Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெஞ்சமின் நெதன்யாகு, யோகவ் கேலண்ட், முகமது டெய்ப்

பட மூலாதாரம்,EPA / REUTERS / SUPPLIED

படக்குறிப்பு, பெஞ்சமின் நெதன்யாகு, யோகவ் கேலண்ட், முகமது டெய்ப்

இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருக்கும் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதிகள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளனர்.

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்த இஸ்ரேலின் மேல்முறையீட்டை சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை பிரிவு (pre trial chamber - குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசாரணை பிரிவு) நிராகரித்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலண்ட் மற்றும் ஹமாஸின் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கரீம் கான், நெதன்யாகு, கேலண்ட் மற்றும் டெய்ப் மற்றும் (கொல்லப்பட்ட) இரு ஹமாஸ் தலைவர்களான இஸ்மாயில் ஹனியே மற்றும் யாஹ்யா சின்வாருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரினார்.

மேலும், ஜூலை மாதம் காஸாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் முகமது டெய்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறிய நிலையில் அவருக்கு எதிராகவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு எதிராக நடைபெறும் போரில், போர் குற்றஙகள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இம்மூவரும் "பொறுப்பானவர்கள்" என்ற குற்றச்சாட்டுக்கு "நம்பத்தகுந்த ஆதாரங்கள்" உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த பிடிவாரண்டை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவு, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளை தவிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தின் 124 உறுப்பினர் நாடுகளையும் பொறுத்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம்தான் இவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க கோரும் மனுவுக்கு அடிப்படையாகும்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இதில், காஸாவில் குறைந்தது 44,000 பேர் கொல்லப்பட்டதாக, ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறுவது என்ன?

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு, “யூத எதிர்ப்பு மனநிலையிலானது” என்றும் “நவீன கால டிரேஃபஸ் விசாரணை (Dreyfus trial)” என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டிரேஃபஸ் விசாரணை என்பது, 19-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் யூத ராணுவ அதிகாரி மீது நடத்தப்பட்ட விசாரணை ஒரு தேசிய நெருக்கடியைத் தூண்டியது.

''பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார், [காஸாவில்] ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் இஸ்ரேல் நிர்ணயித்த அனைத்து போர் இலக்குகளையும் அடையும் வரை பின்வாங்க மாட்டார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை "யூத வெறுப்பின் விளைவு” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

22 NOV, 2024 | 11:04 AM
image
 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தன் மீதான குற்றச்சாட்டுகளும் அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள  பிடியாணையும் யூத வெறுப்பின் விளைவு என்று  தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது பிடியாணை பிறப்பித்துள்ளது. 

இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்து உத்தரவிட்டது. அவர் மட்டுமல்லாது இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஹமாஸ் தலைவர் ஆகியோருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

icc.jpg

இந்நிலையில் இந்த பிடியாணை குறித்து நெதன்யாகு எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்ட வீடியோவில் “யூத வெறுப்புடன் எடுக்கப்பட்ட முடிவு. நவீன ட்ரேஃபஸ் விசாரணைக்கு சமமானது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

யார் இந்த ட்ரேஃபஸ்? - 1894 - 1906 இடையேயான காலகட்டத்தில் பிரான்ஸில் உளவு பார்த்ததாக யூத ராணுவ அதிகாரியான ஆல்ஃப்ரெட் ட்ரேஃபஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

அவர் ஜெர்மனுக்கு ராணுவ ரகசியங்களை விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என உறுதியாகி அவர் பிரஞ்சு ராணுவத்தில் மீண்டும் சேக்கப்பட்டார். இவருடன் தான் இப்போது நெதன்யாகு தன்னை ஒப்பிட்டுள்ளார். ட்ரேஃபஸ் மீதான போலி குற்றச்சாட்டுகள் போன்றது தன் மீதான போர்க்குற்ற புகார்கள் என்று நெதன்யாகு கூறியுள்ளார். மேலும் தன்னை நவீன கால ட்ரேஃபஸ் எனக் கூறும் நெதன்யாகு தன் மீதான குற்றச்சாட்டும் போலியானது என்பது நிரூபணமாகும் எனக் கூறியுள்ளார்.

