Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள சுதந்திர கருத்தாளர் சங்கம்.........

Featured Replies

என்ன சாணக்கியன்,

"பறக்க முடியாது என்று தெரிந்திருந்தும் மனிதன் தன் முயற்சியை கைவிடவில்லை! மீண்டும் மீண்டும் விழுந்து ஒரு நாள் எழுந்து பறந்தான்"

இந்த அருமையான தத்துவத்தை பொழுதுபோக சும்மா கணணி முன்னால் தட்டச்சு செய்வதற்கு கொண்டு வந்து ஒப்பிடுறீங்கள்?

தயா,

நான் சொல்ல வருவதெல்லாம் உங்கள் சங்க கொள்கைகளை, செயற்பாடுகளை, அறிக்கைகளை, நடவடிக்கைகளை யாழ் கள உறவுகள், வாசகர்களின் ஒட்டுமொத்த கருத்துக்களின் பிரதிபலிப்பு என்ற மாயையை ஏற்படுத்த முயலாதீர்கள். அதை உங்கள் ஒரு சிலரின் கருத்து என்று கூறிக்கொள்ளுங்கள்.

நானும் விரைவில் யாழில் ஒரு தலைப்பட்சமாக ஒரு சங்கம் ஒன்று தொடங்கலாம் என்று யோசித்து இருக்கின்றேன். எனது சங்கத்தின் திரியில் நான் ஆறுதலாக மிச்சம் கதைக்கின்றேன்.

உங்கள் சங்கத்தின் செயற்பாடுகள் வெற்றிபெற வாழ்த்துக்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் எனது சங்கத்தை தொடர்புகொள்ளவும். வேண்டுமானால், எதிர்காலத்தில் உங்கள் சங்கத்திற்கும், எங்கள் சங்கத்திற்கும் இடையில் சினேகபூர்வமான துடுப்பாட்ட போட்டி வைக்கலாம்.

நன்றி! வணக்கம்!

  • Replies 57
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உங்கள் அனைவரினதும் கருத்துகளிற்கும் மிக்க நன்றிகள்!! :o

ஜெனரல் வாழ்த்துகளிற்கு நன்றிகள் ஆனால் எனக்கு சொல்வதை விட கள உறவுகளிற்கு சொல்லுங்கோ இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த ஆலோசணை மற்றும் உதவிகளை தந்தவர்கள் அவர்கள்........(ஓ அது தான் பார்தோம் புத்திசாலிதனமா எழுது இருக்கிறது என்று நீங்க சொல்வது விளங்குகிறது :D )........!!

சொல்ல போனால் உங்களை பொறுத்தமட்டில் தெரியாது ஆனால் நாம் குடும்பமாகவே பழகிறோம் வெளியில் கூட குடும்பமாகவே செயற்படுகிறோம் இதில் நான் எல்லாரையும் குறிபிடவில்லை ஆனா என்னோடு யாழ்மூலம் பழகியவர்கள் நல்ல அண்ணணாக,அக்காவாக,தங்கையாக இருப்பது உண்மை :lol: !!என்ன பிரச்சினை வந்தாலும் நாம் கலந்து தான் தீர்வு எல்லாம் காண்போம் என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்....ஆகவே உங்களின் இந்த கருத்தோடு ஒத்துபோக முடியாது என்னால்....சிலர் அவ்வாறு இருபதிற்காக எல்லாரையும் இவ்வாறு சொல்வது அழகல்ல எனபது என் கருத்து அதை பற்றி ஏனைய கள உறவுகள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் இதில் அறிய ஆசைபடுகிறேன்!! :)

ஜெனரல் உங்கள் யோசனை மிகவும் நல்ல யோசனை சில டொலர்கள் இருந்தா கருத்தாடல் தளம் அமைப்பது என்பது.........ஏற்கனவே பல கருத்தாடல்தளங்கள் என்னையும்,சுண்டல் அண்ணாவையும் அழைத்தபோது போகாம இருப்பதிற்கு காரணம் பழகினது இங்கே கற்றது இங்கே பிறகு இன்னொன்று இதற்கு எதிராக தொடங்கினா அதுவும் ஒரு வகை துரோகம் தானே !!நிர்வாகத்திடம் கேள்வி கேட்பதிற்கு தலைப்பு தொடங்குவதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து......இங்கே வருபவர்களும் பல வேலைகளின் மத்தியில் தான் தங்கள் கருத்துகளை இடுகிறார்கள் உடனே வெட்டுபட்டா அவர்களும் மன உளைச்சல் ஆவார்கள் வருவதையும் குறைத்து கொள்வார்கள் இது தான் நடந்து கொண்டிருகிறது என்பது என் கருத்து!!நிச்சயாம ஒருபோதும் நான் மட்டுநுறுத்தினருக்கு என்ன தெரியும் என்ற பார்வையில் பார்ததில்லை இனிமேலும் அவ்வாறு பார்க்கபோவதும் இல்லை..........அதே போல் மட்டுநுறுத்தினர்களும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை!!

தற்போது நான் மட்டுநுறுத்தினர்களை குறை காண இந்த சங்கத்தில் இணையவில்லை இந்த சங்கம் மூலம் பல செயற்பாடுகளை எடுத்து செல்வதே எனது இலக்கு..........நான் இந்த சங்கத்தில் இணையாட்டியும் வேறு பலர் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்!!ஏன் சுகந்திர கருத்தாளர் சங்கம் என்றவுடன் அனைவரும் நிர்வாகத்துடன் நாம் மல்லுகட்ட போறோம் என்று பார்கிறீங்க.......நிர்வாகம் பிழை விட்டா ஒவ்வொருவர் தனி தலைப்பு தொடங்கி விவாதிக்காம (சிலருக்கு பலர் ஆதரவு சிலர் நிர்வாகத்தொடம் கேட்டா ஒருவரும் ஆதரவு இல்லை) இப்படியான குறைகளை தீர்கலாம் சுமூகமான முடிவுகளை எடுக்கவும் நிர்வாகத்தின் சுமையை குறைக்கவும் இது பெரிதும் உதவும்! :wub: !

