Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, ரசோதரன் said:

அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்து ஆரம்பிப்பதில்லை. அவர் ஓரளவு பின்னரேயே கலந்து ஆலோசிக்கப்படுவார். இறுதி முடிவில் அவரின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

ரொனால்ட் றேகன் தன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை முன் வைத்தாரோ அதை தன் ஆட்சியில் செய்து முடித்தார் என நினைக்கின்றேன். இங்கே பென்டகன் தவறி விட்டதா? அதே போல் டொனாட் ரம்ப் அவர்களும் அமெரிக்க உளவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அடிபணியவில்லை. தான் நினைத்ததை சாதித்து முடிக்கா விட்டாலும் அதை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் நிறைவேற்றுவேன் என்பது போல் நடக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

அடி செருப்பால அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣

அமெரிக்க நாட்டில் எவர் சனாதிபதியாக வந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் செயற்பட முடியும் என்றால்......?

 KGB  சட்ட திட்டங்களுக்கமைய புட்டினும் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்கின்றார் என எடுத்துக்கொள்ளலாமா?

அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  பென்டகனின் ஆலோசனை முக்கியம் என்றால்...
புட்டினும் அவர் தம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு  ஆலோசனைகளின்  முன்னெடுப்பிலேயே பல நடவடிக்கைகளை எடுக்கின்றார் என முடிக்கலாமா?

நான் உங்கள் நாட்டில் தான்  இருக்கிறேன்    சொன்னது பிழையுமிருக்கலாம். உங்கள் உயிர் நண்பன்  அமெரிக்காவில்  மாநிலம் மாநிலமாகச் சுற்றி திரிகிறார். .....அவரை  ஒருக்கால. கேட்டுப் பாருங்களேன்  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kandiah57 said:

புட்டின். தனி மனித ஆட்சி    அதாவது மன்னர் ஆட்சி    

அண்மையில் ரஷ்யாவில் சர்வதேச மேற்பார்வையின்  ஊடாகத்தானே தேர்தல் நடந்து புட்டின் வெற்றியீட்டினார்??????

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ரொனால்ட் றேகன் தன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை முன் வைத்தாரோ அதை தன் ஆட்சியில் செய்து முடித்தார் என நினைக்கின்றேன். இங்கே பென்டகன் தவறி விட்டதா? அதே போல் டொனாட் ரம்ப் அவர்களும் அமெரிக்க உளவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அடிபணியவில்லை. தான் நினைத்ததை சாதித்து முடிக்கா விட்டாலும் அதை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் நிறைவேற்றுவேன் என்பது போல் நடக்கின்றார்.

றீகன் அவர்களின் வரலாறு எனக்கு தெரியவில்லை, ஆனால் அமெரிக்கர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையையும் தெரியும். அவரின் திட்டங்களும், கனவுகளும், மற்றைய அதிகார மையங்களின் திட்டங்களுடன் ஒத்துப் போயிருக்கக் கூடும்.

உண்மையில் ட்ரம்ப் உருப்படியாக, அவர் பெயர் சொல்லும் படி என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அவரில் பட்ட காற்றுக் கூட கலிஃபோர்னியாப் பக்கம் வராது. சில சென்டிமெண்டுகள், எமோஷன்ஸ் என்பதை விட, அவரின் சாதனைகள் என்று ஏதாவது மிஞ்சுமா என்று தெரிய வில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அண்மையில் ரஷ்யாவில் சர்வதேச மேற்பார்வையின்  ஊடாகத்தானே தேர்தல் நடந்து புட்டின் வெற்றியீட்டினார்??????

புட்டின்.  தான் பதவியில் தொடரந்து இருக்க வேண்டும் என்பதற்குக்ககா. அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்தவர்  ....இது எனது கருத்துகள் மட்டுமே நீங்கள் எற்க வேண்டும் என்பதில்லை    உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்’   பதவியை அனுபவிப்பது யாரோ    நாங்கள் ஏன் அடிபடவேண்டும் வணக்கம் நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

றீகன் அவர்களின் வரலாறு எனக்கு தெரியவில்லை, ஆனால் அமெரிக்கர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையையும் தெரியும். அவரின் திட்டங்களும், கனவுகளும், மற்றைய அதிகார மையங்களின் திட்டங்களுடன் ஒத்துப் போயிருக்கக்

இவர் ஒரு நடிகர்   நன்றாக உழைத்தவர்.  கிட்டத்தட்ட எம் ஜி ஆர். போல நல்ல மக்கள் ஆதரவு இருந்தது       இவர் சுட்டா.  கொல்லப்பட்டார் ??? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, ரசோதரன் said:

உண்மையில் ட்ரம்ப் உருப்படியாக, அவர் பெயர் சொல்லும் படி என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அவரில் பட்ட காற்றுக் கூட கலிஃபோர்னியாப் பக்கம் வராது. சில சென்டிமெண்டுகள், எமோஷன்ஸ் என்பதை விட, அவரின் சாதனைகள் என்று ஏதாவது மிஞ்சுமா என்று தெரிய வில்லை.

