Jump to content

ஹிட்லர் அணுகுண்டு தயாரிக்க முயன்ற போது ஐன்ஸ்டீனின் 2 பக்க கடிதம் உலக வரலாற்றை மாற்றியது எப்படி?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஐன்ஸ்டீன், அணுகுண்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (கோப்புப் படம்) கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிபிசி முண்டோ
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 12 ஆகஸ்ட் 2024

1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் சாக்ஸ் (Alexander Sachs), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார்.

ஓவல் அலுவலகத்திற்கோ, அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கோ சாக்ஸ் புதியவர் அல்ல. ஆனால் அன்று அவர் பேச வந்த தலைப்பு புதிது.

பொதுவாக பொருளாதாரத்தைப் பற்றி அதிபரிடம் பேசும் அவர், அன்றைய தினம், அவர் அதிபரிடம் பேச இன்னொரு விஷயமும் இருந்தது.

அன்று, வரலாற்றின் போக்கை மாற்றியமைத்ததாக நம்பப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதத்தை அவர் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் விற்பனைக்கு வரும் இந்தக் கடிதத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை (4 முதல் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்று மதிப்பிடுகிறது கிறிஸ்டியின் ஏல நிறுவனம்.

இது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு சொந்தமான கலைப்பொருட்கள் ஏலத்தின் ஒரு பகுதியாகும். அவர் 2018-இல் 65 வயதில் இறந்தார்.

கணினி இயலில் அவரது ஆர்வத்தையும் செல்வாக்கையும் பிரதிபலிக்கும் பல்வேறு பொருட்கள் இருந்தாலும், இந்தக் கடிதம் அவற்றின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கையொப்பமிட்டவர் மிக முக்கியமானவராக இருந்த போதிலும், ரூஸ்வெல்ட் ஆரம்பத்தில் அதன்மீது அதிக கவனம் செலுத்தவில்லை.

மற்ற விஷயங்கள் அவரது மனதை ஆக்கிரமித்திருந்தன. அந்தச் சந்திப்பிற்கு 15 நாட்களுக்கு முன்பு, ஜெர்மனி போலந்தின் மீது படையெடுத்திருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவு கொண்ட ஒரு போர் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்தது.

லியோ சிலார்ட் என்ற அதிகம் அறியப்படாத ஹங்கேரிய புலம்பெயர்ந்த இயற்பியலாளர் எழுதிய கடிதத்தை ரூஸ்வெல்டுக்கு சாக்ஸ் படித்துக் காட்டினார்.

உண்மையைச் சொல்வதானால், அணுசக்தி, சங்கிலி விளைவுகள், மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றல் ஆகியவை அவர்கள் இருவருக்கும் மிகச் சிக்கலானதாக இருந்தன.

அக்கடிதத்தில் இதுபோன்ற பத்திகள் இருந்தன:

"கடந்த நான்கு மாதங்களில், யுரேனியத்தின் ஒரு பெரிய திரளில் இருந்து சங்கிலி விளைவை நிறுவுவது சாத்தியமாகியிருக்கிறது (...), இதன் மூலம் அதிக அளவு ஆற்றல் மற்றும் ரேடியம் போன்ற புதிய தனிமங்கள் பெரிய எண்ணிக்கையில் உருவாகும்."

ஆனால் இதனை அதிபர் ரூஸ்வெல்ட் சட்டை செய்யவில்லை.

அதிபர் தனது பழைய நண்பரை மறுநாள் காலை காபி சாப்பிட அழைத்தார்.

நிகழும் போது பெரிதாகத் தோன்றாத சில சம்பவங்கள் உலகையே மாற்றிவிடும்.

இதுவும் அதுபோன்ற ஒன்றுதான்.

சில மாதங்களுக்கு முன்…

அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த செய்திகள் சில மாதங்களாக சிலார்ட்டை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது.

1939-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாஜி ஜெர்மனியில், அவரது சக ஊழியர்களாக இருந்த விஞ்ஞானிகள் அணுவைப் பிரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர். இது அணுப்பிளவு என்று அழைக்கப்படுகிறது.

சிலார்ட் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதை முன்னறிவித்திருந்தார். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அணு யுத்தம் இனியும் ஒரு கற்பனை மட்டுமே அல்ல.

நாஜிக்கள் மற்ற எல்லோரையும் விட அணு ஆராய்ச்சியில் மேலும் முன்னேறலாம் என்று அவர் அஞ்சினார்.

ஆனால் யாரும் தன் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.

அதற்கு முன் சில ஆண்டுகளாக, அவர் விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் ஆகியோர் தனது பேச்சை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போராடி வந்தார்.

அணுப்பிளவு சாத்தியமா என்று அவர்கள் சந்தேகித்தனர். ஆனால் அவர் சொன்னது சரி என்று நிரூபிக்கப்பட்டது.

இருப்பினும், அணுப்பிளவு பற்றிய செய்தி வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் அவரது நண்பரும் சக ஊழியருமான என்ரிகோ ஃபெர்மி இந்தப் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய கவலைகளை நிராகரித்திருந்தார்.

குறைந்தது 25 ஆண்டுகளுக்கு, ஒருவேளை 50 ஆண்டுகளுக்கு வணிக அல்லது ராணுவ நோக்கங்களுக்காக யாரும் அணுப்பிளவுகளைப் பயன்படுத்த முடியாது, என்று அவர் கணித்திருந்தார்.

இது நம்ப முடியாத, அறிவியல் புனைகதை என்று கருதப்பட்டது.

அணுப்பிளவில், ஓரு அணு பிளக்கப்படுகிறது. அது ஆற்றலை வெளியிடுகிறது, அவ்வளவுதான்.

