Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உவக போர் ஏற்படும் என எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உக போர் ஏற்படும் என எச்சரிக்கை.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர்.

கமலா ஹாரிஸ் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறார். மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அவர் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார்.

அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்ப்-க்கு நம்பிக்கை இல்லை. இவர் மீண்டும் ஜனாதிபதியானால் நாடு தாங்காது என்று இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார். அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் “கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம். பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும் “கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார். எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்.

நான் வித்தியாசமான ஒருவர். சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை. படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் ஜனாதிஜபதியானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். மேலும், எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1398873

  • கருத்துக்கள உறவுகள்

"கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேலே இருக்காது" - நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப் கூறியது என்ன?

கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பும் கமலா ஹாரிசும்
11 செப்டெம்பர் 2024, 01:36 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏபிசி ஊடகம் இந்த விவாதத்தை நடத்தியது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஏபிசி ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டது.

நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிக்கப் போகும் மக்கள் மனதில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த விவாதம் உலகம் முழுவதுமே உற்றுநோக்கப்பட்டது.

ரஷ்யா - யுக்ரேன் போரை நிறுத்த டிரம்ப் விருப்பம்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேன் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, "போரை நிறுத்த நான் விரும்புகிறேன்" என்று டிரம்ப் பதிலளித்தார். ரஷ்யப் படையெடுப்பை சமாளிக்க யுக்ரேனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா அதிகம் செலவிடுவதாக குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பா மிகக் குறைந்த அளவே நிதி அளிப்பதாக கூறினார்.

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆகிய இருவரையும் எனக்கு நன்றாக தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

"கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேலே இருக்காது" - டிரம்ப்

காஸாவில் நடைபெற்று வரும் போர் குறித்து கமலா ஹாரிஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போரை எப்படி அவர் கையாள்வார் எனவும், எப்படி முடிவுக்குக் கொண்டு வருவார் எனவும் கேட்கப்பட்டது.

இதுகுறித்து பிரசாரத்தில் தான் முன்பு கூறிய கருத்துகளை மீண்டும் கூறிய ஹாரிஸ், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகவும் தன்னை அந்நாடு எப்படி பாதுகாக்கிறது என்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த போர் முடிவுக்கு வர வேண்டும்,” எனவும் அவர் கூறினார். “உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.” என்று அவர் உறுதிபடக் கூறினார்.

போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஹாரிஸ், காஸாவை மறுகட்டமைக்கவும், இருநாடுகள் தீர்வையும் வலியுறுத்தினார்.

காஸா போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவார் என்றும் ஹமாஸால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட மக்களை எப்படி மீட்பார் என்று டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தான் அதிபராக இருந்திருந்தால், இந்த போரே “தொடங்கியிருக்காது” என அவர் கூறினார்.

அவர் (கமலா ஹாரிஸ்) இஸ்ரேலை வெறுக்கிறார். அவர் அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் இருக்காது என்று கருதுகிறேன்,” என்றார் அவர்.

தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷ்யா - யுக்ரேன் போரும் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார்.

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக தொடர்ந்து கூறிவரும் கமலா ஹாரிஸ், டிரம்பின் கூற்றை மறுத்தார். “டிரம்ப் பிளவுபடுத்த முயல்வதாகவும் உண்மையிலிருந்து திசை திருப்புவதாகவும்” ஹாரிஸ் கூறினார்.

அவர் சர்வாதிகாரிகளை போற்றுபவர் என்பதும் அவர் சர்வாதிகாரியாக விரும்புவதும் நன்றாகவே தெரியும்” என கமலா ஹாரிஸ் கூறினார்.

ராணுவ தலைவர்கள் டிரம்ப் “அவமானகரமானவர்” என கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் - டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வரிவிதிப்பு - கமலா குற்றச்சாட்டும் டிரம்ப் பதிலும்

விவாத மேடைக்கு வந்ததுமே கமலா ஹாரிசும், டிரம்பும் கைகுலுக்கிக் கொண்டனர். பின்னர் விவாதம் தொடங்கியது.

