Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு - கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "மரணித்துப்போன விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது.

அநுர அரசின் அனுமதி

நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தமைக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தையும், மாவீரர் தினத்தையும் பகிரங்கமாக அனுஷ்டிக்கத் தமிழ் மக்களுக்கு அநுர அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம் | Maveerar Day Commemorated People Should Be Arrest

மரணித்துப்போன விடுதலைப்புலிகள் அமைப்பினர்களை நினைவேந்த அனுமதி வழங்குவதா, தமிழ் மக்களுக்கு அநுர அரசு செய்யும் நன்றிக் கடன்?

தெற்கில் உள்ள மக்கள் அநுர அரசின் தான்தோன்றித்தனமான இந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும்." என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://ibctamil.com/article/maveerar-day-commemorated-people-should-be-arrest-1732979225

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் : அநுர அரசின் பதிலடி

நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு அநுர (Anura Kumara Dissanayake) அரசு அனுமதி வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila) மற்றும் சரத் வீரசேகர (Sarath Weerasekara) ஆகியோர் விமர்சித்திருந்தனர்.

அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜித ஹேரத் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக தெற்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் : அநுர அரசின் பதிலடி | Anura Gov Responds To Weerawansa And Gammanpila

அதேபோல் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தெற்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக வடக்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.

இனவாதக் கருத்துக்கள்

ஒவ்வொரு வருடமும் மே, நவம்பர் மாதங்களில் இத்தகைய இனவாதக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன இந்த இனவாதக் கருத்துக்கள் இனியும் இருக்கக்கூடாது.

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் : அநுர அரசின் பதிலடி | Anura Gov Responds To Weerawansa And Gammanpila

நினைவேந்தல் உரிமை சகல இனத்தவர்களுக்கும் உரியது அதில் இன வேறுபாடு இருக்கக்கூடாது.

நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம்.

அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதேவேளை, சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் அது காவல்துறையினரின்  கடமையாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/anura-gov-responds-to-weerawansa-and-gammanpila-1733009767#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

கடந்த காலங்களில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக தெற்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.

37 minutes ago, ஏராளன் said:

அதேபோல் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தெற்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக வடக்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.

எல்லாம் சரி விஜித ஹேரத் ஐயா தெற்கில் உங்காளுங்கள  நினைவேந்தும்போது வடக்கில் உள்ளவர்கள் எங்கே எப்போது இனவாதம் கக்கினார்கள்? 

ரணில் ஆட்சியின்போதும் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் பிரமாண்டமாக மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்பட்டது அப்போமட்டும் ஏன் சரத் வீர சேகர  எல்லாரையும் பிடிச்சு உள்ள போட சொல்லவில்லை? 

உங்களுக்கு பிரச்சனை அநுரவா இல்லை தமிழ்மக்களா? இல்லை இனவாதமா? மூன்றுமேதான் போல படுகிறது.

ஒவ்வொரு மே’யிலும் பலபத்து  ஆயிரம் தமிழரை  கொன்ற நாளை காலிமுகதிடலில் யுத்த வெற்றிவிழா என்ற பேரில்  நீங்கள் கொண்டாடியபோது அது பயங்கரவாதமாக தெரியவில்லை, ஆனால் உங்கள் கொலைவெறிக்கு பல  ஆயிரம்பேரை பறி கொடுத்ததை நாங்கள் நினைவு கூர்ந்தால் அது பயங்கரவாதமாக தெரிகிறது.

மாவீரர்நாளில் பங்குகொண்ட அத்தனை பேரையும் தூக்கி உள்ளேபோட அவ்வளவு பிரமாண்ட சிறைச்சாலைகள் எல்லாம் உங்களிடம் உள்ளதா என்ன?

ஆனால் ஒன்று மஹிந்த ஆட்சியிலிருந்தபோதும் மறைமுகமாக கோயில்மணி ஒலித்து மாவீரர்நாள் கொண்டாடியதாக செய்தி வந்ததுண்டு, மைத்திரி ஆட்சியின்போதும், கோத்தபாய ஆட்சியிலும் தடைகள் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர்நாள் நினைவு கூரப்பட்டதுண்டு  ரணில் ஆட்சியின்போதும் அது நடந்தது, அநுர ஆட்சியிலும் நடக்கிறது, அடுத்து வரும் ஆட்சிக்காலங்களிலும் ஏதோ ஒரு வழியில் நடக்கும்.

