Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி(Robert F. Kennedy) தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்துள்ளார்.

11 வேட்பாளர்கள் 

இந்நிலையில், நேற்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப் கென்னடி முடிவு செய்திருந்தார்.

ராபர்ட் எஃப் கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது,  கென்னடி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய முக்கிய சுயேட்சை வேட்பாளர் | Kennedy Withdrew From The Us Presidential Election

அந்த ஒப்பந்தத்தின் படி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் கென்னடிக்கு பொறுப்பு வழங்க வேண்டும்.

ஏற்கனவே இது குறித்து பேசிய ட்ரம்ப். கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு தனது நிர்வாகத்தின் கீழ் அமையும் அரசாங்கத்தில் பொறுப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.

அதன்படி கென்னடி, தனது கூட்டணியில் உள்ள துணை அதிபருக்கான சுயேட்சை வேட்பாளர் மற்றும் 11 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக  தெரிவித்துள்ளனர் என்று அரிசோனாவின் ஃபாண்டெஸ் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/kennedy-withdrew-from-the-us-presidential-election-1724435571

 

இலங்கை அரசியலைப் பார்த்தோ என்னவோ

அமெரிக்காவிலும் பதவி ஆசையால் ரம்புடன் கை கோர்த்துள்ளார்.

கென்னடி குடும்பத்திற்கென்றே கொங்ச வாக்குகள் உள்ளன.

ரம்பை நம்பி போன பலரை ஏமாற்றியுள்ளார்.

பார்ப்போம் என்ன தான் நடக்கப் போகுதுதென்று.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா குடும்ப கௌரவத்துக்காகவாவது போட்டியில் இருந்திருக்கலாம் . .........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

சும்மா குடும்ப கௌரவத்துக்காகவாவது போட்டியில் இருந்திருக்கலாம் . .........!  😁

8bw6.gif cba38c53dd32b7025ef65ad7cd73eede.gif

போட்டியில் இருந்திருந்தால்.... பெட்டி,  நீங்கள் கொடுப்பீர்களா. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

8bw6.gif cba38c53dd32b7025ef65ad7cd73eede.gif

போட்டியில் இருந்திருந்தால்.... பெட்டி,  நீங்கள் கொடுப்பீர்களா. 😂 🤣

பெட்டி??🤣

FAQ - Isle of Wight Direct Cremation

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Paanch said:

பெட்டி??🤣

FAQ - Isle of Wight Direct Cremation

இந்தப் பெட்டி... பால் தேத்தண்ணி நிறத்தில், நல்ல வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

இந்தப் பெட்டி... பால் தேத்தண்ணி நிறத்தில், நல்ல வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளது.

பால் ஊற்றுவது வழக்கம், எந்தப் பால், எதனுடைய பாலை ஊற்றினார்களோ???🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

8bw6.gif cba38c53dd32b7025ef65ad7cd73eede.gif

போட்டியில் இருந்திருந்தால்.... பெட்டி,  நீங்கள் கொடுப்பீர்களா. 😂 🤣

அதொன்றும் பிரச்சினையில்லை, ஆனால் அவர் விலகுமுன் என்னைக் கலந்தாலோசித்திருக்கலாம் . ........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, suvy said:

அதொன்றும் பிரச்சினையில்லை, ஆனால் அவர் விலகுமுன் என்னைக் கலந்தாலோசித்திருக்கலாம் . ........!  😁

ஆமாம் சுவி! ுஉங்கள் ஆதங்கம் வரவேற்கக் கூடியதே!! ஆனாலும்  ஒரு பெட்டிக்குள் ஒன்றுதான் கொண்டுசெல்வது உலக வழக்கம்.!!!🤔

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விடயத்திலும் இதுதான் நடைபெறும். 

😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

சும்மா குடும்ப கௌரவத்துக்காகவாவது போட்டியில் இருந்திருக்கலாம் . .........!  😁

காலாகாலமாக ஜனநாயகக் கட்சியில் இருந்து சூடு வாங்கி இறந்த ஒரு ஜனாதிபதியின் குடும்பத்தில் இப்படி குறுக்குத்தனமான முடிவுவெடுத்தது இன்னமும் இவர்களுடன் இருக்கும் ஆதரவாளர்களை இழக்கலாம்.

ரம்பைப் பொறுத்தவரை எவ்வளவு திருகுதாளங்கள் செய்து ஆட்சியைக் கைப்பற்ற முடியுமோ எவ்வளவும் செய்வார்.

இவர் ஆலோசனைக்கென்று அமைக்கப்பட்ட குழுக்களின் ஆலோசனையே கேட்கமாட்டார்.

7 hours ago, தமிழ் சிறி said:

8bw6.gif cba38c53dd32b7025ef65ad7cd73eede.gif

போட்டியில் இருந்திருந்தால்.... பெட்டி,  நீங்கள் கொடுப்பீர்களா. 😂 🤣

இவர்களுக்கு பணத்தேவை இருப்பதாகத் தெரியவில்லை.

ஒருவேளை ரம்ப் வென்றால் ஏதாவது பெரிய பதவிகள் கொடுக்கலாம் என்று தான் போட்டியில் இருந்து விலகி ரம்புக்கு ஆதரவு கொடுக்கிறார்.

6 hours ago, Paanch said:

பெட்டி??🤣

FAQ - Isle of Wight Direct Cremation

ஏற்கனவே இவர் குடும்ப உறுப்பினருக்கு பரிசளித்தபடியாலேயே இன்னமும் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு கல்லை வைத்து இதுதான் ஜனநாயக கட்சி என்று சொன்னால், அதற்கும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்போம் அது கமலாக்காவாய் இருந்தாலென்ன யாராக இருந்தாலென்ன 🤣🤣🤣

Edited by theeya

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, theeya said:

நாங்கள் ஒரு கல்லை வைத்து இதுதான் ஜனநாயக கட்சி என்று சொன்னால், அதற்கும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்போம் அது கமலாக்காவாய் இருந்தாலென்ன யாராக இருந்தாலென்ன 🤣🤣🤣

உங்க கூட்டத்தில என்னையும் ஒரு மந்தையாக சேர்த்துக்கோங்க.

உப ஜனாதிபதி உங்க தொகுதி ஆள்த்தானே.

கட்டாயம் ஆதரவு கொடுக்கணும்.

அதற்காக பிரச்சாரமும் பண்ணணும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2024 at 09:11, ஈழப்பிரியன் said:

உங்க கூட்டத்தில என்னையும் ஒரு மந்தையாக சேர்த்துக்கோங்க.

உப ஜனாதிபதி உங்க தொகுதி ஆள்த்தானே.

கட்டாயம் ஆதரவு கொடுக்கணும்.

அதற்காக பிரச்சாரமும் பண்ணணும்.

உண்மைதான்... மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் வந்தாலென்ன வராட்டாலென்ன எங்க அக்கா கமலாக்காவுக்காக நாங்க கை கோர்ப்போம்🙃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.