நான் இதனை பெரிதுபடுத்தவில்லை யாழின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறவுகள் நாம் தீர்மானிக்கிறோம் இதில் தவறில்லை வந்தோமா கருத்து எழுதினமோ போனோமா என்று இல்லாம எம்மை வளர்த்த ஊடகதிற்கு நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் தானே!!இந்த விசயம் சிலருகு நகைசுவையாக கூட இருக்கலாம் ஏன் மற்றவர்களை பார்த்து நாம் செய்ய வேண்டும் எம்மை பார்த்து மற்றவர்கள் இவ்வாறு செய்தா எமக்கு அல்லவா பெருமை!! :lol:

அடுத்து பார்தோமானால் யாழ் 10 அகவையில் காலடி எடுத்து வைக்கிறது வேறோரு ஊடகமாக இருந்தா அதனை பெரிதாக கொண்டாடி இருப்பார்கள் நீங்கள் சொல்லும் ஆங்கில ஊடகங்களும் தான் ஆனால் நம் நிலைமை எப்படி வந்தோம் எழுதினோம் இன்னொன்று போட்டிக்கு தொடங்கினோம் என்பது போல் அல்லவா மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது என்னால் அப்படி இருக்க முடியாது.........இந்த சங்கம் மூல 10 அகவையை வெகுவாக கொண்டாடினால் அது எமக்கு பெருமை அல்லவா......10 அகவை மலர் அடிபோம் என்று கதைத்தார்கள் அதன் பின் அந்த கதையை காணவில்லை இவ்வாறு நாம் ஒன்றா இருந்தா பலசெயற்பாடுகளை செய்யலாம் அல்லவா...........???

வெறுமனே யாழில் 10 அகவையை கொண்டாடி அதற்கு நாமே பாராட்டு தெரிவித்து அதற்கு கவிதை போட்டி,கதை போட்டி மற்றும் ஏனைய விளையாட்டு என்று வைத்து இன்னும் அதே வட்டதிற்குள் இருக்காம கொஞ்சம் வெளியில் வரலாம் தானே!!நாம் சங்கம் என்றவுடன் சிந்திபதே நிர்வாகியை கவிழ்க்க என்று அது இல்லை உண்மையாக நிர்வாகத்தின் தரத்தை உயர்த்தல் என்று பொருள்படும்..........லண்டனில் இருக்கு தயா அண்ணாவையும் சுவிசில் இருக்கும் சின்னப்புவையும் அவுஸ்ரெலியாவில் இருக்கும் கந்தப்புவையும் இணைப்பது ஒரு ஊடகத்தின் சிறபல்ல என்பதை முதலில் கவனத்தில் எடுங்கோ....... :)

"நிர்வாகம் இல்லை இது நம் வேலை நீங்க உங்கள் வேலையை பாருங்கோ என்று பதில் அளித்தா" நிச்சயாமக இதனை தொடரமாட்டேன் கைவிட்டிடுவேன் என்பதையும் கூறி கொள்கிறேன்!! :o

மற்றும் பல புதிய உறுப்பினர்கள் யாழிற்கு வருகிறார்கள் அவர்கள் எழுதும் ஆக்கங்களிற்கு போதிய வரவேற்பு இல்லாமையால் வெளியேறுகிறார்கள் இதனை எல்லாம் நாம் ஒன்று சேர்ந்து தடுத்து வெற்றி பாதையில் கொண்டு செல்ல பாடுபடலாம் தானே இந்த பக்கத்திலும் நீங்கள் பார்க்கலாம் தானே!!

ஆகவே வெறுமனே நிர்வாகத்தை எதிர்க்கும் சங்கமாக நான் இந்த சங்கத்தில் இருக்கமட்டும் நடைபெறாது என்பதை உன்க்களிற்கு அறிய தருகிறேன் ஆக்கபூர்வமான வழியில் யாழை இட்டு செல்வதே எமது செயற்பாடாக காணபடும்!!

ஜெனரல் என்னை பற்றி பலருதும் பலவாறு கதைத்ததை நான் அறிவேன் அதை பற்றி நான் கவலைபட்டதில்லை ஏனேனின் எனக்கு நான் தான் நீதிபது என்ற கொள்கையில் இருப்பவன்!!கதைத்த பல பேரை காணவில்லை நான் மட்டும் இருகிறேன் என்றால் அதற்கு காரணம் அதுவாக கூட இருக்கலாம்!!நாளைக்கு என்னை தடை செய்ய வேண்டும் என்று யார் ஆரம்பித்தாலும் இறுதி முடிவு எடுக்கவேண்டியவன் நானாகவே இருபேன்!!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பல தடவை பலர் கள்ள ஜடிகளில் வந்து திட்டியது உண்மை தான் அதற்காக எல்லரையும் நான் குறை சொல்ல மாட்டேன் முக்கியமாக இன்றைக்கு இந்த தலைப்பை இட்டதிற்கு என்ட அண்ணா யாழில் மூலம் கிடைத்த சுண்டல் அண்ணாவிடம் பேச்சு வாங்கினான் இவர்களை போல் பல நல்ல உள்ளங்களை எனக்கு தந்தது யாழ் தான் என்று நான் பெருமையாக கூறுவேன்!!

யாழை சிம்பிளா தான் எடுகிறோம் புதியபரிமாணத்தில் இணையத்தை கொண்டு செல்வோம் எல்லோரும் ஒன்றினைவதன் மூலம் இது தான் எனது கருத்து!!நிஜ வாழ்கையில் பிரச்சினைகள் வந்தால் பலர் மாறுவதை கண்டிருகிறேன் ஆனால் யாழில் என்னோடு பழகியவர்கள் அப்படி இல்லை என்றே கூறலாம்!!

வல்வை அண்ணா தங்களுக்கு விளங்கவே இல்லையா உண்மையா????? :(

எவள் அக்கோய் என் மேல உங்களுக்கு எவ்வளவு பாசம் எனக்காக சேருறீங்க என்றா சரி பயப்பிடாம சேருங்கோ சங்கத்தின் முடிவு தான் இறுதி முடிவல்ல எல்லாரின் கருத்துகளையும் உள்வாங்கி தான் முடிவை அறிவிக்கும் சங்கம் இது அக்கோய்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

சாணக்கியன் அண்ணா உங்களுக்கு என்னால் பதில் மடல் அனுப்பமுடியாம இருக்கிறது ஒருக்கா என்ன பிழை என்று பாருங்கோ!! :wub:

நன்றி

சாணக்கியன் அண்ணா உங்களுக்கு என்னால் பதில் மடல் அனுப்பமுடியாம இருக்கிறது ஒருக்கா என்ன பிழை என்று பாருங்கோ!! :wub:

நன்றி

ஜமுனா மற்றும் தயா மீண்டும் ஒரு முறை முயற்சிக்கவும்!