ஏனென்றால்,

எப்படி சிங்களவர்களுக்கு மாத்தறை கண்டி, குருநாகல் சிங்கள  திமிர் பிடித்த நகரங்களோ அதுபோல யாழ்மண்ணும் இனம் என்று வரும்போது தமிழ் திமிர் பிடித்த மண் ,

அது இனத்துக்காய் இறந்தவர்கள் நினைவென்று வரும்போது எவர் தடுத்தாலும் சொன்னாலும் அவர்கள் சொல் கேளாது, அந்த தமிழ்  திமிர் பிடித்த மண்ணில் பிறந்துக்கு பெருமை படும் பலரில் நானும் ஒருவன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் : அநுர அரசின் பதிலடி

நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு அநுர (Anura Kumara Dissanayake) அரசு அனுமதி வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila) மற்றும் சரத் வீரசேகர (Sarath Weerasekara) ஆகியோர் விமர்சித்திருந்தனர்.

அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜித ஹேரத் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக தெற்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் : அநுர அரசின் பதிலடி | Anura Gov Responds To Weerawansa And Gammanpila

அதேபோல் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தெற்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக வடக்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.

இனவாதக் கருத்துக்கள்

ஒவ்வொரு வருடமும் மே, நவம்பர் மாதங்களில் இத்தகைய இனவாதக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன இந்த இனவாதக் கருத்துக்கள் இனியும் இருக்கக்கூடாது.

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் : அநுர அரசின் பதிலடி | Anura Gov Responds To Weerawansa And Gammanpila

நினைவேந்தல் உரிமை சகல இனத்தவர்களுக்கும் உரியது அதில் இன வேறுபாடு இருக்கக்கூடாது.

நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம்.

அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதேவேளை, சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் அது காவல்துறையினரின்  கடமையாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/anura-gov-responds-to-weerawansa-and-gammanpila-1733009767#google_vignette

இனவாதம்.  பேசுவது குற்றம் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும்    அப்படி பேசுவோர்   கைது செய்து   சிறையிலடைக்கபடவேண்டும்.    அரைவாசி   பிரச்சனை தீர்ந்து விடும்    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இனவாதம்.  பேசுவது குற்றம் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும்    அப்படி பேசுவோர்   கைது செய்து   சிறையிலடைக்கபடவேண்டும்.    அரைவாசி   பிரச்சனை தீர்ந்து விடும்    

இப்போ இருக்கும் சட்டத்தை வைத்து, இப்போ பேசியதற்க்காக, விமல், சரத், உதயவை இன்றே கைது செய்யலாம்.

ஐ ஆம் வெயிட்டிங் அனுர.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இப்போ இருக்கும் சட்டத்தை வைத்து, இப்போ பேசியதற்க்காக, விமல், சரத், உதயவை இன்றே கைது செய்யலாம்.

ஐ ஆம் வெயிட்டிங் அனுர.

போங்கப்பு நடக்கிறதை கதையுங்க…. சாரி எழுதுங்க😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அதேவேளை, சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் அது காவல்துறையினரின்  கடமையாகும்

எது பயங்கரவாத தடை சட்டம்தானே?

அதைத்தான் எதிர்கட்சியில் இருக்கும் போது மோசமான நீக்கப்படவேண்டிய சட்டம் என்றீர்களே?

அதை நீக்கிவிட்டால் பிரச்சனை பலதுதானாக தீருமே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இனவாதம்.  பேசுவது குற்றம் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும்    அப்படி பேசுவோர்   கைது செய்து   சிறையிலடைக்கபடவேண்டும்.    அரைவாசி   பிரச்சனை தீர்ந்து விடும்    

நாங்க சிறீலங்கா அரசு செய்திகள் சார்ந்து பேசுகிறோம். நீங்க?? ஜேர்மனி? ஐரோப்பா? அமெரிக்கா???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை தமிழர்கள் மறந்தாலும் சிங்கள தேச அபிமாணிகள் மறக்க விட மாட்டினம்....வாழ்க விமல் வீரவம்ச....சரத் வீர சேகரா,உதய கம்பன்பிலா...
உங்களில் யார் அடுத்த அரகலயாவின் தலீவர்...அமெரிக்கா ,இந்தியா யாரை தெரிவு செய்யும்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.