Jump to content

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் தீவிர வலதுசாரிகள் - அதிபர் மக்ரோங்குக்கு என்ன சிக்கல்?


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
லே பென்

பட மூலாதாரம்,REUTERS/YVES HERMAN

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான பிரான்ஸில் தற்போது இரண்டு சுற்றுக்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று (ஜூன் 30) நடைபெற்றது.

பிரான்ஸைப் பொறுத்தவரை அதிபர் ஆட்சி முறை நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவுகளால் தற்போதைய அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் பதவிக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

காரணம் இப்போது நடைபெறும் தேர்தல் என்பது பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் 577 உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே. இதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும்.

ஆனால் அதிபரும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதிபருக்கான அதிகாரம் குறையும். புதிய சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை இயற்றுவதில் அதிபருக்கு சிக்கல்கள் ஏற்படலாம், எனவே தான் இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் திடீரென முன்கூட்டியே தேர்தல்களை அறிவித்தார். அதன் பிறகு தான் முதல் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

தீவிர வலதுசாரிகளின் கட்சி, இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் பிரான்ஸ் அதிபரின் மையவாதக் கூட்டணி என இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. நடந்து முடிந்த முதல் சுற்றுத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் கட்சி முன்னிலைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது.

முதல் சுற்றுத் தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். அடுத்த சுற்று வாக்குப்பதிவு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும்.

முன்னிலைப் பெற்ற தீவிர வலதுசாரிகள்

முன்னிலைப் பெற்ற தீவிர வலதுசாரிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மரைன் லே பென்னின் தீவிர வலதுசாரிக் கட்சியின் 39 எம்.பி-க்கள் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளிலும் தீவிர வலதுசாரிகளின் கட்சியான தேசிய பேரணிக் கட்சி (ஆர்என்- National Rally) முன்னிலையில் இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் இடதுசாரிகளின் கூட்டணியும், அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாதக் கூட்டணி மூன்றாம் இடத்திலும் இருந்தன.

இதையே பிரதிபலிக்கும் விதமாக, தீவிர வலதுசாரிகளின் கட்சி 33.2% வாக்குகளுடன் முன்னிலையிலும், இடதுசாரிகளின் கூட்டணி 28.1% பெற்று இரண்டாம் இடத்திலும், அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கூட்டணி 21% வாக்குகளுடன் பின்தங்கியும் உள்ளது.

இது தொடர்பாக பேசிய தீவிர வலதுசாரிகள் கட்சியின் தலைவர் ஜோர்டான் பர்டெல்லா, "பிரெஞ்சுக் குடிமக்கள் தங்கள் வாக்குகளை எங்களுக்கு வழங்கினால், அனைத்து பிரெஞ்சு மக்களுக்கான பிரதமராக நான் இருப்பேன்." என்று கூறினார். 28 வயதான ஜோர்டான் பர்டெல்லா, தேசிய பேரணிக் கட்சியின் முக்கியத் தலைவரான மரைன் லே பென்னின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார்.

"பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகளின் இதற்கு முன் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு தேர்தல்" என்கிறார் பிரான்ஸ் அரசியலின் மூத்த விமர்சகர் அலைன் டுஹாமெல்.

இம்மானுவேல் மக்ரோன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்

ஆனால் தீவிர வலதுசாரிகள் இன்னும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. 577 உறுப்பினர்கள் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 289 இடங்களைப் பெற வேண்டும். இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்கு பிறகு தான் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது முழுமையாக தெரிய வரும்.

ஏற்கெனவே முதல் சுற்றுக்குப் பிறகு, 39 தேசிய பேரணிக் கட்சியின் எம்.பி.க்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அதே போல இடதுசாரிகளின் கூட்டணியிலிருந்தும் 32 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள், ஆனால் பிரான்ஸ் தேர்தலில் 50% வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

யாருக்கும் 50% கிடைக்கவில்லை என்றால் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறும். முதல் சுற்றுத் தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்வார்கள்.

 
முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன்?

கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி, அதிபர் எமானுவேல் மக்ரோங், பிரான்ஸ் நாட்டில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தொலைக்காட்சி செய்தியில் தெரிவித்திருந்தார்.

