Jump to content

தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன்

spacer.png

கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில், புங்கங்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் ஒரு பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது. தமிழ் நாட்டின் விருது நகர் ரோட்டறிக் கழகத்தின் இளையோருக்கான தலைமைத்துவ விருதுகளை வழங்கும் நிகழ்வு அது. (RYLA-Rotary Youth Leadership Awards) கனடாவை மையமாகக் கொண்டியங்கும்”ஈ-குருவி-புதிய வெளிச்சம்”அமைப்பு தமிழகத்தின் இதயம் நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் அனுசரணையோடு இளம் தொழில் முனைவோருக்கான வதிவிடக் கருத்தரங்கு ஓன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது. இளம் தொழில் முனைவோரின் நம்பிக்கைகளை, தொழில் திறன்களைக் கட்டியெழுப்புவது அக்கருத்தரங்கின் நோக்கமாகும். அதில் பங்குபற்றிய இளையோர் பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றினார்கள். அவர்கள் ஆற்றிய உரைகளின் சாராம்சம் கால முக்கியத்துவம் உடையது; அரசியல் முக்கியத்துவம் உடையது;  நம்பிக்கையூட்டுவது.

அதில் ஓர் இளைஞர் பின்வரும் பொருள்பட பேசினார் “நான் யார்? இந்த நாட்டில் என்னுடைய பங்கு என்ன? என்ற கேள்வி என்னிடம் இருந்தது… இந்த வதிவிட கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் அதற்குரிய பதிலைப் பெற்றுக் கொண்டேன் ” என்று. ஏனைய பெரும்பாலான இளையோர் தாங்கள் எந்தெந்த துறைகளில் தொழில் முனைவோராக எழுச்சி பெறுகிறார்கள் என்று பேசினார்கள். விஸ்வமடுவிலிருந்து வந்த ஒரு இளையவர் தான் எப்படி தனது சொந்த காயங்களில் இருந்து மீண்டு எழுந்தார் என்பதனைப் பேசினார். போரில் முகம் சிதைந்து கிடந்த அவர் எப்படி ஒரு தொழில் முனைவோராக வெற்றி பெற்றார் என்பதனை விளங்கப்படுத்தினார். அந்த இளையோரின் குரல்களிலும் வார்த்தைகளிலும் நம்பிக்கை பிரகாசித்தது. தமது தாய் நிலத்தில் தாம் தமது தொழில்களை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

அந்த நம்பிக்கைதான் இங்கு இன்று இந்த கட்டுரையின் குவிமையம். இந்த நாட்டில் தன்னுடைய வகிபாகம் என்ன? தான் யார்? என்பதைக் குறித்து ஒரு தொகுதி இளையோர் சிந்திக்கிறார்கள். இன்னொரு தொகுதி அதன் வேர்களை அறுத்துக் கொண்டு புலம்பெயர்ந்து வருகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு கனேடிய விசா வழங்கும் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். ஒர் அழகிய இளம் பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டைக் கையளிப்பதற்கு வந்திருந்தார். அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை அங்கு கையெழுத்து விட்டு திரும்பி வருகையில் கவனித்தேன். அவருடைய கண்கள் அசாதாரணமாக மகிழ்ச்சியால் பூரித்து போயிருந்தன. கிடைத்தற்கரிய ஒரு வேறு கிடைத்ததுபோல அவர் நடந்து போனார். அந்த அலுவலகம் அமைந்திருக்கும் சிறிய வீதி காலி வீதியில் போய் ஏறும் சந்தியில் அவருடைய தாயும் சகோதரரும் அவருக்காக காத்து நின்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர் ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து விட்டு வெற்றியின் வாசலில் நிற்பவர் போல நடந்து கொண்டார். இது முதலாவது அவதானிப்பு.

இரண்டாவது அவதானிப்பு, யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தரப் பிரிவில் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் கற்கும் பிள்ளைகளுக்கான தனியார் கல்வி நிறுவனம் ஒன்று அமைந்திருக்கும் கன்னாதிட்டி வீதியில் ஒரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் பின்வருமாறு உண்டு ” be a Canadian”- “கனேடியனாக இரு: புதிய வாழ்க்கையின் முதல்படி”

கனடாவுக்கு போவது; லண்டனுக்குப் போவது; தாயகத்தை விட்டுப் போவது என்பது ஒரு பகுதி இளையோர் மத்தியில் தணியாத தாகமாக மாறி வருகிறது. அதே சமூகத்தில் இன்னொரு பகுதி இளையோர் இந்த நாட்டில் “என்னுடைய வகிபாகம் இது; நான் எனது தொழிலையும் நாட்டையும் ஒருசேரக் கட்டி எழுப்ப போகிறேன்” என்று நம்பிக்கையோடு மேலெழுகிறார்கள்.