தயா,

நானும் விரைவில் யாழில் ஒரு தலைப்பட்சமாக ஒரு சங்கம் ஒன்று தொடங்கலாம் என்று யோசித்து இருக்கின்றேன். எனது சங்கத்தின் திரியில் நான் ஆறுதலாக மிச்சம் கதைக்கின்றேன்.

உங்கள் சங்கத்தின் செயற்பாடுகள் வெற்றிபெற வாழ்த்துக்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் எனது சங்கத்தை தொடர்புகொள்ளவும். வேண்டுமானால், எதிர்காலத்தில் உங்கள் சங்கத்திற்கும், எங்கள் சங்கத்திற்கும் இடையில் சினேகபூர்வமான துடுப்பாட்ட போட்டி வைக்கலாம்.

நன்றி! வணக்கம்!

ஓ... அதுதான் பிரச்சினையா..? சங்கத்தை நீங்களே துவங்குங்கோ, நானும் மற்றவர்களும் வந்து அங்கையே இணைந்து கொள்கிறம்.... அதிலை எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது...

யார் குத்தினாலும் அரிசியானால் சரி...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைச் சுதந்திரமாக வைக்க மட்டுறத்தல் இல்லாத தளங்கள் பல இருக்கின்றன. தாராளமாக எவற்றைப் பற்றியும் எழுதலாம்.. ஆனால் வாசிப்பதற்குத்தான் பலர் வரமாட்டார்கள்!

தங்கள் கருத்துக்கள் சரியானவை என்று ஒவ்வொருவரும் நிர்வாகத்துடன் மல்லுக்கட்டி ஒரு பிரயோசனமுமில்லை. அதைவிடுத்து யாழ் களவிதிகள், அதன் நோக்கங்கள் என்பனவற்றை உள்வாங்கிக் கருத்துக்களை வையுங்கள்.. இல்லையேல் தாரளமாக எழுதாமல் விடலாம்.. பலர் எழுதாமல் விட்டுச் சென்றுதான் உள்ளனர். சிலர் திரும்பவும் வந்துதான் (மிகச் சிலர் வேறு முகமூடிகளிலும்) உள்ளனர்.

யாழ் களத்தை தங்குமடமாக அல்லது மீன்சந்தையாகப் பாவிக்கும் முன்னர் பல கேள்விகளை உங்களிடமே கேட்டுப் பாருங்கள்..

"பறக்க முடியாது என்று தெரிந்திருந்தும் மனிதன் தன் முயற்சியை கைவிடவில்லை! மீண்டும் மீண்டும் விழுந்து ஒரு நாள் எழுந்து பறந்தான்"

இந்த அருமையான தத்துவத்தை பொழுதுபோக சும்மா கணணி முன்னால் தட்டச்சு செய்வதற்கு கொண்டு வந்து ஒப்பிடுறீங்கள்?

:unsure::):) நல்ல பொழுது போக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

'சும்மா வந்து சும்மா போவோர் சங்கம்!!' என்ற தலைப்பு யாழ் நாற்சந்திக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

'யாழ்கள இந்து மத மற்றும் கருத்தாளர் நலன்புரிச் சங்கம்', ' யாழ்கள நிர்வாக மாற்றுக் கொள்கைக்கான குழு', 'யாழ்கள சர்வதேச நடுநிலை கண்காணிப்புக் குழு' , 'அகில உலக யாழ்கள ஜனநாயக கருத்தாளர் சங்கம், ஆகியன நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

என்ன யாழ்களத்தில் நடக்குது.

இத்தனை அமைப்புக்களா? ஆனால் எல்லா அமைப்புக்களையும் தூக்கிய இணையவனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அந்த அமைப்பினைச் சார்ந்தவர்கள், எமது புதிய அமைப்பான, யாழ்கள கட்டாக்காலிகள் சங்கத்தில் இணைந்து கொள்ளலாம்.

அப்ப எல்லாரும் யாழ்களத்தை பொழுது போக்கிற இடமாத்தான் பாக்கிறீங்களா.....??

அப்ப நாந்தான் சீரியசா எடுத்து எதையாவது சாதிப்பினம் எண்டு நினைச்சு போட்டனா...???

சரிங்கப்பா..... நானும் கொட்டம் அடிக்க மட்டூம் வந்து பம்பலா வந்து போவம்... சீரியசா வேற வேலையள பாப்பம்...!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எல்லாரும் யாழ்களத்தை பொழுது போக்கிற இடமாத்தான் பாக்கிறீங்களா.....??

அப்ப நாந்தான் சீரியசா எடுத்து எதையாவது சாதிப்பினம் எண்டு நினைச்சு போட்டனா...???

சரிங்கப்பா..... நானும் கொட்டம் அடிக்க மட்டூம் வந்து பம்பலா வந்து போவம்... சீரியசா வேற வேலையள பாப்பம்...!

இதைப்பார்த்து மோகனும், வலைஞனும் விழுந்து விழுந்து சிரிச்சதில வலைஞனுக்கு தலையில சின்னதா அடிபட்டுட்டுதாம்.... ஜோக் அடிங்கப்பா எண்டு சொல்ல மெகா ஜொக் அடிச்சால்..... :unsure::)

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி கிருபன் அண்h யாழ விட்டு போன சில பேர் இல்ல பல பேர் வேற நிக்ல வந்து எழுதினம்...

இந்த சங்க யோசனை நகைசுவைகாக தொடங்கப்பட்டதா அல்லது சீரியஸாக தொடங்கப்பட்டதா என அறிய தாருங்கள்

சீரியஸாக இருப்பின் இதனை ஒரு தேவையற்றது எனத்தான் சொல்வேன் முதல் ரோயல் பமிலி மன்னர் குடும்பம் தற்போது டைகர் பமிலி இவை நகைசுவையாக ரசிக்ககூடியதாக இருந்தது ஆனால் இன்று யாழ் களம் உத்தியோகபூர்வமாக செய்திக்குழுமம்,அவுஸ்திரேலி

கருத்துக்களைச் சுதந்திரமாக வைக்க மட்டுறத்தல் இல்லாத தளங்கள் பல இருக்கின்றன. தாராளமாக எவற்றைப் பற்றியும் எழுதலாம்.. ஆனால் வாசிப்பதற்குத்தான் பலர் வரமாட்டார்கள்!

