Jump to content

குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
லுங்கி டான்ஸ்
----------------------
புதுச் சாரம் தான் புது உடுப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது என்றால் சிலருக்கு அது ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் 'புது உடுப்பு ஒன்றைப் போடுங்கோ...........' என்று வருட நாளிலோ அல்லது தீபாவளி அன்றோ சொல்லப்படும் போது, என்னையறியாமலேயே ஒரு புதுச் சாரத்தை கட்டிக் கொண்டு வந்து நிற்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது. புதுச் சாரம் மடங்காமல், இடுப்பில் அப்படியே ஒட்டாமல், கோதுமை மா களி பூசின மாட்டுத்தாள் பேப்பர் போல நிற்கும் அந்த உணர்வை வேறு எந்த புது உடுப்பும் கொடுப்பதில்லை.
 
ஒரு வருடம் முழுவதும் பாடசாலைக்கு வெள்ளை சேட் இரண்டு, நீலக் காற்சட்டை ஒன்று போதும். அடுத்த வருடம் கூட அந்த வெள்ளை சேட்டுகள் வரும். ஆனால் காற்சட்டையில் பல முக்கியமான இடங்களில் ஓட்டை விழுந்து விடும், அதனால் ஒவ்வொரு வருடமும் ஒரு காற்சட்டை புதிதாக வாங்கியே தீர வேண்டும். ஆனாலும் புதுக் காற்சட்டையையும், புதுச் சாரத்தையும் ஒப்பிடவே முடியாது. புதுச் சாரங்களை விட்டுப் பார்த்தால், வேறு எந்த புது உடுப்பினதும் நினைவும் மனதில் இன்று இல்லவே இல்லை.
 
சங்கு மார்க், கிப்ஸ், பின்னர் டிசைன் டிசைனாக கொஞ்சம் நைசான துணிகளில் அம்பானியின் லுங்கிகள், சவுதி சாரம், மட்டக்களப்பு சாரம், பற்றிக் சாரம் என்று பல சாரங்களை இடுப்பில் சுத்தி சுத்தி வளர்ந்தவர்கள் நாங்கள். இன்றும் சாரம் தான். முன்னர் வேலை முடிந்து வந்தவுடன் சாரத்திற்கு மாறி விடுவேன். இப்பொழுது பெரும்பாலும் வீட்டில் இருந்தே வேலை செய்வதால், சில நாட்களில் 24 மணி நேரமும் கர்ணனின் கவச குண்டலம் போல சாரம் ஒட்டியே இருக்கின்றது.
 
பல வருடங்களின் முன், இங்கு சாரத்தை பற்றி எல்லோருக்கும், எங்கள் மக்களிலேயே, ஒரே அபிப்பிராயம் இல்லை என்ற உண்மை முதன் முதலில் தெரிய வந்தது. சாரம் என்பது ஒரு 'மரியாதை குறைந்த' உடுப்பாக பார்க்கப்படுவதும் தெரிந்தது. வீட்டிற்கு நண்பர்கள் வரும் போது சாரத்துடன் நிற்பதை பலர் தவிர்த்தனர். சந்தியில் நாள் முழுக்க சாரத்துடன் நின்று வளர்ந்து விட்டதால் சாரத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. எவர் வந்தாலும் சாரம் தான் என்று மனம் இறுக்கமாக இருந்தது.
 
தமிழ்நாட்டில் ஒருவரின் உணவுப் பழக்கத்தை அவரின் ஒரு வித அடையாளமாக எடுத்துக் கொள்வார்கள். மொத்தமான, ஒரே ஒரு வகை தோசை சுட்டுச் சாப்பிடுபவர்கள் வேறு. பேப்பர் தோசை, நெய் தோசை, ஆனியன் தோசை என்று சுட்டுச் சாப்பிடுபவர்கள் வேறு என்பார்கள். ஒருவர் குடிக்கும் கோப்பியையும், டீயையும், பிளேன் டீயையும் வைத்தே அவர்களை வகைப்படுத்தும் வல்லமை பல தமிழ்நாட்டவர்களுக்கு உண்டு. அவர்கள் கும்பிடும் சாமியை வைத்தும் வகைப்படுத்துவார்கள். நாங்கள் இந்தளவிற்கு இல்லை தான், ஆனாலும் சங்கு மார்க்கிலும், கிப்ஸிலும் ஒரு தயக்கம் இருந்தது.  
 