இக்கட்டுரை புலப்பெயர்ச்சிக்கு எதிரானது அல்ல. புலம்பெயர்பவர்களின் பயங்களை; கவலைகளை; எதிர்காலத்தைக் குறித்த கனவுகளை இக்கட்டுரை அவமதிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே நிலம் சிறுத்து வருகிறது. அதாவது தாயகம் சிறுத்து வருகிறது. இப்பொழுது சனமும் சிறுக்க தொடங்கிவிட்டது. இது தொடர்பாக திருத்தமான புள்ளிவிபரங்கள் எந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. கனடா அதன் விசிட் விசா விதிகளில் தளர்வுகளை ஏற்படுத்திய பின் அண்மை ஆண்டுகளில் இதுவரை இருப்பதாயிரத்துக்கும் குறையாதவர்கள்  நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து விட்டதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு புலம்பெயர்வதற்காகக் காத்திருக்கும் இளையவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக ஒரு மனநல மருத்துவர் அண்மையில் தெரிவித்தார். ”இந்த நாட்டில், இந்த சமூகத்தில் நான் அதிககாலம் இருக்கப் போவதில்லை. இனி இது எனது நாடுமல்ல எனது சமூகமும் அல்ல. எனவே விசா கிடைப்பதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நான் எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகலாம்” என்று சிந்திக்கும் ஒரு பகுதி இளையவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை அந்த மருத்துவர் சுட்டிக்காட்டினார்.

ஒருபுறம் நகர்ப்புறங்களில் அன்றாட கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை. பல வாகனம் திருத்தும் கடைகளில் உதவிக்கு ஆட்கள் இல்லை. மேசன் வேலை , வயரிங் வேலை, பெயிண்டிங் வேலை போன்ற வேலைகளுக்கும் உதவி ஆட்கள் கிடைப்பது அரிது. அன்றாடச் சம்பளத்துக்கு வருபவர்கள் கைபேசிகளை கொண்டு வருகிறார்கள். வேலை பாதி; கைபேசி பாதி.

இன்னொருபுறம் வேலையற்ற பட்டதாரிகள் வட-கிழக்கில் மட்டும் கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கும் குறையாதவர்கள் வேலை வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கிறார்கள். தமது கல்வித் தகமையைவிடக் கீழான உத்தியோகங்களுக்குப் போகிறார்கள்.

ஒருபுறம் கூலி வேலைகளுக்கு ஆட்கள் இல்லை. இன்னொருபுறம் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. இப்படிப்பட்டதோர் சமூகத்தில் இருந்து படித்தவர்களும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,அதே சமூகத்தில்  ஒரு சிறு தொகுதி தொழில் முனைவோர் அதுவும் இளையோர் நம்பிக்கையோடு மேடை ஏறுகிறார்கள்.

தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது என்பது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். அந்த அடிப்படையில் பார்த்தால் அந்த வதிவிடக் கருத்தரங்கு கவனிப்புக்குரியது. அதில் மற்றொரு செய்தியும் உண்டு

அந்த கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெரு முதலாளியுந்தான். வளவாளர்களாக வந்தவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  தமிழகத்தின் விருதுநகர் ரோட்டறி கழகத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அது முன்னெடுக்கப்பட்டது.

அரசற்ற ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய தேச நிர்மாணத்தின் பங்காளிகள் என்று பார்க்கும்பொழுது புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் தமிழகத்தையும் குறிப்பிட்டுச் செல்லலாம். நிதிப் பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது ஈழத் தமிழர்களின் ரத்தமும் சதையுமாக இருக்கிறது.

அது தாயக அரசியலில் தொலை இயக்கி வேலைகளைச் செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு; தாயகத்தோடு கலந்து பேசாமல் பிரகடனங்களை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு;எனினும்,தேசத்தைக் கட்டியெழுப்பும் செய்முறையைப் பொறுத்தவரை அதில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் முதன்மைப் பங்காளி. அடுத்தது தமிழகம்.

நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது தமிழகத்தின் திரைப்படத் தொழிற்துறைக்குள் செல்வாக்கு மிக்க முதலீட்டாளர்களாக வளர்ச்சி பெற்று வருகிறது. அது பெருமளவுக்கு சீரியஸான கலை முதலீடு அல்ல. இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுக் காயங்களையும் கூட்டு மனோநிலையையும் பிரதிபலிக்கும் கலை முயற்சியும் அல்ல. அவை பெருமளவுக்கு ஜனரஞ்சகமானவை. ஆனால் கோடிக் கணக்கான காசு புரளும் முதலீடுகள்.