தங்கள் கருத்துக்கள் சரியானவை என்று ஒவ்வொருவரும் நிர்வாகத்துடன் மல்லுக்கட்டி ஒரு பிரயோசனமுமில்லை. அதைவிடுத்து யாழ் களவிதிகள், அதன் நோக்கங்கள் என்பனவற்றை உள்வாங்கிக் கருத்துக்களை வையுங்கள்.. இல்லையேல் தாரளமாக எழுதாமல் விடலாம்.. பலர் எழுதாமல் விட்டுச் சென்றுதான் உள்ளனர். சிலர் திரும்பவும் வந்துதான் (மிகச் சிலர் வேறு முகமூடிகளிலும்) உள்ளனர்.

யாழ் களத்தை தங்குமடமாக அல்லது மீன்சந்தையாகப் பாவிக்கும் முன்னர் பல கேள்விகளை உங்களிடமே கேட்டுப் பாருங்கள்..

அருமையான கருத்து கிருபன் அண்ணா இதே கருத்தே எனதும்

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மிரட்டல்களுக்கு மத்தியில் தமது நேரத்தை தமது பணத்தை செலவளித்து தமிழ் தேசியத்துகாக பாடுபடும் மோகன் அண்ணா வலைஞன் அண்ணா மற்றும் நிர்வாகதினருக்கு கள விதிகளை ஏற்படுத்தும் உரிமை இருகின்றது.

***

*** உறுப்பினர்கள் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

சரி, பல யாழ் முன்னணி கருத்தாளர்களும் வந்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு சென்றுள்ளனர். சிலர் நகைச்சுவையாகவும், சிலர் காரமாகவும், சிலர் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் நன்றிகள்!

எந்தவொரு புதிய சிந்தனையும் சிறுபான்மையில்தான் ஆரம்பிக்கும் என்பதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. அதற்கு இங்கு மிகவும் குறைவாக கிடைத்துள்ள ஆதரவே சாட்சியாகும்!

நானறிந்தவகையில் இங்கு எதிராக கருத்துதெரிவித்த அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் நிர்வாக உறுப்பினர்களுடன் தங்களுக்கு அநீதி இழைக்ககப்பட்டதாக உணர்ந்து முரண்பட்டுக் கொண்டவர்கள்.

  • அவர்களில் சிலர் வெளிப்படையாகவும் (புதிய தலைப்புகளில்), தனிமடல்கள் மூலமாகவும் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, கவலையை வெளிப்படுத்தினர். பின்னர் நிர்வாகத்துடன் சமரசம் செய்து கொண்டனர் (வேறுவழியின்றி..!?).

  • மேலும் சிலர் கருத்துகள் தெரிவிப்பதை பகிஸ்கரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் வெட்கத்தை விட்டு மெதுவாக தங்களை தாங்களே சமரசம் செய்து கொண்டு மீண்டும் கலந்து கொண்டனர்.(நான்!)

  • சிலர் வெளியேறி சென்றுவிட்டனர் அல்லது தங்கள் பழைய முகங்களுடன் தற்கொலை செய்து கொண்டு புது ஜென்மாக பிறப்பெடுத்தனர்.

இவை யாவற்றிலும் ஈற்றில் பெரும்பாலும் நிர்வாகத்தின் கையே ஒங்கி நின்றது! நிற்கின்றது! நிற்கும்!

ஆனாலும் மாறாக இடம்பெற்ற சில சந்தர்ப்பங்களும் உள்ளன. நிர்வாகத்தின் சார்பில் தனிநபர் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன, தன்னிச்சையாக போடப்பட்ட விதிகள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.(செய்திக் குழுமம்)

யாழ்களத்தில் சுதந்திரமே இல்லை என்று கூறுவதற்கில்லை. இந்த தலைப்பு அதற்கு ஒரு சாட்சி. இன்னமும் இந்த தலைப்பு தூக்கப்படவில்லை! நான் தடை செய்யப்படவில்லை! அதற்கு இந்த கருத்திற்கு உள்ள சிறுபான்மை ஆதரவாக கூட ஒரு காரணமாக இருக்கலாம், எதிர்காலத்தில் அமைப்பு ரீதியிலான செயற்பாடு வலுவடையும் போது தடை கூட வரலாம்!

வலுவான செயற்பாடென்பது பலரின் வலுவான ஆதரவிலேயே தங்கியுள்ளது. அதுவும் இங்கு முன்னனி கருத்தாளர்கள் பலரின் ஆதரவு தேவை. அல்லாது விடின் இதுவும் இலங்கையின் சமசமாஜ கட்சி போல சமயாசமய அறிக்கை வெளியிடும் அமைப்பாகத்தான் இருக்க முடியும்.

யாருக்கு இது தேவை?

இங்கு எதிர்க் கருத்து தெரிவித்த பல முன்னணி கருத்தாளர்களின் கருத்துப்பார்வை மற்றும் எழுத்துப்பாணி பற்றி நிர்வாகத்திலும் சரி களஉறுப்பினரிடையேயும் சரி ஒரு புரிந்துணர்வு உள்ளது. அவர்களிற்கு இந்த அமைப்பு ரீதியான செயற்பாடு தேவையில்லை. உண்மையில் இந்த அமைப்பிற்குத்தான் அவர்களின் ஆதரவு அவசியம் தேவை.

புதிய சிந்தனையாளருக்கு, அல்லது பெரும்பான்மை கருத்திற்கு மாறான வழிகள் பற்றி சிந்திக்கக் கூடியவர்களுக்கு இந்த அமைப்பு உதவ முடியும். அனைவரும் அச்சமின்றி தங்கள் புதிய சிந்தனைகள், கருத்துக்கள் என்பற்றை எழுத்துக்களால் முன்வைக்கும் ஒரு சூழலை உருவாக்க முடியும்.

அரிச்சுவடி என்ற பிரிவில் புதிய உறுப்பினரை களஉறவுகள் வரவேற்கின்றனர். தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கின்றனர். பின்னர் எனைய கருத்துப்பிரிவில் நுளைந்து கருத்தெழுதி தங்கள் கருத்து காணமற்போய் தவித்து நிற்கும் போது அல்லது தடை செய்யப்படும் போது ஏன் யாரும் உதவ முன்வருவதில்லை? காரணம் பயம்!

பயம் காரணமாக பலர் இங்கு மெளனமாகவும் தனிமடல் மூலமும் ஆதரவு தரக்கூடும். அதனால் பயனில்லை!