ஒரு தடவை மகிந்த ராஜபக்ச மாலத்தீவிற்கு போயிருக்கும் போது, மகிந்தவை வரவேற்ற சில மாலத்தீவு முக்கியஸ்தர்கள் சாரமே கட்டியிருந்தனர். படத்தில் பார்க்கும் போது அவை மட்டக்களப்பு சாரம் போன்றிருந்தன. இது போதுமானதாக இருந்தது எனக்கு, இன்னும் நிறைய சாரங்களை வாங்கி வீட்டில் அடுக்க.
 
பின்னர் 'லுங்கி டான்ஸ்............. லுங்கி டான்ஸ்......' என்றொரு பாட்டும், ஆட்டமும் வந்து மேடையெல்லாம் கலக்கியது. பல கலை விழாக்கள், தமிழ் விழாக்களில் இந்த லுங்கி டான்ஸ் ஆடப்பட்டது. இது மிக இலகுவான ஒரு ஆட்டம், அதனால் இன்னும் புகழ் பெற்றது. ஆடுபவர்கள் பெரிதாக ஆடத் தேவையில்லை. வெளியால் கட்டியிருக்கும் சாரத்தை மட்டும் கீழேயும், மேலேயும் , பக்கவாட்டிலும் வேகமாக அசைத்தால் அதுவே லுங்கி டான்ஸ். 
 
என்றாலும் சாரத்திற்கு உரிய மரியாதை இன்னும் கொடுக்கப்படவில்லை என்றே எனக்குப்பட்டது. மாலத்தீவில் கட்டிக் கொண்டாடுகின்றார்களே.
 
பின்னர் வந்தன ஒன்றுகூடல்கள். எங்காவது, கேரளா, மலேசியா, பாங்காக், இப்படி எங்காவது போய் ஒன்று கூடுவது. பொதுவாக ஒரே விதமான நிகழ்ச்சி நிரல்கள் தான். மேலதிகமாக, அந்தக் கூட்டத்தில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால், அதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும். உதாரணமாக, நான் போயிருந்த ஒன்றுகூடல் ஒன்றில் ஒருவருக்கு யோகா மிக நன்றாகவும், இன்னொருவருக்கு ஓரளவும் தெரியும் என்பதால். விடிகாலையில் யோகாசனம் என்பது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தது. அதிர்ஷடவசமாக அந்த உல்லாசப் போக்கிடத்திலிருந்து (resort) வெளியே போய் வருவதற்கு இரண்டு வழிகள் இருந்தன.             
 
இன்றைய ஒன்றுகூடல்களில் முக்கியமான இன்னொரு நிகழ்வு எல்லோரும் சாரம் கட்டி வரிசையாகவும், வட்டமாகவும், பல கோணங்களிலும் நின்று படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் போடுவது. பெண்கள் படங்கள் எடுப்பதற்கு சேலைகளுடன் சளைக்காமல், நாள் முழுக்க நிற்பது போல. இப்பொழுது அப்பாடா என்றிருக்கின்றது. கடைசியில் சாரமும் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.
  • Like 6
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சாரத்தை பற்றிய வர்ணனை அருமை ரசோதரன்.
எனக்கும் சாரம்தான் பிடித்த உடை. வீட்டில் நிற்கும் போது அதனைத்தான் அணிவேன். ஆனால் வீட்டிற்கு ஆட்கள் வரும் போது அதனுடன் நிற்க எனக்கு விருப்பம் இருந்தாலும்,  வீட்டுக்காரி நொய்… நொய்… என்று நச்சரித்து காற்சட்டைக்கு மாற வைத்து விடுவா. 😁
 
Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரைக்கும் நான் உடுக்கும் உடுப்புகளிலேயே சொர்க்க உடுப்பு எண்டால் சாரம் தான்.....அதிலை உள்ள சுகம் வேறை எதிலையும் இல்லை.குளிர்ந்தால் இழுத்து போர்த்துக்கொண்டு படுக்க......வெய்யிலுக்கு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு திரிய.....😄

 all in one உடுப்பு  :cool:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரசோதரன் said:

புதுச் சாரம் மடங்காமல், இடுப்பில் அப்படியே ஒட்டாமல், கோதுமை மா களி பூசின மாட்டுத்தாள் பேப்பர் போல நிற்கும் அந்த உணர்வை வேறு எந்த புது உடுப்பும் கொடுப்பதில்லை.

இந்த இடத்தில்த் தான் எனக்கு மிகுந்த எரிச்சலை ஊட்டும்.

புதிய உடுப்பு எதுவானாலும் ஒருதடவை தண்ணீரில் போட்டெடுத்தாலே மனதுக்கு இதமாக இருக்கும்.

37 minutes ago, ரசோதரன் said:

ஒரு வருடம் முழுவதும் பாடசாலைக்கு வெள்ளை சேட் இரண்டு, நீலக் காற்சட்டை ஒன்று போதும்.

நாங்க பாடசாலை போகும்போது யூனிபோம் பிரச்சனை இருக்கவில்லை.

இன்றுவரை அதன் தாக்கம் தெரியாது.

41 minutes ago, ரசோதரன் said:

பின்னர் 'லுங்கி டான்ஸ்............. லுங்கி டான்ஸ்......' என்றொரு பாட்டும், ஆட்டமும் வந்து மேடையெல்லாம் கலக்கியது. பல கலை விழாக்கள், தமிழ் விழாக்களில் இந்த லுங்கி டான்ஸ் ஆடப்பட்டது. இது மிக இலகுவான ஒரு ஆட்டம், அதனால் இன்னும் புகழ் பெற்றது. ஆடுபவர்கள் பெரிதாக ஆடத் தேவையில்லை. வெளியால் கட்டியிருக்கும் சாரத்தை மட்டும் கீழேயும், மேலேயும் , பக்கவாட்டிலும் வேகமாக அசைத்தால் அதுவே லுங்கி டான்ஸ். 

இந்தப் பாட்டோடு சரத்தோடு வீதிக்கே இறங்கிவிட்டீர்களோ?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நாங்க பாடசாலை போகும்போது யூனிபோம் பிரச்சனை இருக்கவில்லை.

ஓமோம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையோட நிண்டால் யூனிபோம் பிரச்சனை இருக்காது தானே.....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டிப் பகுதியில் கிப்ஸ் சாரங்கள் இந்தியாவிலிருந்து ஊருக்கூர் விற்பார்கள்.

அதேமாதிரி மட்டக்களப்பிலும் அடித்து ஏமாற்றி விற்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாரம் வாங்கும் போது…. தனி பருத்தி நூலால் நெய்யப் பட்டதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதுதான் இடுப்பில் கட்டினால் அசையாமல் நிற்கும்.
சிலவற்றில் “பொலியெஸ்ரர்”  கலந்து இருப்பார்கள். அது கட்டிய இடத்தில் நிற்க மாட்டாது. அடிக்கடி சரி செய்யச் சொல்லி வெறுப்பேற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்திற்கு முன்…. மகள் சிறிய வயதாக இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, அவரின் பாடசாலை ஜேர்மன்  நண்பி ஒருவர் வீட்டிற்கு விளையாட வருகின்றவர்.
சின்னப் பிள்ளைதானே…  சாரத்துடன் நிற்பதை பெரிதாக கவனிக்க மாட்டுது என்று நான்  சாரத்தை அணிந்து இருந்ததை பார்த்து… அது தனது வீட்டிற்க்குப் போய் தாய், தந்தையரிடம் இன்னாரின் அப்பா… அம்மாவின் பாவாடைய (Rock - Skirt) அணிந்து இருக்கின்றார் என்று சொல்லி விட்டது. 🤣  இந்த அவமானம் தேவையா என்று, எனக்கு… சீய் என்று போய் விட்டது. 😂
 
