Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kapithan said:

உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். போராட்டத்திற்கென சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொள்ளையிட்டவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? 

அதற்கு உங்கள் பதில் ஆம் அல்லது இல்லை என்பதாக இருக்க வேண்டும். 

நீங்களோ தலையைச் சுற்றி மூக்கத் தொட நினைக்கிறீர்கள். 

போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று 1) உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே. 

2) நீங்கள் ஏன் அவர்கள் எல்லோரையும் வெளிக்காட்ட முடியாது? 

உங்கள் கை சுத்தமானது என்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் யார் யாருடைய கைகள் எல்லாம் அழுக்குப் படிந்தவை என்று தங்களுக்குத் 3) தெரிந்திருக்கத்தானே வேண்டும்? 

தெரியாமல் போவதற்கு 4) நியாயம் இல்லையே?  

இதில் ஆம் இல்லை என்று சொல்லும்படி எங்கே உங்கள் கேள்வி உள்ளது??

உங்களுக்கு என்ன பிரச்சினை? அதற்கு உண்மையில் நீங்கள் எந்த வைத்தியரை பார்க்க வேண்டும் என்று மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது.

  • Like 1
  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

எனது ஒன்றுவிட்ட அண்ணர் பல ஆயிரங்களை 2009 ஆரம்பத்தில் கொடுத்தவர். இப்போதும் இரண்டு வேலைகளைச் செய்து இந்தக் கடன்களை கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார். இரண்டு வேலைகள் என்பதால் வாரத்தில் 4-5 நாட்கள் குழந்தை

island

@Kapithan   அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள்  பயன்படுத்திய  உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில்  தமிழரின்  அரசியல் பலம்  உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்க

நிழலி

கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, சாமானியன் said:

 அப்படியே கோயில் உண்டியலில் போட்டு விடுங்கள் என்று ,,,   

இப்போ இதை வைத்துக் கொண்டு பேசலாம்.

உண்டியலில் போடச் சொல்லி விட்டீர்கள். அவர் அதை உண்டியலில் போட்டார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?

சரி அவர் அதை உண்டியலில் போட்டார் என்று வைத்துக் கொள்வோம். உண்டியலில் போட்ட பணம் யாரிடமும் போய் சேர்ந்தது. ஐயரிடமா? கோயில் முதலாளியிடமா? நிர்வாகத்திடமா? அல்லது ஏழைகளிடமா?

எனவே இது முடிவில்லாத தேடுதல். ஆறுதலற்ற விடயங்கள்.

அதேதான் நான் இயக்கத்திற்கு கொடுத்த பணமும். உண்டியலில் போட்டது போலத் தான். மனதார விரும்பி நானும் அவரும் விரும்பிய கொள்கைக்காக வேண்டுதலுக்காக அவர் கொடுக்கும் படி சொன்ன ஒருவரிடம் கொடுத்தேன். அவர் தோற்றுவிட்டார் நானும் தான். 

என்னிடம் பணத்தை வாங்கியவர் 3 மாதத்திற்கு ஒரு முறை காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டபடி உணவகத்தில் கோப்பை கழுவுகிறார். 

இப்போ இயக்கத்தின் எந்த நிலை பற்றியும் தெரிந்து கொள்ளாத தறுதலைகளின் கேள்விகளுக்கு எந்த மாதிரியான பதிலை சொல்லலாம்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, விசுகு said:

ஏற்கனவே திட்டமிட்டு அப்பாவி மக்களின் பணத்தை அதுவும் தமிழ் தேசியத்தில் அதீத பற்று வைத்திருந்த  உணர்வு மனோநிலையில் இருந்த மக்களைக் குறிவைத்து,  தேசிய செயற்பாளர்களாக பலகாலம் இயங்கியவர்களால் நடத்தப்பட்ட  பாரிய பண கொள்ளையை பற்றியே பேசுகிறோம்.  நீங்கள் யாரோ  சில அப்பாவிகளை  கைக்காட்டி  பண கொள்ளையர்களில் மீது  அனுதாபம் தேட விழைகின்றீர்கள்.   விரும்பிய கொள்கைக்காக, வேண்டுதலுக்காக கொடுத்தோம் தோற்றுவிட்டோம் அதை மறந்துவிடுவோம் என்று  கூறுகின்றீர்கள். யாரிடம் தோற்றீர்கள்?   யார் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வென்றது?  என்பவையே இங்கு  கேள்வி. இங்கே   தோற்றது சக தேசிய செயற்பாட்டாளரிடமே  என்பதை மறைக்க படாது பாடுபட்டு ஏதே இனத்தெரியாத நபர களிடம் தோற்றது போல் பாவனை செய்ய முயல்கின்றீர்கள்.   ஏனெனில் மக்கள் ஏமாந்தது  (தோற்றது) புதிதாக வந்த நபர்களிடம் அல்ல. நீண்ட காலமாக செயற்பட்டு கொண்டிருந்த செயற்பாட்டாளரிடமே  உங்கள் மொழியில் சேவையாளர்களிடமே.   எல்லோருமே தோற்றுவிட்டோம் என்று அனுதாபம் தேட முயற்சிப்பது கிட்டத்தட அந்த டெலிபோன் உரையாடல் பாணியிலான நாடகமே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, island said:

