Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   03 AUG, 2024 | 02:53 PM

image

மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்று சனிக்கிழமை  (3) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இன்றைய தினம் காலை வைத்தியர் அர்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில், வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்சுனா இன்றைய தினம் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/190176

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1722672711239-1-e1722677105335.jp

வைத்தியர் அர்ச்சுனா கைது – 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

மன்னார் வைத்தியசாலைக்குய் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும்  7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனா விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனவை மன்னார் நீதவான் நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வைத்தியர் அர்சுனாவை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறி நேற்றைய தினம் மாலை மன்னாருக்கு வைத்தியர் அர்ச்சுனா சென்றிருந்தார்.

மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர், அங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று இறப்பு தொட்பான விளக்கத்தைக் கேட்டிருந்தார்.

அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள், விதிமுறைகளை மீறி வைத்தியசாலைக்குள் நுழைய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

 

பின்னர் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார்.

இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மன்னார் வைத்தியர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் எடுப்பதற்காக  வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394616

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் வைத்தியசாலைக்கு நேரில் சென்று நீதி, நியாயம் கேட்கும் துணிவு ஒருவருக்காவது உள்ளது. இதை பாராட்டத்தானே வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

மன்னார் வைத்தியசாலைக்கு நேரில் சென்று நீதி, நியாயம் கேட்கும் துணிவு ஒருவருக்காவது உள்ளது. இதை பாராட்டத்தானே வேண்டும்?

அடுத்த பூதம் வெளியே வரத் தொடங்கி விடும் என்ற பயம் தான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

மன்னார் வைத்தியசாலைக்கு நேரில் சென்று நீதி, நியாயம் கேட்கும் துணிவு ஒருவருக்காவது உள்ளது. இதை பாராட்டத்தானே வேண்டும்?

அண்ணை அங்குள்ள மக்கள் தான் அழைத்திருக்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அண்ணை அங்குள்ள மக்கள் தான் அழைத்திருக்கிறார்களாம்.

அர்ச்சனா வைத்தியர் தானாகவே தான் அந்த இறந்த பிள்ளையின் குடும்பத்தோடு போண் எடுத்து கதைச்சு எல்லா விபரங்களுக்கும் கேட்டு அறிந்த பின் தான் வருகிறேன் என்று சொல்லி உள்ளதாக அவரது லிங்கிலயே பார்த்திருக்கிறேன்.மக்கள் சும்மா எங்க நியமனம் கிடைக்குதோ அங்கே வாங்களன் என்று சொல்வது வழமை தானே.அது மட்டுமல்ல வேறு யாரும் போய் அந்த குடும்பத்திற்கு உபத்திரவம் குடுக்காதீங்கோ,அப்படி யாரும் வந்தால் அயலவர்கள் யாராவது பார்த்து திருப்பி அனுப்பி விடுங்கோ என்று அர்ச்சனா சொல்லி இருந்தார்..இன்னும் சாவகச்சேரி பிரச்சனையே முற்றுப் பெறாதவரயில் சும்மா இருந்திருக்கலம், இருக்கலாம்  ஏன் ஓடு பட்டு திரிந்து தானே பிரச்சனைகளை விலைக்கு வாங்கிறார்.அவரை குறை சொல்வதோ அல்லது குறை கண்டு கொள்வதோ என் நோக்கம் அல்ல..ஆனால் நிறைய பிழை விடுகிறார்.எங்க போனாலும் யூருப் வால் பிடியள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு : நீடிக்கப்பட்டுள்ள விளக்கமறியல்

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்சுனாவை (Archuna) தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (5) நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்சுனா வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் வைத்தியசாலையினுல் அனுமதி இன்றி வைத்தியருடன் நுழைந்து காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதவான் உத்தரவு

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் மன்னார் காவல்நிலையத்தில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு : நீடிக்கப்பட்டுள்ள விளக்கமறியல் | Bail Plea Rejected For Dr Archuna Remand Ordered

வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (05) சட்டத்தரணிகள் ஊடாக வைத்தியருக்கு பிணைமனு மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் குறித்த நகர்தல் பத்திரம் ஊடான பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன் தொடர்ந்து வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

தனி ஒருவராக  செயலில் இறங்குவது  கஷ்டம். அவர்கள் பணமும் ஆட்பலமும்  மிக்கவர்கள் . வீண் அவப்பெயர்  வரப்போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2024 at 15:25, யாயினி said:

இன்னும் சாவகச்சேரி பிரச்சனையே முற்றுப் பெறாதவரயில் சும்மா இருந்திருக்கலம், இருக்கலாம்  ஏன் ஓடு பட்டு திரிந்து தானே பிரச்சனைகளை விலைக்கு வாங்கிறார்

உண்மைதான், 

ஒரு படித்தவர் அதே வைத்தியதுறையிலிருப்பவர் எப்படி அதை துறைரீதியான சட்டங்களுட்பட்டு ஒரு பிரச்சனையை அணுகாமல் நேரடியாக வைத்தியசாலைக்குள் நுழைந்து விசாரணை செய்ய முனைந்திருக்கலாம்?

வைத்தியசாலை முறைப்படி எம் இரத்த சொந்தங்கள் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தாலும் எழுந்தமானமாக பிரவேசித்து அவர்களை பார்வையிடமுடியாது என்பது உலகம் எல்லாம் உள்ள மருத்துவமனைகளின் விதி.

நோயாளிகளையே பார்க்கமுடியாது என்ற சட்டம் இருக்கும்போது இவர் வைத்தியர்களையே விசாரணை செய்ய உள் நுழைந்திருக்கிறார்.

மருத்துவமனை   விதிகள் நாட்டுக்குநாடு எப்படி கடைப்பிடிக்கப்படுகிறதோ இல்லையோ ஒரு வைத்தியர் கண்டிப்பாக அதை கடைபிடிக்க வேண்டியதில்லையா?

 

சமீபத்திய யூடியூப் சனல் ஒன்றில் தான் வைத்தியதுறையை விட்டு விலகிவிட்டேன் என்றும் அரசியலில் ஈடுபடபோகிறேன் என்றார் அப்போ எந்ததுறை அதிகாரத்தின் அடிப்படையில் இலகுவாக காவல்துறை அவர் நடவடிக்கை பாயும் வாய்ப்பு இருக்கும்  இந்த செயலில் ஈடுபட்டார்? 

இந்த பிரச்சனையை தானே முன்னின்று பாதிக்கப்படவர்கள் சார்பில் நீதிமன்றம் கொண்டு சென்றிருக்கலாம் வழக்கு தொடுத்திருக்கலாம் அதுதான் சரியான அணுகுமுறை.

டாக்டர் அர்ச்சுனா பக்கம் நியாயங்கள் கல்வி தகமை இருந்தாலும் திடீர் மக்கள் ஆதரவினால் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது, அவரின் உணர்ச்சிவசப்பட்ட செயல்களினால் அவர் எதிரிகளினாலும்  சிங்கள அரசினாலும் மிக விரைவில் முடக்கப்படுவார் என்ற நிலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

உண்மைதான், 

ஒரு படித்தவர் அதே வைத்தியதுறையிலிருப்பவர் எப்படி அதை துறைரீதியான சட்டங்களுட்பட்டு ஒரு பிரச்சனையை அணுகாமல் நேரடியாக வைத்தியசாலைக்குள் நுழைந்து விசாரணை செய்ய முனைந்திருக்கலாம்?

வைத்தியசாலை முறைப்படி எம் இரத்த சொந்தங்கள் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தாலும் எழுந்தமானமாக பிரவேசித்து அவர்களை பார்வையிடமுடியாது என்பது உலகம் எல்லாம் உள்ள மருத்துவமனைகளின் விதி.

