Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி

FILE-Commanders of the security forces stand behind as Sri Lanka's new president Anura Kumara Dissanayake, addresses a gathering after he was sworn in at the Sri Lankan President's Office in Colombo, Sri Lanka, Monday, Sept.23, 2024. (Sri Lankan President's Office via AP, File)

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த சிங்கள இனவாத, இடதுசாரிகளின் கட்சியின் வேட்பாளர் திசாநாயக்க முதியான்சலாகே அநுர குமார திசாநாயக எனும் இனவாதியை சிங்களவர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களில் பெரும்பான்மையினர், குறிப்பாக இளைஞர்கள் போற்றிப் புகழ்வதும், இவரது ஆட்சியின் கீழ் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடப்போகின்றன என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் அணிவகுத்துச் செல்வதும் நடக்கிறது.

இத்தேர்தலில் வன்னியில் 16,000 வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 27,000 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதையடுத்து இனிவரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்த இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் அநுரவைக் கதாநாயகன் எனும் நிலைக்கு உயர்த்திவைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள் பாராளுமன்றத் தேர்தலில் இவரது கட்சிக்கு தாமே முன்னின்று வாக்குச் சேகரிக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

ஆனால், இவர்கள் எல்லோரும் எளிதாக மறந்துவிட்ட இன்னொரு பக்கம் ஒன்று இக்கட்சிக்கும் இன்றிருக்கும் அதன் தலைவருக்கும் இருக்கின்றதென்பதை இவ்விளைஞர்களுக்கு உணர்த்துவது காலத்தின் கட்டாயம். நன்கு கட்டமைக்கப்பட்ட சிங்கள இனவாதமும், தமிழரின் இருப்பிற்கெதிரான இக்கட்சியின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும், தமிழரின் சரித்திரத்தை மாற்றியமைப்பதில் இக்கட்சி செயற்பட்டு வரும் விதமும் இதுவரை இலங்கையை ஆண்ட ஏனைய பெளத்த சிங்களக் கட்சிகள் எவற்றிற்கும் இக்கட்சி சளைத்தது இல்லை என்பதையே காட்டுகிறது..

ஆகவே இக்கட்சி பாராளுமன்றத்திற்கு தனது ஆட்களை அனுப்பிய காலத்திலிருந்து அக்கட்சியினால் தமிழருக்கெதிராக செய்யப்பட்ட சில நடவடிக்கைகளை நான் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். தமிழ்நெட் இணையத்தளம் மற்றும் சங்கம் இணையத்தளம் ஆகியவற்றிலிருந்தே நான் இத்தகவல்களை பெற்றுக்கொண்டேன் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறேன்.

தமிழர்களுக்கு வழங்கப்போகும் தீர்விற்கெதிராக வடக்குக் கிழக்கில் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்யப்போகும் மக்கள் விடுதலை முன்னணி ‍- 1997

Somawansa Amarasinghe - Some Recollections from Our Political Journeys -  Groundviews

சந்திரிக்காவின் மக்கள் கூட்டணியினால் தமிழர்களுக்கு வழங்கப்படவிருப்பதாக் கூறப்படும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை எதிர்த்து தமிழர்கள் வாழும் வடக்குக் கிழக்கின் முக்கிய நகரங்களில் பிரச்சாரம் செய்யப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கிறார்.

சிங்கள கிராமப் புறங்களில் தலைவிரித்தாடும் வறுமை மற்றும் போரில் ஏற்பட்டுவரும் பின்னடைவுகளால் அவர்கள் அடைந்துவரும் ஏமாற்றம் ஆகியவற்றை பிரச்சாரப் பொருளாக்கி இக்கட்சி அண்மைய தேர்தல்களில் குறிப்பிடத் தக்களவு வெற்றியினைப் பெற்று வருகிறது.

தமிழர்களுக்கு பிராந்திய சுயாட்சியை வழங்க சந்திரிக்கா தயாராகி வருவதாகக் கூறி சிங்கள மக்களிடையே இனவாதம் கக்கும் பிரச்சாரத்தை கடந்த வாரம் சிங்களவர்களின் மதக் கலாசார தலைநகர் என்று போற்றப்படும் அநுராதபுரத்தில் இருந்து இக்கட்சி ஆரம்பித்து வைத்தது. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வினை எக்காரணம் கொண்டும் வழங்கிவிடக் கூடாது எனும் கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விதைத்து, தமிழருக்கெதிரான சிங்களவரின் இனவுணர்வைத் தூண்டிவரும் இக்கட்சி, சந்திரிக்காவின் அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக தமிழரின் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிப் பிராந்தியத்தின் பொலீஸ் மா அதிபராக பிரபாகரன் நியமிக்கப்படப்போகிறார் என்றும் கூறிவருகிறது.

தனது கட்சியில் இனவாதம் இல்லையென்று கூறிவரும் இக்கட்சி, தமிழர்களுக்கென்று தனியான இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென்றும் இருப்பது சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மட்டும்தான் என்றும் கூறிவருகிறது.

