Jump to content

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின்  உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை  துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

pho_media__4_.jpeg

pho_media__2_.jpeg

pho_media__1_.jpeg

pho_media__5_.jpeg

https://www.virakesari.lk/article/196648

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட காலத்தின் போது மிகவும் துணிச்சலாக பல செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு

டக்ளசின் கட்டளையின் பேரில் படுகொலை செய்யப்பட்ட

நிமலராஜனுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

உதயன் பத்திரிகை இதுபற்றி எதுவும் எழுதவில்லையா?

3 hours ago, ஏராளன் said:

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை  துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவரது வழக்கு மூடப்பட்டமையால் இனி மீண்டும் திறக்க முடியுமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

போராட்ட காலத்தின் போது மிகவும் துணிச்சலாக பல செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு

டக்ளசின் கட்டளையின் பேரில் படுகொலை செய்யப்பட்ட

நிமலராஜனுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

உதயன் பத்திரிகை இதுபற்றி எதுவும் எழுதவில்லையா?

இவரது வழக்கு மூடப்பட்டமையால் இனி மீண்டும் திறக்க முடியுமோ தெரியவில்லை.

இந்த வழக்கை மீண்டும் தோண்ட வேண்டும். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அலைகளின் நடுவே sudumanal இலங்கை அரசியல் ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும். 2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். இந்த 5 வருடத்தில் அரசியலில் ஜேவிபியோ அநுரவோ அப்படி என்னத்தைத்தான் புரட்டிப் போட்டார்கள், இந்த அலையை உருவாக்க என்றால் பதில் ஏதுமில்லை. 2022 இல் நடந்த அரகலய போராட்டத்தின் காலப்புரட்சியை ஒரு அமைப்பு வடிவம் பெற்றிருந்த ஜேவிபி தன்வசமாக்கியததான் நடந்தது. இந்த அரகலய போராட்டத்தை முன்னின்று நடத்திய சமவுரிமைக் கட்சியும் வெவ்வேறான இடதுசாரிய சிந்தனைக் குழுக்களும் உதிரிகளும் இந்த அமைப்பு வடிவத்தை கொண்டிராததால் அரகலயவில் பங்குபற்றிய ஜேவிபி இந்த தன்வயமாக்கலை நடத்தியது. அதன் வெற்றிதான் அநுரவின் வெற்றி. எனவே அநுர வென்றார் என்பதைவிட, அநுரவை அரகலய ஒரு முன்பாய்ச்சலான வரலாற்றுக் கட்டத்தில் தலைவராக நிறுத்தியிருக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும். அரகலய எதிர்த்துப் போராடிய ஊழல் அமைப்புமுறைக்கும் இனவாதத்துக்கும் இடமளிக்க அனுமதிக்கப்படாத வரலாற்றுக் கட்டம்தான் அது. இந்த வரலாற்று நிலைமையை உருவாக்கியது நாட்டை திவாலாக்கிய பொருளாதார நெருக்கடிதான். இந்தக் காரணிகளின் ஒட்டுமொத்தக் குரலாக “முறைமை மாற்றம்” system change என்பதை அரகலய தனது முழக்கமாக முன்வைத்தது. என்பிபி யின் தேர்தல் பிரச்சாரம் இவற்றை மையங்கொண்டிருந்தது, இருக்கிறது, இருக்கிறது.  இதே ஊழல் அரசாங்கத்தில் பாராளுமன்றத்திலும் குறுகியகால அமைச்சர் பதவியிலும் பங்குகொண்டவர்கள் ஜேவிபியினர். போரில் பங்குகொண்டவர்கள் அல்லது போரை ஆதரித்தவர்கள். நாட்டுக்குள் இனவழிப்பைச் செய்து வெற்றிகொண்ட போரை பாற்சோறு காய்ச்சி கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். இந்தப் போர் அதிகாரவர்க்கம் கட்டற்ற ஊழலை செய்யவும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவும் பொருளாதார வீழ்ச்சியை துரிதமாக்கவும் இனவாத சிந்தனையை கூர்மைப்படுத்தவும் செய்தது. இவையெல்லாம் நாட்டை பேரழிவுக்குத் தள்ளியது என இப்போ சொல்ல முடிகிற நிலையை அவர்கள் (JVP) அன்று எதிர்த்து நின்று காட்டியவர்கள் அல்ல. அதை அரகலயதான் காட்டியது. எனவேதான் இந்த அரசாங்கத்தை அரகலய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் நிறுத்தியிருக்கிறது என்கிறேன். இன்று அவர்கள் சொல்லுகிற மாற்றம் என்பதை நிகழ்த்த பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை ஆசனங்களை அவர்கள் பெற வேண்டும் என்பது தர்க்க நியாயமான ஒன்று. அவர்கள் பெறுவார்கள் என்பது என் கணிப்பு. சிறுபான்மை இனங்கள் 2019 இல் ஜேவிபி க்கு அளித்த வாக்குகளை விட பலமடங்கு அதிகமாக அநுராவுக்கு கொடுத்தார்கள் என்பது புள்ளிவிபரம் காட்டும் விடயம். அதை அநுரவே சொல்லியுமிருக்கிறார். எந்த மாகாணங்களில் எந்தக் கட்சி கூடுதலான வாக்குகளைப் பெற்றது என்ற பருமட்டான வர்ண அடையாளமிட்ட வரைபடத்தை வைத்துக் கொண்டு சிங்கள மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். சிறுபான்மை இனங்கள் மாற்றத்தை விரும்பவில்லை என முடிவுக்கு வருவது பருண்மையானது. தவறானது. மாற்றத்தை விரும்பாத சாமான்ய அல்லது விளிம்புநிலை மனிதரை எங்காவது காண முடியுமா என்ன. மாற்றத்துக்காக அரகலயவை நடத்தியவர்களில் குமார் குணரட்ணம் தலைமை தாங்கும் சமவுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜேவிபியிலிருந்து தள்ளி நிற்பதையும் இன்னொரு பகுதியினர் நுவான் போகபே