Jump to content

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்தியக் கடற்படை கப்பல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். 

இக்கப்பலின் கட்டளை அதிகாரி சுனில் குல்ஹாரி ஆவார். 

கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்த கப்பலின் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இலட்சத்தீவுகளில் ஒன்றான கல்பேனி தீவின் பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பலானது கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுப்படப் பன்படுத்தப்படும்.

இந்த கப்பலானது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளைக் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இந்த பொருட்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். 

இந்த கப்பலின் பணியாளர்கள் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களைக் கண்டுகளிக்கவுள்ளனர்.

4.jpeg

3.jpeg

2.jpeg

https://www.virakesari.lk/article/196645

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் அடுத்த வாரம் சீன போர்க் கப்பலும், அதற்கு அடுத்த வாரம் அமெரிக்க போர்க் கப்பலும் வரும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்த கப்பலானது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளைக் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இந்த பொருட்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். 

தேர்தலுக்கு பயன்படும் போல.

55 minutes ago, தமிழ் சிறி said:

எப்படியும் அடுத்த வாரம் சீன போர்க் கப்பலும், அதற்கு அடுத்த வாரம் அமெரிக்க போர்க் கப்பலும் வரும்.

ஒட்டுக்கேட்டிருப்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கடற்படைத் தளபதி வந்து போனதற்கு பதிலடி.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.