சரி உங்கள் பாணியில் பதில் தேடலாம் 

என்னிடம் பணத்தை வாங்கியவரின் இன்றைய நிலையை இங்கே எழுதியுள்ளேன். அவர் தனது குடும்பத்துடன் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்லவே திண்டாடுகிறார். எனவே எதையும் என்னால் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாது.

இப்போ உங்களிடம் பணத்தை வாங்கியவரின் நிலை என்ன? அவரிடம் இருந்து பெற முயன்றீர்களா?? தெரிய தாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

அவர்களெல்லாம்  அவர்களின் நடிப்பில்,  பாசாங்கு தனத்தில்  நீங்கள் கூறிய தோற்றவர்களே. ஆனால் பின்னணியில் பினாமி பண முதலைகள்.  

கில்லாடிகளிடம் பணம்பெறுவதா?  அது முடியவே முடியாது. எனவே  அவர்களின் பழைய நாடகங்களை வெளிச்சம் போட்டு காட்டி எதிர்காலத்தில் அவர்களால் ஏமாற்றுபட இருப்பவர்களுக்கு  அவதானமாக இருக்குமாறு விழிப்புணர்வு செய்ய மட்டுமே என்னால் முடியும்.  உங்களை போல் அவர்களை அப்பாவிகளாக  சித்தரித்து அவர்களின் ஏமாற்றுவித்தை தொடர இடமளிப்பதை அனுமதிக்க கூடாது.  துவாரகா குழுவினின் கூற்றில் உண்மை உள்ளது என்று  நீங்கள் எழுதிய பதிவு இன்றும் யாழ் இணையத்தில் உள்ளது. 

  • Haha 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போதுள்ள நிலையில் தேசத்திற்கு செய்யக்கூடிய ஒரே ஒரு நல்ல வேலை, இந்த திருடர்களை இனங்காட்டுவதுதான்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
37 minutes ago, vasee said:

தற்போதுள்ள நிலையில் தேசத்திற்கு செய்யக்கூடிய ஒரே ஒரு நல்ல வேலை, இந்த திருடர்களை இனங்காட்டுவதுதான்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?

காட்டுங்கள் என்று தான் எல்லோரும் சொல்கிறோம். களவெடுத்தவர்கள் வந்து சொல்லப்போவதில்லை. எனவே கொடுத்தவர்கள் அதை செய்ய முடியும். ஆனால் இங்கே கொடுத்தவர்கள் இல்லை. நீதி கோருகிறேன் அல்லது உரிஞ்சு காட்டுகிறேன் என்பவர்களின் உள் நோக்கம் அதைவிட கள்ளமானது.  

என்னுடைய எதிர்ப்பு என்பது இவர்களது நேர்மையற்ற கபட நோக்கில் சிக்கி தம் வாழ்நாளில் பெரும் பகுதியை தாயக மக்களின் வாழ்வுக்கு ஈர்த்த சேவையாளர்கள் அத்தனை பேரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை தொடர்தலை தடுத்தல் மட்டுமே. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று 1) உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே. 

2) நீங்கள் ஏன் அவர்கள் எல்லோரையும் வெளிக்காட்ட முடியாது? 

உங்கள் கை சுத்தமானது என்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் யார் யாருடைய கைகள் எல்லாம் அழுக்குப் படிந்தவை என்று தங்களுக்குத் 3) தெரிந்திருக்கத்தானே வேண்டும்? 

தெரியாமல் போவதற்கு 4) நியாயம் இல்லையே?  

இதில் ஆம் இல்லை என்று சொல்லும்படி எங்கே உங்கள் கேள்வி உள்ளது??

