Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சுமார் 5000 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை சீனாவைச் (China) சேர்ந்த வைத்தியர் ஒருவர் ரோபோ இயந்திரம் மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

சீன வைத்தியசாலை ஒன்றின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான லூவோ கிங்குவேன் (Luo Qingquan) என்ற வைத்தியரே தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ஜி (5G) அறுவை சிகிச்சை ரோபோ இயந்திரத்தை  பயன்படுத்தி ரிமோட் மூலம் சிகிச்சை செய்து நுரையீரல் கட்டியை வைத்தியர் அகற்றியுள்ளார். 

அறுவை சிகிச்சை

நோயாளி சீனாவில் உள்ள காஷ்கரில் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்தியர் ஷங்காயில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து சிகிச்சை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு சுமார் ஒரு மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டெலிமெடிசின் (Telemedicine) மற்றும் ரோபோடிக் (Robotic) அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குறித்த வைத்தியசாலையில் ரோபோ அறுவை சிகிச்சையை நடத்துவதோடு, ரோபோ தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றது. 

https://tamilwin.com/article/doctor-removed-lung-tumor-through-robot-1722715948

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்குநாடுகள் சீனாவிடம் பிச்சையெடுக்க வேண்டிய தூரம் தொலைவில் இல்லை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

மேற்குநாடுகள் சீனாவிடம் பிச்சையெடுக்க வேண்டிய தூரம் தொலைவில் இல்லை. 

இப்ப மட்டும் என்னவாம்? 😂

Posted
1 hour ago, Kapithan said:

மேற்குநாடுகள் சீனாவிடம் பிச்சையெடுக்க வேண்டிய தூரம் தொலைவில் இல்லை. 

Telemedicine அறுவைச் சிகிச்சைகள் பல வருடங்களுக்கு முன்பே பல நாடுகளிலும் வெற்றிகரமாகச் செய்யப்பட்ட ஒன்று. இந்தியாவிலும் 2018-19 இல் இதய அறுவைச் சிகிச்சை 25 கிமீ தொலைவிலிருந்து செய்யப்பட்டது.

இதற்குப் பாவிக்கப்படும் இணைய வலையமைப்பு 5ஜி ஆக இருந்தாலென்ன 10ஜி ஆக இருந்தாலென்ன சிகிச்சை முறை ஒன்றுதான். இது போலத்தான் தூரமும் 5 கிமீ இடைவெளியும் 5000 கிமீ இடைவெளியும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

ஐயா  பெரியவரே, 

தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? 

சீனாவின் வளர்ச்சி என்பது ஒன்றுமேயில்லை என்கிறீர்களா அல்லது 

எவ்வளவுதான் சீனா  வளர்ந்தாலும் மேற்கு சீனாவிடம் பிச்சை எடுக்காது என்கிறீர்களா? 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kapithan said:

ஐயா  பெரியவரே, 

தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? 

சீனாவின் வளர்ச்சி என்பது ஒன்றுமேயில்லை என்கிறீர்களா அல்லது 

எவ்வளவுதான் சீனா  வளர்ந்தாலும் மேற்கு சீனாவிடம் பிச்சை எடுக்காது என்கிறீர்களா? 

🤨

பேராண்டி கவனம் உடம்பு புண்ணாக போகுது சொல்லிட்டன் .

நானும் நீங்களும் அடித்து கொள்வது போல அல்ல இனிய இரவு உங்களுக்கு .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பெருமாள் said:

பேராண்டி கவனம் உடம்பு புண்ணாக போகுது சொல்லிட்டன் .

நானும் நீங்களும் அடித்து கொள்வது போல அல்ல இனிய இரவு உங்களுக்கு .

அடித்துக்கொள்வது அல்ல, கடித்துக்கொள்வது,.😁

Posted
7 hours ago, Kapithan said:

ஐயா  பெரியவரே, 

தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? 

சீனாவின் வளர்ச்சி என்பது ஒன்றுமேயில்லை என்கிறீர்களா அல்லது 

எவ்வளவுதான் சீனா  வளர்ந்தாலும் மேற்கு சீனாவிடம் பிச்சை எடுக்காது என்கிறீர்களா? 