அவர்களை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி வாக்களித்தார்கள் என்பதையும்கூட வசதியாக மறந்து அல்லது மறைத்து எழுதும் ஆய்வுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும். அவர்களும் மாற்றத்தை விரும்பாதவர்களா என்ன. அதிகாரத்தை சுகிப்பவர்களும் ஊழலில் திளைப்பவர்களும் என வாழ்க்கை நடத்தும் அதிகார சக்திகள் -அவர்கள் எந்த இன, மத, மொழியைச் சேர்ந்தவர்களாயினும்- மட்டுமே மாற்றத்தை விரும்பாதவர்களாக, அதை எதிர்ப்பவர்களாக இருப்பர் என்ற வர்க்க குணாம்சத்தைக்கூட புரியாமல் ஆய்பவர்களுக்கு வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் முகத்திலறைந்து ஒரு செய்தியைச் சொல்லத்தான் போகிறது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற சிறுபான்மையின கட்சிகளே நாங்கள் அநுரவின் “மாற்றம்” க்கு ஆதரவாக இருப்போம் என வாக்குக் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது சிறுபான்மையின மக்களின் வாக்குகள் என்பிபி க்கு திரும்பத் தொடங்கியிருக்கிறதின் அறிகுறி. அப்படி அவர்கள் பெரும்பான்மையாக என்பிபி க்கு வாக்களிக்கிற நிலை வருகிறபோது, ‘திருந்திவிட்டார்கள்’ என்ற ஒற்றைச் சுட்டலானது -சாத்தியப்பாடுகளை முன்வைத்து எழுதவேண்டிய ஆய்வுகளுக்கு ஈடாக- எந்த அரசியல் அர்த்தத்தையும் வழங்காது. மாற்றம் என்பது மாறிவிடலை மட்டும் குறிப்பதில்லை. மாற்றத்தை நோக்கிய வளர்ச்சியையும் குறிப்பது. சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஜேவிபி க்கான அந்த வாக்கு வளர்ச்சியை புறக்கணித்து மாற்றத்தை விரும்பாதவர்கள் என முத்திரை குத்துவது ஒருவகை அறிவுச் சோம்பேறித்தனம் மிக்கது. தமிழ் மக்களின் வரலாறு குறிப்பாக 30 வருட போர் என்பது அழிவுகளின் வரலாறு. அது ஏற்படுத்திய தாக்கத்தை, தனித்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மீதான தயக்கத்தை புறக்கணித்து, ஆதரவு-எதிர்ப்பு என்ற இருமை சிந்தனையோடு அணுக முடியாது. இந்த தயக்கத்தினதும் தாக்கத்தினதும் உளவியல் எல்லா தமிழ்க் கட்சிகளினதும் வாக்குவங்கியை வங்குரோத்தாக விடாமல் வைத்திருக்கிறது. உருப்படியாக எதையுமே செய்யாமல் தமிழ்த் தேசியம் என்ற மந்திரத்தை ஓதி ஓதியே அரசியல் நடத்த அது வசதியாகவும் போய்விட்டது. அது தனியான ஒரு விடயதானம். இப்போ அதிக பெரும்பான்மையை என்.பி.பி எடுக்கிற பட்சத்தில், அது மாற்றத்தை நிகழ்த்துகிற படிமுறைகளில் முன்னேற வேண்டும். ஏனெனில் மக்கள் ஆணை வாக்குகளினால் கொடுக்கப்பட்டுவிடும். அதை அவர்கள் நிகழ்த்துவதில் அரச (state) வடிவக் கட்டமைப்பு எந்தத் தூரம் வரை அரசாங்கத்துடன் (government) பயணிக்கும் என்ற கேள்வி புறக்கணிக்க முடியாதது. 340 கோடி ஊழல் செய்த அர்ஜுன் அலோசியஸ் க்கு (மென்டிஸ் நிறுவனம்) வரி ஏய்ப்புக்காக அரச(state) கட்டுமானத்திற்கள் இயங்கும்- நீதிமன்றம் ஆறே ஆறு மாத கால சிறைத்தண்டனையை வழங்கியிருக்கிறது. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதுபோல் புதிய அரசாங்கத்தைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. ஊழல் செய்வதற்கு எதிரான மனநிலையை அல்லது அச்சத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊழல் செய்வதற்கு தயங்காத ஒரு மனநிலையை இந்தத் தீர்ப்பு வழங்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. பௌத்த மேலாதிக்க பெரும்பான்மைவாதத்தை அடித்தளமாகக் கொண்ட அரச கட்டமைப்பின் கருத்தியல் அகற்றப்படும் வரை “முறைமை மாற்றம்” என்பது ஒரு ஏமாற்று. சமத்துவம் என்பது ஒரு ஏமாற்று. எனவே அரசாங்கம் ஒரு சமூகநல அரசு என்ற வடிவத்தை நிர்மாணிப்பது முடியுமானதாகலாம். நிர்வாகத்துள் மாற்றம், செயற்திறன், ஊழலின்மை போன்றவற்றை அது சாதிக்கலாம். ஓர் அதிகாரப் பரவலாக்கல் முறைமையை பரீட்சிக்கலாம். முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் அதிக கரிசனம் செலுத்தலாம். நடைமுறையில் வீரியமாக செயற்படலாம். முறைமை மாற்றம் என்பது அரகலயவின் முழக்கம். அதைச் சொல்லியே பாராளுமன்றத் தேர்தலிலும் வென்றபின், எல்லா புழுதிகளும் அடங்கியபின், வரலாறு என்பிபி யை கொணர்ந்து விட்டிருக்கிற இடத்திலிருந்து முன்னோக்கி பயணித்தாலே இந்த முழக்கத்தை தம்மோடு வைத்திருக்க முடியும். இது நடவாதபோது அல்லது முடியாதபோது அந்த தேக்கத்தை வரலாறு உடைக்கவே செய்யும். அந்த முழக்கம் திரும்பவும் மக்களிடமே வந்து சேரும். அரசு கட்டமைப்பையும் அதன் வன்முறை இயந்திரமான இராணுவத்தையும் திருப்திசெய்ய வேண்டிய நிலையின் அறிகுறி ஏற்கனவே தென்பட்ட ஒன்று. போர்க்குற்றத்தை உள்ளக விசாரணை செய்து உண்மையை கண்டறியலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை தண்டிக்க மாட்டோம் என்பதை அநுர தெளிவாகவே சொல்லிவிட்டார். ஈஸ்ரர் படுகொலையின் சூத்திரதாரிகள் அரசியல்வாதிகள் என்பதைத் தாண்டி இராணுவ உளவுப்படையினரும் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வெளிச் சதியாகவோ சிக்கல் அவிழுமாக இருந்தால் என்ன நடக்கும். இயலாமைகள் அல்லது மாற்றத்திற்குக் குறுக்கே எழும் தடைகளை தாண்ட முடியாத நிலையில் என்ன நிகழும். அதிகாரம் பண்புமாற்றத்தை என்பிபி அரசாங்கத்திடம் ஏற்படுத்திவிடக் கூடுமா, இன்னொரு அரகலய மேலெழும்புமா? அப்படி ஏற்படும் பட்சத்தில் அதை அரச அதிகார நிலையில் நின்று என்பிபி எப்படி கையாளும் என பல கேள்விகளுக்கான விடையை எதிர்காலம்தான் வைத்திருக்கிறது.  