நோயாளிகளையே பார்க்கமுடியாது என்ற சட்டம் இருக்கும்போது இவர் வைத்தியர்களையே விசாரணை செய்ய உள் நுழைந்திருக்கிறார்.

மருத்துவமனை   விதிகள் நாட்டுக்குநாடு எப்படி கடைப்பிடிக்கப்படுகிறதோ இல்லையோ ஒரு வைத்தியர் கண்டிப்பாக அதை கடைபிடிக்க வேண்டியதில்லையா?

 

சமீபத்திய யூடியூப் சனல் ஒன்றில் தான் வைத்தியதுறையை விட்டு விலகிவிட்டேன் என்றும் அரசியலில் ஈடுபடபோகிறேன் என்றார் அப்போ எந்ததுறை அதிகாரத்தின் அடிப்படையில் இலகுவாக காவல்துறை அவர் நடவடிக்கை பாயும் வாய்ப்பு இருக்கும்  இந்த செயலில் ஈடுபட்டார்? 

இந்த பிரச்சனையை தானே முன்னின்று பாதிக்கப்படவர்கள் சார்பில் நீதிமன்றம் கொண்டு சென்றிருக்கலாம் வழக்கு தொடுத்திருக்கலாம் அதுதான் சரியான அணுகுமுறை.

டாக்டர் அர்ச்சுனா பக்கம் நியாயங்கள் கல்வி தகமை இருந்தாலும் திடீர் மக்கள் ஆதரவினால் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது, அவரின் உணர்ச்சிவசப்பட்ட செயல்களினால் அவர் எதிரிகளினாலும்  சிங்கள அரசினாலும் மிக விரைவில் முடக்கப்படுவார் என்ற நிலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிகிறது.

 

நேர்மையாக பொறுப்பை உணர்ந்து தமது கடமையை செய்ய தவறியது இப்படி ஒரு அநியாய சாவுக்கு காரணம் என சொல்லப்படுகின்றது.

தமது கடமை நேரத்தில் சரக்கு அடிச்சுப்போட்டு அரசவிடுதியில் நித்தா அடிக்கும் வைத்தியர்கள் இனியாவது திருந்த வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் சரீரப் பிணை வழங்கி விடுவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர்.

இதனையடுத்து நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, வைத்தியரை எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று காலை நீதிமன்றத்துக்கு கையில் விலங்கிடப்பட்ட நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அழைத்துவரப்பட்டிருந்தார்.

வைத்தியர் அர்ச்சுனா இரண்டு சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

https://thinakkural.lk/article/307483

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிணையில் விடுதலையான வைத்திய அர்ச்சுனாவுக்கு மக்கள் அமோக வரவேற்பு!

மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் புதன் (7)  நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள்  அமோக வரவேற்பை வழங்கினர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அத்து மீறி  நுழைந்து கடமைக்கு  இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் போலீஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னார்  போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வைத்தியர் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவரை இன்றைய தினம் 7ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அருச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

வைத்தியர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அண்ரன் புனித நாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில்  முன்னிலையாகி இருந்தனர்.

மன்னார் நீதவானின்  நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்தார்.

இந்த நிலையில் மன்றில் இருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேர்த்தனர்.

பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மன்னார்  – தம்பனைக்குளம்  பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தார்.

இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி    ஞாயிற்றுக்கிழமை    இடம் பெற்றுள்ளது.

மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த  மரியராஜ் சிந்துஜா வயது (27)  என தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் மரணத்தின் போது சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார்  மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அங்கு கடமைக்கு இடையூரைக்கு  ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/307502

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை ஆறாவது நிமிடத்திலிருந்து பாருங்கள்.

ஒரு தலைவனுக்காக எமது மக்கள் எப்படியெல்லாம் ஏங்குகிறார்கள்?

விருப்பு வெறுப்பை விடுத்து மக்களின் துணிச்சலையும் ஆர்வத்தையும் பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.