Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் –  கஜேந்திரகுமாா்    விசேட சந்திப்பு-

adminDecember 10, 2024
WhatsApp-Image-2024-12-10-at-8.43.08-PM-

தமிழீழ விடுதலை இயக்கம்  கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பா நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம் பலத்திற்கும் இடையில் இன்று (10) செவ்வாய்க்கிழமை இரவு கிளிநொச்சியில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.குறித்த சந்திப்பு குறித்து  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,,,

விசேடமாக அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வர உத்தேசித்துள்ள இச் சூழ் நிலையில் குறித்த அரசியல் அமைப்பை உறுதியாக அறிவித்துள்ள நிலையில்,அதனை நாடாளுமன்றத்தில் எவ்வாறு எதிர் நோக்கப்போகின்றோம் என்ற விடையம் குறித்தும்,குறிப்பாக தமிழ் தேசிய மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்,புதிய அரசியல் அமைப்புகொண்டு வரப்படுகின்ற சந்தர்ப்பத்திலே எங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடு,தொடர்பாகவும்கலந்துரையாட இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி உள்ளோம்.

நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று  நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி நாங்கள் இக் கலந்துரையாடலை   நடத்த வேண்டும் என்பதை நாங்கள் கேட்டு இருந்தோம்.

அந்த வகையில் எமது தீர்வு திட்டத்தில் ஒரு பிரதியையும் வழங்கி மேலதிகமாக புது வருடத்தின் பிற்பாடு,நாங்கள் மீண்டும் கூடி தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை ஆழமாக ஆராய்வதற்கு நாங்கள் இனங்கியுள்ளோம்.

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனோடும் இவ் விடயம் தொடர்பாக பேசி புதிய வருடத்தோடு மேலதிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நாங்கள் யோசித்து இருக்கின்றோம்.

அந்த சந்திப்பு பேரவையினுடைய தீர்வு திட்டத்தை ஆழமாக ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை தமிழரசுக் கட்சி,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,சிவில் சமூக தலைவர்களையும் உள் வாங்கி மேலதிகமாக இவ்விடயத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடையங்களை நாங்கள் வருகின்ற ஒரு சில நாட்களில் சிறிதர னுடனும் யோடும் பேசி முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.(
 

 

https://globaltamilnews.net/2024/209141/

  • கருத்துக்கள உறவுகள்

கஜே-கயே கோஸ்டித் தலைவர் தீர்வு ஒண்டைக் காணாமல் விடமாட்டார்தான் போல கிடக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கட்சிகள்- சிவில் சமூகம் இணைத்து அரசியல் தீர்வு குறித்துப் பேச உத்தேசம்

922617927.JPG

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், வெகுவிரைவில் அதற்குரிய திகதியைத் தீர்மானிப்பதற்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

 அண்மையில் நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, எதிர்வரும் காலங்களிலேனும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்கவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல்  2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அந்த அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்ற கருத்தும் பரவலாகக் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமுன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடலின் ஓரங்கமாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சிறிதரன், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு குறித்துக் கலந்துரையாடுவதற்கு இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதுகுறித்து கலந்துரையாடும் நோக்கில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு கிளிநொச்சியில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் தீர்வு விவகாரத்தைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுபட்டுச்செயற்படவேண்டிதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதுமாத்திரமன்றி புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது 'ஏக்கிய இராச்சிய' உள்ளடக்கத்தைத் தாம் ஒன்றுபட்டு எதிர்ப்பதுடன், அதற்கு மாற்றாக தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றை முன்மொழியவேண்டிய தேவை காணப்படுவதாகவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

அதனை ஏற்றுக்கொண்ட செல்வம் அடைக்கலநாதன், அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தார்.

 இந்நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றையும், சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற அமர்வின் போது இதற்கான திகதியைத் தீர்மானிக்கவிருப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 
 

https://newuthayan.com/article/தமிழ்த்தேசியக்_கட்சிகள்-_சிவில்_சமூகம்_இணைத்து_அரசியல்_தீர்வு_குறித்துப்_பேச_உத்தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் .,..

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2024 at 02:57, வாலி said:

கஜே-கயே கோஸ்டித் தலைவர் தீர்வு ஒண்டைக் காணாமல் விடமாட்டார்தான் போல கிடக்கு!

தமிழ் தேசிய சக்திகளை ஒரே அணியில் திரட்டினார் எண்டாலே பாதி கிணறு தாண்டியது போலத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

தமிழ் தேசிய சக்திகளை ஒரே அணியில் திரட்டினார் எண்டாலே பாதி கிணறு தாண்டியது போலத்தான்.

100% எல்லோரையும் திரட்ட முடியாது. ஆனால் பெரும்பாலானவர்கள் இணைவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. அனைத்தும் சிறப்பாக நடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, MEERA said:

100% எல்லோரையும் திரட்ட முடியாது. ஆனால் பெரும்பாலானவர்கள் இணைவார்கள். 

விட்டுக்கொடுப்புகள்,ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள் இல்லாமை  என ஒவ்வொருத்தர் மனதினும் இருந்தால்  90% உறுதி

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் .,..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

100% எல்லோரையும் திரட்ட முடியாது. ஆனால் பெரும்பாலானவர்கள் இணைவார்கள். 

மிக நல்ல விடையம்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

100% எல்லோரையும் திரட்ட முடியாது. ஆனால் பெரும்பாலானவர்கள் இணைவார்கள். 

எப்போதும் குறுக்காலபோவபர்கள் இருப்பார்கள்தானே🤣.

மணிவண்ணனை இதில் சேர்க கஜனின், மணியின் ஈகோ விட்டு கொடுத்தால் நல்லம்.

கஜன்+சிறி+செல்வம் இப்போ அவர்கள் பின்னால் நிற்பவரோடு இணைந்தாலே போதும். சித்தர், மாம்பழம்களும் வரும்.

11 hours ago, குமாரசாமி said:

விட்டுக்கொடுப்புகள்,ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள் இல்லாமை  என ஒவ்வொருத்தர் மனதினும் இருந்தால்  90% உறுதி

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, goshan_che said:

எப்போதும் குறுக்காலபோவபர்கள் இருப்பார்கள்தானே🤣.

மணிவண்ணனை இதில் சேர்க கஜனின், மணியின் ஈகோ விட்டு கொடுத்தால் நல்லம்.

கஜன்+சிறி+செல்வம் இப்போ அவர்கள் பின்னால் நிற்பவரோடு இணைந்தாலே போதும். சித்தர், மாம்பழம்களும் வரும்.

இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து புதிய கட்சி யாப்பை உருவாக்க வேண்டும்.அதன் பிரகாரம் கொள்கைகள் நிமித்தம் அனைத்து உறுப்பினர்களும் சிறந்த சட்டத்தரணி முன் சத்தியபிரமாணம் எடுத்து கையொப்பமிட வேண்டும்.

சட்டத்தரணி என்றவுடன் உழவன் சுமந்திரன் நினைவில் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.