Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
தானாக கருத்தரித்த பாம்பு
26 ஜூன் 2024, 07:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆண் பாம்பு என தவறுதலாக கருதப்பட்ட பெண் பாம்பு ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த பெண் பாம்பு கருத்தரிப்பதற்காக ஆண் பாம்புடன் இணை சேரவில்லை.

13 வயதான, ரொனால்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு, பிரிட்டனின் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் அண்மையில் சில குட்டிகளை ஈன்றது.

போவா கன்ஸ்ட்ரிக்டர், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. இது மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது குறித்து பேசிய அந்த கல்லூரியின் விலங்குகள் பராமரிப்பு நிபுணரான பீட் குவின்லான், குட்டிகளை ஈன்றதற்கு முன்பு வரை ரொனால்டோ ஒரு ஆண் பாம்பு என்றே தான் நம்பியதாக கூறினார்.

தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒன்பது ஆண்டுகளில் ரொனால்டோ எந்த ஒரு ஆணுடனும் இணை சேரவில்லை என்கிறார் பீட்.

இணை சேராமல் குட்டியை ஈன்றெடுக்கும் இதுபோன்ற நிகழ்வு பார்தெனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படுகிறது.

 
தானாக கருத்தரித்த பாம்பு

இதுபோன்ற நிகழ்வு பிரேசிலிய போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்புகளில் இதுவரை மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது.

விலங்குகள் வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டியிடம் இருந்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ரொனால்டோவை பெற்றதாக பீட் கூறுகிறார்.

சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் பராமரிப்பாளராக பணியில் சேர்ந்ததாகவும், அப்போது தன்னுடன் இந்த பாம்புகளையும் எடுத்து வந்ததாகவும் அவர் விவரித்தார்.

ரொனால்டோ குட்டியை ஈன்ற நாளன்று பீட் குவின்லான் வேறு இடத்திற்கு சென்றிருந்துள்ளார். அங்கு பயிலும் மாணவர் ஒருவர், ரொனால்டோ இருந்த பெட்டிக்குள் சில பாம்பு குட்டிகள் நெளிவதை அடையாளம் கண்டு, பணியில் இருந்த காவலர்களிடம் கூறியுள்ளார்.

“உடனடியாக நான் கல்லூரிக்கு விரைந்து வந்தேன். அங்கு நான் பார்த்த போது அந்த பெட்டிக்குள் எங்கு பார்த்தாலும் பாம்புக் குட்டிகள் நிறைந்திருந்தன.”

சில விலங்குகளில் இணையில்லாமல் கருத்தரிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.

தானாக கருத்தரித்த பாம்பு

குறிப்பாக முதுகெலும்பில்லாத சில பூச்சிகள், துணையுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடாமலேயே இனப்பெருக்கம் செய்கின்றன.

இதுபோன்ற நடைமுறையின் போது தன்னைப் போலவே மரபணு ரீதியாக ஒத்திருக்கும் சந்ததிகளை அவை உயிரி நகலாக்கம்(க்ளோனிங்) செய்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இணையின் உதவியில்லாமல் ஒரு திருக்கை மீன் தாமாகவே கருத்தரித்தது.

அதேபோல ஆணின் துணையில்லாமல் பெண் முதலை தானாகவே கருத்தரித்த சம்பவம் கோஸ்டாரிகாவில் கடந்த ஆண்டு நடந்தது.

ஆனால் பாம்பு போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளில் இத்தகைய நிகழ்வு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதனுடைய பெயர்தான் காரணம்........கணக்கு வழக்கின்றி கோல்  சீ   குட்டி போடும்........ குட்டிகள் போதும் என்றால் பெயரை மாற்றி விடவும்.......!  😂

  • Haha 1
Posted
1 hour ago, suvy said:

அதனுடைய பெயர்தான் காரணம்........கணக்கு வழக்கின்றி கோல்  சீ   குட்டி போடும்........ குட்டிகள் போதும் என்றால் பெயரை மாற்றி விடவும்.......!  😂

Serena Williams என்று பெயர் மாற்றினால் என்ன நடக்கும்?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கன்னிப்பிறப்பு


கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல் (Parthenogenesis) எனப்படுவது கருக்கட்டல் நிகழாமல் முளையமாக மாறி, வளர்ச்சியடையும் கலவியற்ற இனப்பெருக்க வடிவமாகும். விலங்குகளில் கன்னிப்பிறப்பு என்பது இனப்பெருக்கமற்ற முட்டைக்கருவில் இருந்து முளைய வளருதலையும், இனக்கலப்பிலா படிமுறையையும் குறிக்கும்.


