Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மத்திய காஸாவில், இஸ்ரேல் தாக்குதலால் நடந்த சேதங்களுக்கிடையே தனது குழந்தையுடன் அமர்ந்திருக்கும் பெண் கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பேட்மேன்
  • பதவி, பிபிசி வெளியுறவு துறை செய்தியாளர், வாஷிங்டனிலிருந்து
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் 30 நாட்களில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்க ராணுவத்தின் சில உதவிகளை நிறுத்த நேரிடும் என்றும் தெரிவித்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது.

தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அனுப்பப்பட்ட அக்கடிதம், அமெரிக்காவிடமிருந்து இதுவரை அறியப்பட்ட, வலுவான எழுத்துபூர்வ எச்சரிக்கையாக உள்ளது. வடக்கு காஸாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களால் குடிமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்கா இக்கடிதத்தை எழுதியுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கிடையேயான சுமார் 90% மனிதாபிமான உதவிப்பொருட்களின் விநியோகத்தை கடந்த மாதம் இஸ்ரேல் மறுத்தது அல்லது தடுத்ததாகவும், காஸாவில் மனிதாபிமானச் சூழல் மோசமாகிவருவதாகவும் ஆழ்ந்த கவலைகளை அக்கடிதத்தில் அமெரிக்கா எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் கடிதத்தை மதிப்பாய்வு செய்து வருவதாக, இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்த விவகாரத்தை இஸ்ரேல் தீவிரமாக எடுத்துள்ளதாகவும்", அமெரிக்கா “எழுப்பியுள்ள கவலைகள் குறித்து கவனம் கொள்வதாகவும்,” அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

4 லட்சம் மக்களின் நிலை?

வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் தளங்களை தாங்கள் இலக்கு வைப்பதாகவும் மனிதாபிமான உதவிகளைத் தடுக்கவில்லை என்றும் இஸ்ரேல் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கு பொறுப்பான இஸ்ரேல் ராணுவத்தின் அமைப்பான ‘கோகாட்’ (Cogat), உலக உணவுத் திட்டத்தின் மனிதாபிமான உதவிகள் அடங்கிய 30 லாரிகள் வடக்கு காஸாவுக்குள் எரெஸ் கடவுப்பாதை வழியாக திங்கட்கிழமை நுழைந்ததாகத் தெரிவித்தது.

வடக்கு காஸாவில் இரண்டு வார காலத்திற்கு உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும் அங்குள்ள சுமார் 4 லட்சம் பாலத்தீனர்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் தீர்ந்துவருவதாகவும் ஐ.நா., கூறியது இதன்மூலம் முடிவுக்கு வந்தது.

காஸா 'எப்போதும் உச்சபட்ச அவசரநிலையிலேயே' இருப்பதாக ஐ.நா., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பிரதேசங்களுக்கான உலக உணவுத்திட்டத்தின் தலைவரான ஆண்டோன் ரெனார்ட், அப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு, ஐ.நா. முகமைகளால் வழங்கப்படுவதைத் தவிர வேறு புதிய உணவுகள் கிடைப்பதில்லை என்றும், “அம்மக்கள் உதவிகளை மட்டுமே சார்ந்திருப்பதாகவும்" ஏ.எஃப்.பி., செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு அதிகளவில் ஆயுதங்களை விநியோகிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்த ஓராண்டாக காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவால் வழங்கப்படும் விமானங்கள், இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் வகையிலான வெடிகுண்டுகள் (guided bombs), ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் அதிகமாகச் சார்ந்துள்ளது.

இஸ்ரேல், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, சுமார் 17 லட்சம் பேர், குறுகலான அல்-மவாசி கடற்கரை பகுதிக்கு இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டதால், 'நோய்த்தொற்றுக்கான அதிக அபாயம் இருப்பதாக' அமெரிக்கா தெரிவித்துள்ளது

கடிதத்தில் கூறியிருப்பது என்ன?

இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்கா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் அமெரிக்க வெளியுறவு துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கடிதம் குறித்த செய்தி ஆக்ஸியோஸ் (Axios) எனும் செய்தி இணையதளத்தில்தான் முதலில் வெளியானது. அக்கடிதத்தில் வெளியுறவுத் துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

“காஸாவில் மனிதாபிமானச் சூழல் மோசமாகிவருவது குறித்த அமெரிக்க அரசின் ஆழ்ந்த கவலைகளை வலியுறுத்துவதற்காக இக்கடிதத்தைத் தற்போது எழுதுகிறோம். இந்தப் போக்கை மாற்றுவதற்கான அவசரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை இம்மாதம் உங்கள் அரசாங்கம் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அரசின் உத்தரவு காரணமாக, சுமார் 17 லட்சம் பேர், குறுகலான அல்-மவாசி கடற்கரை பகுதிக்கு இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டதாகவும் அப்பகுதியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் காரணமாக, “பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல நோய்த்தொற்றுக்கான அதிக அபாயம் இருப்பதாகவும்”, அம்மக்கள் உயிர்வாழ்வதற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் இருப்பதாகவும், மனிதநேய அமைப்புகள் தெரிவிக்கின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“செப்டம்பர் மாதம் வடக்கு மற்றும் தெற்கு காஸாவுக்கு இடையே சுமார் 90% மனிதாபிமான உதவிப்பொருட்களின் விநியோகத்தை இஸ்ரேல் அரசாங்கம் தடுத்து நிறுத்தியது, அந்த உதவிகளை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக உள்ள அதிக கட்டுப்பாடுகள் தொடர்வது, புதிய பரிசோதனைகள், அவற்றுக்குச் சட்டபூர்வ பொறுப்பேற்றல் மற்றும் மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்க்கும் பணியாளர்கள் மற்றும் உதவிப் பொருட்களுக்கான சுங்கக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட இஸ்ரேல் அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் குறிப்பாக கவலை கொண்டுள்ளோம். இவற்றுடன் சட்டமீறல் மற்றும் சூறையாடல் ஆகியவையும் காஸாவில் சூழல் மோசமடைவதை அதிகரித்துள்ளதாக,” அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
அமெரிக்க அதிபர் ஜோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்கச் சட்டம் என்ன சொல்கிறது?

மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதை அதிகப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை “இப்போதிலிருந்து தொடங்கி 30 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்,” எனவும், தவறினால், “அமெரிக்க கொள்கையில் அதனால் தாக்கங்கள் ஏற்படும் என்றும்,” அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகள் சேருவதைத் தடுக்கும் நாடுகளுக்கு ராணுவ உதவிகளைத் தடை செய்யும் அமெரிக்கச் சட்டங்கள் அக்கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

குளிர்காலத்திற்கு முன்னதாக, நான்கு முக்கியக் கடவுப்பாதைகள் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட ஐந்தாம் பாதை வழியாக ஒருநாளைக்கு குறைந்தது 350 லாரிகள் சென்று சேருவது உட்பட, 'அனைத்து வித மனிதாபிமான உதவிகளையும் காஸா முழுவதும் சென்று சேருவதை மும்முரமாக மேற்கொள்ள வேண்டும்' என்றும் அல்-மவாசி கடற்கரையில் உள்ள மக்களை எல்லையிலிருந்து இன்னும் தொலைவுக்குள் இடம்பெயர அனுமதிக்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூறியுள்ளது.

'குடிமக்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கான கொள்கை ஏதும் இல்லை' என்பதை உறுதிப்படுத்தி, 'வடக்கு காஸாவை தனிமைப்படுத்துவதை' இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

30 நாள் காலக்கெடு ஏன்?

செவ்வாய்கிழமை (அக்டோபர் 15) வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம், “அக்கடிதம், பொதுவில் வெளிப்படுத்தும் நோக்கம் இல்லாத, தனிப்பட்ட ராஜதந்திர ரீதியிலானது,” என தெரிவித்தார்.

“பாதுகாப்புத் துறைச் செயலாளர் பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், காஸாவில் மனிதாபிமான உதவிகள் நுழைவதை அதிகரிப்பதற்கு மீண்டும் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்ரேல் அரசுக்கு தெளிவுபடுத்துவது நல்லது என நினைத்தனர்,” என்றார் அவர்.

மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து தெரிவிக்க மில்லர் மறுத்துவிட்டார்.

ஆனால், “அமெரிக்க ராணுவ உதவிகளைப் பெறும் நாடுகள், அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகளைத் தன்னிச்சையாக மறுக்கவோ, தடுக்கவோ முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது, நாம் நிச்சயமாக அதனை பின்பற்ற வேண்டும். ஆனால், நாங்கள் வலியுறுத்தியுள்ள மாற்றங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

இந்த 30 நாட்கள் காலக்கெடுவுக்கும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் தொடர்பு அல்ல என கூறிய அவர், “பலவிதப் பிரச்னைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிய நேரம் வழங்குவதுதான் ஏற்றது,” என கூறினார்.