அவரது திடீர் அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக, ஐரோப்பிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதில் பிரான்சும் பங்கேற்றது. அந்தத் தேர்தலில், மக்ரோனின் மையவாதக் கூட்டணியை விட, தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய பேரணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

இதைச் சுட்டிக்காட்டி, "எதுவும் நடக்காதது போல் என்னால் இருக்க முடியாது, எனவே பிரான்ஸ் தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்துள்ளேன்" என்று எமானுவேல் மக்ரோங் கூறினார்.

இந்தத் தேர்தல்கள் நாடாளுமன்றத்துக்காக நடத்தப்படுவதால், மக்ரோனின் பதவிக்காலம் பாதிக்கப்படாது. அவரது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்றாண்டுகள் உள்ளன.

முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்ற மக்ரோனின் அறிவிப்பு தங்களுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று பல பிரான்ஸ் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில் மக்ரோனுக்கும் வேறு வழியில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் எமானுவேல் மக்ரோங் முழுப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதால், புதிய சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை இயற்றுவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எமானுவேல் மக்ரோங்கின் புகழ் சமீப காலங்களில் குறைந்துவிட்டது. முன்கூட்டியே தேர்தலை நடத்துவதன் மூலம் குறைந்தபட்சம் தனது கூட்டணிக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என அவர் நம்புகிறார்.

பிரான்ஸ் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை தான் மதிப்பதாகவும், ஒருவேளை தீவிர வலதுசாரியான தேசிய பேரணிக்கு அரசை அமைப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டுமென மக்கள் விரும்பினாலும் கூட அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தேர்தல்கள் ஏன் முக்கியமானவை?

ஜோர்டான் பர்டெல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேசிய பேரணிக் கட்சி (வலதுசாரி) வெற்றி பெற்றால் 28 வயதான ஜோர்டான் பர்டெல்லா பிரதமராக பதவியேற்பார்

பிபிசி செய்தியாளர் ஹுவ் ஸ்கோஃபீல்ட் கூறுகையில், "இந்தத் தேர்தல் பிரான்ஸுக்கு மட்டுமல்ல, மொத்த ஐரோப்பாவுக்கும் ஒரு வரலாற்று திருப்புமுனையாக இருக்கக்கூடும்" என்கிறார்.

பிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில், கடுமையான யூத-விரோத சித்தாந்தம் கொண்ட தீவிர வலதுசாரிகளின் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது சில காலத்திற்கு முன்பு வரை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது என்று அவர் கூறுகிறார்.

ஒருவகையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்ட சூழலில் இருந்து இந்த நாடு வெளியேறத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கலாம். பாசிசம், பழமைவாதம், தேசியவாதம் மற்றும் குடியரசு முன்னணி போன்ற அரசியல் சொற்கள் தேர்தல் விவாதத்தில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றின் உண்மையான அர்த்தம் குறைந்து வருகிறது.

"தேசியப் பேரணி போன்ற ஒரு பிரபலமான வலதுசாரிக் கட்சிக்கு வாக்களிப்பது ஏன் சங்கடத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் இது விளக்குகிறது" என்று ஹூவ் ஸ்கோஃபீல்ட் கூறுகிறார்.

 

களத்தில் இருக்கும் கூட்டணிகள்

களத்தில் இருக்கும் கூட்டணிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரான்ஸ் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது

பிரான்ஸ் தேர்தலில் பல கட்சிகள் களம் காண்கின்றன. ஆனால் முக்கியமான போட்டி என்பது மூன்று கூட்டணிகள் இடையே தான்.

தேசிய பேரணி (ஆர்என்)

இது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகும். சமீபத்திய ஐரோப்பிய தேர்தல்களில் இந்தக் கட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டது. சமீப காலங்களில், யூத-எதிர்ப்பு மற்றும் தீவிரவாத அரசியல் கொள்கைகளை ஆதரிக்கும் அதன் அடிப்படை சித்தாந்தத்தில் இருந்து இந்தக் கூட்டணி விலகி இருந்தாலும், அது குடியேற்றத்தை கடுமையாக எதிர்க்கிறது.

