Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் இடையே போட்டி!

Vhg நவம்பர் 15, 2024
1000375980.jpg

 

நடந்து முடிந்த  இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.battinatham.com/2024/11/blog-post_539.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, கிருபன் said:

அதேவேளை  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுத்து மாத்து எப்படியும் உள்ளே வந்து விடும் என்ன கேவலம் செய்தாவது உள்ளேதான் அனுரா அரசின் ஆதரவு இல்லாவிட்டால் கூட்டத்தில் கேள்வி கேட்டவரை மட்டும் போலிஸ் தூக்கி இருக்காது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கிருபன் said:

அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது வேற வாய் இது நாறவாய் மூமெண்ட் spacer.png

Edited by அக்னியஷ்த்ரா
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தேர்தலுக்கு முன், எப்படியும் வென்று விடுவேன் எனும் மிதப்பில் சொன்னது.

1 hour ago, கிருபன் said:

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தேர்தலுக்குப்பின் தெளிந்த பின். இருவரும் காலையில் ஒன்று சொல்வார்கள், மாலையில் வேறொன்று சொல்வார்கள். பாப்போம் இருவரின் பேரம் பேசலையும். இருக்கிற மிச்சமும் கலையப்போகுது. இவர்களை விரட்டிய பின்தான் வீட்டை புனரமைக்க முடியும். இல்லையென்றால் வீட்டை அரித்துக்கொட்டிக்கொண்டே இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சுமந்திரன்...  பிரதம மந்திரியாக வந்திருக்க வேண்டும் என்று அனுர சொன்னவராம்.
அது... இவரின் காதில் கேட்டுதாம். 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்கமாட்டேன் - சுமந்திரன் அதிரடி!! ஆனால்…

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சுமந்திரனுக்கு தேசியப் பட்டியல்ஆசனம் வழங்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டுவந்த நிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என்று தற்பொழுது சுமந்திரன்(sumanthiran) தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்டால் நாடாளுமன்றம் செல்வேன்

மக்களால் தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே தான் நாடாளுமன்றம் செல்வேன் என்றும், கட்சியின் மத்தியகுழுவே தேசியப் பட்டியல் ஆசனத்தை தீர்மானிக்கும் என்றும் கூறிய சுமந்திரனிடம், ‘ஒருவேளை மத்திய குழு தேசியப் பட்டியலுக்காக உங்களைத் தெரிவுசெய்தால் என்ன செய்வீர்கள்’ என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்கமாட்டேன் - சுமந்திரன் அதிரடி!! ஆனால்… | I Will Not Accept National List Seat Sumanthiran

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவின் முடிவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் தமிழரசுக் கட்சியின் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த சுமந்திரன், தனது தோல்வி பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘மக்களின் தெரிவை மதிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

அரசியலில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் தொடர்பான விடயங்களில் தனது பங்களிப்பு இருக்கும் என்றும் மேலும் தெரிவித்தார். 

 

https://ibctamil.com/article/i-will-not-accept-national-list-seat-sumanthiran-1731670882#google_vignette

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்...  பிரதம மந்திரியாக வந்திருக்க வேண்டும் என்று அனுர சொன்னவராம்.
அது... இவரின் காதில் கேட்டுதாம். 😂

கனவு கனவு 

கண்டுக்காதேங்கோ.

4 minutes ago, கிருபன் said:

அதேவேளை, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஓ இப்போ மத்திய குழுவுக்கு அலுப்பு கொடுக்கிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

கனவு கனவு 

கண்டுக்காதேங்கோ.

ஓ இப்போ மத்திய குழுவுக்கு அலுப்பு கொடுக்கிறாரோ?

மத்திய குழு எல்லாம் இவற்றை ஆக்கள் தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, வாதவூரான் said:

மத்திய குழு எல்லாம் இவற்றை ஆக்கள் தானே

ஓஓஓஓ அப்ப பிறகென்ன ஐயா உள்ளுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ இப்போ மத்திய குழுவுக்கு அலுப்பு கொடுக்கிறாரோ?

 

32 minutes ago, வாதவூரான் said:

மத்திய குழு எல்லாம் இவற்றை ஆக்கள் தானே

சுமந்திரன், போன தேர்தலில்... சசிகலா ரவிராஜை ஏமாற்றி பாராளுமன்றம் போனவர்,
இந்த முறை... வைத்தியலிங்கத்தை ஏமாற்றி பாராளுமன்றம் போக நினைக்கின்றார். 
மற்றவனின் பதவிகளை தட்டிப்பறிப்பதே.. வாழ் நாள் தொழில்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்கமாட்டேன் - சுமந்திரன் அதிரடி!! ஆனால்…

அரசியலில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் தொடர்பான விடயங்களில் தனது பங்களிப்பு இருக்கும் என்றும் மேலும் தெரிவித்தார். 

நீங்கள்... இவ்வளவு நாளும், புடுங்கின ஆணியே போதும்.
இனி... புதுசா ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.