Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 JUL, 2024 | 08:13 PM
image
 
பிரிட்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர்

சௌத்போட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

GTp-reZWoAADotN.jpg

பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது என அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

லிவர்பூலில் உள்ள ஆல்டெர் சிறுவர் வைத்தியசாலை உட்பட மூன்று வைத்தியசாலையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது என சிறுவர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் ஆரம்ப பாடசாலை மாணவர்களிற்கான  யோகா நடன நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கத்திக்குத்து தாக்குதலில் சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/189736

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருதிவழிந்தோட பிள்ளைகளை தூக்கிக்கொண்டு ஒடிய பெற்றோர்-சௌத்போர்ட் கத்திக்குத்து தாக்குதலை பார்த்தவர்கள் தகவல்

29 JUL, 2024 | 09:10 PM
image
 
பிரிட்டனின் சௌத்போர்ட்டில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இரத்தக்காயங்களுடன் நடனவகுப்பிலிருந்து சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என  தெரிவித்துள்ளனர்.

நடனவகுப்பிலிருந்து இரத்தக்காயங்களுடன் காணப்பட்ட பிள்ளைகளை தூக்கியவாறு பெற்றோர் வெளியே ஒடியதையும் அவர்களை காப்பாற்ற முடிந்ததையும் பார்த்ததாக அலைனா ரிலே என்பவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் செயற்கை சுவாசத்தை வழங்க முற்பட்டதை நான் பார்த்தேன்,அவர்கள் பிள்ளைகளை கரங்களில் பற்றியிருந்தனர் அந்த வகுப்பு முடிவடையும் தருணத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் ஒருபோதும் அவ்வாறான அலறல்களை கேட்டதில்லை, எனஅவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189741

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பாவில இப்ப பரவலாய் கத்திக்குத்துகள் நடக்குது...
போற போக்க பார்த்தால் இனி வெங்காயம் வெட்டுற சின்ன கத்தி வாங்கிறதெண்டாலும் லைசன்ஸ் வரும் போல கிடக்கு 🤪

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேரை நடுச்சந்தியில் வைத்து கத்தியால் கூர் பார்த்து கட்டி தூக்கி விடுவதை தவிர வேறு மருந்தில்லை வழி இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பியன் வாள்வெட்டு கோஷ்டி.  😂

எதை விதைத்தாயோ… அதைத்தான் அறுவடை செய்வாய். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

நாலு பேரை நடுச்சந்தியில் வைத்து கத்தியால் கூர் பார்த்து கட்டி தூக்கி விடுவதை தவிர வேறு மருந்தில்லை வழி இல்லை...

மத்திய கிழக்கில் உள்ள  தண்டணைகள் சட்டங்களை வரவேற்கின்றேன்.
அவிட்டு விட்ட எருமை மாடுகள் மாதிரி காணாததை கண்டவர்கள் இன்னும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள்.

ஜனநாயக நாடுகளுக்கு வந்து உள்ள சுதந்திரங்களை துர்பிரயோகம் செய்யும் கேடு கெட்டவர்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

மத்திய கிழக்கில் உள்ள  தண்டணைகள் சட்டங்களை வரவேற்கின்றேன்.
அவிட்டு விட்ட எருமை மாடுகள் மாதிரி காணாததை கண்டவர்கள் இன்னும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள்.

ஜனநாயக நாடுகளுக்கு வந்து உள்ள சுதந்திரங்களை துர்பிரயோகம் செய்யும் கேடு கெட்டவர்கள். 😡

உந்த‌ க‌த்தி குத்துக‌ள் டென்மார்க்கில் மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ட‌ந்து ஜ‌ந்து ஆறு பேர் சேர்ந்து குத்தி ஈராக் நாட்டை சேர்ந்த‌வ‌ர் அந்த‌ இட‌த்திலே ப‌லி தாத்தா...................ப‌லியான‌வ‌ர் என‌க்கு ந‌ங்கு தெரிந்த‌ அண்ணா...................ம‌னைவி பிள்ளைக‌ளை  விட்டு போய் சேர்ந்து விட்டார்....................உழைச்சு வாழ‌னும் அத‌ற்காக‌ க‌ஞ்சா ப‌வுட‌ர் கோதாரி வியாபார‌ம் செய்ய‌ போய் போட்டி பொறாமையில் போன‌ உயிர்😡..................

