Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 SEP, 2024 | 10:33 AM
image

லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக அந்த நாட்டின் முப்படை பிரதானி மேஜர் ஜெனரல்  ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வெளிதாக்குதல்கள்  ஹெஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பினை அழிப்பதை நோக்கமாக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் எல்லையை கடந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வடபகுதியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஒரு இராணுவநடவடிக்கைக்கு தயாராகிவருகின்றோம். இதன் அர்த்தம் என்னவென்றால் உங்களின் இராணுவகாலணிகள் எதிரியின் பகுதிக்குள் நுழையும், என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்காக ஹெஸ்புல்லா அமைப்பு இராணுவ நோக்கங்களிற்காக தயார்படுத்தியுள்ள கிராமங்களிற்குள் உங்கள் இராணுவ காலணிகள் நுழையும் என இஸ்ரேலின் உயர் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194823

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக அந்த நாட்டின் முப்படை பிரதானி மேஜர் ஜெனரல்  ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார்.

இதே போல ரஷ்யா தன்ரை பாதுகாப்பு கருதி உக்ரேன் மீது படையெடுத்தால் குத்துது குடையுது என்பவர்கள்  இஸ்ரேல் என்றவுடன் வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம் என்னவோ?

முள்ளிவாய்க்கால் அழிவுகளுடன் ஒப்பிடவும் ஆட்களில்லை. :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெபனான்: தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் - போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா, பிரான்ஸ்

இஸ்ரேல்-லெபனான் : 21 நாள் போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டேவிட் கிரிட்டன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் ராணுவத் தலைவர் தனது படைகளிடம், ஆயுதக் குழு ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்படும் விரிவான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, “எதிரியின் பகுதிக்குள் நுழைய” அவசியம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

“மேலே ஜெட்டுகள் போவது கேட்கிறதா? நாம் நாள் முழுவதும் தாக்கி வருகிறோம். இது தரைவழித் தாக்குதலுக்கு களத்தைத் தயார் செய்யவும், ஹெஸ்பொலாவை தொடர்ந்து மட்டுப்படுத்தம் உதவும்” என்று ஜெனரல் ஹெர்சி ஹலெவி கூறியுள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஹெஸ்பொலாவின் உளவுத்துறை இயக்குநரகம் தாக்கப்பட்டு, அவர்களின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த மோதல்களை மட்டுப்படுத்துவதற்கான ராஜ்ஜீய முயற்சிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா 21 நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன.

 

அமெரிக்க அதிபரும் ஃபிரான்ஸ் அதிபரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்த மோதல்கள் “பொறுத்துக்கொள்ள முடியாதவை” என்றும் அந்த “பிராந்தியத்தில் நிலைமைகள் தீவிரமடைவதற்கான” ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களின் நலனுக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளனர். இந்த அறிக்கை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், கத்தார் ஆகிய நாடுகள் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

 

தரை வழி தாக்குதலுக்குத் தயாராகிறதா இஸ்ரேல்?

இஸ்ரேல்-லெபனான்

பட மூலாதாரம்,REUTERS

ஒரு இஸ்ரேல் மூத்த அதிகாரி தரைவழித் தாக்குதல் விரைவில் நடத்தப்படலாம் என்று நேரடியாகச் சொல்வது இதுவே முதல் முறை.

“நாங்கள் அவர்களை எல்லா இடங்களிலும் தாக்கிக் கொண்டிருக்கிறோம்” என்று வடக்கு இஸ்ரேலில் ராணுவப் பயிற்சி ஒன்றில் பங்கேற்ற ஏழாவது பிரிகேட்-ஐ (ராணுவக் குழு) சேர்ந்த வீரர்களிடம் புதன்கிழமை கூறியதாக இஸ்ரேல் ராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

“இலக்கு மிகத் தெளிவாக உள்ளது. மக்களைப் பாதுகாப்பாக வடக்கில் குடியமர்த்த வேண்டும். அதைச் சாதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் அர்த்தம் உங்கள் பூட்ஸ் கால்கள் எதிரியின் பகுதிக்குள் நுழையப் போகிறது” என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

ஜெனரல் ஹலெவி தங்கள் படைகள், “எதிரியை அழிக்கும்”, அவர்களின் கட்டமைப்புகளையும் அழிக்கும் என்று பேசியுள்ளார்.