இருப்பினும், ஒரு நிலையற்ற அணுவை பிளக்க முடிந்தால், அது அதிக எண்ணிக்கையிலான நியூட்ரான்களை வெளியிடும். அவை மற்ற நிலையற்ற அணுக்களைப் பிளவுபடுத்தி, மேலும் நியூட்ரான்களை வெளியிடும். இப்படி நடக்கும் ஒரு சங்கிலி எதிர்வினை ஒரு அசாதாரண அளவிலான ஆற்றலை வெளியிடும்.

இயற்பியலாளர் சிலார்ட்டுக்கு பதில்கள் தேவைப்பட்டன. அவற்றை அவர் 1939-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது சக ஊழியர் வால்டர் ஜின்னுடன் கண்டடைந்தார். அவர் புதிய மற்றும் சாத்தியமற்ற அறிவியல் சோதனைகளைச் செய்வதில் நிபுணர்.

சிலார்ட் சொன்னது சரிதான் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். "உலகம் வலிமையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது," என்று அவர் பின்னர் எழுதினார்.

அதிர்ஷ்டவசமாக, அணுப்பிளவு சங்கிலி எதிர்வினையை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு தடை இருந்தது. அணுப்பிளவு வெளியிடும் நியூட்ரான்கள் அதிவேகமாகப் பயணித்தன. மற்ற அணுக்களால் அவற்றை உறிஞ்சுவது கடினமான இருந்தது.

ஆனால் அந்த விவரம் நாஜிகளை நிறுத்தப் போவதில்லை.

ஐன்ஸ்டீன், அணுகுண்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நார்வேயில் கன நீர் தயாரிக்கப்பட்டு வந்த இடம். இதனை 1943-இல் நாஜிக்கள் தகர்த்தனர்

ஜெர்மனி-பிரான்ஸ் இடையே நீருக்கான போட்டி

நியூட்ரான்களை மெதுவாகச் செல்லவைப்பது எப்படி?

இதற்கு தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் அது பல நியூட்ரான்களை உறிஞ்சி, அவற்றை ஒரு சங்கிலி எதிர்வினையில் பயனற்றதாக ஆக்கி விடுகிறது.

இருப்பினும், H₂O இன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஒரு கூடுதல் நியூட்ரான் (D₂O) கொண்ட ஹைட்ரஜன் ஐசோடோப் பயன்படுத்தப்பட்டால், இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும்.

இது ‘கன நீர்’ (heavy water) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதனை உற்பத்தி செய்வது கடினம்.

எனவே நாஜி அரசாங்கம் நார்வேயில் உள்ள வேமோர்க் என்ற நீர்மின் நிலையத்திற்குத் தனது பிரதிநிதிகளை அனுப்பியது. அங்கு அவர்கள் தங்கள் தினசரி வேலையின் துணை விளைபொருளாக கனரக நீரை உற்பத்தி செய்தனர்.

ஜெர்மனியர்கள், அங்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து கன நீரையும் மிக அதிக விலைகொடுத்து வாங்க முன்வந்தனர். அந்த ஆலையை மேலும் அதிகமாக கன நீர் உற்பத்தி செய்யவும் வலியுறுத்தினர்.

ஆனால் நார்வேஜியர்கள் இதனை நிராகரித்தனர். ஹிட்லரின் திட்டங்கள் என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், அவற்றின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை.

பிரெஞ்சு ரகசிய போலீஸ் குழு ஒன்று அதன் பின்னர் அந்த ஆலையை அணுகி, அவர்களது ரசாயன துணைத் தயாரிப்புகளின் சாத்தியமான ராணுவ நோக்கம் குறித்து நார்வேஜியர்களை எச்சரித்தது.

நார்வேஜியர்கள் கன நீரை இலவசமாக பிரெஞ்சு அதிகாரிகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் ஜெர்மனியர்கள் இதனைக் கண்டுபிடித்தனர்.

இரவோடு இரவாக 26 கனரக நீர் கேன்கள் கடத்தப்பட்டன.

இது ஒரு பதற்றமான நடவடிக்கை. நாஜி போர் விமானங்கள் தயாராகக் காத்திருந்தன.

அவர்கள் பிரெஞ்சு அதிகாரிகள் ஏறிய விமானத்தைக் குறிவைத்து அதனைத் தரையிறக்கக் கட்டாயப்படுத்தினர்.

ஆனால், நாஜிக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

விமானத்தில் கன நீர் கேன்கள் இல்லை.

அவை ரயில் மூலம் பாரிஸுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன. அங்கு ஒரு விஞ்ஞானிகள் குழு அவசரமாகப் பரிசோதனையைத் தொடங்கியது.

ஐன்ஸ்டீன், அணுகுண்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிபருக்கு அனுப்பப்பட்ட அசல் கடிதம் நியூயார்க்கில் உள்ள ஹைட் பார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஏலம் விடப்படும் இரண்டாவது பதிப்பு, கையொப்பமிடப்பட்ட சிறிய பதிப்பு

ஐன்ஸ்டீனின் கையொப்பம்

அணுஆயுதப் போட்டி உச்சத்தில் இருந்தது.

ஒரு அணுகுண்டு இருக்குமோ என்று சிலார்ட் அஞ்சினாலும், அவர் நாஜி வெடிகுண்டு பற்றி அதிகம் பயந்தார்.

இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத இந்த ஆயுதம் உண்மையில் இருக்கிறது என அவர் நம்பினார். அதனால் நிகழப்போகும் அழிவுகள், அடக்குமுறைகளைக் கற்பனை செய்து பார்த்தார்.

அவர் ஒரு எளிய முடிவுக்கு வந்தார்: அமெரிக்கர்கள் அதை ஜெர்மனியர்களுக்கு முன்பாக உருவாக்க வேண்டும்.

அதைச் செய்ய அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் அவர்களுக்கு உச்ச அதிகாரத்தை வழங்க வேண்டியிருந்தது.

அவருக்கு ஒரு கூட்டாளி மற்றும் சிந்தனை தேவை: உலகில் மிகவும் சக்தி வாய்ந்தவர் கூட புறக்கணிக்காத விஞ்ஞானி யார்?

ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் தெரியும்.

பெர்லினில் உள்ள ஒரு மாநாட்டு அறையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை சிலார்ட் சந்தித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன.

மேலும் 15 வருடங்களாக அவர்கள் ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒன்றாக வீட்டிற்கு நடந்து செல்கையில், இயற்பியல், தத்துவம், மற்றும் அரசியல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்போது இருவரும் அமெரிக்காவில் குடியேறி, சில கிலோமீட்டர்கள் இடைவெளியில் வசித்து வந்தனர்.

ஆனால் 1939-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, உலகின் மிகவும் பிரபலமான விஞ்ஞானியான் ஐன்ஸ்டீன் அமெரிக்காவின் லாங் தீவில் ஒரு நண்பரின் அறையில் இருந்தார்.

அங்கு அவரைக் காண, சிலார்ட், தனது நண்பரும், சக ஊழியரும், சக ஹங்கேரியருமான யூஜின் விக்னருடன் சென்றார்.

ஐன்ஸ்டீனுக்கு அணுசக்திச் சங்கிலி எதிர்வினை பற்றி சிலார்ட் விளக்கி, அவரும் ஃபெர்மியும் சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறியபோது, ஐன்ஸ்டீன் அதிர்ச்சியடைந்தார்.

"இதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை," என்பதுதான் அவரது முதல் பதிலாக இருந்தது.

இது சுவாரஸ்யமானது. ஐன்ஸ்டீனின் E=mc² சமன்பாடு செயல்பாட்டில் இருந்தது.

ஆனால் நாஜி ஜெர்மனியில் இருந்து அகதியாக வந்து, உறுதியான சமாதானவாதியாகவும், அரசியல் உணர்வுள்ள நபராகவும் இருந்த ஐன்ஸ்டீன், ஜெர்மனியர்களின் கைகளில் அணு ஆயுதங்கள் இருந்தால் என்ன ஆகும் என்ற ஆபத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார்.

ஜெர்மனி போருக்குத் தயாராக இருந்த நிலையில், நிலைமை அவசரமானது என்று ஐன்ஸ்டீன் ஒப்புக்கொண்டார்.

பின்னாட்களில், அவர் தனது வாழ்க்கையின் பெரும் தவறு என்று அழைத்த ஒரு செயலைச் செய்தார். ரூஸ்வெல்ட்டுக்கு அனுப்ப சிலார்ட் தயாரித்திருந்த கடிதத்தில் கையெழுத்திட அவர் ஒப்புக்கொண்டார்.

ஐன்ஸ்டீனின் கடிதத்துடன் சிலார்ட் நியூயார்க் திரும்பினார். கடிதத்தை அதிபருக்கு அனுப்புவது மட்டுமே மிச்சம்.

இது நம்மை மீண்டும் அலெக்சாண்டர் சாக்ஸிடம் கொண்டு செல்கிறது.

ஐன்ஸ்டீன், அணுகுண்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லாங் ஐலேண்டில் அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கான கடிதத்துடன் ஐன்ஸ்டீன் மற்றும் சிலார்ட்

அணுகுண்டுடன் காலை உணவு

ரூஸ்வெல்ட்டுடனான சாக்ஸின் முதல் சந்திப்பில் அவரிடம் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் இருந்தபோதிலும், அச்சந்திப்பு சரியாகச் செல்லவில்லை.

"மிக விரைவில் யுரேனியம் ஒரு முக்கியமான புதிய எரிசக்தி ஆதாரமாக மாறக்கூடும்," என்று அக்கடிதம் துவங்கியது. "சூழ்நிலை குறித்து வெளிவந்துள்ள சில அம்சங்கள் விழிப்புடன் இருக்கக் கோருகின்றன. தேவைப்பட்டால், அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று அக்கடிதம் எச்சரித்தது.

அணுசக்தி சங்கிலி எதிர்வினை "வெடிகுண்டுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும். இது சாத்தியமானது. உறுதியாக இல்லாவிட்டாலும், இந்த வழியில் மிகவும் சக்திவாய்ந்த புதிய வகை குண்டுகளை ஆயுதமாக்க முடியும்," ஐன்ஸ்டீன் எச்சரித்திருந்தார்.

நாஜிக் கட்டுப்பாட்டில் இருந்த செக்கோஸ்லோவாகிய சுரங்கங்களில் இருந்து யுரேனியம் தொடர்பான தகவல்களை அவர் குறிப்பிடுகிறார் என்றாலும், அதிகமான அறிவியல் தகவல்களால் அதிபர் குழம்பிவிட்டார் என்பதை சாக்ஸ் அறிந்திருந்தார்.

இருப்பினும், அடுத்த நாள் காலை உணவுக்கான அழைப்பு, உலகின் மிக சக்திவாய்ந்த மனிதனுக்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி புரிய வைப்பதற்கான இரண்டாவது வாய்ப்பாகும்.

சாக்ஸ் ஒரு திட்டத்தை வகுத்தார்.

அதிபரை விஞ்ஞானத்தால் வெல்ல வழி இல்லை என்றால், அவர் அவருக்கு ஒரு கதை சொல்ல முடிவெடுத்தார்.

போர்களுக்கு மத்தியில், ஒரு இளம் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் பிரஞ்சு அரசர் நெப்போலியனுக்கு நீராவிக் கப்பல்களை உருவாக்கிக் கொடுக்க முன்வந்தார். அது காற்றைப் பொருட்படுத்தாமல் இங்கிலாந்தில் தரையிறங்க உதவும் என்று அவர் விளக்கினார்.

பாய்மரம் இல்லாத கப்பல்களைப் பற்றிய யோசனை நெப்போலியனுக்கு மிகவும் அபத்தமாகத் தோன்றியது. அவர் கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஃபுல்டனை வேலையிலிருந்து நீக்கினார்.