உங்களுக்கு என்ன பிரச்சினை? அதற்கு உண்மையில் நீங்கள் எந்த வைத்தியரை பார்க்க வேண்டும் என்று மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது.

ஆக,

நீங்கள் வாய் திறக்கப்போவதில்லை. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

இப்போ இதை வைத்துக் கொண்டு பேசலாம்.

உண்டியலில் போடச் சொல்லி விட்டீர்கள். அவர் அதை உண்டியலில் போட்டார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?

சரி அவர் அதை உண்டியலில் போட்டார் என்று வைத்துக் கொள்வோம். உண்டியலில் போட்ட பணம் யாரிடமும் போய் சேர்ந்தது. ஐயரிடமா? கோயில் முதலாளியிடமா? நிர்வாகத்திடமா? அல்லது ஏழைகளிடமா?

எனவே இது முடிவில்லாத தேடுதல். ஆறுதலற்ற விடயங்கள்.

அதேதான் நான் இயக்கத்திற்கு கொடுத்த பணமும். உண்டியலில் போட்டது போலத் தான். மனதார விரும்பி நானும் அவரும் விரும்பிய கொள்கைக்காக வேண்டுதலுக்காக அவர் கொடுக்கும் படி சொன்ன ஒருவரிடம் கொடுத்தேன். அவர் தோற்றுவிட்டார் நானும் தான். 

என்னிடம் பணத்தை வாங்கியவர் 3 மாதத்திற்கு ஒரு முறை காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டபடி உணவகத்தில் கோப்பை கழுவுகிறார். 

இப்போ இயக்கத்தின் எந்த நிலை பற்றியும் தெரிந்து கொள்ளாத தறுதலைகளின் கேள்விகளுக்கு எந்த மாதிரியான பதிலை சொல்லலாம்???

1) சாமானியன் கூறிய சம்பவம் இலங்கையில் நடந்ததாகத் தெரிகிறது. அங்கே பணத்தைச் சார்த்தவருக்கு உள்ள தெரிவு என்ன? 

நிலத்தில் இருப்பவர்களை புலத்தில் கொள்ளையடித்தவர்களுடன் ஒப்பிடும் கைங்கரியமே அயோக்கியத்தனமானது. 

2) நான் கொடுத்த காசுக்கு என்ன நடந்தது என்று கேட்பவன் தறுதலை,..🤣

நீங்கள் யாரைப் பாதுகாக்க முனைகிறீர்கள்? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, விசுகு said:

1) காட்டுங்கள் என்று தான் எல்லோரும் சொல்கிறோம். களவெடுத்தவர்கள் வந்து சொல்லப்போவதில்லை. எனவே கொடுத்தவர்கள் அதை செய்ய முடியும். ஆனால் இங்கே கொடுத்தவர்கள் இல்லை. நீதி கோருகிறேன் அல்லது உரிஞ்சு காட்டுகிறேன் என்பவர்களின் உள் நோக்கம் அதைவிட கள்ளமானது.  

2) என்னுடைய எதிர்ப்பு என்பது இவர்களது நேர்மையற்ற கபட நோக்கில் சிக்கி தம் வாழ்நாளில் பெரும் பகுதியை தாயக மக்களின் வாழ்வுக்கு ஈர்த்த சேவையாளர்கள் அத்தனை பேரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை தொடர்தலை தடுத்தல் மட்டுமே. 

1) கூடவே நின்ற உங்களுக்கு  கொடுத்தவனைவிட அதிகமாகத் தெரிந்திருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு சரியானதுதானே.  

2)  போராட்டத்திற்காக நேர்மையுடன் பங்ளிப்புச் செய்தவர்கள் யார் என்று  எல்லோரும்  தெரிந்துகொள்ள முடியும்.  ஆனால் தாங்கள் சேவையாளர்களைப் பாதுகாக்கிறேன் என்கிற போர்வையில் திருடர்களைப்  பாதுகாக்கிறீர்கள். 

சாதாரண பொதுமக்களுக்கே யார் நல்லவன் யார் கெட்டவன் என்று தெரிந்து கொள்ளும் அறிவு இருக்கும்போது  தாங்கள் கொள்ளையடித்தவர்கள் சார்பாக  சப்பைக்கட்டுக் கட்டுவது சிரிப்பை வரவைக்கிறது. 

😏

  • Like 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

ஆக,

நீங்கள் வாய் திறக்கப்போவதில்லை. 