இஸ்ரேல் லெபனானுக்குள் உடனே நுழைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், அது “உடனடியாக” நடைபெறுவதாகத் தெரியவில்லை என்று கூறியிருந்தது.

ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தனது இரண்டு ராணுவக் குழுக்களை “வடக்கில் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை” மேற்கொள்வதற்காக அழைத்திருந்தது. அதன் பிறகே, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அதன் தலைவரது கருத்துகளை வெளியிட்டிருந்தது.

 

போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா, பிரான்ஸ்

இஸ்ரேல்-லெபனான்

பட மூலாதாரம்,REUTERS

புதன்கிழமை பிபிசியின் குழு ஒன்று இஸ்ரேல் எல்லையில் உள்ள ஒரு நகரத்தைப் பார்வையிட்டது. அப்போது, ஹெஸ்பொலா போராளிகள் எல்லையிலிருந்து வெகுதொலைவு பின்னால் தள்ளி, அதாவது 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின்படி, லிதானி ஆற்றுக்கு வடக்கில் இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது.

அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் நட்பு நாடுகள், அந்தப் பிராந்தியத்தில் ஒரு முழு வீச்சிலான போரைத் தடுக்க முயன்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையே சிறிய காலத்துக்குப் போர் நிறுத்தம் ஏற்படுத்த அமெரிக்க மூத்த அதிகாரிகள் முயன்று வருவதாக பல ஊடக செய்திகள் வெளியாகின.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நியூ யார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் சந்தித்தபோது, போர் நிறுத்தத்திற்காக எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து அவருடன் ஆலோசித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளும் “பேச்சுவார்த்தைக்கு இடம் அளிக்கும் வகையில்” 21 நாள் “தற்காலிக போர் நிறுத்தம்” வேண்டும் என்று கோருவதாக பிரான்ஸ் கூறியது.

“லெபனானில் போர் ஏற்படக்கூடாது. இதற்காகத்தான் இஸ்ரேலிடம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வேண்டாம் என்று வற்புறுத்துகிறோம். ஹெஸ்பொலாவிடம் இஸ்ரேலுக்குள் நடத்தும் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்துமாறு வறுபுறுத்துகிறோம்” என்று அதிபர் மாக்ரோன் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் தெரிவித்தார்.

“நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது” என்று கவலை தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று வற்புறுத்தினார்.

 

முழுவீச்சிலான போர் தொடங்குமா?

இஸ்ரேல்-லெபனான் : 21 நாள் போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி “இஸ்ரேல் ராணுவத்தின் மிருகத்தனமான நடவடிக்கைகளால் தங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாக” பேசினார்.

ஐக்கிய நாடுகள் கூட்டம் முடிந்து நாடு திரும்பும்போது, “அனைத்து எல்லைகளிலும் உடனடி போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதில் ஒரு சீரிய முடிவு” எடுக்கப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் டேனி டேனன், நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க எடுக்கப்படும் ராஜ்ஜீய முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். எனினும், “சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு எங்கள் இலக்கை அடைய எங்களுக்கு இருக்கும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்” என்றும் தெரிவித்தார்.

இஸ்ரேல் “முழு வீச்சிலான போரை விரும்பவில்லை” என்றும் அமைதிக்கான தனது விருப்பத்தை ஏற்கெனவே “தெளிவுப்படுத்தி” இருப்பதாகவும் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை நியூயார்க் வருவார் என்று கூறிய தூதுவர், அன்று இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் மறுநாள் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசுவார் என்றும் தெரிவித்தார்.