ராபர்ட் ஃபுல்டன் நீராவிப் படகை மட்டுமல்ல, முதல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் முதல் நீர்மூழ்கி ஏவுகணைகளை உருவாக்கினார்.

ரூஸ்வெல்ட் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பின்னர், "அலெக்ஸ், நாஜிக்கள் நம்மைத் தாக்கித் தகர்க்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?" என்றார்.

"ஆம்," என்று சாக்ஸ் பதிலளித்தார்.

ஃபுல்டன் மற்றும் நெப்போலியன் கதை ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால் லியோ சிலார்ட் எழுதிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் அவரை அதை நம்ப வைத்தது.

அக்கடிதத்தைப் பெற்ற அதே மாதம், ரூஸ்வெல்ட் யுரேனியம் ஆலோசனைக் குழுவை உருவாக்கினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ‘மன்ஹாட்டன் திட்டத்தை’ துவங்கியது. இது 1945-இல் ஜப்பானுக்கு எதிராக முதல் அணுகுண்டுகளைப் பயன்படுத்த வழிவகுத்தது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளுக்கும் ஐன்ஸ்டீனின் கடிதத்திற்கும் இடையே நேரடித் தொடர்பை வரைந்த வரலாற்றாசிரியர்கள் உள்ளனர்.

மற்றவர்கள் அத்தகைய நேரடி உறவு இருப்பதாக நம்பவில்லை. அக்கடிதம் இல்லாவிடினும் அமெரிக்கர்கள் எப்படியும் அணுகுண்டுகளைத் தயாரித்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

ஐன்ஸ்டீன், தனது பங்கிற்கு, பல சந்தர்ப்பங்களில் அக்கடிதத்தில் கையெழுத்திட்டதற்காகப் பெரிதும் வருந்தினார்.

1947-ஆம் ஆண்டு ‘நியூஸ் வீக்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் ‘அனைத்தையும் ஆரம்பித்து வைத்தவர்’ என்ற தலைப்பில் அவர் கூறியது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது:

"ஜெர்மானியர்களால் அணுகுண்டு தயாரிக்க முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஒரு விரலைக் கூட உயர்த்தியிருக்க மாட்டேன்."

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலரை மட்டும் இயற்கை தேர்ந்தெடுத்து தனது ரகசியங்களில் சிலதை மனிதர்களுக்கு சொல்ல படைக்கிறது.. அதில் ஜன்ஸ்டீனும் ஒருவர்..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ஷ்டம் அரைவாசித் தூரம், எங்களை நோக்கி, வரும்; நாங்கள் தான் மிகுதி அரைவாசித் தூரத்தை ஓடிப் போய் அதைப் பிடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அமெரிக்காவிற்கு மீண்டும் மீண்டும் இதுவே நடந்து கொண்டிருக்கின்றது. அதிர்ஷ்டம் உள்ளவர்கள்.

முதலாவது தாக்குதலின் பின்னர் மிகவும் மனமுடைந்து போனார் என்று சொல்லப்படுகின்றது.........

Paul Allen இன் சொத்தை நிர்வகிப்பவர்கள் இவற்றை ஏன் விற்க வேண்டும் என்று புரியவில்லை. அவர்களிடம் ஏற்கனவே இல்லாத பணமா..... இவரின் கூட்டாளிகளான Bill Gates அல்லது Steve Balmer இவற்றை வாங்கி, ஏதாவது அருங்காட்சியங்களுக்கு இவற்றைக் கொடுத்தால், பலருக்கும் பிரயோசனமாக இருக்கும்.  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிலரை மட்டும் இயற்கை தேர்ந்தெடுத்து தனது ரகசியங்களில் சிலதை மனிதர்களுக்கு சொல்ல படைக்கிறது.. அதில் ஜன்ஸ்டீனும் ஒருவர்..

அதென்றால் உண்மைதான்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அணுவாயுதம் செய்திருக்கா விட்டால் சோவியத் ஒன்றியம் செய்திருக்கும்.

கவனிக்க வேண்டிய ஒரு விடயம், நாசிகள் V2 ஏவுகணையை வெற்றிகரமாக தயாரித்து பிரிட்டன் மீது ஒரு தாக்குதல் செய்யக் கூடப் பயன்படுத்தியிருந்தார்கள். இந்த இயலுமையோடு அணுவாயுத இயலுமையும் கிடைத்திருந்தால் விளைவு பயங்கரமாக இருந்திருக்கும். சிலார்ட்டும், ஐன்ஸ்ரினும் அந்த சந்தர்ப்பத்தில் நடந்து கொண்ட விதம் நியாயமானது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அண்ணன் ஹிரோசிமா நாசசாக்கியில் குட்டிப்பையனை தூக்கிப்போட்டு ஒரு தேசத்தையே அழித்ததும் நியாயமான செயல் தான். ரஷ்யா இன்றுவரை அணுவாயுதத்தை பரீட்சிக்கவுமில்லை அதை ஏனைய நாடுகள் மீது வீசவுமில்லை என்பது நியாயமற்ற செயல் கண்டியளோ. 😎

இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் அமெரிக்கா ஜேர்மனியிடம் களவெடுத்த கண்டுபிடிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

ஹிரோஷிமா , நாகாசாகியில் அணுகுண்டு அமெரிக்கா வீச முன்னர் ஜப்பான் காரன் செய்ததென்ன? யாருக்கு  செய்தார்கள்? இதைப் பற்றி உங்கள் "சமூகவலை ஊடக குப்பன் சுப்பன்கள்" ஒன்றும் உங்களுக்கு சொல்லவில்லையோ? அல்லது வேலையிடத்தில் பிலிப்பைன்ஸ், கொரியா, சீனா நாட்டவர்கள் அருகில் இல்லையோ😎? எனவே, ignorance is bliss என்று கடந்து போங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

ஹிரோஷிமா , நாகாசாகியில் அணுகுண்டு அமெரிக்கா வீச முன்னர் ஜப்பான் காரன் செய்ததென்ன

தெரியாது சொல்லுங்கள்

6 hours ago, Justin said:

இதைப் பற்றி உங்கள் "சமூகவலை ஊடக குப்பன் சுப்பன்கள்" ஒன்றும் உங்களுக்கு சொல்லவில்லையோ?

