சொல்லாத மாதிரித தான் வீடு வழிய போய் பேரை நேர சொல்லிக் கூப்பிடீறதோ இல்லாட்டி சபை சந்தீல கதைக்கேக்கயோ பேரைச் சொல்லுறதோ குறைவு. வீட்டுக்கும் , ரோட்டுக்கு ஒரு அடையாளம் மாதிரி ஊருக்க இருக்கிற ஆக்களுக்கும் பேரோட ஒரு அடைமொழி அடையாளமாய் இருக்கும்.

 

அப்ப பேருக்குப் பஞ்சம் எண்டதாலயோ இல்லாட்டி Numerology தெரியாததாலயோ ஊர் வழிய ஓரே பேரில கன பேர் இருப்பினம். 

 

அதோட வயசுக்கு மூத்த ஆக்களுக்குப் பேரைச்சொல்லிக் கூப்பிடிறது சரியில்லை எண்டு ஒரு மரியாதைக்கும் தான் இப்படி அடைமொழியோட கூப்பிடுறது எண்டு நெக்கிறன். 

அடைமொழிக்கு வைக்கிற பேர்

அநேமா அவரின்டை வேலை சார்ந்ததா இருக்கும் . புரோக்கர் பொன்னம்பலம் , பரியாரி பரமசிவம் , கிளாக்கர் கனகசபை, CTB சிவலிங்கண்ணை எண்டு தொழிலோட பேர் இருக்கும். பிசினஸ் செய்யிற எல்லாருக்கும் ஒரே வேலை எண்டதால வேலைக்குப் பதிலா அவை வேலை செய்யிற இடங்களைச் சேத்துச் சொல்லிறதும் இருந்தது . இது அநேமா சிங்கள ஊரா இருக்கும் . காரைநகர் பக்கம் தான் சிங்கள ஊர் அடைமொழி கனக்கப்பேருக்கு இருந்தது. வெலிகம பொன்னம்பலம், தங்கொட்டுவ தணிகாசலம் , களுத்துறை கனகலிங்கம் எண்டு ஒரு கேள்விப்படாத ஊரில போய் வியாபரம் தொடங்கி ,establish பண்ணி அந்த ஊர் பேரை ஒட்டிக் கொண்டு வந்து பேரையும் பிறந்த ஊரையும் பெருமைப்படுத்தின கன பேர் இருந்தவை. 

என்டை மச்சான் ஒருத்தனை்பள்ளிக்கூடத்தில அப்பப்பான்டை பேர் என்ன எண்டு கேக்க PM எண்டு சொல்லி இருக்கிறான் , குழம்பிப்போன ரீச்சர் திருப்பி விசாரிக்க , “ ஓம் வீட்டை வாறவை எல்லாம் PM நிக்கிறாரோ எண்டு தான் கேக்கிறவை” எண்டு சொல்லத்தான் ரீச்சருக்கு விளங்கிச்சுது postmaster தான் PM ஆனவர் எண்டு. ஓவசியர், Chairman, SM ( station master ) எண்டு தொழிலே பேராகி பேர் மறக்கப்பட்ட ஆக்களும் இருந்தவை. 

பெருமைக்கு ஊரைச்சேக்கிற ஆக்களும், ஊருக்கு பெருமை சேக்கிற ஆக்களும் எண்டு ரெண்டு பேரும் பேரோட ஊரைச் சேப்பினம். 

ஊரில தன்னைத் தானே பெருமையா நினைக்கிறது St John’s கொலிஜ் காரருக்கு மட்டும் இல்லை முழு யாழ்ப்பணத்தானுக்கும் இருந்தது. “ பருத்தித்துறை ஊராம் பவளக்ககொடி பேராம்” எண்டு பாடின கல்லடி வேலுப்பிள்ளையார், ஆடிப்பிறப்பிக்கு பாடின நவாலியூர் சோமசுந்தரப்புலவர் எண்டு , கவிஞனும் சரி கவிதையும் சரி ஊர்ப் பேரோட தான் இருந்தது. 

ரோடுகளுக்கு ஆக்களின்டே பேர் இருந்தாலும் ஊர் வழிய சந்திக்கு ஆக்களின்டை பேர் வைக்கிறேல்லை. பெரிய சந்திகள் ஊரின்டை பேரிலேம் மற்றச் சின்னன்களுக்கு மரத்தின்டை பேரோட புளியடி, இலுப்பையடி இல்லாட்டி ஒரு கட்டிடம் இருந்தா அந்தப் பேரோட மடத்தடி, கச்சேரியடி, மனோகராத் தியட்டரடி எண்டோ இல்லாட்டி குளத்தையோ , கோயிலையோஅதில இருக்கிற வைரவரையோ , பிள்ளையாரையோ, மாதா கோவிலையோ சேத்துத் தான் பேர் வைக்கிறது. 

