Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

முரளிதரனும் பிள்ளையானும் இதற்குள் அடங்குமா  அல்லது பிரேமச்சந்திரன் + சித்தார்த்தன்+அடைக்கலநாதன் மட்டுமா? 

இது அவர்களுக்கு வாக்கு போட்டு தெரிவு செய்யும் மக்களை அவமானப்படுத்துவது என்று ஒருவர் சொன்னால் உங்கள் பதில்??

  • Replies 57
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அண்ணை, இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும். கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக

  • குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார் கம்மன்பில, இல்லை என்று சொன்னால் தமிழரின் வாக்கு, ஆதரவு குறையும் அனுராவுக்கு. ஆம் என்று சொன்னால் சிங்களவரின் வாக்கு குறையும். அதனாலேயே  ஜனாதிபதி தெளிவுபடுத்தட்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனுக்கு.... சம்பந்தன் செத்துப் போனது, "ரூட் கிளியர்" ஆகி இருக்கு.  சம்பந்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பதவியைய

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

இது அவர்களுக்கு வாக்கு போட்டு தெரிவு செய்யும் மக்களை அவமானப்படுத்துவது என்று ஒருவர் சொன்னால் உங்கள் பதில்??

வாக்காளர்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொள்ளப் பழகி விட்டீர்களே இப்போது?😂 

முடிந்த ஜனாதிபதித் தேர்தல், இனி வரும் பொதுத் தேர்தல் ஆகியவை பற்றிப் பேசிய தருணங்களில், இது வரையில் வாக்காளர்களை யார் "முட்டாள்கள் ,  உணர்வற்றோர், எண்ணைக்கும், சோற்றுக்கும் அலைவோர்" என்ற பொருள்படத் திட்டியிருக்கிறார்கள் என்று நீங்களே தேடிப் பாருங்கள், உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்!

ஆயிரம் வாக்குகளில் சீற் வெல்லக் கூடிய தேர்தல்கள் நடந்த போது கூட டக்ளசுக்கு வாக்குப் போட்ட வாக்காளர்களை யாரும் கண்டிக்கவில்லை. ஆனால், "வாக்காளர்களை அவமதிப்போமோ?" என்ற தயக்கத்தில் யாருமே டக்ளசை கண்டிக்காமல் இருக்கவில்லை.

இங்கே நீங்களும், தீவிர புலம் வாழ் தேசியர்களும் செய்ய முயல்வது, உங்களுக்கு உவப்பான வேட்பாளர்களை தாயக மக்கள் மீது பொய்கள், கள்ள மௌனம், கிறீஸ் பூசிய நழுவல் என்று சகல வழிமுறைகள் மூலம் திணிக்க முயல்வது. இதைக் கண்டிக்க வேண்டியது தாயக மக்களை மதிக்கும் அனைவரதும் கடமை என நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஆயிரம் வாக்குகளில் சீற் வெல்லக் கூடிய தேர்தல்கள் நடந்த போது கூட டக்ளசுக்கு வாக்குப் போட்ட வாக்காளர்களை யாரும் கண்டிக்கவில்லை. ஆனால், "வாக்காளர்களை அவமதிப்போமோ?" என்ற தயக்கத்தில் யாருமே டக்ளசை கண்டிக்காமல் இருக்கவில்லை.

இன்று சந்துரு என்ற யுரியுப்பரின் வீடியோ பார்க்க கிடைத்தது அதில் ஒரு தமிழ் தேசியம்   பெண்   வேட்பாளரின் பேட்டி. கேள்வி நீங்கள் வெற்றி பெற்றால் அரசுடன் சேர்வீர்களா  எனது மக்களுக்கு நல்லது செய்வதற்காக  யாருடைய  காலிலும் விழ  நான் தயார்  என்கிறார். அர்ச்சுனா கோஷ்டியும் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்வோம் என்கின்றது.அந்த அமைச்சர் செய்ததை தான் மற்றவர்கள் இப்போது பின் பற்றுகின்றார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநுர அரசில் அமைச்சுப் பதவிகள் பெறுவதற்கான சந்தர்ப்பம்; சுமந்திரன் வெளியிட்ட தகவல்

MA-Sumanthiran4-1.jpg

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போது அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின.

ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது.