கோதாரிவிழுவார் ஒரு வார்த்தை சொல்லவில்லை.

6 hours ago, Justin said:

ignorance is bliss

எண்டால் என்ன சாமான்?

6 hours ago, Justin said:

அல்லது வேலையிடத்தில் பிலிப்பைன்ஸ், கொரியா, சீனா நாட்டவர்கள் அருகில் இல்லையோ

பக்கத்திலை முழுக்க ரஷ்யனும் உக்ரேனியர்களும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 13/8/2024 at 22:20, Justin said:

அமெரிக்கா அணுவாயுதம் செய்திருக்கா விட்டால் சோவியத் ஒன்றியம் செய்திருக்கும்.

கவனிக்க வேண்டிய ஒரு விடயம், நாசிகள் V2 ஏவுகணையை வெற்றிகரமாக தயாரித்து பிரிட்டன் மீது ஒரு தாக்குதல் செய்யக் கூடப் பயன்படுத்தியிருந்தார்கள். இந்த இயலுமையோடு அணுவாயுத இயலுமையும் கிடைத்திருந்தால் விளைவு பயங்கரமாக இருந்திருக்கும். சிலார்ட்டும், ஐன்ஸ்ரினும் அந்த சந்தர்ப்பத்தில் நடந்து கொண்ட விதம் நியாயமானது தான்.

அமெரிக்காவுக்கு அதே இயலுமை கிடைத்தும் விளைவு பயங்கரமாகத்தான் இருந்தது.. ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு தேசத்தின் ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் கண்ணை மூடித்திறப்பதற்குள் கூட்டம் கூட்டமாக சுருண்டு விழுந்து இறந்தனர்.. நாசிக்கள் குண்டு போட்டு ஆங்கிலேயர் இறந்தாலென்ன ஆங்கிலேயர் குண்டு போட்டு ஆசியர்கள் இறந்தாலென்ன..நாசிக்கள் யூதர்களுக்கு எதிராக செய்ததைப்போல மன்னிக்க முடியாத மனிதப்படுகொலை அமெரிக்கா செய்தது.. ஒன்றைமட்டும் ஊதிப்பெருப்பித்து இன்னொன்றை சமப்படுத்துவது நமக்கு பிடித்தற்கு முட்டுக்குடுப்பது..

7 hours ago, Justin said:

ஹிரோஷிமா , நாகாசாகியில் அணுகுண்டு அமெரிக்கா வீச முன்னர் ஜப்பான் காரன் செய்ததென்ன? யாருக்கு  செய்தார்கள்?

முன்னர் மற்றவர் என்ன செய்தார்கள் என்ற கதை எல்லோரிடமும் இருக்கும்.. நாசிக்களிடம் யூதர்களுக்கு இருக்கும்.. சிங்களவர்களிடம் தமிழர்களுக்கு இருக்கும்.. தமிழர்களிடம் சிங்களவர்களுக்கு இருக்கும்.. இஸ்ரேலிடம் பாலஸ்தீனர்களுக்கு இருக்கும்.. பாலஸ்தீனர்களிடம் இஸ்ரேலுக்கு இருக்கும்.. ஆனால் இவை எவற்றையும் சொல்லி மனிதப்பேரவலத்தை கூண்டோடு குண்டுவீசி ஒண்டுமறிய பாலகர்களுடன் சேர்த்து அப்பாவி மக்களை இன அழிப்பு செய்ததை/செய்வதை யாரும் ஒருபோதும் சமப்படுத்த முடியாது..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அமெரிக்காவுக்கு அதே இயலுமை கிடைத்தும் விளைவு பயங்கரமாகத்தான் இருந்தது.. ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு தேசத்தின் ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் கண்ணை மூடித்திறப்பதற்குள் கூட்டம் கூட்டமாக சுருண்டு விழுந்து இறந்தனர்.. நாசிக்கள் குண்டு போட்டு ஆங்கிலேயர் இறந்தாலென்ன ஆங்கிலேயர் குண்டு போட்டு ஆசியர்கள் இறந்தாலென்ன.. ஒன்றைமட்டும் ஊதிப்பெருப்பித்து இன்னொன்றை சமப்படுத்துவது நமக்கு பிடித்தற்கு முட்டுக்குடுப்பது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அமெரிக்காவுக்கு அதே இயலுமை கிடைத்தும் விளைவு பயங்கரமாகத்தான் இருந்தது.. ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு தேசத்தின் ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் கண்ணை மூடித்திறப்பதற்குள் கூட்டம் கூட்டமாக சுருண்டு விழுந்து இறந்தனர்.. நாசிக்கள் குண்டு போட்டு ஆங்கிலேயர் இறந்தாலென்ன ஆங்கிலேயர் குண்டு போட்டு ஆசியர்கள் இறந்தாலென்ன..நாசிக்கள் யூதர்களுக்கு எதிராக செய்ததைப்போல மன்னிக்க முடியாத மனிதப்படுகொலை அமெரிக்கா செய்தது.. ஒன்றைமட்டும் ஊதிப்பெருப்பித்து இன்னொன்றை சமப்படுத்துவது நமக்கு பிடித்தற்கு முட்டுக்குடுப்பது..

