Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மேற்கு நாடுகளில் வலதுசாரிகளின் எழுச்சிக்கான காரணம்களில் இதுவும் ஒன்று.. 

நிச்சயமாக வெளிநாட்டவர்கள் செய்யும் அஜாரங்களால் தான் மாற்றுக்கட்சியினர் எழுச்சி அடைகின்றார்கள்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

கனடாவின் விடுமுறை இல்லாத தினத்தில்...
இவர்கள் வீதியில் வெடி கொழுத்தி கொண்டாடுவது, மற்றைய மக்களுக்கு மிகவும் இடைஞ்சலானது. கண்டிக்கத்தக்க செயல். 

சிறித்தம்பி! ஜேர்மனி வீதிகளிலும் உந்த பொது சன இடைஞ்சல்கள் எக்கச்சக்கம்.அதிலையும் உந்த துருக்கிக்காரர் தங்கள் கலியாண வீட்டு கொண்டாட்டங்களுக்காக வேக வீதிகள் உட்பட உள்ளூர் வீதிகளை எல்லாம் தங்கள் வீட்டு வீதிகள் போல் கையாளுவார்கள். 😎

Immer wieder Chaos bei türkischen Hochzeitskorsos: Experten erklären, was  dahinter steckt

Türkische Hochzeiten: Blockaden wird es nicht mehr lange geben | STERN.de

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, valavan said:

நம்மாக்கள் எதுக்கும் இலங்கை எண்டு சேர்ட்டில எழுதிக்கொண்டு போறது உசிருக்கு உத்தரவாதம்.

நான் இருக்கிற இடத்தில என்னை  பாக்கிஸ்தானியன்,இந்தியன்,பங்களாதேஷ் எண்டு ஆளுக்காள் தங்கட இஷ்டத்துக்கு கணிச்சு வைச்சிருக்கிறாங்கள். நான் சிலோன் ஆள் எண்டு சொல்லியும் நம்புறாங்கள் இல்லை.இப்ப நான் ஜேர்மன் சிற்றிசன் வேற.....நான் கொண்டு வந்த சிலோன் கறுப்பு பாஸ்போர்ட்டும்  ஆதாரமாய் காட்ட கைவசம் இல்லை. இருந்தாலும் நான் இப்ப அடையாளம் மாறீட்டன்.
எனவே ஜேர்மன்காரனுக்கு எப்ப அந்த மூண்டு நாட்டுக்காரங்களில கோபம் வருதோ அப்பெல்லாம் குமாரசாமிக்கு அடி நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களின் அட்டகாசத்தால் வெடி கொழுத்த தடை விதிக்கப்பட்டதாக அறிந்தேன். எப்படி 2 மணி நேரம் வெடி கொழுத்த பார்த்து கொண்டிருக்கிறார்கள்? தீபாவளி என்பதால் பெரிதாக எதுவும் செய்ய விரும்பவில்லையோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, valavan said:

அதவிட சுவிஸ் பொலிஸ்தான் மிகவும் சிறந்தது, இரவிரவா பிடிச்சு ஏத்தி அவர்கள் சட்ட உதவி பெறாதபடி விடியும் நேரம் பிளைட் கடலுக்கு மேல பறந்து கொண்டிருக்கும்.

ஜேர்மனியில் பொலிஸ்க்கு அதிகார சட்டங்கள் குறைவு. இனிவரும் காலங்களில் பல கூடுதல் சட்ட அனுமதிகளை வழங்க இருப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி ஒன்று வருமாயின் ஜேர்மனியில் அகதியாக வரும்  அனைவரும் உடனேயே நாடு கடத்தப்படுவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இந்தியர்களின் அட்டகாசத்தால் வெடி கொழுத்த தடை விதிக்கப்பட்டதாக அறிந்தேன். எப்படி 2 மணி நேரம் வெடி கொழுத்த பார்த்து கொண்டிருக்கிறார்கள்? தீபாவளி என்பதால் பெரிதாக எதுவும் செய்ய விரும்பவில்லையோ தெரியவில்லை. 

இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து,

போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான்.

இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள்.

1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் பொலிஸ்க்கு அதிகார சட்டங்கள் குறைவு. இனிவரும் காலங்களில் பல கூடுதல் சட்ட அனுமதிகளை வழங்க இருப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி ஒன்று வருமாயின் ஜேர்மனியில் அகதியாக வரும்  அனைவரும் உடனேயே நாடு கடத்தப்படுவர்.

குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

இந்த சம்பவங்கள் மட்டுமல்ல இந்தியாவில் புளூ பிலிமைபார்த்துவிட்டு  இங்கு வந்து வெள்ளைக்காரிகள் என்றால் எல்லோருமே படுக்கைக்கு உரியவர்கள் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களை பார்த்து ஹிந்தி பாட்டு பாடுவது,

இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது.

ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம்.