  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் எனது அயலவர் ஒருவரின் கார் வழியில் நின்று விட்டது. அது ஒரு பிரபல சிட்னி சந்தையின் அருகாமை. அவர் காரின் வெளியே இறங்கி நின்று கொண்டிருந்தார். காலைச் சூரியனின் ஒளி அவரின் கால்களுக்கிடையால் புகுந்து வெளி வந்தது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக விரிந்தது. அவர் சாரம் அணிந்திருந்த்தார்.எனது காரை நிறுத்தி அவரை ஏற்றினேன். ஆனால் நான் வெளியே இறங்கவில்லை. காரணம் இன்னும் விளங்கவில்லை.

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

ஒரு நாள் எனது அயலவர் ஒருவரின் கார் வழியில் நின்று விட்டது. அது ஒரு பிரபல சிட்னி சந்தையின் அருகாமை. அவர் காரின் வெளியே இறங்கி நின்று கொண்டிருந்தார். காலைச் சூரியனின் ஒளி அவரின் கால்களுக்கிடையால் புகுந்து வெளி வந்தது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக விரிந்தது. அவர் சாரம் அணிந்திருந்த்தார்.எனது காரை நிறுத்தி அவரை ஏற்றினேன். ஆனால் நான் வெளியே இறங்கவில்லை. காரணம் இன்னும் விளங்கவில்லை.

அவர் உள்ளுக்கு  ஜட்டி போடவில்லை போலுள்ளது. 😂
அதுதான்… சூரிய ஒளியில், பளிச்சென்று தெரிந்திருக்கு. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவர் உள்ளுக்கு  ஜட்டி போடவில்லை போலுள்ளது. 😂
அதுதான்… சூரிய ஒளியில், பளிச்சென்று தெரிந்திருக்கு. 🤣

சிங்கன் பக்கென்று பிடிச்சிடுவார்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, alvayan said:

சிங்கன் பக்கென்று பிடிச்சிடுவார்...😁

எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக அவதானிக்க வேணும். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னைப் பொறுத்தவரைக்கும் நான் உடுக்கும் உடுப்புகளிலேயே சொர்க்க உடுப்பு எண்டால் சாரம் தான்.....அதிலை உள்ள சுகம் வேறை எதிலையும் இல்லை.குளிர்ந்தால் இழுத்து போர்த்துக்கொண்டு படுக்க......வெய்யிலுக்கு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு திரிய.....😄

 all in one உடுப்பு  :cool:

நானும் உங்க பக்கம்தான்..சாமி...கன்டாவிலை $ 10க்கு 3 சரம் விற்பினம்.. $20 க்கு 6 வாங்கி வச்சிருக்கிறன்..இரவு படுக்கைக்கு சாரம் இல்லையென்றால் நித்திரையே வராது..அப்பிடி ஒரு சுகம்..பொண்டாட்டி ஒருநாள்  கட்டின சரத்தோடை மறுநாள்  பெட்டிலை ஏறவிடாது...இதனாலை எப்பவும்  6 வாங்கிப் போடுவன்... கனடா இதிலை பெற்றர்..

சங்கு மார்க், கிப்ஸ், பின்னர் டிசைன் டிசைனாக கொஞ்சம் நைசான துணிகளில் அம்பானியின் லுங்கிகள், சவுதி சாரம், மட்டக்களப்பு சாரம், பற்றிக் சாரம் என்று பல சாரங்களை இடுப்பில் சுத்தி சுத்தி வளர்ந்தவர்கள் நாங்கள்.

