Jump to content

ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-7-11.jpg?resize=750,375&ssl=

ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!

ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது.

இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் டேங்கர்கள் தடம் புரண்டதாகவும், அவற்றில் இரண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல யானைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவ‍ேளை ரயில் தடம் புரண்டதன் காரணமாக குறித்த மார்க்க மூடான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பாதையும் பாரியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால், இன்று (18) காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

மீட்பு பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

New-Project-9-7.jpg?resize=600%2C338&ssl=1

New-Project-8-11.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2024/1404652

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைகள் மீது புகையிரத வண்டிகள் மோதிய காலம் போய் தற்போது புகையிரத வண்டிகள்  மீது யானைகள் மோதுகின்றன.  அத்துடன் புகையிர வண்டிகளும் தடம் புரள்கின்றன. 

ஆதவா,.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

யானைகள் மீது புகையிரத வண்டிகள் மோதிய காலம் போய் தற்போது புகையிரத வண்டிகள்  மீது யானைகள் மோதுகின்றன.

புகையிரத வண்டிகள்மீது யானைகள் மோதுவதுதான் சரியான வசன நடை.  

தனது வழிதடத்தை பக்கவாட்டில் எந்த பக்கமும் திருப்பமுடியாத நேர்கோட்டில் செல்லும் இயந்திரத்தின்மீது தேடி சென்று தம்மை மோதிக்கொள்வது விலங்குகளோ அல்லது மனிதனோதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, valavan said:

புகையிரத வண்டிகள்மீது யானைகள் மோதுவதுதான் சரியான வசன நடை.  

தனது வழிதடத்தை பக்கவாட்டில் எந்த பக்கமும் திருப்பமுடியாத நேர்கோட்டில் செல்லும் இயந்திரத்தின்மீது தேடி சென்று தம்மை மோதிக்கொள்வது விலங்குகளோ அல்லது மனிதனோதான்.

யானை புகையிரதத்தை மோதியதா அல்லது புகையிரதம் யானையின் மீது மோதியதா? 

யானை புகையிரதத்தை இடித்ததா அல்லது புகையிரதம் யானையை இடித்ததா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

யானை புகையிரதத்தை மோதியதா அல்லது புகையிரதம் யானையின் மீது மோதியதா? 

யானை புகையிரதத்தை இடித்ததா அல்லது புகையிரதம் யானையை இடித்ததா? 

கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விட கைவசம் இருக்கும்

Just now, valavan said:

கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விடை கைவசம் இருக்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

யானை புகையிரதத்தை மோதியதா அல்லது புகையிரதம் யானையின் மீது மோதியதா? 

யானை புகையிரதத்தை இடித்ததா அல்லது புகையிரதம் யானையை இடித்ததா? 

நீங்கள் வேறை நான் ரணிலுடன் எண்டல்லே வாசிச்சனான்

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விட கைவசம் இருக்கும்

வழமையில் காலில் கல் அடித்துவிட்டது என்று தான் சொல்லுவோம்.

எவருமே கல்லுக்கு அடித்துவிட்டேன் என்று சொல்வதில்லை

கெளரவப் பிரச்சனையோ?

13 minutes ago, வாதவூரான் said:

நீங்கள் வேறை நான் ரணிலுடன் எண்டல்லே வாசிச்சனான்

ரணில் யானையை மறந்து ரொம்ப நாளாச்சு .

Edited by ஈழப்பிரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

வழமையில் காலில் கல் அடித்துவிட்டது என்று தான் சொல்லுவோம்.

எவருமே கல்லுக்கு அடித்துவிட்டேன் என்று சொல்வதில்லை

கெளரவப் பிரச்சனையோ?

அப்படி தென் கிழக்காசியர்கள்தான் சொல்லுவோம், வெள்ளைக்காரர்கள் அப்படி சொல்வதில்லை.

