Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மரியானா அகழி
-------------------------
அவன் அந்த ஒழுங்கையால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வந்து கொண்டிருந்தான். போகும் போது என்னையும் வா என்று வலியவே துணைக்கு கூட்டிக் கொண்டு போனான். அந்த ஒழுங்கையின் முடிவில் ஒரு கோயில் இருந்தது. ஆனால் இருவரும் கோயில் போய் சாமி கும்பிடுகிற ஆட்கள் இல்லை. ஏன் இந்த ஒழுங்கையில் தினமும் வருகின்றோம் என்று பல நாட்கள் நான் நச்சரித்த பின், அவன் உண்மையைச் சொன்னான். அந்த ஒழுங்கையில் இருந்த பெண் பிள்ளை ஒன்றின் பின்னால் அவன் சுத்துகின்றானாம் என்று அவன் சொன்னான். அந்தப் பிள்ளையும் எங்களின் வகுப்பு தான். அந்தப் பிள்ளையின் குடும்பம் 83ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து ஊருக்கு வந்தவர்கள்.
 
என்னை ஏன் கூட்டிக் கொண்டு போனான் என்பதற்கான காரணத்தை இலகுவாகவே ஊகித்துக் கொள்ளலாம். இப்படியான ரோமியோக்களுக்கு ஒரு நண்பன் கட்டாயமாக துணையாக வேண்டும். அங்கே தனியாக எந்த ஒழுங்கையில் போனாலும், தேமே என்று அரைக்கண் மூடி படுத்துக் கிடக்கும் நாய் கூட சந்தேகத்தில் எழும்பி வந்து கலைக்கும். எங்களின் கூட்டத்தில் ஆபத்தில்லாத, அப்பிராணியான, பெயர்கள் எதுவுமற்றவர்களில் நானும் ஒருவன் என்பது தான் என்னைத் தெரிந்தெடுத்த அந்தக் காரணம்.
 
'முடியாது என்று சொல்லி விட்டா.......' என்று வந்து நின்றான் ஒரு நாள்.
 
'முடியாது என்றா சொன்னா..........' என்று திருப்பிக் கேட்டேன் நான்.
 
அதற்கு முதல் நாள் நண்பன் தனியே போய், என்னைக் கூட்டிக் கொண்டு போகாமல், எங்கேயோ வைத்துக் கேட்டிருக்கின்றார். ஆளைத்  தெரியாது என்று தான் சொன்னா, நீங்கள் யார் அண்ணா என்றும் அவனைக் கேட்டதாகவும் நன்றாக ஞாபகப்படுத்திச் சொன்னான் நண்பன். என்னைக் கண்டதே இல்லை என்றும் சொல்லி விட்டா என்று கண் கலங்கி நின்றான் நண்பன். 
 
நல்ல வேளை, அந்த சம்பவம் நடந்த பொழுது நான் அவனுடன் கூடச் சேர்ந்து போயிருக்கவில்லை. போயிருந்தால், 'இந்தத் தம்பி யாரு.........' என்று அவர் என்னைப் பார்த்தும் கேட்டிருப்பார். நண்பன் மினுக்கி மினுக்கி வகுப்புக்கு வந்து போனது எல்லாவற்றையும் எந்தக் கணக்கில் சேர்க்கின்றது. எவருமே இவனைப் பார்க்கவில்லையோ.
 
பின்னர் நண்பன் ஒரு இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டான். சில மாதங்களில் திரும்பி வந்தான். சில புத்தகங்களை எனக்குக் கொடுத்தான். எல்லாமே சிவப்பு பிரகடனங்கள். முன் அட்டையில் மார்க்ஸ், இங்கர்சால் என்ற பெயர்களும், பின் அட்டையில் அந்த இயக்கத்தின் ஸ்தாபகரின் பெயரும் இருந்தன. நண்பன் 'தோடுடைய செவியன்........' பொழிப்பு எழுதச் சொன்னாலே அக்கம்பக்கம் எட்டிப் பார்க்கின்றவன். முழு இலங்கையிலும் தனியார் கல்வி நிலையத்தில் சமய பாடத்திற்கே அடி வாங்கியவர்கள் வெகு சிலரே, அதில் இவனும் ஒருவன். காதல் தோல்வி அவனை எங்கேயோ கொண்டு போய் சேர்த்திருந்தது.
 