சின்னவயதிலை 7 கடுவன் உருப்படி....இதாலை புதுவருசம் ..தீபாவளிக்கு புது  உடுப்பு எடுப்பது கஸ்டம் ..எப்படியும் முதல்நாள்  கூப்பன் கடையிலை சீத்தை துணி எடுத்து மச்சாள் மாரட்டைக் குடுத்து பெரியாட்களுக்கு இரட்டைமூட்டுச் சாரமும் ..சின்னாக்களுக்கு ஒற்றைமூட்டுச்சரமும் ரெடியாகும்... துணி மிஞ்சினால் வாலாக்கொடியும் (பென்ரர்) தைபடும்...அதின்    பிறின்ற் பெயின்ரு மணத்தோடை முழுகிவிட்டுகட்டிக்கொண்டு கோவிலுக்கு போவதில் உள்ள சந்தோசம்...அம்பனியின் மகன் கலியாணத்துக்கு போட்ட உடுப்பின் சந்தோசத்தைவிட ..கூடின சந்தோசம் அடைதிருப்பம்...

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஓமோம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையோட நிண்டால் யூனிபோம் பிரச்சனை இருக்காது தானே.....:cool:

தமிழ்கலவனில் படித்த கலாம் இஸ்ரோவுக்கு தலைவரானார்.

தமிழ்கலவனில் படித்த ஈழப்பிரியன் நாசாவின் தலைவர்.

இதுகளை வெளியில சொன்னதில்லை.கேட்டதால் சொன்னேன்.

1 hour ago, alvayan said:

சின்னவயதிலை 7 கடுவன் உருப்படி....இதாலை புதுவருசம் ..தீபாவளிக்கு புது  உடுப்பு எடுப்பது கஸ்டம் ..எப்படியும் முதல்நாள்  கூப்பன் கடையிலை சீத்தை துணி எடுத்து மச்சாள் மாரட்டைக் குடுத்து பெரியாட்களுக்கு இரட்டைமூட்டுச் சாரமும் ..சின்னாக்களுக்கு ஒற்றைமூட்டுச்சரமும் ரெடியாகும்... துணி மிஞ்சினால் வாலாக்கொடியும் (பென்ரர்) தைபடும்...அதின்    பிறின்ற் பெயின்ரு மணத்தோடை முழுகிவிட்டுகட்டிக்கொண்டு கோவிலுக்கு போவதில் உள்ள சந்தோசம்...அம்பனியின் மகன் கலியாணத்துக்கு போட்ட உடுப்பின் சந்தோசத்தைவிட ..கூடின சந்தோசம் அடைதிருப்பம்...

உங்க வீட்டுக்காரர் போனால் விமானப்படை போனமாதிரி எல்லோரும் ஒரே நிறத்தில் பார்க்க நன்றாகத் தான் இருக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

சங்கு மார்க், கிப்ஸ், பின்னர் டிசைன் டிசைனாக கொஞ்சம் நைசான துணிகளில் அம்பானியின் லுங்கிகள், சவுதி சாரம், மட்டக்களப்பு சாரம், பற்றிக் சாரம் என்று பல சாரங்களை இடுப்பில் சுத்தி சுத்தி வளர்ந்தவர்கள் நாங்கள்

புலிகள் இயக்கத்தில் சேர்ந்தால் சங்கு மார்க் சாரங்கள் தருவார்கள் என்று அன்று ஒரு கதை இருந்தது. ஜேஆர் கூட ‘சாரம் கட்டிய பெடியள்’ என்றுதான் சொல்லியிருந்தார். சாரம் ரங்கூனில் தேசிய உடை. சாரம் என்பதை பெரும் கதையாக வரவேண்டியது அதைக் குறுங்கதைக்குள் அடக்கி மற்றவர்களைப் பேச வைத்திருக்கிறீர்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kavi arunasalam said:

ஜேஆர் கூட ‘சாரம் கட்டிய பெடியள்’ என்றுதான் சொல்லியிருந்தார்.

இது இந்திய தூதுவர் டிக்சித் சொன்னதாகவே எண்ணியிருந்தேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழ்கலவனில் படித்த கலாம் இஸ்ரோவுக்கு தலைவரானார்.