எல்லை தாண்டிய தாக்குதல்கள் புதன்கிழமை தொடர்ந்தது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தைத் தாக்கியதாக ஹெஸ்பொலா கூறியது. இஸ்ரேலின் மக்கள் அடர்த்தி அதிகமான டெல் அவிவ் நகரத்தின் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.

 
இஸ்ரேல்-லெபனான்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதல்களைத் தவிர்க்க, லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை விடுத்தார்

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் நாடவ் ஷொஷானி, அந்த “ஏவுகணை மக்கள் வசிக்கும் பகுதிகளை” நோக்கி வந்ததாகவும், “மொசாட் தலைமையகம் அந்தப் பகுதியில் இல்லை” என்றும் தெரிவித்தார்.

வடக்கு இஸ்ரேல் நோக்கி பத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் லெபனான் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் 280 “ஹெஸ்பொலா இலக்குகளை” தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, இஸ்ரேல் தாக்குதல்களில் 51 பேர் கொல்லப்பட்டதாகவும் 223 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தது. ஆனால் இதில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் போராளிகள் என்று குறிப்பிடவில்லை.

தெற்கு இஸ்ரேலில் சௌஃப் மலைகளில் உள்ள ஜௌன், அதேபோன்று பெய்ரூட்டில் மற்றொரு மலைப் பாங்கான பகுதியில் உள்ள மேய்ஸ்ரா, பேகா பள்ளத்தாக்கின் வடக்கில் எனப் பல இடங்களில் கொடூரமாக இஸ்ரேலிய தாக்குதல்கள் நடைபெற்றதாக லெபனான் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் - இஸ்ரேல்

Published By: RAJEEBAN   27 SEP, 2024 | 09:47 PM

image

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் மத்தியகட்டளை தலைமையகத்தின் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டை இந்த தாக்குதல் உலுக்கியுள்ளது பாரிய புகைமண்டலத்தை காணமுடிகின்றது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

GYftjU8WMAASmhH.jpg

இந்த தாக்குதல் காரணமாக நான்கு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன பலர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹெஸ்புல்லா அமைப்பின் அல்மனார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வாழும் பகுதிகளிற்குள் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் காணப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பாரிய புகைமண்டலம் எழுவதை தொலைக்காட்சி காண்பித்துள்ளது.

https://www.virakesari.lk/article/194954

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் தொடர்வதாகவும் 75க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதுவரை ஏவப்பட்டதுடன் இது தொடரும் என்றும் தாக்குதல் பற்றிய தகவல்களை தொடர்ந்து தரப்போவதில்லை என்றும் இஸ்ரேல் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்று பிரெஞ்சு செய்தி சொல்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

ஹெஸ்புல்லா பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டானுகள் போலகிடக்கு. செத்தகிளிதான் பாவம்!😂

  • கருத்துக்கள உறவுகள்

461430250_934668012031505_22525104689864

 

461417471_934667492031557_30363918643108

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் சிக்கினாரா? அமெரிக்க படைக்கு பைடன் புதிய உத்தரவு

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படம்
28 நிமிடங்களுக்கு முன்னர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஸ்பொலா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கட்டடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகிவிட்டதாகவும், 91 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் கூறியுள்ளது. கட்டட இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு பெய்ரூட்டில் பொதுமக்கள் வாழும் கட்டடத்திற்கு அடியில் ஆயுதங்களை ஹெஸ்பொலா மறைத்து வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், அந்த கட்டடத்தில் இஸ்ரேல் கூறுவது போல் எந்த ஆயுதங்களும் பதுக்கி வைக்கப்படவில்லை என்று ஹெஸ்பொலா கூறியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் இருந்து கரும்புகை எழும் காட்சிகள் வெளியாயின.

ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறியா?

அதேநேரத்தில், வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். ஹெஸ்பொலா தலைமையகத்தை தாக்கியதாக கூறினாலும், ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பெயரையோ, அவர்தான் தாக்குதலின் இலக்காக இருந்தார் என்றோ அவர் ஏதும் குறிப்பிடவில்லை.

ஆனால், இஸ்ரேல் நடத்திய இந்த தாககுதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,REUTERS

ஹஸன் நஸ்ரல்லா என்ன ஆனார்?