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதைப் பற்றிய என் கருத்தை மட்டுமல்ல, வியற்நாம் மீது செய்த கொடுமையையும் அதற்குரிய இடத்தில் எழுதியிருக்கிறேன். வாசித்திருக்கிறீர்களா? இல்லை, எனவே உங்களுக்குத் தெரியாத தகவல் - அறிவலட்சியம்- நான் முட்டுக் கொடுப்பதாகச் சொல்ல வைக்கிறது. இந்த விடயத்தில் நீங்களும் ஒருவர் வேறு இடங்களில் எழுதியதை அலட்சியத்தோடு கடந்து போய் விட்டு தீர்ப்பெழுதும் ஏனைய சில  உறவுகள் போலவே இருக்கிறீர்கள்.

இங்கே பேசப்படும் விடயம் என்ன?

நாசிகள் குண்டைத் தயாரிப்பார்கள் என்ற அந்த நேர அச்சம் நியாயமானது. அதனால் ஐன்ஸ்ரைன் உட்பட்டோர் அமெரிக்காவை ஊக்குவித்தது நியாயமான செயல்.

ஜப்பான் மக்கள் மீது அணுகுண்டை அமெரிக்கா சும்மா அவர்கள் இருக்கப் போட்டு விடவில்லை. மேலே மறைமுகமாக நான் சுட்டிக் காட்டியிருப்பது போல நாசிகளுக்கு ஈடாக கொரியா, சீனா உட்பட்ட கிழக்காசிய நாடுகளினுள் நுழைந்து ஜப்பானிய இம்பீரியல் படைகள் செய்த கொடுமைகள் இருந்தன.

இதை நிறுத்த  அமெரிக்கா முதலில் படை பலத்தைப் பிரயோகிக்கவில்லை. எண்ணை, ஜப்பான் இராணுவ தளபாடங்கள் செய்யப் பயன்படுத்தும் கழிவு இரும்பு ஏற்றுமதி என்பவற்றை தடை செய்தது. இந்தக் கோபத்தில் தான் ஹவாயின் மீது ஜப்பான் தாக்கி சில ஆயிரம் அமெரிக்க படைகளைக் கொன்றது.

அதன் பின்னரும் உடனே அணுகுண்டு வீசப் படவில்லை. அமெரிக்கா படையெடுத்து இவோஜிமா தீவு வரை பிடித்த பின்னர், சரணடையுமாறு கேட்டார்கள்.

அந்த நேரம் "வாய்பேசா மடந்தையாக" இருந்த ஜப்பானிய பேரரசரை, பேச விடாமல் ஜப்பானிய இம்பீரியல் ஏஜென்சி தடுத்து சரணடைய மறுத்தது. அப்போதும் அணுகுண்டு வீசப் படவில்லை. Fire bombing என்று, ரோக்கியோ மீது ஜேர்மனியில் செய்தது போலவே தொடர் உண்டு வீச்சு நடத்தினார்கள்.

அப்போதும் சரணடையவில்லை.

பின்னர் தான் லிற்றில் போய் வீசப் பட்டது. ஜப்பான் சரணடைந்ததா? அப்போதும் இல்லை.

பின்னர் Fat man வீசப் பட்டது. இதன் பின்னர் பேசாமடந்தையான பேரரசர் ஜப்பானிய வானொலியில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தார்.

நாசிகளோடு சேர்ந்து நின்ற ஜப்பானிய இம்பீரியல் அரசின் மக்களும், நாசிகளின் நாட்டில் வாழ்ந்த ஜேர்மன் மக்கள் போல பெரும் விலையைக் கொடுத்தார்கள் என்பதே இந்த வரலாற்றின் பாடம்.

ஜேர்மனியில், ஹிற்லரைக் கொன்று நாசிகளை அகற்ற சில முயற்சிகளாவது எடுத்தார்கள். "பேரரசர் சூரியக் கடவுள்" என்று நம்பும் ஜப்பானிய மக்களோ பேரரசின் வாயைப் பார்த்தபடி மௌனமாக இருந்தனர்.

இந்தப் பின்னணியெல்லாம் உங்களுக்கு எற்கனவே தெரியுமா? அல்லது புதியதாக இருக்கிறதா?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதைப் பற்றிய என் கருத்தை மட்டுமல்ல, வியற்நாம் மீது செய்த கொடுமையையும் அதற்குரிய இடத்தில் எழுதியிருக்கிறேன். வாசித்திருக்கிறீர்களா? இல்லை, எனவே உங்களுக்குத் தெரியாத தகவல் - அறிவலட்சியம்- நான் முட்டுக் கொடுப்பதாகச் சொல்ல வைக்கிறது. இந்த விடயத்தில் நீங்களும் ஒருவர் வேறு இடங்களில் எழுதியதை அலட்சியத்தோடு கடந்து போய் விட்டு தீர்ப்பெழுதும் ஏனைய சில  உறவுகள் போலவே இருக்கிறீர்கள்.

நீங்கள் எழுதி இருக்கலாம் நான் அதை வாசிக்க தவறவிட்டிருக்கலாம்.. ஆனால் இந்த திரியில் உங்கள் கருத்து அணுவாயுதத்தை அமெரிக்காவுக்கு முன்னம் சோவியத் தயாரித்து இருந்தால் விளைவு பயங்கரமாக இருந்திருக்கும் என்பது.. அதன் மூலம் நீங்கள் சொல்லுவது அமெரிக்கா முந்திக்கொண்டு அணுவாயுதத்தை தயாரித்து கூட்டமாக ஜப்பானிய அப்பாவி மக்களின் உயிரை எடுத்தது ஆனால் அந்த விளைவு அப்படி ஒன்றும் பயங்கரமில்லை என்பது.. 

