Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/313178

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளர் கைது!

மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா (Renuka Perera) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டிகாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்தே அவர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1411149

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான தண்டனை  விதிக்கப்பட வேண்டும். அப்போதான் இன்னொருவர் இந்த குற்றத்தை செய்ய தயங்குவர். தம்மை பாதுகாப்பதற்கும் தமது சுயநலத்திற்கும் அப்பாவி மக்களை பலிகொடுத்து தமது திட்டங்களை நிறைவேற்றுவது தடுக்கப்படவேண்டும். இனவாதம் பேசுவோருக்கும் உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளர் கைது!

மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா (Renuka Perera) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டிகாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்தே அவர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1411149

அருமை  வரவேற்க வேண்டிய செயல்   🙏

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

கடுமையான தண்டனை  விதிக்கப்பட வேண்டும். அப்போதான் இன்னொருவர் இந்த குற்றத்தை செய்ய தயங்குவர். தம்மை பாதுகாப்பதற்கும் தமது சுயநலத்திற்கும் அப்பாவி மக்களை பலிகொடுத்து தமது திட்டங்களை நிறைவேற்றுவது தடுக்கப்படவேண்டும். இனவாதம் பேசுவோருக்கும் உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும்.

27 minutes ago, Kandiah57 said:

அருமை  வரவேற்க வேண்டிய செயல்   🙏

உண்மைதான். அனுர அரசு... ஆரம்பத்திலேயே, அதிரடி நடவடிக்கை மூலம் 
இவரை கைது செய்து, இனி வரும் காலங்களில்... 
தேவையில்லாத வதந்திகளை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புவர்களுக்கு 
ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள். 

காலம் காலமாக... இனவாதத்தை வைத்தே... அரசியல் நடத்தியவர்களை கட்டுப்படுத்த 
இப்படியான நடவடிக்கை மூலம்தான் கடிவாளம் போட முடியும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருக்குப் பிணை

 மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இன்று (5) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இவர் மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பதிவிட்ட குற்றத்துக்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருக்குப் பிணை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

கடுமையான தண்டனை  விதிக்கப்பட வேண்டும். அப்போதான் இன்னொருவர் இந்த குற்றத்தை செய்ய தயங்குவர். தம்மை பாதுகாப்பதற்கும் தமது சுயநலத்திற்கும் அப்பாவி மக்களை பலிகொடுத்து தமது திட்டங்களை நிறைவேற்றுவது தடுக்கப்படவேண்டும். இனவாதம் பேசுவோருக்கும் உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும்.

மாவீரர் நாளுக்காக பயங்கரவாத சட்டத்தில் கைதாகிய இரு தமிழர்கள் மற்றும் இலண்டனில் இருந்து போய் விமான நிலையத்தில் கைதான தமிழர் திரியில் உங்கள் தலை கறுப்பையும் காணவில்லை.

இவற்றில் உங்கள் நிலைப்பாடு என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரேணுக பெரேராவின் கைது அரசியல் பழிவாங்கல்; பொதுஜனபெரமுன

Published By: Vishnu

05 Dec, 2024 | 11:53 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

1980 களில் மக்கள் விடுதலை முன்னணி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி  மக்களை கொலை செய்யும் போது அதற்கு எதிராக ரேணுக பெரேரா முன் நின்றவர். அவ்வாறான ஒருவரை இந்த அரசாங்கம் கைது செய்வது அரசியல் பழிவாங்கலாகவே நாம் பார்க்கிறோம்.

நாட்டு மக்களுக்கு பொய்க்கூறி அதிகாரத்துக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான  அரசாங்கம் தற்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசை திருப்பவே இவ்வாறு  கைதுகளை  மேற்கொள்கிறது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, 

கட்சியின் நிர்வாக உறுப்பினர் ரேணுக பெரேராவின் கைது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

ரேணுக பெரேரா இனவாதியல்ல.இனவாதத்துக்கு எதிராக செயற்பட்ட ரேணுக பெரரோவையே நாம் அறிந்துள்ளோம்.1980 களில் மக்கள் விடுதலை முன்னணி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி  மக்களை கொலை செய்யும் போது அதற்கு  எதிராகவும் நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முன்னின்று செயற்பட்ட விஜயகுமாரதுங்கவின் அரசியல் கட்சியில் உறுப்பினராக செயற்பட்டவரே இந்த ரேணுக பெரேரா.அவ்வாறான ஒருவரை இந்த அரசாங்கம் கைது செய்வது அரசியல் பழிவாங்களாகவே நாம் பார்க்கிறோம். இது தமக்கு எதிராக செயற்படும் தரப்பினரை ஒடுக்கும் முயற்சியாகும்.