மேலும் தென்னாசியாவை துண்டாட அமெரிக்க உளவு நிறுவனமான சி போட்ட‌ திட்டம்தான் தமிழர்கள் கோரிவரும் ஈழம் எனும் தனிநாடு என்றும் அது கூறுகிறது. ஸ்டாலினினது மார்க்ஸியச் சிந்தனைகளைப் பின்பற்றும் இக்கட்சி, தமிழர்களிடையே காணப்படும் சாதிய வேற்றுமைகளே அவர்களுக்கான ஒரே பிரச்சினை என்றும், அவர்களுக்கென்று இனரீதியிலான பிரச்சினைகள் கிடையாது என்றும் கூறி வருகிறது.

"எமது நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஆசீருடனே ஜே வி பி போன்ற இனவாதிகள் எமது பிரதேசங்களுக்கு வந்து எமக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று வெளிப்படையாகக் கூறமுடிகிறது, புரட்சிகர மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று தம்மை அழைக்கும் இவர்கள் எல்லோரும் சந்தர்ப்பவாத சிங்கள இனவாதிகள் தான்" என்று திருகோணமலையில் வசிக்கும் இடதுசாரித் தமிழர் ஒருவர் தெரிவித்தார்.

 

 

  • Replies 237
  • Views 13.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரிவினைவாதிகளுக்கு  கொடுக்கப்படும் தானமே சந்திரிக்காவின் தீர்வுப்பொதி ‍ மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிகால் கலப்பதி - ‍ ஐப்பசி 1997

galapaththi.jpg

தமிழ்க் கட்சிகளில் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் தனது தீர்வுப்பொதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சந்திரிக்கா அரசின் அரசியலமைப்பு அமைச்சர் ஜி எல் பீரிஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த தீர்வு வரைபே அரசின் இறுதியான வரைபாகும் என்பதுடன் ஏனைய கட்சிகளின் கருத்துக்கள் இந்த வரைபில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அரசு கூறுகிறது. 


இத்தீர்விற்கான தனது எதிர்ப்பினை தனது சொந்த பரிந்துரைகள் ஊடாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸும் இணைந்து கிழக்கில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்புத் தொடர்பான தமது நிலைப்பாட்டினை தமது பரிந்துரையாக முன்வைத்திருக்கின்றன. ஈ பி டி பி கட்சி இத்தீர்வுப்பொதி தொடர்பான தனது பரிந்துரைகளை 19 பக்கங்கள் அடங்கிய ஆவனமாக அரசிடம் சமர்ப்பித்திருப்பதுடன் அவை தீர்வுப்பொதியில் சேர்க்கபடுமுன்னர் தீர்வுப்பொதி வெளியிடப்படலாகாது என்றும் கோரியிருக்கிறது.
புளொட், டெலோ ஈரோஸ் மற்றும் ஈ பி ஆர் எல் எப் அமைப்புக்கள் தமது பரிந்துரைகளை அரசு கவனத்தில் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கின்றன. 

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரொ நிஹால் கலப்பதி, சந்திரிக்காவினால் வழங்கப்படும் தீர்வுப்பொதியினூடாக ஈழம்வாதிகள் மகிழ்வடையப்போகிறார்கள், அவர்கள் கேட்பதை சந்திரிக்காவே வழங்கப்போகிறார் என்று இத்தீர்வுப் பொதிக்கெதிரான தனது கட்சியின் நிலைப்பாட்டினைத் தெரிவித்திருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு தீர்வொன்றினை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மாகாணசபை முறைமையினை எதிர்த்துப் படுகொலைகளில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி தற்போது மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதை எதிர்க்கிறது ‍- ஆவணி 1997

undefined

மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடும் அரசின் முடிவினை சட்ட ரீதியில் எதிர்க்கப்போவதாக சூளுரைத்திருக்கிறார். தனது கட்சி உட்பட அனைத்து இடதுசாரிகளையும் திரட்டி அரசின் இம்முடிவிற்கெதிராகப் போராடப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜே வி பி இன் இம்முடிவினை விமர்சித்திருக்கும் அரசாங்கத்தின் பிரதியமைச்சர் செனிவிரட்ன, மக்கள் விடுதலை முன்னணி அரசியல் ஆதாயத்திற்காகவே இதனைச் செய்கிறது என்று கூறியிருக்கிறார். "இன்று மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவேண்டும் என்று கூப்பாடு போடும் இதே கட்சியினர்தான் 1988 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் மாகாணசபைத் தேர்தலில் ஈடுபடுவோர் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டி வந்தனர்" என்றும் கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய வர்த்தக, தொழில் அமைப்புக்களின் தலைவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட "வடக்குக் கிழக்கு இனப்பிரச்சினைக்கு சமாதானமான முறையில் தீர்வு காணுவோம்" எனும் அரசுசாரா அமைப்புக்களின் கருத்தரங்கைப் புறக்கணித்த மக்கள் விடுதலை முன்னணி ‍- ஐப்பசி 1998

இலங்கையில் செயற்பட்டு வரும் பிரதான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புக்களின் தலைவர்களின் சம்மேளணம் வடக்குக் கிழக்கில் நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டுவந்து சமாதான ரீதியில் தீர்வொன்றைக் காணும் நோக்கில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்தரங்கொன்றினை ஒழுங்கு செய்திருந்தது. அனைவரினதும் இன்றைய தேவை நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டுவருவதே என்றாகிறபோது இக்கருத்தரங்கிற்கு பலரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர்.