அமெரிக்காவுக்கு அதே இயலுமை கிடைத்தும் விளைவு பயங்கரமாகத்தான் இருந்தது.. ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு தேசத்தின் ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் கண்ணை மூடித்திறப்பதற்குள் கூட்டம் கூட்டமாக சுருண்டு விழுந்து இறந்தனர்.. நாசிக்கள் குண்டு போட்டு ஆங்கிலேயர் இறந்தாலென்ன ஆங்கிலேயர் குண்டு போட்டு ஆசியர்கள் இறந்தாலென்ன..நாசிக்கள் யூதர்களுக்கு எதிராக செய்ததைப்போல மன்னிக்க முடியாத மனிதப்படுகொலை அமெரிக்கா செய்தது.. ஒன்றைமட்டும் ஊதிப்பெருப்பித்து இன்னொன்றை சமப்படுத்துவது நமக்கு பிடித்தற்கு முட்டுக்குடுப்பது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் எழுதி இருக்கலாம் நான் அதை வாசிக்க தவறவிட்டிருக்கலாம்.. ஆனால் இந்த திரியில் உங்கள் கருத்து அணுவாயுதத்தை அமெரிக்காவுக்கு முன்னம் சோவியத் தயாரித்து இருந்தால் விளைவு பயங்கரமாக இருந்திருக்கும் என்பது.. அதன் மூலம் நீங்கள் சொல்லுவது அமெரிக்கா முந்திக்கொண்டு அணுவாயுதத்தை தயாரித்து கூட்டமாக ஜப்பானிய அப்பாவி மக்களின் உயிரை எடுத்தது ஆனால் அந்த விளைவு அப்படி ஒன்றும் பயங்கரமில்லை என்பது.. 

👆 இதெல்லாம் நான் எழுதியதாக நீங்கள் புரிந்து கொண்டது. இது என் கருத்து அல்ல😂!

இதற்காகத் தான் நான் முன்னர் எழுதியவற்றை வாசித்திருந்தால் இப்படியாக விளங்கியிருக்காது என்றேன்.

யார் தான்  வாசிக்கிறார்கள்? இதனால் தான் எதையும் கட்டுரை வடிவில் பகிராமல் என் வேலை, என் வருமானம் என்று மாறி விட்டேன்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, Justin said:

நாசிகள் குண்டைத் தயாரிப்பார்கள் என்ற அந்த நேர அச்சம் நியாயமானது. அதனால் ஐன்ஸ்ரைன் உட்பட்டோர் அமெரிக்காவை ஊக்குவித்தது நியாயமான செயல்.

ஜப்பான் மக்கள் மீது அணுகுண்டை அமெரிக்கா சும்மா அவர்கள் இருக்கப் போட்டு விடவில்லை. மேலே மறைமுகமாக நான் சுட்டிக் காட்டியிருப்பது போல நாசிகளுக்கு ஈடாக கொரியா, சீனா உட்பட்ட கிழக்காசிய நாடுகளினுள் நுழைந்து ஜப்பானிய இம்பீரியல் படைகள் செய்த கொடுமைகள் இருந்தன.

இதை நிறுத்த  அமெரிக்கா முதலில் படை பலத்தைப் பிரயோகிக்கவில்லை. எண்ணை, ஜப்பான் இராணுவ தளபாடங்கள் செய்யப் பயன்படுத்தும் கழிவு இரும்பு ஏற்றுமதி என்பவற்றை தடை செய்தது. இந்தக் கோபத்தில் தான் ஹவாயின் மீது ஜப்பான் தாக்கி சில ஆயிரம் அமெரிக்க படைகளைக் கொன்றது.

அதன் பின்னரும் உடனே அணுகுண்டு வீசப் படவில்லை. அமெரிக்கா படையெடுத்து இவோஜிமா தீவு வரை பிடித்த பின்னர், சரணடையுமாறு கேட்டார்கள்.

அந்த நேரம் "வாய்பேசா மடந்தையாக" இருந்த ஜப்பானிய பேரரசரை, பேச விடாமல் ஜப்பானிய இம்பீரியல் ஏஜென்சி தடுத்து சரணடைய மறுத்தது. அப்போதும் அணுகுண்டு வீசப் படவில்லை. Fire bombing என்று, ரோக்கியோ மீது ஜேர்மனியில் செய்தது போலவே தொடர் உண்டு வீச்சு நடத்தினார்கள்.

அப்போதும் சரணடையவில்லை.

பின்னர் தான் லிற்றில் போய் வீசப் பட்டது. ஜப்பான் சரணடைந்ததா? அப்போதும் இல்லை.

பின்னர் Fat man வீசப் பட்டது. இதன் பின்னர் பேசாமடந்தையான பேரரசர் ஜப்பானிய வானொலியில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தார்.

நாசிகளோடு சேர்ந்து நின்ற ஜப்பானிய இம்பீரியல் அரசின் மக்களும், நாசிகளின் நாட்டில் வாழ்ந்த ஜேர்மன் மக்கள் போல பெரும் விலையைக் கொடுத்தார்கள் என்பதே இந்த வரலாற்றின் பாடம்.

ஜேர்மனியில், ஹிற்லரைக் கொன்று நாசிகளை அகற்ற சில முயற்சிகளாவது எடுத்தார்கள். "பேரரசர் சூரியக் கடவுள்" என்று நம்பும் ஜப்பானிய மக்களோ பேரரசின் வாயைப் பார்த்தபடி மௌனமாக இருந்தனர்.

பேசாமல் பாலஸ்தீனர்கள் அப்பாவி இஸ்ரேலிய நகரங்களின் மீதோ அல்லது உக்கிரேனியர்கள் அப்பாவி ரஷ்யர்களின் நகரங்களின் மீதோ அல்லது ரஷ்யர்கள் போர் முனையில் இருந்து தொலைவில் இருக்கும் அப்பாவி உக்கிரேனியர்கள் நகரங்களின் மீதோ அணுகுண்டை போட்டுவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்..

ஏனெனில் மேலே அமெரிக்கா அணுகுண்டை வீச ஜப்பானியர்கள் மீது நீங்கள் குறிய காரணங்கள் போல் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் மேலே நான் கூறியவர்களின் பக்கங்களில் இருந்து அவரவர்க்கு இருக்கு..

