Jump to content

எனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒருவரின் கணவர் கேள்விப்பத்திரத்தை பெறுவதற்காக பல மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்க முயன்றார்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

எனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பெண் ஒருவரின் கணவர் எனக்கு பல மில்லியன் டொலர்களை  இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர் ஒரு மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார். இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என வேண்டுகோள் விடுப்பார்.

இது எனக்கு நடந்துள்ளது. நான் பிரதமராகயிருந்தவேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள். அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன்.

எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே அவ்வாறு பெருந்தொகை பணத்துடன் வந்தார்.

உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு வெளியே போகாவிட்டால் நான் உங்களை கைதுசெய்வேன் என எச்சரித்தேன்.

அந்த நபருடன் சிங்கப்பூரை சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வந்திருந்தார்.

இளவயதிலிருந்து விழுமியங்களை கற்றுக்கொடுப்பதற்கு முயலவேண்டும், ஊழலிற்கு பழகிப்போனவர்களின் மனதை மாற்றுவது கடினம்.

உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள் என தெரிவிக்கும் ஜனாதிபதியொருவரும் இருந்தார். அவர் இதனை தனது அமைச்சரவைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், தனது கட்சிக்காரர்களிற்கும் தெரிவித்துள்ளார்.

அனைவரும் திருடினார்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. இந்த அமைப்பு முறையே நாட்டை சீரழித்தது.

அரசாங்கத்தின் திட்டங்களை பெற்றுக்கொள்வதற்காக வர்த்தகர்கள் இலஞ்சம் வழங்க முன்வருவார்கள், பரந்துபட்ட ஊழல் நாட்டை இறுதியில் வங்குரோத்து நிலைக்கு இட்டுச்செல்லும்.

https://www.virakesari.lk/article/196489

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் அவரை  லஞ்ச தடுப்புக்காவலர் கைது செய்யவில்லை? இவர் லஞ்சம் வாங்காவிட்டால், வேறொருவர் வாங்குவர். இவரிடம் இருந்து வந்தவர் தானே மஹிந்த. அவரிடம் எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது? இவர் ஊழல் மோசடிக்காரரை தண்டிக்காது விட்டால் லஞ்சத்தைஅனுமதித்தார் என்பதுதானே அர்த்தம். 

32 minutes ago, ஏராளன் said:

பரந்துபட்ட ஊழல் நாட்டை இறுதியில் வங்குரோத்து நிலைக்கு இட்டுச்செல்லும்.

நாடு வங்குரோத்தில்த்தான் இயங்குது என்பதை யாரும் இவருக்கு இன்னும் தெரிவிக்கவில்லைப்போலும்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, satan said:

ஏன் அவரை  லஞ்ச தடுப்புக்காவலர் கைது செய்யவில்லை? இவர் லஞ்சம் வாங்காவிட்டால், வேறொருவர் வாங்குவர். இவரிடம் இருந்து வந்தவர் தானே மஹிந்த. அவரிடம் எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது? இவர் ஊழல் மோசடிக்காரரை தண்டிக்காது விட்டால் லஞ்சத்தைஅனுமதித்தார் என்பதுதானே அர்த்தம். 

நாடு வங்குரோத்தில்த்தான் இயங்குது என்பதை யாரும் இவருக்கு இன்னும் தெரிவிக்கவில்லைப்போலும்.   

எல்லாரும் தேர்தல் வரும்போதுதான்... மைக்கை பிடித்து கருத்து சொல்கிறார்கள்.
அதிகாரத்தில்... இவர் இருக்கும் போது, அந்த லஞ்சம் கொடுத்தவரை கைது செய்திருக்க வேண்டியதுதானே. இப்ப வந்து... யாருக்கு நாடகம்  போட்டு காட்டிக் கொண்டு இருக்கின்றா. 
சீனா போன்ற நாடுகளில்... இப்படி காலம் கடந்து தகவல்களை சொன்னால்... பிடித்து உள்ளே போட்டிருப்பார்கள். அல்லது ஆளே... அட்ரஸ் இல்லாமல் போயிருக்கும்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

எனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பெண் ஒருவரின் கணவர் எனக்கு பல மில்லியன் டொலர்களை  இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 

தமிழர்களிடையே புதைகுழி கலாசாராத்தை அறிமுகப்படுத்திய அம்மா சொல்லுறா எல்லோரும் கேழுங்கோ.

பாடசாலை சீருடையோடே இராணுவத்தால் குதறி கொலை செய்யப்பட்ட அருமை குழந்தை கிருசாந்தியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மணீ ..லண்டனிலை பழைய  அரச பரம்பரை மாளிகை வாங்கினதுக்கும் ...அதிவிலைகூடிய மதுபான வகைகளை வாங்கி குடித்ததிற்கும் எங்கத்தையானாம் காசு....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

இது எனக்கு நடந்துள்ளது. நான் பிரதமராகயிருந்தவேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள். அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன்

எவ்வளவு பணம் கொண்டு வந்தார்கள் என்றும் அம்மையார் சரியாக சொல்றா. ஆகவே இது ஒரு நடந்து முடிந்த கதை, காசு கச்சிதமாக கைமாறியுள்ளது நிச்சயம். அதை மாற்றி ரெக்கோர்டை திருப்பிப்போடுரா! அனுரவின் குழுவில் சேர்ந்து கொள்ள தனது தகமைகளையும் சொல்லிகொள்ளத்தானேவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, alvayan said:

அம்மணீ ..லண்டனிலை பழைய  அரச பரம்பரை மாளிகை வாங்கினதுக்கும் ...அதிவிலைகூடிய மதுபான வகைகளை வாங்கி குடித்ததிற்கும் எங்கத்தையானாம் காசு....

 தனக்கு சொந்தமான காணிகளை விற்று காருக்கு பெற்றோல், ஊழியருக்கு சம்பளம் இப்படி பல செய்கிறாவாம். காணிகளை வாங்க ஒரு காலம், விற்க ஒரு காலம், வீர வசனம் பேச ஒருகாலம், அனுதாபம் தேட ஒருகாலம். இதுதான் வாழ்க்கை. ஏழை விழுந்தால் தனது சொந்த முயற்சியால் சீக்கிரம் எழுந்து விடுவான். அவர்களுக்கு சிலர் இரங்குவர். அரசியல்வாதி விழுந்தால் யாரும் தூக்கிவிடவர மாட்டார்கள். விலகியே செல்வர். உதாரணம்; இவர், மஹிந்த, கோத்தா, சரத் பொன்சேகா இப்படி நீளும் வரிசை.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.