அதேசமயம்,சினிமா தவிர தமிழகத்தின் ஏனைய தொழில்துறைகளில் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் முதலீடுகள் ஒப்பீட்டளவில் குறைவு. இது தொடர்பாக தேசத்தை கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து ஒரு முதலீட்டு திட்டம் வகுக்கப்படவில்லை.

தமிழகம் புவியியல்ரீதியாகவும் இனரீதியாகவும் மொழிரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஈழத்தமிழர்களுக்கு மிக அருகில் காணப்படுகின்றது. இறுதிக்கட்டப் போரில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்களின் விளைவாக இந்தப் பிணைப்புகள் அதிகம் சோதனைக்கு உள்ளாகியுள்ளன. மீனவர்கள் விவகாரம் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய பெரு முதலாளிகளால் தாங்கள் விழுங்கப்பட்டு விடுவோம் என்ற ஈழத்தமிழ் வணிகர்களின் அச்சம் போன்றவையும் அந்த உறவுகளை மேலும் சோதனைக்கு உள்ளாக்குகின்றன.

தமிழகம் இப்பொழுது இந்தியாவின் மிக வேகமாக முன்னேறும் மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அது இரண்டாவதாக பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட மாநிலமாகக் காணப்படுகின்றது.

இப்படிப்பட்ட புதிய வளர்ச்சிகளின் பின்னணியில்,நிதிப் பலம்மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து ஓர் அமைப்பும் இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த தொழிற்சார் வளவாளர்களும் இணைந்து இளம் தொழில் முனைவோருக்கான ஒரு வதிவிடக் கருத்தரங்கை நடாத்தியிருக்கின்றனர்.

“இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று பாடிய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து இளையவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், அதே இளையவர்கள் மத்தியில் தமது சொந்தத் திறமைகளின் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப இது போன்ற கருத்தரங்குகள் உதவும். இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்பு ஒன்றின் தன்னார்வ முயற்சிகளும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தாகமும், தமிழகத்தின் துறைசார் நிபுணத்துவமும் ஒன்றிணையும் போழுது, அது புதிய நொதிப்புகளை ஏற்படுத்த முடியும்.

தமிழ் நோக்கு நிலையில் இருந்து தாயகமும் டயஸ்பொறாவும் தமிழகமும் இணைந்து வளங்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதும் கூட்டு முதலீடுகளைக் குறித்துச் சிந்திப்பதும் பொருத்தமானவை. தாயகத்தில் உள்ள தொழில் முனைவோரைப் பொறுத்தவரை ஊரில் உழைக்கலாம்,சொந்த காலில் நிற்கலாம் என்ற நம்பிக்கை அதிகரித்தால், வேரை அறுத்துக் கொண்டு தாய் நிலத்தை விட்டு வெளியேறும் நிலைமைகள் தோன்றாது.தாய் நிலத்தில் தன்னுடைய வகிபாகம் என்ன என்ற தெளிவு இருந்தால், இளைய தலைமுறை நாட்டை விட்டு வெளியேற விரும்பாது. புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளும் தமிழக முதலாளிகளும் தாயகத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதை கொழும்பின் நோக்கு நிலையில் இருந்து செய்வதை விடவும் தாயகம்- தமிழகம்- டயஸ்பெரா ஆகிய முக்கூட்டு நோக்கு நிலையில் இருந்து செய்வது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒப்பீட்டுளவில் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பாக, தாயகத்தைக் கட்டியெழுப்புவது என்ற நோக்கு நிலையில் அது அதிகம் பொருத்தமானதும்கூட.

 

https://www.nillanthan.com/6803/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

அவசியமான தேவையான கட்டுரை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் உள்ளவை அனைத்தும் நிதர்சனம்.நான் நேரில் காண்பவை.ஆனால் கட்டுரையாளருக்கு அர்ச்சனை நிச்சயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனை செய்பவர்களுக்கு தொழில்களை கட்டியெழுப்புவது என்பது  கண்ணில் காட்ட கூடாது.  இலங்கை தமிழ் பிரதேசங்கள்  கள்ளக்குறிச்சியாக மாறினாலும் கவலை இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி

6 hours ago, சுவைப்பிரியன் said:

கட்டுரையில் உள்ளவை அனைத்தும் நிதர்சனம்.நான் நேரில் காண்பவை.ஆனால் கட்டுரையாளருக்கு அர்ச்சனை நிச்சயம்.

