Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் கேதீஸ்வரன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் நியமனம் தொடர்பில் பெரும் சர்ச்சைநிலை ஏற்பட்டிருந்தது.

இதற்கு பதிலடி வழங்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவானது யாழில், இடம்பெறும் அரச வைத்தியதுறையின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

தெற்கிலிருக்கும் சிங்கள அரசாங்கம் வடக்கு மக்களுக்கு ஒழுங்கற்ற விதத்தில் மருத்துவ வசதிகளை வழங்குகிறது என்ற பொய்யை நிரப்புவதற்காகவே யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் பகடைக்காயாக செயற்படுவதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

சாவகச்சேரி, மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளில் மரணிக்கும் ஒருவரின் உடலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி இழுத்தடிப்பு செய்வதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் பணத்தை வழங்கியே உடலை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆபத்தான மருந்துவகைகளை கடத்தியும், அவற்றை வடக்கில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியும் மனநோயை ஏற்படுத்து விதமாக ஆ.கேதீஸ்வரன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்பில் அவர் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தும் மேலும் சில அதிர்ச்சி சம்பவங்களை தொகுத்து வருகிறது இந்த காணொளி,

https://tamilwin.com/article/ramanathan-archuna-medical-scandals-in-the-north-1720077313

  • Replies 195
  • Views 18.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்

  • நியாயம்
    நியாயம்

    இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன்.  மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை து

  • Ahasthiyan
    Ahasthiyan

    25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய வைத்தியருக்கு பெரும் நெருக்கடி! நள்ளிரவில் பரபரப்பு காணொளி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு இன்றி காணப்பட்ட சுகாதார சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரின் தன்னிலை விளக்கமும், சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் காணொளி பதிவுகள் முகநூலில் பதிவேற்றப்பட்டத

முன்னதாக இவர் இந்த விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மற்றுமொரு காணொளி வெளியிட்டு மேலதிக தகவல்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

https://www.facebook.com/100091790105032/videos/1970952496695103/?ref=embed_video&t=62

https://tamilwin.com/article/corruption-in-government-hospitals-jaffna-1720137729

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்; முன்னாள் நகர சபை உறுப்பினர் கிஷோர் கைது

Published By: DIGITAL DESK 3   05 JUL, 2024 | 05:20 PM

image
 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் இன்று வெள்ளிக்கிழமை (05) சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவது,

அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர்  ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சில வைத்தியசாலைகளில் நோயாளிகளின் நலன் கருதி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றி இருந்தது.

IMG-20240705-WA0286.jpg

இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணிபுரியும் வைத்தியர்கள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்றைய தினமும் இன்றைய தினமும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லுகின்ற நோயாளிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

இதனால்  தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்று முற்பகல் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து நிர்வாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என  தெரிவிப்பதற்காக வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தனர்.

இதனையடுத்து அங்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தவர்களை அகற்ற முற்பட்டனர்.  இதன்போது அமைதியான முறையில் நாங்கள் மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க கோரிக்கை முன்வைக்கவே எந்தவித இடையூறுகளும் செய்யாமல் இருக்கின்றோம். ஆகவே எம்மை கலைந்து செல்லுமாறு கூற  முடியாது என்று தெரிவித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோரை அங்கிருந்த சாவகச்சேரி பொலிஸார்  கைது செய்தனர். 

IMG-20240705-WA0291.jpg

இதனையடுத்து இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜிக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாக விரைந்த மனித உரிமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்தி இணைப்பாளர் பொதுமக்களோடும் வைத்தியசாலை நிர்வாகத்தோடும் கலந்துரையாடியதோடு உடனடியாகவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட முன்னாள் நகர சபை உறுப்பினரையும் பார்வையிட்டார்.

இதனை அடுத்து சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.

IMG-20240705-WA0282.jpg

IMG-20240705-WA0290.jpg

https://www.virakesari.lk/article/187772

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் - அங்கஜன் இராமநாதன்

05 JUL, 2024 | 06:52 PM
image

சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், தகுதி நிலை வைத்தியர்கள் தமது பணிகளை இடையூறின்றி செய்ய உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். 

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (05) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.   

மேலும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பதில் வைத்திய அத்தியட்சகராக மத்திய சுகாதார அமைச்சினால் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்  நிர்வாக திறமையானவர் நியமிக்கப்பட்டமையால் நிர்வாக தரம் அற்ற ஏனையவர்கள்தான் இந்த குழப்பங்களை தூண்டுகின்றார்களோ என்பதையும் ஆராய வேண்டும் என தெரிவித்தார்.  