சிந்தனை, கருத்து, எழுத்து என்பனயாவற்றிலும் அச்சமின்றி வெளிப்படுத்தும் சுதந்திரம் வேண்டும்!

"கருத்துச் சுதந்திரம் என்பது எது?" என்பதே ஒரு விவாதப் பொருள்! ஒருவர் இங்கு குறிப்பிட்டார் "மற்றயவரின் கருத்தை பாதிக்காமல் எழுதுவதே கருத்துச் சுதந்திரம்" என்று. எனவே அதை வேறு தலைப்பில் விவாதிக்கலாம்!

எதிர்ப்புக் குழு / சங்கம் / கட்சி

இவை அனைவரையும் கேட்டவுடனேயே முகஞ்சுளிக்க வைக்கும் வார்த்தைகள். காரணம் பாடசாலைகள் முதல் கோவில் வரை சச்சரவுகள், சண்டைகள், கூட்டங்கள், பகிஸ்கரிப்புகள், பதாதைகள் ஊர்வலங்கள் என்று அனைத்திற்கும் மூல காரணமானவை இவையே. ஆனால் இது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படி.

நான் புரிந்து கொண்டதன் படி இது கருத்துச் சுதந்திரத்தை மேலும் வலியுறுத்தும் ஒரு கருத்தாளர் கூட்டமைப்பு. இங்கு தலைவரும் இல்லை பொருளாரும் இல்லை! (அது நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டது என நினைக்கிறேன்) என் அனுபவத்தில் எனக்கு தெரிந்த ஒரு வழிமுறையை இங்கு பிரேரித்தேன். இங்கு களத்தில் மூத்தவர், இளையோர், திறமையாளர் என பலருள்ளனர். அவர்களின் ஆலோசனைகள் பங்களிப்புகள் நிச்சயமாக வரவேற்கப்படுகின்றன.

அவரவர்க்கு மட்டும் பிரச்சனைகள் வரும் போது தன்னந்தனியே நின்று குமுறுவதும், பின்னர் மறந்து, மரத்துப் போவதும் தமிழர் பண்பு!

மேலும் சிலர் நிர்வாகம் பணம் மற்றும் நேரம் செலவு செய்கிறது, சட்டச்சிக்கல் வரும், கருத்துக் களத்தில் கருத்துப்பகிர்வதற்கு வெளியேயான செயற்பாடுகள் போன்றவற்றுடன் இணைத்து பார்ப்பது, அவர்கள் நோக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இன்னமும் புரியாதவர்களுக்காக இறுதி முயற்சியாக ஒரு பொருத்தமான ஒளிபதிவை இணைத்து விடைபெறுகின்றேன். இது ஏற்கனவே இந்த முன்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த களவுறவு ஒருவரால் தமிழர்களை விழித்து போடப்பட்டிருந்தது!

http://www.glumbert.com/media/battlespecies

நன்றி! வணக்கம்!

சாணக்கியன்

களம் 9 வருடமாக இயங்குகின்றது பிரச்சினைகள் வந்தன இல்லை என சொல்லவில்லை ஆனால் நிர்வாகத்துகம் தீர்த்துதான் வைத்தது.தமிழன் ஒன்றுபடத்தான் குறுக்ஸ் சொன்னாரே அன்றி பிரிந்து சென்று தாக்குபடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் களம் தமிழர்களாலே நடத்தபடுகின்றது கள உறவுகளும் தமிழர்களே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.எமது பிரசினையை எம்மால் தீர்கமுடியும் அதற்காக சங்கம் அமைத்து பிளவுபடுவதை நாம் விரும்பவில்லை.

நிர்வாகத்தினருடன் முரண்படுவது இயற்கை சில மனக்கசப்புகள் ஏற்படுவது வழமை ஆனால் அவற்றை தனிமனிதனால் நிச்சயம் தீர்கமுடியும் தனிமடல் முலம் தமது பிரச்சினையை வெளியில் தெரியாமல் தீர்த்தவர்கள் களத்தில் பலருண்டு என்பதை கூற விரும்புகின்றேன்

கள நிர்வாகம் என ஒரு அமைப்பு இருகின்றது ஆகவே கள நிர்வாகத்தை கண்காணிப்பு செய்ய யாழ் களத்தில் இன்னொரு அமைப்பு தேவை இல்லை என்பதே என் கருத்து.டைகர் பமிலி கங்காரு பமிலி ரோயல் பமிலி மன்னர் குடும்பம் என்பன வேற அவை நகைசுவைகாகவே உருவாக்கப்பட்டது அவற்றுகிடையிலான நகைசுவையிலான போட்டி ரசிக்க கூடியதாக இருந்தது.

கள உறவுகளுக்கு பொதுவாக

யாழ் களம் என்பது தனிமனிதனை நம்பி இயங்கவில்லை விருப்பமில்லாவிட்டால் போவதும் விரும்பிய நேரத்தில் மீள் இணைவதும் அவரவரை பொறுத்தது.***

*** உறுப்பினர்கள் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

மேலே நான் எழுதியதை இணையவன் நீக்கி இருந்தார் அதுமட்டுமல்ல வவிளக்கமும் எனக்கு அளித்திருந்தார் அந்த விளக்கத்துடன் எனக்கு உடன்பாடே கள மட்டுருதுணர்கள் தமது கடமையை செவ்வனே செய்கின்றார்கள் கள நிர்வாகம் ஒருபோதும் கருத்தாளரின் சுதந்திரத்துக்கு எதிராக இயங்கவில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

அட எல்லாருக்கும் வணக்கமுங்கோ அட நாமளே தான்!!முதலில காமேடியா தொடங்கின இந்த சங்கம் பிறகு இவ்வளவு வளர்ச்சி அடையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை சோ இன்றிலிருந்து என்னை நிரந்த உறுப்பினராக இந்த சங்கத்தில் இணைத்து கொள்வதை இட்டு பேரானந்தமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்........ :) !!இந்த சங்கம் ஆரம்பிக்கபட்டு முதல் நாளில் பாரியளவு வெற்றியை கண்டு இருகிறது :wub: !!

அவையாவன

1)சில நாட்களாக சோர்வாக இருந்த யாழ்களம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது!

2)பல கள உறவுகள் எங்கையோ இருந்து வருகை தந்து கருத்து எழுதினது அடுத்த வெற்றி!