முதல் கேள்வி பொருளாதாரத்தில் இருந்து கேட்கப்பட்டது. அதாவது, அமெரிக்கர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் தற்போது நன்றாக இருப்பதாக கருதுகிறார்களா? என்பது கேள்வி.

முதலில் பதிலளித்த கமலா ஹாரிஸ், வாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புவதாக கூறினார். இளம் தம்பதியரின் குடும்பத்திற்கும், அதிகரித்து வரும் வீட்டு விலை மற்றும் வாடகை பிரச்னையைத் தீர்க்கவும் அவர் உறுதியளித்தார்.

பின்னர் டிரம்ப் மீதான தாக்குதலைத் தொடுத்த கமலா, டிரம்ப் முன்பு அதிபராக இருந்த போது கோடீஸ்வரர்களுக்கும், பெருநிறுவனங்களுக்கும் வரிச் சலுகை அளித்ததைப் போலவே அடுத்தும் தொடர விரும்புவதாக கூறினார். டிரம்ப் அதிபரானால், அமெரிக்கர்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் 'டிரம்ப் விற்பனை வரியை' செலுத்த வேண்டியிருக்கும் என்றார் கமலா ஹாரிஸ் .

கமலாவுக்கு பதிலளித்த டிரம்ப், மற்ற நாடுகளின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப் போவதாக கூறினார். "உலகிற்கு இதற்கு முன்பு நாம் செய்ததற்கு அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது" என்று அவர் கூறினார். சீனாவைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், அந்த நாட்டில் தயாராகும் பொருட்கள் மீது தனது ஆட்சியில் விதிக்கப்பட்ட வரிகளால் தற்போதும் கூட அமெரிக்க அரசு பல பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக கூறினார்.

டிரம்பின் பொருளாதார கொள்கை மீது கமலா ஹாரிஸ் சாடல்

அமெரிக்காவுக்கு நெருக்கடியான கால கட்டமான பொருளாதார பெருமந்தத்திற்குப் பிறகு மிக மோசமான அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் டிரம்ப் ஆட்சியை விட்டுச் செல்லும் போது நிலவியதாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். டிரம்ப் ஏற்படுத்திய பிரச்னைகளை பைடன் அரசே சரி செய்ததாக அவர் கூறினார்.

டிரம்ப் முன்வைக்கும் பொருளாதார கொள்கைகளை கமலா ஹாரிஸ் சாடினார். டிரம்ப் செய்யப் போவதாக வாக்குறுதியளிக்கும் திட்டங்களை நோபல் பரிசு பெற்ற 16 பொருளாதார நிபுணர்கள் விமர்சித்ததை அவர் சுட்டிக்காட்டினார். டிரம்ப் கூறுவதை அமல்படுத்தினால் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.

"மக்களுக்கான திட்டங்கள் ஏதும் டிரம்பிடம் இல்லை. ஏனெனில், மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் தன்னை தற்காத்துக் கொள்வதிலேயே டிரம்ப் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்" என்று கமலா விமர்சித்தார்.

கமலா ஹாரிஸ் - டிரம்ப்

பட மூலாதாரம்,BERND DEBUSMANN JR/BBC NEWS

டிரம்ப் பதில்

"எனது ஆட்சியில் பணவீக்கம் உச்சத்தில் இருந்ததாக கமலா ஹாரிஸ் கூறுவத தவறு" என்று டிரம்ப் கூறினார். பைடன் ஆட்சியில் 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக இருந்ததாக அவர் குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலுமே விலைவாசி உயர்வு பெரும் பிரச்னையாக இருந்தது. அமெரிக்க வரலாற்றில் அதற்கு முன்பு 1981-ம் ஆண்டுதான் பணவீக்கம் 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உச்சம் தொட்ட பணவீக்கம் பின்னர் படிப்படியாக குறைந்து இந்தாண்டு மே மாதத்தில் 3.3 சதவீதத்தை எட்டியது. ஆனாலும், விலைவாசி உயர்வு என்பது கணிசமான வாக்காளர்களின் மனதில் உள்ள பிரச்னைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

கமலா ஹாரிஸ் - டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப்

கருக்கலைப்பு - கமலா, டிரம்ப் கருத்து என்ன?