பிறநாட்டு குடிமக்கள் பிரான்ஸில் குழந்தைப் பெற்றால், அக்குழந்தைக்கு தானாகவே கிடைக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை தேசிய பேரணிக் கட்சி ஆட்சியைப் பிடித்தால் வழங்கப்படாது. 28 வயதான ஜோர்டான் பர்டெல்லா தலைமையிலான அக்கட்சி வெற்றி பெற்றால், பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.

புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி

தற்போது, சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள், பசுமைவாதிகள் மற்றும் பிரான்ஸ் அன்பௌட் (LFI) உள்ளடங்கிய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி தேர்தலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் தீவிர வலதுசாரிகளை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கும் நோக்கத்துடன் ஒன்று சேர்ந்துள்ளன.

தற்போதைய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தங்களை மாற்றியமைக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான மீட்பு நிறுவனத்தை உருவாக்கவும் இக்கூட்டணி விரும்புகிறது.

மையவாதக் கூட்டணி

பிரான்ஸ் மக்கள் வலதுசாரி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டும் சூழ்நிலையில், மையவாத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன.

ஆனால் இந்த கூட்டணியின் சில வேட்பாளர்கள் தேர்தலில் இரண்டாம் சுற்றை எட்டாமல் போகவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

பிரான்சில் தேர்தல் எப்படி நடைபெறுகிறது?

பிரான்சில் தேர்தல் எப்படி நடைபெறுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு (Assemblée Nationale) பிரதிநிதிகள் என அழைக்கப்படும் 577 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.

ஆட்சி அமைக்க அல்லது நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற 289 இடங்கள் தேவை. முதல் சுற்றில் 12.5 சதவீத வாக்குகளைப் பெற முடியாத வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றாலோ அல்லது தனது தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் நான்கில் ஒரு பங்கையாவது பெற்றாலோ வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். இருப்பினும், இது மிகவும் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே நிகழ்கிறது.

பிரான்சில், அதிபர் மற்றும் பிரதமர் என இருவரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்களைக் கையாளுகின்றனர். பிரதமர் அரசாங்கத்தின் தலைவர், அதிபர் நாட்டின் தலைவர்.

பிரான்சில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல், அதிபர் தேர்தல் முடிந்த உடனேயே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் 2027இல் நடைபெற வேண்டியது. ஆனால் இந்த ஆண்டே தேர்தலை நடத்த எமானுவேல் மக்ரோங் முடிவு செய்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர வலதுசாரி கட்சிக்கு பிரான்ஸ் மக்கள் வாக்களித்ததற்கு 4 காரணங்கள்

பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,முன்பு எப்போதும் இல்லாத வகையில் பிரான்ஸ் வாக்காளர்கள் மரைன் லே பென் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், அலெக்ஸாண்ட்ரா ஃபூஷ்ஷே
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரான்சின் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் 33% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது.

இடதுசாரிகள் கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி, 28% வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பிரான்ஸ் அதிபர் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கூட்டணி 21% வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் அதிக இடங்களைப் பெறுவதைத் தடுக்க, மையவாத மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென அதிபர் மக்ரோங் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் முதல் முறையாக மரைன் லே பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லா தலைமையிலான தேசிய பேரணிக் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பிரான்ஸ் வாக்காளர்கள் இந்த கட்சிக்கு ஆதரவளித்ததின் சில முக்கிய காரணங்கள் என்ன?

இது சாத்தியமானது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரான்சின் மூத்த அரசியல் விமர்சகர் அலைன் டுஹாமெல் கூறுகிறார்.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1) உள்நாட்டுக் காரணம் மற்றும் பொருளாதாரத்தில் நிலை

மக்களின் வாங்கும் திறனைக் குறைத்த விலைவாசி உயர்வு, அத்துடன் எரிபொருட்களின் விலை உயர்வு, மருத்துவ சேவைகள் முறையாகக் கிடைப்பதில் சிக்கல், "பாதுகாப்பின்மை’’ என்று பிரான்ஸ் மக்கள் அழைக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் அச்சம் ஆகியவை வாக்காளர்களின் முதன்மை பிரச்சனைகளாக உள்ளன.