🤨

மேற்குறித்த செய்தியில் சீனாவில் செய்யப்பட்ட Telemedicine அறுவைச் சிகிச்சை புதிதல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். இந்தியா சீனாவுக்கு முன்பே இதைச் செய்ததால் சீனா இந்தியாவிடம் பிச்சை எடுக்க வேண்டுமா ?

ஒவ்வொரு நாடும் தம்மால் முடிந்த அளவு முன்னேறி வருகிறது. பிச்சை எடுப்பது பற்றி நீங்கள்தானே எழுதியுள்ளீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, இணையவன் said:

Telemedicine அறுவைச் சிகிச்சைகள் பல வருடங்களுக்கு முன்பே பல நாடுகளிலும் வெற்றிகரமாகச் செய்யப்பட்ட ஒன்று. இந்தியாவிலும் 2018-19 இல் இதய அறுவைச் சிகிச்சை 25 கிமீ தொலைவிலிருந்து செய்யப்பட்டது.

இதற்குப் பாவிக்கப்படும் இணைய வலையமைப்பு 5ஜி ஆக இருந்தாலென்ன 10ஜி ஆக இருந்தாலென்ன சிகிச்சை முறை ஒன்றுதான். இது போலத்தான் தூரமும் 5 கிமீ இடைவெளியும் 5000 கிமீ இடைவெளியும் ஒன்றுதான்.

இச்செய்தியை என் மகளிடம் இன்று காட்டினேன். இது போன்ற சிகிச்சைகள் தான் வேலை பழகும் வைத்தியசாலையில் தினமும் சாதாரணமாக நடப்பதாகவும் தான் அந்த ரோபோக்களுக்கு உதவுபராக பலமுறை இருப்பதாகவும் சொன்னார். 

சிலவேளைகளில் 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் என்பது சீனாவின் விரும்பிகளுக்கு துள்ள இடம் கிடைத்ததாக இருக்கலாம். 

ஆனால் எங்களுக்கு ஏதாவது என்றால் சீனா தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தால் நன்று. 

வரவேற்க தக்கது.

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, இணையவன் said:

மேற்குறித்த செய்தியில் சீனாவில் செய்யப்பட்ட Telemedicine அறுவைச் சிகிச்சை புதிதல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். இந்தியா சீனாவுக்கு முன்பே இதைச் செய்ததால் சீனா இந்தியாவிடம் பிச்சை எடுக்க வேண்டுமா ?

ஒவ்வொரு நாடும் தம்மால் முடிந்த அளவு முன்னேறி வருகிறது. பிச்சை எடுப்பது பற்றி நீங்கள்தானே எழுதியுள்ளீர்கள் ?

அடம் பிடிக்கிறீரே,....

எனது எழுத்தின் சாரம் புரியவில்லையா அல்லது புடியாதமாதிரி நடிக்கிறீரா,....

எனது எழுத்தின் சாரம் தொழிநுட்பத்துறையில் சீனாவின் அசுர  வளர்ச்சி பற்றியது. 

தாங்களோ,...Telemedicine என்று ஒரு ஒற்றைத் துறையைப் பற்றிப்பிடித்து நிற்கிறீர் ...🤨

8 hours ago, விசுகு said:

இச்செய்தியை என் மகளிடம் இன்று காட்டினேன். இது போன்ற சிகிச்சைகள் தான் வேலை பழகும் வைத்தியசாலையில் தினமும் சாதாரணமாக நடப்பதாகவும் தான் அந்த ரோபோக்களுக்கு உதவுபராக பலமுறை இருப்பதாகவும் சொன்னார். 

சிலவேளைகளில் 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் என்பது சீனாவின் விரும்பிகளுக்கு துள்ள இடம் கிடைத்ததாக இருக்கலாம். 

ஆனால் எங்களுக்கு ஏதாவது என்றால் சீனா தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தால் நன்று. 

வரவேற்க தக்கது.

ஐயா விசுகர்,

இப்படி இன்னுமொரு நாட்டின் மீது வெறுப்பைக் கொட்டித்தான் பிரான்ஸ் மீதான உங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டுமா? 

