Jump to content

ஜனாதிபதி தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் மாவை செய்த செயல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சம்பந்தப்பட்ட பிரபல்யமான ஒரு நகைச்சுவை உண்டு.

வாக்களித்துவிட்டு வருகின்ற ஒருவரை மறிந்து, ‘நீ யாருக்கு வாக்களித்தாய்’ என்று வடிவேல் கேட்பார்.

'உங்களிடம் வாங்கின காசுக்கு தென்னை மரச்சின்னத்தில் ஒரு குத்து.. அவனிடம் வாங்கின காசுக்கு ஏணி சின்னத்தில ஒரு குத்து..’ என்று அவர் பதிலளிப்பார்.

இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மாவை சேனாதிராஜா வாக்களித்துவிட்டு திரும்பிவருகின்றபோது ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டபோது, கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு பதிலைத்தான் வழங்கி இருகின்றார்.

'தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தின்படி சஜித்துக்கு ஒரு வாக்கையும், சங்குச் சின்னத்துக்கு இரண்டாவது வாக்கையும், ரணில் விக்ரமசிங்கவுக்கு மற்றொரு வாக்கையும் வழங்கியதாக அவர் கூறிய அந்தக் கண்கொள்ளாக் காட்சியை கீழே இணைத்திருக்கின்றோம்.

ரணிக்கு, சஜித்துக்கெல்லாம் வாக்களித்துவிட்டு பழக்கதோசத்தில் ‘தமிழின விடுதலைக்காக ஒன்றிணைவோம்' என்று வேறு கூறித்தொலைத்திருந்தார்.

https://ibctamil.com/article/mavai-voted-for-three-candidates-1726927077

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களை தெரிவுசெய்து வாக்களிப்பதற்கு வாக்களர்களுக்கு அனுமதியுண்டுதானே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vanangaamudi said:

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களை தெரிவுசெய்து வாக்களிப்பதற்கு வாக்களர்களுக்கு அனுமதியுண்டுதானே.

ஓமண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே தன் இனத்தை அழித்துக்கொண்டிருக்கும்/ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இனவாத அரசியல் தலைவர்களை  குத்துவிளக்குடன் பூரண கும்பம் வைத்து வரவேற்று.....மாலையணிவித்து பாவையர் ஆலார்த்தி எடுத்து பிஞ்சு விரல்களால் பொட்டு வைத்து வருக வருக என வீட்டில் விருந்துபசாரம் கொடுத்து....விருந்துபசாரம் பெற்றவர்களாலேயே அழிந்து போகும் இனம் எதுவென்றால்....அது தமிழினமாகத்தானிருக்கும்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.