பிரான்சின் பொருளாதாரம் நல்ல நிலையிலிருந்தாலும், பெரிய நகரங்களிலிருந்து தள்ளிச் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினர்.

நிதியும், கவனமும் பெரிய நகரங்களுக்குச் சென்ற நிலையில், பிற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. சில இடங்களில் வேலைவாய்ப்பின்மை 25 சதவீதத்தைக் கூட தொட்டது.

உள்ளூரில் சிலரால் வீடுகளை வாங்க முடியாத அளவுக்கு, வீடுகளின் விலை அதிகரித்தது. நிதிப் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன.

நகர்ப்புறங்களில் உள்ள மிகப்பெரிய சுகாதார மையங்களுக்காக, உள்ளூர் சுகாதார மையங்கள் மூடப்பட்டது பலரைக் கவலையடைய வைத்தது.

உலகமயமாக்கலில் பலனடைந்தவர்கள் மக்ரோங்கிற்கு ஆதரவளித்தனர். இதில் கைவிடப்பட்டவர்கள் வலதுசாரிகள் பக்கம் திரும்பினர் என பேராசிரியர் தாமஸ் பிகெட்டி பிபிசியிடம் கூறினார்.

Capital in the Twenty-First Century என்ற அதிக விற்பனையான புத்தகத்தை எழுதிய தாமஸ் பிகெட்டி, ’’ தொழிற்சாலைகள் மூடப்பட்டது, பொதுச் சேவைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டது, ரயில்கள் நிறுத்தப்பட்டது, மருத்துவமனைகள் மூடப்பட்டது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட சிறு நகரங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வலதுசாரிகளுக்கு ஆதரவளித்தனர். பெரிய நகரங்களிலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் மக்களுக்கு, தங்களது குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி வழங்குவது கூட கடினமானதாக உள்ளது’’ என்கிறார்.

 
பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?
படக்குறிப்பு,37 வயதான தூய்மைப்பணியாளரான அவுரிலே தனது இரண்டு மகன்களுடன் அமியென்ஸ் நகரில் வசிக்கிறார்

பாரிஸின் கிழக்கே பொன்டால்ட் - கம்பால்ட் நகரில் வசிக்கும் பேட்ரிக், ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தேசிய பேரணி கட்சிக்கு வாக்களித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், ’’இங்கு வசிக்கும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. சாலைகளில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள்’’ என்றார்.

37 வயதான தூய்மைப்பணியாளரான அவுரிலே தனது இரண்டு மகன்களுடன் வடக்கு பிரான்ஸின் அமியென்ஸ் நகரில் வசிக்கிறார். இங்குதான் பிரான்ஸ் அதிபர் மக்ரோங் வளர்ந்தார். தேசிய பேரணி கட்சியினருடன் தான் உடன்படுவதில் ’பாதுகாப்பின்மை’ முதன்மையானது என்கிறார்.

'’நான் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து வேலைக்குச் செல்வேன். முன்பு சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்வேன். ஆனால் இப்போது காரில் செல்கின்றேன்’’ என பிபிசியிடம் கூறினார்.

‘’இளைஞர்கள் எப்போதும் வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பயமாக உள்ளது’’

ஓய்வூதியம் வழங்குவதற்கான வயதை 62-இல் இருந்து 64-ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மக்ரோங் அரசு கொண்டுவந்த சட்டம் வாக்காளர்களிடையே பிரச்சனையாக உருவெடுத்தது.

ஓய்வூதிய திட்டத்தை நிலைக்க வைக்க, சீர்திருத்தம் அவசியம் என்று மக்ரோங் கூறினார்.

குளிர்காலத்தில் வீடுகளை வெப்பப்படுத்தும் எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலை சமீப காலத்தில் கடுமையாக உயர்ந்தது.

100 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்சாரம்/எரிவாயுவின் விற்பனை வரி குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும், சில மாதங்களில் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தேசிய பேரணி கட்சியின் தலைவர் ஜோர்டான் பர்டெல்லா கூறினார்.

2) தற்போது உள்ள அமைப்பின் மீதான வெறுப்பு

பிரான்ஸில் தற்போது உள்ள அரசியல் அமைப்பு தங்களுக்கு ஏற்றதாக இல்லை என வாக்காளர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளனர்.