இதன்போது ஆளுநர் கடந்த காலத்தின் நிர்வாக தர அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இம்முறை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி விபரங்களை தெரியப்படுத்துவதாக குறிப்பிட்டார்.  

https://www.virakesari.lk/article/187780

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சாவகச்சேரி வைத்தியர் தாக்கப்பட்டார்! வெளியான புதிய கானொளியால் பரபரப்பு

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

06 JUL, 2024 | 12:54 PM
image

கடற்தொழில் அமைச்சரும் - மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.   

IMG-20240706-WA0079.jpg

இவர் இன்று   சனிக்கிழமை  (06)  விஜயம் செய்துள்ளதுடன்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடந்த இரு தினங்களாக வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

IMG-20240706-WA0081.jpg

இதன்போது வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டு நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.   

வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக கடந்த 24மணித்தியாளங்களாக தனி ஒரு வைத்தியராக நின்று வைத்தியசாலையை இயங்க வைத்து நோயாளர்களை காப்பாற்றி வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்திருந்தார். 

இதனைவிட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் -ஆளணி காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார் .   

இதன்போது வைத்தியசாலையில் கூடிய பொதுமக்கள் வைத்தியசாலை  இன்று இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும் இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா அவர்களுக்கு ஆதரவளித்தும் - வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் பொதுமக்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

IMG-20240706-WA0075.jpg

IMG-20240706-WA0073.jpg

IMG-20240706-WA0072.jpg

https://www.virakesari.lk/article/187815

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய மருத்துவர் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி வைத்தியசாலை

 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

இதன்போது வைத்தியசாலையில் கூடிய பொதுமக்கள் வைத்தியசாலை  இன்று இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும் இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா அவர்களுக்கு ஆதரவளித்தும் - வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் பொதுமக்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதுதான் வேணும் நடக்குமா ?

12 hours ago, ஏராளன் said:

கடற்தொழில் அமைச்சரும் - மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.   

இந்த எழரைக்கு தன்னுடைய கடல் தொழில் பிரச்சனையே கையாள தெரியவில்லை இங்கு ஏன் மூக்கை நுழைக்குது ?

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் வடக்கு பகுதியில் ஒரு மருத்துவ பணிப்பாளர் வாகன விபத்தொன்றில் இறந்திருந்தார் அவர் இன்னுமொரு மாவட்டத்துக்கு மருத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று செல்ல காத்திருக்கையில் இந்த விபத்து இடம்பெற்று கொல்லப்பட்டதாகவும் அவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவருடைய உள்வட்டத்தில் பேசப்பட்டது ….. இப்பலாம் வடக்கு பகுதியை இந்தியா மாதிரி கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள்   பிடிக்கலையா அடிச்சு தூக்கு என்று.…..அண்மைக்காலம் யாழில் நடைபெறும் மருத்துவ நிகழ்வுகள் அனைத்தும் ரமணா திரைப்படைத்தையே நினைவு படுத்துகிறது 

என்ன இது இந்தியாவில் பழசு யாழ்ப்பாணத்துக்கு புதுசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்ற எவரையும் அனுமதிக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

பல  மருத்துவ மனைகளிலும், கல்லூரிகளிலும்…. டக்ளஸ் தேவானந்தாவால் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க நியமிக்கப் பட்ட ஊழியர்களே அதிகம் வேலை செய்வதும்… அவர்களால் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் போன்ற சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம். 

அரசியல்வாதிகள் இப்படியான இடங்களில் மூக்கை நுளைக்காமல் இருந்தால் மட்டுமே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க முடியும்.

யாழ். இந்துக் கல்லூரியிலும்…. சில அரசியல்வாதிகள் மூக்கை நுளைக்க முற்பட்ட போது தற்போதைய அதிபர் அதற்கு சம்மதிக்காததால் அவரால்… அங்கு சிறந்த சேவையை ஆற்ற முடிகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

chava.jpg?resize=750,375

சாவகச்சேரி வைத்தியசாலையின் நெருக்கடி நிலை – பொதுமக்கள் போராட்டத்தில் குதிப்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றம் மற்றும் அதன் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு கொண்டு வருவதற்கு வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நாளை திங்கட்கிழமை காலை 8 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்மராட்சி மக்கள் துண்டுப்பிரசுரம் மூலம் அறிவித்துள்ளனா்.

அத்துடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும், சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு கொண்டு வர வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும்  கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மூன்றாவது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலையில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாக வைத்திய அத்தியட்சகா் இராமநாதன் அர்ச்சுனா அமைச்சருக்குத் தொிவித்திருந்தாா்.