இன்னும் பலரும் ஏக காலத்தில் அந்தப் பிள்ளையின் பின் சுற்றித் திரிந்தனர். துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்தப் பிள்ளையிடம் போய்க் கேட்டவர்கள் எல்லோருக்கும், 'அண்ணா, நீங்க யாரண்ணா...........' என்பதே பதிலாக வந்து கொண்டிருந்தது. மற்ற எல்லாக் கதைகளும் வெளியில் வந்தாலும், நான் கூடப் போன என் நண்பனின் கதை மட்டும் வெளியில் வரவில்லை. எத்தனையோ இயக்கங்கள் இருக்க, அந்த இயக்கத்தில் இவன் ஏன் போய்ச் சேர்ந்தான் என்பது மட்டும் தான் ஊரில் பலருக்கும் ஆச்சரியமாகவும், பேசுபொருளாகவும் இருந்தது.
 
பின்னர் நண்பன் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, வெளிநாடு போய், எங்கள் இருவருக்கும் நன்கு தெரிந்த வேறு ஒரு பிள்ளையை கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றான்.
 
கிட்டப் போனவர்கள் எல்லோரையும் ' அண்ணா, நீங்கள் யாரண்ணா.........' என்று கேட்டு ஓட விட்ட அந்தப் பிள்ளையும் எங்களுக்கு தெரிந்த ஒருவரைக் கட்டிக் கொண்டு இன்னொரு நாட்டில் வாழ்ந்து வருகின்றார்.
 
நீண்ட காலத்தின் பின், ஒரு ஊடகத்தில்  சிறு வயது நண்பர்கள் என்று ஒரு குழுமம் உண்டாக்கி, பலரும் இணைந்து கொண்டோம். அறிமுகங்கள், கதைகள், பகிடிகள், ஞாபகங்கள் என்று எல்லோரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றனர்.
 
சமீபத்தில் அந்தப் பெண்ணை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. 'உங்களுக்கு என்னை முந்தி தெரிந்திருக்காது...........' என்று நான் ஆரம்பித்தேன். ' இல்லை, இல்லை, எனக்கு அப்பவே உங்களைத் தெரியும்........... நீங்களும், இன்னொருவரும் அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக சைக்கிளில் அந்த நாளில் வந்து போவீர்களே...........' என்றார் அவர்.
 
எவரெஸ்ட்டையே தாட்டு விடும் மரியான அகழி தான் உலகிலேயே ஆழமானது என்பார்கள். என்ன பெரிய ஆழம் அது.
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சில புத்தகங்களை எனக்குக் கொடுத்தான். எல்லாமே சிவப்பு பிரகடனங்கள். முன் அட்டையில் மார்க்ஸ், இங்கர்சால் என்ற பெயர்களும், பின் அட்டையில் அந்த இயக்கத்தின் ஸ்தாபகரின் பெயரும் இருந்தன.

ம் கதையைப் பார்த்தால் ஈபிஆர்எல்எவ் மாதிரி தெரியுது.

1 hour ago, ரசோதரன் said:

சமீபத்தில் அந்தப் பெண்ணை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. 'உங்களுக்கு என்னை முந்தி தெரிந்திருக்காது...........' என்று நான் ஆரம்பித்தேன். ' இல்லை, இல்லை, எனக்கு அப்பவே உங்களைத் தெரியும்........... நீங்களும், இன்னொருவரும் அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக சைக்கிளில் அந்த நாளில் வந்து போவீர்களே...........' என்றார் அவர்.

ஊர் அடிபட்ட பிள்ளை ஒரு முடிவோட தான் இருந்திருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஊர் அடிபட்ட பிள்ளை ஒரு முடிவோட தான் இருந்திருக்கு.