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் இலக்காக இருந்ததாகக் கூறப்படும் ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 
இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு

மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

"மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையைல் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெபனானிற்குள் ஊடுருவி இன்று தரை தாக்குதல் - இஸ்ரேல்

30 SEP, 2024 | 09:24 PM
image
 

இன்று லெபனானிற்குள் ஊடுருவி சிறிய அளவிலான தரை தாக்குதலொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளது.

இன்று இந்த தாக்குதல் ஆரம்பமாகலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/195176

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் - ஹெஸ்பொலா என்ன செய்யப் போகிறது?

இஸ்ரேல் - ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வடக்கு இஸ்ரேலில் கவச வாகனத்துடன் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள்
1 அக்டோபர் 2024, 06:59 GMT
புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் (IDF- ஐடிஎப்) எக்ஸ் தளப் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறோம். தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைப்போம். இந்த இராணுவ நடவடிக்கை வரம்புக்குட்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.”

“இங்கிருந்து தான், வடக்கு இஸ்ரேலின் எல்லையில் வசிக்கும் மக்களை ஹெஸ்பொலா தாக்குகிறது. இந்த ராணுவ நடவடிக்கை, கடந்த சில மாதங்களாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் பகுதியாகும். இஸ்ரேலிய விமானப்படையுடன் இணைந்து இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.” என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வடக்கு இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் ரோந்து செல்லும் ஐடிஎப் வீரர்கள்

‘வான், கடல் மற்றும் நிலம் வழியாக தாக்குதல்’

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யெஹோவ் கேலன்ட், செப்டம்பர் 30 அன்று லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேலிய வீரர்களை சந்தித்தார்.

அப்போது, ”இஸ்ரேலின் முழு பலத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம். இந்த போராட்டத்தில் நீங்களும் ஒரு அங்கம். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கேலன்ட் கூறினார்.

"செய்ய வேண்டியவை அனைத்தும் செய்யப்படும். வான், கடல் மற்றும் நிலம் வழியாக மூலம் நமது முழு பலத்தையும் நாம் பயன்படுத்துவோம்.” என்றும் அவர் கூறினார்.

பிபிசியின் சர்வதேச விவகாரங்களுக்கான நிருபர் பால் ஆடம்ஸின் கூற்றுப்படி, ‘தங்களால் தரை வழியாக தாக்குதல் நடத்த முடியும் என்பதை ஹெஸ்பொலா உணர வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது. இதற்கான அறிகுறிகள் பல நாட்களாக கொடுக்கப்பட்டு வருகின்றன.”

ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசிம், "இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள ஹெஸ்பொலா தயாராக உள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடர்வோம்.'' என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தனது உரையின் முடிவில் காசிம் 'பொறுமையைக் கடைபிடிப்பது’ குறித்தும் அவர் பேசினார்.

 
இஸ்ரேல் - ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசிம்

நஸ்ரல்லாவின் இடத்தை நிரப்பப் போவது யார்?

ஹசன் நஸ்ரல்லாவின் கொலைக்குப் பின்னர், ஹெஸ்பொலாவின் மூத்த தலைவரின் முதல் அறிக்கை செப்டம்பர் 30-ஆம் தேதியன்று வந்தது.

ஹசன் நஸ்ரல்லாவின் இடத்தை அடுத்து யார் நிரப்புவார்? என்பது குறித்து, விரைவில் தீர்மானிக்கப்படும் என ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசிம் தெரிவித்தார்.

"போர் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். நமக்கான வழிகள் திறந்துள்ளன. தரைவழி தாக்குதலுக்கு எதிராக நாங்கள் தயாராக உள்ளோம், வெற்றி நமதே. லெபனான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி.” என்று காசிம் கூறினார்.

