Jump to content

நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்?

Oruvan

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தேர்வானதைத் தொடந்து நாடாளுமன்ற விரைவில் கலைக்கப்படும்.

விருப்பு வாக்குகளின் இறுதி முடிவுகளின் பின்னர் உரையாற்றிய அனுரகுமார நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என சரியாக கூறாத நிலையில் விரைவில் கலைக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய, நாடு விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லும் என்பது உறுதியாகிறது.

தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரான பிமல் ரத்நாயக்கவும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

தேர்தல் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க தனது முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றி இந்த வாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், தேர்தலுக்கான காலக்கெடு நவம்பர் இறுதியில் இடம்பெறும்.

முன்னாள் தேர்தல் கண்காணிப்பாளர் ரஜித்ன் கீர்த்தி தென்னகோன் கருத்துப்படி, சட்ட கட்டமைப்பின் கீழ் எதிர்பார்க்கப்படும் காலக்கெடு பின்வருவனவற்றை பரிந்துரைக்கிறது:

01. நாடாளுமன்றம் கலைப்பு - செப்டம்பர் 25, 2024

02. நியமனக் காலக்கெடு - 2024 ஒக்டோபர் 04, அறிவிப்பு வெளியான பத்து நாட்களுக்குள், நியமனங்களுக்கு ஏழு நாள் கால அவகாசம் இருக்கும்.

03. தேர்தல் திகதி தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு - 2024 ஒக்டோபர் 07ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது.

04. தேர்தல் நாள் - கலைக்கப்பட்ட 52 முதல் 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையின்படி, நவம்பர் 22 மற்றும் நவம்பர் 30 ஆம் திகதிகளுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம்.

 

https://oruvan.com/sri-lanka/2024/09/23/sri-lanka-parliamentary-election-at-the-end-of-november

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கிருபன் changed the title to நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?
  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல்?

Published By: RAJEEBAN   23 SEP, 2024 | 01:08 PM

image
 

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் வெற்றி உரையின் போது அனுரகுமாரதிசநாயக்க நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோடிட்டுக்காட்டியுள்ள போதிலும் எப்போது தேர்தல் இடம்பெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரதிசநாயக்க தனது முன்னைய அறிவிப்புகளிற்கு ஏற்ப நாடாளுமன்றத்தை இந்த வாரம் கலைத்தால் நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறலாம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் கலைப்பு,தேர்தல் குறித்த அறிவிப்பு 25ம் திகதி வெளியாகலாம் என தேர்தல் கண்காணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுகாலம்,ஒக்டோபர் 4ம் திகதிக்குள் -அறிவிப்பு வெளியாகி பத்து நாட்களிற்குள்- வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏழு நாட்கள்

தேர்தல் திகதி  உத்தியோகபூர்வ அறிவிப்பு -ஒக்டோபர் ஏழாம் திகதிக்குள் வெளியாகலாம்.

தேர்தல் வாக்களிப்பு திகதி -நவம்பர் 22 லிருந்து 30ற்க்குள் - நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 66 நாட்களிற்குள் தேர்தலை நடத்தவேண்டும்.

https://www.virakesari.lk/article/194603

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து வருடத்தை முடிக்கவில்லை என்றால் பென்சன் இல்லையாமே?

நிறைய புதிய முகங்கள் உறுப்பினராகினார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐந்து வருடத்தை முடிக்கவில்லை என்றால் பென்சன் இல்லையாமே?

நிறைய புதிய முகங்கள் உறுப்பினராகினார்கள்.

எல்லோரையும் சொல்ல முடியாது என்றாலும்,
பலருக்கு...  வேறு, பணம் கொழிக்கும் வருமானங்களும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

எல்லோரையும் சொல்ல முடியாது என்றாலும்,
பலருக்கு...  வேறு, பணம் கொழிக்கும் வருமானங்களும் உண்டு.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல் என்பது பல கோடிகளைக் கொட்டி தொடங்கும் வியாபாரம்.

இதில் தோற்வர்களே கிடையாது.

இது இப்போது மேற்கு நாடுகளுக்கும் பரவிவிட்டது.

அமெரிக்க காங்கிரசில் இருப்போர் பலர் முதியோர்கள்.

எத்தனையோ தடவைகள் பதவிக்கு வந்தும் இளையோருக்கு இடம் கொடுக்காமல் வசதி வாய்ப்புகளுக்காக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல் என்பது பல கோடிகளைக் கொட்டி தொடங்கும் வியாபாரம்.

இதில் தோற்வர்களே கிடையாது.