 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

‘ஆயுதத் தடை’ நடவடிக்கை

காஸா முழுதும் விநியோகிக்கப்படும் மனிதாபிமான உதவிகளின் அளவு தொடர்பாக எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என இஸ்ரேல் முன்னதாக வலியுறுத்தியுள்ளது. மேலும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தோல்வியுற்றதாக ஐநா சர்வதேச முகமைகளையும் இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மனிதாபிமான உதவிப்பொருட்களை ஹமாஸ் திருடுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிய நிலையில், அதனை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

கடந்த மே மாதம் தெற்கு காஸா நகரமான ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முழு வீச்சிலான தாக்குதலை தடுக்கும் பொருட்டு 2,000 மற்றும் 500 பவுண்ட் எடை கொண்ட வெடிகுண்டுகள் அடங்கிய சரக்குகளை ரத்து செய்தார்.

ஆனால், இந்நடவடிக்கை காரணமாக ஜோ பைடன் குடியரசு கட்சியினரிடையே எதிர்ப்பை சந்தித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நடவடிக்கையை 'ஆயுதத் தடையுடன்' ஒப்பிட்டார். இதையடுத்து, இந்த ரத்து நடவடிக்கை கடந்த ஜூலை மாதம் பகுதியளவு விலக்கிக்கொள்ளப்பட்டது, மீண்டும் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 
இஸ்ரேல், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, கடந்த 10 தினங்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவம் புதிதாக தரைவழி தாக்குதலை தொடங்கியதிலிருந்து ஜபாலியா நகரம், கடும் குண்டுவீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியது

‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பயம்’

கடந்த 10 தினங்களுக்கு முன்பு, இஸ்ரேலின் தாக்குதலால் வடக்கு காஸாவில் உள்ள குடும்பங்கள், 'கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு பயம், அன்பானவர்களின் இழப்பு, குழப்பம் மற்றும் அதீத சோர்வால்' பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்தது.

ஜபாலியா நகரம் மற்றும் அதன் நகர்ப்புற அகதிகள் முகாமில் மீண்டும் ஒன்றிணைந்துள்ள ஹமாஸ் படையினரை அழிக்க அப்பகுதிகளுக்கு பீரங்கிகள் மற்றும் துருப்புகளை அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜபாலியா மற்றும் அருகிலுள்ள பெயிட் லாஹியா மற்றும் பெயிட் ஹனௌன் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள், அல்-மவாசி “மனிதாபிமான பகுதிக்கு” செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.

சுமார் 50,000 பேர் காஸா நகரம் மற்றும் வடக்கின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. ஆனால், பலருக்கும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது பாதுகாப்பற்றதாக உள்ளது அல்லது உடல்நலமில்லாததால் அவர்களால் வெளியே வர முடிவதில்லை.

ஜபாலியாவைச் சேர்ந்த காலித் என்பவரது அனுபவம், பிபிசி-யின் புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. அவர், ஒரு வாரமாக தானும் தன்னுடைய குடும்பத்தினரும் பயத்திலேயே வாழ்ந்துவருவதாக அவர் அனுப்பிய குரல்பதிவில் தெரிவித்திருந்தார்.

“எங்களிடம் தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது. ஆனால், குவாட்காப்டர் வகை ட்ரோன்கள் (quadcopter drones) அல்லது அழுக்கான தடுப்புகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியைச் சுற்றிவளைத்துள்ளது. எங்களால் இடம்பெயர முடியவில்லை, அது மிகவும் கடினமானதாக உள்ளது,” என்றார்.

“அதேசமயம், தீவிரமான குண்டுவீச்சின் காரணமாக, நாங்கள் தொடர்ந்து பயத்திலேயே இருக்கிறோம். என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவளுக்குக் காய்ச்சல் இருக்கிறது. குண்டுச் சத்தம் காரணமாக, அவளுடைய முழு உடலும் பயத்தில் நடுங்குகிறது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளை என்னால் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை,” எனவும் அவர் தெரிவித்தார்.