ஆகவே, அப்படியான ஒரு சூழ்நிலை வருகின்றபோது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில்தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.

எனினும் என்னுடைய சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது.

ஆனால், முருகேசு திருச்செல்வம் போல் கட்சி சார்பாக – கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார்.

ஆனால், அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனத் தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை அவர் இராஜிநாமா செய்து வெளியே வந்தார்.

அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ, மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதென்பதும் நாங்கள் கண்கொண்டும் பார்க்க மாட்டோம். அப்படியான தெரிவு எங்களுக்குக் கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது. என்றார்.
 

https://akkinikkunchu.com/?p=297496

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ, மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதென்பதும் நாங்கள் கண்கொண்டும் பார்க்க மாட்டோம். அப்படியான தெரிவு எங்களுக்குக் கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது. என்றார்.

இன்னும் என்ன தயக்கம் சரி எனத்தெரிந்தால் உடனே செய்துவிடவேண்டியதுதானே?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சி தே.ம. சக்தியுடன் கைகோர்க்கும் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க இணக்கம் - உதய கம்மன்பில

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி  முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா?  என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துடன் ஒன்றிணையும். தமிழ் தரப்புக்களை இணைத்துக் கொண்டு பயணிக்குமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைவது அவர்களின் அரசியல் உரிமை. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவென்பதை ஆராய வேண்டும்.

ஒற்றையாட்சி முறைமையிலான அரசியலமைப்பை நீக்கி, சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 30 .1 தீர்மானத்தை மீளமுல்படுத்த வேண்டும் என்ற இரண்டு பிரதான நிபந்தனைகளை இலங்கை தமிழரசுக் கட்சி விதித்துள்ளது. இவ்விரு நிபந்தனைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்குவதில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30.1 தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த பிரேரணையில் இருந்து விலகியது.

 30.1 தீர்மானத்தை மீண்டும் அமுல்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சி நிபந்தனை விதித்துள்ள நிலையில் இராணுவத்தினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக சாட்சியம் திரட்டுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டுக்கு எதிரான இச்செயற்பாடுகளுக்கு எவ்வாறு இடமளிப்பது என்றார்.

https://www.virakesari.lk/article/197692

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் – அனுர உடன்படிக்கை: வெளியிடுமாறு கம்மன்பில கோரிக்கை!

பொதுத் தேர்தலின் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க தமிழ் அரசுக் கட்சியுடன் ஒப்பந்தமொன்றை ஜனாதிபதி செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

சுமந்திரனின் அமைச்சுப் பதவி பெறுவதை வரவேற்கிறோம். அதே வேளையில், அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு நிபந்தனைகள் குறித்து கவலையடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தெடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ இலங்கையை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்றி, புதிய அரசியலமைப்பை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளமை முதல் நிபந்தனை யாக உள்ளது. அந்த அணுகுமுறை நாட்டு மக்களை இன ரீதியாக பிரிக்கும் பிரிவினைவாத நலன்களுடன் ஒத்துப்போகிறது.

இரண்டாவது நிபந்தனையில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (UNHRC) இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தவும் இராணுவத்தினரை சர்வதேச கூண்டில் நிறுத்தவும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் முதல் மாதத்திற்குள்ளேயே அரசியல் நண்பர்களை பாதுகாக்க இவ்வாறு செயற்பட்டதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் இதுதொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவி நீக்கம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் பொது மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

http://www.samakalam.com/சுமந்திரன்-அனுர-உடன்படி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சிக்கு அரசில் இடமில்லை; அமைச்சுப் பதவிகளும் இல்லை

tna.jpg

இலங்கைத் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அநுர அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவார்கள் என்ற தகவல்களை தேசிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.

அவ்வாறாக தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சி இதுவரையில் எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையயாடலையும் நடத்தவில்லை என்றும், அவ்வாறான தேவை தமக்கு கிடையாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், இதன்படி புதிய அரசாங்கத்தில் எம்.ஏ.சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலைமையிலேயே தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் அதனை நிரகரித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், சகல மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால், வேறு கட்சிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள தமக்கு அவசியம் கிடையாது என்றும் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்த சுமந்திரன், அரசாங்கம் தமக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க முன்வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=297892

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.