ப‌ண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் முஸ்லீம் காங்கிரஸும் பங்குபற்றின. 

 ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி, கொம்மியூனிஸ்ட் கட்சி, மகஜன எக்சத் பெரமுன ஆகிய கட்சிகள் இக்கருத்தரங்கை முற்றாகப் புறக்கணித்திருந்தன. 

வடக்குக் கிழக்குப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான காத்திரமான தீர்வு என்ன? என்பதுடன் ஆரம்பித்த இக்கருத்தரங்கில் பேசிய ஐக்கிய‌ இடதுசாரிகளின் முன்னணியின் உறுப்பினர் லீனஸ் ஜயதிலக்க, "வடக்குக் கிழக்கில் நடத்தப்படும் போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இராணுவத்தினர் முற்றாக மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்" என்று கோரிக்கை முன்வைத்தார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் புலிகளுடன் பேச முடியாது டில்வின் சில்வா - வைகாசி 1999

tilvin_s_b.jpg

"இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்கிறோம். அடுத்தடுத்து ஆட்சிசெய்த சிங்கள அரசுகள் தமிழர்கள் மீது பாகுபாடு காட்டினார்கள். இதனால் தமிழர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார்.
"இலங்கை ஒரு பல்லின, பல்மத நாடாகும், ஆகவே இது ஒரு சிங்கள பெளத்த நாடு என்று கூறப்படுவதை நாம் ஏற்கவில்லை. இலங்கை மக்கள் பல்லின, பல்கலாசார பின்னணியைக் கொண்டவர்கள் என்பதனை ஆட்சிக்கு வரும் அரசுகள் உணரத் தவறுவதாலேயே தமிழ் மக்கள் இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். 
ஆனாலும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவே தாம் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறுவதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். அவர்களுடன் எந்த இணக்கப்பட்டிற்கும் எம்மால் வரமுடியாது. தமிழரின் பிரச்சினைக்கு பிரிவினையினை புலிகள் இயக்கம் தீர்வாக முன்வைக்கிறது. அதை எம்மால் ஏற்கமுடியாது. அது எமது நாடு துண்டுகளாக சிதைவடைவ‌தற்கு வழிவகுக்கும், ஆகவே நாம் அதனை முற்றாக எதிர்க்கிறோம். ஆயுதங்கள் மூலம் பெறப்படும் தீர்வு சமூக அநீதிகளுக்கு இட்டுச் செல்லும். பேச்சுவார்த்தையின் ஊடாகவே அரசாங்கம் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே மத்தியஸ்த்தத்தினை நாம் எதிர்ப்போம் டில்வின் சில்வா - பங்குனி 2000

இலங்கையில் நிலவிவரும் இனப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்கும் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க நோர்வே முன்வந்தால் தாம் அதனை எதிர்த்து நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். 
இஸ்ரேலிற்கும் பலஸ்த்தீனர்களுக்கும் இடையிலான ஒஸ்லோ உடன்படிக்கையின்போது நோர்வே இஸ்ரேலியர்களுக்குச் சார்பாகவே நடந்துகொண்டது. அதுபோல் இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்குச் சார்பாக நடந்துகொள்ளவே நோர்வே மத்தியஸ்த்தம் வகிக்க வருகிறது. அதனால் அந்த மத்தியஸ்த்தத்தினை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார்.  

புலிகளுடன் சமாதானப் பேச்சுக்கள் நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியுடனும், நோர்வேயுடனும் அரசு மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கான தீர்வு என்பது அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதனூடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

மேலும் அரசியலமைப்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் எல்லாம் நாட்டு மக்களின் ஒப்புதல் இன்றியே உருவாக்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார். தமிழர்கள் ஏனைய இன மக்களுடன் ஒன்றாக வாழவே விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கான சம உரிமைகளை அவர்கள் கேட்கிறார்கள், அவ்வளவுதான் என்று கூறிய அவர், தமது கட்சியின் முதலாவது ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் மத்தியஸ்த்தை எதிர்த்து 10,000 சிங்களவர்களைக் கொழும்பில் திரட்டிய மக்கள் விடுதலை முன்னணி ‍- பங்குனி 2000

protest_monks_1_16032000.jpg

இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக மத்தியஸ்த்தத்தில் ஈடுபடும் நோர்வேயினை எதிர்த்து சுமார் 10,000 சிங்களவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் நடத்தியது. மத்தியஸ்த்தத்தினை எதிர்த்தும், பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை நாட்டு மக்களுக்கு அரசாங்கம் உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று கோரியே இப்பேரணி நடத்தப்பட்டது. 