🤣

முக்கிய பிரச்சனை தடைசெய்யப்பட்டுள்ள  புலிகளின். நிதியை கையாள்வது.......

யாரின் பெயரில் அல்லது எந்த அமைப்பின் பெயரில்  பணத்தை வைப்பிலிட முடியும்?? 

இப்படி பணம் சேர்க்க சட்டம் இடமளிக்கவில்லை  காரணம் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது 

புலிகளின் பணம் செத்து என்னிடத்தில் இருக்கிறது இவ்வளவு தொகை என்று ஒருவர் பகிங்கரமாக. சொன்னால்  நிதியை அந்தந்த நாடுகள் பறிமுதல் செய்யும்   குறிப்பிட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு நாடுகடத்தப்படுவர் 

மிகச்சிறந்த நேர்மையாளன் கூட. உண்மையை சொல்ல மாட்டார்கள்  ஏனென்றால் சொல்லி விடுதலைக்கு போராடத்துக்கு   தமிழர்களுக்கு எந்தப் பலனையும் தரப்போவதில்லை  

பணத்தை ஒரு பகுதியினருக்கு மட்டுமே திருப்பி கொடுக்க முடியும்  எலலோருக்கும் அல்ல   காரணம் பணம் தொடர்ச்சியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது 

இலங்கை தமிழருக்குக்காக. பணத்தை நிதியை வெளிநாடுகளில் பேணக்கடிய. ஒரு கட்டமைப்பை உருவாக்குங்கள்....விடுதலை புலிகள் பெயரில் தொழில்சாலைகள். தொடங்க வாய்ப்புகளை உருவாக்குவோம்  அதன் பின்னர் கேள்வியை கேளுங்கள் 

உதாரணமாக என்னிடத்தில் பல பில்லியன் புலிகளின். சொத்துக்கள் இருப்பின்  எனக்கு பாதிப்பு இல்லாமல் வெளிப்படுத்துவது எப்படி??? 

நான் நாடு கடத்தப்படமாட்டேன். சிறைப்படுத்த்மாட்டேன். தண்டனை கிடையாது   என்பதற்கு 

கபிதன்.  உத்தரவாதம் தருவர?? நன்றி வணக்கம் 🤣🙏

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, Kandiah57 said:

கந்தையர் நீங்கள் நீட்டி முழக்கி பல பந்திகளில் சொன்ன விடயத்தை ,  அந்த பணத்தை அபகரித்த கொள்ளையர்கள் பல வருடங்களுக்கு முதலே ஒரே வசனத்தில் கூறிவிட்டார்கள். “தலைவர் வந்தால் கணக்கு காட்டுவொம்”  என்று.  அவர்கள் கில்லாடிகள் அல்லவா…. 😂

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி தமிழ் மக்களைக் குறிவைத்து முன்பு போல இலகுவாக ஏமாற்றி கொள்ளை அடிக்க முடியவே முடியாது என்று கொள்ளையர்கள் வருகின்ற நிலைக்கு தமிழர்கள் விழிப்படைய வேண்டும்

[  இலங்கை தமிழருக்குக்காக பணத்தை நிதியை வெளிநாடுகளில் பேணக்கடிய. ஒரு கட்டமைப்பை உருவாக்குங்கள்....விடுதலை புலிகள் பெயரில் தொழில்சாலைகள். தொடங்க வாய்ப்புகளை உருவாக்குவோம்  ]

இங்கே கந்தையா அண்ணா சொல்வதை பார்த்தால் இந்தியன் 2 எடுத்த மாதிரி கொள்ளையர்களையும் பகுதி 2 ஆரம்பியுங்கள் என்று திட்டம் போட்டு கொடுப்பது போன்று உள்ளது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

Indian 2 அல்ல, புலம்பெயர்ஸ் கொள்ளையர்ஸ் 2 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, island said:

கந்தையர் நீங்கள் நீட்டி முழக்கி பல பந்திகளில் சொன்ன விடயத்தை ,  அந்த பணத்தை அபகரித்த கொள்ளையர்கள் பல வருடங்களுக்கு முதலே ஒரே வசனத்தில் கூறிவிட்டார்கள். “தலைவர் வந்தால் கணக்கு காட்டுவொம்”  என்று.  அவர்கள் கில்லாடிகள் அல்லவா…. 😂

அவர்கள் சொன்னதில். என்ன பிழை உண்டு???  வாழ்க்கையை பயணம் வைத்து தான்   பணம் சேர்த்தார்கள்  அனைவரும் கொள்ளையார்கள். இல்லை   ஆனால் கொஞ்ச பேர் கொள்ளையர்கள். தான் ........அவர்கள் பணத்தை தரும் போது  வேறு ஒருவர் கொள்ளையடிப்பார்.   