உள் அரசியல் எனக்கு தெரியாது.அதை உங்களை போன்றவர்கள் தான் சொல்லி தெரிய வேண்டும். நான் ஊடக தகவல் மற்றும் கேள்வி ஞானங்களை வைத்தே அமெரிக்க அரசியல் பற்றி எழுதுகின்றேன். அது நூறு வீதம் பிழையாகவும் இருக்கும்.
ஆனால் ட்ரம்பின் வெளிநாட்டு அரசியல் பற்றி எனக்கு நன்றாகவே தெரிகின்றது. எப்படியென்றால் ட்ரம்பின் கடந்த நான்கு வருட ஆட்சி தெளிவாகவே தெரிகின்றது.

சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

இவர் ஒரு நடிகர்   நன்றாக உழைத்தவர்.  கிட்டத்தட்ட எம் ஜி ஆர். போல நல்ல மக்கள் ஆதரவு இருந்தது       இவர் சுட்டா.  கொல்லப்பட்டார் ??? 

இல்லை, இவர் சுடப்பட்டு கொல்லப்படவில்லை. இயற்கையாகவே இறந்தார், 2004ம் ஆண்டில்.

ஆனால் 1981இல் ஒரு தடவை சுடப்பட்டு உயிர் பிழைத்தார், எம்ஜிஆர் போன்றே. அதன் பின் அவர் மக்களால் மிகவும் விரும்பப்பட்டார் என்று சொல்கின்றனர் இங்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உள் அரசியல் எனக்கு தெரியாது.அதை உங்களை போன்றவர்கள் தான் சொல்லி தெரிய வேண்டும். நான் ஊடக தகவல் மற்றும் கேள்வி ஞானங்களை வைத்தே அமெரிக்க அரசியல் பற்றி எழுதுகின்றேன். அது நூறு வீதம் பிழையாகவும் இருக்கும்.
ஆனால் ட்ரம்பின் வெளிநாட்டு அரசியல் பற்றி எனக்கு நன்றாகவே தெரிகின்றது. எப்படியென்றால் ட்ரம்பின் கடந்த நான்கு வருட ஆட்சி தெளிவாகவே தெரிகின்றது.

சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.

இதிலென்ன சிரமம்..... நேரம் கிடைக்கும் போது இங்கு களத்தில் எழுதுவதும், பொழுது போக்காக அலட்டுவதும் எங்களின் வழமை தானே........👍.

இங்கு மாநிலங்கள் அதிக சுயாட்சி உடையவை. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு போன்று. அதிலும் சில பெரிய மாநிலங்கள், உதாரணம்: கலிஃபோர்னியா, டெக்சாஸ், நியூயோர்க், ஒரு குட்டி வல்லரசு போன்றவை. மாநில அரசினதும், மக்களினதும் ஆதரவில்லாமல் பெரிதாக எவராலும் எதையும் அந்த அந்த மாநிலங்களில் மாற்றவோ அல்லது புகுத்தவோ முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, ரசோதரன் said:

39825198-pd-5-f-responsive169-w1900.webp

பிளான் B பற்றி இங்கே சுடச்சுட விவாதிக்கப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ரொனால்ட் றேகன்

4 hours ago, Kandiah57 said:

இவர் ஒரு நடிகர்   நன்றாக உழைத்தவர்.  கிட்டத்தட்ட எம் ஜி ஆர். போல நல்ல மக்கள் ஆதரவு இருந்தது       இவர் சுட்டா.  கொல்லப்பட்டார் ??? 

றொனால்ட் றீகன் தான் சோவியத் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதனால் கட்சிகளைக் கடந்து அவரை எல்லோரும் விரும்பினர். 

கந்தையா சொன்னது போல 1981ம் ஆண்டு ஜனாதிபதியாக இருக்கும் போது சுடப்பட்டார்.ஆனாலும் பலத்த காயங்களிலிருந்து தப்பிவிட்டார்.2004 ம் ஆண்டு தான் காலமானார்.