இந்த 70 வருடகால அரசியல் பாரம்பரியத்துக்கு வெளியே, அரகலய மக்கள் போராட்டம் முன்வைத்த மாற்றம் என்ற புதிய எழுச்சி ஏற்படுத்திய புது நம்பிக்கையை என்பிபி சுமந்து நிற்கிறது. இதில் ஏமாற்றம் நிகழுமாயின் அதன் தாக்கம் மக்களின் உளவியலில் பலமானதாகவே இருக்கும். என்பிபி இதில் வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. நமதும்! பிரதமர் ஹரிணி அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது என்பதைவிட அது அவர்களின் உரிமை என்று சொல்வதே சரியானது என்று தெளிவாக சொன்ன சொற்கள் முளைவிட்டு நிமிர்வதற்குமுன், என்பிபி யின் பொதுச்செயலாளர் சில்வா அவர்கள் “வடக்குக்கு 13ம் சட்டத் திருத்தமும் தேவையில்லை. அதிகாரப் பகிர்வும் தேவையில்லை. பொருளாதார வளர்ச்சியே தேவை” என சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயக முறைமையின் ஒரு செழுமையான அம்சம் என்பதற்கு சுவிற்சர்லாந்து ஓர் அசல் உதாரணம்.  அது ஒருபுறம் இருக்க, எல்லா முரண்பாடுகளையும் பொருளாதார பிரச்சினைக்குள் உட்படுத்துவதை மார்க்சிய வழித்தோன்றல்களாக தம்மை காட்டிக் கொண்ட ஜேவிபி கூறுவதை ஏற்க முடியவில்லை. இலங்கையை இந்த நிலைமைக்குள் தள்ளிய இனப் பிரச்சினையின் தனித்தன்மையை மற்றைய பிரச்சினைகளுடன் ஒரே சிமிளினுள் அடைத்து முன்பு வர்க்கப் பிரச்சினை மட்டும்தான் என்றார்கள். இப்போ பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் என்கிறார்கள். பொருளாதார நெருக்கடி முதன்மை முரண்பாடாக தோன்றி இனவாதத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியிருக்கிறதே யொழிய நீண்ட வரலாறும், செயற்பாடும், பொது உளவியலும் கொண்ட இனவாதத்தை ஒரு தேர்தலால் அடித்து வீழ்த்த முடியும் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை புரட்சியாளர் தோன்றுவர் என எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது. * 19102024 ravindran pa   https://sudumanal.com/2024/10/19/அலைகளின்-நடுவே/#more-6566
    • பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் ஒரு காட்சி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிராமப்புறங்களில் கல்வியின் தேவை என்ன என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியுள்ளது விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம். நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாயா தேவி நடிகையாக நடித்துள்ளார். நடிகர் சரவணன், விமலின் தந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1980களை களமாக கொண்ட திரைப்படம் இது. ஏற்கனவே கிராமம் ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்திருந்தார் விமல். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது. விமல் மீண்டும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், வாகை சூடவா படத்தைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதா? படத்தின் கதை என்ன? அரசு உதவி பெறும் பள்ளிக்கு வரும் புதிய ஆசிரியர் அங்குள்ள பிரச்னைகளை எவ்வாறு கையாளுகிறார் என்பது தான் படத்தின் கதை. "வறுமையில் இருந்து வெளியேற கல்வி மட்டுமே உதவும்," என்பது தான் படத்தின் ஒன்லைன் என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. புதுக்கோட்டையில் உள்ள மாங்கொல்லை பகுதியில் உள்ள தனது தந்தைக்குச் சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக மாற்றும் முனைப்பில் இருக்கிறார் விமல். "அப்பா பின்பற்றும் வழி நிராகரிக்கப்பட்டு பிறகு ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு வழக்கமான அப்பா - மகன் கதை தான் இது," என்றும் படம் குறித்து குறிப்பிடுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. "காலம் மாறி தலைமுறைகள் கடந்தாலும் சாதியும் கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் அந்த ஊர் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாகவே நிற்கிறது. இதை எதிர்த்து அந்த ஊர் மக்கள் எப்படி முன்னேறுகிறார்கள்? அவர்களுக்கு எப்படி கல்வி கிடைக்கிறது என்பதுதான் ‘சார்’ படத்தின் கதை," என்று கூறுகிறது தி இந்து தமிழ் திசையின் காமதேனு.   பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி படம் விறுவிறுப்பாக நகர்கிறதா? கல்வி கற்க விரும்பும் பட்டியல் பிரிவை சார்ந்த மக்களை ஒடுக்க நினைக்கின்றனர் ஆதிக்க சாதியினர். "சாதி, மதம், கல்வி என மிகவும் பழமையான திரைக்கதையை தன்னுடைய பாணியில் அழகாக இயக்கியுள்ளார் போஸ் வெங்கட்," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. "கல்வி பெற்றால் ஒரு சமூகம் முன்னேறும் என்ற விஷயத்திற்கு சாதி பெருமையும், கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் எப்படி தடையாக இருக்கின்றன என்பதையே படத்தில் சொல்ல வருகிறார்கள். ஆனால், அது திரைக்கதையில் இருந்து படமாகி இருக்கும் விதம் பயங்கரமான சறுக்கலை சந்தித்திருக்கிறது. சீரியஸான கதைக்களம் எடுத்திருப்பதால் ஆடல், பாடல், காதல் என முதல் பாதியில் ரசிகர்களை எண்டர்டெயின் செய்வோம் என எடுத்திருக்கும் விஷயம்தான் சொதப்பல். இடைவேளை வரையிலுமே கதைக்கரு நேர் கோட்டில் பயணிக்காமல் எங்கெங்கேயோ பயணிப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சி தருகிறது," என படத்தின் குறைகளை பட்டியலிடுகிறது காமதேனு.   பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, இடைவேளை வரையிலுமே கதைக்கரு நேர் கோட்டில் பயணிக்காமல் எங்கெங்கேயோ பயணிப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சி தருகிறது இதர கலைஞர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது? "படத்தில் ஞானம் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விமல். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சரவணன், சாயாதேவி, ரமா, ஜெயபாலன் மற்றும் பலர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இனியன் ஹாரிஸூடைய ஒளிப்பதிவும், சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்," என்கிறது காமதேனு. "விமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எளிமையான, தீவிரமான காட்சிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகையாக சாயா தேவி போட்டிபோட்டு நடித்துள்ளார்," என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. படத்தில் கதாநாயகியாக வரும் சாயாதேவியின் கதாபாத்திரம் வழக்கமான சினிமா நாயகியாக அணுகப்பட்டு வீணடிக்கப்பட்டிருக்கிறது, என்கிறது காமதேனு. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் விமர்சனம், படத்தின் முரண்களைப் பற்றி குறிப்பிடும் போது, "விமல், படத்தில் நாயகியாக வரும் சாயா தேவியை பார்வை மோக நடத்தையுடன் (voyeuristic) அணுகுகிறார். இருப்பினும் அந்த பெண் இவரை விரும்புவது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காட்சிகளில் தன்னுடைய நடிப்பின் மூலம் கவரும் விமல், சாயாவை அணுகும் முறையை ஒரு குறும்புத்தனமாக காட்டியிருப்பது பிரச்னையாக இருக்கிறது," என்று கூறியுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். "80களில் அமைந்த கதைக்களத்தை ஒளிப்பதிவு நேர்த்தியாக செய்திருந்தாலும், எடிட்டிங் தொடர்பற்றதாக இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு பாடல்களை படத்தில் இருந்து நீக்கியிருக்கலாம்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. . இனியன் ஜே ஹரிஸின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. கிராமப்புறத்தின் நிலப்பகுதிகளை அழகாக படமாக்கியுள்ளார், என்று விமர்சனம் செய்துள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly60rygvylo
    • தமிழீழ போக்குவரவு காவல்துறை வீதிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் காட்சி 05/07/2006 யாழ் சாலை (ஏ9 வீதி)      
    • கலாநிதி ஜெகான் பெரேரா முக்கியமான தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையுடனானதாகவும் முன்னைய அரசாங்கம் தீர்மானித்த திசையில் தொடர்வதாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையையும்  அதன் இறுக்கமான நிபந்தனைகளையும் பின்பற்றுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய கடுமையாக கண்டனத்துக்குள்ளான முக்கியமான அதிகாரிகளே பொருளாதாரத்தைக் கையாளுவதற்கு பதவிகளில் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் ஜெனீவாவில் தீர்மானத்துக்காக முடிவெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தின் வடிவில் வந்த மிகவும் உடனடியான சர்வதேச சவாலை எதிர்கொண்டதிலும் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த எச்சரிக்கையுடனான அதே அணுகுமுறையையே அரசாங்கம் கடைப்பிடித்தது. ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே கொள்கையையே அரசாங்கமும் கடைப்பிடித்த போதிலும் தீர்மானத்தை நிராகரிப்பதில் பெருமளவுக்கு இணக்கப்போக்கான மொழியைப் பயன்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. முன்னைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய கொள்கைகளின் பயன்களை இந்த அரசாங்கம் அறுவடை செய்கிறது என்று அதை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்ட முனைகிறார்கள். அதே கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் விளைவாகவே முன்னைய அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. ஆனால் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் வரை எச்சரிக்கை தொடரும் சாத்தியம் இருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் சமூக உறுதிப்பாட்டுக்கும் பயனுடையதாக அமைந்திருக்கிறது. அது குறித்து குதர்க்கம் செய்வது முறையல்ல. பொருளாதாரம் கத்திமுனையில் இருந்தது என்றும் அரசாங்க மாற்றம் ஒன்று பொருளாதாரத்தை ஒரு எதிர்மறையான நிலைக்குள் மூழ்கடித்து