Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

lg-3.jpg?resize=750,375&ssl=1

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை வலியுறுத்தி, அவர்களையும் மனிதர்களாக எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்து நடைபவனி ஒன்று இன்று இடம்பெற்றது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை இந்த நடைபவனி சென்றடைந்து அங்கு நிறைவு பெற்றிருந்தது.

சுமார் 50 பேர் வரையில் இந்த நடைபவனியில் கலந்து கொண்டனர்.

யாழ் சங்கம் என்கின்ற இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பணியாற்றுகின்ற அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இவ் ஊர்வலத்தில் திருநங்கைகள் அதிக அளவில் கலந்து கொண்டதோடு தமது உரிமைகளை அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகளை உடைய மனிதப் பிறப்புகளை என்ற  கருத்துக்களையும் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1389908

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.

அதென்ன மூன்றாம் பாலினத்தவர்?

உங்கள் உடலில் குறைபாடுகள் இருந்தால் பாலியல் பிரச்சனை இருந்தால் இல்லையேல் மனநோயாக இருந்தால் தகுந்த வைத்தியர்களை நாட வேண்டியது தானே.இப்ப மூலைக்கு மூலை மனிதனின் ஒவ்வொரு அவயவங்களை சரி செய்வதற்கென்றே வைத்தியர்கள் காத்திருக்கின்றார்கள்.

என்னைப்பொறுத்த வரை எல்லாமே ஹோர்மோன் பிரச்சனைகள்.இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆண் பெண் பாலினம் இனவிருத்தியை நோக்கி மட்டுமே என நான் நினைக்கின்றேன்.

தற்கால ஆறாவது அறிவு அழிவுகளை நோக்கியே செல்கின்றது.

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வவுனியாவில் பால்புதுமையினர் நடைபவனி

27 JUN, 2024 | 10:35 AM
image
 

பால்புதுமையினர் தங்களது உரிமைகளை வலியுறுத்தி, தங்களையும் சக மனிதர்களாக எண்ண வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து நேற்று புதன்கிழமை (26) வவுனியாவில் நடைபவனியொன்றை முன்னெடுத்தனர்.

இந்த நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சென்றடைந்ததோடு நிறைவு பெற்றது.

'யாழ். சங்கம்' என்ற பால்புதுமையினத்தவர்களுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நடைபவனியில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். 

இந்த நடைபவனியில் தமது உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகள் கொண்ட மனிதப் பிறப்புக்களே என்பது போன்ற கருத்துக்கள் பால்புதுமையினர் இதன்போது முன்வைத்திருந்தனர்.

20240626_151432.jpg

20240626_150605.jpg

20240626_161057.jpg

https://www.virakesari.lk/article/187074

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இரு சிறுமிகள் அங்கே நிற்கிறார்கள். 

 

ரணில் சனாதிபதியானது இவர்களுக்கு நல்ல சந்தர்பமாய் அமைந்துவிட்டது.

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Kapithan said:

இரு சிறுமிகள் அங்கே நிற்கிறார்கள். 

ரணில் சனாதிபதியானது இவர்களுக்கு நல்ல சந்தர்பமாய் அமைந்துவிட்டது.

ரணில் சனாதிபதியாக இருக்கும் போதே, 
இவர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு பெற வேண்டும்.
ஏனென்றால்... அவருக்குத்தான் இந்தப் பிரச்சினைகளை அணுகும் விதம் நன்கு தெரியும்.


@விசுகு

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, குமாரசாமி said:

அதென்ன மூன்றாம் பாலினத்தவர்?

உங்கள் உடலில் குறைபாடுகள் இருந்தால் பாலியல் பிரச்சனை இருந்தால் இல்லையேல் மனநோயாக இருந்தால் தகுந்த வைத்தியர்களை நாட வேண்டியது தானே.இப்ப மூலைக்கு மூலை மனிதனின் ஒவ்வொரு அவயவங்களை சரி செய்வதற்கென்றே வைத்தியர்கள் காத்திருக்கின்றார்கள்

 
முறுக்கு மீசையும் நீண்ட தாடியும் ஒரு குறியும்  இருந்தால் கட்டாயம் அது ஒரு ஆண் இல்லை. அதே வேளை மீசை முளைத்த பெண்கள் எல்லோரும் ஆண்களும் அல்ல.       அவர் ஆண்களை  போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருந்தால்  அவருக்கு எதோ குறைகள் இருக்கின்றது என்று வாதாடுவது கொடுமை .