சோவியத் ஒன்றியம் கவிழும் போது கோர்பச்சேவ் என்பவர் ஜனாதிபதியாக இருந்து பதவி விலக வொட்கா மன்னனாக சொல்லப்பட்ட பொறிஸ் ஜெல்சன் பதவியேற்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎

ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். உலகம் முழுவதும் இனவாதிகளும் வலதுசாரிகளும் அதிகாரத்துக்கு வருவதை விரும்பும் அதே வேளை இலங்கையில் மட்டும் சமத்துவமான அரசியல் வேண்டுமாம். 

  • கருத்துக்கள உறவுகள்

வரவர அமரிக்கா அரசியல் நகைச்சுவை படம் போல மாநிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். உலகம் முழுவதும் இனவாதிகளும் வலதுசாரிகளும் அதிகாரத்துக்கு வருவதை விரும்பும் அதே வேளை இலங்கையில் மட்டும் சமத்துவமான அரசியல் வேண்டுமாம். 

இலங்கையை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். ஆனால் தங்கள் சொந்த நலன்களில் அசகாய சூரர்கள். இலங்கையை விட்டு வெளியேறிய அவர்கள்  தங்கள் பாதுகாப்பான வாழ்க்கையை எங்கே அமைத்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பாதுகாப்பான வாழ்க்கையை எ

அப்படி சொல்ல முடியாது இங்கு தோட்டங்களில் எல்லாம்   வீடுகள் மற்றும் பெரிய பெரிய கட்டிடம்கள். கட்டியபடியே இருக்கிறார்கள்      தோட்டம் என்பது அருகிக்கொண்டு வருகிறது    எல்லாம் இறக்குமதி,.....இந்த இறக்குமதி நின்றால்   சாப்பிட வழியில்லை    ஒரு போர் வந்தால்   சம்பல் கூட வைத்து சாப்பிட முடியாது   இது ஒரு உறுதியான வாழ்க்கை இல்லை   உலகம் அமைதியாக இருந்தால் மட்டுமே பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

39825198-pd-5-f-responsive169-w1900.webp

பிளான் B பற்றி இங்கே சுடச்சுட விவாதிக்கப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

அதிபர் ஜோ பைடன் - ட்ரம்ப் விவாதம் ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு அதிர்ச்சியாகவே முடிந்து விட்டது. ஜோ பைடனுக்கு இப்பொழுதே 81 வயது. அது அப்படியே எல்லா வகைகளிலும் வெளிப்படுகின்றது, தெரிகின்றது. 

அவரால் முடியாமல் இப்பவோ, எப்பவோ போட்டியிலிருந்தோ அல்லது பதவியிலிருந்தோ விலகினால்,  அடுத்தது யார் என்பது ஒரு பெரிய விடயம் இங்கே.

கமலா ஹாரிஸ் தான் முறையான தெரிவு. ஆனால் அவர் தான் சரியான தெரிவு என்றில்லை. அவர் உட்பட ஏழு பேர்களை விவாதிக்கின்றார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். உலகம் முழுவதும் இனவாதிகளும் வலதுசாரிகளும் அதிகாரத்துக்கு வருவதை விரும்பும் அதே வேளை இலங்கையில் மட்டும் சமத்துவமான அரசியல் வேண்டுமாம். 

15 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையை விட்டு வெளியேறிய ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். ஆனால் தங்கள் சொந்த நலன்களில் அசகாய சூரர்கள். இலங்கையை விட்டு வெளியேறிய அவர்கள்  தங்கள் பாதுகாப்பான வாழ்க்கையை எங்கே அமைத்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

நான் நினைக்கிறேன் அவர்கள் மிகவும் மோசமான இனவாதிகளினை இலங்கையில் எதிர்கொண்டததால் அவர்களுக்கு இவர்களது இனவாதம் என்பதே தெரியவில்லை போல் இருக்கிறது😁.

மேற்கு நாடுகளில் பெரும்பாலும் சில ஊடகங்கள் இந்த வலது சாரிகளை வளர்த்துவிடுவதில் முனைப்பாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

நான் நினைக்கிறேன் அவர்கள் மிகவும் மோசமான இனவாதிகளினை இலங்கையில் எதிர்கொண்டததால் அவர்களுக்கு இவர்களது இனவாதம் என்பதே தெரியவில்லை போல் இருக்கிறது😁.