'சர்ச்சைக்குரிய திட்டம்'

ஹமாஸால் நடத்தப்படும் பாதுகாப்பு முகமை (Civil Defence agency), செவ்வாய்கிழமை (அக்டோபர் 15) ஜபாலியா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இறந்தவர்களுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் உள்ளதாகவும் பெரும்பாலும், அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அவர்களது வீடு நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முந்தைய தினம் ஜபாலியாவில் இருந்த 'டஜன் கணக்கிலான பயங்கரவாதிகளை' தங்கள் துருப்புகள் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்கிழமை தெரிவித்தது.

''ஜெனரல் பிளான்' எனப்படும் (சர்ச்சைக்குரிய) திட்டத்தை இஸ்ரேல் ராணுவம் அமைதியாகச் செயல்படுத்த தொடங்கிவிட்டதற்கான ஆபத்தான அறிகுறிகள் தென்படுவதாக' பாலத்தீனர்கள் எழுப்பிய கவலைகளை இஸ்ரேல் மனித உரிமைகள் குழுக்கள் கடந்த திங்கட்கிழமை எதிரொலித்தன.

வடக்கில் உள்ள அனைத்து குடிமக்களையும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யவும், அதைத் தொடர்ந்து அங்கு எஞ்சியிருக்கும் ஹமாஸ் படையினரை சுற்றிவளைத்து அவர்களைச் சரணடையக் கட்டாயப்படுத்தவும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் அந்த சர்ச்சைக்குரிய திட்டம் வலியுறுத்துகிறது.

இத்திட்டத்தை அமல்படுத்துவதாக கூறப்படுவதை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. 'மக்களை ஆபத்திலிருந்து வெளியேற்றுவதற்காக மட்டுமே' இத்திட்டம் எனவும் தெரிவித்துள்ளது.

தெற்கு இஸ்ரேல் மீது 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி சுமார் 1,200 பேரின் உயிரிழப்பிற்கும் 251 பேர் பணையக்கைதிகளாக பிடிப்பதற்கும் வழிவகுத்த ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸை அழிக்கும் நோக்கில் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது.

இதில், காஸாவில் 42,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலத்தில் பிபிசியும் சி என் என் போன்ற ஊடகங்கள்  சொல்வதெல்லாம் உண்மையாக எடுத்துக்கொள்ளும் காலம் ...

  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் சதி: பைடென் நிர்வாகம் ஈரானுடனான போரை நோக்கி விரிவடைகிறது

 
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், நெதன்யாகு அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானைத் தாக்குவதற்கு பைடென் நிர்வாகம் அமெரிக்க போர் துருப்புகளை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

18906c36-8ac0-45bf-9b4b-f4e42528bae2?ren
2017 இல், THAAD (Terminal High Altitude Area Defense) ரக ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு டிரக்குகள் அமெரிக்க சரக்கு ஜெட் விமானத்திலிருந்து இறக்கப்படுகின்றன. [AP Photo]

அக்டோபரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதன் மூலம், பைடென் நிர்வாகம் கமலா ஹாரிஸின் தேர்தல் வாய்ப்புகளில் செல்வாக்கு செலுத்தி, தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் இராணுவ விரிவாக்கத்திற்கான திட்டங்கள் நடந்துகொண்டிருப்பதை உறுதி செய்ய முயல்கிறது. இது ஒரு “அக்டோபர் ஆச்சரியத்திற்கு” பதிலாக, மத்திய கிழக்கு எங்கிலும் போரில் அமெரிக்க ஈடுபாட்டை பாரியளவில் விரிவாக்குவதற்கான ஒரு “அக்டோபர் சதி” ஆகும்.

கடந்த புதன்கிழமை, பைடென் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஈரான் தொடர்பான கூட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்த அழைப்பின் போது, “ஈரானில் உள்ள இராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக நெதன்யாகு பைடெனிடம் தெரிவித்தார்” என்று ஒரு அமெரிக்க அதிகாரி வாஷிங்டன் போஸ்ட்டுக்கு இந்த தொலைபேசி அழைப்பு குறித்து விவரித்தார். “இஸ்ரேலுக்கு ஒரு சக்திவாய்ந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அனுப்புவதற்கான பைடெனின் முடிவில் பிரதம மந்திரியின் நிலைப்பாடு காரணியாக இருந்தது” என்று போஸ்ட் அறிவித்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஈரானைத் தாக்குவதற்கான நெதன்யாகுவின் திட்டங்களில் பைடென் கையெழுத்திட்டதுடன், அத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா “களத்தில் பூட்ஸ் கால்களை” வைக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினார். கடந்த ஞாயிறன்று, அமெரிக்க பாதுகாப்புத் துறை சுமார் 100 அமெரிக்க சிப்பாய்களால் இயக்கப்படும் ஒரு THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புமுறையை இஸ்ரேலுக்கு அனுப்பவிருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்த போரிடும் துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுவது மத்திய கிழக்குப் போரில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாட்டை இன்னும் கூடுதலான அளவில் விரிவாக்குவதற்கு கதவைத் திறந்து விட்டுள்ளது. CNN உடனான ஒரு நேர்காணலில், ஓய்வுபெற்ற விமானப்படை கேர்னல் செட்ரிக் லெய்டன், “அந்த துருப்புக்கள் ஏதேனும் பாதிப்புக்கு உள்ளானால், அது அமெரிக்காவை போருக்கு இழுத்துச் செல்லக்கூடும், மேலும் இது இந்த கட்டத்தில் நாம் கற்பனை செய்வதை விட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று அச்சுறுத்தினார்.