எங்கடை ஒரு ஊரில ஒரு சந்தி இல்லை ஒராயிரம் சந்தி. ஐஞ்சு சந்தி, நாச்சந்தி , முச்சந்தி, கெற்றப்போல் சந்தி எண்டு ஒவ்வொரு சந்திக்கெண்டு ஒரு காரணப் பேரும், இடுகுறிப் பேரும் அதுக்கெண்டு ஒரு சிறப்பும் இருக்கும்.  

அதோட எங்கேயும் சண்டை நடக்கேக்கயும் சொல்லுவாங்கள் இது ஆரியகுளம் சந்தி குறூப் , கொட்டடிச் சந்தி குறூப் , கொய்யாத்தோட்ட குறூப், ஐயனார் கோவிலடி குறூப், இது பிரவுண் ரோட் குறூப் எண்டு. 

பஸ்ஸில போகேக்க பெரும்பாலும் சந்தீன்டை பேரைச் சொல்லித் தான் இறங்கிறது. ஊருக்குள்ள நிறையச் சந்தி இருந்தாலும் main bus route இல ஊரின்டை பேரோட ஒரு சந்தி இருக்கும். கொக்குவில் , கோண்டாவில் , இணுவில், உடுவில் எண்டு வாறது townஇல இருந்து போகேக்க ஊர் தொடங்கிற சந்தியா இருக்கும். 

Town க்கு போற பஸ் எல்லாம் KKS ரோட்டாலேம் , பருத்தித்துறை ரோட்டாலேம் A 9 ஆல வந்து ஆஸ்பத்திரீ ரோட்டாலேம் வர ஒரு பஸ் மட்டும் இந்த சந்தியால போறது , அது காரை நகரில இருந்து வாற 782 பஸ் . ஸ்ரான்லி றோட்டால வந்து வெலிங்டன் சந்தீல திரும்பி town க்கு போகும்.  

அதே போல மணிக்கூட்டுக் கோபுரத்தில இருந்து வாற றோட் தான் மணிக்கூட்டு கோபுர வீதி. அது முந்தி ஆசுபத்திரிக்கு குறுக்கால வந்து , ஸ்ரான்லி ரோட் , நாவலர் ரோட் எல்லாம் தாண்டி பிறவுண் ரோட் வரைக்கும் வந்ததாம் . முந்தி இருந்த GA Lionel Fernando தான் குறுக்கால ஆசுபத்திரி கட்ட விட்டவர் அதின்டை எச்சம் தான் இப்ப இருக்கிற மணிக்கூட்டு ஒழுங்கை. அதே போல சந்திக்கும் பழைய பேர் ஏதும் இருந்திச்சுதோ தெரியாது இப்ப அதுக்குப் பேர் வெலிங்டன் சந்தி.

Town மாதிரி பழைய வெலிங்டன் சந்தீன்டை நாலு மூலையிலும் கட்டடங்கள். வெலிங்டன் தியட்டர் ஒரு மூலை , முனீஸ்வரா கபேயும் கடைச்சல் பட்டறையும் மற்ற மூலை , லிங்கம் கிறீம் கவுஸ் தெற்கை பாத்த வாசலோட , பிளவுஸில மட்டும் விட்ட அம்பை பெடியளின்டை காச்சட்டை பொக்கற்றிலும் விட்ட விக்ரம் டெயிலேர்ஸ் அதுக்குப் பக்கத்தில, எதிர கண்ணாடி விக்கிற S.M. Fernando , அதையும் தாண்டிப் போக Tower கூல் பார் எண்டு இருந்தது.

85 /86 கோட்டையில இருந்து செல்லுகளும் பொம்பரும் நியூ மாக்கட்டையே இல்லாமல் பண்ண , செல்லுக்கெட்டிய தூரம் தாண்டி சனங்கள் பிழங்கத்தொடங்கேக்க தான் இந்த மாற்றம் வந்தது. வருசம் பதினாறு குஸ்புவைப் பாக்க கள்ளமா ஒதுங்கின அதே வெலிங்டன் தியட்டர்ச் சந்தி . தொண்ணூறில CCA , science hall , science academy , new- master எண்டு கல்விச் சந்தியாகி மாறினதும் இதே சந்தி தான். மனிசிக்குப் பின்னால திரியேக்க வெலிங்டன் சந்தீல “ அவள் வருவாளா” எண்டு பாத்து கொண்டிருந்தது லிங்கம் கடை மூலையில . தொண்ணூறுகளில யாழ்ப்பாணத்தின் tuition கொட்டில் எல்லாம் இருந்தது இந்த சந்தி தான். 

