Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!

2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!

இலங்கைக் கடற்படை தனது 74 ஆவது ஆண்டு நிறைவை இன்று (09) கொண்டாடுகிறது.

இதனை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில், கடற்படையின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2138 சிரேஷ்ட மற்றும் சாதாரண மாலுமிகள் இன்று முதல் அமுலாகும் வகையில் உயர் பதவிகளுக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

முதன்முறையாக, இலங்கையில் கடற்படையின் ஆரம்பம் 1937 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கத் தொண்டர் கடற்படை கட்டளைச் சட்டத்தின் கீழ் ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை 1939 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

மேலும் அது 1943 அக்டோபர் 1 ஆம் திகதி ‘ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை சேவை’ ஆனது.

1950 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க கடற்படைச் சட்டத்தின் மூலம், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி ‘ராயல் சிலோன் நேவி’ ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம், அன்றைய அரச இலங்கை தன்னார்வ கடற்படை சேவையில் செயற்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளிடமிருந்து, நிரந்தரமான ஒரு தொடக்கமாக அமைந்தது.

அன்றிலிருந்து, நாட்டின் கடல் பரப்பின் பாதுகாவலர் என்ற சிறப்புப் பொறுப்பை நிறைவேற்றி, நாளுக்கு நாள் வளர்ந்து வந்த ராயல் சிலோன் கடற்படை, 1972 இல் இலங்கை குடியரசாக மாறியதும் ‘இலங்கை கடற்படை’ ஆனது.

1980 ஆண்டு முற்பகுதியில், நாட்டின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, கடற்படையின் பாரம்பரியப் பாத்திரத்திலிருந்து போர்ப் பாத்திரமாக மாற்றப்பட்ட கடற்படை, அதன் பின்னர் தேசிய மனிதவளத்திலும் இராணுவத் திறனிலும் படிப்படியாக வளர்ந்தது.

2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை வெற்றிகொள்வதில் சுமார் மூன்று தசாப்தங்களாக தனித்துவமான பங்களிப்பை வழங்கியது.

இலங்கை கடற்படை தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும், அத்துடன் அல்லாதவற்றைக் கட்டுப்படுத்தவும் தனது வளங்களைப் பயன்படுத்துகிறது.

கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் பாரம்பரிய கடல்சார் சவால்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுத்து கடற்படையினரின் அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி நாட்டின் கடல்சார் லட்சியத்தை அடைவதில் உறுதியாக உள்ளது.

https://athavannews.com/2024/1411486

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொன்னாலும் இந்திய வள்ளங்களின் அத்துமீறல்களை தடுக்கமுடியவில்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்

 நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை  கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு  பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

 நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை  கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு  பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?

முப்படை தளபதி ஒரு பெக்கோ என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

 நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை  கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு  பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?

முதலில் வடக்கு பக்கம் இருக்கும் கடற்படையை தெற்குக்கு மாற்றி விடனும் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள் கேரள கஞ்சா கொண்டு வரும் ரோலருக்கு பாதுகாப்பு கொடுப்பதே இந்த சிங்கள நேவிதானமே ?

முதலில் தமிழர் பகுதியை கரையான் அரிப்பது போல் அரிக்க சிங்கள அரசியல்வாதிகள் கொடுப்புக்குள் சிரித்து கொண்டு கண்டும் காணாமல் இருந்தார்கள் கடைசியில் சிங்கள பகுதி பள்ளிக்கூட வாசல் மட்டும் விற்பனை நடக்க தொடங்க புதிதாய் வந்த வேட தாரிகள் குய்யோ முய்யோ என்று அலறிக்கொண்டு இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஜெ.வி.பி ஆதரவு கடற்படையினர் அதிமாக இருப்பினம்....அனுராவின் பாதுகாப்புக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

இதில ஜெ.வி.பி ஆதரவு கடற்படையினர் அதிமாக இருப்பினம்....அனுராவின் பாதுகாப்புக்கு 

நா நா…அனுர தெய்யோ ஏம கத்த வெட கரண் நா அப்பா🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நா நா…அனுர தெய்யோ ஏம கத்த வெட கரண் நா அப்பா🤣

இஸ்சரா ஏ வாகே கரண்ன ...தங் ...தன்னத்தே .....
அமெரிக்கன் கடற்படை நாட்டிலும் பிராந்தியத்திலும் செல்வாக்கு செலுத்த வெளிகிடுகிறது ...ஆகவே அணுரா தெய்யோ தன்னுடைய தோழர்களை உற்சாகப்படுத்தி வைக்க வேணுமல்லோ...(இதை நான் சிங்களத்தில எழுதினால் பிற்கு கெட்ட பாசையில் எழுதின் மாதிரி இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

முப்படை தளபதி ஒரு பெக்கோ என்கிறீர்களா?

