Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என்றார். 

அத்துடன், இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வேலணை மற்றும் வடக்கு நாரந்தனை, நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.

இதன்போது இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில், 

நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது.

குறிப்பாக, எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. இதை ஏற்றுள்ள மக்கள் இம்முறை மத்தியில் உருவாகியுள்ள மாற்றம் போன்று வடக்கிலும் ஈபிடிபியிடம் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவார்கள் என நம்புகின்றேன். 

மேலும் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் மத்திய அரசுடன் மட்டுமல்லாது ஏனைய இன மக்கள் மத்தியிலும் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது. 

அதனால்தான் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலத்தின் அடிப்படையிலேயே மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கும், பேரம் பேசலுக்கும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிகரித்த ஆசனங்களை வழங்குங்கள் எனவும் கோரிவருகின்றேன். 

அதனடிப்படையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யதார்த்த அரசியலையும் ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொண்டு உங்களது ஆதரவு பலத்தையும் வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

அந்த வகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றார். 

IMG-20241020-WA0003__1_.jpg

https://www.virakesari.lk/article/196707

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்ததும் ....மீன்பிடி அமைச்சுதான்...அய்யா ரெடியாகிட்டாரு..அனுரவின் அரசே அய்யாமீது நடவடிக்கை எடுக்க பயப்படுகுது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, alvayan said:

அடுத்ததும் ....மீன்பிடி அமைச்சுதான்...அய்யா ரெடியாகிட்டாரு..அனுரவின் அரசே அய்யாமீது நடவடிக்கை எடுக்க பயப்படுகுது...

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஏராளன் said:

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள்

ஒவ்வொரு அரசாங்கத்திடமும் போய் அமர்வதற்கு இந்த கோசம் நல்ல வரவேற்பை கொடுக்கிறது போலும். வழமையான அரசுகளுக்கு சொன்ன கோசத்தையே புது அரசுக்கும் சொன்னால்; அவர் கோபிக்கப்போகிறாரே. அந்த மக்களை அடிமைகளாக வைத்து, பிற தொடர்புகள் இல்லாமல் தனித்தீவாக வைத்து அவர்களின் வாக்குகளை பிடுங்கி பாராளுமன்றம் போய் அந்த மக்களுக்கு என்ன செய்தார்? உண்மையிலேயே அந்த மக்கள் இவராலேயே தம் சுயத்தை இழந்தவர்கள். வெட்கமில்லை? நாங்கள் சொல்வதை ஏற்று எங்களை பாராளுமன்றம் அனுப்பிவைத்தார்கள் என்று வாய்வீரம் பேசி மீண்டும் அவர்களிடம் வந்து வாக்கு கேட்கிறீர்கள். வந்து இருக்கும் மக்களின் தொகையை கணக்கிட்டு முடிவு செய்யுங்கள், நீங்கள் பாராளுமன்றம் போவதா சொன்னமாதிரி ஓய்வுபெற்று வீட்டுக்கு போவதா என்று. இனிமேல் உங்கள் பிரசன்னம் பாராளுமன்றத்திற்கு தேவையுமில்லை, நீங்கள் சொல்வதை இனிமேலும் சொல்லவேண்டிய அவசியமுமில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, alvayan said:

அடுத்ததும் ....மீன்பிடி அமைச்சுதான்...அய்யா ரெடியாகிட்டாரு..அனுரவின் அரசே அய்யாமீது நடவடிக்கை எடுக்க பயப்படுகுது...

அங்கால அனுராவின் யாழ் அமைப்பாளர் இவரை கிளிக்கிறார்.இந்த முறை வாய்ப்பில்லை ராஜா கதை தான் போல.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.