தமிழ்கலவனில் படித்த ஈழப்பிரியன் நாசாவின் தலைவர்.

இதுகளை வெளியில சொன்னதில்லை.கேட்டதால் சொன்னேன்.

🤣......

ஊரில் இரண்டு தமிழ் கலவன் பாடசாலைகள் இருந்தன..... போகவில்லை......உலகம் ஒரு விண்வெளி விஞ்ஞானியை  இழந்து விட்டது.....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

🤣......

ஊரில் இரண்டு தமிழ் கலவன் பாடசாலைகள் இருந்தன..... போகவில்லை......உலகம் ஒரு விண்வெளி விஞ்ஞானியை  இழந்து விட்டது.....😀

பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாவது அனுப்புங்கள்.

அவர்களை நாசாவில் உயர்ந்த இடத்தில் காணலாம்.

சாரத்துக்கு இன்னொரு பெருமை இருக்கிறது.

எவ்வளவு குளிராக இருந்தாலும் கேள்விக்குறி போல வளைந்து தலை முதல் கால்வரை போர்த்திக் கொண்டே படுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

இது இந்திய தூதுவர் டிக்சித் சொன்னதாகவே எண்ணியிருந்தேன்.

இதேத்ஹன் நானும் கேள்விப்பட்டது..

ஆனால் அந்த நாசா தலைவர் இன்னும் என்னை நித்திரை கொள்ளாமல் செய்யிது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9724326A-5C5B-4ED1-B067-360D9112F702.jpg

Just now, alvayan said:

இதேத்ஹன் நானும் கேள்விப்பட்டது..

ஆனால் அந்த நாசா தலைவர் இன்னும் என்னை நித்திரை கொள்ளாமல் செய்யிது..

தமிழ்கலவனுக்கு போகாமல் விட்டுவிட்டேனே என்று கவலை போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

04DF0BD1-B733-4FD3-91D6-63198A9BA1B8.jpg
சாரத்தின் அழகு.

சண்டிக்கட்டு கட்டினால் தனி மிடுக்கு...அதுசரி இந்தப்படத்தை சிறியர் பார்த்திட்டாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

சண்டிக்கட்டு கட்டினால் தனி மிடுக்கு...அதுசரி இந்தப்படத்தை சிறியர் பார்த்திட்டாரோ?

சிறியர் இன்னும் தூக்கம் போல.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

9724326A-5C5B-4ED1-B067-360D9112F702.jpg

தமிழ்கலவனுக்கு போகாமல் விட்டுவிட்டேனே என்று கவலை போல கிடக்கு.

போனனான்...ஆனால்...நாசாவிலை வேலை கிடைக்கவில்லை.. சாரு இந்தப் படம் உண்மையா.. எனக்கு இப்படி பெட் போட்டு தனிய படுக்க விருப்பம் ..அதுவும் சரத்தை கட்டி காலை விரிச்சுக்கொண்டு ..சரத்தின் மேல்கட்டையும் தளர்த்திப் போட்டுபடுத்தால்...காற்றூ... சிலுசிலென்று பாய   ஏசி பிச்சை வாங்கவேணும்..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஈழப்பிரியன் said:

04DF0BD1-B733-4FD3-91D6-63198A9BA1B8.jpg
சாரத்தின் அழகு.

சாரத்துடன்  அந்தப் பார்வை... நல்லாயிருக்கு. 👍
ஜட்டி... போட்டுக்  கொண்டுதான் , நிலம் கொத்த வேணும். 😂
இல்லாட்டி... பூரான், பூச்சி  கடித்துப் போடும். 🤣

1 hour ago, alvayan said:

சண்டிக்கட்டு கட்டினால் தனி மிடுக்கு...அதுசரி இந்தப்படத்தை சிறியர் பார்த்திட்டாரோ?

இப்பதான்... பார்த்து, கருத்து எழுதியிருக்கு அல்வாயான். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.