பின்னர், அமெரிக்காவில் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக பார்க்கப்படும் கருக்கலைப்பு உரிமை பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது. கருக்கலைப்பு உரிமை குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், 9-வது மாதத்தில் கூட கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜனநாயக் கட்சி விரும்புவதாக விமர்சித்தார்.

ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு அதீதமான ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸின் தேர்வான டிம் வால்ஸ் 9-வது மாதத்தில் கூட கருக்கலைப்பு செய்ய ஆதரவாக இருப்பதாக கூறினார்.

கருக்கலைப்பைப் பொருத்தவரை, பாலியல் குற்றங்கள் போன்ற சில விதிவிலக்குகள் தவிர்த்த மற்ற தருணங்களில் மாகாணங்களில் முடிவுக்கே விட்டுவிட உதவியதாக டிரம்ப் தெரிவித்தார். சில மாகாணங்களில் குழந்தை பிறந்த பிறகு கொன்றுவிட அனுமதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ், "அமெரிக்காவின் எந்தவொரு மாகாணத்திலும் பிறந்த குழந்தையை கொல்ல சட்டம் அனுமதிக்கவில்லை" என்றார்.

கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விவாதத்தின் விதிகள் என்ன?

  • 2024ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலை முன்னிட்டு நடக்கும் இரண்டாவது விவாதம் இதுவாகும்.
  • முதல் விவாதம் ஜூன் மாதம் டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிபர் ஜோ பைடனுக்கு இடையே நடைபெற்றது. அதன் பின்னர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக முடிவு செய்தார்.
  • இந்த விவாதத்தில் நேர வரம்புகள் கடுமையாகப் பின்பற்றப்படும். மதிப்பீட்டாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒவ்வொரு வேட்பாளருக்கும் அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதன் பின்னர் எதிர் வேட்பாளரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து விவாதிக்க இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும்.
  • ஒரு வேட்பாளர் பேசும்போது மற்றொரு வேட்பாளர்களின் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்து வைக்கப்படும். மேலும் விவாத அறையில் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள்.
  • கமலா ஹாரிஸ் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்யப்படக் கூடாது என்று விரும்பினார், ஆனால் சமீபத்தில் விவாத விதிகளுக்கு ஒப்புக் கொண்டார்.
  • இந்தக் குறிப்பிட்ட விதி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. டிரம்புக்கும் பைடனுக்கும் இடையிலான முதல் விவாதம் பல்வேறு குறுக்கீடுகள் மற்றும் வாக்குவாதங்களால் நிறைந்திருந்தது. அதைத்தொடர்ந்து இது கொண்டு வரப்பட்டது.
  • இந்த விவாதம் டேவிட் முயர் மற்றும் லின்சி டேவிஸ் ஆகிய இரண்டு மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இருவரும் ஏபிசி ஊடகத்தின் செய்தியாளர்கள்.
  • இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஏபிசி ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப், கமலா இருவரில் யாருக்கு வாகு போடுவீர்கள் என கேட்ட எனது 9 வயது குழந்தையிடம், அது அமெரிக்க் தேர்தல் அதில் நாங்கள் வாக்கு போட இயலாது என கூறினேன்.

உண்மையில் உலகில் உள்ள அனைவருக்கும் அமெரிக்க தேர்தலில் வாக்கு போடும் உரிமை வழங்க வேண்டும்😁,

விரும்பியோ விரும்பாமலோ உலகின் தலைவிதியினை நிர்ணயிக்கும் சக்தியாக அமெரிக்கா உள்ளது, இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் அது போல ஒரு யுத்தம் தோன்றக்கூடாது எனும் நோக்கில் ஐநா போன்ற பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன, சில நேரத்தில் ஒப்புக்கு சப்பாணியாக (?) இந்த் அமைப்பினூடாக அனுமதியினை (திணிப்பினை) பெற்று பிற நாடுகளை ஆக்கிரமித்த அமெர்க்கா தற்போது தன்னிச்சையாக எதுவும் செய்யும் நிலைக்கு வந்துள்லது, ஒரு புறம் இந்த அமைப்புகளை தான் விரும்பும் நாடுகளுக்கெதிராக தீர்மானம் எடுத்தால் அதனை கண்டிக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது, குறிப்பாக இஸ்ரேலின் மனித உரிமை மீறல் விடயத்தில் அமெரிக்காவின் பங்கும் அதில் இஸ்ரேலினை பாதுகாக்க எடுக்கும் முயற்சியினையும் குறிப்பிடலாம்.

