Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

spacer.png

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார்.

பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார்.

மனைவியின் பெயர் மல்லிகா ரத்ணசேகர. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார்.

இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வி கந்தளாயில் உள்ள அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) கற்றார்.

அத்துடன் ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

1988 இல் வேதியியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

1996 ஆகஸ்ட் மாதம்  இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக சேர்ந்து 2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். மற்றும் 1999 முதல் 2005 வரை பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உபவேந்தராகவும் பணியாற்றினார்

2017 ஜனவரியில் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் உள்ளன. ரத்னசேகர பல பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில் ஒரு பயிற்சியாளராகவும் வளவாளராகவும் இருந்துள்ளார்.

அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என நன்கு அறியப்பட்டவர்.

குறித்த நிகழ்வில், மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க , ஆளுநர் செயலக செயலாளர்  எல்.பி மதநாயக்க ,மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும்  ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

 

https://thinakkural.lk/article/309965

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிங்களத் தேசியவாதத்தின் முகம் எப்போதும் ஒன்றுதான். கட்சிகள், காட்சிகள், புதிய சொல்லாடல்கள் மட்டுமே தமிழினத்துகானது.  இனவாதமற்ற புதிய சிந்தனையுடைய தலைமையெனப் புளங்காகிதமடைந்து நிற்கும் தமிழருக்காகவாவது கிழக்கிற்கு ஏன் ஒரு தமிழரை ஆளுணராகத் தெரிவு செய்யமுடியவில்லை. சிங்களத்தின்  இதுதான்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரம் ஆலய வழிபாட்டில் பங்கேற்றார் கிழக்கு ஆளுநர் 

27 SEP, 2024 | 05:11 PM
image
 

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள  திருக்கோணேஸ்வரம் ஆலய வழிபாட்டில் நேற்று வியாழக்கிழமை (26) ஈடுபட்டார்.

20240927_104520.jpg

20240927_100457.jpg

20240927_100510.jpg

20240927_100531.jpg

https://www.virakesari.lk/article/194934

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nochchi said:

சிங்களத் தேசியவாதத்தின் முகம் எப்போதும் ஒன்றுதான். கட்சிகள், காட்சிகள், புதிய சொல்லாடல்கள் மட்டுமே தமிழினத்துகானது.  இனவாதமற்ற புதிய சிந்தனையுடைய தலைமையெனப் புளங்காகிதமடைந்து நிற்கும் தமிழருக்காகவாவது கிழக்கிற்கு ஏன் ஒரு தமிழரை ஆளுணராகத் தெரிவு செய்யமுடியவில்லை. சிங்களத்தின்  இதுதான்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

இந்தியாவுக்கு விழுந்த பலத்த அடி....


சிறிலங்கன் எண்டு பாருங்கோ தமிழ் சிங்களவன் ,முஸ்லிம் என பிரித்து பார்க்க வேண்டாம்😅 ......முக்கியமாக தமிழர்கள் ......பிரிவினையை வளர்காதையுங்கோ.......சிங்களவர்களும் முஸ்லீம்களும் அதை செய்ய் சகல உரிமையும் உண்டு  தமிழர்கள் நீங்கள் சிறிலங்கனாக வாழுங்கோ😅

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... சில சமயம் நம் சரிவர சிந்திக்க மறந்து விடுகிறோம். தமிழராக ஒரு ஆளுநர் வைந்தாலும் சிங்கள ஆளுநர்  செய்வதையே அல்லது அதற்கு மேலேயும் செய்வார், ஆட்டுவிப்பது சிங்கள எஜமானர், அதற்கு அவருக்கு பதவி, சம்பளம். வடக்கில் இருந்த தமிழ் ஆளுநர்கள் எப்படி செயற்பட்டார்கள், செந்தில் தொண்டமான் பதவி வகித்த லட்ஷணம் தெரியுது. இவர் நல்லது செய்வார் என எதிர்பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்திகள்
தமிழ் சிங்களம் பேசுகின்ற படித்த கிழக்கு மாகாண ஆளுநர்
அனுரா அரசாங்க ஆட்சியில் யாழ்ப்பாணம் சிங்கபூர் மாதிரி மாறுமா
வியக்க வைக்கும் புதிய மாற்றங்களுடன் யாழ் நகரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.