Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் - மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

16 JUL, 2024 | 07:52 AM
image
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால் டிரம்ப் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6435e194-fcc3-4bfe-8874-2026bfc07199.jpg

04f0bdef-b511-4733-b508-5aafc9be0782.jpe

கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

9fa73023-57e0-432c-a07e-51e096b1d3ed.jpg

துணை ஜனாதிபதி வேட்பாளராக செனெட்டர் ஜேடி வின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொதுநிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அவர் துணை ஜனாதிபதி வேட்பாளர் செனெட்டர் ஜேடி வன்சுடன் மேடையில் தோன்றினார்.

மாநாட்டில் கலந்துகொண்டுள்ள குடியரசுகட்சியினர் அமெரிக்கா அமெரிக்கா எங்களுக்கு டிரம்ப் வேண்டும் என கோசமெழுப்பினர்.

துப்பாக்கி பிரயோகத்தினால் காதில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வலதுகாதில் பான்டேஜூடன் டிரம்ப் காணப்படுகின்றார்.

https://www.virakesari.lk/article/188561

  • Replies 100
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உஷா வான்ஸ்: டிரம்பின் துணை அதிபர் வேட்பாளருக்கு வழிகாட்டியாக விளங்கும் இந்திய வம்சாவளி மனைவி

வான்ஸ் உஷா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உஷா சில்லுக்குரி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்
16 ஜூலை 2024, 05:26 GMT

தன்னைக் கடுமையாக விமர்சித்து வந்த ஒஹையோ செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் 39 வயதான வான்ஸ், துணை அதிபர் வேட்பாளராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெயர் உஷா சில்லுக்குரி.

இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற பெற்றோரின் மகளான உஷா, கலிஃபோர்னியாவின் சான்டியாகோவின் புறநகரப் பகுதியில் வளர்ந்தவர்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு அரங்கில் ஜே.டி. வான்ஸ் நடந்து வந்தபோது அவரின் அரசியல் வளர்ச்சி குறித்து அங்கிருந்த ஏராளமானோர் புகழ்ந்து பேசினார்கள்.

ஆனால், ஒஹையோவின் செனட்டரும், குடியரசு கட்சி தேர்வு செய்யப்பட்ட இவரோ தன்னுடைய வளர்ச்சிக்கு தன்னுடைய மனைவி உஷா வான்ஸ் தான் காரணம் என்று கூறுகிறார். உஷாவின் உயர்ந்த தகுதிகளைக் கண்டு வாழ்வில் பணிவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார் ஜே.டி.வான்ஸ்.

38 வயதான உஷா, அரசியல் வெளிச்சத்தை விரும்பவில்லை என்றாலும் கூட, தன்னுடைய அரசியல் வாழ்வில் முக்கிய தாக்கத்தை உஷா ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறார் ஜே.டி.வான்ஸ்.

"நான் ஜே.டியை நம்புகிறேன். அவரை உண்மையாக நேசிக்கிறேன். எங்களின் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்," என்று கடந்த மாதம் நடைபெற்ற ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் குறிப்பிட்டார் உஷா.

 
உஷா வான்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அரசியல் வெளிச்சத்தை விரும்பவில்லை என்றாலும் கூட, தன்னுடைய அரசியல் வாழ்வில் முக்கிய தாக்கத்தை உஷா ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறார் ஜே.டி.வான்ஸ்.

2013-ஆம் ஆண்டு யேல் சட்டப்பள்ளியில் நடைபெற்ற வெள்ளை அமெரிக்காவில் சமூக வீழ்ச்சி (social decline in white America) என்ற விவாத நிகழ்வின் போது இவ்விருவரும் சந்தித்துக் கொண்டனர் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் ரஸ்ட் பெல்ட் என்ற பகுதியில் தனது இளமைப் பருவம் எப்படி இருந்தது என புத்தகம் ஒன்றை எழுதினார் வான்ஸ்.

2016-ஆம் ஆண்டு ஹில்பில் எலேகி (Hillbilly Elegy) என்ற தலைப்பில் வெளியான அந்த புத்தகத்தில் யேல் பள்ளியில் நடைபெற்ற விவாதத்தின் தாக்கம் இருப்பதை காண முடியும். 2020-ஆம் ஆண்டு இந்த புத்தகத்தை தழுவி ரான் ஹோவர்ட் திரைப்படம் ஒன்றை உருவாக்கினார்.

பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் உஷாவை தன்னுடைய ஆத்ம தேடலின் வழிகாட்டியாக கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார் வான்ஸ்.

உஷாவின் லிங்க்ட்-இன் கணக்குபடி அவர் யேல் பல்கலைக்கழகத்தில் வரலாறு பிரிவில் பி.ஏ பட்டம் பெற்றிருக்கிறார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேட்ஸ் உதவித்தொகை பெற்ற மாணவரான இவர் தொடக்ககால நவீன வரலாற்றில் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்.

 
டிரம்ப், வான்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜே.டி.வான்ஸ் டெமாக்ரேட் கட்சியினரின் கொள்கைகளை எப்போதும் காட்டமாக விமர்சனம் செய்வார்.

கலிஃபோரினியாவின் சான்டியாகோவில் இந்திய வம்சாவளி தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் உஷா சிலுகுரி. 2014ம் ஆண்டு வான்ஸை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஈவன், விவேக் என இரண்டு மகன்களும் மிராபெல் என்ற மகளும் இருக்கின்றனர்.

ஜே.டி.வான்ஸ் டெமாக்ரேட் கட்சியினரின் கொள்கைகளை எப்போதும் காட்டமாக விமர்சனம் செய்வார். ஆனால் உஷாவோ, டெமாக்ரேட் கட்சியில் முன்னர் தன்னை பதிவு செய்திருந்தார். தற்போது அவர், "தீவிர முற்போக்குடன்" செயல்படுவதாக அறியப்படும் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கொலாம்பியாவின் மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ப்ரெட் கவனாக்கிடம் எழுத்தராக (clerk) பணியாற்றி இருக்கிறார் உஷா. பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜான் ராபர்ட்ஸ் என்பவரிடமும் எழுத்தராக பணியாற்றியிருக்கிறார். இவ்விரு நீதிபதிகளும் அமெரிக்க நீதித்துறையில் பழமைவாத பெரும்பான்மையின் பகுதியாக உள்ளனர்.

 
உஷா, வான்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சில மணி நேரங்களிலேயே ஆயிரம் பக்கங்களை கொண்ட புத்தகங்களை படித்துவிடுவார் என்றும் தன் மனைவி பற்றி பெருமையுடன் தெரிவிக்கிறார் ஜே.டி.

2020-ஆம் ஆண்டு மேகைன் கெல்லி ஷோ நிகழ்ச்சியில் பேசிய ஜே.டி.வான்ஸ், "உஷாதான் நிச்சயமாக என்னை இயல்புக்கு அழைத்து வருகிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"என்னைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக் கொண்டு, தலைக்கனத்துடன் செயல்படும் போதெல்லாம், என்னைவிட என் மனைவி அதிகமாக சாதித்து உள்ளார் என்று நினைத்துக் கொள்வேன்," என்று ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

உஷா எவ்வளவு புத்திசாலி என்பதை மக்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. சில மணி நேரங்களிலேயே ஆயிரம் பக்கங்களை கொண்ட புத்தகங்களை படித்துவிடுவார் என்றும் தன் மனைவி பற்றி பெருமையுடன் தெரிவிக்கிறார் ஜே.டி.

"என் இடப்புற தோளில் இருக்கும் பலமிக்க பெண்ணின் குரல் உஷாவுடையது" என்று உஷா வழி நடத்தும் விதம் குறித்து ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

துணை அதிபர் பதவிக்கு மிக கடுமையாக பரப்புரை செய்ய இருக்கின்ற நிலையில் ஜே.டி. வான்ஸ்க்கு முன்பு எப்போதையும் விட அதிகமாக உஷாவின் அறிவுரைகள் தேவைப்படக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜே.டி.வான்ஸ்: டிரம்பே வேண்டாம் என்றவர் துணை அதிபர் வேட்பாளர் ஆன கதை

வான்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜே.டி.வான்ஸ் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மைக் வென்ட்லிங்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜே.டி.வான்ஸ். ஒரு காலத்தில், டொனால்ட் டிரம்பை மிக கடுமையான விமர்சனம் செய்த வான்ஸ் இப்போது டிரம்புடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வளர்ந்தது எப்படி?

"டிரம்ப் வேண்டாம் என்று கூறுபவன் நான். அவரை எனக்கு எப்போதும் பிடித்ததில்லை"

"என்ன ஒரு முட்டாள்?"

"கண்டனத்துக்கு உரியவர் டிரம்ப்!"

இப்படியாக டிரம்ப் பற்றி ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜே.டி.வான்ஸ். 2016ம் ஆண்டு வான்ஸ் எழுதிய ஹில்பில்லி எலெஜி (Hillbilly Elegy) என்ற புத்தகம் அவரை புகழின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றபோது ட்விட்டரிலும், நேர்காணலிலும் டிரம்ப் குறித்து வான்ஸ் இதைத் தான் கூறினார்.

அதே ஆண்டு பேஸ்புக்குக்கு வான்ஸ் அனுப்பிய குறுஞ்செய்தியில் "டிரம்ப் ஒரு மோசமான ஆள் அல்லது அமெரிக்காவின் ஹிட்லர் என்று நான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஒரு சில வருடங்களில் டிரம்பின் நெருங்கிய அரசியல் வட்டாரங்களில் ஒருவராக மாறியிருக்கிறார் வான்ஸ்.

ஓஹையோ மாகாணத்தில் முதன்முறையாக செனட்டராக தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது டிரம்பின் பக்கம் நிற்கிறார். துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால், 2028-ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது.

உண்மையில் ஒரு மாற்றத்தை கண்டிருக்கிறார் வான்ஸ். கடினமான இளமைப் பருவத்தில் இருந்து, அமெரிக்காவின் அரசியலில் மிகப்பெரிய உயரத்தை இவர் அடைந்தது எப்படி?

BBC Tamil Whatsapp channel

பட மூலாதாரம்,வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புகழுக்கு அழைத்துச் சென்ற புத்தகம்

வான்ஸ், ஓஹையோவின் மிடில்டவுனில் ஜேம்ஸ் டேவிட் பெளமனாக பிறந்தவர். அம்மா போதைப் பழக்கத்துக்கு ஆளானவர். அவரின் அப்பா, வான்ஸ் சிறுவயதாக இருக்கும் போதே, வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் வான்ஸ். தன்னுடையை ஹில்பில்லி எலெஜி என்ற நினைவுக்குறிப்பு புத்தகத்தில் "மாமாவ்", "பாப்பாவ்" என்று வாஞ்சையோடு பாட்டி, தாத்தாவை நினைவு கூறியிருப்பார் வான்ஸ்.

தொழிற்சாலைகள் அதிகம் செயல்பட்டு வந்த ஓஹையோவில் மிடில்டவுன் இருந்தாலும் தன்னுடைய பூர்வீகம் பற்றி பேசும் போது தெற்கே இருக்கும் அப்பலாச்சியா மலைப்பிரதேசத்தை குறிப்பிடுகிறார் வான்ஸ். அமெரிக்காவின் தெற்கு பிராந்தியத்தில் இருந்து மத்தியமேற்கு பகுதி வரை பரவியிருக்கும் மலைத்தொடரே இந்த அப்பலாச்சியா. அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராந்தியங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

தன்னுடைய புத்தகத்தில் அவர் சந்தித்த சவால்கள், வலி நிறைந்த முயற்சிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எடுத்த மோசமான முடிவுகள் பற்றி மிக நேர்மையுடன் எழுதியிருப்பார் வான்ஸ்.

பழமைவாதிகள் குறித்த பார்வையும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும். அவர்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் நபர்கள் என்றும், நலத்திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதிகளை நம்பி வாழ்பவர்கள் என்றும், தங்களின் சொந்த முயற்சியில் முன்னேறுவதில் தோல்வி அடைந்துவிட்டனர் என்றும் அந்த புத்தகத்தில் வான்ஸ் விவரித்திருப்பார்.

அப்பலாச்சியர்கள் பற்றி எழுதும் போது, "அவர்கள் மோசமான சூழலை படுமோசமான வழியில் எதிர்கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சமூக வீழ்ச்சியை எதிர்ப்பதற்கு பதிலாக ஆதரிக்கும் கலாச்சாரத்தின் விளைவுகள் அவர்கள் என்றும் மேற்கோள்காட்டியுள்ளார் வான்ஸ்.