protest_2_16032000.jpg

நூற்றுக்கணக்கான பெளத்த பிக்குகள் முன்னால்ச் செல்ல, மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர்களான டில்வின் சில்வா மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தினர்.

jvp_demo_1_16022000.jpgசமாதானப் பேச்சுக்களில் நோர்வே மத்தியஸ்த்தம் வகிப்பதை எதிர்த்து சுலோகங்கள் எழுப்பப்பட்டதோடு, பதாதைகளும் ஆர்ப்பாட்டக் காரர்களால் எடுத்துச் செல்லப்பட்டன.

jvp_demo_2_16032000.jpg

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஏதுவாக்க அரசு கொண்டுவர எத்தனிக்கும் அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்த்து சிங்களவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி ‍- ஆவணி 2000

இலங்கைப் பாராளுமன்றத்திற்குச் செல்லும் வழிகளை அடைத்து சுமார் நான்காயிரம் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏதுவாக்கும் நோக்கில் சந்திரிக்கா அரசு மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படும் அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்த்தே இவ்வார்ப்பட்டத்தினை தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்கு செய்திருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான சந்தியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வருகையில் ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலீஸாரினால் அவர்கள் மறிக்கப்பட்டார்கள். அரசியலமைப்பு மாற்றத்திற்கான பரிந்துரைகள் அன்று முற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தன. 

அரசு அரசியலமைப்பு மாற்றத்தைக் கைவிடாத பட்சத்தில் நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களைத் தாம் ஒழுங்குசெய்யப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவாகக் களத்தில் குதித்திருக்கும் தீவிரவாத பிக்குகள் அமைப்பொன்று, அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் சிங்களவர்கள் அரசியல் அநாதைகளாகிவிடுவார்கள் என்றும், இதனால் மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக தாமும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அநுர குமார திஸாநாயக்க இனவெறியனாகாக இருக்க வேண்டும் என்று  கடும் போக்கு தமிழ் இனவெறியர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. இந்த தமிழ் இனவெறியர்களின் விருப்பம் ஈடேடக் கூடாது என்பதே தமிழ் மக்கள் எதிர்பார்பபு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடுதழுவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை அழைத்து அரசியலமைப்பு மாற்றத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணி ‍- ஆவணி 2000


இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் நாடு தழுவிய ரீதியில் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கெதிராக கடுமையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதிய தேர்தல் நடைமுறை தொடர்பான தமது ஆர்ப்பாட்டம் ஒன்றினை கொழும்பு உச்ச நீதிமன்றத்தின் முன்னாலும் மக்கள் விடுதலை முன்னணி இன்று நடத்தியது. 

உத்தேச அரசியலமைப்பு சீர்திருந்த்தத்திற்கெதிரான ஜே வி பி யின் ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றதுடன், மாகாணத் தலைநகரங்களான கண்டி, மாத்தறை, காலி ஆகியவிடங்களிலும் ஜே வி பி உறுப்பினர்கள் இவ்வார்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினை தாம் நிராகரிப்பதான சுவரொட்டிகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வடக்குக் கிழக்கைத் தவிர்த்த ஏனைய பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணியினரால் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. மேலும், உத்தேச அரசியல்ச் சீர்திருத்தம் முற்றாகத் தோற்கடிக்கப்படும்வரை தமது போராட்டங்கள் ஓயாது என்றும் மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. 

உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாடு பிரிந்து தமிழர்கள் தனிநாட்டினை அடைந்துகொள்வார்கள் என்பதற்காகவே தாம் அதனை எதிர்ப்பதாகவும் அக்கட்சி கூறியிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவருக்கும் நோர்வேயின் விசேட தூதுவருக்கும் இடையே மல்லாவியில் நடைபெற்ற பேச்சுக்களை இரகசியப் பேச்சுக்கள் என்று கடுமையாகக் கண்டித்திருக்கிறது மக்கள் விடுதலை முன்னணி ‍ - கார்த்திகை 2000

image_ecbce378ce.jpg

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 10 ஆசனங்களை வென்றுள்ள தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்கெயிம் மல்லாவியில் நடத்திய பேச்சுக்களை "இரகசியப் பேச்சுக்கள்" என்று கூறி தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி எனும் தீவிர சிங்கள இனவாதக் கட்சி வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில், இலங்கை அரசாங்கம் மீது நோர்வே அரசியல்த் தீர்வொன்றைத் திணித்துவருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. அதனை அடையும் நோக்கத்தின் முதற்படியே தலைவருக்கும் சொல்கெயிமிற்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தை என்றும் அது விமர்சித்திருக்கிறது.

