Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.

Vhg டிசம்பர் 06, 2024
1000391483.jpg

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்னசேகர மாற்றம் செய்துள்ளார்.

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எம்.வை.பைசால் மாகாண முதலைமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக J.லியாகத் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜி.திசாநாயக்கா விவசாய அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாகாண ஆளுனரின் செயலாளராக கடமையாற்றிய எல் பி.மதன்னாயக்கா சுகாதார அமைச்சின் செயலாளராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய எம்.சிவலிங்கம் அவரது நிரந்தர பதவியான மட்டு.மாநகர ஆணையாளராக கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய என்.மணிவண்ணன் அவரது நிரந்தர பதவியான மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சு, ஆளுனரின் செயலாளரின் நியமனங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

https://www.battinatham.com/2024/12/blog-post_88.html

  • கருத்துக்கள உறவுகள்

சரி . அமைச்சர்கள்  பெரும்பாலும் தமிழர்களாக வருவார்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, RishiK said:

சரி . அமைச்சர்கள்  பெரும்பாலும் தமிழர்களாக வருவார்கள் போல

அதற்கு மாகாணசபை தேர்தல் நடக்க வேண்டுமே.

———

ஒரு தமிழ் செயலாளர் கூட இல்லை?

1. தமக்கு வாக்களிக்காத கிழக்கு தமிழரை ஜேவிபி பழி தீர்கிறது.

2. அடுத்த முறையாவது வாக்கு போட்டால்தான் சலுகை என மிரட்டுகிறது.

3. முஸ்லிம்களுக்கு பதவி கொடுத்து, தமிழரை புறக்கணித்து இனமுறுகலை வலுப்படுத்தி புள்ளி 2 ஐ மேலும் நிறுவுகிறது.

4. சகோதரயாட்ட ஜெயவேவா

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

எல்லோரும் இலங்கையரப்பா...பாராளுமன்றில் மூன்று மொழியிலும் சொல்லுறமல்ல ..சம உரிமை கிடைச்சிட்டல்ல..கிழக்கு மாகாணம் பல்லின சமுகம் கொண்ட மாகாணம் அது தமிழ் மாகாணம் அல்ல என சொல்ல தான் இவ்வளவும் நடக்கின்றது ...புது அரசியல் மூன்று வருடங்களுக்கு பின்பு தான் வரும் என சொல்கின்றனர் ..அதுவரை ஆளுனர் ஆட்சியை நடத்தி ...மாகாண சபை ஆட்சிமுறையினால் தமிழ் மக்கள் எந்த வித நன்மையும் அடையவில்லை என கூறி பிரச்சாரம் செய்வார்கள் ...
மாகாணசபை தேர்தல் வைக்க மாட்டார்கள் ஆனால் மாகாணசபை தேவையில்லை என்பதற்காக தேர்தல் வைப்பார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பதவி கொடுக்கப்பட்டவர்கள் அந்த பதவிகளுக்கு தகுதியுடையவர்களாய் இருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

எல்லோரும் இலங்கையரப்பா...பாராளுமன்றில் மூன்று மொழியிலும் சொல்லுறமல்ல ..சம உரிமை கிடைச்சிட்டல்ல..கிழக்கு மாகாணம் பல்லின சமுகம் கொண்ட மாகாணம் அது தமிழ் மாகாணம் அல்ல என சொல்ல தான் இவ்வளவும் நடக்கின்றது ...புது அரசியல் மூன்று வருடங்களுக்கு பின்பு தான் வரும் என சொல்கின்றனர் ..அதுவரை ஆளுனர் ஆட்சியை நடத்தி ...மாகாண சபை ஆட்சிமுறையினால் தமிழ் மக்கள் எந்த வித நன்மையும் அடையவில்லை என கூறி பிரச்சாரம் செய்வார்கள் ...
மாகாணசபை தேர்தல் வைக்க மாட்டார்கள் ஆனால் மாகாணசபை தேவையில்லை என்பதற்காக தேர்தல் வைப்பார்கள்...