"உண்மை மிகவும் கடினமானது. மலைவாழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் நிலைப் பற்றி அவர்கள் கூறுவது மிகக் கடினமான உண்மை," என்று அவர் எழுதினார்.

மேட்டுக்குடி மக்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தையும் கடுமையாக விமர்சனம் செய்த வான்ஸ், தன்னுடன் வாழ்ந்தவர்களின் நீடித்த தோல்விக்கு முற்றுப்புள்ளியாக தன்னை முன்னிறுத்தியிருப்பார்.

 
ஜே.டி.வான்ஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக மாற்றியது மட்டுமின்றி ஹில்பில்லி எலேஜி புத்தகம் அவரை கருத்தாளராகவும் மாற்றியது.

புத்தகம் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

இந்த புத்தகம் வெளிவந்த போது வான்ஸின் விடாமுயற்சி அவரை மிடில்டவுனில் இருந்து வெகுதூரம் அழைத்துச் சென்றுவிட்டது. முதலில் அமெரிக்க ராணுவத்துக்கு, பின்னர் ஈராக்குக்கு. பின்பு ஓஹையோ பல்கலைக்கழகத்திற்கும், யேல் சட்டப் பள்ளிக்கும், கலிஃபோர்னியாவில் கேபிடலிஸ்ட்டாவும் அவரை வெகுதூரத்துக்கு அழைத்துச் சென்றன.

நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக மாற்றியது மட்டுமின்றி ஹில்பில்லி எலெஜி புத்தகம் அவரை கருத்தாளராகவும் மாற்றியது. உழைக்கும் வர்க்க வெள்ளை வாக்காளர்களுக்கு டிரம்ப் அளித்த வாக்குறுதிகளைப் பற்றி வான்ஸிடம் தொடர்ந்து கருத்து கேட்கப்பட்டது.

அன்றைய குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட டிரம்பை விமர்சிக்கும் எந்த வாய்ப்பையும் அவர் விட்டுவைக்கவில்லை.

2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேர்காணல் ஒன்றில், "இந்த தேர்தல் வெள்ளை, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார் வான்ஸ்.

"இது (தேர்தல்) என்ன செய்கிறது என்றால் மெக்சிகோ குடியேறிகள், சீன வர்த்தகம், ஜனநாயகக் கட்சியில் உள்ள பணக்காரர்கள் என்று யாரோ ஒருவர் மீது மக்கள் கைகாட்ட ஒரு வாய்ப்பை வழங்குகிறது," என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.

ஜேடி.வான்ஸ், டிரம்ப்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,டொனால்ட் டிரம்புடன் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜே.டி.வான்ஸ்

வென்ச்சர் கேபிடலில் இருந்து அரசியலுக்கு வந்தது எப்படி?

2017ம் ஆண்டு ஓஹையோவுக்கு திரும்பி வந்த வான்ஸ் தொடர்ச்சியாக வென்ச்சர் கேபிடல் துறையில் பணியாற்றினார். யேல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பழகி, திருமணம் செய்து கொண்ட வான்ஸ் - உஷா தம்பதியினருக்கு ஈவான், விவேக் என இரண்டு மகன்களும், மிராபெல் என்ற மகளும் உள்ளனர்.

சான் டியாகோவில் இந்திய வம்சாவளியினருக்கு மகளாக பிறந்த உஷா, தன் கணவரின் பின்னணிக்கு முற்றிலும் மாறாக இருந்த சூழலில் வளர்க்கப்பட்டார். உஷா பட்டபடிப்பை யேலில் படித்தார். பட்டமேற்படிப்பை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தார். சட்டப்பள்ளியில் படிப்பை முடித்தவுடன் அவர், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஜான் ராபர்ட்ஸிடம் எழுத்தராக பணியாற்றினார். உஷா தற்போது ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

நீண்ட காலமாகவே அரசியல் வேட்பாளராக வான்ஸின் பெயர் அடிபட்டு வந்தது. 2022ம் ஆண்டு, ஓஹையோவின் குடியரசுக் கட்சியின் செனட்டர் ராப் போர்ட்மென், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்க, அதனை ஒரு வாய்ப்பாக பார்த்தார் வான்ஸ்.

ஆரம்பத்தில் அவரின் பரப்புரை மிகவும் மெதுவாக நகர்ந்தது. அவரின் முன்னாள் முதலாளி, சிலிக்கான் வேலியின் பீட்டர் தியேல், சுமார் 1 கோடி அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்க பரப்புரை சூடுபிடிக்க துவங்கியது. ஆனால் டிரம்ப் மீதான அவர் வைத்த கடுமையான விமர்சனம், ஓஹையோவின் குடியரசுக் கட்சியில் தேர்வு செய்யப்படுவதற்கு தடங்கலாக மாறியது.

தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கூறினார் வான்ஸ். நிலையை சீராக்கி டிரம்பின் அனுமதியையும் நம்பிக்கையும் பெற்றார். பிறகு குடியரசுக் கட்சியில் முன்னிலை தலைவராக உயர்ந்து இறுதியில் செனட்டிற்கு சென்றார்.

இந்த பயணத்தில், Make America Great Again என்ற கொள்கையில் முக்கிய பங்காற்றி, டிரம்பின் அஜென்டாவில் முழுதாக தன்னை இணைத்துக் கொண்டார்.

டொனால்ட் டிரம்பும், ஜே.டி.வான்ஸும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஜே.டி.வான்ஸ்

சர்வதேச பிரச்னைகளில் வான்ஸின் நிலைப்பாடு என்ன?

செனட்டில் பழமைவாதிகளின் ஆதரவுகளை கணிசமாக கொண்டிருக்கும் அவர், ஜனரஞ்சக பொருளாதார கொள்கைகளை ஆதரித்து வருகிறார். மேலும் யுக்ரேனுக்கு போரில் உதவுவது குறித்து சந்தேகம் எழுப்பும் நபர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை கொண்ட செனட்டில், அவர் அறிமுகம் செய்த மசோதாகள் அரிதாகவே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அவை, கொள்கை ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக கருத்துகளை சொல்வதாகவே இருந்தது.

சமீபத்தில், காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான நிதியையும், ஆவணங்களற்ற புலம்பெயர் மக்களை பணிக்கு அமர்த்தும் கல்லூரிகளுக்கான நிதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மசோதாவை அறிமுகம் செய்தார்.

சர்வதேச வணிக சட்டங்களை சீனா பின்பற்றாத சூழலில், அமெரிக்க முதலீட்டு சந்தைகளில் இருந்து சீன அரசை நீக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு மார்ச்சில் ஆதரவு அளித்தார் வான்ஸ்.

கத்தோலிக்கராக வான்ஸ் 2019ம் ஆண்டு ஞானஸ்தானம் பெற்றார். ஆரம்பத்தில் தேசிய அளவில் 15 வாரங்களுக்கு பிறகான கருக்கலைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில், மாகாணங்கள்தான் இதில் முடிவெடுக்கும் என்ற டிரம்பின் கருத்தையே அவரும் ஏற்றுக் கொண்டார்.

2022ம் ஆண்டு ஹிட்லர் என டிரம்பை அழைத்தது தொடர்பான செய்தி வந்த போது, வான்ஸின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் அதை மறுக்கவில்லை. ஆனால் வான்ஸின் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

 
ஜேடி.வான்ஸ், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டொனால்ட் டிரம்பும், ஜே.டி.வான்ஸும்

குடியரசுக் கட்சியினரும் மற்றவர்களும் எப்படி இதைப் பார்க்கிறார்கள்?

திங்கள்கிழமை அன்று மில்வாக்கி வளாகத்தை அடைந்த போது வான்ஸிற்கு பெரிய அளவில் வரவேற்பு வழங்கப்பட்டது. ஓஹையோ அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து நின்ற அவரை அறிமுகம் செய்த போது அதிகாரிகள், தலைவர்களுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

"பணிவான ஆரம்ப காலத்தை கொண்டவர். இளையவர்" என்று வடகிழக்கு ஓஹையோவில் உள்ள போர்டாஜ் பகுதியின் கட்சித் தலைவராக உள்ள அமெண்டா சஃப்கூல் கூறினார்.

சனிக்கிழமை அன்று டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்த நிலையில், ஜனநாயக கட்சியினரைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த முதல் குடியரசு கட்சியினர்களில் வான்ஸும் ஒருவர்.

"பைடனின் பரப்புரையில் மையமாக இருந்தது, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகார பாசிசவாதி. அவரை எந்த சூழலிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான். இந்த பிரச்சாரம் தான் பிறகு டிரம்ப் மீதான கொலை முயற்சிக்கு வித்திட்டது," என்றும் ட்வீட் செய்திருந்தார் வான்ஸ்.

இந்த தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் வரை வான்ஸை ஜனநாயக் கட்சியினர் டிரம்பின் பிரதியாகத்தான் காண்பார்கள் என்று திங்கள் கிழமை வான்ஸின் விமர்சனத்துக்கு பதில் கூறிய பைடன் குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கால கமலா ஹாரிஸ் இங்கால உஷா  சில்லுக்குரி நடுவால  சுந்தர் பிச்சை.....ஒரே இண்டியன் கலக்கல் தான் போங்க...🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க அதிபர் தேர்தல்: மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றாலும் ஒருவர் வெற்றி பெறுவது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் நவம்பர் 2024-ல் நடைபெறவுள்ள தேர்தலில் புதிய அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் நபர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக செல்வாக்கை கொண்டிருப்பார் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

தற்போது அமெரிக்க அரசியலில், இரு கட்சிகளின் ஆதிக்கமே உள்ளது. நவீன காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அதிபர்களும் இந்த இரு கட்சியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

தாராளவாத அரசியல் கட்சியான ஜனநாயக கட்சியின் கொள்கை, சிவில் உரிமைகள், பரந்த அளவிலான சமூகப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன.

தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் இந்த கட்சியைச் சேர்ந்தவர். இரண்டாம் முறை அமெரிக்க அதிபராவதற்கு அவர் முயற்சிக்கிறார்.

குடியரசு கட்சி, பழமைவாத அரசியல் கட்சியாகும். பழம்பெரும் கட்சி எனவும் இது அறியப்படுகிறது. குறைந்த வரி, அரசின் அதிகாரத்தைக் குறைப்பது, துப்பாக்கி உரிமை, குடியேறிகள் மற்றும் கருக்கலைப்புக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக இக்கட்சி உள்ளது.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிற்கிறார். வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்கு குடியரசுக் கட்சியில் போதுமான ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எப்போது அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்?

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெறவுள்ளது. வெற்றி பெறும் நபர் அடுத்த நான்கு ஆண்டுகள் அதிபராக இருப்பார். ஜனவரி 2025 முதல் அவரது பதவிக்காலம் தொடங்கும்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

வேட்பாளர்கள் யார்?

2024 அமெரிக்க அதிபர் தேர்தல் 15 வேட்பாளர்களுடன் தொடங்கியது. ஒன்பது குடியரசு கட்சி வேட்பாளர்கள், நான்கு ஜனநாயக கட்சி வேட்பாளர்கள், இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் இருந்தனர். பெரும்பாலோனோர் போட்டியிலிருந்து விலகிவிட்டனர்.

இரண்டு பிரதான கட்சிகளும் தங்களது அதிபர் வேட்பாளரை, மாகாண அளவில் தொடர்ச்சியாக நடக்கும் ப்ரைமரிஸ் மற்றும் காவ்கசஸ் எனப்படும் நடைமுறை மூலம் தேர்ந்தெடுக்கின்றன.

வேட்பாளர் தேர்வு நடைமுறையைப் பொருத்தவரை, இரு கட்சிகளிலும் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்கு வேறுபாடுகள் உள்ளன.

அமெரிக்க அதிபர் பைடன் சில சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வாக போதுமான ஆதரவைப் பெற்றார்.

குடியரசுக் கட்சியில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைசியாக எஞ்சியிருந்த போட்டியாளரான முன்னாள் ஐ.நா தூதர் நிக்கி ஹேலியை எதிர்கொண்டார். இறுதியாகக் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்குத் தேவையான ஆதரவை பெற்றார்.

முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் சகோதரரின் மகனான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் உட்பட சில சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

 
அமெரிக்க அதிபர் பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?

அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதை பணியாகக் கொண்ட ஒரு குழுவினரின் (தனிப்பட்ட வாக்காளர்கள் அல்ல) வாக்குகளைப் பெறுவதற்கு இரு வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள். இதனை எலக்டோரல் காலேஜ் வாக்குகள் என குறிப்பிடுகின்றனர்.

மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட வாக்குகள் இருக்கும். மொத்தமுள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் நபர் அதிபராவார்.

அப்படியென்றால், வாக்காளர்கள் மாகாண அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்; தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல. அதனால்தான் 2016-ல் ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியைத் தழுவினர்.

இரண்டு மாகாணங்களில் மட்டுமே 'வெற்றி பெற்றவர் அனைத்து வாக்குகளையும் எடுத்துக்கொள்வார்' என்ற விதி உள்ளது. அந்த மாகாணங்களில் எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும்.

பெரும்பாலான மாகாணங்கள் இரு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. ஆனால், கடும் போட்டி நிலவும் டஜன்கணக்கான மாகாணங்களிலே கூடுதல் கவனம் உள்ளது. இந்த மாகாணங்கள் 'போர்க்கள' மாகாணங்கள் என அழைக்கப்படுகின்றன.

 
டொனால்ட் ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேறு யார் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்பது குறித்த கவனமே அனைவருக்கும் உள்ளது. ஆனால், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வாக்காளர்கள் இப்போது தேர்ந்தெடுப்பார்கள்.

435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெறும். பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள நிலையில், செனட் சபையில் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையாக உள்ள கட்சி அதிபரின் திட்டங்களுக்கு முரண்பட்டால், அது அதிபருக்குத் தலைவலியாக இருக்கும்.

யார் வாக்களிக்கலாம்?

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிபர் தேர்தலில், 18 வயதை நிரம்பிய அமெரிக்க குடிமக்கள் வாக்களிக்கலாம்.

தேர்தல் முடிவு எப்போது வெளியாகும்?

வழக்கமாக தேர்தல் நடந்த அன்றிரவே வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார். ஆனால், 2020-ல் அனைத்து ஓட்டுகளையும் எண்ண சில நாட்கள் ஆயின.

அதிபர் மாறும் நிலை ஏற்பட்டால் தேர்தலுக்குப் பிந்தைய காலம் 'மாறுதல் காலம்' என அழைக்கப்படும். புதிய நிர்வாகத்தினர், புதிய திட்டங்களை உருவாக்கும் நேரம் இதுவாகும்.

ஜனவரி மாதம் வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அதிபர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று

Joe-Biden-300x200.jpg

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

81 வயதான ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அவருக்கு இருதடவைகள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக வௌ்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, Las Vegas-இல் இடம்பெறவிருந்த ஆதரவாளர்களுடனான சந்திப்பும் பிரசார நடவடிக்கையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/306285

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பைடனை மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டதைச்  சூசகமாகச் சொல்கிறார்கள் . 

🤣

Edited by Kapithan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜோ பைடன்: கோவிட் தொற்றுக்கு ஆளானதால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு வலுக்கும் குரல்கள்

ஜோ பைடன்: கோவிட் தொற்றுக்கு ஆளானதால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு வலுக்கும் குரல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேர்தலில் இருந்து விலக வேண்டும் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் பைடனை வலியுறுத்தி வருகின்றனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆன்னா ஃபாகுவே மற்றும் அரசு துறை செய்தியாளர் டாம் பேட்மேன்
  • பதவி, வாஷிங்டன் மற்றும் லாஸ் வேகஸில் இருந்து
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பரப்புரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பரப்புரையில் தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அவர் வேட்பாளராகத் தொடர முடியுமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

அமெரிக்க காங்கிரஸில் உள்ள முதல்நிலை தலைவர்களான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, செனட் பெரும்பான்மை தலைவர் சக் ஸூச்சமர், பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் பைடனை தனித்தனியாகச் சந்தித்து அவர் வேட்பாளராக நீடிப்பது குறித்து தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசி இந்த அதிபர் தேர்தலில் பைடன் டொனால்ட் டிரம்பை வீழ்த்த முடியாது என்று அவரிடமே பேசியதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் டிரம்புக்கு எதிரான விவாத நிகழ்வில் பைடன் பேசத் திணறியது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி ஏற்படக் காரணமாக அமைந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக்  செய்யவும்.

கோவிட் தொற்றுக்கு ஆளான பைடன்

ஜோ பைடனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை அன்று அது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்திப்பிரிவு செயலாளர் கரீன் ஜான் பியர் பேசும்போது, பைடனுக்கு மிதமான அறிகுறிகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பைடன், டெலவாரில் இருக்கும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அங்கு தன்னுடைய கடமைகளை பைடன் முழுமையாக மேற்கொள்வார் என்று அறிவித்தார் கரீன். கோவிட் தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசியையும் ஏற்கெனவே போட்டுக் கொண்ட பைடனுக்கு இதற்கு முன்பு இருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர் கடந்த புதன்கிழமை காலை லாஸ் வேகஸில் நடைபெற்ற பரப்புரையில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அன்று பிற்பகல் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவே, லத்தீன் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் யுனிடோஸ்யூஎஸ் (UnidosUS) அமைப்பினருடன் பேசும் நிகழ்வு கைவிடப்பட்டது.

டிரம்ப் மீதான கொலை முயற்சிக்குப் பிறகு ஜோ பைடன் முழுவீச்சுடன் பரப்புரையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த சூழலில் அவருக்கு ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து ஸ்பானிய பூர்வீகத்தைக் கொண்ட ஹிஸ்பானிக் மக்களின் வாக்கு வங்கிகளில் சரிவைச் சந்தித்த அவர், அவர்களின் நம்பிக்கையைப் பெற அதிக நேரத்தை லாஸ் வேகஸில் செலவிட்டார்.

தொற்று உறுதி செய்யப்பட்டதும், மிகவும் மெதுவாக ஆனால் எச்சரிக்கையுடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிச் சென்றார். மாஸ்க் அணியாமல் விமானத்தில் ஏறியதும், "நன்றாக இருக்கிறேன்," என்று கூறினார்.

டிரம்புக்கு எதிராகக் கடந்த மாதம் நடைபெற்ற விவாத நேரலையில் மிகப் பதற்றமாக உரையாடியதைக் காட்டிலும், கோவிட் தொற்றால் நிவாடாவில் இருந்து திரும்பிச் சென்ற பிறகு, மீண்டும் அதிபராகும் அவரின் முயற்சியில் பெருத்த அடி விழுந்துள்ளது.

பைடனின் பரப்புரையானது குழப்பமான, அதே நேரத்தில் அனுமானிக்க முடியாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

 

'மீண்டும் போட்டியிடுவதைக் கைவிட வேண்டும்' - வலுக்கும் வேண்டுகோள்கள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,உணவகம் ஒன்றில் ஆதரவாளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அதிபர் ஜோ பைடன்

கடந்த சில வாரங்களாக பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் தனித்தனியாக பைடனை சந்தித்த ஸூச்சமரும், ஜெஃப்ரீஸூம் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் பைடன் போட்டியிடுவது காங்கிரஸின் ஏதேனும் ஓர் அவையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைக்கூட கேள்விக்குறி ஆக்கிவிடும் என்று கவலை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்திகள் வெளியான நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், "பைடன் இரண்டு தலைவர்களிடமும், கட்சி தேர்வு செய்யப்பட்டிருக்கும் வேட்பாளர் அவர் என்றும், வெற்றி பெறத் திட்டமிட்டு வருவதாகவும், இரு தலைவர்களுடன் சேர்ந்து உழைக்கும் குடும்பங்களுக்கு உதவும் 100 நாள் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இருப்பதாகவும் கூறியுள்ளதாக," தெரிவித்தார்.

ஜெஃப்ரீஸின் செய்தித் தொடர்பாளர், "ஜெஃப்ரீஸும் பைடனும் பேசியது தனிப்பட்ட உரையாடல் என்பதால் அது அப்படியே இருக்கட்டும்," என்று கூறினார். ஸூச்சமரின் அலுவலகமோ இந்தச் செய்திகளை வெற்று ஊகம் என்று அழைத்தது. அதே நேரத்தில் தன்னுடைய கட்சியினர் என்ன நினைக்கின்றனர் என்பதை பைடனிடம் ஸூச்சமர் நேரடியாகத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டது.

சி.என்.என். செய்தியின்படி, பெலோசியும் சமீபத்தில் பைடனுடன் பேசுகையில், அதிபர் வேட்பாளராக பைடன் தொடரும்போது அது ஜனநாயகக் கட்சியின் தோல்விக்கு வித்திடும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

பைடன் இதை எதிர்க்க, பெலோசி, அதிபரின் நீண்ட நாள் ஆலோசகரிடம் இருந்து இதுதொடர்பான தரவுகளைக் கேட்டதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய செய்தியில் இது தொடர்பான தகவல்களை நான்கு நபர்களிடம் அலைபேசி மூலம் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால் பெலோசி பைடனுடன் எப்போது பேசினார் என்பது தெரியவில்லை. பெலோசியின் அலுவலகம் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு பெலோசி அதிபருடன் பேசவில்லை என்று பதில் கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலரும் பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று வெளிப்படையாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கலிஃபோர்னியாவை சேர்ந்த கட்சித் தலைவர் ஆடம் ஸ்கிஃப், “மற்றவர்களுக்கு வாய்ப்பை வழங்குங்கள் பைடன்” என்று கூறியிருக்கிறார்.

"பைடன் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான அதிபர். அவர் இந்த வாய்ப்பை மற்ற தலைவருக்கு வழங்கித் தன்னுடைய தலைமைப் பண்பின் மரபை நிலை நிறுத்த முடியும்," என்று கூறினார் ஆடம்.

பி.இ.டி. நேர்காணலில் பேசிய பைடனோ, பிளவுபட்டிருக்கும் இந்த நாட்டில் இந்த வாய்ப்பை மற்றவருக்கு வழங்க முடியும் என்று தாம் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஏதேனும் ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதாக அவரின் மருத்துவர்கள் கூறினால் போட்டியில் இருந்து விலகுவது பற்றி யோசிக்கலாம் என்றும் கூறினார்.

பரப்புரையைக் கைவிட்டு வீடு திரும்பிய பைடன்

ஜோ பைடன்: கோவிட் தொற்றுக்கு ஆளானதால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு வலுக்கும் குரல்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடும் ஜோ பைடன்

பைடனுக்கு கோவிட் தொற்று இருக்கும் தகவல் உறுதியாவதற்கு முன்பு, அவர் தனது பரப்புரை நடக்கவிருந்த பகுதியில் இருந்த ஒரு மெக்சிகன் உணவகத்தில் இருந்ததாக லாஸ் வேகஸ் செய்தியாளர்கள் கூறினர். கோவிட் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பரப்புரையைக் கைவிட்டு அவர் அங்கிருந்து விரைவாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த உணவகத்தின் சுவர்களில் மெக்சிகன் ஓவியங்களும் கித்தார் இசைக்கருவிகளும் மாட்டப்பட்டிருந்தன. பல வண்ண பேனர்களும் சுவர்களில் ஜொலித்துக் கொண்டிருந்தன. ஒரு சுவரில் மட்டும் ஜோ பைடன் - கமலா ஹாரீஸின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அங்கே மின்விசிறி மெதுவாகச் சுழல, லத்தினோ பாப் இசை ஸ்பீக்கர்களில் இசைக்கப்பட்ட வண்ணம் இருந்தது. பைடன் சமையலறை வழியாக உணவகத்தின் முக்கியப் பகுதிக்கு வந்தார்.

அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த நபர்கள், அவரின் வருகை குறித்து ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். அவர்களில் சிலரிடம் பைடன் கை குலுக்கினார். ஒருவருக்கு முத்தம் கொடுத்தார். மற்றவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

ஆனால், பார்ப்பதற்கு அவர் சிரமப்படுவதைப் போல் இருந்தார். அதற்கு ஒரு நாள் முன்பு தேசிய சிவில் உரிமைகள் குழுக்களுடன் உற்சாகமாகப் பேசிய பைடனோடு ஒப்பிடுகையில் புதன்கிழமையன்று அவர் மிகவும் மெதுவாகச் செயல்பட்டார்.