பின் குறிப்பு என் ந‌ப்பன் மூல‌ம் தான் அவ‌ரை ப‌ழ‌க்க‌ம் காணுகிற‌ இட‌த்தில் க‌ண்டால் க‌தைப்பேன்........................க‌ட‌சியா அவ‌ரை நேரில் பார்த்த‌து 2010க‌ளில்😥☹️...........

என‌க்கு போன‌ வ‌ருட‌ம் ந‌ண்ப‌ன் சொல்லித் தான் தெரியும் இப்ப‌டி க‌த்தி குத்தில் இற‌ந்து விட்டார்  அவ‌னின் இறுதி ச‌ட‌ங்குக்கு தான் போன‌து என்று......................

இப்ப‌டி இனி ஒருத‌ருக்கும் ந‌ட‌க்க‌ கூடாது.....................

ஒருசில‌ ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் போதும் . இது ஆவ‌த்தான‌ உல‌க‌ம் காசுக்காக‌ கொலைக‌ள் செய்யும் அதிக‌ ம‌னித‌ர்க‌ள் வாழும் உல‌க‌ம் இது......................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் சௌத்போர்ட் கத்திக்குத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு : 6 சிறுவர்களின் நிலை கவலைக்கிடம்!

Published By: DIGITAL DESK 3   30 JUL, 2024 | 09:59 AM

image
 
பிரிட்டனின் சௌத்போர்ட்டில் நடத்தப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளன.

இந்த கத்தி குத்து சம்பவத்தில் மேலும் 09 சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேலும் இரு பெரியவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்  அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்களின் கலை நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கத்திகுத்தை மேற்கொண்ட 17 வயதான நபரொருவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

எதற்காக இந்த கத்தி குத்து நடத்தப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை என்பதுடன், இது தீவிரவாத தாக்குதல் கிடையாது என அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/189755

  • கருத்துக்கள உறவுகள்

southport-stabbings.jpg?resize=750,375

பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) நகர கத்திக்குத்து தாக்குதலில், இரு சிறுவர்கள் பலி!

பிரித்தானியாவின் சவுத்போர்ட் நகர கத்திக்குத்து தாக்குதலில் (Southport stabbing attack) 2 சிறுவர்கள் பலி யாகி உள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) நகரில் செயல்பட்டு வரும் நடன பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 17- வயது சிறுவன், அங்கிருந்த சிறுவர்களை கத்தியால் தாக்கியுள்ளார்.
பிரித்தானியாவின் கடலோர பகுதியில் அமைந்துள்ள சவுத்போர்ட் நகர ஹார்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில், சிறுவர்களுக்கான நடன பயிற்சிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் சிறுமிகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் டெய்லர் ஸ்விஃப்ட்-கருப்பொருள் நடன நிகழ்வின் போது (Taylor Swift-themed dance event) கல்லூரிக்குள் புகுந்த சிறுவனால் இந்த தாக்குதல் நடத்த்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

uk-1.jpg?resize=600,360

கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக, வேல்ஸின் கார்டிஃப் நகரில் பிறந்து லங்காஷையரில் உள்ள பேங்க்ஸ் கிராமத்தில் வசிக்கும் 17-வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலாக இதை கருதவில்லை என முதல்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலில் சிறுவர்கள் பலியான சம்பவத்திற்கு பிரித்தானிய மன்னரும், ராணியும், பிரதமரும் ஆழ்ந்த இரங்கலையும், அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1394053

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை சேர்ந்தவரின் பல்பொருள் அங்காடியை சூறையாடியது காடையர் கும்பல் - பிரிட்டனின் சௌத் போர்ட்டில் கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் வன்முறை

Published By: RAJEEBAN

01 AUG, 2024 | 09:39 AM
image
 
பிரிட்டனின் சௌத்போர்ட்டில் கத்திக்குத்து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையை சேர்ந்த ஒருவரின் பல்பொருள் அங்காடியை வன்முறை கும்பலொன்று சூறையாடி பெரும் சேதத்தையும் நஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

4250-2833-2.77010515.jpg.article-962.jpg

சானகபலசூரிய என்பவரின் வர்த்தக நிலையம் சூறையாடப்பட்டது என பிபிசி தெரிவித்துள்ளது.