"நான் திருப்தி அடைகிறேன், ஏனென்றால் எங்களுக்கு மாற்றம் தேவை," என்று மரைன் லே பென் கட்சியின் வடக்கு பகுதி கோட்டையான ஹெனின்-பியூமண்டில் வசிக்கும் ஜீன்-கிளாட் கெயில்லெட் ஞாயிற்றுக்கிழமையன்று வாக்களித்த பிறகு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

’’எந்த விஷயமும் மாறவில்லை. அவை மாற வேண்டும்’’

’மக்கள் சோர்ந்து போனதால் அவர்களால் [தேசிய பேரணி] வாக்குகளைப் பெற முடிந்தது. எங்களுக்குக் கவலை இல்லை, அவர்களுக்கு வாக்களித்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்’’ என்கிறார் தேசிய பேரணி கட்சியின் மற்றொரு ஆதரவாளரான 80 வயதான மார்குரைட்.

'’ஆனால் இப்போது நான் பயப்படுவது என்னவென்றால், மற்ற அரசியல் கட்சிகள் தடைகளை ஏற்படுத்தும். நாங்கள் வாக்களித்தோம், இவைதான் முடிவுகள். அவற்றை ஏற்றுக்கொண்டு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.’’ என்கிறார் அவர்.

ஆனால், யமினா அட்டோ தேசிய பேரணி கட்சியின் வெற்றியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.

தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவாக வாக்காளர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாவும், அவர்களின் முடிவு பிரான்ஸ் சமுதாயத்தில் ஆபத்தான பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

’’அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நான் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். ஏனென்றால் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உணரவில்லை. அவர்கள் வாங்கும் திறன் குறித்தும், பிற குறுகிய கால விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்’’ என்கிறார் யமினா.

பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சிக்கு அதிபர் மக்ரோங்கே காரணம் என கூறப்படுகிறது

நாடு தற்போதுள்ள நெருக்கடிக்கு அதிபர் மக்ரோங்கை பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

எகனாமிஸ்ட்டின் பாரிஸ் அலுவலக தலைவரான சோஃபி பெடர், “அனைத்து விதமான அரசியல் சார்பு மக்களையும் ஒன்றிணைக்க மக்ரோங் ஒருமித்த இயக்கத்தை உருவாக்கினார். அது பலனளித்தது. நாடாளுமன்றத்திலும் இரு தரப்புக்கும் இடையே நடந்த முடிவில்லாத சண்டைக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது''

"ஆனால் விளைவு என்னவென்றால், இடது மற்றும் வலது மிதவாதிகள் அனைவரும் மக்ரோங் கட்சியில் சேர்ந்தனர். அவருக்கு மாற்றாக, தீவிர வலதுசாரிகள் மட்டுமே இருந்தனர்’’ என பிபிசியிடம் கூறினார்.

3) குடியேற்றம் மற்றும் பிரான்ஸ் அடையாளத்தைச் சுற்றியுள்ள அச்சம்

தேசிய பேரணியின் நாடாளுமன்ற தலைவரான மரைன் லே பென், தனது கட்சியை பிரதான அரசியல் நீரோட்டத்துடன் இணைக்கவும், மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றவும் பல ஆண்டுகளாக பணியாற்றினார்.

தனது தந்தை ஜீன்-மேரி லே பென் மற்றும் சிலர் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி கட்சியை தேசிய பேரணி என்று மறுபெயரிட்டதுடன், கட்சியின் கொள்கையை யூத எதிர்ப்பு மற்றும் தீவிர கொள்கையிலிருந்து நகர்த்தினார்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான கட்சியாகவே இது உள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கான சமூக நலனை மட்டுப்படுத்தவும், வெளிநாட்டில் பிறந்த பெற்றோரைக் கொண்ட குழந்தைகளுக்கு பிரான்ஸ் குடியுரிமைக்கான உரிமையை அகற்றவும் தேசிய பேரணி கட்சியின் தற்போதைய தலைவர் ஜோர்டான் பர்டெல்லா வலியுறுத்துகிறார்.