காரணம் இந்த சொத்துக்கள் பேணுவதற்க்கு எந்தவொரு பெறிமுறையுமில்லை   பாதுகாப்பான உறுதியான கட்டமைப்பு இல்லை     பதிலளிக்க முடியவில்லையா ??   தலைவர் வந்தால் தருவோம். என்ற பதிலை. எற்றுக்கொண்டால்     பிறகு ஏன் ஒவ்வொரு திரியிலும்.   பணம் சேர்த்தவர்களை திட்ட வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இனி தமிழ் மக்களைக் குறிவைத்து முன்பு போல இலகுவாக ஏமாற்றி கொள்ளை அடிக்க முடியவே முடியாது என்று கொள்ளையர்கள் வருகின்ற நிலைக்கு தமிழர்கள் விழிப்படைய வேண்டும்

[  இலங்கை தமிழருக்குக்காக பணத்தை நிதியை வெளிநாடுகளில் பேணக்கடிய. ஒரு கட்டமைப்பை உருவாக்குங்கள்....விடுதலை புலிகள் பெயரில் தொழில்சாலைகள். தொடங்க வாய்ப்புகளை உருவாக்குவோம்  ]

இங்கே கந்தையா அண்ணா சொல்வதை பார்த்தால் இந்தியன் 2 எடுத்த மாதிரி கொள்ளையர்களையும் பகுதி 2 ஆரம்பியுங்கள் என்று திட்டம் போட்டு கொடுப்பது போன்று உள்ளது.

உங்களுக்கு விளங்கவில்லை     சேர்ந்த சொத்துக்கள் பாதுகாக்கும் வழிகள் எதுவும் இல்லை   போராட்டம் நடந்த போது  தலைமையிடம் பணம் கொடுக்க முடியும் அனுப்ப முடியும்   போராட்டம் முடிந்த பின்னர் யாரிடம் கொடுப்பது??  

பணம் சேர்ப்பது  குற்றம்  கடுமையான தண்டனை கிடைக்கும்  

நேரடியாக இலங்கைக்கு அனுப்படுவர்கள்     

எனக்கு எவரும் சரியான உறுதியான பதில்கள் தரவில்லை 🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Kapithan said:

Indian 2 அல்ல, புலம்பெயர்ஸ் கொள்ளையர்ஸ் 2 

🤣

இது ஒரு பெறுபற்ற பதில்     நான் சொல்ல வருவது   சொத்துக்கள் கையாள்வது.  எப்படி என்பது பற்றி   வெளிப்பாடாய் கையாள்வது முடியாது   அப்போ இந்த சொத்துக்கள் எவன் கையில் கொடுத்தாலும்   கொள்ளை அடிக்கபபடும். அது தான் நடத்துள்ளது 

இந்த சொத்துக்கள் பேணக்கூடிய. வழிகளை சொல்லுங்கள் 

அது எவராலும் முடியாது  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விசுகு said:

காட்டுங்கள் என்று தான் எல்லோரும் சொல்கிறோம். களவெடுத்தவர்கள் வந்து சொல்லப்போவதில்லை. எனவே கொடுத்தவர்கள் அதை செய்ய முடியும். ஆனால் இங்கே கொடுத்தவர்கள் இல்லை. நீதி கோருகிறேன் அல்லது உரிஞ்சு காட்டுகிறேன் என்பவர்களின் உள் நோக்கம் அதைவிட கள்ளமானது.  

மாதாந்த பங்களிப்புகள் பற்றி ஒருவரும் இங்கே கதைக்கவில்லை என நினைக்கின்றேன்.

புலம் பெயர்நாடுகளில் இறுதிகட்ட நிதி சேகரிப்பு என இரு தடவைகள் நடந்தது. அப்போது எல்லோரும்/ஒவ்வொரு குடும்பமும் 2000 ஈரோக்களுக்கு மேல் கொடுத்தார்கள். இது இறுதி போர் என சொல்லியே பணம் சேகரித்தார்கள். இதில் முக்கிய விடயம் என்னவெனில் இந்த இறுதி கட்ட நிதி சேகரிப்பில் புலி எதிப்பாளர்கள் அநேகமானோரும் நிதியுதவி அளித்தார்கள்.
இந்த நிதிகள் தாயகத்தை சேரவில்லை. எனவே அதற்குரியவர்கள் பதில்  சொல்லியே ஆகவேண்டும்.