மனிதன் தன்னை எப்படி உணர்கின்றானோ அப்படியே வாழ நினைப்பதில் தவறுகள்   எதுவுமில்லையே.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் ஆனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

ரணில் சனாதிபதியாக இருக்கும் போதே சட்ட, 
இவர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு பெற வேண்டும்.
ஏனென்றால்... அவருக்குத்தான் இந்தப் பிரச்சினைகளை அணுகும் விதம் நன்கு தெரியும்.


@விசுகு

 ஏன் ராசா ஏன்?? என்னை இதற்குள் இழுத்து...,?🤣

ஆனால் இந்த மூன்றாவது பாலினம் என்ற சொல் யாருக்கும் உறுத்தல் இல்லாமல் இருக்கும்..

  • Haha 1
Posted

இலங்கையில், முக்கியமாக தமிழர் தாயகத்தில், ஒரு காலத்தில் ஒம்பது என்றும் உஸ் என்றும் மிகவும் கொச்சையாக அழைக்கப்பட்டு, சமூகத்தில் இருந்து  விலத்தப்பட்டு, முக்கியமாக மோசமான பாலியல் ரீதியிலான வன்முறைக்குள்ளாகும் சமூகமாக, தமக்குள் கூனிக் குறுகி இருந்த இந்த  திருநங்கைகளும், திருநம்பிகளும் இன்று தம்மை இன்னார் தான் என்று இனம்காட்டி, மூன்றாம் பாலினத்தினராக தலை நிமிர்ந்து சமூகத்தின் முன் நிற்கின்றனர். 

மிகவும் பாரட்டப்பட வேண்டிய, சமத்துவத்தை நோக்கிய முயற்சி!

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வாத்தியார் said:

முறுக்கு மீசையும் நீண்ட தாடியும் ஒரு குறியும்  இருந்தால் கட்டாயம் அது ஒரு ஆண் இல்லை.

மீசை தாடி இருந்தால் ஆண் என்ற விவாதத்திற்குள் நான் இல்லை.

10 hours ago, வாத்தியார் said:

அதே வேளை மீசை முளைத்த பெண்கள் எல்லோரும் ஆண்களும் அல்ல.   

இன்றைய கால பெண்களுக்கு தாடி மீசைகள் வருகின்றதென்றால் உணவு முறைகள் முக்கிய காரணம் என கூறுகின்றார்கள் உண்மையா என தெரியவில்லை. குறிப்பாக இன்றைய காலத்து கோழி இறைச்சிகள் காரணம் என கேள்விப்பட்டுள்ளேன். எனவே இதுவும் இந்த திரியின் தலையங்கத்திற்கு உரியது அல்ல

10 hours ago, வாத்தியார் said:

அவர் ஆண்களை  போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருந்தால்  அவருக்கு எதோ குறைகள் இருக்கின்றது என்று வாதாடுவது கொடுமை .

ஒரு மனிதனுக்கு என்ன குணாதிசயங்கள் வருகின்றதோ அதாவது ஆண் குணாதிசயம் அல்லது பெண் குணாதிசயம் வந்தால்/ இருந்தால் மருத்துவ வசதிகள் மூலம் ஆண் அல்லது பெண்ணாக மாறி வாழ  சட்டமும் உண்டு. வசதிகளும் உண்டு. எனவே மூன்றாம் பாலின பேச்சுக்கள் தேவையில்லை.

10 hours ago, வாத்தியார் said:

மனிதன் தன்னை எப்படி உணர்கின்றானோ அப்படியே வாழ நினைப்பதில் தவறுகள்   எதுவுமில்லையே.

அதைத்தான் மேலே சொல்லியுள்ளேன். 

10 hours ago, வாத்தியார் said:

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் ஆனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது

உணர்ச்சிகளும் உணர்வுகளும் என்று வரும் போது அடுத்த சமுதாயம் மிருகங்களுடன் புணர்வதை சட்டமாக்கும் படி வலியுறுத்தி போராட்டம் செய்வார்கள். அதையும் எற்கத்தான் வேண்டும் அல்லவா? ஏனென்றால்  50  வருடங்களுக்கு முன் அரிதாக இருந்த ஓரின சேர்க்கை எப்படி அதிகமாகியதோ அதேபோல் இன்று அரிதாக இருக்கும் மிருக மனித பாலியல் உறவுகளும் விரிவடைந்து விருட்சமாக மாறி விடும். அதற்காக வாதாட தயார் செய்து கொள்ளுங்கள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.