உண்மை தான். மோசமான இனவாதத்தை எதிர் கொள்ள பல ஆண்டுகளுக்கு முன்பே, தனமு சக தமிழர்களையே தாழ்ததப்பட்டவர்கள் என்று ஓதுக்கி வைத்தும் இன்றும் அதை கடைப்பிடிக்க துடிக்கும் ஒரு சமுதாயத்துக்கு இங்கு இனவாதம் என்பதே தெரியவில்லை தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

உண்மை தான். மோசமான இனவாதத்தை எதிர் கொள்ள பல ஆண்டுகளுக்கு முன்பே, தனமு சக தமிழர்களையே தாழ்ததப்பட்டவர்கள் என்று ஓதுக்கி வைத்தும் இன்றும் அதை கடைப்பிடிக்க துடிக்கும் ஒரு சமுதாயத்துக்கு இங்கு இனவாதம் என்பதே தெரியவில்லை தான். 😂

நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னதை நீங்கள் சீரியசாக எடுத்துவிட்டீர்கள்😁, இலங்கை ஒரு சிறந்த நாடு என்பது இலங்கையில் பிறந்து வளர்ந்த எனக்கு தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

னமு சக தமிழர்களையே தாழ்ததப்பட்டவர்கள் என்று ஓதுக்கி வைத்தும் இன்றும் அதை கடைப்பிடிக்க துடிக்கும் ஒரு சமுதாயத்துக்கு

இந்த மாற்றம் வரவேண்டும் என பலரும் விரும்பிகிறார்கள், ஆனால் மதத்தின் பெயரால் சில விசமிகள் வரலாற்றில் செய்த தவறுகளை இன்றும் தொடரும் நிலை காணப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2024 at 14:01, Kandiah57 said:

அப்படி சொல்ல முடியாது இங்கு தோட்டங்களில் எல்லாம்   வீடுகள் மற்றும் பெரிய பெரிய கட்டிடம்கள். கட்டியபடியே இருக்கிறார்கள்      தோட்டம் என்பது அருகிக்கொண்டு வருகிறது    எல்லாம் இறக்குமதி,.....இந்த இறக்குமதி நின்றால்   சாப்பிட வழியில்லை    ஒரு போர் வந்தால்   சம்பல் கூட வைத்து சாப்பிட முடியாது   இது ஒரு உறுதியான வாழ்க்கை இல்லை   உலகம் அமைதியாக இருந்தால் மட்டுமே பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும்   🤣

அதற்கு காரணம் உலக சனத்தொகை அதிகரிப்பு.  1924 ம் ஆண்டு உலக சனத்தொகை 1.5 பில்லியன். இன்று 7.9 பில்லியன்.  அதிக மக்கள் வாழ கட்டங்கள் வீடுகள் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

அதற்கு காரணம் உலக சனத்தொகை அதிகரிப்பு.  1924 ம் ஆண்டு உலக சனத்தொகை 1.5 பில்லியன். இன்று 7.9 பில்லியன்.  அதிக மக்கள் வாழ கட்டங்கள் வீடுகள் தேவை.

உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன் 😂

இந்தியாவின் மக்கள் தொகையை பெருக்கி பெருக்கி மக்கள் வாழ்வதற்கு கட்டங்கள், வீடுகள், உணவு , குடிநீர் பற்றா குறையை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய கொள்கை மீது கந்தையா அண்ணாவுக்கு ஒரு கவர்ச்சி உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன் 😂

இந்தியாவின் மக்கள் தொகையை பெருக்கி பெருக்கி மக்கள் வாழ்வதற்கு கட்டங்கள், வீடுகள், உணவு , குடிநீர் பற்றா குறையை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய கொள்கை மீது கந்தையா அண்ணாவுக்கு ஒரு கவர்ச்சி உண்டு.

நீங்கள் நகைசுவையாக இப்படி கூற கந்தையா அண்ணா வந்து நகைசுவையாக மனிதர்களை அழிக்கும்சர்வாதிகரிகளையும் இனவாதிகளிடமும் உங்களுக்குள்ள கவர்சிக்கு காரணம் அவர்கள் மக்கள் தொகையினை குறைப்பதால் உங்களுக்கு அவர்களில் கவர்ச்சி உள்ளது என கூறிவிடுவார்😁.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/6/2024 at 06:40, ஈழப்பிரியன் said:

றொனால்ட் றீகன் தான் சோவியத் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதனால் கட்சிகளைக் கடந்து அவரை எல்லோரும் விரும்பினர். 

சோவியத் சாம்ராஜ்யம் இருந்த போது யாருக்கு என்ன தீங்கு செய்தனர்? இந்த உலகை கட்டியாண்டார்களா அல்லது இந்த உலகை, மூன்றாம் உலக நாடுகளை அடிமை நாடுகளாக வைத்திருந்தார்களா?

ரஷ்யா இன்று தங்கள் கொலனி நாடுகள் என்று  ஏதாவது ஒரு நாட்டை சொல்லி தற்புகழ்சியுடன் பெருமை அடிக்கின்றதா?
 
Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.