கன்னிப்பிறப்பு இயற்கையாக பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள்,சில குளவி இனங்கள் மற்றும் முதுகெலும்பிகளான சில மீன் இனங்கள்,[ "Female Sharks Can Reproduce Alone, Researchers Find", Washington Post, Wednesday, May 23, 2007; Page A02] நீர்நில வாழ்வன, ஊர்வன மற்றும் மிக அரிதாகச் சில பறவைகளில் காணப்படுகின்றன.[Savage, Thomas F. (September 12, 2005). "A Guide to the Recognition of Parthenogenesis in Incubated Turkey Eggs"]


பெரும்பாலான உயிரினங்களில் ஒரு ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து கரு உருவாகுகிறது. ஆண், பெண் உயிரணுக்கள் ஒன்றாக இணைந்து ஒரு கரு வளச்சியடைவைதன் மூலம் தான் புதிதாக ஓர் உயிரி ஜணிக்க முடியும். இதில் ஆண் உயிரினத்தின் துணையின்றிப் பெண் உயிரினமே கரு உருவாக்குவதை தன்கருவுறுவாதல் என்பர். உதாரணமாக குருட்டுப் பாம்பு எனும் புழுப் பாம்பு (Worm Snake) இனத்தில் ஆணே கிடையாது. பெண் மட்டும்தான் உள்ளது. பெண் பாம்பே தானாகக் கருவை உருவாக்கிக்கொள்ளும்.


மேலும் ஊர்வன வகைகளில் பெரும்பாலும் ஒருமுறை ஆணுடன் இணை சேர்ந்துவிட்டது என்றால் தங்களின் கருப்பாதையில் உள்ள குழாயில் விந்தணுக்களை நீண்ட காலம் சேகரித்து வைத்துக்கொள்ளும். தனக்குச் சாதகமான சூழல் வரும்போது கருசேர்ந்து முட்டைகளிட்டோ, குட்டிகள் ஈன்றோ புதிய உயிரை உருவாக்கும். ஊர்வனவற்றில் இது மிகவும் இயல்பானது.

 

மேலும் தன் கருவுறுவாதல் எறும்புகள், குளவிகள், தேனீக்கள் போன்ற முதுகெலும்பு அற்ற உயிரினங்களில் இது இயல்பாக உள்ளது.


கலவியற்ற இனப்பெருக்க வகைகள்


1] உயிரணுப்பிளவு இனப்பெருக்கம் (Fission)
2] அரும்புதல் முறை இனப்பெருக்கம் (Budding)
3] பதியமுறை இனம்பெருக்கம் (Vegetative reproduction)
4] நுண்வித்தி முறை இனப்பெருக்கம் (Sporrogenesis)
5] துண்டாதல்முறை இனப்பெருக்கம் (Fragmentation)
6] பால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் (Agamogenesis)


[பால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் என்பது

ஆண் பாலணு இன்றியே இனப்பெருக்கம் நிகழ்தலாகும் . இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளாக கன்னிப் பிறப்பையும் கலப்பில்லா வித்தாக்கத்தையும் கூறலாம்.
 
கன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படுவது பெண் பாலணுவானது கருக்கட்டல் நிகழாமலேயே முளையமாக மாறி முளைய விருத்தி க்கு உட்பட்டு புதிய தனியனை உருவாக்குவதாகும். தாவரங்கள், முதுகெலும்பிலிகளான எறும்பு, தேனீ போன்ற பூச்சி வகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள், முதுகெலும்பிகளான சில ஊர்வன, நீர்நில வாழ்வன, மீன்கள், மிக அரிதாக பறவைகள் போன்றவற்றில் இவ்வகை இனப்பெருக்கம் நிகழ்கின்றது.]