பைடனின் மருத்துவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பைடனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பாக்ஸ்லோவிடின் முதல் டோஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

பைடனின் மருத்துவர் கெவின் ஓ'கான்னர் பைடனுக்கு மேல் சுவாசத் தொற்று அறிகுறிகளும், சளி, இருமலும் இருப்பதாக புதன்கிழமை தெரிவித்தார். பைடனுக்கு பாக்ஸ்லோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

புதன் அன்று நடைபெற்ற பரப்புரையின் முதல் நிகழ்வில் பைடன் நன்றாக இருந்தார். அதன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர் ஓ'கான்னர் குறிப்பிட்டார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பைடன், அமெரிக்க மக்களுக்கான பணியை தொற்றிலும் இருந்து மீளும் வேளையிலும்கூடச் செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மற்றொரு பதிவில் "ஈலோன் மஸ்க் மற்றும் அவரது பணக்கார நண்பர்கள் இந்தத் தேர்தலை விலைக்கு வாங்க முயல்கிறார்கள். இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் இங்கே கூறவும்" என்று பதிவிட்டார். எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ள டொனேஷன் போர்ட்டலை குறிப்பிட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

பைடனை மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டதைச்  சூசகமாகச் சொல்கிறார்கள் . 

🤣

விழுந்தாலும் மீசையில் மண்படக் கூடாது பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊடகங்கள் எனது தாத்தாவை வேறுவிதமாக சித்தரிக்கின்றன ஆனால் அவர் யார் என்பது எனக்கு தெரியும் - அமெரிக்காவை மீண்டும் மிகச்சிறந்த தேசமாக மாற்றுவதற்கு அவர் ஒவ்வொருநாளும் போராடுவார் - குடியரசுக்கட்சி மாநாட்டில் டிரம்பின் பேத்தி

Published By: RAJEEBAN   19 JUL, 2024 | 12:41 PM

image
 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேத்தி குடியரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றியுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டொனால்ட் டிரம்பின் மகளின் புதல்வியான ஹை டிரம்ப் தனது தந்தைக்கு முன்னதாக உரையாற்றியுள்ளார்.

எனது தாத்தாவின் நீங்கள் அறியதாத மறுபக்கத்தை பற்றி உங்களிற்கு தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன், என்னைபொறுத்தவரை அவர் எல்லா தாத்தாக்களையும் போன்றவர் பெற்றோர் கவனிக்காத நேரத்தில் இனிப்புகளை வழங்குபவர் என  டிரம்பின் பேத்தி தெரிவித்துள்ளார்.

kai-trump1721372400-0.jpg

பாடசாலைகளில் நாங்கள் சிறப்பாக கல்விகற்கின்றோமா என்பதை அறிவதில் அவருக்கு ஆர்வம் அதிகம், என தெரிவித்துள்ள அவர் நான் பாடசாலையில் இருக்கும் வேளைகளில் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது கோல்ப் விளையாட்டு குறித்து கேட்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் பாடசாலையில் இருக்கின்றேன் என தெரிவித்ததும் அவர் பின்னர்  அழைப்பதாக  தெரிவிப்பார் என ஹய் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பலர் எனது தாத்தாவை நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர், ஆனால் அவர் இன்னமும் உறுதியாக உள்ளார் என தெரிவித்துள்ள டிரம்பின் பேத்தி தாத்தா நீங்கள் எங்களிற்கு அப்படியொரு முன்னுதாரனம் உத்வேகம் நான் உங்களை நேசிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் எனது தாத்தாவை வேறுவிதமாக சித்தரிக்கின்றன, ஆனால் அவர் யார் என்பது எனக்கு தெரியும் எனவும் ஹை டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் அன்புமிக்கவர் அக்கறை மிக்கவர், இந்த நாட்டிற்கு மிகச்சிறந்ததை வழங்க விரும்புகின்றார், அமெரிக்காவை மீண்டும் மிகச்சிறந்த தேசமாக மாற்றுவதற்கு அவர் ஒவ்வொருநாளும் போராடுவார் எனவும் டிரம்பின் பேத்தி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188841

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜனநாயக கட்சியின் புதிய வேட்பாளராக கமலா ஹரிஸினை அறிவித்தார் பைடன்

Published By: RAJEEBAN   22 JUL, 2024 | 06:51 AM

image
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ள ஜோபைடன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹரிசினை அறிவித்துள்ளார்.

இந்த வருடம் எங்கள் கட்சியின் வேட்பாளராக கமலா வருவதற்கு நான் எனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கவிரும்புகின்றேன் என டுவிட்டரில் பைடன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியினரே ஒன்றிணைந்து டிரம்பினை தோற்கடிக்கவேண்டிய நேரம் இது இதனை செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189044

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமலா ஹரிசிற்கு கறுப்பின பெண்கள் ஆதரவு

22 JUL, 2024 | 11:51 AM
image
 

கமலா ஹரிசிற்கு  அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான கறுப்பின பெண்கள் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

மெய்நிகர் ஊடாக இவர்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவுவெளியிட்டுள்ளனர்.

ஜனநாயக கட்சியின்செயற்பாட்டாளர்கள் ஹரிசின் சிரேஸ்ட பணியாளர்களும் இந்த மெய்நிகர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

வின்வித் எ பிளக்வுமன் என்ற அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால் ஹரிஸ் டிரம்பின் வயது மற்றும் அவருக்கு எதிரான  குற்றவியல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை இலக்குவைத்து பிரச்சாரம் மேற்கொள்வார் என கமலா ஹரிசின்  சிரேஸ்;ட பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189067

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, ஏராளன் said:

கமலா ஹரிசிற்கு கறுப்பின பெண்கள் ஆதரவு

கறுப்பினத்தவர்களும்

இந்தியர்களும் போட்டிக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவு

Published By: RAJEEBAN   22 JUL, 2024 | 12:12 PM

image

அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து  ஜோபைடன் விலகி கமலா ஹரிஸ் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் பல பிரபலங்கள்  கமலா ஹரிசிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

ஹரிஸ் நம்பகரமானவர், ஆழமாக மக்களால் பரிசோதிக்கப்பட்டவர் என நடிகை ஜேமி லீ ஹேட்ரிஸ் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் வெள்ளையர் அல்லாதவர்களின் உரிமைகளிற்காக வலுவான விதத்தில் குரல்கொடுப்பவர் அமெரிக்கா தேசிய ரீதியில் பெரும் பிளவை சந்தித்துள்ள தருணத்தில் அவரது செய்தி அமெரிக்காவிற்கு நம்பிக்கையை ஐக்கியத்தை அளிக்கும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

இது பெண்களின் உலகம் நீங்கள் அதில் வாழ்வது அதிஸ்டம் என பாடகர் கட்டி பெரி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் நகைச்சுவை நடிகர் போட்டியிலிருந்து விலகும் ஜோ பைடனின் முடிவு குறித்து லெஜென்ட் என பதிவிட்டுள்ளார்.

எங்கள் ஜனநாயகத்தை காப்பாற்றியமைக்காக ஜோ பைடனிற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக விளங்கவேண்டும் என ஒஸ்கர் வென்ற நடிகை பார்பரா ஸ்டிரெய்ஸான்ட் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189072

  • கருத்துக்கள உறவுகள்
Posted

452513088_887886340043006_43613468538502

 

452531492_887884373376536_72660535981403

 

452421294_887843320047308_75676980765215

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள் மோசடிக்காரர்கள் என அனைவரையும் எனது சட்டத்துறை வாழ்க்கையில் எதிர்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளேன் - டிரம்பிற்கு கமலா ஹரிஸ் மறைமுக செய்தி

Published By: RAJEEBAN   23 JUL, 2024 | 12:02 PM

image
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் குற்றவியல் வழக்கறிஞராக அவரது கடந்த கால செயற்பாடுகளை நினைவுபடுத்தியுள்ளதுடன் டிரம்ப் எதிர்கொண்டுள்ள நீதிமன்ற வழக்குகளையும் நினைவுபடுத்தியுள்ளார்.

ஜோபைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வெளியேறிய பின்னர் ஆற்றியுள்ள முதலாவது உரையில்  கமலா ஹரிஸ் இதனை  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஏற்ற விதத்தில் ஜனநாயக கட்சியினரின் பரந்துபட்ட ஆதரவு தனக்கு கிடைத்துள்ளமை குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

குற்றவியல் வழக்கறிஞராக தனது கடந்த காலத்தையை நடவடிக்கைகளை  டிரம்பிற்கு எதிராக பயன்படுத்த தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது பிரச்சார உத்தி வழக்கறிஞர் எதிர் குற்றவாளி என்ற அடிப்படையில் காணப்படலாம் என்பதை அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

நான் எல்லாவகையான குற்றவாளிகளையும் எதிர்கொண்டேன். அவர்களிற்கு எதிராக செயற்பட்டேன்- பெண்களிற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள், நுகர்வோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மோசடிக்காரர்கள், தங்கள் நன்மைகளிற்காக விதிமுறைகளை மீறிய ஏமாற்றுக்காரர்கள் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

டிரம்பிற்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் காணப்படுவதையே அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் போன்றவர்களை எனக்கு தெரியும் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது எனக்கு தெரியும் என  கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189151

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவாரா? அதிபர் பைடன் புதிய வேண்டுகோள்

அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு தேவையான ஆதரவை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் பின் வாங்கிய நிலையில் தன்னுடைய ஆதரவை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கினார். ஆனாலும், பைடனுக்கு ஆதரவு அளித்த பிரதிநிதிகள் அனைவரும் கமலா ஹாரிஸை ஆதரிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமலா ஹாரிஸுக்கு 27 மாகாண பிரதிநிதிகள் ஆதரவு

குறைந்தது 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் தங்களின் ஒருமித்த ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்குவதாக அறிக்கை வெளியிட்டிருப்பதாக சிபிஎஸ் நியூஸ் கூறியுள்ளது.

ஞாயிறு அன்று தேர்தலில் இருந்து பைடன் பின்வாங்கிய சூழலில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்து வருவதையே சுட்டிக்காட்டுக்கிறது இந்த கணக்கெடுப்பு.

பைடனின் அறிவிப்பு வெளியான சூழலில், லட்சக்கணக்கான டாலர்கள் கமலா ஹாரிஸின் பரப்புரைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜோ பைடனுடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிபர் ஜோ பைடன் கமலா ஹாரிஸுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்

தயாராகும் கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸின் பரப்புரை தலைமையகம் டெலாவரில் உள்ள வில்மிங்டனில் அமைந்துள்ளது. திங்கள் கிழமை மாலை, "தேர்தலுக்கு இன்னும் 106 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் சில கடுமையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று கமலா ஹாரிஸ் பேசியதாக பரப்புரை அதிகாரிகள் கூறினார்கள்.

அமெரிக்கா குறித்த தன்னுடைய பார்வையை பரப்புரை குழுவிடம் விவரித்த கமலா ஹாரிஸ், அந்த பார்வை தான் அவருடைய பரப்புரையை டிரம்பின் பரப்புரையில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"எங்களின் பரப்புரையில் இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து இருவேறு பார்வைகள் உள்ளன. ஒன்று எதிர்காலத்தை மையப்படுத்தி மற்றொன்று கடந்த காலத்தைப் பற்றி. டிரம்ப் நம் நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல பார்க்கிறார்... நாங்களோ அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஒளிமயமான எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பைடனின் சாதனைகள் குறித்து பேசிய அவர், பைடனின் ஆட்சி காலத்தில் துணை அதிபராக செயல்பட்டது தன்னுடைய வாழ்வின் கவுரமான தருணங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார் கமலா ஹாரிஸ்.

தன்னுடைய உணர்வுகள் கலவையாக இருந்ததை தெரிவிக்கும் கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளருக்கான வாய்ப்பைப் பெறவும், ஜனநாயகக் கட்சியினரையும் அமெரிக்க தேசத்தையும் ஒன்றாக இணைக்கவும் கடினமாக உழைக்க இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதிபர் ஜோ பைடனுடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கமலா ஹாரிஸ் சிறந்தவர் எனவே அவருக்கு ஆதரவு அளியுங்கள் என்று ஆதரவாளர்களை பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பைடன் வேண்டுகோள்

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பைடன், தேர்தலில் இருந்து பின்வாங்கிய பிறகு அலைபேசி வாயிலாக தன்னுடைய முதல் கருத்தை வெளியிட்டிருந்தார்.

தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், கமலா ஹாரிஸ் சிறந்தவர் எனவே அவருக்கு ஆதரவு அளியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

"நேற்று என்னுடைய அறிவிப்பானது உங்களுக்கு கடினமானதாகவும், ஆச்சரியம் அளிக்க கூடியதாகவும் இருந்திருக்கக் கூடும். ஆனால் அது தான் சரியான முடிவு," என்று அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து குறிப்பிட்டிருந்தார்.

"இரண்டாவது முறையாக என்னை அதிபராக்க நீங்கள் அனைவரும் உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கினீர்கள். ஆனால் நான் எங்கும் செல்லவில்லை. இந்த பரப்புரை முழுவதும் உங்களுடன் தான் இருப்பேன்" என்றும் அவர் பரப்புரை குழுவினரிடம் பேசினார்.

என்னுடைய பரப்புரையில் நீங்கள் எப்படி முழுமனதாக செயல்பட்டீர்களோ அவ்வாறே கமலா ஹாரிஸின் பரப்புரையிலும் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இந்த ஜனநாயகத்தை நாம் காக்க வேண்டும். டிரம்ப் இந்த நாட்டிற்கு அபாயமானவர்' என்றும் பைடன் பரப்புரை குழுவினரிடம் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டிரம்பை குற்றவாளி என விமர்சித்த கமலா ஹாரிஸ் - சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தேர்தல் பரப்புரையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தன்னுடைய பரப்புரையை துவங்கினார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர்
  • பதவி, பிபிசி, வாஷிங்டன்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பின்வாங்கிய நிலையில், தன்னுடைய பரப்புரையை ஆரம்பித்துள்ளார் கமலா ஹாரிஸ்.

பைடனின் முழு ஆதரவையும் பெற்ற கமலா ஹாரிஸ் தன்னுடைய முதல் உரையை விஸ்கான்சினில் நிகழ்த்தினார்.

துப்பாக்கி நுகர்வினை கட்டுப்படுத்துதல், கருக்கலைப்பு மருத்துவ சிகிச்சைகளை எளிமையாக அணுக வழிவகை செய்தல், வறுமையான சூழலில் வாழும் குழந்தைகள், கூட்டாட்சி உரிமைகள் மற்றும் அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையிலான மருத்துவ சேவைகள் பற்றி தன்னுடைய உரையில் பேசினார்.

அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்பை ஒரு குற்றவாளி என்று அழைத்தும் காட்டமான முதல் பரப்புரையை மேற்கொண்டார் கமலா ஹாரிஸ்.

 

குற்றவாளியா - வழக்கறிஞரா? - கமலா ஹாரிஸின் முதல் பரப்புரை

"ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும், ஒரு குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது," என்று அதிபர் பதவிக்கான தன்னுடைய முதல் பரப்புரையில் குடியரசுக் கட்சியினரை விமர்சித்து உள்ளார் கமலா ஹாரிஸ்.

3000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த விஸ்கான்சின் பரப்புரை மைதானத்தில் பேசிய கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்பை மோசடிக்காரர்களுடன் ஒப்பிட்டு பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், அமெரிக்க எல்லைப் பகுதியில் கமலா ஹாரிஸின் பணிகளை சுட்டிக்காட்டி, "அவர் தொடும் எல்லாம் அழிவைத்தான் சந்திக்கின்றன," என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தேர்தல் பரப்புரையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜோ பைடன், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்குவதாக ஜூலை 21ம் தேதி அறிவித்தார். மேலும், தன்னுடைய ஆதரவை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கினார்.

அதிகரிக்கும் ஆதரவு

அதிபர் வேட்பாளருக்கு தேவையான ஆதரவை ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு வழங்கிய பிறகு இந்த பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் டிரம்புக்கு எதிரான விவாத நிகழ்வுக்கு பிறகு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் நன்கொடையாளர்களின் அதிருப்திக்கு ஆளான ஜோ பைடன், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார். மேலும், தன்னுடைய ஆதரவை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கினார்.

ராய்ட்டர்ஸ் மற்றும் இப்ஸோ இணைந்து தேசியளவில் நடத்திய ஒரு புதிய கருத்துக் கணிப்பில், டிரம்பை விட கமலா ஹாரிஸ் இரண்டு புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தேர்தல் பரப்புரையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பைடனைக் காட்டிலும் கமலாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர் அரசியல் கருத்தாளர்கள்.

நீதித்துறை பணிகளை நினைவு கூறும் கமலா ஹாரிஸ்

மில்வாக்கி புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் உயர் நிலைப் பள்ளியில் நடந்த பரப்புரையில் ஜூலை 23ம் தேதி அன்று பேசிய கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய தன்னுடைய அனுபவம் குறித்து நினைவு கூர்ந்தார்.

"பெண்களை மோசமாக நடத்தும் குற்றவாளிகள், நுகர்வோர்களை ஏமாற்றும் மோசடிக்காரர்கள், தங்களின் சொந்த நலனுக்காக விதிமுறைகளை உடைக்கும் ஏமாற்றுக்காரர்கள் என பலவகையான குற்றவாளிகளை நான் பார்த்திருக்கின்றேன்," என்று கூறிய கமலா ஹாரிஸ், ''டிரம்பைப் போன்ற நபர்களை நான் அறிவேன்'' என்றும் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுக்கு ஆரவாரமான கைதட்டிய மக்கள், "கமலா, "கமலா", என்று கோஷமிட்டனர். பைடனைக் காட்டிலும் கமலாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

டொனால்ட் டிரம்பின் பெயரை கமலா கூறும் போதெல்லாம், "அவரை பிடியுங்கள்" என்று பொருள்படும் வகையில் மக்கள் ஆரவாரமாக பதில் அளித்தனர்.

2016ம் ஆண்டு ஹிலாரி க்ளின்டனின் டிரம்புக்கு எதிரான பரப்புரையிலும் இதே போன்ற போக்கு நிலவியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமற்ற துணை அதிபராக கமலா ஹாரிஸ் உள்ளார் என கூறும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவுகளை டிரம்ப் ட்ரூத் சோசியல் என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

துப்பாக்கி கட்டுப்பாடு, கருக்கலைப்பு சிகிச்சைகளை எளிமையாக அணுகுதல், வறுமையில் வாடும் குழந்தைகள், அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையிலான மருத்துவ சேவைகள் போன்ற விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்து பேசினார் கமலா ஹாரிஸ்.

"சுதந்திரமான, இரக்க குணம் கொண்ட, சட்டத்தின் ஆட்சியை கொண்டுள்ள நாட்டில் நாம் வாழ வேண்டுமா, இல்லை குழப்பம், அச்சம் மற்றும் வெறுப்பை கொண்டுள்ள நாட்டில் இருக்க வேண்டுமா?" என கமலா ஹாரிஸ் பொதுமக்கள் மத்தியில் கூறினார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தேர்தல் பரப்புரையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சான் பிரான்சிஸ்கோ பகுதியில் பரப்புரையை காண வந்த கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள்

அவர் முன்பு இருக்கும் சவால்கள் என்ன?

ஆனால் இந்த வேகத்தை கமலா ஹாரிஸ் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான். கருத்துக் கணிப்பாளர் டோனி ஃபேப்ரிஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வாக்காளர்களுடனான கமலாவின் 'தேனிலவு' காலம் முடிவுக்கு வரும். பிறகு, பைடனின் ஆட்சியில் துணை அதிபராக, கூட்டாளியாக அவர் ஆற்றிய பணிகள் என்ன என்பது குறித்து கவனம் திரும்பும்'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்க - மெக்சிகோ எல்லைப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கமலா ஹாரிஸ் தவறிவிட்டார் என்று டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பரப்புரையில் குற்றம் சாட்டுகிறார்.

பைடன் - ஹாரிஸ் ஆட்சியின் போது அதிகரித்த குற்றம் மற்றும் பணவீக்கம் குறித்தும் டிரம்பின் பரப்புரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொலைக் குற்றவாளிகள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கலகக்காரர்களுக்கு கமலா ஹாரிஸ் ஜாமீன் பெற்றுக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மின்னஞ்சல் ஒன்றை குடியரசுக் கட்சியின் வேட்பாளர் குழு அனுப்பியுள்ளது.

மேலும் இஸ்ரேலை அவமதித்தது, குறைந்துவரும் பைடனின் திறன் குறித்து மக்களுக்கு தெரிவிக்காதது என அந்த மின்னஞ்சலில் குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.

பத்திரிக்கையாளர்களிடம் போனில் பேசிய டிரம்ப், "கமலா ஒரு தீவிர இடதுசாரி. ஆனால் ஒரு இடதுசாரி நபர் இந்த நாட்டை அழிக்க இந்த நாடு விரும்பவில்லை," என்று குறிப்பிட்டிருந்தார்.

"பைடனைக் காட்டிலும் அவர் எளிமையானவராக இருப்பார் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் பைடன் கொஞ்சம் பொது நீரோட்டத்தில் இருந்தவர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏபிசி செய்திகளில் பைடனுடன் டிரம்பின் விவாத நிகழ்வு செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் போட்டியில் இருந்து விலகவே, கமலா ஹாரிஸுடன் செப்டம்பரில் விவாத நிகழ்வில் பங்கேற்க தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் பைடனுடன் விவாதிக்கவே ஒப்புக் கொண்டேன். ஆனால் இப்போது இவருடன் விவாதிக்க விரும்புகிறேன். எந்த வேறுபாடும் இருக்காது," என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தேர்தல் பரப்புரையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிபர் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ்

ஜூலை 24 அன்று பைடன் தன்னுடைய ஓவல் அலுவலகத்தில் தேர்தலில் இருந்து பின்வாங்கியது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பைடன், செவ்வாய் கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

ஜார்ஜ் க்லூனி, பார்பரா ஸ்ட்ரெய்சான்ட் மற்றும் ஜேமி லீ கர்டீஸ் போன்ற ஹாலிவுட் பிரபலங்களும் கமலாவுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர். இது கமலாவுக்கான நன்கொடை தொடர்ந்து வருவதை உறுதி செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

டொனால்ட் டிரம்பின் பெயரை கமலா கூறும் போதெல்லாம், "அவரை பிடியுங்கள்" என்று பொருள்படும் வகையில் மக்கள் ஆரவாரமாக பதில் அளித்தனர்.

Lock her up

Lock him up

ஆக மாறியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய கருத்துக்கணிப்பு - டிரம்பை விட கமலா ஹரிஸ் முன்னிலையில்

24 JUL, 2024 | 11:03 AM
image

அமெரிக்க துணைஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகட்சியினர் மத்தியில் வேகமாக தனது ஆதரவை அதிகரித்து வருவதும் தனது புதிய போட்டியாளர் காரணமாக முன்னாள்  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்பதும் ரொய்ட்டரின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜூலை 22 முதல் 23ம் திகதிக்குள் ரொய்ட்டர் -இப்சொசின் கருத்துக்கணிப்பில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் கமலாஹரிசிற்கு 44வீத ஆதரவு காணப்படுவதும் டொனால்ட் டிரம்பிற்கு 42 வீத ஆதரவு காணப்படுவதும் தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் மூலம் கமலாஹரிஸ் நிலையான முன்னேற்றத்தை காண்பிப்பது தெரியவந்துள்து.

இதேவேளை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 84 வீதமானவர்கள் ஜோபைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து  விலகியதை வரவேற்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/189238

  • கருத்துக்கள உறவுகள்
Posted

''நீங்க தென்னை மரத்தில இருந்து விழுந்தீங்கன்னு நெனச்சுட்டு இருக்கீங்களா?'': கமலா ஹாரிஸ் குறித்து உற்சாகமடையும் சமூக ஊடகம்

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் கமலா ஹாரிஸ் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆனா ஃபகுய்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போவதாக அறிவித்த சில நாட்களில், அமெரிக்க இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மீம்களாக, வீடியோக்களாக பல விஷயங்களை காண நேரிட்டது.

திடீரென அமெரிக்காவில் தென்னை மரங்கள் பற்றி மக்கள் அதிகம் பேசுகின்றனர். ஒரு பிரிட்டிஷ் பாப் பாடகர் அமெரிக்காவின் அரசியல் சக்தியாக மாறியேவிட்டார். வெளிர்பச்சை நிறம் புத்தெழுச்சி பெற்றுள்ளது.

அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் பின்வாங்குவதாக அறிவித்தார். பிறகு தன்னுடைய ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கினார். அதன் பின் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில மணிநேரங்களில், கமலா ஹாரிஸின் பிரசாரத்தில் உற்சாகம் அதிகரித்தது.