விடக்கூடும் என்றும் நாட்டின் வர்த்தகத் தலைவர்களினாலும்  சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகத்தினாலும்  கணிசமான அக்கறை  வெளிப்படுத்தப்பட்டது. தேர்தலுக்கு பிறகு வன்முறை எதுவும் மூளாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் மிகவும் நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்ததற்கு அதுவே காரணம். பாற்சோறு சமைத்து பரிமாறி பட்டாசுகளும் கொளுத்தி பாரம்பரியமாக வெற்றியைக் கொண்டாடுவதைப் போன்று தனது வெற்றையைக் கொண்டாட வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க  மக்களிடம் விடுத்த வேண்டுகோளும் அந்த நேர்மறையான நடவடிக்கைகளில் அடங்கும். கடந்த காலத்தில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் வன்முறைக்கும் அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்ததுடன் நாட்டின் பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியது.  ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியையும் அதை தொடர்ந்து சம்பாதித்த நற்பெயரையும் அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான தந்திரோபாயத்தை அரசாங்கம் வகுக்கிறது. அதிகாரத்தில் இருந்த முதல் இரு மாதங்களிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு  நேர்மறையான ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை  அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரும். ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த 42 சதவீதமான வாக்காளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் ஒரு எதிர்ப்பு வாக்கை பதிவு செய்வதற்கே அவரை ஆதரித்தார்கள். பாரம்பரிய வழியில் வாக்களிப்பதில் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். அபிவிருத்திக் கொள்கை  அல்லது ஊழல் ஒழிப்பு தொடர்பில் புதிதாக எந்த திட்டத்தையும் முன்வைக்காதவர்கள் என்று தாங்கள் கண்டுகொண்ட மற்றைய  வேட்பாளர்களை வேட்பாளர்களை மக்கள் நிராகரித்தார்கள். இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் பெரும்பாலான பாகங்களில் மக்கள் நேர்மறையான வாக்கொன்றை அளிப்பார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. மனங்கள் சந்தித்தல்  இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் ஜனாதிபதி பெரும்பான்மையான வாக்குகளைப்  பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜே வி.பி. ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இன, மத சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாசைகளை ஆதரிக்கவில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கைகளின் விளைவாக இலங்கையின் ஐக்கியத்துக்கும் சுயாதிபத்தியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்ற பெரும்பான்மைச் சமூகத்தின் பொதுவான கருத்தையே ஜே வி.பி.யும் கொண்டிருந்தது. இந்த பழைய மனப்போக்கு செய்த பாதகத்தை ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி திசாநாயக்க ஏற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதை தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் வகையிலான உரைகளை அவர் நிகழ்த்தினார். சிறுபானமைச் சமூகங்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டவராக அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு உண்மையான முயற்சிகளை எடுக்கப்போவதாக அவர் சூளுரைத்தார். புதிய அரசாங்கம் முதல் மூன்று வாரங்களிலும் முன்னெடுத்த நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தி தாங்கள் முன்னர் அறிந்திருந்த ஜே வி.பி. அல்ல என்ற என்ற ஒரு நம்பிக்கையை சிறுபான்மைச் சமூகங்களுக்கு கொடுத்திருக்கிறது போன்று தெரிகிறது. அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தமிழ்,  முஸ்லிம் சிவில் சமூகம், மதத் தலைவர்கள் மற்றும் கல்விமான்களுடன் நடத்திய சந்திப்புகள்  நாடு முழுவதையும் தழுவியதாக மனங்களின் சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகிறது என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தின. ஒரு மாற்றத்துக்கும் புதிய முகங்களுக்குமான விருப்பம் சகல பிரிவினரிடமும் காணப்படுகிறது. வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பாரம்பரிய கட்சிகள் மீது மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தாங்கள் தெரிவுசெய்த அரசியல்வாதிகள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தேவையான சேவையைச் செய்யவில்லை என்று அந்த மக்கள் பெரும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்கு நேர்நிகரான அரசியல் சக்தி தற்போது இல்லை. அதனால் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செய்வதைப் போன்று சிறுபானமைச் சமூகங்களைச் சேர்ந்த பலரும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க விரும்பக்கூடிய சாத்தியம் இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களில் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியதாகவோ அல்லது பிரச்சினைகளை