பேசாமல் யாராவது ஒருவர் முந்திக்கொண்டு மற்றவர்மீது அணுகுண்டை போட்டுவிட்டால் எல்லாம் சுபவம்..

பின்னர் மேலே நீங்கள் யப்பானியர்கள் மீது கூறியது போல் காரணங்களை எழுதலாம்..

5 minutes ago, Justin said:

👆 இதெல்லாம் நான் எழுதியதாக நீங்கள் புரிந்து கொண்டது. இது என் கருத்து அல்ல😂!

இதற்காகத் தான் நான் முன்னர் எழுதியவற்றை வாசித்திருந்தால் இப்படியாக விளங்கியிருக்காது என்றேன்.

யார் தான்  வாசிக்கிறார்கள்? இதனால் தான் எதையும் கட்டுரை வடிவில் பகிராமல் என் வேலை, என் வருமானம் என்று மாறி விட்டேன்!

இது உங்கள் கருத்து இல்லாவிட்டால் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியே.. நான் முன்னுக்கு எல்லாம் வாசிக்கவில்லை.. குறிப்பிட்ட உங்கள் பதிவை வாசித்து விட்டு எழுதியதே அது.. அந்த பதில் அந்த பதிவிற்கு என் மனதில் பட்டதே.. உங்களுக்கானது அல்ல..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

யார் தான்  வாசிக்கிறார்கள்? இதனால் தான் எதையும் கட்டுரை வடிவில் பகிராமல் என் வேலை, என் வருமானம் என்று மாறி விட்டேன்!

நீங்கள் எழுதுபவற்றை நான் வாசிக்கின்றேன். நிச்சயமாக இன்னும் பலரும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், ஜஸ்டின்...........❤️.

எந்தக் கருத்தும், எழுத்தும் ஏற்கனவே எவரின் உள்ளேயும் பதிந்திருக்கும் நம்பிக்கைகளை மாற்றுவதில்லை என்பது கசப்பான உண்மை தான்........ ஆனால் அந்தப் பக்கம் - இந்தப் பக்கம் என்று பக்கம் சாராமல் இருப்போர் பலரும் இங்கே இருக்கின்றனர்........🙏.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

நானும் யஸ்ரினின் ஆழ்ந்த தேடலுடன் தரவுகளுடனும் எழுதும் எழுத்துக்களை விரும்பி வாசிப்பவன்.. கருத்துக்கள் வேறு கருத்தாளர்கள் வேறு என்பது இந்த யாழில் என் கொள்கை.. கருத்தாளரை பிடித்திருக்கலாம் அல்லது பிடிக்காமல் இருக்கலாம்.. அதற்காக அவரின் எல்லா கருத்துக்களும் பிடிக்காமல் போகும் அல்லது பிடிக்கும் என்பதாக இருந்தால் கருத்துக்களம் செத்துவிடும்.. ஆழ்ந்த தேடல் உள்ள யஸ்ரின் போன்றவர்களே உணர்ச்சிவசப்பட்டால் என்னைப்போல அரைபோதை முட்டாள்களின் நிலை..?🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
38 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் எழுதுபவற்றை நான் வாசிக்கின்றேன். நிச்சயமாக இன்னும் பலரும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், ஜஸ்டின்...........❤️.

எந்தக் கருத்தும், எழுத்தும் ஏற்கனவே எவரின் உள்ளேயும் பதிந்திருக்கும் நம்பிக்கைகளை மாற்றுவதில்லை என்பது கசப்பான உண்மை தான்........ ஆனால் அந்தப் பக்கம் - இந்தப் பக்கம் என்று பக்கம் சாராமல் இருப்போர் பலரும் இங்கே இருக்கின்றனர்........🙏.  

28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நானும் யஸ்ரினின் ஆழ்ந்த தேடலுடன் தரவுகளுடனும் எழுதும் எழுத்துக்களை விரும்பி வாசிப்பவன்.. கருத்துக்கள் வேறு கருத்தாளர்கள் வேறு என்பது இந்த யாழில் என் கொள்கை.. கருத்தாளரை பிடித்திருக்கலாம் அல்லது பிடிக்காமல் இருக்கலாம்.. அதற்காக அவரின் எல்லா கருத்துக்களும் பிடிக்காமல் போகும் அல்லது பிடிக்கும் என்பதாக இருந்தால் கருத்துக்களம் செத்துவிடும்.. ஆழ்ந்த தேடல் உள்ள யஸ்ரின் போன்றவர்களே உணர்ச்சிவசப்பட்டால் என்னைப்போல அரைபோதை முட்டாள்களின் நிலை..?🥲

உங்கள் போல ஒரு சிலர் இருக்கிறார்கள், நன்றிக்குரியது தான்.

ஆனாலும் தற்போதைய நிலைமைகள் - யாழ் களத்திலும் சரி, யாழுக்கு வெளியேயும் சரி- cut and dry ஆகத் தகவல்களைத் தருவோரை விட சும்மா அலட்டிக் கொண்டிருப்போரை முன்னிறுத்தும் நிலைமைகள்.

Return of Investment (ROI) என்றொன்று இருக்கிறது. 3- 4 மணி நேரம் செலவு செய்து ஒன்றை உருவாக்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை பேருக்கு அது பயன்படுகிறது? அந்த 3 மணி நேரத்தை ஒரு வேலை விடயத்தில் செலவழித்தால் ROI பதவியுயர்வு, முன்னேற்றம், சம்பள உயர்வு. பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் அவளுக்கு பரீட்சையில் அதிக புள்ளிகள் ROI . காணியை துப்புரவு செய்தால் மனைவியிடம் நல்ல பெயர்😂..இப்படி ROI மிக அதிகம்.

எனவே, ஓணாண்டியார் நினைப்பது போல இது  உணர்ச்சி வசப்பட்டு வந்த ஒதுங்கல் அல்ல, calculated withdrawal!

Edited by Justin
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.