பெய்ரூட்டில் உள்ள பிபிசி பாரசீக சேவையின் மத்திய கிழக்கு நிருபர் நஃபிசா கோனாவர்ட் கூற்றுப்படி, “பெரும் பின்னடைவுகளை எதிர்கொண்டாலும், ஹெஸ்பொலா இன்னும் களத்தில் நிற்கிறது, இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது என்ற செய்தியை அவர் உலகிற்கு சொல்ல விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.”

‘இந்த போரில் யார் கொல்லப்பட்டாலும், அவரின் இடம் நிரப்பப்பட்டு, இயக்கம் வலுவாக இருக்கும்’ என்பதை ஹெஸ்பொலா தனது ஆதரவாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது.

எவ்வாறாயினும், ஹெஸ்பொலாவின் சில ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு ஏமாற்றம் நிலவுகிறது. பெய்ரூட்டில் உள்ள ஒருவர் ஹசன் நஸ்ரல்லாவின் புகைப்படத்தைக் காட்டி, "இப்போது சொல்ல ஒன்றும் இல்லை. என்ன சொல்வது? எங்கள் தலைவர் போய்விட்டார். நாங்கள் அநாதைகளாகி விட்டோம்.” என்று கூறுகிறார்.

இருப்பினும், ஹசன் நஸ்ரல்லா உயிருடன் இருக்கிறார் என்று சிலர் நம்புகிறார்கள். 55 வயது பெண்ணான ஜிஹான், “இவை போர் தந்திரங்கள், ஹசன் இன்னும் உயிருடன் இருக்கிறார்.” என்று கூறுகிறார்.

 
இஸ்ரேல் - ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காஸாவில் கான் யூனிஸ் அகதிகள் முகாமில் தண்ணீர் தேடிச் செல்லும் ஒரு பெண் குழந்தை (மே 2024)

இஸ்ரேல் ஹெஸ்பொலாவை தாக்குவது ஏன்?

கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

இதைத் தொடர்ந்து, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியது. இஸ்ரேலின் நடவடிக்கையில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஏராளமான குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்.

பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் நிலைகளின் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் ஆங்காங்கே சண்டைகள் நடைபெற்று வந்தன.

இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல்கள் மற்றும் பீரங்கிகள் மூலமாக லெபனானில் உள்ள ஹெஸ்பொலா நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. அதேநேரத்தில், இதுவரை வடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளை நோக்கி 8,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹெஸ்பொலா ஏவியுள்ளது. பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் இஸ்ரேல் படைக்கு எதிராக அந்த அமைப்பு பயன்படுத்தியுள்ளது.

லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இதனால் லெபனான் எல்லைக்கு அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனது குடிமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குத் திரும்புவதற்காக ஹெஸ்பொலாவை குறிவைப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

அதேசமயம் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என்று ஹெஸ்பொலா கூறுகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

10 ஆயிரம் இஸ்ரேல் விசேட இராணுவத்தினர் பாதுகாப்பு அற்ற மலைப்பகுதியில் இறங்கி உள்ளனர். பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

10 ஆயிரம் இஸ்ரேல் விசேட இராணுவத்தினர் பாதுகாப்பு அற்ற மலைப்பகுதியில் இறங்கி உள்ளனர். பார்க்கலாம்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
அன்னிய நாட்டை ஆக்கிரமித்தல்.ஆக்கிரமிப்பு.
பொதுமக்கள் அழிவு.
நாட்டு சுதந்திரங்கள்.

இதெல்லாம் உங்கள் லிஸ்ரில் இருக்கா இல்லையா விசுகர் :cool:
 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
அன்னிய நாட்டை ஆக்கிரமித்தல்.ஆக்கிரமிப்பு.
பொதுமக்கள் அழிவு.
நாட்டு சுதந்திரங்கள்.