பைடென் உடனான அழைப்பைத் தொடர்ந்து வந்த நாட்களில், இஸ்ரேல் காஸா மக்களுக்கு எதிரான அதன் தாக்குதல்களை மோசமான முறையில் தீவிரப்படுத்தியது. மேலும், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரை நேரடியாக தாக்கி, ஐ.நா. ஆணையையும் மீறி லெபனானில் “நீலக் கோட்டை” தாண்டி முன்னேறியது.

மேலும் அது பின்வருமாறு எழுதியது, “இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு ஹமாஸ் போராளிகளைப் பட்டினி போடும் முயற்சியில் வடக்கு காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை ஆராய்ந்து வருகிறார். இந்த திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டால், நூறாயிரக் கணக்கான பாலஸ்தீனியர்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற விரும்பாத அல்லது வெளியேற முடியாத நிலையில் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் சிக்கிக் கொள்ளக்கூடும்.

“எஞ்சியிருப்பவர்கள் போராளிகளாக கருதப்படுவார்கள் —அதாவது இராணுவ விதிமுறைகள் துருப்புகள் அவர்களைக் கொல்ல அனுமதிக்கும்— மற்றும் உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள் என்பன மறுக்கப்படும்.”

அமெரிக்கா அல்லது அதன் பினாமிகள் ஒரு நடவடிக்கை எடுப்பது குறித்து “பரிசீலித்து வருகின்றனர்” என்று அமெரிக்க ஊடகங்கள் அறிவிக்கும் நேரத்தில், அத்திட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதே அதன் அர்த்தமாகும். உண்மையில், இஸ்ரேல் ஏற்கனவே வடக்கு காஸாவை முற்றுகையிட்டு, எஞ்சியிருக்கும் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கோரி, எஞ்சியிருப்பவர்களை திட்டமிட்டு கொன்று வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக, உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் நோயாளிகள் இஸ்ரேலிய நெருப்புக் குண்டுகளால் உயிருடன் எரிக்கப்படும் காட்சிகளால் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர்.

இந்த படுகொலைகளுக்கு மத்தியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு துருப்புகளை அனுப்புகிறது என்று அறிவிப்பதன் மூலமாக, பைடென் நிர்வாகம் ஜனநாயகக் கட்சி மற்றும் ஹாரிஸ் பிரச்சாரத்தின் முழுமையான விரோதம் மற்றும் வெகுஜன போர்-எதிர்ப்பு உணர்வுக்கு அவமதிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திக் காட்டுகிறது. தொழில்துறை அளவில் படுகொலைக்கு முற்றிலும் உடந்தையாக இருக்கும் அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவினருக்கும் முறையீடு செய்வதன் மூலம் இனப்படுகொலையை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளின் பயனற்ற தன்மையையும் இது நிரூபிக்கிறது.

ஆனால், இந்த இனப்படுகொலையே ஒரு பரந்த பிராந்திய மற்றும் உலகளாவிய போருடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது. அதன் உடனடி இலக்கு ஈரான் ஆகும். கடந்த வாரம் “60 நிமிடங்கள்” என்ற நிகழ்ச்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில், ஹாரிஸ் ஈரான் “நமது மிகப்பெரிய எதிரி” என்று தான் நம்புவதாக அறிவித்தார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத் தாக்குதலின் சாத்தியக்கூறு குறித்து கேட்கப்பட்டபோது, “இந்த தருணத்தில் அனுமானங்களைப் பற்றி நான் பேசப் போவதில்லை” என்று அவர் அறிவித்தார்.