இப்படி எல்லாம் நீங்கள் ஆரூடம் கூறப்படாது.

அனுரவுக்கு ஒரு நாலு வருடம் கொடுத்தால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்?

மேலும்….

சிங்களவர் எப்போதாவது தமிழர்களை ஒதுக்கி இருக்கிறார்களா, இப்போ ஒதுக்க?

எப்போதும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என பாராது - தகுதி அடிப்படையில் பதவி வழங்கும் மனு நீதிச் சோழர்கள் அல்லவா அவர்கள்?

நீங்கள் ஏன் இப்படி இனவாதமாக எழுதுகிறீர்கள்?

இப்போ இதை நாம் (கருணா, பிள்ளையான், அவர்களின் அடிப்பொடிகள்) எப்படி பயன்படுத்துவோம் என்பதை இருந்து பாருங்கள்👇.

நாம் இனி எப்படி எழுதுவோம் என்றால்…யாழ்பாணத்தவர்/ வடக்கு மக்கள் கெட்டிகாரர் என் பி பிக்கு போட்டு தப்பி கொண்டார்கள், ஆனால் கிழக்கு மக்கள் ஒட்டு மொத்தமாக தமிழரசுக்கு போட்டது முஸ்லிம்களுக்கு கிழக்கில் முதன்மை நிலையை உருவாக்கி விட்டது.

இந்த ஆபத்தை தவிர்க்க அடுத்த முறை கிழக்கு மக்கள் பிள்ளையான் கருணாவுக்கு போட வேண்டும்.

எப்படி இருக்கு இந்த தில்லாலங்கடி அரசியல்? 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் எனறால் மட்டு நகர் மட்டும் தான் என்ற நினைப்பு இங்க கண பேருக்கு இருக்கு 
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

கிழக்கு மாகாணம் எனறால் மட்டு நகர் மட்டும் தான் என்ற நினைப்பு இங்க கண பேருக்கு இருக்கு 
 
70 க்கு முதல் அப்படித்தான் இருந்தது இப்ப தான் நீங்கள் நினைக்கும்  பல்லின சமுகமாக மாறி வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

இப்படி எல்லாம் நீங்கள் ஆரூடம் கூறப்படாது.

அனுரவுக்கு ஒரு நாலு வருடம் கொடுத்தால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்?

மேலும்….

சிங்களவர் எப்போதாவது தமிழர்களை ஒதுக்கி இருக்கிறார்களா, இப்போ ஒதுக்க?

எப்போதும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என பாராது - தகுதி அடிப்படையில் பதவி வழங்கும் மனு நீதிச் சோழர்கள் அல்லவா அவர்கள்?

நீங்கள் ஏன் இப்படி இனவாதமாக எழுதுகிறீர்கள்?

இப்போ இதை நாம் (கருணா, பிள்ளையான், அவர்களின் அடிப்பொடிகள்) எப்படி பயன்படுத்துவோம் என்பதை இருந்து பாருங்கள்👇.

நாம் இனி எப்படி எழுதுவோம் என்றால்…யாழ்பாணத்தவர்/ வடக்கு மக்கள் கெட்டிகாரர் என் பி பிக்கு போட்டு தப்பி கொண்டார்கள், ஆனால் கிழக்கு மக்கள் ஒட்டு மொத்தமாக தமிழரசுக்கு போட்டது முஸ்லிம்களுக்கு கிழக்கில் முதன்மை நிலையை உருவாக்கி விட்டது.

இந்த ஆபத்தை தவிர்க்க அடுத்த முறை கிழக்கு மக்கள் பிள்ளையான் கருணாவுக்கு போட வேண்டும்.

எப்படி இருக்கு இந்த தில்லாலங்கடி அரசியல்? 