I hurt myself

என்று தன்னோட தவறை ஒப்புக்கொள்வார்கள் ஈழபிரியன் அண்ணாவுக்கு தெரியாததா என்ன,

நாம் எம்மோட தவறை ஒப்புக்கொள்வது குறைவு அல்லது அடுத்தவன் தலைமேல் போடுவது அதிகம் என்பதால் அப்படி சொல்கிறோம் போலும், 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

புகையிரத வண்டிகள்மீது யானைகள் மோதுவதுதான் சரியான வசன நடை.  

தனது வழிதடத்தை பக்கவாட்டில் எந்த பக்கமும் திருப்பமுடியாத நேர்கோட்டில் செல்லும் இயந்திரத்தின்மீது தேடி சென்று தம்மை மோதிக்கொள்வது விலங்குகளோ அல்லது மனிதனோதான்.

காடுகளில் மிருகங்களுக்கு இல்லாத சுதந்திரம் வேறு எங்கு கிடைக்கும்?
யானைகளோ குரங்களோ நகர்ப்புறம் வந்தாலும் திட்டுவீர்கள். அவை வாழும் காட்டுப்பகுதியில் சுதந்திரமாக நடமாடினாலும் திட்டுகின்றீர்கள். 

யானைகள் மிருகங்கள் நடமாடும் அல்லது யானைகள் போய் வரும் பாதைகளில் எச்சரிக்கையாக இருப்பது ஆறறிவு படைத்த மனிதனின் செயலாக இருக்க வேண்டும்.

தவளைகளுக்கே பாதுகாப்பு வேலிகளை போடும் நாடுகளில் இருந்து கொண்டு ரயிலுக்கு வக்காளத்து வாங்குவதை என்னவென்பது? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

யானைகள் மிருகங்கள் நடமாடும் அல்லது யானைகள் போய் வரும் பாதைகளில் எச்சரிக்கையாக இருப்பது ஆறறிவு படைத்த மனிதனின் செயலாக இருக்க வேண்டும்.

தவளைகளுக்கே பாதுகாப்பு வேலிகளை போடும் நாடுகளில் இருந்து கொண்டு ரயிலுக்கு வக்காளத்து வாங்குவதை என்னவென்பது?

நீங்கள் சொல்வது உண்மைதான் யானைகள் நடமாடும் இடத்தில் மிக குறைந்த வேகத்தில் செல்லவேண்டுமென்று சட்டம் சமிஞ்ஞை எல்லாம் இருந்திருக்கும், ஆனால் இலங்கையில் அதையெல்லாம் யார் மதிக்கிறார்கள். பல யானைகள் படுகாயம் இறப்பு என்று ஆகுமளவிற்கு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றிருக்கிறார், அல்லது தூக்க கலக்கம். அதுவும் எரிபொருளுடன் , நல்லவேளை வெடிக்கல.

ஆபத்தான மலையக ரயில் பாதைகளில் பயணிகள் பெட்டிகளுடன் எரிபொருள் தாங்கிகளையும் இணைத்து ரயிலை ஓட்டி செல்வதை கவனித்திருக்கிறேன்.

ரயில்களுக்கு வக்காலத்து வாங்கியே ஆகவேண்டும் ஓட்டுறவன் சரியில்லையென்றால் அது என்ன செய்யும் பாவம்?

நான் குறிப்பிட்டது யாதெனில் சட்டென தன் பாதையை மாற்றிக்கொள்ள முடியாத வாகனங்களுடன் மோதினால் ந்ம்மை மோதியதல்ல  நாம் மோதியது என்ற சொற்றொடர்தான் சரியானது என்பதே.

விமானங்களும் பறவைகளும் முட்டிக்கொண்டால் விமானத்துடன் மோதிய பறவைகள் என்றே சொல்வார்கள், பறவைகளை மோதிய விமானம் என்று யாரும் சொல்வதில்லை.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

கல்லு காலில் அடித்ததா இல்லை கல்லை கால் அடித்ததா என்று சிந்தித்து பாருங்கள் உங்களிடமே விட கைவசம் இருக்கும்

 

மிருகங்கள் ஒருபோதும் எந்த ஒரு வாகனத்தையும் மோதுவதில்லை. ஆனால் வாகனங்கள்தான் போய் மிருகங்களை மோதுகின்றன. 