44000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு:

gaza_june_101.jpg

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலியர்கள் உள்பட சிலர் பணயபி கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

பணயபிணைக் கைதிகளில் சொற்பமானவர்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காசா மீது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீதான தாக்குதல் ஹமாஸ் ஆதரவு அமைப்புகள் மீது நீண்டுள்ளது. 

லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசாவில் மட்டும் பெண்கள் குழந்தைகள் உள்பட 44000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3500-ஐ கடந்துள்ளது.

https://www.virakesari.lk/article/199387

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட்: இஸ்ரேலின் முயற்சிகளுக்கு இது எவ்வளவு பெரிய அடி?

காஸா - இஸ்ரேல் போர்; நெதன்யாகு, யோவ் கேலண்ட் கைது உத்தரவு

பட மூலாதாரம்,REUTERS

  • எழுதியவர், ஃப்ராங்க் கார்டனர்
  • பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்

இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு, பல முக்கிய இஸ்ரேலிய தலைவர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

அதேசமயம், ஹமாஸ், பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள் மற்றும் காஸாவின் பொதுமக்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

"நீதி மற்றும் மனிதநேயத்துக்கு ஓர் இருண்ட நாள். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்குப் பதிலாக இந்த முடிவு, பயங்கரவாதம் மற்றும் தீமையின் பக்கம் சென்றுள்ளது" என்று இந்த அறிவிப்பு குறித்து இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் குறிப்பிட்டார்.

இதனை "ஒரு யூத விரோத முடிவு" என்று அழைத்துள்ளது, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம். "இஸ்ரேல் இந்த தவறான மற்றும் அபத்தமான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது " என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "ஐ.சி.சி ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இது ஒரு பாரபட்சமான அரசியல் அமைப்பு" என்றும் ஐ.சி.சி மீது இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

 

"இஸ்லாமிய ஆதரவாளர்கள் வசப்பட்ட ஒரு அரசியல் அமைப்பின் வெட்கக்கேடான முடிவு இது" என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவர் யூலி எடெல்ஸ்டெய்ன் கூறினார்.

சட்டபூர்வமான தன்மையை ஐசிசி இழந்துவிட்டதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.

தனது சொந்த இராணுவத் தளபதி முகமது டெய்ஃபுக்கு வாரண்ட் பிறப்பித்தது குறித்து கருத்து தெரிவிக்காமல், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது குறித்தான முடிவை ஹமாஸ் வரவேற்றுள்ளது.

"உலக நாட்டினரிடம் போர் குற்றவாளிகளான சியோனிச நெதன்யாகு மற்றும் கேலண்டை நீதிமன்ற கூண்டில் ஏற்ற ஒத்துழைக்க வேண்டும் என்றும், காஸா பகுதியில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலைக் குற்றங்களை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்," என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

 
காஸா - இஸ்ரேல் போர்; நெதன்யாகு, யோவ் கேலண்ட் கைது உத்தரவு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் கேலண்டுக்கு எதிராக ஐ.சி.சி. பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது

காஸாவில் பாலத்தீன பொதுமக்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

"நாங்கள் பயமுறுத்தப்பட்டுள்ளோம், பட்டினியால் வாடினோம், எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன, எங்கள் குழந்தைகள், மகன்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்துள்ளோம். இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம், நிச்சயமாக, ஐசிசியின் அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என கூறுகிறார் முஹம்மது அலி. அவர், காஸா நகரத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போது டெய்ர் அல்-பாலாஹ்வின் மத்தியப் பகுதியில் வசித்து வரும் 40 வயது மதிக்கத்தக்க நபர்.