தற்போது உலகை ஒரு 3 ஆம் உலகப்போரினை நோக்கி நகர்த்தும் நிலை ஏற்படுவதற்கு காரணமான  ஐ நாவின் கையறு நிலை தோன்றுவதற்கு ஒரு நாட்டின் நலன் சார் நேச நாட்டுக்கொள்கைகள் காரணமாகி விட்டது.

அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தநிலையில் மாற்றம் ஏற்படது, ஆனால் அமெரிக்க ஒற்றை உலக ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக பல் துருவ உலக ஒழுங்கில் ஐநாவின் பங்கு முதன்மை படுத்தப்பட்டால் அதற்கான சூழல் உருவாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, vasee said:

உண்மையில் உலகில் உள்ள அனைவருக்கும் அமெரிக்க தேர்தலில் வாக்கு போடும் உரிமை வழங்க வேண்டும்😁,

🤣.......

இது ட்ரம்பை வெல்ல வைப்பதற்கான வசீயின் திட்டம் போலத் தெரிகின்றது......... உலகத்திற்கு ட்ரம்பை பிடிக்கும். இங்கு உள்ளூரில் இன்னும் சரியாகத் தெரியவில்லை யார் வெல்லப் போகின்றார்கள் என்று. ஆனாலும் இருவரும் சும்மா கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், பூச்சாண்டி காட்டுகின்றார்கள். இந்த இருவரில் எவர் வந்தாலும் உலக நிலையில் இவர்களால் பெரிய மாற்றம் எதுவும் வராது. இவர்கள் இருவரையும் விட, ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் இன்றே உலகம் கொஞ்சம் அமைதியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

இவர்கள் இருவரையும் விட, ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் இன்றே உலகம் கொஞ்சம் அமைதியாகும்.

எப்படி?? 

அதை ஏன் இன்றுவரை செய்யவில்லை?? 

எதிர்காலத்தில் செய்யும் வாய்ப்புகள் உண்டா?? 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

எப்படி?? 

அதை ஏன் இன்றுவரை செய்யவில்லை?? 

எதிர்காலத்தில் செய்யும் வாய்ப்புகள் உண்டா?? 

பொதுவாகவே சண்டை போடுபவர்கள் இருவரும் ஒரு சமாதான நிலைக்கு வந்து விட்டால், அங்கே மூன்றாம் தரப்பிற்கு இடம் இல்லாமல் போய்விடும். புடின் தான் சண்டையை நிறுத்த வேண்டும். 

புடின் ஏன் இதுவரை நிறுத்தவில்லையென்றால், இது இப்போது ஒரு தன்மானப் பிரச்சனை ஆகிவிட்டது அவருக்கு. இரண்டு வாரங்கள், இரண்டு மாதங்கள், இரண்டு வருடங்கள் என்று நீண்டு கொண்டிருக்கின்றது.

புடின் சண்டையை நிற்பாட்ட மாட்டார் என்றே நினைக்கின்றேன். ஒன்றில் அவர் வெல்ல வேண்டும், அல்லது அவர் இல்லாமல் போகவேண்டும். அதுவரை அவர் தொடர்வார்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 hour ago, ரசோதரன் said:

சார்! உலகம் முழுக்க புட்டின் தான் சண்டை போட்டுக்கொண்டு திரியுறாரோ? 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர்.

அதில ஒராள நான் பாக்கவேயில்லை....:cool:

GXKXTYGWMAEZPe-P.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சார்! உலகம் முழுக்க புட்டின் தான் சண்டை போட்டுக்கொண்டு திரியுறாரோ? 😄

🤣..........