இது இப்போது மேற்கு நாடுகளுக்கும் பரவிவிட்டது.

அமெரிக்க காங்கிரசில் இருப்போர் பலர் முதியோர்கள்.

எத்தனையோ தடவைகள் பதவிக்கு வந்தும் இளையோருக்கு இடம் கொடுக்காமல் வசதி வாய்ப்புகளுக்காக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பைடன் அமெரிக்க தேர்தல் போட்டியிலிருந்து விலகாமல் எவ்வளவு அடம் பிடித்துக் கொண்டிருந்தார். தனக்கு  கடவுள் வந்து சொன்னால் தான்... விலகுவேன் என்று ஒரு போடு போட்டாரே.

நேற்று ரணில்.... ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறும் போது... தளர்ந்த நடையுடன், சோகம் அப்பிய முகத்துடன் வெளியேறிய  காட்சியும்... பதவி சுகத்தை துறப்பது கடினமானது என உணர்த்தியது.

நம்ம... சம்பந்தர் ஐயாவை, சுமந்திரன் ஓய்வெடுக்கச் சொன்ன போது, மக்கள் தெரிவு செய்து வந்த தன்னை... யாரும் அப்புறப் படுத்த முடியாது என்று... கட்டையில் போகும் மட்டும் அதில் ஒட்டிக் கொண்டு இருந்ததையும் கண்டோமே. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது] / இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்      "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கித் தன்னை அலங்கரிக்கிறான் ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும் ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் !"     "நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான் நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !"     "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !"     "மகிழ்ச்சி என்பது மனிதனின் கட்டமைப்பு மலர்ந்து மடியும் ஒரு எண்ணக்கரு மந்தக்காற்றில் பறக்கும் பட்டம் போல் மடிந்து விடும் ஒரு நேரத்தில் !"     "மகிமையான வாழ்வை பெருமையாக அனுபவி மகிழ்வுடன் துன்பமும் கலந்தவன் மனிதன் மந்திரம் தந்திரம் மகிழ்வைத் தரா மழலையின் முகத்தில் உண்மையை அறி !"     "செல்வம் நிலையான நிலை அற்றது செவியில் அதை ஏற்று மனிதா செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் செத்துவிடும் ஒருநாள் நினைவில் கொள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     1] நேரார் - பகைவர் 2] செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் - ஒப்பனை செய்யப்பட்ட சிவிகையும் தேரும் வண்டியும்     
    • அவர்களின் உலுப்பலில்.... யார் முதல் அம்பிடுகின்றார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது. அனுர... மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், பிள்ளையானை ஒரு பிடி பிடித்திருந்தார். கிழக்கில் சில இடங்களில் அவர்கள் ஆயுதத்துடன் நடமாடுவது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.   தான் ஆட்சிக்கு வந்தால்... துணை இராணுவக் குழுக்களிடம் உள்ள ஆயுதம் எல்லாம் உடனடியாக களையப்  படும் என தெரிவித்து இருந்தார்.     அப்ப... டக்ளசும், தனது ஒட்டுக்குழு தோழர்களிடம் உள்ள ஆயுதங்களையும் கொடுக்க வேண்டி வரும். 😂
    • ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் இந்தியா பற்றிய அவரது பேச்சு கவனிக்கத்தக்கதாக இருந்தது. தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையில் அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். இவையெல்லாம் சேர்ந்து, அநுரவை இந்தியாவுக்கு சாதகமற்ற ஜனாதிபதி என்ற தோற்றத்தைஇந்தத் திட்டத்தை முதலில் இரத்துச் செய்ய வேண்'டும். அரசியல் பொருளாதார விடயத்திலும் பார்க்க நீண்ட கால சூழலிலியல் பிரச்சினைகளும் இருக்கின்றன. ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் திட்டத்தை முதலில் இரத்துச் செய்ய வேண்'டும். அரசியல் பொருளாதார விடயத்திலும் பார்க்க நீண்ட கால சூழலிலியல் பிரச்சினைகளும் இருக்கின்றன.
    • இவர் அநுரவின் roommate ஆக பல்கலையில் இருந்தவர் என்கின்றனர். இதையே தான் கோதபாயாவும் செய்தவர்............... நியமனங்கள் நண்பர்கள் என்ற வகையில் மட்டும் இருந்தால், எதிர்பார்க்கப்படும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை............
    • ஜேவிபி தனது முத்திரையை குத்த வேண்டுமென்றால் கொஞ்ச பேரை உலுப்பியே தீரவேண்டும். மக்களையும் மகிழ்விக்கத் தானே வேண்டும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.