இடையில் நின்று நிதி சேர்த்த அப்பாவிகள் வறுமையில் நிற்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு சேகரிக்கும் பணம் எல்லாம் எங்கு போய் சேர்கின்றது என்பது பூச்சியமே. ஏனென்றால் அவர்களுக்கு தலைவர் மீதிருந்த நம்பிக்கை மட்டுமே.

புரியுதா?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, Kandiah57 said:

இது ஒரு பெறுபற்ற பதில்     நான் சொல்ல வருவது   சொத்துக்கள் கையாள்வது.  எப்படி என்பது பற்றி   வெளிப்பாடாய் கையாள்வது முடியாது   அப்போ இந்த சொத்துக்கள் எவன் கையில் கொடுத்தாலும்   கொள்ளை அடிக்கபபடும். அது தான் நடத்துள்ளது 

இந்த சொத்துக்கள் பேணக்கூடிய. வழிகளை சொல்லுங்கள் 

அது எவராலும் முடியாது  

புலம்பெயர் தங்களுக்கு என்று ஒரு வங்கியை அல்லது ஒரு நிதியத்தை ஆரம்பிப்பது,. 😁

இது உங்களுக்குத் தெரியாதா? இன்னொருவர்தான் சொல்ல வேண்டுமா? 😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Kapithan said:

புலம்பெயர் தங்களுக்கு என்று ஒரு வங்கியை அல்லது ஒரு நிதியத்தை ஆரம்பிப்பது,. 😁

இது உங்களுக்குத் தெரியாதா? இன்னொருவர்தான் சொல்ல வேண்டுமா? 😏

பகிடியை விடுங்கள்”    ஆக்கபூர்வமான பதில் தாருங்கள்” 

பணம் சேர்ப்பது குற்றம் 

பணம் கொடுப்பது பயங்கரவாத அமைப்புக்கு கொடுப்பது கடும் குற்றம் 

ஜேர்மனியில் வாழும் யாராவது பணம் கொடுத்தேன் புலிகளிற்கு என்று   ஜேர்மன் அரசாங்க கட்டமைப்புக்கு சொல்வார்களா??  இல்லை கண்டிப்பாக இல்லை 

எனக்கு தெரிய. புலிகளின்  நிதியில்  பலரும் நிறுவனங்கள் நடத்தியிருக்கிறார்கள்  50 க்கு 50 தான் பேச்சு   100 யூரோ  வருமானம் எனில் 50 யூரோ புலிகளிற்கு  எனக்கும் சந்தர்ப்பம்.  வந்தது  பணம் வேண்டுமா?? ஏதாவது தொழில் செய்ய போகிறியா.??  என்று புலிகளுக்கு   பணம் சேர்த்தவர்.  கேட்டார்    எனக்கு 10 % காது கேட்பது குறைவு  இதனால் மறத்து விட்டேன்   1986   பேர்ள்ன் பல்கலைக்கழகத்தில் படிபித்த டேவிட்.  என்பவன்  ஜேர்மன் மொழியை படித்து விட்டு வா. பல்கலைகழகத்தில் இடம் எடுத்து தருகிறேன் என்றார்   என்னால் முடியவில்லை காரணம்   இலங்கையில் நடந்த ஒரு விபத்து காரணமாக  எனது காதுகள்.  10 % கேட்பது குறைவு    

இங்கே விடயத்துக்கு வருகிறேன்   ஜேர்மனியில் 43   பணம் சேர்த்தவரகள். மீது  வழக்கு நடந்தது   இவர்கள் பணம் சேர்த்தது  உறுதியானது      அது குற்றம் அதனால்   அவர்களால் நல்ல விசா பெற முடியவில்லை 

புலிகளிடம் பணம் இருந்த போதும்   எந்தவொரு முதலீடுகளும்  செய்ய முடியவில்லை தனிநபர்கள் பெயரில் தான் செய்தார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

அவர்கள் சொன்னதில். என்ன பிழை உண்டு???  வாழ்க்கையை பயணம் வைத்து தான்   பணம் சேர்த்தார்கள்  அனைவரும் கொள்ளையார்கள். இல்லை   ஆனால் கொஞ்ச பேர் கொள்ளையர்கள். தான் ........அவர்கள் பணத்தை தரும் போது  வேறு ஒருவர் கொள்ளையடிப்பார்.   