இதைப் போல ஒவ்வொரு சந்திக்கும் ஓராயிரம் கதை இருக்கும். அது ரோட் சந்திக்கிறதால மட்டுமில்லை ஆக்களும் சந்திக்கிறதால தான் சந்தி எண்டு எழுவாயும் பயனிலையும் சேந்ததா இருக்கு. 

இப்ப இருக்கிற ஊருக்கும் இருக்காத ரோடுக்கும் board எல்லாம் போட்டிருந்தாலும் எங்கயாவது போறதெண்டால் ஒரு சந்தீல நிப்பாட்டிக் “வட்டுக்கோட்டைக்கு வழி என்ன” எண்டு கேக்கிறாக்களுக்கு விடை “ துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” எண்டு வழி சொல்லிறாக்களும் இருக்கினம் ஊரில. 

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு

அது ஏன் துட்டுக்கு  இரண்டு கொட்டைப் பாக்கு என்று புரியவில்லை. துட்டுக்கு எட்டுக் கொட்டைப் பாக்கு என்றால் சொல்வதற்கு நன்றாக இருக்குமே?

கோபிசங்கரும் தொழிலை வைத்துத்தான் தன்னை அடையாளப் படுத்துகிறார்.

வழக்கம் போல் நன்றாக இருக்கிறது👍

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஏமாற்றுவதை எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம் .......!  😂
    • தமிழ்வின்னுக்கு திரவத்தை அளக்கும் அலகும் மீற்றரில் இருக்கின்றது. மில்லி லீற்றருக்கும் மில்லி மீற்றருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் இணையம் நடத்தினால் இப்படித் தான் நிகழும்.  
    • உங்கள் இருவரதும் கருத்துக்களைப் பார்த்தேன். இது வரை நான் எழுதிய எதையும் "ஜஸ்ரின் எழுதியிருக்கிறார்" என்று தான் பார்த்திருக்கிறீர்கள், என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கவில்லை என்று புரிகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில், என் கருத்துகளின் பயனின்மை - futility புரிகிறது, மேலும் எழுத வேண்டியதன் அவசியமின்மையும் புரிகிறது. இன்னும் ஒரு மாதத்தில் எனக்கு ஐம்பது தாண்டுகிறது (@பெருமாள் நோட் பண்ணிக் கொள்ளுங்கள்😎). ஐம்பது தாண்டினால், பெரும்பாலும் ஆண்கள், ஒரு "நேரக்கணிப்பு குண்டு" போல எந்த நேரமும் return ticket இல் போகலாம். நான் இப்படியே எழுதிக் கொண்டிருந்தால் இப்ப சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் கிடைக்கும் eulogy போல எனக்கும் சின்ன ஸ்கேலில் கிடைக்கும் என நம்புகிறேன். எனவே, "எனக்கேன் வம்பு" என்கிற மன நிலை கொஞ்சம் என்னிலும் ஏற்பட்டு விட்டது. இன்னொரு பக்கம் "எக்கேடாவது கெட்டுப் போங்கள்" என்ற மனநிலையும் உருவாகி விட்டது. இந்தக் காரணங்களால், தமிழர் அரசியல் திரிகளில்  இனி மௌனமாக இருக்க முடிவு செய்திருக்கிறேன். நமக்கு அடைக்கலமாக இருப்பது முடிவில்லாத விஞ்ஞானமும், அறிவியல் தொழில் நுட்பமும்😂.  
    • நூல் என்ன? ஆசாமி கயிறு விட்டு கடலை போடக்க கூடிய ஆளெண்டு இன்னுமா தெரியேலை. “மச்சான் இதை ஒருக்கால் பிடிடா”  எண்டு ஆலங்குழைக்கட்டை பக்கத்திலை இருக்கிறவனிற்றை நைஸா குடுத்திட்டு அண்ணாச்சி சுழட்ட ஆரம்பிச்சிருப்பார். சரோஜாதேவி எப்பிடி ‘மேக்கப்’ போடுறா எண்டு உன்னிப்பா கவனிக்கிற ஆள், லேசுப்பட்டவராக இருக்க வாய்ப்பில்லை
    • காக்கா காக்கா மை கொண்டா..........!   😍
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.