70 களிலும் 80 களின் இறுதிப்பகுதியிலும் இருமுறை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட இக்கட்சி, நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடனான இனப்பிரச்சினைத் தீர்வுக்கெதிரான தனது நிலைப்பாட்டினை ஆரம்பமுதல் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்திவருவது நாம் அறிந்ததே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விடுதலை முன்னணியைத் தொடர்ந்து நோர்வேயிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிகல உறுமய, நோர்வே அமைச்சரின் கொடும்பாவியை எரித்த‌ இனவாதப் பிக்கு - கார்த்திகை 2000

INSERT DESCRIPTION

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் நோர்வே வகிக்கவிருக்கும் மத்தியஸ்த்திற்கெதிராக தீவிர இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சிங்கள மக்களை அணிதிரட்டி கடுமையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. தமிழர்களுக்கான தனிநாட்டினை உருவாக்கவே நோர்வே வந்திருப்பதாக சிங்கள மக்களிடையே கடுமையான பிரச்சாரத்தை அக்கட்சி கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

இக்கட்சியின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இன்னொரு சிறிய இனவாதக் கட்சியான சிகல உறுமயவும் நோர்வேயிற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கிறது. கொழும்பிலிருக்கும் நோர்வேயின் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிகல உறுமயவின் பிக்குகள் அணியினர் அங்கு எரிக் சொல்கெயிமின் கொடும்பாவியையும் எரித்தனர். பின்னர் நரகென்பிட பகுதியில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழருக்குத் தீர்வினை வழங்கும் எந்தமுயற்சியையும் தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தனர்.


முன்னர் சுமார் 700 உறுப்பினர்களுடன் நோர்வே தூதரகத்திற்குச் சென்ற அக்கட்சியின் தலைவர் திலக் கருணாரட்ன, நோர்வேயின் மத்தியஸ்த்தத்தினை எதிர்த்து ஆர்ப்பரித்ததுடன், இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையில் நடக்கும் பேச்சுக்களையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கோஷமிட்டார். புலிகளின் ஆலோசனையின் பேரிலேயே நாட்டைத் துண்டாடும் கைங்கரியத்தில் சொல்கெயிம் இறங்கியிருப்பதாக அவர் கூறினார்.


 அண்மையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்கெயிம் மல்லாவியில்ச் சென்று சந்தித்ததை தீவிரவாத இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக விமர்சித்திருக்கும் பின்னணியில் இன்னொரு இனவாதக் கட்சியான சிக உறுமயவும் மக்கள் விடுதலை முன்னணியின் வழியில் சென்று பேச்சுக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.

அநுரவின் இனவன்மம் தொடரும்........

 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

அநுரா இனவெறிக்கு எதிராக தெரிவித்த விடயங்கள் தமிழ் இனவெறியர்களை பதட்டமட செய்துள்ளது. தமது  தமிழ்  தேசிய வியாபாரத்துக்கு  புலம்பெயர் தாயக பிரதேசங்களில் பாதிப்பு வந்துவிடும் என்று இத்தரப்புகள் அச்சம் கொண்டுள்ளன. 

எனவே  அநுரா தனது ஆட்சியை சரியாக ஆரம்பிக்க முதலே அவசரமாக பழைய மக்கள் விடுதலை முன்னணி செயற்பாடுகளை தூசி தட்டி எடுத்து அதை வைத்து அநுர மீது வசைமாரி பொழிந்து அநுரவை சிங்கள இனவெறியனாக தமிழ் மக்கள் மத்தியில்  காட்டி தமது தமிழ் தேசிய வியாபாரத்தை நடத் முயல்கிறார்கள் என்பது தெரிகிறது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு மத்தியஸ்த‌த்திற்கெதிராகத் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தீவிர சிங்கள இடதுசாரி இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் -  13, மார்கழி 2000

z_p03-Learn.jpg

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதற்கெதிராகவும், உயர்ந்துசெல்லும் வாக்கைச் செல்வினைக் கண்டித்தும் பலநூற்றுக்கணக்கான சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். 

மாலை 4 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டில்வின் சில்வா, தமது கட்சி இலங்கை இனப்பிரச்சினையில் எந்த வெளிநாடு தலையீடு செய்ய வந்தாலும் அதனை எதிர்க்கும் என்று கூறினார். வெளிநாடுகள் தமது சொந்த நலன்களுக்காகவே மத்தியஸ்த்தம் செய்ய வருகின்றன, அவர்கள் ஒருபோதும் பிரச்சினையினைத் தீர்க்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