"என் சகோதரி வஃபா உட்பட பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கும் நீதி" என்று முனிரா அல்-ஷாமி ஐசிசியின் முடிவு குறித்து கூறுகிறார். கடந்த மாதம் இஸ்ரேலிய படைகளால் அவரது சகோதரி கொல்லப்பட்டார்.

ஆனால், சில இஸ்ரேலியர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமைக்கு எதிராக இந்த கைது அறிவிப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.

"ஆனால் இது ஒன்றும் எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை," என்று கூறும் ரோன் அகெர்மன், ஐ.சி.சி. முழுக்க முழுக்க இஸ்ரேலிய எதிர்ப்புடன் செயல்படுகிறது என்றும், இஸ்ரேலில் உண்மையில் என்ன நடக்கிறது ஐ.சி.சி. பார்க்க தவறிவிட்டது என்றும் கூறுகிறார்.

ஜெருசலேமில் உள்ள ஹெலன் கரிவ் இது பற்றி பேசும் போது, "நான் முதல் முறையாக இதை கேட்கும் போது, பிரதமரையும் அவரின் முதன்மை அதிகாரியையும் கைது செய்யும் எண்ணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று தான் தோன்றியது. நாங்கள் வாழ்வதற்காக சண்டையிடுகிறோம்," என்று கூறினார்.

 
காஸா - இஸ்ரேல் போர்; நெதன்யாகு, யோவ் கேலண்ட் கைது உத்தரவு

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு, சில இஸ்ரேலியர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமைக்கு எதிராக இந்த கைது அறிவிப்பு உள்ளது என்று கூறுகின்றனர்

இந்த கைது வாரண்டுகள் என்ன விளைவை ஏற்படுத்தும்?

அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இஸ்ரேல் தவிர்த்து, பிரிட்டன் உட்பட மொத்தம் 124 நாடுகள் ஐசிசியில் உறுப்பு நாடுகளாக கையெழுத்திட்டுள்ளன.

எனவே, சட்ட ரீதியாக, நெதன்யாகு அல்லது கேலண்ட் ஐசிசி கையெழுத்திட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஆனால், அந்த நபர் எப்போதாவது நெதர்லாந்தின் ஹேக்கிற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுவாரா என்பது குறித்து சர்வதேச வழக்கறிஞர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

நெதன்யாகு கடைசியாக கடந்த ஜூலை மாதம் , இஸ்ரேலுக்கு வெளியே, அமெரிக்காவுக்கு பயணம் செய்தார். ஐசிசியில் அமெரிக்கா இன்னும் கையெழுத்திடாததால் அங்கு தண்டனையின்றி அவர் செல்லலாம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், அவர் பிரிட்டன் உட்பட பல நாடுகளுக்குச் சென்றார். அவற்றில் பல நாடுகள் ஐசிசியில் கையெழுத்திட்டவை.

இந்த நாடுகளுக்கு மீண்டும் செல்வதன் மூலம் அவர் கைதுக்கு ஆளாக நேரிடும் என்பதால், அவர் அங்கு செல்ல மாட்டார் என நம்பப்படுகின்றது. மேலும் அந்த நாடுகளும் அப்படி ஒரு நிலையை விரும்பாது.

இப்ராஹிம் அல்-மஸ்ரி என்று அழைக்கப்படும் முகமது டெய்ஃப் மீதான ஐசிசி வாரண்ட் குறித்து ஹமாஸ் சிறிதும் அஞ்சவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நம்புகிறது, இருப்பினும் இது ஹமாஸ் தரப்பால் உறுதிப்படுத்தப்படவில்லை.