தில்லாலங்கடி கில்லாடிகள் நாங்கள் ...அனுரா ஆட்சியின் காலத்தில் சிறிலங்கன் என்ற வகையில் முப்படைகளின் தளபதிகளில் ஒருவர் தமிழர் ,ஒருவர் முஸ்லீம் ,ஒருவர் சிங்களவ்ர் ....பொலிஸ்மாதிபர் பறங்கியர் ....(மலே ,தெலுங்க இனத்தவர்களுக்கு பிறிகேட் தளபதி கொடுக்கப்படும்  இப்ப சிறிலங்காவில புதுசு புதுசா இனங்கள் வருகின்றது எல்லாத்தயும் அரவணத்து செல்லும் அணுராவுக்கு நன்றிகள்)
சிறிலங்கா படைகளில் 17% தமிழர்கள் உள்வாங்கப்படுவார்கள் இதில் 5 % டமிழ் பெண்கள் ....மாவீரர் தினத்தில் சில சமயம் மரியாதை செலுத்த இவர்களையும் அனுமதிப்பார்கள் ...சிங்களவ்ன் ரொம்ப் நல்லவன்டா

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் எண்டால் மட்டு நகர் மட்டும் அல்ல….கருணாவை ஒவ்வொரு தேர்தலிலும் ஓட ஓட விரட்டும் பட்டிருப்பு, கல்குடா தொகுதிகளும், பிள்ளையானையும் கருணாவையும் ஒன்று சேர விரட்டும் அம்பாறை, திருகோணமலை தேர்தல் மாவட்டங்களும்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏதோ மட்டகளப்பு தொகுதியில் மட்டும் தோத்த மாரி எல்லோ கதை அளக்கப்படுகுது.

பட்டிருப்பில் எப்பவும் அண்ணனுக்கும் தம்பிக்கும் வெளுவைதானே கிடைத்தது🤣.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் எம்மக்களைக் கொதிநிலையிலேயே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மேல் ஏறி இருந்து ஓட ஓட விரட்டலாம். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

70 க்கு முதல் அப்படித்தான் இருந்தது இப்ப தான் நீங்கள் நினைக்கும்  பல்லின சமுகமாக மாறி வருகிறது

இது இன்னும் கோசான் போன்றவர்களுக்கு விளங்கவில்லை ...தயவு செய்து ஒருக்கால் வடிவாய் விளங்கப்படுத்தி விடுங்கோ...புண்ணியமாய் போகும் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

இது இன்னும் கோசான் போன்றவர்களுக்கு விளங்கவில்லை ...தயவு செய்து ஒருக்கால் வடிவாய் விளங்கப்படுத்தி விடுங்கோ...புண்ணியமாய் போகும் 

நான் போய் அவருக்கு விளங்கப்படுத்துவதா ஓ ஒ நோ நோ ...😅

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

இது இன்னும் கோசான் போன்றவர்களுக்கு விளங்கவில்லை ...தயவு செய்து ஒருக்கால் வடிவாய் விளங்கப்படுத்தி விடுங்கோ...புண்ணியமாய் போகும் 

மட்டகளப்பு தேர்தல் மாவட்டம் பல்லின மாவட்டம் அல்ல.  இங்கே ஒரு சிங்கள எம்பி கூட வரமுடியாது. 4 தமிழர் ஒரு முஸ்லிம் அல்லது 3 தமிழர் 2 முஸ்லிம்.

அம்பாறை,  சிங்கள பெரும்பான்மை மாவட்டம்.

திருகோணமலை மட்டுமே பல்லின மாவட்டம். உண்மையில் இங்கேயும் 2/4 சிங்கள எம்பி வரவேதான் வாய்ப்பு. இந்த முறை என்பிபி க்கு விழுந்த சிங்கள வாக்குகள் + தமிழ் வாக்குகளால்  என் பி பி யில் ஹேமசந்திர வென்றுள்ளார்.

கந்தளாய்யை கந்தளே, குமரன் கடவு கோமரங்கடவல, சேருவில்லு சேருவல என திட்டமிட்டு 76 ஆண்டுகளில் குடியேற்றியதால் மாற்றி அமைக்கப்பட்ட மாவட்டம் திருகோணமலை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.