3)உடனடியா பல சுய ஆக்கங்கள் உருவாக்கபட்டது (இதனை கொப்பி அடித்து தான் ஆனாலும் அதுவும் சுய ஆக்கம் தான்)

4)தங்கள் எரிச்சல்களை சிலர் கொட்டி தீர்தமை! :unsure:

5)கள உறுப்பினர்களின் கருத்துகளை அறிய முடிந்தமை!!

6)யாழ் பற்றி கள உறவுகளின் பார்வை (சும்மா வந்து சும்மா போவதை பலர் விரும்புகிறார்கள்)

7)புதிய செயற்பாடுகளை அறியாம இன்னும் அதே வட்டதிற்குள் இருக்க வேண்டும் என்ற சிலரின் கருத்தை அறியமுடிந்ததாக உள்ளது!

8)சிலரின் காமெடியான கருத்துகள் அதாவது ஒன்று பிடிகாவிட்டால் இன்னொன்று தொடங்குவது!!

9)நிர்வாகத்தை பற்றி மெசெஞ்ஜரில் ஒரு கதை இங்கே வந்து வால் பிடிக்க ஒரு கதை!

10)அடுத்து மற்றவனிற்கு பிரச்சினை பற்றி நமக்கு என்ன பிரச்சினை நம்மை பற்றி தான் சிந்திபோம்!!

இப்படி பல விசயங்களை முதல் நாளிள் அறிந்ததே இந்த சங்கம் தொடங்கிய சாணக்கியன் அண்ணா மற்றும் தலா அண்ணாவிற்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம் :) !!அடுத்து முக்கியமான விசயம் தாமும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் நக்கல் அடிப்பது இல்லாவிடில் வாயிற்குள் வந்த கருத்தை விடுதல்!!அது சரி தலைவர் துப்பாக்கி தூக்கும் போதும் நக்கல் அடித்த ஆட்கள் தானே நாங்கள்!! :(

தெளிவாக விளங்கபடுத்தி இருகிறோம் இது நிர்வாகத்தை எதிர்க்கும் சங்கமாக இருக்காம யாழின் வளர்ச்சிக்கு நிர்வாகத்தோடு சேர்ந்துபாடுபடும் அமைப்பாக இருக்கும் :)

உறவுகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து தாங்களே இது பிழை சரி என்ற முடிவிற்கு வந்தா நிர்வாகம் இன்னும் யாழை முன்னேற்றும் செயற்பாடுகளில் கொண்டு செல்லாம் அதை பற்றி சிந்திக்காம ஏதோ கதைக்க வேண்டும் என்பதிற்காக கதைக்கிறார்கள்!!இதில் விருப்பம் என்றா இணையும்படி கேட்டிருந்தோம்!!

இங்கே யாரும் கூட்டம் சேர்த்து குழப்பம் விளைவிக்கவில்லை !!இங்கே வந்து கருத்து எழுதிட்டு போனவுடன் தேசியம் வளரும் என்றா செமகாமெடி இதை விட இல்லை என்றே கூறலாம்!!

ஏற்கனவே அடித்து கூறி இருகிறோம் நிர்வாகம் தன் கடமையை செய்யலாம் அதனோடு சேர்ந்து பயணிப்பது தான் நம் நோக்கம்!!நிர்வாகம் எல்லா உறவுகளையும் பார்த்து கொண்டு இருக்க ஏலாது நாமே புதிதாக வரும் உறவுகளை ஆதரித்து உறவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் இன்னும் பல விசயங்களை செய்யலாம்!!

அடுத்த விசயம் யூனியில கூட தான் ஒரு யூனியனிற்கு இன்னொரு யூனியன் இருக்கு அவர்கள் விடும் பிழைகளை இவர்கள் எடுத்து கூறி சிறந்தவழியில் கொண்டு செல்ல செயற்படுவார்கள்!!இலங்கையை பொறுத்தவரை மற்றவனை விழுத்தும் நோக்கில் இருக்கும் அது வேற!!ஆகவே நல்ல செயற்பாடுகளை கூறும் யூனியனை யூனியில இருந்து வேற யூனிக்கு போ சும்மா இங்கே இருந்தோம் என்று அலட்டாதே என்று கூறுவது எப்படி இருக்கும்!!

தயா அண்ணாவிற்கும் எனக்குமே கருத்து மோதல் பல தடவை நடந்திருகிறது இன்று இந்த அமைப்பில் நாம் இருவரும் இருக்கிறோம்!!வலிமை உள்ளவன் எங்கையும் இருப்பான் அதை விட வலிமையா வாறதை சிந்திக்காம அவனை விழுத்துவோம் என்றா அவர்கள் பாவம் என்றே கூறமுடியும்!!சென்டிமன்ட் பேசுவது நாம் இல்லை செயலில காட்டுகிறோம் கதைத்து நேரத்தை ஓட்டுறவர்கள் யார் என்று நாம் கூற வேண்டுமா!!சாணக்கியன் அண்ணா மற்றும் தயா அண்ணாவின் கருத்துகளை உள்வாங்கினேன் எனக்கு இந்த சங்கம் பிடித்து இருந்தது ஆகையால் நானும் இந்த சங்கத்தில் இணைந்தேன் என்னுடைய முழு ஒத்துழைப்பும் இந்த சங்கதிற்கு உண்டு சங்கம் நல்ல வழியில் செல்லும் வரை!!

சொல்ல போனால் நேசகர அமைப்பு தான் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்தது அடுத்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யும் அமைப்பு என்றா சிட்னி நண்பர்கள் அமைப்பு மற்றைய அமைப்பு எல்லாம் அதை பற்றி நான் சொல்ல விருப்பவில்லை இந்த இரு அமைப்புகள் போல் இந்த சங்கமும் வெற்றி அடைய வாழ்த்துகள் தொடர்ந்து உங்களுடன் இணைந்திருபேன்!! :)

மேலும் அவ்வப்போது வந்து கருத்துகளை எழுதுகிறேன் ஏனேனின் சிட்னி நண்பர்கள் அமைப்பை பலபடுத்த வேண்டும் ஆகையால் தற்போது உங்களிடம் இருந்து விடைபெற்று செல்லும் நான் உங்கள் அன்பின் ஜம்மு பேபி!!

ஜம்முபேபி

- - - - - - - -

டைகர் பமைலி (தலைவர்)

சிட்னி நண்பர் அமைப்பு (உப தலைவர்)

யாழ் சுகந்திர கருத்தாள சங்க (உறுப்பினர்)

சும்மா வந்து போகும் சங்க(பரிசீலனையில் உள்ளது)

வரும் கால அவுஸ்ரெலிய பிரதமர்!!