அத்துடன்,  வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் மற்றும் ஆளணி வளம் காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.

 

பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடயத்தில் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகள் மறைந்திருப்பதால், அவற்றிற்கு எதிராக வைத்திய அத்தியட்சகா் இராமநாதன் அர்ச்சுனா முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து சில தரப்பினா் தமது எதிா்ப்பினை வெளிப்படுத்துவதாக சமூக ஆா்வலா்கள் பலா் கருத்து வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

3434.jpg?resize=434,600

https://athavannews.com/2024/1391221

  • கருத்துக்கள உறவுகள்

25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Ahasthiyan said:

25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது. 

 

சிலவேளை கூகிள் வைத்தியர்களாக இருக்கலாம் 😀

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்தியர் அர்ச்சனாவை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளர்..வைத்தியர் அர்ச்சனானவின் முகப்புத்தக செய்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி வைத்திய சாலை விடயத்தில் எட்டப்பட்டுள்ள இரண்டு முடிவுகள்

யாழில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் இரண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவக்கச்சேரி மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

விசாரணை செய்தல் மற்றும், நடவடிக்கை எடுத்தல் என்பன பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனினும், சேவை பெறுனர்களின் நலன் முக்கியமானது  எனவும் மருத்துவர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளின் அடிப்படையில்,  முதலாவதாக வைத்தியர் அர்சுனாவின் சேவையை  நீடிக்க விட்டு ஒரு கால அவகாசம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். ஆனால் தனிப்பகை தீர்ப்பதாக இருக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. 

இரண்டாவதாக அனைவரும் விரும்பாவிடில் வைத்தியர் அர்ச்சுனாவை மீள அனுப்புவது தொடர்பிலும், வேறு ஒருவரை நியமித்த பின்னும் அவரது குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பதிவுசெய்து நோயாளர்கள் பிரதேச மக்கள் ஆகியோர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவை அனைத்துக்குமான சுயாதீன விசாரணை செய்து உண்மைகள் இருப்பின் உரியவர்கள் தண்டிக்கப்பட்டு மக்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்படவேண்டும் எனவும் மருத்துவர் சங்கத்தினால் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சாவகச்சேரி வைத்தியர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர்களுடைய காணொளி

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியரை மிரட்டிய அதிகாரி !

 

  • கருத்துக்கள உறவுகள்

பொலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட வைத்தியர்; வாசலை வழிமறித்த மக்கள்! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சற்றுமுன் ! பொலிஸ் நடுவே வைத்தியர் ! வெளியே செல்ல அனுமதி மறுப்பு ! பதற்றத்தில் வைத்தியசாலை !

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது மருத்துவர்கள் இலங்கையில் வேலை பார்த்தவர்கள் கருத்துக்களத்தில் உறுப்பினர் என்றால் உங்கள் கருத்துக்களை கூறலாமே?

வைத்தியர் அர்ச்சனா குட்டையை கிளறி உள்ளார் போல் தோன்றுகின்றது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

யாராவது மருத்துவர்கள் இலங்கையில் வேலை பார்த்தவர்கள் கருத்துக்களத்தில் உறுப்பினர் என்றால் உங்கள் கருத்துக்களை கூறலாமே?

வைத்தியர் அர்ச்சனா குட்டையை கிளறி உள்ளார் போல் தோன்றுகின்றது. 

 

இங்கு அவதாருக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு நானும் இலங்கையில் வைத்தியர் என்று புருஸ் விடுற கூட்டம் நிறைய உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரியில் பதற்றம்,வைத்தியர் அர்ச்சுணா சற்றுமுன் உருக்கமான வேண்டுகோள்!!!

 

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

 
I'm on Medical Leave today.
Not going to report to duty.
#PDHS
 
All reactions:
6You and 5 others
 
 
 
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதற்றம் : பதில் வைத்திய அத்தியட்சகரை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்ற முயற்சி!

Published By: VISHNU   08 JUL, 2024 | 01:51 AM

image
 

சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண 

இரவு 7 மணியளவில் குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகாரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராகவும, அவருடைய தாபன விதி கோவைகளுக்கு எதிரான நடைமுறைகளுக்கு எதிராகவும், அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும, பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பனிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

எனவே இதன் பிரகாரம் நாளை திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து. மறுநாள் காலை 8:00 மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் எனஅரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதற்றம் : பதில் வைத்திய அத்தியட்சகரை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்ற முயற்சி! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.