Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ticket stub and text

இந்த முடிவுகள் உண்மையோ பொய்யோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் தபால் மூல வாக்களிப்பு ரணில் 600+, சஜித் 500+ அரியம் 200+

 

( உத்தியோகப்பற்றற்றது )

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புலவர் said:

May be an image of ticket stub and text

இந்த முடிவுகள் உண்மையோ பொய்யோ தெரியாது.

தபால் மூல  வாக்களிப்பு என்றால்.... இராணுவ முகாம்களில்   இருக்கின்ற ஆமிக்காரனின் வாக்கும் இதில் அடங்கும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

தபால் மூல  வாக்களிப்பு என்றால்.... அங்கு இருக்கின்ற ஆமிக்காரனின் வாக்கும் இதில் அடங்கும்.

ஆஆஆ

ஆமிக்காரன் அரியத்துக்கும் போட்டிருக்கடா டோய்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ஆஆஆ

ஆமிக்காரன் அரியத்துக்கும் போட்டிருக்கடா டோய்.

சிங்களவனுக்கு விளங்கினது கூட... 
இங்குள்ள  எங்கடை சனத்துக்கு விளங்கேல்லை.  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவனுக்கு விளங்கினது கூட... 
இங்குள்ள  எங்கடை சனத்துக்கு விளங்கேல்லை.  😂

சங்குக்கு விழுந்த தொகையை கேட்டுட்டு போர்த்து மூடிக் கொண்டு படுத்துடுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பது அதிகம்..... ரணில் மாத்தையாவே அவர்களின் விருப்பமாக இருக்கும்...... சம்பளம் கூடுதல்லே.....

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியும் டக்கரின் 50 ஆயிரம்  வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் நரிணிலுக்கு விழும்.

இன்னும் கொஞ்ச முடிவுகள் வந்திருக்கு உத்தியோகப்பற்றற்ற முடிவுகளை தொடர்ந்து போடுவது அழகல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முடிவுகளில் அனுராவே முன்னனியில் இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

குருநாகலில் 40000 தபால் வாக்குகள் அநுரவிற்கு என்று ஒரு செய்தி....அந்த மாவட்டமே அரச ஊழியர்களோ.....🤣.

  • கருத்துக்கள உறவுகள்

459856141_948563830617003_63310741203201

பொறுமையாக இருந்து சரியான முடிவுகளை கீழே இணைக்கப்பட்டுள்ள திரியில் இணைக்கவும்.

உத்தியோகப்பற்ற முடிவுகளை இணைப்பதை தவிருங்கள்.  

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

newswire Xதளத்தில் சில முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். என்னால் இணைக்க முடியவில்லை. அதன்படி அனுரா பெரும் வெற்றி ரணில் படுதோல்வி

https://election.newswire.lk/?fbclid=IwY2xjawFb7kZleHRuA2FlbQIxMAABHRzcXNjyjHz_qBDD_UC6P6wtDTIHQCy3XRoAb9puJlujy3gOCkVz3MgoQw_aem_E_vITFaZr50YTkpjfYmxIw

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

குருநாகலில் 40000 தபால் வாக்குகள் அநுரவிற்கு என்று ஒரு செய்தி....அந்த மாவட்டமே அரச ஊழியர்களோ.....🤣.

கீழுள்ள செய்திக்கும், இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ.
பிடிபட்டது இரண்டு பொதி. பிடிபடாமல், எத்தனை பொதியோ..... 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

பொறுமையாக இருந்து சரியான முடிவுகளை கீழே இணைக்கப்பட்டுள்ள திரியில் இணைக்கவும்.

உத்தியோகப்பற்ற முடிவுகளை இணைப்பதை தவிருங்கள்.  

நன்றி 

👍....

வந்தவை பலதும் வதந்திகளே.... தபால் வாக்குகள் இந்த பெரும் எண்ணிக்கையில் வரப் போவதில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தேர்தல் மாவட்டத்தில் 25,353 வாக்குகள் நிராகரிப்பு

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளாக 3 இலட்சத்து 97 ஆயிரத்து 41வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், 25 ஆயிரத்து 353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 688 செல்லுபடியான வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களான சஜித் பிரேமதாச பிரேமதாச 1 இலட்சத்து 21 ஆயிரத்து 177 வாக்குகளும் , பா.அரியநேந்திரன் 1 இலட்சத்து 16 ஆயிரத்து 688 வாக்குகளும் ரணில் விக்ரமசிங்க 84 ஆயிரத்து 558 வாக்குகளும் அநுரகுமார திஸாநாயக்க 27 ஆயிரத்து 086 வாக்குகளையும் பெற்றனர்.