அது உங்களின் கருத்து, அதற்கு நான் பொறுப்பல்ல.  தங்களது  கடமையை அவர்கள் சரியாக செய்யவில்லை என்பதற்கு, எமது மக்கள் அனுபவிக்கும்  பிரச்சனைகளே  சான்று என்பதே எனது கருத்து. 

5 hours ago, goshan_che said:

நா நா…அனுர தெய்யோ ஏம கத்த வெட கரண் நா அப்பா🤣

5 hours ago, putthan said:

இஸ்சரா ஏ வாகே கரண்ன ...தங் ...தன்னத்தே ...

இங்கே, சிங்களம் தெரியாதவர்களிடம்  சிங்களம் பேசுவதால் பயனில்லை. இதைத்தான் சிங்களமக்களிடம் பேசும்படி வெகுநாளாக வேண்டுகிறேன். ஆனால் அதை செய்யாமல் நையாண்டி செய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இங்கே, சிங்களம் தெரியாதவர்களிடம்  சிங்களம் பேசுவதால் பயனில்லை. இதைத்தான் சிங்களமக்களிடம் பேசும்படி வெகுநாளாக வேண்டுகிறேன். ஆனால் அதை செய்யாமல் நையாண்டி செய்கிறார்கள். 

அதெல்லாம் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பேசி வேலைக்கு ஆகாது எண்டு எப்பவோ முடிவும் எடுத்தாச்சு ப்ரோ….

நீங்க இப்ப வந்து இந்திராகாந்தி செத்துட்டாவா எண்டு கேட்டா நாங்க என்ன செய்வது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

அதெல்லாம் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பேசி வேலைக்கு ஆகாது எண்டு எப்பவோ முடிவும் எடுத்தாச்சு ப்ரோ…

ஓ.... அதுதான் இங்குவந்து கலக்குகிறீர்களோ? கேள்வி கேட்க மாட்டார்கள்  என்று. அவர்களுக்கு விளங்கும் விதத்தில் பேசமுடியவில்லையோ உங்களால்? ரவிராஜ் பேசினாரே!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

இதில ஜெ.வி.பி ஆதரவு கடற்படையினர் அதிமாக இருப்பினம்....அனுராவின் பாதுகாப்புக்கு 

அவசரம் என்றால் இந்தியா , மாலைதீவுக்கு..ஓடுறதிற்கு...🤣

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2024 at 13:36, satan said:

இங்கே, சிங்களம் தெரியாதவர்களிடம்  சிங்களம் பேசுவதால் பயனில்லை. இதைத்தான் சிங்களமக்களிடம் பேசும்படி வெகுநாளாக வேண்டுகிறேன். ஆனால் அதை செய்யாமல் நையாண்டி செய்கிறார்கள். 

எமக்கு பிரச்சனையை உருவாக்கும் பொழுது... அவர்கள் மொழியில் புரிந்து தான் உருவாக்கினார்கள் ...சிங்கள வாக்காள பெருமக்கள் வரவேற்றனர் ...
அவர்களின் மதக் கொள்கை உலகத்தில மிகவும் சிறந்தது அந்த மதக் கொள்கையை சிறப்பாக அமுல் படுத்தினாலே நாடு சுபீட்சம் அடைந்திருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2024 at 20:20, alvayan said:

அவசரம் என்றால் இந்தியா , மாலைதீவுக்கு..ஓடுறதிற்கு...🤣

இவரின்ட தோழரின் 71 ஆம் ஆண்டு அட்டகாசத்தின் பொழுது ,அப்போதைய் நாட்டின் பிரதமர் கடற்படையின் உதவியுடன் தான் யாழ்நகர் சென்றதாக ஒர் தகவல் உண்டு....

ஏன் இவரின்  அரகலய அட்டகாசத்தின் பொழுது கோத்தாவும் ,மகிந்தாவும் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்தவர்கள் ..

சிறிலங்கா இராணுவத்தைவிட சிறிலங்கா கடற்படையை அதிகம் சிறிலங்கா அரச தலீவர்கள் லவ் பண்ணுகின்ற்னர்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2024 at 09:14, satan said:

ஓ.... அதுதான் இங்குவந்து கலக்குகிறீர்களோ? கேள்வி கேட்க மாட்டார்கள்  என்று. அவர்களுக்கு விளங்கும் விதத்தில் பேசமுடியவில்லையோ உங்களால்? ரவிராஜ் பேசினாரே!

அதான் போட்டு தள்ளீடாங்களே🥲.