காரணம் இந்த சொத்துக்கள் பேணுவதற்க்கு எந்தவொரு பெறிமுறையுமில்லை   பாதுகாப்பான உறுதியான கட்டமைப்பு இல்லை     பதிலளிக்க முடியவில்லையா ??   தலைவர் வந்தால் தருவோம். என்ற பதிலை. எற்றுக்கொண்டால்     பிறகு ஏன் ஒவ்வொரு திரியிலும்.   பணம் சேர்த்தவர்களை திட்ட வேண்டும் 

கந்தையா, பணத்தை பாதுகாக்கும் கட்டமைப்பு தேவையல்லை. பொறிமுறையும் தேவையில்லை.  பணத்தை இவர்கள் பாதுகாக்கவும  தேவையில்லை. பணத்தை யாரிடம் இருந்து பெற்றார்கள், யாருடைய பெயரில் பெருந்தொகை பணத்தை எடுத்து அதை அபகரித்து அவர்களை வாழ்நாள் கடனாளியாக்கி னர்களோ அவர்களின் பெயர், முகவரி  விபரம் எல்லாம்  நீங்கள் கூறிய செயற்பாட்டாளர்களிடம் உண்டு. பணத்தை மனம் இருந்தால்   திருடிய இடத்தில் காதும் காதும் வைத்த மாதிரி  திருப்பி கொடுத்திருக்கலாம். அதற்கு எந்த தடையும் சட்ட சிக்கலும் இல்லை. பணத்தை இழந்தவர்கள் இப்போதும்  உள்ளார்கள். அவர்கள் இவர்களை காட்டிக் கொடுக்கப்போவதில்லை. தமது  பணம் திரும்பி  வந்ததையிட்டு மகிழ்சசியடையவே செய்வர். 

பணத்தை பெறும் போதும்  இல்லாத சட்ட சிக்கல் உரியவரிடம் திருப்பி ஒப்படைக்கும் போது வரப் போவதில்லை.  பணத்தை தாம் அனுபவிப்பதற்தை நியாயப்படுத்த இவ்வறான  ஆயிரம் காரணங்களை அவர்கள் கூறலாம்.  அவர்களுக்கு வேண்டியவர்கள்  ஆயிரம் முட்டு கொடுப்புகளைச் செய்யலாம். அவை  எதுவும் நியாயமானதல்ல.  

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, Kandiah57 said:

பகிடியை விடுங்கள்”    ஆக்கபூர்வமான பதில் தாருங்கள்” 

பணம் சேர்ப்பது குற்றம் 

பணம் கொடுப்பது பயங்கரவாத அமைப்புக்கு கொடுப்பது கடும் குற்றம் 

ஜேர்மனியில் வாழும் யாராவது பணம் கொடுத்தேன் புலிகளிற்கு என்று   ஜேர்மன் அரசாங்க கட்டமைப்புக்கு சொல்வார்களா??  இல்லை கண்டிப்பாக இல்லை 

எனக்கு தெரிய. புலிகளின்  நிதியில்  பலரும் நிறுவனங்கள் நடத்தியிருக்கிறார்கள்  50 க்கு 50 தான் பேச்சு   100 யூரோ  வருமானம் எனில் 50 யூரோ புலிகளிற்கு  எனக்கும் சந்தர்ப்பம்.  வந்தது  பணம் வேண்டுமா?? ஏதாவது தொழில் செய்ய போகிறியா.??  என்று புலிகளுக்கு   பணம் சேர்த்தவர்.  கேட்டார்    எனக்கு 10 % காது கேட்பது குறைவு  இதனால் மறத்து விட்டேன்   1986   பேர்ள்ன் பல்கலைக்கழகத்தில் படிபித்த டேவிட்.  என்பவன்  ஜேர்மன் மொழியை படித்து விட்டு வா. பல்கலைகழகத்தில் இடம் எடுத்து தருகிறேன் என்றார்   என்னால் முடியவில்லை காரணம்   இலங்கையில் நடந்த ஒரு விபத்து காரணமாக  எனது காதுகள்.  10 % கேட்பது குறைவு    

இங்கே விடயத்துக்கு வருகிறேன்   ஜேர்மனியில் 43   பணம் சேர்த்தவரகள். மீது  வழக்கு நடந்தது   இவர்கள் பணம் சேர்த்தது  உறுதியானது      அது குற்றம் அதனால்   அவர்களால் நல்ல விசா பெற முடியவில்லை 

புலிகளிடம் பணம் இருந்த போதும்   எந்தவொரு முதலீடுகளும்  செய்ய முடியவில்லை தனிநபர்கள் பெயரில் தான் செய்தார்கள் 

பெர்சு,  இது மிகவும் இலகுவானது. 