பாராளுமன்றத்தில் எத்தனையே எதிர்காட்சிகள் இருக்கின்றன. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பொதுஜன பெரமுனவை குறி வைத்துள்ளது. இந்த அரசாங்கம் பொதுஜன பெரமுனவை கண்டு அச்சமடைந்துள்ளது.மாவீரர் தினம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுதலை செய்யும் போது நீதிமன்றம் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தது. வடக்கில் பல பகுதிகளில் விடுதலை புலிகளை ஆதரித்து மாவீரர் தினம் கொண்டாடப்பட்டதாக சம்பந்தப்பட்ட அமைச்சரே பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

எனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும் கூட அரசாங்கம் சட்டத்துக்கு மதிப்பளிக்காமல் அரசியல் பழிவாங்கலை செய்துள்ளமை இதன் ஊடாக தெளிவாகியுள்ளது.நாட்டு மக்களுக்கு பொய்க்கூறி அதிகாரத்துக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசை திருப்பவே இவ்வாறு  கைதுகளை  மேற்கொள்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/200541

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

மாவீரர் நாளுக்காக பயங்கரவாத சட்டத்தில் கைதாகிய இரு தமிழர்கள் மற்றும் இலண்டனில் இருந்து போய் விமான நிலையத்தில் கைதான தமிழர் திரியில் உங்கள் தலை கறுப்பையும் காணவில்லை.

இவற்றில் உங்கள் நிலைப்பாடு என்ன?

இனவாதம் பேசி இனி பிரபலமாக வரலாம் ...
அரசு கைது செய்து பிரபலம் அடையும்,பேசியவர்கள் சிறை சென்று பிரபலம் அடைவார்கள் ....
மொத்தத்தில் தமிழனுக்கு ஆப்பு நாலா பக்கமும் இருக்கு 

இது என்ன சின்னதனமான கேள்வி...
பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு தான் தண்டனை ...பிரிவினையை தூண்ட இனவாதம் பேசுபவர்களுக்கு பிணை 😅
வெளிநாடுகளில் இனத்துவசத்திற்கு சில சட்டங்கள் உண்டு ...இதை சாதாரண பொதுமக்கள் கணக்கில் எடுக்கின்றனர் ...சிலசமயம் சில அதிகாரிகள் திட்டினால் திட்டுவாங்கினவர் .."டொன்ட் பி   எ ரெசிட்"என சொன்னால் 
உடனே அந்த அதிகாரி பயந்து போய்விடுவார்  கண் எல்லாம் சிவந்து போகும்...அவனுக்கு தெரியும் தனது வேலைக்கு  ஆபத்து ,பதவி உயர்வுக்கு ஆபத்து என பல விடயங்களில் பாதிப்பு ஏற்படும் எண்டு... 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

ஓம் அண்ணா நீங்கள் சொல்வதில் மாற்று கருத்து இல்லை.

யாழ்கள அனுர படையணி தளபதியின் கருத்தை அறியவே அந்த கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

ரஹ்மான் - சைரா பானு பற்றி தவறான தகவல்கள் யூடியூப்புகளில் வெளியாகியது. ரஹ்மான் ஒரே ஒரு அறிவிப்பு மட்டுமே அவர் வக்கீலினூடாக வெளியிட்டார். யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று. அடுத்த 24 மணி நேரத்தில் 700 வீடியோக்கள் நீக்கப்பட்டன.

ரேணுகா பெரேராவைக் கைது செய்ததாலும் இப்படியான ஒரு பயனும் கிட்டலாம். பொதுஜன பெரமுன இதுவரை பேசாத இனவாதமா இனிமேல் புதிதாகப் பேசி பிரபலமடையப் போகின்றது........... நாமலை விடவும், மகிந்தவையும் விடவா இவர்களின் கட்சியில் இருந்து வேறு எவராவது இனவாதம் பேசப் போகின்றார்கள்............ ஒரு சின்ன தயக்கம் என்றாலும் இப்பொழுது வருமல்லவா................

வாலிபாலில் வலைக்கு மேலே இரண்டு கைகள் தடுத்துக் கொண்டிருக்கும் போது பந்தை அடிப்பதற்கும், தடுப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் போது அடிப்பதற்கும் இடையேயான வித்தியாசம் போன்றது இது..........     

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

1980 களில் மக்கள் விடுதலை முன்னணி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி  மக்களை கொலை செய்யும் போது அதற்கு எதிராக ரேணுக பெரேரா முன் நின்றவர். அவ்வாறான ஒருவரை இந்த அரசாங்கம் கைது செய்வது அரசியல் பழிவாங்கலாகவே நாம் பார்க்கிறோம்.

மஹிந்தவும் முன்பு ஏதோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், பின்பு அதே தவறைஅவரே தனது ஆட்சியில் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. அனுராவின் ஆட்சியில் நீதி, நிஞாயம், நிலை நிறுத்தப்பட்டால்; நாடு அமைதியடையும், தங்களது அரசியல் அஸ்தமனமாகும் என சிலர் துடிப்பதும் எச்சரிப்பதும் குற்றம்சாட்டுவதும் தெரிகிறது. அன்று ரேணுக பெரேராவிற்கு  அரசியல் செய்வதற்கு அது தேவையாக இருந்திருக்கும், இன்று அந்த அரசியலுக்கு உயிர் கொடுப்பதற்கு தமிழரை பயங்கரவாதிகளாக சித்திரிக்க வேண்டிய தேவையிருக்கிறது.  சாகர காரியவசம்தான்  ரேணுகா பெரேராவை ஏவிவிட்டு ஒட்டம் பார்த்தாரோ தெரியவில்லை. இவரையும் விசாரிக்க வேண்டும். மஹிந்த ஆட்சிக்கு வந்திருந்திருந்தால், என்ன நடக்குமோ அதையே அவர்கள் செய்தார்கள், ஆனால் தண்டனை என்றவுடன் பொருமுகிறார்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.