அந்தப் பக்கம் எப்பவுமே தெளிவானவர்கள் தான் எங்களை விட....😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:
 
சமீபத்தில் அந்தப் பெண்ணை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. 'உங்களுக்கு என்னை முந்தி தெரிந்திருக்காது...........' என்று நான் ஆரம்பித்தேன். ' இல்லை, இல்லை, எனக்கு அப்பவே உங்களைத் தெரியும்........... நீங்களும், இன்னொருவரும் அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக சைக்கிளில் அந்த நாளில் வந்து போவீர்களே...........' என்றார் அவர்.
 
வலை உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தது போலை...நீங்கள்  சிக்கவில்லை....பட்சியும் பசியுடன் இருந்துவிட்டு...கூடு மாறிவிட்டுது..நீண்டகாலத்தின்பின்  ஆளை அடையாளம் சொன்ன ஆளென்றால்...இது லேசான படப்பிடிப்பல்ல...பக்கத்து இலைக்காரான்..சொதியாம் என்பதுபோல் எல்லாக் கதைகளிலும் தப்பிப் போகின்றீர்கள் ..  கில்லாடிதான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

🤣..............

எல்லாவற்றையும் பார்த்து வைத்துக் கொண்டே, எதையுமே பார்க்காதது போல, எதுவுமே தெரியாதது போல இருந்திருக்கின்றார்களே......🫢.

மற்றபடி, நான் எல்லாம் எந்தக் கணக்கிலும் இருந்திருக்கமாட்டேன்..........   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

ம் கதையைப் பார்த்தால் ஈபிஆர்எல்எவ் மாதிரி தெரியுது.

ஈரோஸ் இயக்கம் தான் பின் அட்டையில் இரத்தினசபாபதி அவர்களின் படத்தைப் போட்டு கார்ல் மார்க்ஸ், இங்கர்சால் போன்றோரின் எழுத்துகளை தமிழில் புத்தகங்களாக வெளியிட்டிருந்தார்கள், அண்ணை.

மற்றவர்கள் சிலரும் வெளியிட்டிருக்கக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் நண்பர்களுக்காக காதல் கடிதங்கள் எழுதிக் குடுத்து விட்டு மேற்படி பார்ட்டிகளைக் கண்டாலும் காணாததுபோல் சென்ற நிகழ்வுகள் பல உண்டு .......!  😴

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

நாங்களும் நண்பர்களுக்காக காதல் கடிதங்கள் எழுதிக் குடுத்து விட்டு மேற்படி பார்ட்டிகளைக் கண்டாலும் காணாததுபோல் சென்ற நிகழ்வுகள் பல உண்டு .......!  😴

சுவி ஐயாவின் எழுத்து திறமை அங்கேயிருந்தே புடம் போடப்பட்டிருக்கின்றது............🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இளஞ்சிவப்பு நிறம்' என்னும் சிறுகதை ஒன்று சமீபத்தில் அகழ் இணைய இதழில் வந்திருந்தது. இஸுரு சாமர சோமவீர எழுதியதை தமிழில் எம். ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்திருந்தார். மிகவும் நல்ல ஒரு கதை. இன்னொரு கோணத்தில் ஆழத்தை தேடியிருக்கின்றார்......

https://akazhonline.com/?p=7901

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2024 at 01:17, ரசோதரன் said:

அவன் அந்த ஒழுங்கையால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வந்து கொண்டிருந்தான். போகும் போது என்னையும் வா என்று வலியவே துணைக்கு கூட்டிக் கொண்டு போனான்.

தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் பாக்கியராஜ், நகைச்சுவை நடிகர் சிவராமன் கையில் எண்ணையை ஊத்தி முகத்தில் பூசிக் கொள்ளச் சொல்லும் காட்சி நினைவில் வந்தது.

On 8/8/2024 at 01:17, ரசோதரன் said:

எவரெஸ்ட்டையே தாட்டு விடும் மரியான அகழி தான் உலகிலேயே ஆழமானது என்பார்கள். என்ன பெரிய ஆழம் அது.

எனக்குப் பின்னாலே  எத்தனை பேர் வந்தார்கள் என்பதை கணக்கிடுவது அவர்களுக்கு பெருமையாக இருந்திருக்கும். பார்க்காத மாதிரியே போவாளுகள்.எல்லாவற்றையும் உள்வாங்கி வைத்திருப்பார்கள்.