புலம்பெயர்ந்தோர், குறிப்பாக முஸ்லீம்கள், பிரான்ஸ் சமுதாயத்தில் இணைய மாட்டார்கள் என்ற அச்சத்தை வைத்து இக்கட்சி அரசியல் செய்கின்றது.

எடுத்துக்காட்டாக, இக்கட்சியின் வேட்பாளரான இவான்கா டிமிட்ரோவா, "பிரான்ஸ் தேசத்தின் சட்டங்களுக்கு மேலாக தங்கள் மதச் சட்டத்தை வைத்திருக்க விரும்பும் குடியேறிகளுக்கு எதிராக தங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்’’ என்று பிபிசியிடம் கூறினார்.

தேசிய பேரணி கட்சியின் நேட்டோ எதிர்ப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு கொள்கைகள் மென்மையாக்கப்பட்டுள்ளன.

விளாடிமிர் புடினில் ரஷ்யாவுடனான தேசிய பேரணியின் நெருங்கிய உறவுகள் அமைதியாகக் கைவிடப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழுக்கத்தை 2022 முதல் தேசிய பேரணி கட்சி முன்னிலைப்படுத்தவில்லை.

பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புலம்பெயர்ந்தோர், குறிப்பாக முஸ்லீம்கள், பிரான்ஸ் சமுதாயத்தில் இணைய மாட்டார்கள் என்ற அச்சத்தை வைத்து தேசிய பேரணி கட்சி அரசியல் செய்கின்றது.

4) சமூக ஊடகத்தில் தீவிர பரப்புரை

பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜோர்டான் பர்டெல்லாவை டிக்டோக் அரசியல்வாதி என்று அழைக்கின்றனர்

தேசிய பேரணி கட்சி எளிய முழக்கங்கள் மற்றும் யோசனைகளில் வெற்றிகரமாகப் பிரசாரம் செய்தது.

மக்கள் தங்கள் பிரெஞ்சு அடையாளத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தையும்,விலைவாசி உயர்வையும் முன்னிலைப்படுத்தி இக்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

வாக்காளர்களை இடையே தாங்கள் நம்பகமானவர்கள் மற்றும்ன் பரிச்சயமானவர்கள் என்பதை உணர வைக்க சமூக ஊடகங்களை மிகவும் திறம்படப் பயன்படுத்தினர்.

"பிரான்சில், ஜோர்டான் பர்டெல்லாவை டிக்டோக் அரசியல்வாதி என்று அழைக்கிறோம். ஏனென்றால் அவர் சமூக ஊடகங்களில் மக்களைத் திரட்டும் அரசியல்வாதி" என்று பிரான்ச்-காம்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வின்சென்ட் லெப்ரூ பிபிசியின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் கூறினார்.

’’பெரும்பாலான மக்கள் இனவெறி கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தற்போது உள்ள அமைப்பால் சோர்வடைந்துவிட்டனர். அவர்கள் மக்ரோங்கின் கொள்கைகளால் சோர்வடைந்துள்ளனர்’’ என்கிறார் தேசிய பேரணிக்கு எதிராகப் போட்டியிடும் புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியின் வேட்பாளர் சார்லஸ் குலியோலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா,பிரான்ஸ்,ஜேர்மனி,இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரேன் போன்ற சேறுகளில் கால் வைக்காமல் இருந்தாலே நல்ல அரசியல் வாழ்வை தத் தம் நாடுகளுக்கு  கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வெல்வதற்காக மக்ரோன் சகல தகிடுதத்தங்களையும் செய்ய வெளிக்கிட்டினம் போல கிடக்கு. 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை வைத்து பிரெஞ்சுமக்களை துவேசிகளாக்காதீர்கள். இங்கே வந்தவரும் கலந்தவரும் தான் அதிதீவிர வலதுசாரி. இதில் நம்மவர்களும் அடக்கம்.

  • Like 1
Link to comment
Share on other sites

8 hours ago, Kapithan said:

தேர்தலில் வெல்வதற்காக மக்ரோன் சகல தகிடுதத்தங்களையும் செய்ய வெளிக்கிட்டினம் போல கிடக்கு. 