இதெல்லாம் உங்கள் லிஸ்ரில் இருக்கா இல்லையா விசுகர் :cool:
 

"ஹெஸ்பொலா இலக்குகளை” தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

லெபனான் இறையாண்மை கொண்ட நாடாக இருந்தால் யார் இந்த ஹெஸ்பொலா?? இவர்கள் ஏன் இஸ்ரேலை தாக்க வேண்டும்?? அவர்களை ஏன் லெபனான் தனது நாட்டில் அடுத்த நாடுகளுக்கு ஆபத்தான ஆயுதங்களுடன் அனுமதிக்கவேண்டும்?? லெபனான் யாருடைய கட்டுபாட்டில் உள்ளது?? இவற்றிற்கு பதில் இருக்கிறதா உங்களிடம்??? இருந்தால் லெபனான் இறையாண்மை சார்ந்து பேச முடியும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர் பலி

02 OCT, 2024 | 08:33 PM
image

லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் இதனை அறிவித்துள்ளது. மேலும் எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை லெபனானில் இஸ்ரேலிய படையினருக்கு இழப்புகளை ஏற்படுத்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.

யரூன் என்ற லெபனான் கிராமத்தை சுற்றிவளைக்க முற்பட்ட இஸ்ரேலிய படையினருடன் மோதல் இடம்பெற்றதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

வெடிபொருள் ஒன்றை வெடிக்க வைத்து இஸ்ரேலிய படையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று மூன்று தடவை இஸ்ரேலிய படையினருடன்  நேரடி மோதலில் ஈடுபட்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195350

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/10/2024 at 07:45, விசுகு said:

"ஹெஸ்பொலா இலக்குகளை” தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

சிங்கள இராணுவமும் ஆகாய படையும் தமிழர் பகுதிகளில்  ஏதுமறியாத அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தி சாகடித்து விட்டு விடுதலைப்புலிகளை சாகடித்து விட்டோம் என கணக்கு காட்டியதெல்லாம் நினைவில் வந்து தொலைக்கின்றது.

On 2/10/2024 at 07:45, விசுகு said:

லெபனான் இறையாண்மை கொண்ட நாடாக இருந்தால் யார் இந்த ஹெஸ்பொலா?? இவர்கள் ஏன் இஸ்ரேலை தாக்க வேண்டும்?? அவர்களை ஏன் லெபனான் தனது நாட்டில் அடுத்த நாடுகளுக்கு ஆபத்தான ஆயுதங்களுடன் அனுமதிக்கவேண்டும்?? லெபனான் யாருடைய கட்டுபாட்டில் உள்ளது?? இவற்றிற்கு பதில் இருக்கிறதா உங்களிடம்??? இருந்தால் லெபனான் இறையாண்மை சார்ந்து பேச முடியும்.

இறையாண்மையுள்ள இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளில் தமிழீழ விடுதலைக்காக போராடியவர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் தங்குமிட வசதிகளும் செய்து கொடுத்தது எந்தக்கணக்கில் வரும்?
இன்றும் தமிழ்நாட்டு உறவுகள் தமிழீழ விடுதலைக்காக உதவ காத்திருக்கின்றார்கள் என்பது யதார்த்த உண்மை.

கருத்து வெற்றிக்காக உனக்கொரு நீதி எனக்கொரு நீதி வேண்டாம் விசுகர். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

சிங்கள இராணுவமும் ஆகாய படையும் தமிழர் பகுதிகளில்  ஏதுமறியாத அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தி சாகடித்து விட்டு விடுதலைப்புலிகளை சாகடித்து விட்டோம் என கணக்கு காட்டியதெல்லாம் நினைவில் வந்து தொலைக்கின்றது.

இறையாண்மையுள்ள இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளில் தமிழீழ விடுதலைக்காக போராடியவர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் தங்குமிட வசதிகளும் செய்து கொடுத்தது எந்தக்கணக்கில் வரும்?
இன்றும் தமிழ்நாட்டு உறவுகள் தமிழீழ விடுதலைக்காக உதவ காத்திருக்கின்றார்கள் என்பது யதார்த்த உண்மை.