செவிப்புலனறோர் காதில் நான் சங்கூதுவதில்லை.

நீங்கள் விதிவிலக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதான் போட்டு தள்ளீடாங்களே🥲.

செவிப்புலனறோர் காதில் நான் சங்கூதுவதில்லை.

நீங்கள் விதிவிலக்கு🤣

நீங்கள் உப்பிடி சொல்வீர்கள் என்று நினைத்தேன், சொல்லியே விட்டீர்கள். அதனாற்தான் பயந்தோ என்னவோ களத்தில் சிங்களம் கதைத்து திறமையை வெளிப்படுத்துகிறீர்கள். மக்களுக்கு தெரியாத மொழியில் பேசினால் நீங்கள் திறமைசாலிகள் என்று நினைப்பர், யாரென்பது உங்களுக்குத்தான் தெரிய வேண்டும். இதைத்தான் ரணிலாரும் லண்டன் போய் நம்மவருக்கு சொல்லி, தானே சிரித்து அசடு வழிந்தார். அதுதான் நான் சொல்லுறது என்னெண்டால்  முகநூல் முகநூல். நான் சொல்லுறது விளங்குதோ என்னோ?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

ஏன் சிங்களம் உங்கள் தெய்வம் அனுரவின் தாய் மொழி ஆச்சே….

இனவாதத்தை தடுக்க பயங்கரவாத தடைசட்டம் அவசியம் என்று எந்த ஒரு இனவாதியும் கூட சொல்லாத அரிய கண்டுபிடிப்பை சொல்லி முட்டு கொடுக்கும் நீங்கள் ஆங்கிலத்தில் முகபுத்தகத்தில் போய் எழுதலாமே?

சிங்கள இனவாதிகளிடம் நான் முடிந்தளவு பேசியாகி விட்டது - ஒரு மண்ணாங்கட்டியும் நடவாது என்பது பட்டறிவு.

The definition of insanity is doing the same thing over and over, expecting a different outcome. 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத சட்டம் தமிழருக்கெதிராகவே இயற்றப்பட்டது நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் அது இன்று தமிழருக்கானது அல்ல அப்படியென்றால் மஹிந்தவே இன்றும் தேர்தலில் வென்றிருப்பார் அது கடைசியில் அரகலியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயன்பட்டது அப்போதுதான் அந்த சட்டத்திற்கு எதிராக எல்லோரும் குரல் எழுப்பினார்கள் எதை வைத்து தம் எதிரிகளை அடக்கியதோ சிங்களம் அதை அனுபவிக்க வேண்டாமோ எத்தனையோ முறை நாங்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பினோம் அப்போதெல்லாம் அது வீரியம் பெற்றது அதன் தாக்கம் வலி அவர்களுக்கு புரியவில்லை இவர்கள் அதன் வலியை அனுபவிக்கும்போது அதன் தாக்கம் புரியும் அவர்களே குரல் எழுப்புவார்கள் இப்போ நாங்கள் குரல் எழுப்பி அதை தகர்த்துவிட்டால் அவர்களுக்கு அதன் வலி புரியாது தமது வல்லாதிக்கத்தை மீண்டும் நம்மேல் காட்டுவார்கள் எந்த மாற்றமும் நிகழ விடமாட்டார்கள் வீதியிலே இறங்கி தமிழரை அழிப்பார்கள் சும்மாவே கொக்கரிக்கிற சரத் வீர சேகர போன்றோர் அடக்கி வாசிப்பதன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள் விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் எதன் பின்னணியில் வந்தது முதலில் அனுராவை எச்சரிப்பார்கள் எதிர்ப்பார்கள்  சவால்விடுவார்கள் பின்னர் வேறுவழியின்றி இணைந்து போக முயற்சிப்பார்கள் இது எனது தனிப்பட்ட நம்பிக்கை இது பிழையாக கூட இருக்கலாம் இறுதியில் தெரியும் முடிவு.

1 hour ago, goshan_che said:

The definition of insanity is doing the same thing over and over, expecting a different outcome. 

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாமே! சொல்கிறார்கள்.

1 hour ago, goshan_che said:

இனவாதத்தை தடுக்க பயங்கரவாத தடைசட்டம் அவசியம் என்று எந்த ஒரு இனவாதியும் கூட சொல்லாத அரிய கண்டுபிடிப்பை சொல்லி முட்டு கொடுக்கும் நீங்கள்

மீண்டும் சொல்கிறேன். இனவாதத்தையல்ல, இனவாதத்தை தூண்டும் இனவாதிகளை தடுக்க! 

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் அனுபவிக்கும் போதுதான் அந்த வலியின் வேதனை என்ன என்பது அவர்களுக்குப் புரியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.