அதேவேளை, ஏனைய வேட்பாளர்கள் மொத்தமாக 22 ஆயிரத்து 179 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309752

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் செல்லுபடியற்றதாக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் வாக்குகள்!

தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் காரணமாக எந்தவொரு வேட்பாளரும் 50 வீதம் வாக்குகளைப் பெற முடியாது என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

செல்லுபடியற்ற வாக்குகள்

எனினும் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கான சரியான முறை குறித்த தெளிவு உரிய முறையில் வழங்கப்படாத காரணத்தினால் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் செல்லுபடியற்றதாக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் வாக்குகள்! | Record High Candidates Invalid Votes Election 2024

அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வாக்குகள் சுமார் ஒன்றரை லட்சம் அளவில் இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/record-high-candidates-invalid-votes-election-2024-1726990193#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிக்காத 35,20,438 பேர்; 3,00,300 வாக்குகள் நிராகரிப்பு

9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சனிக்கிழமை நடந்த தேர்தலில் 35.20,438 பேர் வாக்களிக்காத அதேவேளை 300.300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தேர்தலில் வாக்களிக்க இம்முறை 1,71,40354 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர்.இவர்களில்  1,36,19916 வாக்காளர்களே வாக்களித்த நிலையில் 35.20,438 வாக்காளர்கள்  வாக்களிக்க வில்லை.

அதுமட்டுமன்றி  வாக்களித்த  1,36,19916 வாக்காளர்களின் வாக்குகளில் 300.300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் 1,33,19616 வாக்குகளே இந்த ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/309808

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு வாக்களிப்பில் நடந்த அதிர்ச்சியும் அதிசயமும்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பட்டியலில் யாழ் மாவட்டம் முதலிடத்தைப்  பிடித்துள்ளதுடன் பிரபல்யமல்லாத. முகவரியற்ற சிங்கள வேட்பாளர்களுக்கு கூட வாக்குகளை அள்ளிக்கொடுத்த மாவட்டமாகவும் பதிவாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 593,187 ஆகும். இவர்களில் 397,041வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் 198,146 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை .இதே வேளை வாக்களித்த   397,041வாக்காளர்களின் வாக்குகளில் 25,353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு 371,688 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக கணிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்கவுக்கு 84,558 வாக்குகளையும்  .சஜித் பிரேமதாசவுக்கு 121,177வாக்குகளையும்   ,அநுரகுமார திசாநாயக்கவுக்கு 27,086 வாக்குகளையும்  ,அரியநேத்திரனுக்கு 116,688 வாக்குகளையும் அளித்துள்ள யாழ் மாவட்ட மக்கள்    ஏனைய 34 வேட்பாளர்களுக்கும்  22179 வாக்குகளை அள்ளிவழங்கியுள்ளனர்

இதில் நாமல் ராஜபக்ஸவுக்கு 800 வாக்குகளையும் சரத்பொன்சேகாவுக்கு 901 வாக்குகளையும் விஜேதாச ராஜபக்சவுக்கு 1019 வாக்குகளையும் மயில்வாகனம் திலகராஜாவுக்கு 226 வாக்குகளையும் விக்டர் பெரேரா என்பவருக்கு 1178 வாக்குகளையும்  ஏனையவர்களுக்கு மிகுதி  வாக்குகளையும் அளித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இதில்   பியதாச என்பவருக்கு 6074 வாக்குகளை அளித்துள்ளமை அதிசயமாகவே பார்க்கப்படுகின்றது ..

இதேவேளை வவுனியா ,முல்லைத்தீவு  .மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் 306,081வாக்காளர்கள் உள்ள நிலையில் 226,650 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர் .79,431 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்த  226,650 வாக்காளர்களின் வாக்குகளில் 9,381 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு 217,269 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக கணிக்கப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/309801

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.