ஜம்மு பேபி பஞ் -

"வீட்டில அம்மா,அப்பாவை பிடிகாட்டி வீட்டை மாற்றுவங்களா சின்ன பிள்ளை தனமா இருக்கு"

யாழ்கள் சுகந்திர கருத்தாளர் சங்க உறுப்பினர்கள்!!

1)சாணக்கியன் அண்ணா

2)தயா அண்ணா

3)யாழ்கவி ஆண்டி

4)இன்னிசை தங்கா

5)இவள் அக்கா

6)கரிகாலன் அங்கிள் (முதலில் ஆதரவு அளிக்காவிடிலும் பிறகு எமது செயற்பாட்டை கவனத்தி கொண்டு ஆதரவு அளித்துள்ளார்)

7)ஜம்மு பேபி

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

இது போதும்.... ! இதுக்கு மேலை எல்லாத்தையும் உறுப்பினர் மட்டும் பகுதியுக்குள் வைத்து கொள்ளலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொருத்தவரையில் இந்தத்தலைப்பு தேவையில்லை. நான் எப்பொழுதும் யாழ் நிற்வாகத்திற்குத் தான் ஆதரவு. அவர்கள் எங்களது கருத்துக்களை நீக்கினால், எங்களது கருத்துக்களில் தான் பிழை இருப்பதே காரணம். ஆரம்ப காலத்தில் எனது கருத்துக்களும் நீக்கப்பட்டது. அதற்கு காரணம் நான் பிழையாக, சர்ச்சரவான கருத்துக்கள் எழுதியது தான் காரணம். நான் என்றும் நிற்வாகத்துக்கு தான் ஆதரவு. வாழ்க யாழ்களம் . வாழ்க யாழ்கள நிற்வாகிகள்.

  • தொடங்கியவர்

தயா அண்ணா!!

அப்ப இந்த பகுதியை உறுப்பினர் மட்டும் பகுதிகுள் மாற்ற சொல்லுறதா இல்லை இங்கிருகட்டுமா :D ......முதலில் இந்த அமைப்பில் உள்ளவர்கள் யார் உங்களை சீண்டி கருத்து எழுதினாலும் அவர்களை கருத்துடன் மோதுவோம் என்ற கொள்கையில் செயற்படுத்துவோம் அது இந்த அமைப்பிற்கு பாரியளவு வெற்றிய இட்டு செல்லும் என்று நினைக்கிறேன் :lol: !!மற்றும் தெளிவா விளங்கபடுத்தி இருக்கு நிர்வாகத்தை எதிர்க்கும் செயற்பாடு அல்ல என்று ஆகவே எனி விசமதனமான கருத்துகளை கூறுபவர்களிற்கு விடை அளிக்க வேண்டிய நிர்பந்தம் எமகில்லை என்பதையும் கூறி கொள்ள விரும்புகிறேன்!! :)

சங்கத்தில் முதல் செயற்பாடாக எமது உறவுகளிற்கு சொல்லி கொள்ள விரும்புவது மட்டுநுறுத்தினர்களின் பணியை இலகுவாக்குவது அதன் அடிபடையில் யாழ்களத்தில் எந்த பகுதியிலும் உறவுகளை தாக்கி கருத்து எழுதி இருந்தா மற்றும் தேசியத்தை தரகுறைவாக எழுதி இருந்தா "ரிப்போர்ட்" பட்டனை அழுத்துவதன் மூலம் நிர்வாகிகளிற்கு உதவும் படி இதனால் அவர்களின் மட்டுநுறுத்தல் பணி குறைவடையும்!! :)

இது எமது சங்கத்தின் முதற்செயற்பாடு அடுதடுத்த செயற்பாடுகளை சாணக்கியன் அண்ணா,தயா அண்ணா அறிவிப்பார்கள்!! :D

நன்றி

அப்ப நான் வரட்டா!!

நிர்வாகதிற்கு ரிபோர்ட் செய்வது எப்படி என்ற முறையை இணையன் அண்ணா இணைத்துள்ளார் அந்த லிங்கை இதனுள் இணைக்கிறேன்!!

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=349007

நன்றி இணையவன் அண்ணா!!

ஜம்மு பேபி ஸ்பீச்-

நிர்வாக உறுப்பினர்கள் நித்திரை விழித்து தங்கள் சொந்த பணத்தில் இதனை செய்கிறார்கள் அவர்களிற்கு விசுவாசமாக இருபோம்!!அத்தோடு அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன் அதாவது தங்கள் உயிரை எங்கள் உயிராக தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை பார்த்து இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தலைப்பு போட்டவர்கள் நிர்வாகத்தை பற்றி கவலைபடுவது வேடிக்கை!! :lol:

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத்தில் முதல் செயற்பாடாக எமது உறவுகளிற்கு சொல்லி கொள்ள விரும்புவது மட்டுநுறுத்தினர்களின் பணியை இலகுவாக்குவது அதன் அடிபடையில் யாழ்களத்தில் எந்த பகுதியிலும் உறவுகளை தாக்கி கருத்து எழுதி இருந்தா மற்றும் தேசியத்தை தரகுறைவாக எழுதி இருந்தா "ரிப்போர்ட்" பட்டனை அழுத்துவதன் மூலம் நிர்வாகிகளிற்கு உதவும் படி இதனால் அவர்களின் மட்டுநுறுத்தல் பணி குறைவடையும்!! :D

அதோட ஆட்டுக்கை மாட்டை (அதுதான் கருத்துக்கு சம்மந்தமே இல்லாத அரட்டை) விடுறாக்களையும் ரிப்போட் பண்ணுங்கோ. அப்பிடி செய்யக்கை மிகவும் கவனமாக இருங்கோ. சில பேர் "பந்தையம் பிடி நான் அரட்டை அடிப்பேன், என்னை யாரும் கட்டுபடுத்த முடியாது" என்று வியாக்கியானம் பேசுவினம். எந்த வித பாகுபாடும் பாராமல் ரிப்போட் பண்ணுங்கோ. உங்கள் ஒராளால இப்பிடி ஆட்டுக்கை மாட்டை விடுறவையை கட்டுபடுத்த முடியும்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Edited by Sabesh