🤣

அவை என்னவென்று கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம் 🙂
 

மக்றோனின் கட்சி இரண்டாம் சுற்றுத் தேர்தலில் போட்டியிடுவது வெல்வதற்காக அல்ல என்பதுகூடத் தெரியவில்லை போலுள்ளது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இணையவன் said:

அவை என்னவென்று கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம் 🙂
 

மக்றோனின் கட்சி இரண்டாம் சுற்றுத் தேர்தலில் போட்டியிடுவது வெல்வதற்காக அல்ல என்பதுகூடத் தெரியவில்லை போலுள்ளது.

நாங்க மேல தேச ஊடகங்களை பார்ப்பதில்லை கேட்பதில்லை. எனவே ரசிய சீன அல்லது ஈரானிய ஊடகங்களின் தகவல்கள் எமக்கு தரப்பட வாய்ப்புண்டு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் - அங்கஜன் இராமநாதன் 05 JUL, 2024 | 06:52 PM சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், தகுதி நிலை வைத்தியர்கள் தமது பணிகளை இடையூறின்றி செய்ய உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (05) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.    மேலும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பதில் வைத்திய அத்தியட்சகராக மத்திய சுகாதார அமைச்சினால் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்  நிர்வாக திறமையானவர் நியமிக்கப்பட்டமையால் நிர்வாக தரம் அற்ற ஏனையவர்கள்தான் இந்த குழப்பங்களை தூண்டுகின்றார்களோ என்பதையும் ஆராய வேண்டும் என தெரிவித்தார்.   இதன்போது ஆளுநர் கடந்த காலத்தின் நிர்வாக தர அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இம்முறை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி விபரங்களை தெரியப்படுத்துவதாக குறிப்பிட்டார்.   https://www.virakesari.lk/article/187780
    • கொழும்பு செய்திகள் பல "State Patronage" ஓடு சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் நடக்கவிருப்பதாகச் சொல்கின்றன. ஆனால், எடின்பரோவிலும், தாயகத்தில் குட்டிச் சுவரிலும் இருந்து வெளிவரும் "நம்பகமான😎" முகநூல் செய்திகள் தூக்க ஆளில்லாமல் விமானப்படை தூக்கி வந்தது என்று எழுதினால், இங்கே நம்பிக் குதூகலிக்கும் நிலையில் வாசகர்கள் இருக்கிறார்கள். "அரச ஆதரவு" என்றால் மரியாதை நிமித்தம் படையினர் தான் தூக்குவர். சம்பந்தர் என்ன தான் செத்தால் உடனே தீக்குளிக்கும் தமிழ் நாட்டு பாணி தொண்டர் படைக் கட்சியா நடத்தினார் "தொண்டர்கள்" வந்து மாரில் அடித்து அழ?
    • பிரித்தானிய தேர்தலில் சாதனை படைத்த ஈழத்தமிழ் பெண்! பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமா குமரன், ஸ்ராட்போட் மற்றும் பௌவ் (Stratford and Bow) தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொழிற்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கமைய அவர் 44.1 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவாகியுள்ள நிலையில் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். https://thinakkural.lk/article/305326
    • 05 JUL, 2024 | 05:08 PM தொழில்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டர்மெர் இங்கிலாந்தின் புதிய பிரதமராகியுள்ளார். மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் அவர் உத்தியோகபூர்வமாக பிரதமராகியுள்ளார். இன்னும் சில நிமிடங்களில் அவர் டவுனிங் வீதியிலிருந்து பிரிட்டன் மக்களிற்கு உரையாற்றுவார். முன்னதாக மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர்  ரிசி சுனாக்  பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். https://www.virakesari.lk/article/187773
    • ஆனால், "ஆம்/இல்லை" என்று பதில் தரக்கூடிய "தடுத்து வைத்ததால் மக்கள் செத்தனரா?" என்ற கேள்விக்கு இன்னும் உங்களிடம் பதில் இல்லை. எனவே, உங்களுடைய கணிப்பு, ஏதோ ஒரு தரப்பிற்கு வெள்ளைப் பெயின்ற் அடிக்க நீங்களே உருவாக்கி வைத்திருக்கும் கற்பிதம் மட்டுமே என்பது என் அபிப்பிராயம்!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.