எக்ஸ் தளத்தில், பைடன் - ஹாரிஸ் பரப்புரை பக்கத்தின் பெயர் KamalaHQ என்று மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் பாப் பாடகரான சார்லி XCX, கமலா ஹாரிஸுக்கு வழங்கிய வெளிப்படையான ஆதரவுக்கு பின்னர், அவருடைய எக்ஸ் தளத்தில் உள்ள பேனர் பகுதியில் இடம் பெற்றிருந்த அதே வெளிர்பச்சை நிற பேனரை KamalaHQவின் எக்ஸ் பக்கத்திலும் மாற்றினார்கள்.

 

அதிபரின் திடீர் பின்வாங்கலும் கமலாவின் அடுத்தடுத்த எழுச்சியும் தேர்தலில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்கும் அதே சூழலில், சமூக வலைதள பயனர்கள், குறிப்பாக இளைஞர்கள் இந்த மாற்றத்தைக் கண்டு உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆனால், நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக திகழும் இளைஞர்கள் மத்தியில் இதே உற்சாகம் தொடர இந்த வைரல் வீடியோக்களும், ஆன்லைன் அப்டேட்களும் உதவுமா, அதன் வேகம் தொடருமா என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆனால் இந்த சமூக வலைதள பதிவுகள் கமலா ஹாரிஸுக்கு பலனளிக்கின்ற வகையில்தான் இருக்கிறது. பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வந்து குவிந்துள்ளது. நன்கொடை பெறுவது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து 44 ஆயிரம் கறுப்பின பெண்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். 58 ஆயிரம் நபர்கள் தன்னார்வலர்களாக தங்களை பதிவு செய்து கொண்டனர்.

 

வைரலாகும் கமலா ஹாரிஸின் 'சொதப்பல்' நேர்காணல்கள்

குடியரசுக் கட்சியினர் இதற்கு முன்பு கமலா ஹாரிஸ் நேர்காணலில் சறுக்கிய, சொதப்பிய தருணங்களை ஆன்லைனில் பதிவிட்டு வந்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக அவரின் ஆதரவாளர்கள் அதே வீடியோக்களை பதிவிட்டு அவரை அன்பானவராகவும், தங்கள் வாழ்வியல் நிகழ்வுகளை தொடர்படுத்திக் கொள்ள இயலும் நபராகவும் கமலா ஹாரிஸை காட்டி வருகின்றனர்.

கமலா தன்னுடைய அம்மாவைப் பற்றி வெள்ளை மாளிகை நிகழ்வு ஒன்றில் கூறியதன் வீடியோவும் இவ்வாறாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.

"உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு. நீங்க எல்லாரும் தென்னை மரத்தில இருந்து விழுந்தீங்கன்னு நெனச்சுட்டு இருக்கீங்களா," என்று தன்னுடைய அம்மா பேசியதை நினைவு கூறி சிரித்திருக்கிறார் கமலா.

ஆனால் அந்த வீடியோ பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது அதே நிகழ்வை மையப்படுத்தி தங்களின் சமூக வலைதள பக்கங்களில் தென்னை மற்றும் பனை எமோஜிகளை பதிவிட்டு தங்களின் ஆதரவை வெளிக்காட்டி வருகின்றனர் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள்.

"உங்கள் எதிராளி ஏதாவது கூறினால் அதை நீங்கள் எடுத்து உங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொண்டு அவர்களின் அதிகாரத்தை நீக்கிவிடுகிறீர்கள்" என்று கூறுகிறார் கேத்தரின் ஹென்சென். நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும், கேத்தரின் டிஜிட்டல் தொலை தொடர்பு எவ்வாறு வாக்கு வங்கிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்து வருகிறார்.

மீம்கள் முக்கியமானவை.மீம்ஸ் என்பது மக்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கும் ஒரு சிக்கலான வழியாகும் என்று கூறுகிறார் அவர்.

பாடகர் சார்லி XCX கமலாவுக்கு ஆதரவு தெரிவித்தது சமூக வலைதளங்களில் பேச்சுப்பொருளானது.

பைடன் தன்னுடைய ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கிய பின்னர் சார்லி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கமலா ஒரு குறும்புக்கார குழந்தை (kamala IS brat) என்று பதிவிட்டிருந்தார். அது அவருடைய புதிய இசை ஆல்பத்தை குறிப்பதாகவும் இருந்தது.

இது குறித்து பேசிய கேத்தரின், இந்த வார்த்தை (Brat) பெண்களை மையப்படுத்தி உபயோக்கும் போது தங்களின் பாதையை தாங்களே தேர்வு செய்து கொள்ளும் பெண்களை குறிப்பதாக அமைகிறது என்று குறிப்பிடுகிறார்.

செவ்வாய் கிழமை மதியம் அந்த ஒரு பதிவு 50 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு ஃப்ளோரிடாவில் உள்ள பார்க்லாண்ட் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து "மார்ச் ஃபார் அவர் லைஃப்ஸ்" என்ற இயக்கத்தை ஆரம்பித்த டேவிட் ஹாக் இது குறித்து தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்தார்.

இளைஞர்களின் வாக்குகளை பெற, இந்த பதிவு ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் சிறியது அல்ல என்று கூறுகிறார், 24 வயதான, ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர் டேவிக் ஹாக்.

மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள விளம்பரங்களைக் காட்டிலும் இந்த பதிவு நிறைய இளைஞர்களை சென்று சேர்ந்திருக்கும் என்று கூறுகிறார் ஆனி வூ ஹென்றி. கடந்த காலத்தில் ஜனநாயகக் கட்சியின் பரப்புரைகளில் டிஜிட்டல் அரசியல் வியூக வகுப்பாளராக இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

பைடன் - ஹாரிஸ் பரப்புரைக்காக டிக்டாக்கில் 300 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டன. பைடன் போட்டியில் இருந்து பின்வாங்கிய பிறகு பதிவிட்ட மூன்று வீடியோக்கள், அந்த பக்கத்தில் வாங்கிய லைக்குகளில் 20% லைக்குகளை பெற்றிருப்பதாக கூறுகிறார் ஹென்றி.

 
கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2008ம் ஆண்டு பாரக் ஒபாமாவின் பரப்புரையில் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதள யுத்திகளைப் போன்றது கமலா ஹாரிஸின் இன்றைய டிஜிட்டல் பரப்புரை

அடிமட்டத்தில் இருந்து ஆதரவு

2008ம் ஆண்டு பாரக் ஒபாமாவின் பரப்புரையில் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதள உத்திகளைப் போன்றது கமலா ஹாரிஸின் இன்றைய பரப்புரை என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

"இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற, முழு ஈடுபாடு கொண்ட, பாப் கலாசாரத்தில் இருக்க கூடிய ஒருவர் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டன" என்று கூறுகிறார் பிலிப் டீ வெல்லிஸ். ஒபாமாவின் பரப்புரைக்காக அரசியல் விளம்பர ஆலோசகராக அவர் பணியாற்றினார்.

ஆனால், அது வாக்குகளாக மாறும் என்று அர்த்தமில்லை என்றும் அவர் எச்சரிக்கிறார்.

ஆன்லைன் அரசியல் உற்சாகம் என்பது ஆரம்ப காலங்களில் இருந்தே ஒரு பரப்புரையாக வடிவமைக்கப்பட்டு பின்னர் வாக்களர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களுக்கு வழங்கப்படுகிறது என்று சிலர் மேற்கோள்காட்டுகின்றனர். அதனால்தான் இந்த உந்துதல் அடிமட்டத்தில் இருந்து வரும் ஆதரவாக கருதப்படுகிறது என்று மேற்கோள்காட்டுகிறார் கேத்தரின்.

ஒபாமாவின் வெற்றியும் கூட அடிமட்டத்தில் இருந்து வந்த ஆதரவு அடிப்படையில் அமைந்ததுதான். ஆனால் அதன் பின்னணி வேறு. டிக்டாக் என்ற ஒன்று இல்லவே இல்லை. முகநூல் அப்போதுதான் கல்லூரி வளாகங்களுக்கு வெளியே பிரபலமாகி வந்தது என்று குறிப்பிடுகிறார் கேத்தரின்.

 
கமலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வைரலாகி வரும் கமலா ஹாரிஸின் பழைய வீடியோக்களால் உற்சாகம் அடைந்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்

நவம்பரில் ஏதேனும் மாற்றத்தை இது உருவாக்குமா?

இந்த தருணம் ஹாரிஸ் அவரின் பல்வேறு அடையாளங்களை காண அனுமதிக்கிறது என்கிறார் ரேச்சல் கிரான்ட். இவர் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் கலாச்சார அறிஞர் ஆய்வுகள், ஊடக செயல்பாடுகள் மற்றும் சமூக இயக்கங்கள் துறையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த அனுபவம் அல்லது கருக்கலைப்பு உரிமை போன்ற தங்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் ஒன்றை கமலா ஹாரிஸ் பேசும் வீடியோக்களை இளம் வாக்காளர்கள் காணலாம்.

நான்கு மாதத்தில் நடைபெற இருக்கும் ஒரு கடினமான தேர்தலுக்கு நடுவே, கமலா ஹாரிஸுக்கு குவிந்த கோடிகணக்கான டாலர்கள் வாக்காளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் வாக்காளர் எண்ணிக்கையை உறுதிப்படுத்த வைரல் மற்றும் முக்கிய பிரச்சினைகளை அடையாளப்படுத்துதலுக்கு இடையே சமநிலையை பின்பற்ற வேண்டும்.

"அவரது பிரசாரம் தேங்காய் மற்றும் மீம்களில் மட்டுமே கவனம் செலுத்த கூடாது," என்று கூறுகிறார் ஹென்றி. மாறாக அவர் அமெரிக்க மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்டார் ஒபாமா

Published By: RAJEEBAN   26 JUL, 2024 | 03:11 PM

image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.

பராக் ஒபாமாவின் இந்த ஆதரவு காரணமாக கமலா ஹரிஸ்  அமெரிக்க அரசியலில் தீவிரமாக செயற்படும் ஜனநாக கட்சியின் தலைவர்களில் அனேகமானவர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

kamal_harris_obma.jpg

பில் கிளின்டன், ஹிலாரி கிளின்டன் என ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் உடனடியாக கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்ட போதிலும் ஒபாமா ஆதரவை வெளியிடாதது கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

தனது மனைவியுடன் இணைந்து கமலா ஹரிசினை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளதுடன்  குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

ஐபோனில் ஹரிஸ் ஒபாமாவை செவிமடுப்பதை வீடியோவில் காணமுடிகின்றது.

kamala_harris_obama.jpg

நான் கமலா குறித்து பெருமிதம் அடைகின்றேன், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக விளங்கப்போகின்றது என மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

வாகனமொன்றிற்கு அருகில் நின்றபடி பதிலளிக்கும் கமலா ஹரிஸ் கடவுளே மிச்செல் ஒபாமா இது எனக்கு மிகப்பெரிய விடயம் என தெரிவிக்கின்றார்.

ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தனை வருடங்களாக நீங்கள் பேசிய வார்த்தைகளும், நீங்கள் கொடுத்த நட்பும், என்னால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகம் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எனவே இருவருக்கும் நன்றி என அவர் தெரிவிக்கின்றார்.

https://www.virakesari.lk/article/189444

  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது’ - டிரம்ப் இவ்வாறு சொன்னது ஏன்?

‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது’- டிரம்ப் கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

26 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறிய ஒரு கருத்து செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது குறித்து பல விவாதங்களும் நடந்து வருகின்றன.

கடந்த வாரம் ஃப்ளோரிடாவில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் டிரம்ப், "கிறிஸ்தவர்களே, இந்த ஒரு முறை மட்டும் வெளியே வந்து வாக்களியுங்கள். அதன் பிறகு நீங்கள் வாக்களிக்க வேண்டிய அவசியமே இருக்காது.''

''நான்கு ஆண்டுகளில் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிடும். என் அன்பான கிறிஸ்தவர்களே, நீங்கள் இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டிய அவசியமே இருக்காது. நான் உங்களை நேசிக்கிறேன்,” என்று கூறினார்.

டிரம்ப் ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்று ஜனநாயக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருகிறது.

2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் டிரம்ப் மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்தார். டிரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில் மீது தாக்குதல் நடத்தினர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள் குறித்து டிரம்ப் கூறிய இந்த கருத்தால் விவாதங்கள் தொடங்கியுள்ளன. டிரம்ப் உண்மையில் என்ன சொல்ல முயன்றார்?

