Jump to content

உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

dead-body-girl.webp?resize=750,375

உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்.

காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட 23 வயது பெண் காதலனால் பிறப்புறுப்பில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சரி [Navsari] மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 23 வயது தாதியர் பட்டதாரி மாணவி ஒருவர் தனது 26 வயது காதலனுடன் ஹோட்டல் அறையில் கடந்த செப்டம்பர் 23 அன்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில்  அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பெண்ணும் அவரது காதலனும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் திகைத்துள்ளனர். பதற்றமடைந்த பெண்ணின் காதலன் ஆம்புலன்சுக்கு போன் செய்வதற்குப் பதிலாக ரத்தத்தபோக்கை நிறுத்துவது எப்படி என்று ஆன்லைனில் தேடி பெண்ணின் உறுப்பில் ரத்தம் வராமல் இருக்க துணியை அழுத்தி ரத்தத்தை தடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் சிறிது நேர்த்திலேயே பெண் மயக்கமடைந்த நிலையில் காதலன் தனது நண்பனுக்கு போன் செய்து அவனை வரவைத்து அவனுடன் சேர்ந்து பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளான். ஆனால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும்படி கூறியுள்ளனர்.

அரசு மருத்துவமனைக்கு அந்த பெண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெற்றோர்களிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் காதலன் முதலிலேயே ஆம்புலன்சுக்கு போன் செய்யாமல் ஆன்லைனில் உபாயம் தேடிக்கொண்டிருந்ததாலேயே பெண் உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1402025

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனுடையதை முதலில் அளக்கவேணும். 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

இவனுடையதை முதலில் அளக்கவேணும். 

இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்க, கூகிள்ளை கை வைத்தியம் பார்க்க தேடியிருக்கின்றான்.
இவனை நம்பி வந்த பிள்ளையை...  மேல் உலகம் அனுப்பி விட்டு இருக்கின்றான் பைத்தியக்காரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்க, கூகிள்ளை கை வைத்தியம் பார்க்க தேடியிருக்கின்றான்.
இவனை நம்பி வந்த பிள்ளையை...  மேல் உலகம் அனுப்பி விட்டு இருக்கின்றான் பைத்தியக்காரன்.

மாதவிடாய் காலமாக இருக்கலாம்    தாதி பட்டதாரிக்கு   இரத்தப்பெருக்கு ஏற்ப்பட்டால். என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வேண்டும்       அவர் உடனும். வைத்தியசாலைக்கு அறிவித்து இருக்க வேண்டும்    

இது வன்புணர்வு இல்லை காதலர்கள்.   விரும்பி ஈடுபட்டது    

உங்கள் நாட்டில் கிளிநொச்சியில்  தாய் தகப்பன்  அண்ணன். சேர்ந்து 18. வயது   பெண்ணை உடலுறவு செய்துள்ளார்கள்.   அந்த பெண்   ரியூருப்பருக்கு போட்டி கொடுக்கிறாள்.   🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தம் உறையாத பிரச்சினை இருந்திருக்கலாம்.. ஒரு தாதிய மாணவிக்கு இது தெரியாமலா இருந்திருக்கும்? சிலவேளை முதலாம் கல்வி ஆண்டின் ஆரம்பமாக இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உங்கள் நாட்டில்

அண்ணை எந்த நாடு? இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்? 😒

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பிரபா said:

அண்ணை எந்த நாடு? இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்? 😒

இலங்கை 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
    • விற்கும் காசுகள் உங்களுக்கு வாராது   அவர் தனது வங்கி கணக்கில் வைப்பிலிடுவார்.  .....சம்மதமா  ??? 🤣
    • அப்படியானால் உங்களுக்கு விற்கும் வழி பழக்கம். ராசா உங்களை தானே எனக்கு தேவை. 🤣
    • ஆனா ஒண்டு தமிழ்சிறி ஜேர்மன்காரன் சும்மாவே பஸ்ஸில வெளிநாட்டுக்காரனுக்கு பக்கத்துல இருக்கமாட்டான், ஆஹ் ஊஹ் எண்டால் எவ்வளவுகாலம் ஜேர்மனியில இருந்தாலும் சைஸ்ச அவுஸ்லாண்டர் எண்டு திட்டுவான், மற்ற வெளிநாட்டுக்காரர்போல அமைதியா இருக்கமாட்டான் ஒரு அளவுக்குமேல போனால் இளைஞர்கூட்டம் குருவிகூட்டம் எண்ட பெயாரில் ரவுண்டு கட்டி அடிப்பாங்கள், ஆயுத தாக்குதல்கூட செய்வாங்கள்.பொலிசும் ஜேர்மன்காரனுக்குத்தான் முதலிடம். அதனால இந்த விளையாட்டுகள் அவனிட்ட எடுபடாது. நோ கோஷான், அதையும் தாண்டிய வீரபாண்டிய கட்ட பொம்மனுகள், இல்லையெண்டால் வீடியோவில் 2:11  பொலிஸ்காரனையே நீ ஸ்டேஷனுக்கு போ எண்டு சொல்லிவாங்களா? உலகத்துல எங்கேயும் பொலிஸ்தான் கலவரம் பண்ணுறவங்கள வீட்ட போ எண்டு சொல்லும் , இது ரொம்ப புதுசா இருக்கு இவங்ககிட்ட இந்த உலகம் கத்துக்க வேண்டியது ஏராளம் இருக்கு.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.