கருத்து வெற்றிக்காக உனக்கொரு நீதி எனக்கொரு நீதி வேண்டாம் விசுகர். :cool:

ஹெஸ்பொலா பற்றி சொல்லுங்கள் அண்ணா. எந்த நாட்டின் விடுதலைப்படை?? புலிகளையும் பாலஸ்தீன விடுதலை இராணுவத்தையும் நீங்கள் ஹெஸ்பொலாவுடன் ஒப்பிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிங்கள இராணுவமும் ஆகாய படையும் தமிழர் பகுதிகளில்  ஏதுமறியாத அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தி சாகடித்து விட்டு விடுதலைப்புலிகளை சாகடித்து விட்டோம் என கணக்கு காட்டியதெல்லாம் நினைவில் வந்து தொலைக்கின்றது.

இறையாண்மையுள்ள இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளில் தமிழீழ விடுதலைக்காக போராடியவர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் தங்குமிட வசதிகளும் செய்து கொடுத்தது எந்தக்கணக்கில் வரும்?
இன்றும் தமிழ்நாட்டு உறவுகள் தமிழீழ விடுதலைக்காக உதவ காத்திருக்கின்றார்கள் என்பது யதார்த்த உண்மை.

கருத்து வெற்றிக்காக உனக்கொரு நீதி எனக்கொரு நீதி வேண்டாம் விசுகர். :cool:

முற்றிலும் உண்மை தாத்தா நான் 1995 ஊரில் இருந்த‌ போது நவாலி தேவாலயத்தின் மீது முர‌ட்டு த‌ன‌மாய் ப‌ல‌ குண்டுக‌ளை வீசின‌வ‌ங்க‌ள்...............அதில் அதிக‌ம் இற‌ந்த‌து ப‌ள்ளி சிறுவ‌ர் சிறுமிக‌ள் ம‌ற்றும் முதியோர்

 

அந்த‌ தாக்குத‌ல நேரில் பார்த்த‌ இளைஞ‌ன் தான் 2007 எல்லாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையின் போது 21 க‌ரும்புலிக‌ளில் அந்த‌ இளைஞ‌னும் ஒருவ‌ர்🙏.......................... 

ந‌வாலி தேவால‌ய‌ தாக்குத‌ல‌ நேரில் பார்த்த‌ இளைஞ‌ன் இவ‌ர் தான்..................பின்னைய‌ கால‌ங்க‌ளில் போராட்ட‌த்தில் இணைந்து.................2007ம் ஆண்டு எல்லாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையின் போது வீர‌ச்சாவு

 

வீர‌ வ‌ண‌க்க‌ம்🙏😥........................

Screenshot-20241003-142030-Chrome.jpg

 

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, விசுகு said:

ஹெஸ்பொலா பற்றி சொல்லுங்கள் அண்ணா. 👈

எந்த நாட்டின் விடுதலைப்படை?? புலிகளையும் பாலஸ்தீன விடுதலை இராணுவத்தையும் நீங்கள் ஹெஸ்பொலாவுடன் ஒப்பிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

விசுகர்! உங்களுக்கு நல்லவடிவாய் தெரியும் எனக்கு உலக நடப்புகள் தெரியாதெண்டு.
ஹிஸ்புல்லா பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ தெரிஞ்சு கொள்ளவம்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்மேற்கு லெபனான் மீது தரைதாக்குதல் - இஸ்ரேல்

08 OCT, 2024 | 03:24 PM
image

தென்மேற்கு லெபனானில் தரைதாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பகுதிக்கு மேலும் படையினரை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை முன்னெடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 30 திகதி தென்லெபனான் மீது தரைதாக்குதலை ஆரம்பித்திருந்த இஸ்ரேல் கிழக்கு பகுதியிலேயே கவனம் செலுத்தி வந்தது.

இதேவேளை லெபனானிலிருந்து 25 ரொக்கட்கள் இன்று ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சில ரொக்கட்கள் இடைமறிக்கப்பட்டன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேல் மீது  ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195776

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் நகர மேயர் பலி

image

இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் லெபனான் மேயர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனானின் நபாதிஹ் என்ற நகரத்தின் மேயரே கொல்லப்பட்டுள்ளார்.

மாநகரசபை கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/196461

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.