இருமுறை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுத் தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணி த‌ற்போது பாராளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 
 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் எண்ணம் ஈடேறக் கூடாது. சிங்கள, தமிழ் இனவாதிகளால் கடந்த 75 ஆண்டுகளாக சிதைவடைந்துவரும் தமிழ் மக்களின் வாழ்க்கை இனியும்  இந்த இரு பகுதி இனவெறியர்களால் சிதைவடைய அனுமதிக்க கூடாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநுரவின் இனவன்மம் தொடரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் கூட ஒவ்வொரு முறையும் தெற்கில் இனவாதத்தில் இருந்து விலகி பயணிக்கும் அரசியல் சக்திகள் சற்று பலம் பெற்று இனவாதம்  பலமிழக்கும் சமிக்ஞைகள் எப்போதெல்லாம் தோன்றுகினதோ அப்போதெல்லாம் சிங்கள இனவாதத்தை எதிர்தது அரசியல் செய்வதாக  காட்டிக்கொள்ளும் தரப்புகள் இவ்வாறு பதட்டம் அடைந்ததுடன் அதை கெடுத்து சிங்கள இனவாத அரசுகள. அங்கு பலம் பெற தம்பன் ஆனதெல்லவற்றும் செய்தன.   அதன் தொடர்சசியே இப்போது சமூக வலைத்தளங்களில்லும் சில வலைத்தளங்கள், தொலைக்காட்சிகளிலும் அநுரவை சிங்கள இனவெறியலாக  காட்டும் இந்த ஈனத்தனம். 

 

சிங்கள இனவாதிகளை விட மிக மோசமான இந்த இனவாதிகள் முறியடிக்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

அநுர ஆட்சிக்கு எதிராக மக்களை தூண்டி அதற்கெதிராக அநுர நடவடிக்கை எடுக்கப்போய் அதில் தமிழ் மக்கள் இறக்க வேண்டும் தாம் அதை வைத்து வெளிநாடுகளில் புலம்பி அரசியல் வியாபாரங்களை தொடரவேண்டும் என்பதே இந்த சுயநல கும்பல்களின் நோக்கம். அதற்காகவே கடந்த சில நாட்களாக அநுரவுகெஉ எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பழைய பட்டறிவுகளை வைத்தை மக்கள் தெளிவடைந்து இவர்களின் இந்த அயோக்கியத்தனம் ஈடாறாமல்

இனவாதம் ஒழிந்த நாடாக  தமிழ் மக்கள் அங்கு மகிழ்வாக வாழவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். 

Edited by island

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமது நோக்கத்தினை அடைவதைத் தடுக்க  நன்னடத்தைக் கால அரசாங்கம் ஒன்றைக் கோரும் மக்கள் விடுதலை முன்னணி - 8, ஆவணி 2001

தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நன்னடத்தைக் கால அரசாங்கம் ஒன்றைக் கோரியிருக்கிறது. அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான மக்கள் ஆணையினைப் பெற்றுக்கொள்ளும் கால எல்லையினை நீட்டிப்பதைக் காட்டிலும் அதனை முற்றாக இரத்துச் செய்வதே சரியானது என்று அரசிற்கு அது எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. பாராளுமன்றம் மீண்டும் கூடும் பட்சத்தில் அரசியலமைப்பு ஆலோசனை சபையொன்றினை நிறுவுவதன் மூலம் இச்சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருக்கிறார்.

"நாடு இன்றிருக்கும் இக்கட்டான தருணத்தில் அரசியல் ஆதாயம் நோக்கி நாம் செயற்படப்போவதில்லை. அதேவேளைத் தமிழ்ப் பிரிவினவாதிகளும் இச்சூச்ழ்நிலையினைப் பாவித்து தமக்கான ஆதாயங்களை அடைந்துகொள்ள நாம் அனுமதிக்கப்போவதில்லை" என்று அவர் கூறினார். 

அதிதீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் உட்பட்ட பல சிங்கள இனவாத அமைப்புக்கள் தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்கும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரிக்கா கொண்டுவர எத்தனிக்கும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் சிங்கள இனம் பிளவுபட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கருதுகிறது. புலிகள் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தமிழர்களுக்கென்று தனிநாடு ஒன்றினை உருவாக்குவதை சிங்களவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு தடுத்துவிட வேண்டும் என்றும் விமல் வீரவன்ச போன்றோர் கூறத் தொடங்கியிருக்கின்றனர்.

நிகழ்ந்துவரும் அரசியல்ச் சிக்கலில் தனது பங்கு சிங்களவர்களின் நலன்களுக்கு ஆபத்தாக அமையாது என்று தெரிவித்திருக்கும் இக்கட்சி, தமிழர்களுக்கு எவ்விதமான அதிகாரப் பரவலாக்கத்தையும் வழங்குவதை தாம் முற்றாக எதிர்க்கும் என்று தெளிவுபடுத்திக் கூறியிருக்கிறது. மேலும், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு நாடு கம்மியூனிசம் நோக்கிச் செல்வதுதான் என்றும் அக்கட்சி கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள்  அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் இப்போது நம்புவது கஷ்டம், இந்த கட்டத்தில் அநுரா வந்த து கிறப்பான தெரிவு, அவரின் தமிழ் ஆளுரின் தெரிவு அதைவிட சிறப்பு, எம்மைவிட இந்தியா மேற்குலகுதான் இவரை உன்னிப்பாக கவனிக்கின்ற போகின்றார்கள், அதற்குமுன் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, island said:

கடந்த காலங்களில் கூட ஒவ்வொரு முறையும் தெற்கில் இனவாதத்தில் இருந்து விலகி பயணிக்கும் அரசியல் சக்திகள் சற்று பலம் பெற்று இனவாதம்  பலமிழக்கும் சமிக்ஞைகள் எப்போதெல்லாம் தோன்றுகினதோ அப்போதெல்லாம் சிங்கள இனவாதத்தை எதிர்தது அரசியல் செய்வதாக  காட்டிக்கொள்ளும் தரப்புகள் இவ்வாறு பதட்டம் அடைந்ததுடன் அதை கெடுத்து சிங்கள இனவாத அரசுகள. அங்கு பலம் பெற தம்பன் ஆனதெல்லவற்றும் செய்தன.   அதன் தொடர்சசியே இப்போது சமூக வலைத்தளங்களில்லும் சில வலைத்தளங்கள், தொலைக்காட்சிகளிலும் அநுரவை சிங்கள இனவெறியலாக  காட்டும் இந்த ஈனத்தனம். 

 

சிங்கள இனவாதிகளை விட மிக மோசமான இந்த இனவாதிகள் முறியடிக்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும். 

நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனாலும் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களை தவற விட முடியாது. 

தற்போது இலங்கையில் இட்பெற்றிருக்கும் மாற்றம் எம் வாழ்நாளில் தற்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியான வகையில் பாவிக்க வேண்டும். 

31 minutes ago, island said:

பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள்  அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்.  

சிங்களத்தின் பிற்போக்குவாதிகளும் தமிழ்ப் பிற்போக்குவாதிகளும் தங்களுக்குள் ஒன்று சேரத் தொடங்கியிருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

யாரையும் இப்போது நம்புவது கஷ்டம், இந்த கட்டத்தில் அநுரா வந்த து கிறப்பான தெரிவு, அவரின் தமிழ் ஆளுரின் தெரிவு அதைவிட சிறப்பு, எம்மைவிட இந்தியா மேற்குலகுதான் இவரை உன்னிப்பாக கவனிக்கின்ற போகின்றார்கள், அதற்குமுன் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்

இலங்கைத் தமிழ் சிங்களம் இரண்டுக்குமான முதன்மையான எதிரி/பரம வைரி  இந்தியாவே. 

தமிழரின் இரண்டாவது பிரதான எதிரியாக இதுவரை இருந்து வந்தது சிங்கள இனவாதிகள். 

மூன்றாவது எதிரியாகத் தற்போது வெளிக்கிளம்பியிருப்பது புலம்பெயர்ஸ் வியாபாரிகள் கூட்டம்.

சிங்களம் இறங்கி வந்தாலும் புலம்பெயர் வியாபாரக் கொள்ளைக் கூட்டம் இலங்கை இனப்பிரச்சனையை கொதிநிலையில் வைத்திருக்கவே விரும்பும்..  

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான்.

அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது.

இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள்.

முன்னர் இந்தியாவுக்கு எதிராக எப்படியெல்லாம் கூக்குரலிட்டார்கள்.

இந்திய சாமான்களை விற்கவே கடைக்காரர்கள் பயப்பட்டார்கள்.

இப்போ இந்தியாவே இவர்களைக் கூப்பிட்டு செங்கம்பளம் விரித்து கைலாகு கொடுத்து வரவேற்கிறது.அவர்களும் யாருக்கும் எதிராக எதுவுமே இன்னமும் சொல்லவில்லை.

நீங்கள் எழுதியவைகளை தமிழர்கள் மறக்கவும் கூடாது.

முன்னர் புலிகள் பலமாக இருந்த காலங்களில் காலையில் எழும்பினால் இன்று என்னென்ன மாஜாஜாலங்கள் செய்துள்ளார்கள் என்று தமிழ்நாதத்தை புரட்டி எடுப்போம்.

அதே மாதிரி இன்று சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழர்களும் என்பிபி என்னென்ன மாஜாஜாலங்கள் செய்துள்ளார்கள் என்று ஆவலுடன் பார்க்கிறார்கள்.

அவர்களின் ஒவ்வொரு செயலும் புலிகள் ஒவ்வொரு தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது போல உள்ளூர மனம் சந்தோசமடைகிறது.

ஒரு தலைவனைத் தேடிக் கொண்டிருக்கும் எமது மக்கள் இவரைத் தேடிப் போவது தவிர்க்க முடியாததாகிறது.அந்தளவுக்கு எமது அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.

கீழே வாட்சப்பில் வந்த ஒரு செய்தியை இணைக்கிறேன் பாருங்கள்.காலையில் எழும்பி பார்க்க பிபி தான் எகிறுது.

கிளிநொச்சி நகரில் என்னதான் நடக்கிறது*!! 