இங்கே எது எதன் மீது வலிந்து போய் மோதியது என்பதுதான் விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, valavan said:

விமானங்களும் பறவைகளும் முட்டிக்கொண்டால் விமானத்துடன் மோதிய பறவைகள் என்றே சொல்வார்கள், பறவைகளை மோதிய விமானம் என்று யாரும் சொல்வதில்லை.

ஏனைய உயிரினங்களுடன் சமனிலை படுத்தும் போது மனிதன் என்றுமே தனக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்குவான். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைக்கு இரக்கப்படும் உறவுகள் அது சிங்களவன் என்றாலும் சரி தமிழன் என்றாலும் சரி ...............................................................................................................பலரை காயபடுத்த விரும்பவில்லை .

 

நாம் அழிந்த உலகத்தில் யானை இருந்தால் என்ன மனிசன் இருந்தால் என்ன ? போய் தொலையுங்க .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான (AirlineRatings.com) நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்புக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 607 இன் விமான கேப்டன் ஒருவர் தனது துணை விமானியை விமானி அறைக்கு வர அனுமதிக்காத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானம் பறந்து கொண்டிருந்த போது துணை விமானி கழிப்பறைக்குச் சென்றுள் திரும்பிய பிறகு கேப்டன் கதவைத் திறக்கவில்லை என கூறப்படுபடுகிறது. இதன் காரணமாக இதுவரை ஏழு நட்சத்திரங்களாக இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பெரும் அவமதிப்பு  சம்பவம் தொடர்பில் இலங்கை விசாரணைகளை முன்னெடுத்திருந்த போதிலும் இந்த சம்பவத்தின் மூலம் சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பெரும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த விமானம் கொழும்பில் தரையிறங்கிய பின்னர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட விமானி  சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு பிரிவு மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மனித வள முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், கேப்டனின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பான சுயாதீன விசாரணைகள்    இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. இரண்டு விசாரணைகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தாலும் மற்றொன்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையாலும் நடத்தப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவையின் பொதுத் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் அடிப்படையில் ஆசியாவின் பழமையான விமான சேவை நிறுவனமாக கருதப்படும் ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் பல சிக்கல்களை  சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அனைத்து விசாரணைகளும் சர்வதேச விமான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் எனவும், இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையின் பின்னர் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையால் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/srilankan-airlines-important-announcement-1729300082
    • பதவி ஆசை தலைதூக்காமல், ஒருவரிடம் அதிகாரம் குவியாமல், மற்றவரை குற்றம் சாட்டி தங்களை மறைத்துக்கொள்ளாமல் எல்லோரையும் சமமாக மதித்து அவரவர்க்குரிய மரியாதையையும் பதவிகளையும்  பகிர்ந்தளித்து கொள்கைகளை மதித்து உட்பட்டு மக்கள் நலனை கருத்திற்கொண்டு கூடி ஆலோசித்து ஒருமித்து முடிவுகளை எடுத்து காரியமாற்றினால்; இந்த கட்சி எல்லோரையும் இணைத்து வீறுநடை போடும். அதற்காக குள்ள நரிகளையும் குழப்பிகளையும் குடைச்சல் காரரையும் தூரவே வையுங்கள்.
    • வல்வையில் பாசி படர்ந்து போய்கிடக்கிறது ...இந்துவிலும்  அதேநிலைதான்...திறப்புவிழா படம் காட்டியதும்  யாவும் ...தலை கீழாகிவிடும்..
    • இதுதான் அங்குள்ள உண்மையான நிலைமை... ஒருமாயை அங்கு உருவாக்கப் படுகிறது...அதற்கு உதவியாக அலைந்து திரியும் யூ டியூப் காரர் களமிறக்கப் பட்டிருக்கினம்...அவையும் ஆகா ஓகோ என்று புழுகினம்...வடக்கில் எதற்கும் துணிந்த விடுகாலி அரசியல்வாதிகள் இருப்பதை  மறந்து...ஒரு சிலரைத்தவிர மக்கள் பெரிதாக இதை அலட்டிக் கொள்வதில்லை..என் அனுபவம்..
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.