வின்ட்ஸர் மினிமார்ட்டின் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்த வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

k80Yi5ZJTICL9cFS.jpg

கத்திக்குத்து தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் நிகழ்வின் பின்னர்மெனேசைட் பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த பகுதி பாதுகாப்பனதாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக தனது வர்த்தக நிலையத்தையை மூடிக்கொண்டு அன்று மாலை வீடு திரும்பிய இலங்கையரான பாலசூரிய வீட்டில் உள்ள சிசிடிவி கமராவின் மூலம் தனது வர்த்தக நிலையம் சூறையாடப்படுவதை பார்த்துள்ளார்.

Screenshot-2024-07-31-14-52-36.png

அவர்களிற்கு வர்த்தக நிலையத்தை உடைத்து உள்ளே செல்வதற்கு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மாத்திரமே தேவையாகயிருந்தது அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை காலால் உதைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையத்தின் வெளியே தீயை பார்த்தேன் அவர்கள் கார்ட்போர்ட்டினை கொழுத்தினார்கள் நான் அவர்கள் எனது வர்த்தக நிலையத்தை தீயிடப்போகின்றார்கள் என அச்சமடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் 999 அழைத்தேன் சிசிடிவியில் எனது பிள்ளைகளும் அதனை பார்த்தார்கள் அலறினார்கள் என  அவர் தெரிவித்துள்ளார்.

southport-looting.jpg

மறுநாள் காலையே சேதங்களை பார்த்தேன் என தெரிவித்துள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தை,அது பயங்கரமானதாக காணப்பட்டது அனைத்து பொருட்களும் தரையில் காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அனைத்தையும் எடுத்துச்சசென்றுள்ளனர் அவர்கள் வர்த்தக நிலையத்திற்குள் சாப்பிட்டார்கள் அது பெரும் பயங்கரம் நான் காப்புறுதி செய்யவில்லை என இலங்கையரான சானக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதுமிகவும் மோசமான விடயம் ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் நிதி திரட்டி எனக்கு உதவப்போகின்றார்கள் - குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189954

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்த செய்தியையும், மேலே மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா வரும் குடியேறிகளை AfD பாணியில் திட்டி எழுதியிருக்கும் "ஜேர்மனியரின்" கருத்தையும் பார்த்தால் கோசான் அடிக்கடி சொல்லும் "கே.எவ்.சிக்கு வாக்குப் போடும் கோழிகள்" என்ற வாக்கியம் நினைவில் வருகிறது😎.

இன்று, இந்த குற்றத்தை செய்த 17 வயது குற்றவாளியின் அடையாளத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இவர் ருவாண்டாவில் இருந்து பிரிட்டனுக்கு குடியேறிய பெற்றோருக்கு பிரிட்டனில் பிறந்த பிள்ளை. இவர் இஸ்லாமியர் என்பதற்கான அடையாளத்தையும் பெயரில் காணவில்லை.

ஆனால், English Defense League (EDL) எனப்படும் எல்லா வெள்ளையரல்லாத குடியேறிகளுக்கும் எதிரான வன்முறை வழி நாடும் அமைப்பு, ஒரு பள்ளிவாசலையும் தாக்கி, மேலே இருப்பது போன்ற ஆசியக் குடியேறிகளின் உடைமைகளையும் தாக்கியிருக்கிறது.

ஏன்? சமூகக் கேடாக மாறியிருக்கும் சமூக வலை ஊடகங்களில் "கொலையாளி குடியேறியான முஸ்லிம்" என்ற பொய்த்தகவலைப் பரப்பி, மேலே இருக்கும் ஜேர்மனியக் குடியின் மண்டையைக் கழுவியது போலவே பலரின் மண்டையைக் கழுவியிருக்கிறார்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.