அப்படி இல்லை, அண்ணா.  நூறு சண்டைகள் உலகத்தில் இப்ப நடந்து கொண்டிருந்தாலும், இந்த ஒரு சண்டையில் தானே இரு வல்லரசுகள் கிட்டத்தட்ட நேருக்கு நேரே மோதிக் கொண்டிருக்கின்றன.  ஆயுதப் பாவனைகளில் ஒவ்வொரு படியாக இருவரும் மேலே மேலே போய்க் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவின் அதி தூர ஏவுகணைகளை பாவிப்பதற்கு அமெரிக்கா உக்ரேனுக்கு அனுமதி கொடுப்பது அடுத்த கட்டம். அப்படி நடந்தால், அழியப் போகின்றார்கள்.  

மேலும் ரஷ்யாவிடமிருந்தும், உக்ரேனிடமிருந்தும் உலகத்திற்கு தேவையானவை அதிகம் - தானியங்கள், எரிபொருள் உட்பட. இவை உலகச் சந்தையில் கட்டுப்படியாகும் விலைக்கு கிடைக்கா விட்டால், இன்னும் எத்தனை நாடுகளில் 'அரகலிய' ஆரம்பித்து அமைதி கெடுமோ............    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அதில ஒராள நான் பாக்கவேயில்லை....:cool:

GXKXTYGWMAEZPe-P.jpg

ரீவீக்கு…. துவாயை போர்த்து, கமலாவின் முகத்தை மறைத்த ட்ரம்பின் தீவிர ரசிகர். 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

🤣.......

இது ட்ரம்பை வெல்ல வைப்பதற்கான வசீயின் திட்டம் போலத் தெரிகின்றது......... உலகத்திற்கு ட்ரம்பை பிடிக்கும். இங்கு உள்ளூரில் இன்னும் சரியாகத் தெரியவில்லை யார் வெல்லப் போகின்றார்கள் என்று. ஆனாலும் இருவரும் சும்மா கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், பூச்சாண்டி காட்டுகின்றார்கள். இந்த இருவரில் எவர் வந்தாலும் உலக நிலையில் இவர்களால் பெரிய மாற்றம் எதுவும் வராது. இவர்கள் இருவரையும் விட, ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் இன்றே உலகம் கொஞ்சம் அமைதியாகும்.

என்ன கதாசிரியர் நீங்கள், தேர்தல்களால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதனை குறிப்பிடுவதற்காகவே அந்த ஆரம்ப விபரிப்பு.

பாருங்கள் அமெரிக்காவின் தலைவிதியினை; ட்ரம்ப், பைடன் ? ஏன் அமெரிக்காவில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சமா?

நான் இரவு வேலை செய்த ஒரு நாள் , நீண்ட நேர வேலை மற்றும் குடும்பத்தினரை ஏற்றி இறக்கும் வேலை என  அதிக நேரம் போய்விடும் ஒரு 4 மணிநேரம் நித்திரை கொண்டால் சிறந்த நாளாக இருக்கும் அப்படிப்பட்ட நாளில் எனது அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு வந்து நித்திரை கொள்ள ஆரம்பித்தேன், பக்கத்து வீட்டுக்கார முதியவர் அழைப்பு மணியினை அடித்தார், என்னவென்று விசாரிதேன் தனது மனைவி மற்றும் மகளை காணவில்லை என கூறினார், இது வழமைக்கு மாறான விடயம் என்றார் நான் அவரது மகளுக்கு அவரிடமிருந்து  தொலைபேசி இலக்கத்தினை வாங்கி தொடர்பு கொண்டேன் அவர் சொன்னமாதிரி பதீல்லை.

என்ன காவல்துறையிடம் புகார் செய்யப்போகிறீர்கலா என கேட்டே (ஒரு பேச்சுக்கு) அவர் ஓம் என்றார், சரி என காரில் அவரினை ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றேன்.

காவல்துறை அதிகாரி விசாரித்துவிட்டு முதியவரை காட்டி கூறினார் அவருக்கு மாறாட்டம் வந்துள்ளது பார் கையில் வீட்டு தொலைபேசி, ரி வி ரிமோட் என அனைத்தையும் வைத்திருக்கிறார், எனக்கு அப்போதுதான் புரிந்தது.

உலக அமைதி விடயத்தில் எரியிறதை எடுத்தால் புகைவது தானாக நின்றுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸுடன் இனி விவாதத்தில் கலந்து கொள்ளமாட்டேன்; ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸுக்கு எதிரான மற்றொரு ஜனாதிபதி விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, முடிவுகள் வெளியான பிறகு, 2025 முதல் யார் நாட்டின் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரிய வரும். இம்முறை தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே போட்டி நிலவுகிறது.

கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால் இந்தியர்கள் அதிக பலன் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. டொனால்ட் டிரம்புடன் ஒப்பிடும்போது, கமலா ஹாரிஸ் எப்போதும் அனைவரையும் அழைத்துச் செல்லும் குடியேற்றக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.

அமெரிக்காவை பொறுத்தவரை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்தி கொள்வது என்பது வழக்கமானதாக உள்ளது. அதன்படி, கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இடையே நேரடி விவாதம் என்பது கடந்த 10ம் திகதி நடந்தது. இருவருக்கும் இடையேயான முதல் விவாதத்தை ஏபிசி செய்தி நிறுவனம் நடத்தி முடித்துள்ளது.

இரு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளைக் கிடைக்கின்ற மேடையில் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் டிரம்ப்பும், கமலா ஹாரிஸும் சந்திக்கின்ற முதல் நேரடி விவாதம் நேற்று முந்தினம் நடைபெற்றது. இதில், சூடு பறக்க இருவரும் விவாதம் செய்தனர். இந்த விவாதம் தொடங்கும் முன், டிரம்ப் இருந்த இடத்திற்கு நேரடியாகவே சென்று கமலா ஹாரிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இந்த நேரடி விவாதம் 90 நிமிடங்கள் நடந்தது. விவாதத்தின் தொடக்கத்தில், டொனால்டு டிரம்ப் இருந்த இடத்திற்குச் சென்று கமலா ஹாரிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இது அனைவரின் மனம் கவரும் ஒன்றாக அமைந்தது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் போன்ற விஷயங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.

விவாதத்தின் பல இடங்களில் டிரம்பை மீண்டும் தூண்டிவிட்டு சமநிலையை இழக்கச் செய்தார், இதனால் டிரம்ப் பல இடங்களில் தடுமாறிய பேசினார். இந்த விவாதத்தின் முடிவில் பல அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வழக்கம் போல வெளியிட்டன. அதில், பெரும்பாலான பொலிட்டிகோ செய்தி நிறுவனம் , சி.என்.என். செய்தி நிறுவனம், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம், நியூயார்க் டைம்ஸ், பாக்ஸ் நியூஸ், ABC, MSNBC போன்ற பெரும்பாலான செய்தி நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அனல் பறக்கும் இந்த 90 நிமிட விவாதத்தைக் கமலா ஹாரிஸ் நிதானமாக கையாண்டார் எனவும் டிரம்ப் இந்த விவாதத்தில் கோபமாகவே செயல்பட்டார் எனவும் பொதுவான கருத்தாக அனைத்து ஊடகமும் தெரிவித்துள்ளன. மேலும் உடனடியாக கமலா ஹாரிஸ் 2வது விவாதத்துக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு டொனால்ட் டிரம்ப் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்தில் கமலா ஹாரிஷ் தான் வென்றதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.

இத்தகைய சூழலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக இனி கமலா ஹாரிசுடன் விவாதத்தில் 2வது முறையாக பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/309402

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

அட... கமலா,  டிரம்ப்புக்கே... தண்ணி காட்டிப் போட்டார். 😂

பைடன் இருந்திருந்தால்.... இளகின இரும்பை கண்டா மாதிரி... தூக்கி, தூக்கி அடித்திருப்பார்🤣

மோன் கமலா... உரும்பிராய் மண் என்றால்... சும்மாவா😛 😜

  • கருத்துக்கள உறவுகள்

நேரடி விவாதத்தில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் நடந்த நேரடி விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் இவர்கள் இருவரும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் பொருளாதாரம், குடியேற்றம், ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – காசா போர், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த இந்த நேரடி விவாதத்தில் வெற்றி பெற்றது யார்? என்பது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின.

இதில் டிரம்பை, கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிசுக்கு 63 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 37 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கமலா ஹாரிஸ்

இத்தகைய சூழலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாவதாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக இனி கமலா ஹாரிசுடன் 2வது முறையாக விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/309434

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.