டிரம்பின் அறிக்கைக்கு எதிர்வினைகள்

இந்த கருத்து குறித்து டிரம்பின் தேர்தல் பிரசார செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் செங்கிடம் விளக்கம் கேட்டபோது அவர் நேரடியாக எதுவும் கூறவில்லை.

"டிரம்ப் நாட்டை ஒன்றிணைப்பது பற்றிப்பேசினார்," ஸ்டீவன் கூறினார்.

ஸ்டீவன் பிறகு பேச்சை மாற்றி, இரண்டு வாரங்களுக்கு முன்பு டிரம்ப் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக அரசியல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.

டிரம்ப் மீதான தாக்குதலுக்கான காரணத்தை இதுவரை புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு வழக்கறிஞர் ஆண்ட்ரூ சிடல் எதிர்வினையாற்றிள்ளார்.

"நமது ஜனநாயகத்தை அழித்து கிறிஸ்தவ நாட்டை உருவாக்குவது குறித்து டிரம்ப் பேசுகிறார்,” என்று ஆண்ட்ரூ சமூக ஊடகங்களில் எழுதினார்.

‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது’- டிரம்ப் கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னது ஏன்?

பட மூலாதாரம்,REUTERS

“நான் மீண்டும் வாக்களிக்க விரும்பினால் என்ன செய்வது?

''எங்களுக்கு மீண்டும் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கூறிவருகிறேன்… இது அமெரிக்கா,” என்று நடிகர் மோர்கன் ஃபேர்சைல்ட் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்..

"ஓ…டிரம்ப் 2028 தேர்தலை ரத்து செய்துவிட்டார்,” என்று அரசியல் விமர்சகர் கீத் ஓல்பர்மேன் கூறினார்.

"டிரம்ப் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று நாங்கள் சொல்கிறோம். அதன் மூலம் நாங்கள் தெரிவிக்க முயற்சிப்பது இப்போது டிரம்ப் கூறியதைத்தான்" என்றார் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் மார்ட்டின் ஹென்ரிச்சின் தகவல் தொடர்பு இயக்குநர் கேட்டி பெட்டி.

”மீண்டும் வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற டிரம்பின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. அது மிகவும் பிற்போக்குத்தனமானது,” என்று கமலா ஹாரிஸின் தேர்தல் பிரசார செய்தித் தொடர்பாளர் ஜேசன் சிங்கர் விவரித்தார்.

டிரம்பின் கருத்து கவலையளிப்பது ஏன்?

வாக்களிக்க அவசியம் இருக்காது என்ற டிரம்பின் தற்போதைய கருத்தை அவரது முந்தைய கருத்துடன் சிலர் இணைத்துப் பார்க்கின்றனர்.

”அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், மெக்ஸிகோவுடனான தெற்கு எல்லையை மூடுவதற்கும் எண்ணெய் சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்கும் முதல் ஒரு நாள் மட்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்,” என்று 2023 டிசம்பரில் ’ஃபாக்ஸ் நியூஸுக்கு’ அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.

இந்த கருத்தை ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்தபோது, டிரம்ப் அதை ஒரு நகைச்சுவை என்று அழைத்தார்.

சர்வாதிகார ஆட்சியாளர்களை டிரம்ப் பாராட்டிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்த ஆட்சியாளர்களில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஹங்கேரியின் விக்டர் ஓர்பன் மற்றும் வட கொரிய ஆட்சியாளர் கிம் ஜாங் உன் ஆகியோரின் பெயர்கள் அடங்கும்.

ஹிட்லர் சில நல்ல விஷயங்களையும் செய்துள்ளார் என்று டிரம்ப் ஒருமுறை கூறியதாக வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர் ஒருவரை மேற்கோள்காட்டி ’தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிட்லரின் நாஜி ஆட்சியின் போது 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்.

டிரம்ப் ஏன் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்?

‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது’- டிரம்ப் கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேபிடல் ஹில்லுக்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் சிலுவைகளுடன் காணப்பட்டனர்.

அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறை மக்களின் மதத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில்லை.

அமெரிக்காவின் மக்கள்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 70 சதவிகிதம் என்று ப்பியூ ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

2021 ஜனவரியில் டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில்லில் நுழைந்தபோது கூட கிறிஸ்தவம் தொடர்பான கொடிகள் அங்கு காணப்பட்டன. சில கொடிகளில் ’ஜீஸஸ் 2020’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

கேபிடல் ஹில் நோக்கி நகரும் முன் சிலர் மண்டியிட்டு பிரார்தனை செய்வதையும் காண முடிந்தது.

அமெரிக்காவின் அரசியல் எப்படி பிளவுபட்டுள்ளது என்பதும் 2020 தேர்தலில் வெளிப்பட்டது.

வெள்ளையின அமெரிக்க கிறிஸ்தவர்களில் கால் பகுதியினர் டிரம்பிற்கு ஆதரவளித்தனர் என்பதும், அதே நேரத்தில் 90 சதவிகித கறுப்பின கிறிஸ்தவர்கள் பைடனை ஆதரித்தனர் என்பதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்தன.

டிரம்ப் கடந்த தேர்தல்களிலும் கிறிஸ்துவ மதத்தைப் பாதுகாப்பது குறித்து பேசி வந்தார். டிரம்பின் தேர்தல் பிரசாரமான 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' என்பதை 'மேக் அமெரிக்காவை கிறிஸ்டியன் அகைன்' என்றும் சில ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.

”பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் மதம் இல்லை. பைபிளுக்கு கேடு, கடவுளுக்கு கேடு. பைடன் கடவுளுக்கும் துப்பாக்கிகளுக்கும் எதிரானவர்,” என்று 2020 ஆம் ஆண்டில், ஓஹியோவில் ஒரு தேர்தல் பேரணியில் டிரம்ப் கூறினார்.

இப்போது 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் கிறிஸ்தவம் தொடர்பாக தீவிரமாக பேசி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்வின் போது, கிறிஸ்தவ மதத்தை குறிவைத்து சொல்லப்படும் கருத்துக்களுக்கு எதிராக ஒரு பணிக்குழுவை உருவாக்குவது குறித்து டிரம்ப் பேசியிருந்தார்.

அமெரிக்காவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்பின் கருத்து மற்றும் அரசியலமைப்பு

அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அதாவது மொத்தம் எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும். டிரம்ப் 2016-2020 வரை அதிபராக இருந்தார்.

அமெரிக்காவில், ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மட்டுமே இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்துள்ளார்.

ரூஸ்வெல்ட் 1932 முதல் 1945 இல் இறக்கும் வரை நான்கு முறை அமெரிக்காவின் அதிபராக இருந்தார்.

“ஃபிராங்க்ளின் 16 ஆண்டுகள் அதாவது நான்கு முறை அதிபராக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் மூன்று ஆட்சிக்காலம் பற்றி பரிசீலிப்போமா அல்லது இரண்டு ஆட்சிக்காலம் பற்றியா என்று சொல்ல முடியாது,” என்று இதுபற்றி டிரம்ப் ஒரு தேர்தல் பேரணியில் கூறினார்.

டிரம்பின் கருத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று ’தி கார்டியன்’ நாளேடு தெரிவிக்கிறது.

டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், அமெரிக்க அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின்படி, 2029 ஜனவரிக்குப் பிறகு அவர் அதிபர் பதவியை வகிக்க முடியாது என்று அந்த நாளிதழ் எழுதுகிறது.

இந்தத் திருத்தத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை.

இதற்குப் பிறகு நான்கில் மூன்று பங்கு அமெரிக்க மாகாணங்கள் இந்த மாற்றத்தை அங்கீகரிக்க வேண்டும்.

தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. செனட்டில் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இல்லை.

அத்தகைய சூழ்நிலையில் டிரம்புக்கு இந்தப்பாதை எளிதானது அல்ல.

பைடனின் விலகலுக்குப் பிறகு கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் நுழைந்துள்ளார்.

கமலா ஹாரிஸுடன் டிரம்ப் கடும் போட்டியில் இருப்பதாக குடியரசுக் கட்சியின் பக்கசார்புள்ள ஃபாக்ஸ் நியூஸ் நெட்வொர்க்கின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பைடன் பின்வாங்குவதற்கு முன்பு கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் முன்னிலையில் இருந்தார்.

கமலா ஹாரிஸ் மீதான டிரம்பின் தாக்குதல்கள் இதன் காரணமாகவும் அதிகரித்திருக்கலாம். கமலாவை ’ வெற்றிகரமாக செயல்படாத துணை அதிபர்’ என்று டிரம்ப் கூறி வருகிறார். கூடவே ஹாரிஸின் வம்சாவளி அடையாளம் தொடர்பான தாக்குதல்களையும் குடியரசுக்கட்சி அதிகரித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமலா ஹரிஸ் கறுப்பினத்தவரா இந்தியரா? டிரம்ப் கேள்வியால் பெரும் சர்ச்சை

01 AUG, 2024 | 12:07 PM
image
 

கமலா ஹரிஸ் கறுப்பினத்தவரா இந்தியரா என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

கறுப்பின பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பல வருடங்களாக தனது ஆசிய பின்னணியை மறைத்து வைத்திருந்தார் என டிரம்ப் பிழையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

சிலவருடங்களிற்கு முன்னர் அவர் கறுப்பாக மாறும்வரை அவர் கறுப்பினத்தவர் என்பது எனக்குதெரியாது என குறிப்பிட்டுள்ள டிரம்ப் அவர் தன்னை தற்போது கறுப்பினத்தவர் என  கருதவேண்டும் என விரும்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் கறுப்பினத்தவரா இந்தியரா என்பது எனக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹரிஸ் தனது சட்டத்துறை வாழ்க்கையின் ஆரம்பத்தில் பரீட்சைகளில் தோல்வியடைந்தார், எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189985

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு, பணம்'- அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளரை எப்படி தேர்வு செய்கிறார்கள்? - முக்கிய தகவல்

அதிபர் வேட்பாளரை எப்படி தேர்வு செய்கிறார்கள்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜூட் ஷீரின்
  • பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன்
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்து வருகின்ற சூழலில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பள்ளி ஆசிரியரும், கால்பந்து பயிற்சியாளரும், ராணுவத்தில் பணியாற்றியவருமான டிம் வால்ஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

மின்னசோட்டா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் டிம் வால்ஸை அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவித்திருக்கிறார் கமலா ஹாரிஸ்.

"கமலா ஹாரிஸுடன் தேர்தலை எதிர்கொள்வது வாழ்நாள் கௌரவமாக கருதுகிறேன்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வால்ஸ்.

மேலும், "முதல் நாள் பள்ளிக்கு செல்லும் அனுபவத்தைப் போல் இது உள்ளது. இதை நிறைவேற்றுவோம்," என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்தடுத்த புதிய நிகழ்வுகள் அரங்கேறின.

துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

துணை அதிபர் வேட்பாளராக யாரை தேர்வு செய்வது என்று ஜனநாயகக் கட்சியினர் யோசித்து வந்தனர். இந்த நிலையில் அந்த இடத்திற்கு டிம் வால்ஸ் வந்துள்ளார்.

துணை அதிபர் வேட்பாளர்களை அமெரிக்க கட்சிகள் எவ்வாறு தேர்வு செய்கின்றன?

துணை அதிபர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?

"நீங்கள் எப்போதாவது உடலுறவு வைத்துக் கொள்ள பணம் கொடுத்திருக்கிறீர்களா?

கருக்கலைப்பு செய்ய எப்போதாவது பணம் செலுத்தியிருக்கிறீர்களா?

நீங்கள் எப்போதாவது தன்பாலின ஈர்ப்பினருடன் தொடர்பு கொண்டீர்களா?"

முந்தைய தேர்தலில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்வின் போது பங்கேற்றவர்களிடம் கேட்ட கேள்விகள் தான் இவை.