தோற்றுவிக்கக்கூடியதாகவோ சர்ச்சைக்குரிய எதுவும் இடம்பெறவில்லை என்பது புதிய கட்சியையும் புதிய தலைவர்களையும் தெரிவுசெய்வதற்கான அவர்களின் விருப்பத்தை வலுப்படுத்தும் எனலாம். கடந்த ஏழு தசாப்தங்களாக மக்களுக்கு பயனுடைய சேவைகளைச் செய்யாதவர்களை நிராகரித்து புதியவர்களை வரவேற்கும் மனநிலை மக்களுக்கு ஏற்படிருக்கிறது. ஆனால், வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தேசிய மக்கள் சக்தி பெருளவுக்கு யதார்த்தபூர்வமாக செயற்பட்டிருக்க முடியும். கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்ற அதேவேளை, வாக்காளர்களுக்கு நன்கு தெரியாதவர்கள் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று கருதமுடியாது. மட்டுப்பட்டுத்தப்பட்ட கலந்தாலோசனை கிழக்கில் வெளிப்படுத்தப்பட்ட இந்த அக்கறைகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் மடடுப்படுத்தப்பட்ட அளவில் கலந்தாலோசனைகள் இடம்பெற்றிருந்தன என்று தெரிகிறது. சகல தரப்பினரையும் உள்வாங்கியதாக இல்லாமல் ஒரு பிரத்தியேகமான முறையில் கட்சியின் உயர்மட்டத்தினால் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் போன்று தோன்றுகிறது. பாரம்பரியமாக ஜே.வி.பி. வாக்குகளைப் பெறுகின்ற - உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற பகுதிகளில் இது ஒரு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்.  அந்த உறுப்பினர்கள் அந்த பகுதிகளின் மக்கள் அறிவார்கள். ஆனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் ஜே.வி.பி. உறுப்பினர்களை பெரிதாக தெரியாது. அதனால் மக்களுக்கு நன்கு சேவை செய்து அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கு பரந்தளவில் சிவில் சமூகத்துடன்  தீவிரமான கலந்தாலோசனைச் செயன்முறை தேவைப்பட்டிருக்கலாம். மேற்கூறப்பட்டது அரசாங்கம் அவசியமாக கையாளவேண்டிய முதலாவது பிரச்சினை என்றால், இன, மத சிறுபான்மைச் சமூகங்களினதும் சர்வதேச சமூகத்தினதும் உறுதியான நம்பிக்கையாக இருந்துவரும் அதிகாரப் பரவலாக்கம் மீதான பற்றுறுதியை வெளிக்காட்ட வேண்டியது இரண்டாவது பிரச்சினையாகும். அரசியலமைப்புக்கான  13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும், உரைகளிலும் உறுதியளித்தார். எந்தவொரு ஜனநாயகத்திலும் பெரும்பான்மையே ஆட்சி செய்கிறது. இன, மத அடையாளங்கள் என்று வருகின்றபோது அங்கு தேர்தல் முறைமையினால் சமத்துவமானதாக்க முடியாத நிரந்தரமான பெரும்பான்மையினரும் நிரந்தரமான சிறுபான்மையினரும் இருப்பார்கள். உள்ளூர் பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்படுகின்ற மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலமாக மாத்திரமே தங்களது அபிலாசைகள் மதிக்கப்பட்டு அரவணைக்கப்படுவதாக  சிறுபான்மையினரை உணரச்செய்யமுடியும். இது விடயத்தில் மூன்று கட்டச் செயற்றிட்டம் ஒன்று கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தினால் சிபாரிசு செய்யப்படுகிறது.  முதலாவதாக, மாகாணங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் என்றாலும், மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி  நடத்துவதன் மூலமாக 13வது திருத்தத்தை உடனடியாக  நடைமுறைப்படுத்துவது. இரண்டாவதாக, அரசியலமைப்பில் இருக்கின்ற போதிலும் கூட இன்னமும் பரவலாக்கம் செய்யப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களையும் திட்டமிட்ட முறையில் அல்லது புறக்கணிப்பு மனப்பான்மையுடன் மாகாணங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களையும் மீளக்கையளிப்பது. மூன்றாவதாக, முன்னெடுக்கப் போவதாக  அரசாங்கம் உறுதியளித்திருக்கும் விரிவான அரசியலமைப்புச் சீர்திருத்த செயற்திட்டத்தில் அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை மேம்படுத்துவது. வேறுபட்ட பிராந்தியங்கள் வேறுபட்ட  பொருளாதாரத் தேவைகளையும் வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றன என்பதை அங்கீகரித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புறம்பாக அதிகாரப் பரவலாக்க கோட்பாட்டை பொறுத்தவரை நோர்வேயின் பிரபலமான சமாதான கல்விமான் பேராசிரியர் ஜோஹான் கல்ருங் கூறிய அறிவார்ந்த வார்த்தைகளை கருத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும். "எமக்கு சொந்தமானவர்கள் சற்று  இரக்கமில்லாதவர்களாக இருந்தாலும் கூட அவர்களால் ஆளப்படுவதையே நாம் விரும்புகிறோம்" என்று அவர் விடுதலைப் புலிகளுடனான போர்க்காலத்தில் இலங்கையில் கூறினார். https://www.virakesari.lk/article/196580
    • படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பழனியாண்டி பணத்தை பெற்றுக் கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை 22 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். 1970களின் மத்திய காலம் அது. வீட்டை காலி செய்யும் போது, வேலைகளை செய்ய உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதின்வயது சிறுவனான ரஞ்சித்தின் உதவியை அந்த தம்பதியினர் நாடியுள்ளனர். பொருட்களை பழைய வீட்டிலிருந்து மாற்றி, புதிய வீட்டில் வைக்கும் வேலை பரபரப்பாக நடந்தது. பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சித். அப்போது பழைய வீட்டில் இருந்த ஒரு தலையணையைப் புரட்டியபோது, அதற்கு அடியில் ஒரு சிறு தொகை இருந்தது. அந்த தொகை அவருடைய வாழ்க்கையை மாற்றும் என்று அன்று அவர் எதிர்பார்க்கவில்லை.   தலையணையின் அடியில் மொத்தமாக ரூ. 37.50 இருந்தது. வேலை ஏதும் இல்லாமல் இருந்த ரஞ்சித், அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டார். வீடு மாறும் மும்முரத்தில் இருந்த எழுவாய்க்கு தலையணைக்கு அடியில் பணம் வைத்திருந்தது வெகு நேரத்திற்குப் பிறகே நினைவுக்கு வந்தது. வீடு மாறிய பிறகு, பணத்தைத் தேடியவர், தயக்கத்துடன் ரஞ்சித்திடம் அந்தப் பணத்தைப் பற்றிக் கேட்டுள்ளார். ஆனால், அப்படி பணம் எதையும் தான் பார்க்கவில்லையென ரஞ்சித் மறுத்துவிட்டார். அந்த காலகட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் வறுமைச் சூழலில் 37 ரூபாய் என்பது சற்றுப் பெரிய தொகைதான். இதையடுத்து, கோவிலுக்குப் போய் சாமியிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார் எழுவாய். இதைக் கேட்டு சற்று அதிர்ந்து போனாலும், இவரும் எழுவாயுடன் கோவிலுக்கு சென்றுள்ளார் ரஞ்சித். எழுவாய், கடவுளிடம் முறையிட்டுவிட்டுச் சென்றவுடன் இவரும் கடவுள் சிலை முன்பு நின்று, "அந்தப் பணத்தை நான்தான் எடுத்தேன் என்னை ஒன்றும் செய்துவிடாதே" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.   படக்குறிப்பு, சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதியர் மலையகத்தில், தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்த்துவந்தனர். வீட்டில் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழகம் வந்த ரஞ்சித் ரஞ்சித்தின் தாய் மாரியம்மாள், தந்தை பழனிச்சாமி ஆகிய இருவருமே இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்கள். ரஞ்சித்திற்கு மூன்று அண்ணன்கள், இரண்டு மூத்த சகோதரிகள் என பெரிய குடும்பம். வறுமை காரணமாக, அவரால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. 1977ஆம் ஆண்டில், ரஞ்சித்திற்கு 17 வயதான போது தமிழ்நாட்டிற்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். இதையடுத்து வீட்டிலிருந்து கொஞ்சம் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு புறப்பட்டு விட்டார். தமிழ்நாட்டிற்கு சென்ற பிறகு ஆரம்பம் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் போகப்போக நிலைமை மாறியது என்று நினைவுகூர்கிறார் ரஞ்சித். "வீட்டில் திருடிக் கொண்டு வந்த நகையை விற்று, ஒரு பெட்டிக் கடையை வைத்தேன். அதில் திவாலாகி தெருவுக்கு வந்து விட்டேன். அதன்பின் உணவகங்களில் டேபிள் துடைக்கும் வேலை, ரூம் பாய் வேலைகளைப் பார்த்தேன். பிறகு, பேருந்து நிலையத்தில் முறுக்கு விற்பது, மூட்டை தூக்குவது போன்ற வேலைகளையும் செய்தேன். நான் செய்யாத வேலையே கிடையாது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனக்குச் சீக்கிரமே அது கைவந்த கலையாகிவிட்டது. பிறகு சிறிய அளவில் ஒரு கேட்டரிங் நிறுவனத்தை துவங்கினேன். தற்போது அந்த நிறுவனம் 125 பேர் பணியாற்றக் கூடிய பெரிய அளவிலான நிறுவனமாகியிருக்கிறது" என்கிறார் ரஞ்சித்.   படக்குறிப்பு, நுவரேலியாவுக்கு அருகில் சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதி வசித்த அலகொல பகுதி எஸ்டேட் கடன்களை திருப்பி அளிக்க முடிவு செய்த ரஞ்சித் ஒரு முறை உடல்நலம் சரியில்லாமல் போன போது ரஞ்சித் பைபிளைப் படித்துள்ளார் . பைபிளில் இருந்த 'துன்மார்க்கர்கன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் போகிறான். நீதிமான் இறங்கிச் சென்று திரும்பக் கொடுக்கிறான்’ என்ற வாசகம் அவரை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. "இதற்குப் பிறகு, எங்கெங்கு யார் யாரிடமெல்லாம் சின்னச் சின்னக் கடன்களை வாங்கினேனோ, அவற்றையெல்லாம் தேடித்தேடிப் போய்த் திரும்பக் கொடுத்தேன். வங்கியில் செலுத்தாமல் இருந்த 1500 ரூபாயையும் கூட, பல ஆண்டுகள் கழித்துப்போய்ச் செலுத்திவிட்டேன். ஆனால் அந்த எழுவாய் பாட்டியிடம் திருடிய 37 ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவில்லையே என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது." என்கிறார் ரஞ்சித். மேலும் தொடர்ந்த அவர், "அந்த பாட்டி இறந்திருப்பார் என்று தெரியும். ஆனால், அவருடைய வாரிசுகளைத் தேடிக் கண்டு பிடித்தாவது, அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன். இலங்கையிலுள்ள என்னுடைய நண்பர்கள் மூலமாக அவர்களைத் தேட ஆரம்பித்தேன். நீண்ட காலத் தேடுதல்களுக்குப் பின், அந்தப் பாட்டியின் மகன்கள் வசிக்கும் இடத்தை கடந்த ஆண்டில் வாங்கி விட்டேன். அந்தப் பாட்டிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மகன்களில் ஒருவர் இறந்து விட்டார். மகள், தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதாகத் தகவல் கூறினார்கள்" என்று விவரித்தார்.   