ஆனால் இது ஒரு கற்பனையான காட்சி அல்ல. இது மிக நீண்டகால மற்றும் பேரழிவுகரமான விளைவுகளுடன், ஈரானுடன் ஒரு போருக்கு எளிதாக்கும் அமெரிக்காவின் ஒரு செயலூக்கமான திட்டமாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நோக்கம் மத்திய கிழக்கை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் முழுமையாக மறு ஒழுங்கு செய்வதாகும். அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ஷாவின் ஆட்சியை அகற்றிய 1979 ஈரானியப் புரட்சியுடன் அமெரிக்கா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. பல தசாப்தங்களாக, அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள் தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கும், ஈரானிய அரசாங்கத்தை ஒரு புதிய அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டி வந்துள்ளன.

ஈரானுடனான நேரடி போரை நோக்கிய நகர்வுகளே கூட, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவுடன் அபிவிருத்தி அடைந்து வரும் மோதலுடன் தொடர்புபட்டுள்ளன.

உக்ரேனில் நேட்டோவிற்கு தொடர்ச்சியான ஆழமான பின்னடைவுகள் அதிகரித்து வரும் நிலையிலும், ரஷ்யப் படைகள் முழுப் போர்முனையிலும் முன்னேறி வரும் நிலையிலும், இஸ்ரேலுக்கு அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பப்படுகின்றன. இந்த யதார்த்தத்தை எதிர்கொண்டு, உலக மேலாதிக்கத்திற்கான அதன் போரில் அமெரிக்கா ஒரு புதிய போர் முனையைத் திறக்க முயல்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஈரானை, ரஷ்யாவின் ஒரு மத்திய கூட்டாளியாகவும், மேலும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் நாடாகவும் காண்கிறது. வெளியுறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலின் ஒரு சமீபத்திய அறிக்கை, “பிப்ரவரி 2022 க்கு முன்னர் கற்பனை செய்து பார்க்க முடியாத வழிகளில் ரஷ்யா இப்போது ஈரானைச் சார்ந்திருப்பதைக் காண்கிறது. ... ஒரு காலத்தில் இரண்டாம் நிலை பாத்திரம் வகித்த ஈரான், இப்போது உக்ரேன் போரில் ரஷ்யாவின் மிக முக்கியமான ஒத்துழைப்பாளர்களில் ஒன்றாக உள்ளது” என்று குறிப்பிடுகின்றது.

அமெரிக்க மூலோபாயவாதிகள் ஈரானின் எண்ணெய் விநியோகத்தைப் பெற்றவுடன், ரஷ்யா மற்றும் இறுதியில் சீனாவுடன் அதன் போரை அதிகரிக்க அமெரிக்கா சிறந்த நிலையில் இருக்கும் என்று நம்புகிறார்கள். மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் குறிவைக்கப்பட்ட இந்த நாடுகள் அனைத்தையும் “தீமையின் புதிய அச்சு” என்று அமெரிக்க போர் திட்டமிடுபவர்கள் குறிப்பிடுகின்றனர், ஈராக் ஆக்கிரமிப்புக்கு முன்னதாக புஷ் நிர்வாகம் உருவாக்கிய சொற்றொடரை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புதிய மூலோபாயம் அவசியமாகும், அது அரைகுறை நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கான தார்மீக முறையீடுகளின் அடிப்படையில் அல்ல. காஸா படுகொலையின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கடந்த வாரம் சோசலிச சமத்துவக் கட்சியின் இணையவழி கருத்தரங்கில் அவர் வழங்கிய கருத்துக்களில், உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு அறிவித்தார், “ஒவ்வொரு பெரிய காலகட்டத்தையும் போலவே, ஒன்றில் மனிதகுலம் முன்னேறுகிறது, அல்லது அது அழிவை எதிர்கொள்கிறது. சமூகப் புரட்சி சாத்தியமற்றது என்றால், மனிதகுலம் உயிர்வாழ்வது சாத்தியமற்றது என்பதே அதன் பொருளாகும்.”

முழு உலகையும் சூழ்ந்து நிற்கும் இராணுவ பேரழிவைத் தவிர்ப்பதற்கான போராட்டத்தில் “எளிதான பாதை” அல்லது குறுக்குவழி எதுவும் இல்லை. இதற்கு தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய மற்றும் சர்வதேச சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு பாரிய சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

https://www.wsws.org/ta/articles/2024/10/16/pers-o16.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.