உதாரணம்: 

ஆண் துணை இல்லாமல் தனக்குத்தானே கர்ப்பமான பெண் முதலை


ஆண் முதலையின் துணை இல்லாமலேயே பெண் முதலை கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் முதல்முறையாக கோஸ்டா ரிகாவில் உள்ள காட்டுயிர் காப்பகம் ஒன்றில் பதிவாகியுள்ளது.

99.9% மரபணு ரீதியாக தன்னைப் போலவே ஒரு கருவை இந்த பெண் முதலை உருவாக்கியுள்ளது.

"தன் கருவுறுவாதல்" என்று அழைக்கப்படும் நிகழ்வு பறவைகள், மீன் மற்றும் பிற ஊர்வனவற்றில் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் முதலைகளில் தற்போதுதான் முதன்முறை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பண்பு ஒரு பரிணாம மூதாதையரிடம் இருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் என்றும் எனவே டைனோசர்களும் சுய-இனப்பெருக்கம் செய்யும் திறன் பெற்றிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ராயல் சொசைட்டி இதழான பயோலஜி லட்டர்ஸ்சில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

 

On human parthenogenesis [மனிதரில் கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல்]


Spontaneous parthenogenetic and androgenetic events occur in humans, but they result in tumours: the ovarian teratoma and the hydatidiform mole, respectively. 

with the creation of viable bi-maternal mice in the laboratory based on minor genetic interferences, raises the question of whether natural cases of clinically healthy human parthenotes have gone unnoticed to science??

 

சிறிய மரபணு குறுக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வகத்தில் சாத்தியமான இரு தாய்வழி எலிகளை [bi-maternal mice] உருவாக்கி இருப்பது, மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான மனிதனில்  கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல்களின் இயற்கையான நிகழ்வுகள் அறிவியலுக்கு கவனிக்கப்படாமல் போய்விட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது??

 

மரியாள் கன்னியாக இருக்கும் போதே, ஆண் துணை எதுவுமின்றி, இயேசுவை கருத்தரித்து, ஈன்றளித்ததை கன்னிப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க . என்றாலும் இது உண்மையா ? கற்பனையா என்பதை அறிவியல் தீர்மானிக்கட்டும் 

அதே போல,

மகாபாரதத்தில் கர்ணன்:   குந்தி தன்  திருமணத்திற்கு முன்னரே , அதாவது ஆணுடன் குடும்ப உறவு வைக்காமலே பெற்றவர் தான் கர்ணன் என்று கூறுவதைக் காண்க. அதற்கான காரணம் , எதோ கற்பனையில் புனையப்படுள்ளதை,  அறிவியல் தீர்மானிக்கட்டும் 

Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரெப்ப்டீலியா இனத்தை சேர்ந்த பல மிருகங்கள் ஒரு முட்டை இட்டு அது தாயின் கருப்பையில் பல முட்டைகளாக பிரிந்து அத்தனையும் தாயையே மாதிரி நூற்றுக்கு நூறு வீதம் ஒத்து இருக்கும். மனிதர்கள் உட்பட மற்றைய பறவைகள் பாலூட்டிகள் எல்லாம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்து தாயிடம் இருந்து அம்பது வீதம் DNA களும் தகப்பனிடம் இருந்து அம்பது வீதம் DNA களையும் பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாம்புகளில் பால் தெரிவு... மற்றும் கலப்பிரிவு முறைகளை விளங்கிக் கொண்டால்.. இது ஒன்றும் பிரமாதமே அல்ல.

மனிதரிலும் சுப்பர் பெண்.. சுப்பர் ஆண் எல்லாம் இருக்குது... ஆண்-பெண் நிறமூர்த்த சோடிகளின் அடிப்படையில். அது தூய தனிப்பால் வழிமுறையல்ல. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.