 
யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ஐசிசி முதலில் வழக்குத் தொடர திட்டமிட்டிருந்த மற்ற இரண்டு ஹமாஸ் தலைவர்களான யாஹ்யா சின்வார் மற்றும் இஸ்மாயில் ஹனியே ஆகிய இருவரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்ல மற்றும் தீய சக்திகளுக்கு இடையிலான சண்டை இது என்று காஸாவில் தனது ராணுவ பிரசாரத்தை முன்வைக்க இஸ்ரேல் எடுத்து வந்த முயற்சிகளுக்கு, வியாழன் அன்று வெளியாகியுள்ள ஐசிசியின் அறிவிப்பு ‘ஒரு பெரிய அடியாகும்’ என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் செய்த அட்டூழியங்களை உலகம் ஏற்கனவே மறந்துவிட்டதா அல்லது கவனிக்காமல் விட்டதா என்று இஸ்ரேல் சார்பில் கேட்கிறார்கள்.

இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் குறித்த தங்களது குற்றச்சாட்டுகள் இப்போது ஒரு சர்வதேச அமைப்பால் எதிரொலிக்கப்பட்டு, நியாயம் கிடைத்துள்ளதாக பாலத்தீனர்களும், காஸா மக்களும் நம்புகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

சரியான முடிவு. 

பத்தாயிரக் கணக்கான மக்களைக் கொன்று விட்டு ஒருவரை சும்மா உலக வலம் வர அனுமதித்தால், இன்னும் இன்னும் அரச கொலைகாரர்கள் உருவாக வழியேற்பட்டு விடும்.

இந்த தலைமை வழக்கறிஞர் கான் அவர்களை பாலியல் குற்றத்தில் மாட்ட வைக்க முயற்சித்தார்கள். அது பலித்தாலும் கூட விடயம் இப்போது கைது ஆணையாக உருவாகி விட்டது.

இந்த விவகாரத்தில், பன்னாடைத் தனமான பைடனின் கருத்திற்கும், பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தின் கருத்திற்குமிடையேயான வேறு பாடு குறிப்பிடத் தக்கது. ஐரோப்பாவும் பிரிட்டனும், மனித உரிமை விடயங்களில் தலைமையேற்கும் நிலை அடுத்த 4 வருடங்களுக்கு நல்ல சகுனம்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் 

அப்படியே எம் பக்கமும் திறக்கப்படும்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்தின் மிகச்சிறந்த நகைச்சுவைகளில் இதுவும் ஒன்று. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

இந்த விவகாரத்தில், பன்னாடைத் தனமான பைடனின் கருத்திற்கும், பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தின் கருத்திற்குமிடையேயான வேறு பாடு குறிப்பிடத் தக்கது.

இந்த  முடிவு முழு பிரித்தானிய அரசியல் மற்றும் அதிகார அமைப்பின் முடிவு அல்ல.

Tories பதவியில் இருந்த போது இந்த வழக்கு, பிடியாணை தடுக்க முனைந்தது.

(குறிப்பு; Tories என்ற பழைய ஐரிஷ் சொல்லின்  என்பதன் உண்மையான அர்ததம் பகலில் சூறையாடும்  (வழிப்பறி) கொள்ளையர்,   அது போலவே Tories  பிரித்தானியாவை சூறையாடி விட்டு தேர்தல் வந்ததால் பதவியை விட்டு இரக்கப்பட்டு உள்ளனர், ஏறத்தாழ 22 பில்லியன் பௌண்ஸ் ஐ labour அரசாங்கம் தேடுவதத்திற்கு, மீட்பதற்கு முனைகிறது. இது மிகவும் சிறிய தொகை ஆயினும்) 

https://www.politico.eu/article/uk-drops-objection-icc-issuing-arrest-warrant-benjamin-netanyahu/

 

"The decision marks a contrast to the previous Conservative government, who requested the court provide written observations on whether it “can exercise jurisdiction over Israeli nationals” given the Palestinian Authority cannot exercise criminal jurisdiction over Israeli nationals. The Conservatives did not submit a full objection before the election."

 


https://www.independent.co.uk/news/uk/icc-tories-priti-patel-government-benjamin-netanyahu-b2651361.html

"Sir Keir Starmer’s Government has been urged by the Tories to condemn the arrest warrants issued for Israel’s prime minister and former defence minister."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.