படக்குறிப்பு, மலையகத்தில் தனது பெற்றோரின் வீடு இருந்த இடத்தில் கிருஷ்ணன். இந்த இடத்தில் இருந்து வீட்டை மாற்றும் போதுதான் ரஞ்சித் பணத்தை எடுத்தார். ரூ.37.50-ஐ பன்மடங்காக திருப்பி அளித்த ரஞ்சித் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதிக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் என மூன்று ஆண் குழந்தைகளும் வீரம்மாள், அழகம்மாள், செல்லம்மாள் என மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இதில் முருகையா இறந்துவிட்டார். அவருக்கு மனைவியும் நான்கு மகன்களும் இருந்தனர். பழனியாண்டி கொழும்பு நகரத்திற்கு அருகிலும் கிருஷ்ணன் நுவரேலியாவுக்கு அருகில் உள்ள தலவாக்கலையிலும் வசித்துவந்தனர். இவர்களைத் தொடர்புகொண்ட ரஞ்சித், சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதியின் குழந்தைகளுக்கான தனது கடனைத் தீர்க்க விரும்புவதாகக் கூறினார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று கொழும்பு நகருக்கு சென்ற ரஞ்சித், சுப்பிரமணியன் குடும்பத்தாரை உணவகம் ஒன்றில் சந்தித்தார். அவர்களிடம் 1970களில் நடந்த சம்பவத்தை விவரித்த ரஞ்சித், அவர்களுக்கென எடுத்துவந்த புதிய ஆடைகளைப் பரிசளித்தார். அதற்குப் பிறகு, தான் திருடிய ரூ.37.50-க்குப் பதிலாக முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் ஆகியோரின் குடும்பத்திற்கு இலங்கை மதிப்பில் தலா 70,000 ரூபாயை பரிசளித்தார். இந்த நிகழ்வு, சுப்பிரமணியன் - எழுவாய் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்தத் தம்பதியின் இரு மகன்களான பழனியாண்டியும் கிருஷ்ணனும் இன்னமும் ஆச்சரியம் விலகாமல் இருக்கின்றனர்.   படக்குறிப்பு, ரஞ்சித் பணத்துடன் சேர்த்து பரிசளித்த பேனாவை மகிழ்ச்சியுடன் காட்டும் பழனியாண்டி. ஆச்சர்யத்தில் ஆழ்ந்த எழுவாய் - சுப்ரமணியம் தம்பதியின் மகன்கள் தற்போது கொழும்பு நகரில் வசிக்கும் பழனியாண்டி, "ரஞ்சித் செய்த காரியம் எங்களை நெகிழ வைத்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதர் இருக்கிறாரா என்று தோன்றியது. அறியாப் பருவத்தில் செய்த செயலுக்காக திரும்பவும் வந்து பணத்தைக் கொடுத்தது, சந்தோஷத்தை அளித்தது. இந்த நேரத்தில் இந்தக் காசு வந்தது எல்லோருக்குமே உதவியாகத்தான் இருந்தது. குறிப்பாக என்னுடைய தம்பிக்கும் அண்ணனின் மனைவிக்கும் மிகுந்த உதவியாக இருந்தது. அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்" என்கிறார். பழனியாண்டிக்கு இப்படி பணம் திருடுபோனது தெரியாது. "நான் 12 - 13 வயதிலேயே கொழும்பு நகருக்கு வந்துவிட்டேன். அம்மாவும் அப்பாவும் ஊரில் இருந்தார்கள். அந்த நேரத்தில் என்ன நடந்ததென்பது எனக்குத் தெரியாது. அம்மாவுக்கும் இவர்தான் எடுத்தார் என உறுதியாகத் தெரியாது. இப்போது இவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இதைப் பற்றித் தெரிந்திருக்காது" என்கிறார் பழனியாண்டி. எழுவாயின் இரண்டாவது மகன் பழனியாண்டியின் மகள் பவானி, கொழும்புக்கு அருகில் உள்ள வத்தலையில் வசிக்கிறார். "எங்கள் பாட்டியை நான் பார்த்ததுகூட கிடையாது. இத்தனை வருடங்கள் கழித்து, எனது பாட்டி வழியில் இப்படியொரு தொகை எங்களுக்கு வரும் என்று துளியும்கூட நாங்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை. இந்தக் காலத்தில் இவ்வளவு நன்றியுடன் இருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது, நேர்மையும், மனிதநேயமும் இன்னும் மரணிக்கவில்லை என்று தெரிகிறது. இலங்கையில் இப்போது விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருக்கிறது. இந்த நேரத்தில் கிடைத்த இந்தத் தொகை எங்களுக்கு பெரிய உதவிதான்" என பிபிசியிடம் தெரிவித்தார் பவானி. படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட பவானி மற்றும் குடும்பத்தினர். தற்போது இவர்களது குடும்பத்தினர் யாருமே, பழைய ஊரில் வசிக்கவில்லை. கிருஷ்ணனின் குடும்பத்தினர் நுவரேலியா தலவாக்கலை அருகில் உள்ள செயின்ட் கோம்ஸ் என்ற இடத்தில் வசிக்கின்றனர். அலகொல பகுதியில் சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதி வசித்த வீடு இருந்த பகுதி தற்போது தரைமட்டமாகக் காட்சியளிக்கிறது. அந்த இடத்தில் நின்றபடி பிபிசியிடம் பேசிய கிருஷ்ணன், "எனக்குக் கொடுத்த பணத்தை என் பிள்ளைகள் நான்கு பேருக்கும் பத்தாயிரம், பத்தாயிரம் என கொடுத்துவிட்டேன். சரியான சந்தோஷம். அவ்வளவு கஷ்டத்தில் இருந்தோம். இப்போது அம்மா இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்கள்" என நெகிழ்ந்துபோய் பேசுகிறார். எழுவாயின் ஒரு மகளான செல்லம்மாளின் குடும்பம், திருச்சிக்கு அருகில் இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில்அந்த குடும்பத்தினருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க முயற்சி செய்து வருவதாக கூறுகிறார் ரஞ்சித். "இந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது" என்கிறார் ரஞ்சித். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0e103g5925o
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.