ஒவ்வொரு முறையும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் இது போன்று 200 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதன் பின்புதான் அந்த நபரின் வேட்புமனு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

'வெட்டர்ஸ்’ (vetters) என்று அழைக்கப்படும் பிரசார அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் நேரத்தை செலவிட்டு, துணை அதிபர் தேர்வுமுறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து அவர்களை அனைத்து தகவல்களையும் ஒரு மாத காலத்திற்குள் திரட்டுவார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துணை அதிபரை தேர்வு செய்யும் செயல்முறையின்போது, கமலா ஹாரிஸ் ஒரு டஜன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிம் வால்ஸ்

சோதனைக்கு உட்படுத்தப்படும் சமூக வலைதள பக்கங்கள்

துணை அதிபர் வேட்பாளர் தேர்வை சவாலானதாக ஆக்குவது போட்டியாளர்களின் பின்புலத்தை ஆய்வு செய்வதுதான்.

அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டர்வர்களின் பின்புலத்தை ஆராய்வது போல, துணை அதிபர் போட்டியாளர்களின் பின்னணி பற்றிய சோதனைகளை அமெரிக்கப் புலனாய்வு முகமை செய்வதில்லை.

ஒரு போட்டியாளரின் வருமானம், வரிக் கணக்குகள் மற்றும் மருத்துவ வரலாற்றை 'வெட்டர்ஸ்’ ஆராய்வார்கள். அவர்கள் போட்டியாளர்களின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் உள்நுழைந்து சோதனை செய்யலாம்.

போட்டியாளரின் மகன்/மகள்களின் சமூக ஊடக பதிவுகளை அலசுவார்கள். தேவை இருப்பின் பேரப்பிள்ளைகளின் சமூக ஊடகக் பக்கத்தை கூட அலசுவார்கள்.

திருமண உறவு பற்றிய விவகாரங்கள் அல்லது வேறு ஏதேனும் தீர்க்கப்படாத ரகசிய விஷயங்களும் முழுமையாக ஆராயப்படும்.

சாத்தியமான வேட்பாளர் கூறிய அல்லது எழுதிய ஒவ்வொரு பதிவின் வார்த்தைகளையும் அவர்கள் சரிபார்ப்பார்கள்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGE

படக்குறிப்பு,2008இல், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் இவானும் இருந்தார்.

ஜான் கெர்ரி, பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு சாத்தியமான துணை அதிபர்களை தேர்வு செய்யும் செயல்முறையில் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்ட ஜனநாயகக் கட்சியின் வழக்கறிஞர் ஜிம் ஹாமில்டன், பிபிசியிடம் பேசுகையில், "இந்த செயல்முறைக்குப் பிறகு, ரகசியத்தன்மையை பாதுகாக்க, செயல்முறை குறிப்புகள் அழிக்கப்படுகின்றன” என்று கூறினார்.

அவர் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குறித்து மதிப்பீடு செய்துள்ளார், இந்த வழக்கறிஞர்கள் கிளிண்டனின் துணை அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் செயல்முறையில் பங்காற்றினர்.

"துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணி இருக்கும், அவர்கள் அவ்வளவு எளிதில் பேசி விடமாட்டார்கள். ஆனால் இந்த செயல்முறைக்கு உறுதியளித்தவுடன், அவர்கள் தங்கள் பதில்களில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமளிக்கும்" என்று ஹாமில்டன் விவரித்தார்.

2008 இல் பராக் ஒபாமா உடன் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதற்கான போட்டியில், இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் முக்கியமானவர் இவான் பேஹ்.

இந்த மதிப்பீடு செயல்முறை முடிவுக்கு வர கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எடுத்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.

"என்னை ஆய்வு செய்ய ஒரு குழு ஒதுக்கப்பட்டது. ஒரு கணக்காளர், ஒரு வழக்கறிஞர், ஒரு மருத்துவர் இருந்தனர்" என்று முன்னாள் இந்தியானா செனட்டரும் ஆளுநருமான இவான் பேஹ் பிபிசியிடம் கூறினார்.

"அவர்கள் என் மனைவியுடன் பேசினார்கள், அவர்கள் என் தந்தையுடன் பேசினார்கள்." என்று இவான் பேஹ் விவரித்தார்.

இந்த செயல்முறைகளின் போது, வாஷிங்டன் டிசியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தொலைக்காட்சி குழுவினர் முகாமிட்டனர்.

அந்த சமயத்தில் பேஹ் மனநல சிகிச்சை பெற்றதாக ஒரு தவறான இணைய வதந்திப் பரவியது. அதை பற்றி அவரிடம் விசாரணைக் குழுவின் தலைவர் போன் செய்து விசாரித்தார்.

"இல்லை, அது உண்மையல்ல. நான் மனநல சிகிச்சை எடுக்கவில்லை. ஆனால் நீங்கள் சீக்கிரம் ஒரு முடிவெடுக்காமல் இருந்தால், அது உண்மையாகி விடும்'' என்று நகைச்சுவையாக பதில் அளித்ததை பேஹ் நினைவு கூர்ந்தார்.

இறுதியில் பைடனுக்கே வாய்ப்பு

20 பேர் கொண்ட பெயர் பட்டியலில், இறுதியில் டெலாவேர் செனட்டராக இருந்த ஜோ பைடனின் பெயர் மட்டும் தேர்வு செய்யப்பட்டதாக பேஹ் விளக்கினார்.

அதன் பின்னர் வருங்கால அதிபரை அவரது ஹோட்டல் அறையில் சந்திப்பதற்காக அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸுக்கு 'மிகவும் ரகசியமாக' விமானத்தில் சென்றதை அவர் நினைவு கூர்ந்தார்.

"ஒபாமா முன்பு சுமார் மூன்றடி உயரத்துக்கு ஆவணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன" என்று அவர் நினைவு கூர்ந்தார்.

"ஒபாமா அந்த ஆவணங்களை காட்டி 'நான் உங்களைப் பற்றிய அனைத்து அறிக்கைகளையும் பார்த்துவிட்டேன், அதில் எதுவும் பெரிய பிரச்னையாக தெரியவில்லை. ஆனால் எங்கள் குழு கண்டுபிடிக்காத ஏதேனும் ரகசியம் இருந்தால், நீங்கள் இப்போது என்னிடம் சொல்ல வேண்டும், ஏனெனில் அது எப்படியும் வெளிவந்துவிடும்" என்றார்.

"நான் அவரிடம், 'உங்கள் அதிகாரிகள் மிகவும் முழுமையான ஆய்வை மேற்கொண்டார்கள். ஆனால் நான் உங்களிடம் குறிப்பிட வேண்டிய இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் இருக்கலாம்’ என்று சொல்லி விவரித்தேன்.''

"அவர் என்னைப் பார்த்து, 'அவ்வளவு தானா'? என்றார். நான் 'ஆம்', என்றேன். மேலும் அவர், 'சரி, நீங்கள் உங்கள் வாழ்க்கையை அதிகம் வாழவில்லை, இல்லையா?' என ஒபாமா கூறினார்'' என்கிறார் பேஹ்.

ஹோட்டல் அறையில், ஒபாமாவிடம் விவரித்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேஹ் தெரிவிக்கவில்லை. அது குடும்ப விவகாரம் என்று மட்டும் கூறினார்.

அந்த துணை அதிபர் போட்டியில் இறுதியில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

சில நேரங்களில் துணை அதிபர் செயல்முறையில் தேர்வு செய்யும் குழுவில் இருப்பவர்கள், போட்டியாளரிடம் வேறு யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு கேள்வியை முன்வைக்க முடியும். அதற்கு கிடைக்கும் பதிலின் மூலம் கூட போட்டியாளருக்கு சிக்கல் ஏற்படும்.

கிளிண்டனின் 1992-ம் பிரசாரத்தில் பணியாற்றிய கெரி கின்ஸ்பெர்க், அல் கோரிடம் உங்களுக்கு நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்ட போது அவர் வார்த்தைகளற்று நின்றதை நினைவு கூறினார்.

மிகவும் கூச்ச சுபாவமுள்ள அவரிடம் மீண்டும் கேட்ட போது அவரின் மைத்துனர் மற்றும் இரண்டு காங்கிரஸ் நபர்கள் தவிர அவருக்கு நண்பர்கள் வட்டம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். நண்பர்கள் வட்டம் இல்லாமல் இருப்பது பிரசார அலுவலர் ஒருவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.

50 பேர் கொண்ட நீண்ட பட்டியலிலிருந்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி செனட்டர் அல்லது ஆளுநரிடம் கேட்பது மரியாதையற்ற ஒன்றாக கருதப்படுவதால், இது போன்ற சோதனைகள் பெரும்பாலும் முறைசாராததாகவும் மற்றும் மிகவும் குறைவான தலையீடுகளை கொண்டதாகவுமே இருக்கும்.

சர்ச்சைக்குரிய தேர்வு

இரண்டு நபர்களின் தேர்வு அமெரிக்க வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

1972ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜார்ஜ் மெக்கொவெர்ன் 18 நாட்களில் துணை அதிபராக தேர்வு செய்த வேட்பாளரை புறந்தள்ளினார். மிசோரி செனட்டர் தாமஸ் ஈகல்டனை 2 நிமிட அலைபேசி பேச்சுவார்த்தை மூலம் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தார் அவர். அவரது பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படவில்லை.

ஆனால், சில நாட்களில் தாமஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் சிகிச்சை வழங்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகின.

ஜார்ஜை எதிர்த்து போட்டியிட்ட நிக்ஸனும் அவரின் குழுவினரும், மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு வாய்ப்பு வழங்கிய ஜார்ஜை இனி எப்படி நம்புவது என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் படுதோல்வி அடைந்தனர்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி செனட்டர் அல்லது ஆளுநரிடம் கேட்பது மரியாதையற்ற ஒன்றாக கருதப்படுவதால், இது போன்ற சோதனைகள் பெரும்பாலும் முறைசாராததாகவும் மற்றும் மிகவும் குறைவான தலையீடுகளை கொண்டதாகவுமே இருக்கும்.

இதன் பின்னர், போட்டியில் உள்ள வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் 'வெட்டர்கள்' தங்களின் ஆய்வு வட்டத்தை பெரிதாக்கினார்கள்.

அந்த ஆண்டு ரொனால்ட் ரீகனுக்கு சவால் விடக்கூடிய வகையில் ஒரு துணை வேட்பாளர் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான வால்டர் மாண்லேவுக்கு தேவைப்பட்டார்.

எனவே ஜெரால்டின் ஃபெரார்ரோ என்ற பெண்ணை துணை அதிபர் வேட்பாளராக அவர் தேர்வு செய்தார். அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஒரு முக்கிய தேசிய கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்காக தேர்வு செய்யப்பட்ட பெண் இவர்.

ஆனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்த அவரின் கணவரின் நிதி தொடர்பாக விவகாரங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த தேர்தலில் 49 மாகாணங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ரீகன்.

சில நேரங்களில் இந்த தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் நபர்கள், அரசியல் தளங்களில் சொதப்புவதும் உண்டு. 2008ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கைன் சாரா பாலினை தேர்வு செய்தார். ஆனால் அவர்களின் பிரச்சார காலமானது வெறும் 72 மணி நேரமே நீடித்தது.

வேட்பாளரை இறுதி செய்யும் செயல்பாடு மிகவும் கண்டிப்புடன் நடத்தப்பட்டாலும், இறுதி முடிவு எப்போதும் அதிபர் வேட்பாளருடையது தான்.

துணை அதிபராக இருந்து, பின்னர் அதிபர் பதவிக்கு சென்ற 15 நபர்களில் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷும் ஒருவர். 1988 இல் அதிகம் அறியப்படாத இந்தியானா செனட்டர் டான் குவேலைத் தனது துணை அதிபர் வேட்பாளராக தைரியத்துடன் தேர்வு செய்தார்.

அவர்கள் வெற்றி பெற்றாலும், கேட் ஆண்டர்சன் ப்ரோவர் எழுதிய 'ஃபர்ஸ்ட் இன் லைன்' புத்தகத்தில், 41 வயதான குவேல், அந்த பதவியில் ஒரு கூடுதல் பலமாக இருப்பதற்கு பதிலாக பொறுப்போடு பார்த்துக் கொள்ளப்பட வேண்டிய நபராகவே இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது

1988 இல் பிரசார விமானத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு நிருபர் துணை அதிபர் வேட்பாளரிடம் "உங்களுக்கு பிடித்த புத்தகம் எது? என கேட்டார்.

ஆனால் துணை அதிபர் வேட்பாளரான குவேலோ தனது மனைவி மர்லினிடம், "நான் படித்ததில் எனக்கு பிடித்த புத்தகம் எது?" என்று கேட்க, அருகிலிருந்த அரசியல்வாதி ஒருவர் குவேலின் செயலைக் கண்டு திகைத்துப் போனார்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.