நீண்ட காலத்துக்குப் பின்னும் உங்களை நினைவில் வைத்திருப்பதால், ஒருவேளை உங்களை அவள் விரும்பியும் இருந்திருக்கலாம். எத்தனை மன்மத அம்புகள் வந்து மேனியில்விழுந்தாலும் நம்மாளுக்கு காதல் என்றால் நடுக்கம் வந்து விடும் என்பதால் என்னத்தைச் சொல்ல இருக்கு?

மாடி வீடு கன்னி பொண்ணு

மனசுக்குள்ள ரெண்டு கண்ணு

ஏழை கண்ண ஏங்க விட்டு

இன்னும் ஒன்னு தேடுதம்மா

கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி

உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி

சொன்ன சொல்லு என்ன ஆச்சு

சொந்தமெல்லாம் எங்கே போச்சு

நேசம் அந்த பாசம்

அது எல்லாம் வெளி வேஷம்

திரை போட்டு செஞ்ச மோசமே

ஆறும் அது ஆழம் இல்ல

அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா

அந்த பொம்பள மனசு தான்யா

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2024 at 04:47, ரசோதரன் said:
 
எவரெஸ்ட்டையே தாட்டு விடும் மரியான அகழி தான் உலகிலேயே ஆழமானது என்பார்கள். என்ன பெரிய ஆழம் அது.

தெரிந்த நண்பி ஒருவரை உயர் தர வகுப்பு அண்ணா ஒருவர் சுற்றி வருவது கல்லூரியில் யாவரும் அறிந்ததே.ஒரு நாள் பல மாணவர்களுக்கு முன் காதில் ஈயம் ஊற்றியது போல் கிழித்து தொங்க விட்டிருந்தார் நண்பி. இப்படி பல தடவைகள் நடந்தது என நண்பர்கள் சொல்ல கேட்டிருந்தேன். காலங்கள் பல ஓடின. கல்லூரி ஒன்று கூடல் ஒன்று நடைபெற்றது. எதிர்பாராத விதமாக நண்பியும் கலந்து கொண்டிருந்தார்.அவரின் வாழ்க்கை, படிப்பு எல்லாம் கேட்ட பின் திருமண வாழ்க்கை பற்றியும் கேட்ட போது அதே பையனை திருமணம் செய்து 3 பிள்ளைகள் சொன்ன போது அதிர்ச்சியில் இருந்து மீள முன் “ எங்களை எப்போ புரிய போகிறீர்கள்” என்று ஒரு நக்கலாக கேட்டது இப்போதும் நினைவில் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

🤣..........

இவர்களுடன் பழகுவது, பேசுவதே ஒரு 'இன் - அவுட்' விளையாட்டுப் போல........... நாங்கள் இன் என்றால் அது அவுட்டாக இருக்கின்றது. நாங்கள் அவுட் என்றால் அது இன்........... மௌனம் போல உதவுவது எதுவுமே இல்லை..........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

🤣..........

இவர்களுடன் பழகுவது, பேசுவதே ஒரு 'இன் - அவுட்' விளையாட்டுப் போல........... நாங்கள் இன் என்றால் அது அவுட்டாக இருக்கின்றது. நாங்கள் அவுட் என்றால் அது இன்........... மௌனம் போல உதவுவது எதுவுமே இல்லை..........🤣.

Puradsifm - 🎶🎶🎶 🎤🎤🎤🎧🎧🎧🎼Now On Air மனசை தொட்ட மெலடிஸ் 🎧🎧🎧🔊🔊  பாடல் கேட்க www.puradsifm.com கலையகத்தில் ஜனனி வணக்கம் நேயர்களே 🙏🙏🙏  பதின் மூன்று மனதைக் கவரும் ...

அண்ணை நீங்கள் அப்ப தப்பி பிறகு சிக்கிவிட்டீர்கள்!

பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம் தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும். பெண்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். நீங்கள் விரும்பும் பெண்ணை மதிப்பிடுவதற்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவைப்படலாம். பெண்களை முழுவதும் புரிந்து கொண்டு. நமது உறவை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன.

Read more at: https://tamil.boldsky.com/relationship/2013/11/10-tips-for-understanding-women-004379.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.