*ரணில் விக்ரமசிங்க அரசிடம் சாராயம் விற்பதற்கான அனுமதிப்பத்திரம் வாங்கி அதனை பல கோடி ரூபாக்களுக்கு விற்றதாக பல தமிழ் பேசும் எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது*. 


*இந் நிலையில் கிளிநொச்சி நாட்டாமை என்று பெயரெடுத்த சிறிதரன் எம்பியின் கோட்டைக்குள் இவ்வளவு சாராயக்கடைகள் எவ்வாறு வந்தது?*

*🟣சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்*….

*A9 வீதி கிளிநொச்சி ஊடாக செல்ல வேண்டிய தேவையின் நிமித்தம் சென்ற போது. வீதி சமிக்ஞைக்கு மேலதிமாக பல பச்சை நிறத்தில் வெள்ளை எழுத்துகளால் ஆன பல பெயர்ப் பலகைகள் காணக் கண்டேன். உற்றுக் கவனித்ததில் அவை யாவும் புதிதாக திறக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கும் மதுபான விற்பனை நிலையங்கள் என தெரிந்தது.*

*அட என்னடா இது பரந்தன் சந்தி தொடக்கம் அறிவியல் நகர் வரையிலான Bar 9 வீதியில் sorry A9 வீதியில் இத்தனை கடைகளா ? அட இவ்ளோ கடையிலும் போய் வாங்கி குடிக்க அங்க ஆக்கள் வேணுமே டா. என்னங்கடா போட்டிக்கு கடை திறந்தது போல……!*

 *இதில் முதலாவதாக இருப்பது Bar & Restaurant அதாவது வாங்கி அங்கேயே குடிக்கலாம். இது இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் தான்  யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஏனைய கல்வி நிலையங்கள் காணப்படுகின்றது*.
*எல்லோரும் அரசியல்வாதிகளை சலுகை பெற்றுவிட்டதாக சொல்லிக்கொண்டு இருக்க, போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி Bar ஆல் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதையும் எதிர்கால சந்ததிகள் அழிவடைவதற்கு திட்டமிட்ட வகையில் செயற்படுவதையும் பேசவில்லை*.

*தேசியம் சுயநிர்ணயம் என்று சொல்லுபவர்கள், திட்டமிட்ட இன அழிப்பு என்று சொல்லுபவர்கள், கருத்துக்களை கோர்த்து அழகாய் பேசி உணர்ச்சி பொங்க பேசுபவர்கள், அரசியல்வாதிகள், அரசியலுக்கு வர இருக்கும் அறிவாளிகள், ஆய்வாளர்கள், சமுக சிந்தனைவாதிகள், அன்மீகவாதிகள் என யாருமே இது பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லைதெரிவிக்கவில்லை.*

 *யாரோ சலுகை பெற்றுவிட்டனர் என்றே குறை கூறிக்கொண்டு இருக்கின்றனர். திட்டமிட்டு ஒரு சமுதாயம் அழிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதை யாரும் சுட்டிக்காட்டவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இது எல்லா இடத்திலும் இருக்கிறது (Bar) தானே என்பார்கள்.*

 *ஆனால் பாடசாலைக்கு அருகில் கோவிலுக்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு அருகில் அமைப்பதற்கு யாரும் அனுமதிப்பதில்லை.*

 *மாறாக பிரதேச மக்களின் எதிர்ப்புகளே இடம்பெற்று இருக்கிறது. அடுத்தவரை குறை கூறி, சாடி பழகிவிட்டோமே தவிர எமது சமுதாயம் சீரழிந்து போவதை தடுப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை. சுய லாப அரசியல்வாதிகளுக்கு பின்னால் நின்று அவர்களை வளர்த்துக்கொண்டே செல்கின்றீர்கள்.*

 *இது மாற்றப்படல் வேண்டும். “இரத்து செய்யப்பட்ட அனுமதிகள்” என செய்திகளை பார்த்து மகிழ்ந்தோம். அது செய்தி மட்டும் தான் நிஜத்தில் இல்லை என்பது போலவே குறித்த மதுபான விற்பனை நிலைய நடத்துநர்கள் சிரிப்பது தெரிகின்றது.*

*10 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கும் உட்பட்ட குறித்த சாலையில் எனது கண்ணில் தென்பட 14 மதுபான விற்பனை நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டிந்தது.* *இன்னும் எத்தனை இருக்கின்றதோ தெரியவில்லை. (உள் வீதிகளில்)*
*பல்கலைக்கழகத்திற்கு அருகில் Bar & Restaurant அமைக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது யாரும் கேட்கவில்லை எதிர்க்கவில்லை. சமுக சேவைகள் திணைக்களமும் அருகில் தான் இருக்கின்றது.*

*இது கடந்து செல்லும் விடயமல்ல…..!*!😱😱😱🤔🤔🤔
வாட்சப்பில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள்  அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்.  

large.IMG_7124.jpeg.2368188731dbc83d48c6

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.