1 hour ago, குமாரசாமி said:

நான் இருக்கிற இடத்தில என்னை  பாக்கிஸ்தானியன்,இந்தியன்,பங்களாதேஷ் எண்டு ஆளுக்காள் தங்கட இஷ்டத்துக்கு கணிச்சு வைச்சிருக்கிறாங்கள். நான் சிலோன் ஆள் எண்டு சொல்லியும் நம்புறாங்கள் இல்லை.இப்ப நான் ஜேர்மன் சிற்றிசன் வேற.....நான் கொண்டு வந்த சிலோன் கறுப்பு பாஸ்போர்ட்டும்  ஆதாரமாய் காட்ட கைவசம் இல்லை. இருந்தாலும் நான் இப்ப அடையாளம் மாறீட்டன்.
எனவே ஜேர்மன்காரனுக்கு எப்ப அந்த மூண்டு நாட்டுக்காரங்களில கோபம் வருதோ அப்பெல்லாம் குமாரசாமிக்கு அடி நிச்சயம்.

நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, valavan said:

இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து,

போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான்.

இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள்.

குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

7600 பேர் சேவையில் உள்ளதாக செய்திகள் சொல்கிறது. நீங்கள் சொன்ன மாதிரி தான் தந்திரமாக செய்வார்கள். ட்ரக்கால் மக்களை மோதியவரை பிடித்ததை நினைவு கூறுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

வளவன்... இப்போ இங்குள்ள Pizza கடைகள், Taxi கள் எல்லாம் வட இந்தியர்களின் ஆதிக்கம்தான்.
அவர்களின் கொண்டாட்டம் இல்லாத  பொது இடங்களில் கூட... பெண்கள், ஆண்கள் அதிக இந்திய உடைகளில் திரிவதை பார்க்க மற்றவனுக்கு எரிச்சலாக இருக்கும். 

பர்தா போடும் இஸ்லாமியர்களை எவ்வளவு வெறுத்தார்களோ..
அதே நிலைமை... இந்திய எதிர்ப்பு என்ற வடிவில், எங்களையும் பாதிக்கும் எனும் போது கவலையாகத்தான் உள்ளது.

நேற்று சூரன் போர் முடிய ,  வரும் வழியில்  பால் பாண் வாங்கவேண்டும் என்ற பாரியாரின் கட்டளையை சிரமேற்கொண்டு , விபூதி சந்தனப் பொட்டு , வேட்டிசகிதம்  வூலிசிற்குள் போனேன் .
உள்ளே சென்ற நேரம் தொடக்கம் வெளியே வரும் வர பார்வைக்கணைகள் .
செக்கவுட் ஒபெரட்டரின் கஸ்டமர் சேவை வழமையை விட மேம்பட்டிருந்ததை உணரக்கூடியதாக இருந்தது .

சாமானியன் நானொரு வலதுசாரியோ ..?   😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

நீங்கள், அந்தக் கடைக்குள் போக முதல்… மக்கள் இப்படி “குறுகுறு” என்று பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லையா. 😂
வெளியே வரும் போது.. உங்கள் மனநிலை எப்படி இருந்தது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள், அந்தக் கடைக்குள் போக முதல்… மக்கள் இப்படி “குறுகுறு” என்று பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லையா. 😂
வெளியே வரும் போது.. உங்கள் மனநிலை எப்படி இருந்தது. 🤣

நம்மட பொஸ் என்னை தனியா கடை வழிய விடுவதில்லை , தான் சொல்லாத கண்ட கண்ட சாமான்களை வாங்கி வந்து விடுவேன் எண்டு .
நேற்று என்னை பால் பாண் வாங்க சொல்ல நான் கேட்டனான் , நீர் வரேல்லையோ எண்டு .
என்ன இந்த சாரியோட வூலிசிற்குள்ள வரவோ . அது சரி வராது என்று ஆள் ஜகா வாங்கி விட்டது .
அருமையாக கிடைக்கிற சந்தர்ப்பம் என்ற பரபரப்பில் , குறு பார்வைகளைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை , ஆள் மனம் மாறேக்கு    முன்னர் போய் வந்து விடுவோம் எண்டு .

செக்கவுட் பெண்மணியின் வழமைக்கு மாறான கவனிப்பு ஒரு கிகுளுப்பாக தான் இருந்தது .

ம்ம்ம்  .. சூரன் போர் வருடத்தில் ஒரு தடவை தானே வரும் .. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சாமானியன் said:

அப்ப… வாற வருசமும் போற ஐடியா இருக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி போன்ற பகுதியிலும் இப்படித்தான். வெள்ளி பகல் ஜும்மா ஆரம்பித்தவுடன் வாகனங்களை நிறுத்திவிட்டு கும்பாலாக ரோட்டில் பிரார்த்தினை ப‌ண்ணுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, valavan said:

குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

இந்தியாவிற்கும் ஜேர்மனிக்கும் வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் படிக்க அனுமதி என பல ஒப்பந்தங்கள் செய்யுள்ளார்கள். அதன் அடிப்படையில் வந்து குவிகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா!

கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா!

இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் உயர் படிப்புக்கான விசாக்களை விரைவாகப் பெற அனுமதிக்கும் இந்த விசா திட்டத்தின் நிறுத்தமானது இந்தியா உட்பட சர்வதேசத்திலுள்ள மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எஸ்.டி.எஸ் விசா திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 3 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, கனடாவில் 4,27,000 இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1407971

###########    ############   ##############   ##############

தீபாவளி,  ஓணம் பண்டிகை... எல்லாத்தையும்,  கனடா வீதிகளை 
மறித்து வெடி கொளுத்தி கொண்டாடியதன் பலனை.. அறுவடை செய்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.