அர்ச்சனை செய்கின்றவர்கள் அப்படியே செய்து கொண்டு தான் இருப்பார்கள். ஈற்றில் அவர்களை எவரும் ஐந்து சதத்துக்கும் கணக்கெடுக்காமல் விட்டு விட ஒரு ஓரத்தில் இருந்து புலம்பி புலம்பி பின் ஓய்ந்து விடுவார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God ! I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
    • 26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை அவரின் ஆதரவாளர்கள் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திசாநாயக்கவுக்கு பதிலாக பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களிப்பதற்கு இந்த சமூகங்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள் என்று வாதிடும் அவர்கள் அரசியல் யதார்த்தங்களை விளங்கிக்கொள்ளாதவர்களாக "அறிவிலிகள்" என்று அந்த மக்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேவேளை, பிரேமதாசவையும் விக்கிரமசிங்கவையும் ஆதரித்த தாராளவாத முகாமைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெற்கைச் சேர்ந்த இரு சிங்கள பௌத்த பேரினவாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீரவுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரான பாக்கியசெல்வம்  அரியநேத்திரனை  ஒப்பிட்டிருப்பதுடன் மூவரும் ஒரே விதமான கோட்பாடுகளை கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.   மேலும், பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்ச் சமூகம் வழங்கிய ஆதரவு அவர்கள் பெருமளவுக்கு பொதுமைப்பட்ட, தேசிய அரசியலுக்கு சாதகமாக தமிழ் அடையாள அரசியலை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அந்த தாராளவாத போக்குடைய முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். முதல் கண்ணோட்டத்தில், இந்த இரு வாதங்களும்  வேறுபட்டவையாக தோன்றலாம். ஆனால், உன்னிப்பாக அவதானித்தால் அவை ஒரே மாதிரியானவை. இருப்பதையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இரு கருத்துக் கோணங்களுமே இந்த சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான கலாசாரம், நடத்தை ஒழுக்கங்களையும் அடையாள வேறுபாடுகளையும் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறுகின்றன. இந்த குழுக்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாசைகள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இப்போது இல்லை என்று கருதுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டுவிட்டால் சமத்துவமும் இணக்கநிலையும் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். அனால், இந்த கருத்தியல் நோக்கு யதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இலங்கை தனித்துவமான அடையாளங்களையும் முன்னுரிமைகளையும் கொண்ட பிராந்தியங்களாக பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவு இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையாகத் தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வேறுபட்ட ஒரு நிலப் பிராந்தியம், வரலாறு, சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட அடையாள உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.  நாடு சுதந்திரமடைந்த பிறகு பல தசாப்தங்களாக அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டமை, 30 வருடகால உள்நாட்டுப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகியவை காரணமாகவும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறத் தவறியமை காரணமாகவும் இடைவெளி விரிவடைந்துவிட்டது. இந்த காரணிகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மேலும் தூர விலக்குகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்த அரசியல் பிரிவுகளுடன் தொடர்ச்சியாக அணிசேர்ந்து வந்திருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை  அவர்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.  ஆனால், இந்த தேர்தலில்  பிரதான வேட்பாளர்களில் ஒரு ராஜபக்ச இல்லாத நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மீது கவனம் குவிந்தது. குறிப்பாக, போரின் இறுதிக்கட்டங்களில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டிருந்தது. "எந்த வழியில் என்றாலும்" போருக்கு முடிவைக் கட்டிவிடுமாறு மகிந்த ராஜபக்சவை தாங்களே வலியுறுத்திக் கேட்டதாக  ஜே.வி.பி.யினர் தேர்தல் பிரசாரங்களின்போது பெருமை பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மாண்டார்கள். வடக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை அந்த படுகொலைகளில் இழந்திருக்கிறார் என்ற உண்மை நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை தெளிவுபடுத்தி நிற்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு கட்சி என்று அவர்கள் கருதியது இயல்பானதேயாகும். தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லால்காந்த போரில் தனது கட்சியின் ஈடுபாடு குறித்து பெருமையாகப் பேசினார்.  மேலும், கறைபடிந்த சிங்கள பௌத்த பேரினவாத வரலாறு ஒன்றைக் கொண்ட ஜே.வி.பி. ஒரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கல் வடிவத்தைக் கூட கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. வடக்கு பிராந்தியத்தில் உள்ள வர்த்தகர் குழாத்துடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு சில முயற்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்ட அதேவேளை தமிழ் மக்களுடனான அல்லது  ஏனைய சிறுபான்மைக் குழுக்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு எதையும் செய்யவில்லை. அதனால் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதை தமிழர்கள் தவிர்த்துக்கொண்டது முற்றிலும் நியாயமானதே. அதேபோன்று தமிழர்கள் இப்போது தேசிய இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தமிழ் வேட்பாளரை நிராகரித்து பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தார்கள் என்ற தாராளவாத போக்குடைய முகாமின் வாதமும் தவறானது. சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றையும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தொடர்பையும் கொண்ட ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கு ஒரே வழி என்று நம்பியதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அந்த இருவருக்கும் வாக்களித்திருப்பார்கள் எனலாம். (கட்டுரையாளர் சமூக - அரசியல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்) https://www.virakesari.lk/article/194830
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.