நான்  கொடுத்த பணத்தைத் திரும்பவும் என்னிடம் தந்தால் விடயம் முடிவுக்கு வருகிறது. இல்லையா? 

இதில் இரண்டு விடயங்கள் உறுதியாகிறது. 1) தமிழனின் தலைக்கு மேல் துப்பாக்கி தொங்கிக்கொண்டு இருந்தால் மாத்திரமே அவன் நேர்மயானவனாக, தேசப்பற்றாளனாகப் இருப்பான். 

2) போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்ட புலம்பெயர்ஸ் களில் போலிகளும் சந்தர்ப்பவாதிகளும்தான் அதிகம். 

உ+ம் ; Toronto, Scarborough, Staines Road ல் நடைபெற்ற கூட்டத்தில் அவசர நிதி சேர்ப்பு என்று கூறி பெருமளவான உணர்வாளர்களை அழைத்திருந்தார்கள. கூட்ட முடிவில் அனேகரிடம் காசு சேர்ப்பிற்கான பற்றுச் சீட்டுக்களடங்கிய புத்தகங்கள் கட்டுக்கட்டாக கொடுக்கப்பட்டது. நிதி வசூலிப்பும் வீடு வீடாக  ஆரம்பமாகியது. அடித்தடுத்த ஓரிரு வாரங்களில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

அடுத்தடுத்த கிழமைகளில் கொடுக்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களுக்கு பணத்தை திரும்பவும் தரப்போவதாகக் கூறி பற்றுச் சீட்டுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். 

இப்போது கொடுக்கப்பட்ட நிதிக்கான பற்றுச் சீட்டும் இல்லை, பணமும் இல்லை. 

இந்தத் துரோகங்களுக்கு யார் சப்பைக்கட்டு கட்டினாலும் அவர்களும் இந்த மோசடியின் பங்காளர்களே. 

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

நான்  பணம் சேகரித்தவர்கள்  2009 வரை கொள்ளை அடித்தார்கள் என்பதை எற்றுக்கொள்ளவில்லை     2009 இல்  கொள்ளை அடித்தது உண்மை தான்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Kandiah57 said:

நான்  பணம் சேகரித்தவர்கள்  2009 வரை கொள்ளை அடித்தார்கள் என்பதை எற்றுக்கொள்ளவில்லை     2009 இல்  கொள்ளை அடித்தது உண்மை தான்   

அதைத்தான் எல்லோரும் சொல்கிறோம். 

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தமிழரசுக் கட்சியிலிருந்து சுமந்திரன் நீங்கிவிட்டால் அதுதேறி நலமாகி வீடுவந்து சேர்ந்துவிடும் என்ற உண்மை யாருக்கும் புரியவில்லையே!!
    • அப்ப கஜே-கயே குழுத்தலைவர் இவ்வளவு நாளும் பம்மாத்து அரசியல் செய்திருக்கிறார். அநுர அரசுக்கு 2/3 பெரும்பான்மை உள்ளது என்றபடியால் முன்னைய அரசாங்கங்களிடம் செய்துவந்த அண்டர் கிறவுண்ட் டீல் இனிச் செய்யமுடியாது என்று அண்ணருக்கு விளங்கிவிட்டது. அதுபோக இப்ப பாராளுமன்றில் சுமந்திரன் இல்லாதபடியால் சுமந்திரனுக்கு எதிரான விடுதலை போராட்டத்தை முன்கொண்டு செல்லமுடியாத இக்கட்டான நிலையிலும் உள்ளார். 
    • வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி ஆண் : ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : ஆ கட்டிலிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : மெத்தையிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி ........!   --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---
    • இரு மருங்கிலும் காணியை விடவில்லை, 600 யார் வீதியை மட்டும் விட்டார்கள். அப்போதும் காணி உரிமையாளர் அனுரவுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என்பதையும் எழுதினேன். என்ன குதி குதித்தீர்கள்… வோட்டு போட்ட மக்களை திட்ட வேண்டாம்…. அனுர இப்போதான் வந்துள்ளார்… நல்லெண்ண சமிக்ஞை….தேங்காய் என்ணை சமிக்ஞை என….. இதுதான் அவர்கள் எப்போதும்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.