  • தொடங்கியவர்

சபேசன் மாமா நான் அரட்டையை இதற்குள் இன்குலூட் பண்ணவில்லையே அரட்டை இல்லாத யாழ்களம் நினைத்து கூட பார்க்க முடியாது :lol: நீங்க கூட இப்ப அதை தான் என்னுடன் செய்றீங்க :) !!அரட்டை தேவை என்பது என்னுடைய கருத்து ஆகவே உங்கள் வாழ்த்துகளிற்கு நன்றி சபேசன் மாமா :D !!உங்களுக்கே தெரியும் அரட்டை குறைக்கபட்டுள்ளது எனியும் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்பது சுத்த வேஸ்ட் என்பது என்னுடைய கருத்து :lol: !!பந்தயம் கட்டி அரட்டை அடிப்பவர்களை நிர்வாகம் கண்காணிக்கும் அல்லவா நீங்களும் ரிபோர்ட் பண்ணலாம் தாராளமாக :D ........ஆனா நான் ரிபோர்ட் பண்ண கூறியவற்றில் அரட்டை இல்லை என்பதை கூறுகிறேன் :D !!இப்ப கூட ஆட்டுகுள்ள மாட்டை விட்டது நானில்லையுங்கோ :D !!சபேசன் மாமா வேண்டும் என்றா எங்கள் அமைபில் உங்களையும் இணைத்து கொள்ளளாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"அரட்டை இல்லாம யாழ் இல்லை அரட்டை அடிகாத யாழ்கள மெம்பர்ஸ் இல்லை" :)

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி சபேசன்.........

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபிக்கு பக்கபலமாக இருக்கட்டுமே எண்டு ஒரு சயெஸ்யன் சொன்னால் இப்பிடி கடுப்பாகிறிங்கள்.... ஜம்மு பேபி கூல் எண்டதால தானே சும்மா லொல்லு. ஆரம்பத்தில ஜம்மு பேபியின் கருத்துகள்(???) கொஞ்சம் சினமூட்டியது. இப்ப அப்படி இல்லை.

என்ன கொடுமை ஈழவன் சார் இது!

மாடுகள்தான் ஒற்றுமையாக வேண்டும், சிங்கங்களுடன் அல்ல!

மாடுகள்தான் தங்கள் வாழ்வுரிமைக்காக ஒன்றினைந்து இயற்கைக்கு எதிராக போராடவேண்டும்!

இங்கே கருத்தாளர்களின் கருத்திற்கும், மட்டுறுத்தினரின் கத்திக்கும் இடையில்தான் போராட்டம்!

சரி உங்கள் கருத்து வெட்டப்பட்டது பற்றிப் பார்ப்போம்,

களவிதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது!

நீங்கள் அதை ஏற்றுக் கொண்டவர், பின்பற்ற வேண்டியவர்!

ஒரு நீண்டகாக உறுப்பினர்!

1) உங்களால் ஏன் அதை பின்பற்றி எழுத முடியவில்லை?

பின்னர் பாலர் பாடசாலை ஆசிரியர் போல மட்டுறுத்துனர் அதை வெட்டி அகற்றி, சிறுவனான உங்களை அழைத்து விதிப்படி இது தவறு என்று சுட்டிக்காட்டிய பின் அதை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக பெருமையுடன் கூறுகிறீர்கள்.

2) இதில் என்ன புதுமை?

சரி இதை இப்படிப் பார்ப்போம்,

நீங்கள் வளர்ந்தவர்.

பல்கலைக்கழகத்தில் கற்பவர்.

சுயமாக சிந்திப்பவர்.

வாழ்வில் உங்கள் தெரிவுகளை நீங்களே மேற்கொள்ளுபவர்.

உங்களுக்கு சரியெனப் பட்டதை நீங்கள் தெரிவித்தீர்கள்.

அப்படி இருக்க இன்னொருவர் (மட்டுறுத்துனர்) வருகிறார், உங்கள் கருத்தில் மாற்றம் செய்கிறார். அதற்கான காரணத்தை (தனக்கு சரியெனப்பட்டதை) உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தருகிறார்.

3) அதை ஏற்றுக் கொள்வதை தவிர உங்களுக்கு வேறு என்ன வழியிருக்கிறது?

4) உங்களை போல் (நிர்வாக விசுவாசம் காரணமாக) ஏற்றுக் கொள்ளாதவருக்கு என்ன மார்க்கம் இருக்கிறது?

5) எல்லோருடனும் இப்படி நிர்வாகம் சமரசம் செய்கிறதா?

நீங்கள் பலியாகி இருக்கும் நிலை குறித்து உங்களால் உணரமுடியாமைக்கு வருந்துகிறேன்.

மேலும் ஒரு தனிப்பட்ட நபரின் காரணமாகவும் இந்த முன்முயற்சியை நீங்கள் எதிர்ப்பதாக கூறினீர்கள் அதுவும் தவறு.

ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட கருத்துகள் உள்ளன. இங்கே நாங்கள் இணைந்துள்ளது ஒரு பொதுக்கருத்தை வலியுறுத்தியே! அதுதான் தனிநபர்களின் கருத்துத் திணிப்பின் மூலமாக கருத்துச் சிதைவை தவிர்ப்பதற்கு ஒன்றாக குரல் கொடுப்பது!

தற்செயலான ஒன்றாக அல்லது யமுனா குறிப்பட்டது போல நகைச்சுவையான ஒன்றாகத்தான் இந்தக் கருத்து கருவுற்றது. இன்று உங்கள் எதிர்ப்புகளால் பலமடைந்துள்ளது.

அதிர்ஸ்டவசமாக உருப்பெற்ற இவ்வமைப்பில் என்னை இணைத்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். அது போலவே யாழ்களத்தின் 10 வது ஆண்டு நிறைவில் இத்தகையதொரு கருத்துருவாக்கம் அதன் பன்முகத்தன்மைக்கு சான்றாக அமைகிறது.

கடந்தகாலத்தை போலன்றி எதிர்காலத்தில் கருத்தாளர்கள் பாதிப்புறும் போது தனித்து விடப்படாமல் நியாயத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவும் அமைப்பாக இது செயற்படும்.

பொறுத்திருந்து பாருங்கள், எதிர்காலத்தில் இதன் வெற்றிகரமான செயற்பாட்டின் அடிப்படையில் உங்கள் அனைவரதும் ஆதரவு இந்த அமைப்புக்கு நிச்சயம் கிடைக்கும்!

நன்றி!

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.