இதற்குத் தாங்கள் வெட்கப்பட வேண்டும். 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

மேற்குறித்த செய்தியில் சீனாவில் செய்யப்பட்ட Telemedicine அறுவைச் சிகிச்சை புதிதல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். இந்தியா சீனாவுக்கு முன்பே இதைச் செய்ததால் சீனா இந்தியாவிடம் பிச்சை எடுக்க வேண்டுமா ?

ஒவ்வொரு நாடும் தம்மால் முடிந்த அளவு முன்னேறி வருகிறது. பிச்சை எடுப்பது பற்றி நீங்கள்தானே எழுதியுள்ளீர்கள் ?

விரிவான செய்தி. 👇

Chinese docs perform medical miracle: Team removes patient’s lung tumour from 5,000 km away

In a remarkable achievement, a medical facility in China has executed a groundbreaking procedure where the surgeon operated from 5,000 kilometers away from the patient. 
Utilizing advanced technology and thorough research, a team of doctors performed a remote surgery with one surgeon in Shanghai removing a lung tumor from a patient situated in Kashgar, all within a span of one hour. The operation was recorded and has gone viral on social media.

Stock market expert Naresh Nambisan shared the footage, emphasizing the accomplishment: “A surgeon in China has successfully conducted a lung tumor removal from a patient located 5,000 km away. The surgery was carried out remotely from Shanghai, while the patient was in Kashgar, on the opposite side of the country. The entire procedure was completed in just one hour.” The video has garnered over 560,000 views and nearly 1,000 likes, generating a lot of discussion.

Here’s what users on X are saying about the video:

“Remote robotic minimal access surgery represents the future, and it’s already upon us. While medical science has progressed remarkably, there is still much to uncover about the human body. This showcases the evolution of medical science,” one user commented. Another stated, “Executing such remote robotic surgeries is a ‘medical marvel.’ Robotic surgery with a present surgeon is already being effectively performed.”

According to the Shanghai Municipal Information Office, the successful operation was performed by Shanghai Chest Hospital’s doctors following extensive clinical studies and the utilization of locally developed surgical robots. Dr. Luo Qingquan, who led the procedure, carried it out with the help of several colleagues. “This surgery marks a major milestone illustrating the clinical capabilities of domestically-produced surgical robots, providing significant advantages to patients, especially in remote and rural areas,” Dr. Luo noted.
 
https://m.economictimes.com/magazines/panache/chinese-docs-perform-medical-miracle-team-removes-patients-lung-tumour-from-5000-km-away/amp_articleshow/112245188.cms

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Kapithan said:

ஐயா விசுகர்,

இப்படி இன்னுமொரு நாட்டின் மீது வெறுப்பைக் கொட்டித்தான் பிரான்ஸ் மீதான உங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டுமா? 

இதற்குத் தாங்கள் வெட்கப்பட வேண்டும். 

என் மீதான தங்கள் வெறுப்பு தான் இங்கே உங்களை கருத்து வெறுப்பை கொண்ட தள்ளுகிறதே தவிர என் கருத்தில் எங்கும் சீனா மீதான வெறுப்பு இல்லை. 

மேலும்

அடம் பிடிக்கிறீரே,....எனது எழுத்தின் சாரம் புரியவில்லையா அல்லது புடியாதமாதிரி நடிக்கிறீரா,. 

ஒருவரை இவ்வாறு ஒருமையில் அழைப்பது கூட வெறுப்பின் உச்சமே தவிர கருத்தை கருத்தால் வெல்ல அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, விசுகு said:

என் மீதான தங்கள் வெறுப்பு தான் இங்கே உங்களை கருத்து வெறுப்பை கொண்ட தள்ளுகிறதே தவிர என் கருத்தில் எங்கும் சீனா மீதான வெறுப்பு இல்லை. 

மேலும்

அடம் பிடிக்கிறீரே,....எனது எழுத்தின் சாரம் புரியவில்லையா அல்லது புடியாதமாதிரி நடிக்கிறீரா,. 

ஒருவரை இவ்வாறு ஒருமையில் அழைப்பது கூட வெறுப்பின் உச்சமே தவிர கருத்தை கருத்தால் வெல்ல அல்ல. 

வழமையான தட்டைப் புரட்டிப்போடும் யுக்தி. 

😁

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.